மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கேரளாவில் கவர்னர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய பா.ஜனதா வலியுறுத்தல்
- கந்துவட்டி கொடுமையால் மலையில் இருந்து ஜீப்போடு பாய்ந்த தொழில் அதிபர்: 2 பேர் பலி
- ஷாருக்கானுக்கு பிரான்ஸ் அளிக்கும் உயரிய விருது
- பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வு ஜூலை 7-ந்தேி விசாரணை
- பாராளுமன்றத்தில் செயல்படுத்துவது பற்றி 351 புதிய எம்.பி.க்களுக்கு பயிற்சி
- கடந்த ஒரு வாரத்தில் தென்மேற்கு பருவமழை 45 சதவீதம் குறைவு
- அரசு பணம் வீணாவதை தடுக்க மத்திய மந்திரிகளுக்கு மோடி கட்டுப்பாடு
- அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த சி.பி.ஐ. நீதிபதி இடமாற்றம்
- ராணுவத்தில் அன்னிய முதலீடு மோசமான விளைவை ஏற்படுத்தும்: ஏ.கே.அந்தோணி
- விமான போக்குவரத்தை நிறுத்துவதாக ஏஐ அச்சுறுத்தல்
- டாக்கா செல்லும் முன் மம்தாவிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ்
- ஆணுறையை விட ஒருவனுக்கு ஒருத்தி என்பதே மிகவும் பாதுகாப்பானது: ஹர்ஷ்வர்தன்
- முடங்கிய அரசு இணையதளங்கள்: சில மணி நேரங்களில் மீண்டும் இயங்கியது
- திருப்பதி மலைப்பாதையில் கரடி நடமாட்டம்: பக்தர்கள் அதிர்ச்சி
- டுவிட்டரில் அதிக ஆதரவாளர்கள்: வெள்ளை மாளிகையை முந்தினார் மோடி
- அதிகாரங்களை கையில் வைப்பதில் கவனம் செலுத்தும் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- நாகலாந்து கவர்னர் அஷ்வனி குமார் ராஜினாமா
- உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மோடி செல்லமாட்டார்
- நெல் கொள்முதல் விலை ரூ.50 உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- 5 பெண் குழந்தைகள் பெற்றதால் புகுந்த வீட்டில் சித்ரவதை: பெண் தீக்குளித்து சாவு
| கேரளாவில் கவர்னர் ஷீலா தீட்சித் ராஜினாமா செய்ய பா.ஜனதா வலியுறுத்தல் Posted: 25 Jun 2014 11:08 PM PDT மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சி அமைந்ததும் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட சில மாநில கவர்னர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது |
| கந்துவட்டி கொடுமையால் மலையில் இருந்து ஜீப்போடு பாய்ந்த தொழில் அதிபர்: 2 பேர் பலி Posted: 25 Jun 2014 11:06 PM PDT கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள ஈராற்றுபேட்டை பகுதியை சேர்ந்தவர் சஜி (வயது40). இவர் அந்த பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். இவரது மனைவி ரசுல் (35). இந்த தம்பதியின் மகள்கள் சியோனா(7), அயோனா(4). சூப்பர் மார்க்கெட் நடத்துவதற்காக சஜி பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல வியாபாரம் நடைபெறவில்லை. இதனால் அவரால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையில் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு அவரை நெருக்க தொடங்கினார்கள். சஜி கந்துவட்டிக்கு பணம் வாங்கியிருந்த ஒருவர் அவருக்கு மிரட்டல் விடுக்க தொடங்கினார். அவருக்கு பின்னணியில் ஒரு அரசியல் கட்சி பிரமுகரும் இருந்ததால் சஜியால் அவர்களது மிரட்டலை சமாளிக்க முடியவில்லை. |
| ஷாருக்கானுக்கு பிரான்ஸ் அளிக்கும் உயரிய விருது Posted: 25 Jun 2014 10:54 PM PDT ஹிந்தித் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான ஷாருக்கானுக்கு பிரான்ஸ் தேசத்தின் உயரிய விருது அளிக்கப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. திரைத்துறையில் கானின் பங்களிப்பிற்காக பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தினர், பொதுமக்கள் பிரிவிற்கு அளிக்கப்படும் உயரிய விருதான 'லெஜன் டி ஹானர்' விருதை அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் அடுத்த வாரம் மும்பைக்கு வந்து ஷாருக்கானுக்கு அளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. |
| பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வு ஜூலை 7-ந்தேி விசாரணை Posted: 25 Jun 2014 10:34 PM PDT இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் மரணம் அடைந்தார். இந்த வழக்கில் பேரறிவாளன் உள்பட பலருக்கு தூக்குத் தண்டனை விதிக்கபட்டது. தண்டனையை எதிர்த்து பேரறிவாளன் உள்பட 7 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து |
| பாராளுமன்றத்தில் செயல்படுத்துவது பற்றி 351 புதிய எம்.பி.க்களுக்கு பயிற்சி Posted: 25 Jun 2014 10:31 PM PDT தற்போதைய 16–வது பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட 543 எம்.பி.க்களில் 351 பேர் புதியவர்கள். முதல்முறையாக பாராளுமன்றத்துக்கு வருகிறார்கள். இவர்களில் 71 பேர் 40 வயதுக்குப்பட்ட எம்.பி.க்கள் ஆவார்கள். இவர்களுக்கு பாராளு மன்ற நடவடிக்கைகள் என்பது புதிய அனுபவம் ஆகும். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் எப்படி செயல் படவேண்டும், குறிப்பாக கேள்வி நேரத்தின் போது செயல்படுவது எப்படி? பிரச்சினைகளை எப்போது |
| கடந்த ஒரு வாரத்தில் தென்மேற்கு பருவமழை 45 சதவீதம் குறைவு Posted: 25 Jun 2014 10:20 PM PDT இந்தியாவின் 75 சதவீத பகுதிகள் தென்மேற்கு பருவ மழையால் பயன் பெறுகின்றன. ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவிரம் அடைந்து செப்டம்பர் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு ஜூன் 5–ந்தேதி தொடங்கிய இந்த மழை கடந்த ஒரு வாரத்தில் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. |
| அரசு பணம் வீணாவதை தடுக்க மத்திய மந்திரிகளுக்கு மோடி கட்டுப்பாடு Posted: 25 Jun 2014 10:08 PM PDT மத்தியில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு பல அதிரடி மாற்றங்கள் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஆடம்பர வீண் செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைப்பிடிக்க மத்திய மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். மத்திய மந்திரிகள் தங்களது உதவியாளர்களை நியமிக்க கட்டுப்பாடு விதித்தார். அதன்படி பிரதமர் அலுவலகம்தான் மந்திரிகளின் உதவியாளர்களை நியமனம் செய்யும் என்றும், உறவினர்களை |
| அமித்ஷாவுக்கு எதிரான வழக்கை விசாரித்த சி.பி.ஐ. நீதிபதி இடமாற்றம் Posted: 25 Jun 2014 10:03 PM PDT குஜராத்தில் கடந்த 2005–ம் ஆண்டு சொராபுதீன்ஷேக் என்பவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இது போலி என்கவுண்டர் என்று சர்ச்சை கிளம்பியது. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக துளசிராம் பிரஜாபதி என்பவர் சேர்க்கப்பட்டார். 2006–ம் ஆண்டில் போலீசார் நடத்திய என் கவுண்டரில் துளசிராம் பிரஜாபதியும் சுட்டுத்தள்ளப்பட்டார். இந்த என்கவுண்டர் தொடர்பாக அப்போது குஜராத் மாநில உள்துறை |
| ராணுவத்தில் அன்னிய முதலீடு மோசமான விளைவை ஏற்படுத்தும்: ஏ.கே.அந்தோணி Posted: 25 Jun 2014 09:55 PM PDT திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸ் பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி ஏ.கே.அந்தோணி பங்கேற்று பேசினார் |
| விமான போக்குவரத்தை நிறுத்துவதாக ஏஐ அச்சுறுத்தல் Posted: 25 Jun 2014 07:54 PM PDT இந்தியாவின் மும்பை விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் நெவார்க் வரை செல்லும் நீண்டதூர போயிங் 777 விமானம் ஒன்றை ஏர்இந்தியா இயக்கி வருகின்றது. இதில் 360 பயணிகள் செல்லக்கூடிய இருக்கை வசதிகள் உள்ளன. இந்த விமானம் மும்பையிலிருந்து கிளம்பும்போது விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மேலேழும்புவதற்குத் தடையாக உள்ளது என்று கடந்த மாதம் மகாராஷ்டிரா விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் ஏஐ முறையிட்டிருந்தது. |
| டாக்கா செல்லும் முன் மம்தாவிடம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ் Posted: 25 Jun 2014 04:49 PM PDT மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் தனது முதல் அரசு முறை பயணமாக வங்காளதேசத்திற்கு செல்கிறார். அதற்கு முன்னதாக அவர் நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணுவதில் மம்தா பானர்ஜியையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு விரும்புவது இதன் மூலம் |
