மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மத்திய மந்திரி சபை 18–ந்தேதி விரிவாக்கம்
- 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்
- முண்டே முதுகு தண்டுவடம் உடைந்ததால் மாரடைப்பு: பிரேத பரிசோதனை தகவல்
- அங்கன்வாடியை ஆய்வு செய்ய குடிபோதையில் வந்த அதிகாரி
- பாராளுமன்றம் கூடியது: கோபிநாத் முண்டே மறைவுக்கு அஞ்சலி
- 2ஜி வழக்கு: கனிமொழி ஜாமீன் கேட்டு மனு
- தற்காலிக சபாநாயகராக கமல்நாத் நியமனம்: ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
- இறந்தவர் இறுதி சடங்கை பார்த்த போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் சாவு
- சரிதா நாயர் செக்ஸ் குற்றச்சாட்டு: மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம்
- மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் ஜெயலலிதா சந்திப்பு
- ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் கதி என்ன? மத்திய அரசு விசாரணை
- அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி காஷ்மீர் முதல்வர் உத்தரவு
- போலீஸ் டி.ஜி.பி. மீது ஆள் கடத்தல், கொலை வழக்கு
- 60 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய கல்யாண மன்னன் கைது
- இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்-பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல்
- நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் விழுந்தது: 18 இந்திய பக்தர்கள் பலி
- மக்களவை நாளை கூடுகிறது: முண்டேவுக்கு அஞ்சலி செலுத்தி ஒத்திவைக்கப்படும்
- கற்பழிப்பு-கொலை முயற்சியில் இருந்து தப்பிய நீதித்துறை பெண் அதிகாரி
- மின்வாரிய அதிகாரியை தாக்கிய வழக்கில் யஷ்வந்த் சின்கா சிறையில் அடைப்பு
- தெலுங்கானா: காங்கிரஸ் சட்டசபை தலைவராக ஜனா ரெட்டி தேர்வு
| மத்திய மந்திரி சபை 18–ந்தேதி விரிவாக்கம் Posted: 03 Jun 2014 11:49 PM PDT நரேந்திர மோடி பிரதமராக கடந்த 26–ந் தேதி பதவி ஏற்றார். புதிய மந்திரி சபையில் 24 பேர் மத்திய கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர். 11 பேர் தனி பொறுப்புடன் கூடிய மந்திரிகளாகவும், 10 பேர் ராஜாங்க மந்திரிகளாகவும் பொறுப்பு ஏற்றார்கள் |
| 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் Posted: 03 Jun 2014 11:48 PM PDT பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம். ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. முகமது சிஜாம் டிப்–டாப் ஆக உடை அணிந்து மிகவும் வசீகரமாக இருப்பார். அதை பயன்படுத்தி கிராமத்து இளம்பெண்களை திருமணம் செய்துள்ளார். |
| முண்டே முதுகு தண்டுவடம் உடைந்ததால் மாரடைப்பு: பிரேத பரிசோதனை தகவல் Posted: 03 Jun 2014 11:46 PM PDT கார் மோதியதும் டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் முண்டே முன் இருக்கையில் மோதியபோது அவரது முதுகு தண்டு முறிந்தது. கல்லீரல் சிதைந்து ரத்தக் குழாய் வெடித்ததால் மரணம் ஏற்பட்டது. மத்திய மந்திரி கோபிநாத் முண்டே நேற்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார் வீட்டில் இருந்து விமான நிலையத்துக்கு சென்றபோது வழியில் வளைவில் திரும்பும் போது மற்றொரு கார் குறுக்கே |
| அங்கன்வாடியை ஆய்வு செய்ய குடிபோதையில் வந்த அதிகாரி Posted: 03 Jun 2014 10:52 PM PDT கேரள மாநிலம் மறையூர் அருகே உள்ளது காந்தலூர் கிராம பஞ்சயாத்து. இந்த பஞ்சாயத்து பகுதியில் உள்ள பயஸ்நகர் என்ற இடத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடியை ஆய்வு செய்யவும் ஊழியர்கள் சரியாக பணிபுரிகிறார்களா? என்பதை ஆராயவும் தேவிகுளம் |
| பாராளுமன்றம் கூடியது: கோபிநாத் முண்டே மறைவுக்கு அஞ்சலி Posted: 03 Jun 2014 10:23 PM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான 46 பேர் கொண்ட மந்திரிசபை பதவி ஏற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 16–வது பாராளு மன்றத்தின் முதலாவது குறுகிய கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடியது. தற்காலிக சபா நாயகர் கமல்நாத் தலைமை தாங்கி முதல்நாள் சபையை நடத்தினார். |
| 2ஜி வழக்கு: கனிமொழி ஜாமீன் கேட்டு மனு Posted: 03 Jun 2014 10:21 PM PDT 2ஜி அலைக்கற்றை உரிமை பெற்றுக் கொடுத்ததுக்காக, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடியை டி.பி. குழுமம் வழங்கியதாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த பணம் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாவும், இதில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 19 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கனிமொழி ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். |
| தற்காலிக சபாநாயகராக கமல்நாத் நியமனம்: ஜனாதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார் Posted: 03 Jun 2014 10:10 PM PDT 16–வது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் இன்று காலை கூடியது. பாராளுமன்ற மரபுப்படி சபையை நடத்துவதற்கு தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் தான் எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதுடன் புதிய சபாநாயகர் தேர்தலை நடத்துவார். அதன்படி மூத்த உறுப்பினரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை பாராளுமன்ற |
| இறந்தவர் இறுதி சடங்கை பார்த்த போது கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் சாவு Posted: 03 Jun 2014 09:20 PM PDT சீமாந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் நவாப் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவநாயுடு இவர் கடந்த 2–ந்தேதி டிராக்டர் மோதி பலியானார். நேற்று மாலை அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது. அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் அங்குள்ள ஒரு பழைய கட்டிடத்தில் ஏறி நின்றனர். அந்த கட்டிடத்தின் சுவர் மழையால் |
| சரிதா நாயர் செக்ஸ் குற்றச்சாட்டு: மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் Posted: 03 Jun 2014 08:32 PM PDT கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். இவர் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்துல்லா குட்டி, தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசியதாகவும், தனது தொகுதியில் சூரிய மின்தகடு பதிப்பது தொடர்பாக திருவனந்தபுரத்தில் ஒரு |
| மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியுடன் ஜெயலலிதா சந்திப்பு Posted: 03 Jun 2014 08:01 PM PDT மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்து பேசினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை 4.30 மணிக்கு மத்திய நிதி, கம்பெனிகள் விவகாரம் மற்றும் ராணுவத்துறை மந்திரியை நார்த் பிளாக்கில் |
| ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் கதி என்ன? மத்திய அரசு விசாரணை Posted: 03 Jun 2014 02:08 PM PDT தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் கதி என்ன, அவரை மீட்க எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆப்கானுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறது. தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்டவர் பாதிரியார் அலெக்ஸிஸ் பிரேம்குமார் (வயது 32). ஏசு சபையின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து, தமிழ்நாட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வுக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். |
| அரசு ஊழியர் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி காஷ்மீர் முதல்வர் உத்தரவு Posted: 03 Jun 2014 01:40 PM PDT அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 என்பதில் இருந்து மாற்றி பிற மாநிலங்களில் உள்ளது போல் 60 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த மாநிலத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி வந்தனர். நேற்று மீண்டும் முதல் மந்திரி உமர் அப்துல்லாவை அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து தங்களது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினர். இது தொடர்பாக மந்திரிசபையில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், நேற்று |
| போலீஸ் டி.ஜி.பி. மீது ஆள் கடத்தல், கொலை வழக்கு Posted: 03 Jun 2014 12:47 PM PDT 24 ஆண்டுகளுக்கு முன்னர் விசாரணைக்காக போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட நபர் மாயமானதால் பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஜி.பி. மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம், ரோபார் மாவட்டத்தை சேர்ந்த குல்தீப் சிங்(21) என்பவர் கடந்த 1990-ம் ஆண்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார். பின்னர், அவர் என்ன ஆனார்? என்பது தொடர்பான விபரம் எதையும் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். |
| 60 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய கல்யாண மன்னன் கைது Posted: 03 Jun 2014 10:59 AM PDT திருமண ஆசை காட்டி 60-க்கும் அதிகமான பெண்களை மோசடி செய்து, அவர்களிடம் இருந்து நகை, பணம் ஆகியவற்றை பறித்த ஆசாமியை பீகார் மாநில போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் சமஸ்டிப்பூர் மாவட்டத்தை செர்ந்தவன் முகம்மது சிஸாம்(30). ரெயில் டிக்கட் பரிசோதகராக பணியாற்றுவதாக கூறி வந்த இவன், வைஷாலி மாவட்டம், பஹவ்தின்பூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டான். |
| இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்-பிரதமரிடம் ஜெயலலிதா வலியுறுத்தல் Posted: 03 Jun 2014 10:24 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 64 பக்கங்கள் கொண்ட ஒரு மனுவை மோடியிடம் வழங்கினார். காவிரி நதி நீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, தமிழை ஆட்சி மொழியாக்குவது, தமிழக அரசின் கேபிள் டி.வி. சேவைக்கு அனுமதி வழங்குவது, மெட்ரோ ரெயில், போக்குவரத்து, மின்சார உற்பத்தி, ஊரக உள்கட்டமைப்பு மற்றும் போலீஸ் துறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அம்மனுவில் இடம்பெற்றிருந்தன. |
| நேபாளத்தில் ஆற்றுக்குள் பஸ் விழுந்தது: 18 இந்திய பக்தர்கள் பலி Posted: 03 Jun 2014 08:45 AM PDT நேபாளத்தில் இன்று மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பஸ் ஆற்றுக்குள் விழுந்ததில் 18 இந்திய பக்தர்கள் பலியானார்கள். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் நேபாளத்தில் உள்ள சுவர்கத்வாரி மலைக்கோவிலுக்கு சென்றுவிட்டு பஸ்சில் திரும்பிக் |
| மக்களவை நாளை கூடுகிறது: முண்டேவுக்கு அஞ்சலி செலுத்தி ஒத்திவைக்கப்படும் Posted: 03 Jun 2014 07:46 AM PDT மத்திய மந்திரி கோபிநாத் முண்டே இன்று சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக இன்று அமைச்சரவை சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், மக்களவைக் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நாளை |
| கற்பழிப்பு-கொலை முயற்சியில் இருந்து தப்பிய நீதித்துறை பெண் அதிகாரி Posted: 03 Jun 2014 07:04 AM PDT உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் நீதித்துறை பெண் அதிகாரியை கற்பழித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை அந்த அதிகாரி தனியாக இருந்தார். அப்போது அவரது தூரத்து உறவினர்களான |
| மின்வாரிய அதிகாரியை தாக்கிய வழக்கில் யஷ்வந்த் சின்கா சிறையில் அடைப்பு Posted: 03 Jun 2014 06:11 AM PDT ஜார்க்கண்ட் மாநில மின்வாரிய அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மின்வெட்டைக் கண்டித்து பா.ஜனதா கட்சியின் காசியாபாத் மாவட்ட |
| தெலுங்கானா: காங்கிரஸ் சட்டசபை தலைவராக ஜனா ரெட்டி தேர்வு Posted: 03 Jun 2014 05:45 AM PDT தெலுங்கானா சட்டசபையின் காங்கிரஸ் தலைவராக ஜனா ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ராஷ்டிரிய சமிதி தனிப்பெரும்பான்மை பிடித்தது. அத்துடன் அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் நேற்று தெலுங்கானாவின் முதல் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளை கைப்பற்றியது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |