Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி! கருணாநிதியின் பிறந்த நாள்

Posted: 03 Jun 2014 01:38 AM PDT

illayaraja-birthday-cel

illayaraja-birthday-celதிமுக தலைவரும் தனது நண்பருமான கருணாநிதிக்காக ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்த நாளைக் கொண்டாடினார் இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 2 என பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். இணையதளக் குறிப்புகளிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. உண்மையில் இளையராஜா பிறந்தது ஜூன் 3-ம் தேதிதான். இதே தேதியில்தான் கருணாநிதியின் பிறந்த நாளும் வருகிறது. முன்பெல்லாம் இளையராஜா தன் பிறந்த நாளை பொதுவில் கொண்டாடாமல் இருந்தார். அந்த நாளில் அவர் திருவண்ணாமலையிலோ அல்லது மூகாம்பிகைக் கோயிலிலோ இருப்பார். ஆனால் திரையுலகினரும் அவரது நண்பர்களும் அவர் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியபோது அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனையுடன். அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரம். அவருக்கும் ஜூன் 3-ம் தேதிதான் பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட வேண்டாம் என்ற நோக்கில் தன் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாடிவிடலாம் என்ற யோசனை சொன்னார் இளையராஜா. அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஒரு நாள் முன்பே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இளையராஜா. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த வழக்கத்தை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை. கடந்த ஆண்டு பிறந்த நாளன்று இதுபற்றி இளையராஜா கூறியதை இங்கே தருகிறோம்: "உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது. ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3-ம் தேதிதான் எனக்குப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது. அந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறை உங்கள் அன்பு இங்கே இருக்கும்படி ஆகிவிட்டது!"

This posting includes an audio/video/photo media file: Download Now

எபிலிட்டி பவுன்டேஷனுக்கு செக், டி.டி. கொடுங்கள் அன்பளிப்பு வேண்டாம்! அமலா பால், விஜய்

Posted: 03 Jun 2014 01:29 AM PDT

al-vijay-amala-paul

al-vijay-amala-paulதங்கள் திருமணத்திற்கு வருபவர்கள் அன்பளிப்போ, மலர் கொத்தோ கொண்டு வந்து தர வேண்டாம் மாறாக எபிலிட்டி பவுன்டேஷனுக்கு அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, டிடியாகவோ அளிக்குமாறு நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் கேட்டுக் கொண்டுள்ளனர். காதலர்களாக வலம் வந்த இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் ஆகியோரின் திருமணம் வரும் 12ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுகிறது. அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிலையில் பத்திரிக்கை வைக்கையில் அதனுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள் அமலாவும், விஜய்யும். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ "எபிலிட்டி பவுன்டேஷன்" என்ற அமைப்புக்கு வழங்குங்கள். இந்த அமைப்பு 1995ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாற்றுத் திறன் குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளும் பராமரித்து படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொடிளிலே சிறந்தது அவரைக்காய்!

Posted: 03 Jun 2014 01:25 AM PDT

Avarakkai

Avarakkaiகொடிகாய்களிலே சிறந்தது அவரைக்காய் மலிவான விலையில் நிறைய ஊட்டசத்துகளை தருவது அவரை.புரதம் சுண்ணாம்புசத்து, இரும்பு, வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன. மிக எளிதில் செரிமானமாகக் கூடியது.அவரை பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரத்தில் பத்திய உணவாகவும் இது உண்பதற்கு ஏற்றது. முற்றிய அவரைகாயை விட அவரை பிஞ்சே உடலுக்கு நல்லது. வெண்ணிற அவரைகாய் வாயு பித்தம் இவற்றை கண்டிக்கும்,உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும் எரிச்சலை அடக்கும். நீரிழிவு நோய் பேதி தொல்லை,அடிக்கடி தலை நோய் வருதல் ஜிரணக்கோளாறு,சீதபேதி,இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் பலனுன்டு.அஸ்ஸாமில் காது வலிக்கும்,தொண்டை வலிக்கும்,அவரைகாயின் சாறைப் பயன்படுத்துகின்றனர். இரத்த கொதிப்பை தடுக்கும் ஆற்றல் இதற்குண்டு என்பது அறிய கண்டுபிடிப்பு.

This posting includes an audio/video/photo media file: Download Now

வைஃபை கேமரா கூகுள் அறிமுகம்!

Posted: 03 Jun 2014 01:19 AM PDT

WiFi-Camera

WiFi-Cameraஇன்டர்நெட் உலகில் பலவேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, வலைதள தேடல்களில் முதலிடத்தில் உள்ளது கூகுள் நிறுவனம். வலைதளங்களை பயன்படுத்துவோரில் சுமார் 80 சதவீதம் பேருக்கு கூகுள் இணையத்தில் கணக்குகள் உள்ளது. மேலும் பிற சமூக வலைதளங்களில் நுழைவதற்கும் இந்த கூகுள் கணக்கு பயன்படுத்தும் வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. வலைதளங்களில் கிடைத்த வெற்றிகளை தொடர்ந்து மக்கள் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் சாதனங்களையும் தயாரிக்கும் பணியை தொடங்கியது. செல்போன், டேப்லெட் ஆகியவற்றை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன் கூகுள் கிளாசை அறிமுகப்படுத்தி, அனைவரின் பார்வையையும் தங்களது பக்கம் திருப்பியது. தற்போது டிரைவர் இல்லாமல் இயங்கும் காரை தயாரிக்கும் பணியில் அதிக கவனம் செலுத்திவருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம், மற்றொரு புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது வைஃபை மூலம் இயங்கும் கேமரா. இந்த கேமராவை வீடு அல்லது அலுவலகத்தில் பொருத்தி, அதை வைஃபையுடன் இணைத்துவிடவேண்டும். பின்னர் நாம் தைரியமாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். காரணம் வைஃபையுடன் இணைக்கப்பட்டிருக்கும் கேமரா குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை அது பொருத்தப்பட்டுள்ள இடத்தை புகைப்படம் எடுத்து நமது ஸ்மார்ட் போனிற்கு அனுப்பிவிடும். ஏற்கனவே வைபையில் இயங்கும் கேமராக்கள் சந்தையில் இருந்தாலும், கூகுள் நிறுவனம் தயாரிப்பில் பல தனித்தன்மைகளும் உள்ளது. அதாவது. வீட்டில் தீவிபத்து அல்லது மற்ற அசம்பாவிதங்கள் ஏதுவும் நேர்ந்தால் இந்த கேமராவில் உள்ள ஒரு சென்சார் கருவி புகைப்படத்துடன், அபாயத்தை தெரிவிக்கும் ஒருவித சங்கேத ஒலியையும் உங்களது ஸ்மார்ட் போனிற்கு அனுப்பும். இதன் மூலம் வெகு தொலைவில் இருந்தால் கூட வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை இருந்த இடத்தில் இருந்தே பார்த்து தெரிந்துகொள்ளலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் இன்னும் வெளியிடாவிட்டாலும், இந்த தயாரிப்புக்கு சிறிய நிறுவனங்களிடையே அதிக வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் கால்பதிக்காத எலக்ட்ரானிக் பொருட்களே இருக்காது என்று கூறலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 29 தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவு டுவிட்டர் வாயிலாக ராஜபக்சே அறிவிப்பு!

Posted: 03 Jun 2014 01:12 AM PDT

Mahinda-Rajapaksa-answers-on-Twitter

Mahinda-Rajapaksa-answers-on-Twitterஇலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் மோடியின் பதவியேற்பு விழாவுக்காக இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார். ஆனபோதும், மீண்டும் இலங்கைக் கடற்படையினரின் அட்டகாசம் தொடர்ந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த 29 மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்கள் 29 பேரையும் ஜூன் 16-ம் தேதி வரை அனுராதாபுரம் சிறையில் அடைக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. 29 பேர் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் தமிழக மீனவர்கள் கைதுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், தமிழக மீனவர்கள் 29 பேரும் விடுதலை செய்யப்பட உள்ளதாக ராஜபக்சே அறிவித்துள்ளார். இதனை தமது டுவிட்டர் வலை தளத்தில் அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பெல்ஜியத்தில் வான வேடிக்கை அந்தரத்தில் தொங்கியபடி சாப்பிட்ட வினோதம்!

Posted: 03 Jun 2014 01:07 AM PDT

a-sky-dinner-in-belgium

a-sky-dinner-in-belgiumபெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் வானத்தில் பரிமாறப்பட்ட அறுசுவை உணவால் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இந்த விருந்தில் பதிவு செய்த விருந்தினர்கள் கலந்து கொண்டு அறுசுவை உணவை சுவைத்து மகிழ்ந்தனர். அந்தரத்தில் அமர்ந்து சாப்பிட்ட இந்த விருந்தானது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். "குடை ராட்டினம்" போன்றதொரு வட்ட வடிவில் சாப்பிடும் அறை தயாரிக்கப்பட்டு, அந்நகரில் உள்ள மிக உயர்ந்த கட்டிடமான "பர்க் டியு சின்குவண்டெனெய்ர்" கட்டிடத்தின் உச்சியில் இருந்து கிரேன்களின் உதவியால் அந்தரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. கைதேர்ந்த பிரபல சமையல் கலைஞர் ஒருவர் அதில் இருந்தபடியே சுடச்சுட உணவு வகைகளை தயாரித்து அளிக்க, சொக்க வைக்கும் ஒயினுடன் அவை விருந்தில் கலந்து கொண்டவர்களுக்குப் பரிமாறப்பட்டன. இழுத்து கட்டப்பட்ட பாதுகாப்பு பெல்ட்களுடன் இருக்கைகளில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள், "நாம் இருப்பது பூலோகமா? இல்லை, மேல் லோகமா?" என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல் த்ரில்லில் தவித்தனர். இந்த வினோதமான திரிசங்கு விருந்தில் கலந்து கொண்டவர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரின் முழு அழகையும் ரசித்தபடி விருந்தில் பரிமாறப்பட்ட உணவு வகைகளை பதம் பார்த்தனர். வரும் 29 ஆம் தேதி வரை இந்த வான விருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களும் பதிவு செய்து இவ்விருந்தில் கலந்து கொண்டு உச்சியில் அமர்ந்து உணவை ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்தியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஒரு பள்ளிக்கூட சிறுவன் போன்று நடத்தியுள்ளனர்: இம்ரான் கான் கருத்து

Posted: 03 Jun 2014 01:01 AM PDT

imran-khan

imran-khanநரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியா சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஒரு பள்ளிக்கூட சிறுவன் போன்று நடத்தப்பட்டதாக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி கடந்த 26ம் தேதி பிரதமராக பதவியேற்ற விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது மனைவி மற்றும் மகனுடன் கலந்து கொண்டார். மேலும் கடந்த 27ம் தேதி அவர் பிரதமர் மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் கூறுகையில், மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இந்தியா சென்ற ஷெரீஃபை ஒரு பள்ளி சிறுவனை போன்று நடத்தியுள்ளனர். டெல்லியில் இந்திய தலைவர்களை சந்தித்த ஷெரீஃபால் ஏன் ஹுரியத் மாநாட்டு தலைவர்களை சந்திக்க முடியவில்லை என்றார். பதவியேற்பு விழாவுக்காக இந்தியா சென்றதால் ஷெரீஃப் ஹுரியத் தலைவர்களை சந்திக்கவில்லை என்று அவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், வெளியுறவுத் துறை ஆலோசகருமான சர்தாஜ் அஜீஸ் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நேபாளத்தில் நடந்த பஸ் விபத்தில் 16 பேர் பலி!

Posted: 03 Jun 2014 12:56 AM PDT

bus-accident

bus-accidentநேபாளத்தில் நடந்த பஸ் விபத்தில் 11 இந்தியர்கள் உள்பட 16 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். மேற்கு நேபாளத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்குள்ள ஆற்றில் பஸ் தடுமாறி விழுந்ததில் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. பஸ்சில் இருந்த அனைவருமே புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த யாத்ரீகர்கள் ஆவர். இவர்களில் இந்தியர்கள் 11 பேர் என்று கூறப்படுகிறது. பியூதான் மாவட்டத்திலிருந்து பஸ் திரும்பிக் கொண்டிருந்தபோது மலைச் சாலையில் திடீரென தடுமாறி கீழே உள்ள ஆற்றில் விழுந்துள்ளது. விபத்து நடந்த இடம் தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பலரும் உ.பி. மாநிலம் பல்ராம்பூர், கோண்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. ஸ்வர்கத்வாரி கோவிலுக்குப் போய் விட்டு கபிலவஸ்துவிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது. பஸ்சில் 60 பேர் இருந்ததாக தெரிகிறது. மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள உடல்களில் 7 பேர் பெண்கள் ஆவர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எதுக்கு நடுரோட்டுல இப்படி அட்டூழியம் பண்றாங்க!

Posted: 03 Jun 2014 12:50 AM PDT

Punishment-of-bullies

Punishment-of-bullies

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒயின்ஷாப் பார்-ல பாடம் நடத்துவாங்களா?…. பாருங்க இவரு நடத்துற பாடத்தை

Posted: 03 Jun 2014 12:46 AM PDT

Physics-lesson-in-the-bar

Physics-lesson-in-the-bar

This posting includes an audio/video/photo media file: Download Now

தீக்கோழியை ஏமாற்றுவது எப்படினு தெரியுமா?

Posted: 03 Jun 2014 12:43 AM PDT

How-to-outwit-the-feathered

How-to-outwit-the-feathered

This posting includes an audio/video/photo media file: Download Now

இணையத்தை கலக்கும் பிரான்ஸ் நாட்டு பெண்களின் நடனம்

Posted: 03 Jun 2014 12:38 AM PDT

kalasala-kalasala-dance-from-french-girls-Naima-&-Marie

kalasala-kalasala-dance-from-french-girls-Naima-&-Marie

This posting includes an audio/video/photo media file: Download Now

போட்டியில் நடுவரை பலியெடுக்க முயன்ற கார்!

Posted: 03 Jun 2014 12:35 AM PDT

Race-marshal-nearly-killed-by-out-of-control-car

Race-marshal-nearly-killed-by-out-of-control-car

This posting includes an audio/video/photo media file: Download Now

பார்ப்பவர்களை சொக்க வைக்கும் குழந்தையின் நடன ஆற்றல்!

Posted: 03 Jun 2014 12:33 AM PDT

Baby-Modern-Dance

Baby-Modern-Dance

This posting includes an audio/video/photo media file: Download Now

கேகேஆர் வீரர்களுக்கு ஈடன் கார்டனில் இன்று பிரமாண்ட பாராட்டு விழா

Posted: 03 Jun 2014 12:27 AM PDT

srk-kkr-win

srk-kkr-winஐபிஎல் டி20 7வது சீசன் பைனலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களுக்கு, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறுகிறது. பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த பைனலில், பஞ்சாப் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணி போராடி வென்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, கொல்கத்தா நகரம் முழுவதும் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். பல ரசிகர்கள் கேகேஆர் சின்னம் பொறித்த கொடிகளுடன் வாகனங்களில் ஊர்வலமாக வந்து கொண்டாடினர். கொல்கத்தா நகரமே விழாக் கோலமாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில், 2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற கொல்கத்தா வீரர்களுக்கு, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களும், திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர். இது குறித்து முதல்வர் மம்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கொல்கத்தா அணி வீரர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விருத்திமான் சாஹாவின் அற்புதமான ஆட்டத்துக்காக சிறப்பு பாராட்டுகள். சாம்பியன் வீரர்களுக்கு பிரமாண்டமான பாராட்டு விழா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அணி உரிமையாளர் நடிகர் ஷாருக் கானிடம் தெரிவித்தேன். இது குறித்து பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியாவுடனும் ஆலோசித்தேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், நிச்சயமாக இந்த விழாவில் கலந்து கொள்வேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். 2012ம் ஆண்டு கொல்கத்தா அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற போதும், மேற்கு வங்க அரசு சார்பில் மிகப் பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் அணிகளின் கேப்டன்களில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் மிகச் சிறந்தவர் என்று அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரும் பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டனுமான வாசிம் அக்ரம் புகழாரம் சூட்டியுள்ளார். அணி உரிமையாளர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என்று கொல்கத்தா அணி அதிரடி வீரர் யூசுப் பதான் கூறியுள்ளார். ஐபிஎல் 7வது சீசனில் சிறப்பாக விளையாடி 2வது இடம் பிடித்த பஞ்சாப் அணியை கவுரவிக்கும் வகையில், கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான் கிங்ஸ் லெவன் சீருடையை அணிந்து போஸ் கொடுத்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கால் இறுதியில் நடால் : பெட்கோவிக் முன்னேற்றம்!

Posted: 03 Jun 2014 12:21 AM PDT

Rabel-Nadaal

Rabel-Nadaalபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரருமான ரபேல் நடால் (ஸ்பெயின்) தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் செர்பியாவின் துசான் லஜோவிக்குடன் நேற்று மோதிய நடால் 6,1 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இப்போட்டியில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய அவர் 6,1, 6,2, 6,1 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர் 6,3, 6,3, 6,7 (5,7), 6,1 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் ஸ்பெயின் வீரர்கள் நடால் , பெர்ரர் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னணி வீரர்கள் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), மிலோஸ் ரயோனிக் (கனடா), எர்னஸ்ட் குல்பிஸ் (லாட்வியா), தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக் 1,6, 6,2, 7,5 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா), கார்பைன் முகுருசா, கர்லா சுவாரஸ் நவர்ரோ (ஸ்பெயின்), யூஜெனி பவுச்சார்டு (கனடா) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

63 வயதான நபரை கரம் பிடித்த 17 வயது சிறுமி பேஸ்புக்கில் மலர்ந்த காதல்!

Posted: 03 Jun 2014 12:14 AM PDT

Lovers

Lovers63 வயதான பேஸ்புக் காதலனை கரம் பிடித்த 17 வயதான சிறுமி ஒருவர் தொடர்பிலான தகவல்கள் மொரட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளமான பேஸ்புக் (முகநூல்) ஊடாக 60 வயதான வயோதிபர் ஒருவருக்கும் 14 வயதான சிறுமி ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சுமார் மூன்றாண்டுகள் இவர்களது காதல் உறவு பேஸ்புக் ஊடாக தொடர்ந்துள்ளது. அதன் பின்னர் குறித்த சிறுமி, பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக வீட்டை விட்டு வெளியேறி இந்த வயோதிபருடன் குடும்பம் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வயோதிபர் தமது பெயர் மற்றும் வயதை மறைத்து சிறுமியை ஏமாற்றியுள்ளார். அண்மையில் கண்டி நகரில் முதல் தடவையாக ஒருவருக்கு ஒருவர் சந்தித்து கொண்டதாகவும், வயோதிபருடன் சிறுமி சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், சிறுமி, வயோதிப காதலனை விட்டு விலகி வர மறுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாழை கிரமத்தில் 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை!

Posted: 03 Jun 2014 12:07 AM PDT

pillaiyan_batti

pillaiyan_battiஇந்திய வீடமைப்புத் திட்டம் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பேத்தாழை கிரமத்தில் வீடுகள் இல்லாமல் வாழ்கின்ற வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு 40 வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியில் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பாக பயனிகளுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் வாழைச்சேனை பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சந்திரகாந்தன் மேலும் குறிப்பிடுகையில், இதற்காக தற்போது 100 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது. பயனாளிகளின் தெரிவு தொடர்பான தீர்மானத்தை இந்திய வீடமைப்புத் திட்ட உயர் மட்டக் குழுவினர் கிடைத்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து முடிவெடுப்பார்கள். இவர்களின் தெரிவு சரியான தெரிவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதித் தீர்மானமாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. இவர்களுக்கு இடைஞ்சல் விளைவிக்க கூடாதெனவும் கேட்டுக் கொண்டார். பயனாளிகள் தெரிவில் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதே இவர்களின் கடமையாகுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்திற்கு வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஸ், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தேவாகரன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சபாநாயகர் முபாரக் அல் குரய்னிஜ் தலைமையிலான குவைத் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

Posted: 03 Jun 2014 12:00 AM PDT

Kwait-Flag

Kwait-Flagகுவைத்தின் பிரதி சபாநாயகர் முபாரக் அல் குரய்னிஜ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று மாலை நாட்டுக்கு வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் அழைப்பின் பேரில் இந்தப் பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்தப் பிரதிநிதிகள் குழுவினர் 4ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார்கள். குவைத் பிரதிநிதிகள், நாடாளுமன்றிற்கு சென்று அதன் செயற்பாடுகளை பார்வையிடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா உள்ளிட்ட பலரை இந்தப் பிரதிநிதிகள் சந்திக்க உள்ளனர். இரு தரப்பு உறவுகள், நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெளிநாட்டு சக்திகள் மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்ற வேண்டும்: கலாநிதி விக்ரமபாகு கருத்து

Posted: 02 Jun 2014 11:56 PM PDT

Rajabaksa

Rajabaksaவெளிநாட்டு சக்திகள் மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றும் நிலை உருவானால், நாட்டின் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட நேரிடும் எனவும் இதனால் அதற்கு முன்னர் உள்நாட்டு சக்திகள் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். இன்றைய அரசாங்கத்தை பாதுகாப்பது என்பது நிறைவேற்று அதிகாரத்திற்கும் அப்பால் சென்ற பாசிசவாதம் உருவாக இடமளிப்பதாகும். ராவணா பலய, பொதுபல சேனா போன்ற அமைப்புகளை வீதியில் இறக்கி அரசாங்கம் தனது தேவையை நிறைவேற்றி வருகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க இனவாதமற்ற பொது வேட்பாளரை தேடுவது சிரமமானது. நம்பிக்கை வைக்கக் கூடிய தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார். அதேவேளை 88ம், 89ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கொலைகளுக்கு ஜே.வி.பி மன்னிப்பு கோருவது கேலிக்குரியது. அவர்கள் கொண்டிருந்த தவறான கொள்கை தொடர்பிலேயே ஜே.வி.பியினர் மன்னிப்பு கோர வேண்டும். நாங்கள் கூறியது போல் செய்திருந்தால், சிங்கள புலிகள் தற்போது வெளியில் இருப்பார்கள் எனவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™