Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தென்கொரியா படத்தின் அப்பட்டமான காப்பி ஜிகர்தண்டா! கசிந்த உண்மை!

Posted: 25 Jun 2014 01:02 AM PDT

Jigarthanda

Jigarthandaபீட்ஸா என்ற மாபெரும் வெற்றிபடத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் ஜிகர்தண்டா.

இதில் சித்தார்த், லட்சுமி மேனன், கருணாகரன் போன்றோர் நடித்துள்ளனர். இப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று வந்துள்ளது.

2006ம் ஆண்டு வெளிவந்த 'ஏ டர்ட்டி கார்னிவல்' என்ற தென்கொரியத் திரைப்படத்தின் காப்பி தான் இந்த ஜிகர்தண்டா என்று நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

அதுவும் கதை மட்டும் இல்லையாம் படத்தின் சீன் பை சீன் அப்படியே சுட்டு எடுத்திருக்கிறாராம், இந்த செய்தி எப்படியோ வெளியேவர அதிர்ச்சியில் உள்ளதாம் படக்குழு.

This posting includes an audio/video/photo media file: Download Now

சூரிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை!

Posted: 25 Jun 2014 12:55 AM PDT

Soori

Sooriதமிழ் திரையுலகில் வடிவேலு இடத்தை நிரப்புவதற்கு வந்தவர் தான் 'பரோட்டா' சூரி. காமெடியுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த சந்தானம், தற்போது ஹீரோவாக முயற்சிப்பதால், சூரி காட்டில் செம்ம மழை தான். முக்கிய நடிகர்களின் பெரும்பாலன படங்களில் இவர் தான் நகைச்சுவை நடிகர், இப்படி நல்ல முறையில் திரைப்பயணம் சென்று கொண்டிருக்கும் போது, தற்போது இவர் எடுத்திருக்கும் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது. புதிதாக கதை டிஸ்கஷன் செய்பவர்களுக்காகவே ஒரு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார், மேலும் இதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை, நல்ல கதை என்றால் நானே தயாரிக்க ரெடி என்றும் சொல்கிறாராம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னையில் ரகசிய இடங்களில் அஜித் படத்தின் படப்பிடிப்பு!

Posted: 25 Jun 2014 12:51 AM PDT

Ajith

Ajithஇவ்வருடத்தில் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்று அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படம் தான். இப்படத்தின் பெரும்பாலன படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் நடந்து வந்த நிலையில் படத்தின் முக்கியமாக சில காட்சிகள் எடுக்க படக்குழு மலேசியாவில் சென்றுவந்தது. படத்தின் 30% வேலைகள் நிறைவடைந்த தருணத்தில் தற்போது மீண்டும் சென்னையில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறயிருக்கிறது. இதில் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களை தான் படக்குழு தேந்தெடுத்துள்ளதாம்.மேலும் அஜித் இப்படத்தில் 30 வயது இளைஞராக நடிக்கும் காட்சி யாருக்கும் தெரியாமல் கௌதம் எடுக்கப்போகிறாராம். ஏனென்றால் இது தான் படத்தின் முக்கிய கதாபாத்திரமாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அந்தரத்தில் நின்று பாடும் பாடகி சித்ரா: அரங்கையே அச்சுறுத்திய மேஜிக் மனிதர்

Posted: 25 Jun 2014 12:46 AM PDT

CHITHRACHECHI-ON-AIR-MAGIC-BY-RAJ-KALESH

CHITHRACHECHI-ON-AIR-MAGIC-BY-RAJ-KALESH

This posting includes an audio/video/photo media file: Download Now

இப்படியொரு ரெஸ்டாரண்டை மிஸ் பண்ண யாருக்காவது மனசு வருமா?

Posted: 25 Jun 2014 12:38 AM PDT

falls_restuarent

falls_restuarent

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமண நிகழ்ச்சியில் குண்டு பாட்டியின் கலக்கல் குத்தாட்டம்!

Posted: 25 Jun 2014 12:35 AM PDT

russian-lady-wild-wedding-dance

russian-lady-wild-wedding-dance

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகத்துல எந்த அப்பாவாது இப்படி பழி வாங்குவாங்களா?

Posted: 25 Jun 2014 12:32 AM PDT

Water-BalloonRevenge-of-the-Dad

Water-BalloonRevenge-of-the-Dad

This posting includes an audio/video/photo media file: Download Now

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் முதல் சுற்றில் போராடி தோற்றார் சோம்தேவ்

Posted: 25 Jun 2014 12:26 AM PDT

somdev

somdevவிம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் (125வது ரேங்க்) போராடி தோற்றார். முதல் சுற்றில் போலந்து வீரர் ஜெர்ஸி ஜானோவிக்சுடன் (25வது ரேங்க்) நேற்று மோதிய சோம்தேவ் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடிய ஜானோவிக்ஸ் 6-3, 6-3 என வென்று பதிலடி கொடுத்தார். நான்காவது செட்டை சோம்தேவ் 6-3 என கைப்பற்ற சமநிலை ஏற்பட்டது. கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜானோவிக்ஸ் 4-6, 6-3, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இபோட்டி 3 மணி, 4 நிமிடம் நீடித்தது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்கள் ரோஜர் பெடரர், சோங்கா, வாவ்ரின்கா, ஹெவிட், நிஷிகோரி ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தோல்வியின் பிடியில் சிக்கியது இங்கிலாந்து!

Posted: 25 Jun 2014 12:22 AM PDT

England

Englandஇலங்கை அணியுடனான 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி தோல்வியின் பிடியில் சிக்கியது. ஹெடிங்லி, லீட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இலங்கை 257 ரன்னும், இங்கிலாந்து 365 ரன்னும் எடுத்தன. 108 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 457 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அபாரமாக விளையாடிய கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 160 ரன் (249 பந்து, 25 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். இதைத் தொடர்ந்து 350 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 4ம் நாள் முடிவில் 57 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது. ஜோ ரூட் (6), மொயீன் அலி இருவரும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரூட் 31 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பிரையர் 10 ரன்னில் வெளியேறினார். 77 ஓவர் முடிவில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்திருந்தது. மொயீன் அலி 56 ரன், ஜோர்டான் 9 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெஷாவர் விமான நிலையத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: பெண் பயணி பலி

Posted: 25 Jun 2014 12:18 AM PDT

pakisthan-airport

pakisthan-airportபாகிஸ்தானில் பெஷாவர் விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர்கள் சுட்டதில் பெண் பயணி ஒருவர் உயிரிழந்ததோடு 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். செவ்வாய்கிழமை நள்ளிரவில் 178 பயணிகளுடன் சவுதி அரேபியாவில் இருந்து பயணிகளோடு வந்த பயணிகள் விமானம் பெஷாவர் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானம் ஓடுதளத்தில் வந்து நிற்கும் நேரத்தில் திடீரென அதனை நோக்கி மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மூன்று பயணிகள் படுகாயம் அடைந்தனர். விமானம் மீது 6 குண்டுகள் வரை பாய்ந்ததாகவும் பாதுகாப்பு படை தெரிவித்தனர். எனினும் பயங்கர விபத்தில் இருந்து விமானம் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் விமானத்தை குறிவைத்து அரங்கேற்றி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் 55 கோடி செலவில் கலாசார மையம் இந்தியா கட்டித்தருகிறது!

Posted: 25 Jun 2014 12:12 AM PDT

india-sri-lanka

india-sri-lankaஇலங்கைவடக்கு மாகாணத்தில் கலாசார மையத் தை 55 கோடி ரூபாய் செலவில் இந்திய அரசு கட்டித்தர உள்ளது. இலங்கையில் உள்நாட்டு போர் ஓய்ந்த பின்னர், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில பகுதிகளில் இந்திய அரசு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலாசார மையம் அமைப்பது தொடர்பாக இலங்கை - இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த வாரம் கையெழுத்தானது. அதன்படி, இலங்கை வடக்கு மாகாணத்தில் கலாசார மைய த்தை இந்திய அரசு அமைக்க உள்ளது. இதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள பொது நூலகம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகாலத்தில் இந்த மையம் கட்டி முடிக்கப்படும். இதற்காக இந்திய மதிப்பில் 55 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த கலாசார மைய த்தின் மூலமாக வடக்கு மாகாண மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண மக்களின் சமூக, கலாசார கட்டமைப்புகள் வலுப்பெறும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத் காரியவசம் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார்!

Posted: 25 Jun 2014 12:07 AM PDT

prasad-kariyawasam

prasad-kariyawasamஅமெரிக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம், அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார். அமெரிக்கா, வோஷிங்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பு எதிர்வரும் ஜுலை 14ம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது. இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக கடந்தவாரம் நியமிக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். இவருக்கு முன்னர் இலங்கைத் தூதுவராக ஜாலிய ஜயசூரிய கடமையாற்றியிருந்தார். இவருக்கு பதிலாகவே தற்போது அமெரிக்காவுக்கான இலங்கைத் ததுவராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த சவுதி விமானத்தில் பயணித்த மலேசியப் பெண் மரணம்!

Posted: 24 Jun 2014 11:40 PM PDT

Airlines

Airlinesஇலங்கையின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த சவுதி அரேபியன் விமானத்தில் பயணித்த மலேசியப் பெண்ணொருவர் மாரடைப்பால் இறந்துள்ளார்.

இதனை அடுத்து அவரின் உடல் இலங்கையிலுள்ள மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சவுதி அரேபியாவிலிருந்து மலேசியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சவுதி அரேபியன் வானூர்தியிலேயே அபண் மரணமானதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

46 வயதான இப்பெண்ணின் சடலத்தை மலேசிய உயர்ஸதானிகரகத்தின் ஊடாக மலேசியாவிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

செல்வநிதி பரஞ்சோதி நினைவாக கிளிநொச்சி பாடசாலைகளுக்கு உதவி!

Posted: 24 Jun 2014 11:35 PM PDT

suwis_help

suwis_helpசுவிஸ் அமரர் செல்வநிதி பரஞ்சோதி நினைவாக கிளிநொச்சி பாடசாலைகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது சுவிஸ் அமரர் செல்வநிதி பரஞ்சோதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தாரால் பா.உறுப்பினர் சி.சிறீதரனுடாக கிளிநொச்சி அல்லிப்பளை இந்து தமிழ் கலவன் பள்ளி மாணவர்களுக்கு புத்தகபைகள் கற்றல் உபகரணங்களும் கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலத்திற்கு மின் இணைப்பை ஏற்படுத்துவதற்கான நிதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டு பாடசாலை மாணவர்களும் பெரிதும் பயன்பெற்றுள்ளனர். கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்கு மின் இணைப்பை ஏற்படுத்தியதன் மூலம் தமது மாணவர்கள் மல்ரி மீடியா செயற்பாடுகள் மூலம் சிறந்த அறிவை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த பாடசாலையின் அதிபர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார். இந்த உதவி வழங்கும் நிகழ்வுகளில் அல்லிப்பளை மற்றும் புதுமுறிப்பு பாடசாலைகளின் அதிபர்கள் கரைச்சி பிரதேசசபை தலைவர் நாவை.குகராசா பளை பிரதேச த.தே.கூட்டமைப்பின் கட்சி அமைப்பாளர் சாந்தன் உட்பட பள்ளி சமுகத்தினர் கலந்துகொண்டிருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாட்டில் தேசிய தேசிய ஒற்றுமையை உருவாக்கும் முனைப்புக்களில் ரணில்!

Posted: 24 Jun 2014 11:31 PM PDT

ranil

ranilநாட்டில் தேசிய ஒற்றுமையை முனைப்புக்களில் எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுளளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதானிகள் உள்ளிட்ட பலரையும் ரணில் விக்ரமசிங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கொழும்பில் நாளைய தினம் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. கடந்த வாரத்தில் பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசத்தில் வன்முறைகள் வெடித்திருந்தன. இந்த பிரதேசங்களை பிரதிநிதித்துவம் செய்யும் மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ரணிலுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது. இனங்களுக்கு இடையில் சகோதரத்துவத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தங்கம் கடத்தி வந்த இலங்கை இளைஞர் சென்னை விமானநிலையத்தில் கைது!

Posted: 24 Jun 2014 11:25 PM PDT

chennaiairport

chennaiairportஇலங்கையில் இருந்து தேயிலைத்தூளில் தங்கத்தை கலந்து கடத்தி வந்த இலங்கை இளைஞர் ஒருவரை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை, மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த ஞானமதிகுமார் என்பவர் வந்தார். இவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்திருந்தார். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்த போது, அங்கு தேயிலைத்தூள் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில் தங்கத்தை பொடியாக்கி அதில் கலந்து கடத்திக்கொண்டு வந்தது தெரியவந்தது. தேயிலைத்தூளில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினார்கள். இதனையடுத்து இலங்கை இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடிய தமிழருக்காகஅமெரிக்கா நடத்திய கருத்தரங்கு!

Posted: 24 Jun 2014 11:16 PM PDT

ctc-usa

ctc-usaஅமெரிக்காவில் கல்வி கற்றல், வணிகம், முதலீடு செய்தல், பயணம் மற்றும் வேலைக்கான விசா பெறுதல் தொடர்பாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் கனடியத் தமிழருக்காய் கருத்தரங்கொன்றை நடத்தியது. கனடியத் தமிழர் வரலாற்றில் முதன்முறையாகக் கனடியத் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தகைய கருத்தரங்கு மிகவும் பயனுள்ள பல தகவல்களை பங்கேற்றோருக்கு வழங்கியது. மண்டபம் நிறைந்த பங்கேற்பாளரோடு மார்க்கம் கொண்வென்சன் சென்ரரில் இடம்பெற்ற கருத்தரங்கில் அரசியல் – பொருளாதாரம், வதிவுரிமை அல்லாத விசாப் பிரிவு, பொதுப் பணித்துறை ஆகியவற்றிலிருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நால்வர் கலந்து கொண்டனர். அமெரிக்காவில் உயர் கல்வி கற்றல், வணிக முதலீடுகள் மற்றும் அமெரிக்காவுக்கான பல்வேறு வகையான விசாக்கள் தொடர்பாக அவர்கள் விபரங்களை வழங்கினார்கள். கருத்தரங்கின் போது பங்கேற்பாளரின் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் தூதரக அதிகாரிகள் பங்கேற்பாளரோடு தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினர். இத்தகைய ஒரு கருத்தரங்கைக் கனடியத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்தமை மிகவும் சிறப்பானதும் பயனுள்ளதும் எனக் கலந்து கொண்ட பலர் கருத்துத் தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™