| ஆணுறையை விட ஒருவனுக்கு ஒருத்தி என்பதே மிகவும் பாதுகாப்பானது: ஹர்ஷ்வர்தன் Posted: 25 Jun 2014 04:28 PM PDT மத்திய சுகாதாரத்தறை அமைச்சரான ஹர்ஷ்வர்தன் வெளிநாட்டு நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது எய்ட்ஸை கட்டுப்படுத்த ஆணுறை அணியுங்கள் என்று பிரச்சாரம் செய்வது மலிவானது என்று கூறியிருக்கிறார். இந்திய கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை கடைபிடிக்க வேண்டும் என்பது நியதியாகும். அந்த நியதியை கடைபிடித்து நம்பமாக |
| முடங்கிய அரசு இணையதளங்கள்: சில மணி நேரங்களில் மீண்டும் இயங்கியது Posted: 25 Jun 2014 03:33 PM PDT மத்திய அரசின் அனைத்து துறைகளின் இணையதளங்களும் நேற்று மாலை ஒட்டுமொத்தமாக முடங்கின. தவறான இயக்கத்தினால் அவை முடக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் கோளாறுகளை சரி செய்து சில மணி நேரங்களில் மீண்டும் இணையதளங்களை இயங்கவைத்தனர். |
| திருப்பதி மலைப்பாதையில் கரடி நடமாட்டம்: பக்தர்கள் அதிர்ச்சி Posted: 25 Jun 2014 01:24 PM PDT திருப்பதி அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்கள். திருப்பதி மலைப்பாதை இருபுறமும் அடர்ந்த காடுகளாக இருப்பதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. |
| டுவிட்டரில் அதிக ஆதரவாளர்கள்: வெள்ளை மாளிகையை முந்தினார் மோடி Posted: 25 Jun 2014 01:06 PM PDT பிரதமர் நரேந்திர மோடி 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தின் மூலமாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதில் அவரை இந்தியாவில் மட்டுமல்லாது உலகமெங்கும் வாழ்கிற மக்கள் பின்பற்றி வருகின்றனர். அவருக்கு நாளுக்கு நாள் 'டுவிட்டர்' ஆதரவாளர்கள் பெருகி வருகின்றனர். |
| அதிகாரங்களை கையில் வைப்பதில் கவனம் செலுத்தும் மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 25 Jun 2014 09:05 AM PDT பிரதமர் நரேந்திர மோடி அனைத்து அதிகாரங்களையும் தனது கைகளில் வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:- |
| நாகலாந்து கவர்னர் அஷ்வனி குமார் ராஜினாமா Posted: 25 Jun 2014 08:22 AM PDT மத்தியில் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்ததும், முந்தைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட மாநில கவர்னர்களை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி சில ஆளுநர்களை தொடர்பு கொண்டு பதவி விலகும்படி கேட்டுக்கொண்டார். |
| உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை காண மோடி செல்லமாட்டார் Posted: 25 Jun 2014 07:37 AM PDT உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியைக் காண வரும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் அழைப்பு விடுத்திருந்தார். பிரிக்ஸ் உச்சி மாநாடு அங்கு நடைபெற உள்ளதால், முன்கூட்டியே மோடி அங்கு சென்று ஜூலை 13-ம் தேதி நடக்கும் கால்பந்து இறுதிப்போட்டியை பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது |
| நெல் கொள்முதல் விலை ரூ.50 உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல் Posted: 25 Jun 2014 06:17 AM PDT நெல் கொள்முதல் செய்வதற்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2014-15ம் ஆண்டு பயிர் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மற்றும் பருத்தி ஆகியவற்றிற்கு குறைந்த பட்ச ஆதார |
| 5 பெண் குழந்தைகள் பெற்றதால் புகுந்த வீட்டில் சித்ரவதை: பெண் தீக்குளித்து சாவு Posted: 25 Jun 2014 05:15 AM PDT ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றதற்காக கணவன் வீட்டில் கடும் சித்ரவதைக்கு ஆளான பெண் கடைசியில் தன் உயிரையே மாய்த்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மம்தா. இவருக்கும் மோனு என்பவருக்கும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |