மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காங்கிரஸ் இழந்த பெருமையை மீண்டும் மீட்டேதீருவேன்: சோனியா காந்தி
- கேரள சட்டசபையில் இருந்து கம்யூனிஸ்டு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
- உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக கேரளாவில் மின் வெட்டு நேரம் மாற்றம்
- வருமானவரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரும்: மத்திய அரசு முடிவு
- கேரளாவில் 24 மணி நேரத்தில் கடலில் சூறைக்காற்று: வானிலை ஆய்வு மையம்
- டெல்லியில் காங். எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் கட்சி தாவ முடிவு
- ஆந்திராவில் 113 டிகிரி வெயில்: ஒரே நாளில் 160 பேர் பலி
- 2 நாள் பயணமாக மோடி நாளை பூடான் பயணம்
- ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு
- பிரதமருக்கு ஜெ. எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது: சித்தராமையா
- ஜார்கண்ட் ஜெயிலில் யஷ்வந்த் சின்கா தவறி விழுந்து காயம்
- பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த கமிட்டி பரிந்துரை
- குடிபோதையுடன் பணிபுரியும் விமானிகளுக்கான தண்டனை தளர்வு
- காங்கிரசுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்படுமா?: சுமித்ரா மகாஜன்
- மனைவியின் விருப்பமில்லாமல் உறவு கொள்வது கற்பழிப்பு குற்றமாகாது: நீதிமன்றத் தீர்ப்பு
- உத்தராகண்ட் முதல் மந்திரி பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்
- நானக் புயலால் மும்பையில் 3-வது நாளாக கடல் சீற்றம்
- சத்திஸ்கரில் எஃகு ஆலையில் எரிவாயு கசிவால் 6 பேர் பலி: உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவு
- தேர்தல் தோல்வி குறித்து தேசிய செயலாளருடன் ஞானதேசிகன் ஆலோசனை
- ஈராக்கில் உள்நாட்டு கலவரம் எதிரொலி: ரூபாய் மதிப்பு, பங்குகள் விலை பாதிப்பு
| காங்கிரஸ் இழந்த பெருமையை மீண்டும் மீட்டேதீருவேன்: சோனியா காந்தி Posted: 13 Jun 2014 11:27 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான் வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு பைரோஸ் காந்தி கல்லூரி மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:– பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் என்று நாடெங்கும் தொண்டர்கள் மிக கடினமாக உழைத்தார்கள். ஆனால் மிகக் |
| கேரள சட்டசபையில் இருந்து கம்யூனிஸ்டு எம்எல்ஏக்கள் வெளிநடப்பு Posted: 13 Jun 2014 11:19 PM PDT கேரளாவில் தீவிரவாத செயல்களை கட்டுப்படுத்த மாநில தீவிரவாத தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஆளும் காங்கிரஸ் கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் புகார் கூறினர். கேரள சட்டசபையிலும் இது தொடர்பாக அவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். |
| உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக கேரளாவில் மின் வெட்டு நேரம் மாற்றம் Posted: 13 Jun 2014 11:11 PM PDT கேரளாவில் மின் பற்றாக்குறை காரணமாக மாநிலம் முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாலை 6.45 மணிக்கும், இரவு 10.45 மணிக்கும் இடையே மின்வெட்டு அமலில் உள்ளது. தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி இந்திய நேரப்படி தினமும் இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. மின்வெட்டு காரணமாக இந்த போட்டிகளை தொலைக்காட்சிகளில் சரிவர பார்க்க முடியவில்லை. எனவே மின்தடை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கால்பந்து ரசிகர்கள் |
| வருமானவரி விலக்கு ரூ.3 லட்சமாக உயரும்: மத்திய அரசு முடிவு Posted: 13 Jun 2014 10:47 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் முதலில் ரெயில்வே பட்ஜெட்டை மத்திய மந்திரி சதானந்தகவுடா தாக்கல் செய்வார். அதன்பிறகு பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண்ஜேட்லி தாக்கல் செய்வார். தற்போது பொது பட்ஜெட் தயாரிப்பு பணியில் மத்திய மந்திரி |
| கேரளாவில் 24 மணி நேரத்தில் கடலில் சூறைக்காற்று: வானிலை ஆய்வு மையம் Posted: 13 Jun 2014 10:38 PM PDT கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கடந்த 6–ந்தேதி தொடங்கியது. ஒரு வாரம் தாமதமாக மழை தொடங்கினாலும், மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக மழை பொழிவு இருக்குமென திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவின் லட்சத்தீவு மற்றும் கேரள கடற்கரைகளில் கடுமையான சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
| டெல்லியில் காங். எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் கட்சி தாவ முடிவு Posted: 13 Jun 2014 10:36 PM PDT டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜராரிட்டி கிடைக்காததால் 28 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆம் ஆத்மி கட்சி 8 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் – மந்திரியாக பதவி ஏற்றார். 49 நாட்களே பதவியில் இருந்த அவர் தொடர்ந்து ஆட்சி நடத்த முடியாமல் |
| ஆந்திராவில் 113 டிகிரி வெயில்: ஒரே நாளில் 160 பேர் பலி Posted: 13 Jun 2014 10:09 PM PDT ஆந்திராவில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்துகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெப்பம் தணியாமல் வெயில் கொளுத்துவதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். பகல் நேரங்களில் கடும் அனல்காற்று வீசுகிறது. நெருப்பை அள்ளி தெளித்தது போல் காற்று வீசுவதால் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வெயில் கொடுமையை தாங்க முடியாமல் நேற்று ஒரே நாளில் 160 பேர் பலியானார்கள். ஸ்ரீகாகுளத்தில்தான் அதிக எண்ணிக்கையாக 40 பேர் பலியாகி |
| 2 நாள் பயணமாக மோடி நாளை பூடான் பயணம் Posted: 13 Jun 2014 09:50 PM PDT நரேந்திர மோடி கடந்த மாதம் 26–ந் தேதி பிரதமராக பதவி ஏற்றார். அப்போது சார்க் நாட்டுத் தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டு மோடியை சிறப்பித்தனர். பிறகு மறுநாள் மோடியை சந்தித்துப் பேசிய போது தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். மோடியை முதன் முதலாக தங்கள் நாட்டுக்கு வரவழைக்க சார்க் நாட்டுத் தலைவர்களிடம் போட்டி ஏற்பட்டது. இந்த நிலையில் அண்டை நாடுகளுடனான நட்புறவை மேம்படுத்துவற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பூடானுக்கு முதல் வெளிநாட்டு |
| ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு Posted: 13 Jun 2014 09:24 PM PDT கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்தின்போதும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார். இன்று வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. நாளை முதல் 19–ந் தேதி வரை படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு |
| பிரதமருக்கு ஜெ. எழுதிய கடிதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது: சித்தராமையா Posted: 13 Jun 2014 09:20 PM PDT காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் பெங்களூரில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:- ''காவிரி பிரச்சினை குறித்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் |
| ஜார்கண்ட் ஜெயிலில் யஷ்வந்த் சின்கா தவறி விழுந்து காயம் Posted: 13 Jun 2014 08:51 PM PDT ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர் மின் வெட்டு ஏற்பட்டதை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பா.ஜனதா கட்சியினர் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தலைமையில் ஜார்கண்ட் மாநில மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்து அதிகாரியை தாக்கி அவர்கள் அவரை நாற்காலியில் கட்டி வைத்தனர். இந்த வழக்கில் யஷ்வந்த்சின்கா உள்ளிட்ட 51 பா.ஜனதா கட்சியினர் கைது செய்யப்பட்டு ஜார்கண்ட் மாநில ஹசரிபாக் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே வரமறுத்து விட்டனர். |
| பெட்ரோல், டீசல் விலையை 75 காசுகள் உயர்த்த கமிட்டி பரிந்துரை Posted: 13 Jun 2014 08:32 PM PDT வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால் புற்றுநோய் ஏற்படுவதை ஒழிக்க தேசிய அளவில் 2020-ம் ஆண்டுக்குள் எரிபொருள் தரத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சவுமித்ரா சதுர்த்தி கமிட்டி வெளியிட்டுள்ள 'வாகன எரிபொருள் கொள்கை - 2025' அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது சென்னை, மும்பை, டெல்லி உள்பட 26 நகரங்களில் 'யூரோ-4' |
| குடிபோதையுடன் பணிபுரியும் விமானிகளுக்கான தண்டனை தளர்வு Posted: 13 Jun 2014 08:16 PM PDT இந்தியாவின் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு தரவரிசை சமீபத்தில் மோசமடைந்துள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குரகமும் விமானிகளுக்கான விதிமுறைகளில் தற்போது சில தளர்வுகளைக் கொண்டுவந்துள்ளது. பணியில் இருக்கும்போது ஒரு விமானி குடித்திருப்பது கண்டறியப்பட்டால் அவர் மூன்று மாதங்களுக்கு தனது பறக்கும் உரிமத்தை இழக்க நேரிடும். அதன்பின்னர் இரண்டாவது முறையாகவும் இந்த குற்றச்சாட்டு ஒருவர்மீது நிரூபிக்கப்படுமேயானால் அவர் ஐந்து வருடங்களுக்கு தனது உரிமத் |
| காங்கிரசுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்கப்படுமா?: சுமித்ரா மகாஜன் Posted: 13 Jun 2014 07:59 PM PDT 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 2-வது பெரிய கட்சியான காங்கிரசுக்கு 44 உறுப்பினர்களே உள்ளனர். மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 10 சதவீதம் உறுப்பினர்கள் (54 பேர்) இருந்தால்தான் ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும். காங்கிரசுக்கு அவ்வளவு உறுப்பினர்கள் இல்லாதால், அந்த கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இன்னும் வழங்கப்படவில்லை. என்றாலும் தங்கள் கட்சி 2-வது பெரிய கட்சி என்பதால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரி சபாநாயகர் சுமித்ரா |
| மனைவியின் விருப்பமில்லாமல் உறவு கொள்வது கற்பழிப்பு குற்றமாகாது: நீதிமன்றத் தீர்ப்பு Posted: 13 Jun 2014 05:38 PM PDT புதுடெல்லி பிண்டபூர் காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு ஒரு பெண் தன் கணவன் மீது கற்பழிப்பு புகாரினை அளித்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அவர் அளித்திருந்த புகார் மனுவில் தன்னைத் திருமணம் செய்தவர் தான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருடைய மகன் என்று கூறியிருந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு 19ஆம் தேதி தான் குடியிருந்த வீட்டிற்கு வந்த அந்த ஆண் தனக்கு மயக்க பானம் ஒன்றைக் கொடுத்து அதன்பின் தன்னைக் கற்பழித்ததாகக் குறிப்பிட்டிருந்தார். மறுநாள் அந்த ஆண் அவருடைய அத்தை |
| உத்தராகண்ட் முதல் மந்திரி பயணம் செய்த ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம் Posted: 13 Jun 2014 03:40 PM PDT உத்தராகண்ட் முதல் மந்திரியான ஹரீஷ் ராவத் டேராடூனிலிருந்து டெல்லிக்கு ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத சூழ்நிலை காரணமாக அது தரையிறங்க நேர்ந்தது. அப்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஹரீஷ் ராவத் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் |
| நானக் புயலால் மும்பையில் 3-வது நாளாக கடல் சீற்றம் Posted: 13 Jun 2014 03:21 PM PDT அரபிக் கடலில் உருவான 'நானக்' புயல் ஓமன் நாட்டை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை அந்த புயல் ஓமன் கடலோர பகுதியை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் காரணமாக மும்பையில் நேற்று 3-வது நாளாக கடல் சீற்றம் அதிகம் உள்ளது. கடலில் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்து கடலோர பகுதிகளை தாக்கின. இதனால் நேற்றும் கடல் நீர் பல இடங்களில் நகருக்குள் புகுந்தது. |
| சத்திஸ்கரில் எஃகு ஆலையில் எரிவாயு கசிவால் 6 பேர் பலி: உயர் மட்ட குழு விசாரணைக்கு உத்தரவு Posted: 13 Jun 2014 03:00 PM PDT சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அருகே உள்ள பிலாய் எஃகு ஆலையில் விஷத்தன்மை வாய்ந்த எரிவாயு சென்றுகொண்டிருந்த குழாய் வெடித்து சிதறியதில் 6 பேர் பலியானதுடன் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.. காயமடைந்த 30 பேரில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். நேற்று இரவு 6.30 மணியிலிருந்து 7.00 மணிக்குள்ளாக அங்குள்ள தண்ணீர் |
| தேர்தல் தோல்வி குறித்து தேசிய செயலாளருடன் ஞானதேசிகன் ஆலோசனை Posted: 13 Jun 2014 02:52 PM PDT பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் தனியாக களம் இறங்கிய காங்கிரஸ் கட்சி, கன்னியாகுமரி தொகுதியை தவிர அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை பறிகொடுத்து படுதோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநிலத்தலைவர் பதவியில் இருந்து ஞானதேசிகன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று |
| ஈராக்கில் உள்நாட்டு கலவரம் எதிரொலி: ரூபாய் மதிப்பு, பங்குகள் விலை பாதிப்பு Posted: 13 Jun 2014 02:34 PM PDT ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தால் ரூபாய் மதிப்பும், பங்குகள் விலையும் வெகுவாக குறைந்து வருகிறது. அந்நாட்டில் தீவிரவாதிகளால் முக்கிய நகரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை கடந்த சில நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் கைப்பற்றினர். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |