Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை உள்நாட்டு பொறிமுறைகளை ஸ்திரப்படுத்தவேண்டும் பான் கீ மூன் கோரிக்கை!

Posted: 13 Jun 2014 11:24 PM PDT

rajabaksa

rajabaksaஇலங்கையில் இறுதி சமாதானத்துக்காக இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மதித்தல் உட்பட்ட உள்நாட்டு பொறிமுறைகளை ஸ்திரப்படுத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். பான் கீ மூனின் உதவி பேச்சாளர் பர்ஹான் ஹக், நேற்று நியூயோர்க்கில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது இதனை குறிப்பிட்டார். இதேவேளை இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கை விடயத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பான் கீ மூன் ஆதரிப்பதாகவும் பர்ஹான் ஹக் தெரிவித்தார். இலங்கையின் போருக்கு பின்னரான நடைமுறைகள் கஷ்டமானவை. எனவே சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளதாக பர்ஹான் ஹக் குறிப்பிட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

போலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் 400க்கும் மேற்பட்ட கடாக்கள் பலி!!

Posted: 13 Jun 2014 11:09 PM PDT

kadaakkal

kadaakkalபலத்த போலிஸ் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதியுடன் கீரிமலை கவுணாவத்தை நரசிங்க வைரவர் ஆலய வேள்வி இன்று அதிகாலை நடைபெற்றது. இன்றைய வேள்வியில் 400இற்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டப்பட்டன. 150இற்கும் மேற்பட்ட கோழிகள் வெட்டப்பட்டன. அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் உயிருடன் ஆலய நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்ன. நள்ளிரவில் இடம்பெற்ற பொங்கல் வழிபாடுகளைத் தொடர்ந்து அதிகாலையில் கடாக்கள் வெட்டும் நிகழ்வு ஆரம்பமாகியது. ஆலய வாயிலில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடைக்கப்பட்ட இடத்தில் பொது மக்கள் பார்வையிடா வண்ணம் இம்முறை கடாக்கள் வெட்டப்பட்டன. கடாக்கள் வெட்டும் இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் நின்று கடாக்களைப் பரிசோதித்து வெட்டுவதற்கு அனுமதித்தனர். ஒவ்வொரு கடாக்களும் பரிசோதிக்கப்பட்டே வெட்டுவதற்கு கொண்டுசெல்லப்பட்டன. ஓர் இடத்தில் ஒரு கடா வெட்டப்பட்டு அந்தக் கடா அகற்றப்பட்ட பின்னரே அடுத்த கடா வெட்ட அனுமதிக்கப்பட்டது. இதனால் அதிக நேர தாமதங்கள் ஏற்பட்டன. இம்முறையும் அதிக எண்ணிக்ககையானவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நள்ளிரவுக்கு முன்னரே ஆலய சுற்றாடலில் கடாக்களுடன் பொது மக்கள் கூடினார்கள். நேற்று மாலை முதல் ஆலய சுற்றாடலில் நூற்றுக்கும் மேற்பட்ட போலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தென்அமெரிக்கவில் ஓடிக்கொண்டிருந்த டிரக்கில் இருந்து குதித்து ஓடிய பன்றி!

Posted: 13 Jun 2014 10:59 PM PDT

pig

pigபரபரப்பான தென்அமெரிக்க விதியொன்றில் டிரக் வண்டி ஒன்று பன்றிகளை அடைத்துக் கொண்டு சென்றுள்ளது. வண்டிக்குள் இருந்து பன்றிகளில் ஒன்று திடீரென அடைப்புக்குள் இருந்து குதித்து வீதியில் ஓடியுள்ளது. டிரக் வண்டியின் பின்னால் வந்து கொண்டிருந்து ஒருவர் இந்த காட்சியை வீடியோவில் பதிவாக்கி இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சியை கிட்டத்தட்ட 60,000 பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளதாக அறியப்படுகின்றது. கசாப்பு கடையில் இறைச்சியாக தொங்கவேண்டிய பன்றியின் சாகசம் புல்லரிக்க செய்துள்ளதாக ஒருவர் தெரிவித்துள்ளார். சமூக இணையத்தளங்களான முகப்புத்தகம், ருவிட்டர் போன்றனவற்றில் இக்காட்சி பகிரப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரெக்சஸ் ஏரியில் குன்றின் விளிம்பில் தள்ளாடிய நிலையில் ஆடம்பர மாளிகை!

Posted: 13 Jun 2014 10:56 PM PDT

House

Houseமத்திய ரெக்சஸ் ஏரியில் ஒரு குன்றின் விளிம்பில் 75-அடி உயரத்தில் தொங்கி கொண்டிருந்த 4,000-சதுர அடி ஆடம்பர வீட்டை அதன் சொந்தக்காரர் வெள்ளிக்கிழமை எரித்து தரைமட்டமாக்கினார். பணிக்குழுவினர் வீட்டிற்கு தீ வைத்தனர். முதலில் வைக்கோலை உருட்டி அதனை எரிபொருளில் நனைத்து 800,000 டொலர்கள் பெறுமதியான மாளிகைக்குள் போட்டு தீயை மூட்டியுள்ளனர். பிப்ரவரி மாதத்திலிருந்து நீரின் எல்லையில் இருந்து நிலம் அரிக்கப்பட தொடங்கி கிட்டத்தட்ட 50-கஜம் வரை அரிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை கட்டிடத்தின் கீழ் நிலத்தின் ஒரு பெரிய துண்டு சரிந்ததால் மாளிகையின் அரைப்பகுதி நிலத்திலும் மிகுதி அரைப்பகுதி அந்தரத்திலும் நின்றுள்ளது. தனது ஓய்வூதிய சேமிப்பை இந்த மாளிகையில் செலவிட்ட சொந்தக்காரரான றொப் வெப் தனது சொத்தான மாளிகையை கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மாளிகை 2007-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மாளிகையின் கட்டமைப்பு ஒரு நிலையற்ற தரையின் மேல் அமைக்கப்பட்டுள்ளதென கூறப்படுகின்றது.  

This posting includes an audio/video/photo media file: Download Now

கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்கு ஈராக்கிற்கு அமெரிக்கப் படைகளை ஒபாமா அனுப்பி வைப்பாரா?

Posted: 13 Jun 2014 10:51 PM PDT

obama

obamaஈராக்கில் கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காகவும் அமெரிக்க உடமைகளைப் பாதுகாப்பதற்காகவும் ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் தங்கிநிற்கின்றது என்பது தெரியவருகிறது. அதே நேரம் அண்மையில்அமெரிக்க ஜனாதிபதியாகிய ஒபாமா அவர்கள் ஈராக் அமெரிக்காவிடம் உதவி வேண்டி நிற்கின்றது எனவும் அதற்காக அமெரிக்கா உதவுவதற்குத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவித்திருந்தன. ஆனால் வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா 'ஈராக்கிற்கு நாம் இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிடுவதற்காக அமெரிக்காவினது துருப்புக்களை திரும்பவும் அனுப்ப மாட்டோம்' எனத் தெரிவித்திருப்பதாக Voice of America வெளியிட்டுள்ளது. அத்துடன் ஒபாமர் வேறு ஏதாவது அனுகூலங்கள் இருக்கின்றனவா என்பதை அமெரிக்க அதிகாரிகள் பரிசீலனை செய்கின்றார்கள் எனத் தெரிவித்திருக்கின்றார். மேலும் ஒபாமா அவர்கள் தான் எவ்வாறு ஈராக்கிற்கு உதவலாம் என்பதுபற்றி நேற்றைய தினத்திலிருந்து தமது குழவினருடன் ஆலொசித்து வருவதாகவும் தெரிவித்திருக்கின்றார். ஆமெரிக்காவானது ஈராக்கில் துருப்புக்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சியை அதிகரித்திருக்கின்றது. அது தொடர்பான உபகரணங்கள், அறிவு போன்றவற்றை ஏற்கனவே அமெரிக்கா வழங்கிவிட்டதாகவும் ஆனால் ஈராக்கிற்கு அதற்கும் மேலாக உதவிகள் தேவைப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இன்று வெள்ளிக்கிழமை நான்தான் பாலா, முண்டாசுப்பட்டி உள்பட 6 படங்கள் ரிலீஸ்!

Posted: 13 Jun 2014 12:00 AM PDT

naan-than-bala

naan-than-balaஇந்த வெள்ளிக்கிழமை விவேக் ஹீரோவாக நடித்த நான்தான் பாலா, முண்டாசுப்பட்டி உள்பட 6 புதிய படங்கள் வெளியாகின்றன.

இந்த ஜூனுடன் அரையாண்டு முடிகிறது. இந்த 6 மாதங்களில் 100 படங்கள் என்ற எண்ணிக்கையைத் தொடப் போகிறது தமிழ் சினிமா.

இது ஒரு புதிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வாரம் தமிழ் சினிமா இந்த ஆண்டின் 90வது படம் வெளியாகிறது.

ஜூன் இறுதிக்குள் மேலும் 15 படங்கள் வெளியாக உள்ளன. இன்று மட்டும் 6 நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. அவை

விவேக் ஹீரோவாக நடித்துள்ள முதல் படம் இந்த நான்தான் பாலா. இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கண்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 125 அரங்குகளிலும் பெங்களூரில் 25 அரங்குகளிலும் இந்தப் படம் வெளியாகிறது. சர்வதேச அளவிலும் படம் வெளியாகிறது. லாரன்ஸ் தயாரித்துள்ளார்.

முண்டாசுப்பட்டி விஷ்ணு, நந்திதா நடித்துள்ள இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ராம் குமார் இயக்கியுள்ளார்.

மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. மனோஜ்குமார் இயக்கியுள்ளார். புதுமுகங்களுடன் பிரபு நடித்துள்ளார்.

விஎஸ்டி ஜான் என்பவர் இயக்கியுள்ள படம் இந்த ஓட்டம் ஆரம்பம். எல்லோருமே புதுமுகங்கள். கிடைத்த தியேட்டர்களில் படத்தை வெளியிட்டுள்ளனர்.

இது ஒரு பக்திப் படம். ஆர் சுந்தர் என்பவர் இயக்கியுள்ளார். நளினி, ராதா ரவி என தெரிந்த முகங்களும் உண்டு. இந்தப் படம் தவிர, திருட்டுப் போகும் மனசு என்ற படமும் வெளியாகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™