ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எனது அறிமுகம்
- ஒரு ரயில் பயணமும் நினைவில் நீங்கா இருவரும்!
- தமிழர்கள் கொடி தெலுங்கில்...
- கல்லணைக் காட்சிகள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
- ஆண்மகனின் நிலை
- ஃபேஸ்புக் கதைகள் ( தீய விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சி)
- தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம்
- பீர்-பா சென்ரியூ
- கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் ...
- இனி அவனும் நடிப்பான்!
- சேகுவேரா (வெளிஉலகம் அறியாத ரகசிய குறிப்புகள் மின்னூல் வடிவில் )
- அனைத்து மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கிறது: அகிலேஷ் யாதவ்
- உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு
- காங்கிரஸ் தோல்விக்காக தற்கொலை செய்தவர்...!
- ஊளைச் சதையை குறைக்க சில வழிகள்
- உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்......
- பழமொழியின் பின்னணி
- நேர்மறை எண்ணங்கள் (Positive Thinking)
- சொல்லாதே..! - உவமைக் கவிஞர் சுரதா
- ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
- சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு
- உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!!
- ஆர்வமே மனிதனின் ஆணிவேர்
- ஸ்மார்ட்போன் S DUOS 2 S7582 APPS.......
- மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம்
- மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
- குழந்தைகள் சிரிப்பினிலே...!!.
- பாமரர் தேவாரம்
| Posted: 03 Jun 2014 02:15 PM PDT பெயர்:சம்பத் சொந்த ஊர்:பெங்களூர் ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:surf பொழுதுபோக்கு:Blogging,கரோகே,painting தொழில்:Professor மேலும் என்னைப் பற்றி:ஆங்கிலத்தில் நான் எழுதிய மூன்று புஸ்தகம் பிரசுரம் ஆகி உள்ளது. |
| ஒரு ரயில் பயணமும் நினைவில் நீங்கா இருவரும்! Posted: 03 Jun 2014 01:58 PM PDT ஒரு ரயில் பயணமும் நினைவில் நீங்கா இருவரும்! 24 ஆண்டுகளுக்கு முன்னர், தங்கள் பரிவுமிக்க அணுகுமுறையால் இந்தக் கட்டுரையாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரு பயணிகள் பற்றிய பதிவு. 1990-ம் ஆண்டு. அது கோடை காலம். அப்போதுதான், நானும் என் தோழியும் இந்திய ரயில்வே போக்குவரத்துத் துறையில் இணைந்திருந்தோம். அது நாங்கள் தற்காலிக பணியாளர்களாக இருந்த காலக்கட்டம். நாங்கள் இருவரும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தோம். அதே பெட்டியில் இரண்டு எம்.பி.க்களும் இருந்தனர். அவர்களுடன், ... |
| Posted: 03 Jun 2014 11:21 AM PDT 'மனம்' தெலுங்கு படம் இன்று மாலைக் காட்சி.மனைவியுடன்(தான்.வேற வழி??????....) நட்சத்திர வலுவும் திரை ஆளுமை பிரபல்யமும் சில திரைக்கதைகளுக்குப் பெரும் அஸ்திவாரம் என்பதைப் படம் நெடுக உணர்த்திக்கொண்டே இருக்கிறது. காரை ஓர் உத்திப் பாத்திரமாக படம் நெடுக விரவ விட்டிருக்கிறார் கலை இயக்குனர் ராஜீவன். பி.எஸ்.வினோத்,தன் கேமராவுக்கு அழகியலை மட்டுமே அழுத்தமாகப் படப்பதிவு செய்யவேண்டும் என கட்டளையே பிறப்பித்திருப்பார் போலும்.ஆம்...அழகு அழகு அழகு அழகு...அவ்வ்வ்வ்வ்வ்ளவு அழகு ஒளிப்பதிவில். அத்தனைப் ... |
| கல்லணைக் காட்சிகள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன் Posted: 03 Jun 2014 10:08 AM PDT கல்லணைக் காட்சிகள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன் கி.பி. 200ஐ ஒட்டிய காலக் கட்டத்தில் கரிகாற் சோழன் காவிரியின் குறுக்கே கட்டியது கல்லணை ! தமிழர் திறனுக்குச் சான்றாக விளங்குவது ! கல்லணைமேல் நாம் இப்போது நடந்துசெல்லும் பாலம் 1839இல் கட்டப்பட்டது. 'கரிகால சோழன் நினைவு மணிமண்டபம் ' 12-2-2014இல் திறந்துவைக்கப்பட்டது. கல்லணை வட்டாரத்தில் அழிந்தவை போக எஞ்சிய பழைய மர இனங்களைக் குறிப்பிடுவதென்றால் வாகை, புன்கு ஆகியவற்றைக் குறிப்பிடலாம் ! 1-6-2014 , 2-6-2014 ஆகிய நாட்களில் நாங்கள் பார்த்த ... |
| Posted: 03 Jun 2014 10:06 AM PDT ஆண்மகனின் நிலை பெண்களின் கோணத்தில் இருந்து - உலகிலேயே மிக சிறந்த மனிதர் --அவரது தந்தை - மிகவும் உதாசீனப்படுத்தப்படுகிற மனிதன் -அவரது சகோதரன் மிகவும் அழகான மனிதன் --அவரது மகன் அதிர்ஷ்டம் +மிக்க சந்தோஷம் நிறைந்த மனிதர் --சகோதரியின் கணவன் மிகவும் நன்றிக்கு கடமை பட்ட மனிதர்-தன்னுடைய மருமகன் (மாப்பிள்ளை ) மிகவும்மோசமான ,சுயநலமிக்க ,இதயமற்ற ,பைத்தியம் , துர் குணங்களின் இருப்பிடம் --அவரது கணவன் நிசமாவே இப்படிதானா , ஏன்னா கொடுமை சரவணா ... |
| ஃபேஸ்புக் கதைகள் ( தீய விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சி) Posted: 03 Jun 2014 09:40 AM PDT பத்தாண்டுகளுக்கு முன் (2004) உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக், (Facebook) இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த சமூக வலையமைப்பு மென்பொருள் தளமாக (Social Networking site) விளங்குகிறது. எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்திலும், நல்லவையும் தீயவையும் சேர்ந்தே வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள், அந்தரங்கம் (privacy) மற்றும் மென்பொருள் பாதுகாப்பு (software security) பற்றி அதிகம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில், ஃபேஸ்புக்கின் மேலாண்மையும் சறுக்கி, சறுக்கியே, இன்றுவரை இயங்கி வருகிறது. இந்த மின் புத்தகத்தில் ... |
| தீரன் சின்னமலை -வம்சம்-பிறப்பு-குடும்பம் Posted: 03 Jun 2014 09:33 AM PDT தீரன் சின்னமலையின் முன்னோர்கள்: கொங்கு வேளாளர் சமுதாயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குலத்தார் உள்ளனர். அதில் பயிரகுலமும் ஒன்று. கொங்கு வேளாளர் மரபில் பயிர குலத்தில் பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார் வழியில் தோன்றியவர் சின்னமலை. இம்மரபினர் உத்தமக்காமிண்டன், சர்க்கரை, மன்றாடியார், பட்டக்காரர் என்ற பட்டங்களையும் சிறப்புப் பெயரினையும் பெற்றவர்கள். பயிர்த்தொழிலிலில் புதுமை செய்தவர்கள் தான் பயிர குலத்தவர். 'படியளந்து உண்ணும் பயிர குலம்''என்று ஒரு செப்பேடு புகழுகிறது. இதன் மூலம் இவர்களது வள்ளல் தன்மையை ... |
| Posted: 03 Jun 2014 09:27 AM PDT அளக்க உதவுகிறது பீர் விற்பனை வெயில் அளவு. தள்ளாட தள்ளாட நிலையாய் நிற்கிறது அரசின் வருவாய். போட்டியிட்டு உயர்கிறது பீர் விற்பனை அளவும் வெயில் அளவும். |
| கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் ... Posted: 03 Jun 2014 09:27 AM PDT [color=#3333ff] கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்றார் - இயேசு தேடுங்கள் கிடைக்கும் என்றார்...( 2 ) பெத்தலகேம் நகரில் மாட்டுதொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா.... சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசு பிதா....( 2 ) (கேளுங்கள்.......) ஆறு வயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பத்தாரையும் ஐயம் தீர உணர்ந்தார். இயற்க்கை உலகமே தூய்மையானது என இயேசு நினைத்தாரே.... எல்ல உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே..( 2 ) (கேளுங்கள்...) ஜெருசலேம் ... |
| Posted: 03 Jun 2014 09:25 AM PDT ஆடம்பரம் உனக்கான விளம்பரம் ஒப்பனை உனை மறைக்கும் திரை செயற்கை மலிந்து இயற்கை தொலைந்து எங்கும் எதிலும் பூசப்பட்ட வண்ணம் எண்ணங்கள் செயற்கையில் விழுந்தது ரசிப்பில் செயற்கை பெயருக்காய் ஆகா ஓகோ புன்னகை இதழோடு நிறுத்திக் கொண்டது உளம் வெறுமையானது உணர்வுகள் நடிப்பில் குளித்து பாசாங்கு செய்தது நட்பு பெயருக்காய் மொழியப்பட்டது தப்பு தப்பாய் தெரியவில்லை நீதி கனத்துக்காய் விழுந்தது கோதாய் போன ஏழை விதையாக முடியவில்லை செல்லரித்த சூத்தை ஆனான் பாசத்துக்கான அழுகை தொடர் ... |
| சேகுவேரா (வெளிஉலகம் அறியாத ரகசிய குறிப்புகள் மின்னூல் வடிவில் ) Posted: 03 Jun 2014 09:09 AM PDT "இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்" என்கிறார் எழுத்தாளர் காப்ரியில் கார்சியா மார்கோஸ். மேலும் மேலும் அறிய வேண்டிய எதோ ஒன்றை அவரது மரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது. காட்டுப்பூச்சிகள் கடித்து உடலெல்லாம் வீங்கிப் போகிறது. பசிக்கு வேறு வழியின்றி குதிரை மாமிசம் சாப்பிட்டு வயிற்று வலியில் அவதிப்படுகிறார். மழையும் வெயிலுமாய் உயர்ந்து கிடக்கிற மலைவெளிகளில் ஆஸ்த்துமாவோடு மூச்சிறைக்க நடக்கிறார். அதற்கு முன்பு கியூபாவின் அமைச்சராக, விமானங்களில் ... |
| அனைத்து மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கிறது: அகிலேஷ் யாதவ் Posted: 03 Jun 2014 07:28 AM PDT லக்னோ: அனைத்து மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கிறது என உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உ.பி., மாநிலத்தில் அடுத்தடுத்து கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்க முடியாமல், மாநில அரசு திணறி வருகிறது. கற்பழிப்பு சம்பவங்களை தொடர்ந்து, அம்மாநில தலைமைச்செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர் ஆகியோரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், தலையிட வேண்டியிருக்கும் என பா.ஜ., எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் அகிலேஷ் ... |
| உ.பி.,யில் பெண் நீதிபதி கற்பழிப்பு Posted: 03 Jun 2014 06:31 AM PDT லக்னோ: உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு நடப்பது சாதாரணமாகிவிட்டது. படான் என்ற இடத்தில் இரு தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து, மற்றொரு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்நிலையில், அலிகாரில், பெண் நீதிபதி ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ளார். தனது முகாம் அலுவலகம் அருகே மயங்கி கிடந்த அவர், கற்பழிக்கப்பட்டு கிடந்தது தெரிய வந்துது. அவர் தொடர்ந்து மயக்க நிலைலேயே இருப்பதால், கற்பழிப்புக்கு காரணமானவர்கள் குறித்து இதுவரை தெரியவில்லை. --- தினமலர் பெண் நீதிபதிக்கே ... |
| காங்கிரஸ் தோல்விக்காக தற்கொலை செய்தவர்...! Posted: 03 Jun 2014 06:22 AM PDT - தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் மனம் உடைந்த அரியலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் வினோத் (29) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். - அவரது படத் திறப்பு விழா வீரக்கன்னில் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கலந்து கொண்டு வினோத்தின் படத்தை திறந்து வைத்தார். பின்னர் வினோத் பெற்றோரிடம் ரூ.1 லட்சம் நிதியை வழங்கினார். - --மாலைமலர் |
| ஊளைச் சதையை குறைக்க சில வழிகள் Posted: 03 Jun 2014 06:17 AM PDT இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெணகள், என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது. வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு காரணமாக இருக்கிறது. இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் ... |
| உடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்...... Posted: 03 Jun 2014 06:15 AM PDT உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர் ஏராளம். கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று ஆசைப்படுவோர் கூட, உடல் எடை அதிகமுள்ளவரின் அவஸ்தைகளைக் கேட்டால் கொஞ்சம் அரண்டு தான் போவார்கள். நிற்க கஷ்டம், நடக்க கஷ்டம் என்று அவர்களின் தொல்லைகள் நீளும். இன்னொரு புறம் தேவையில்லாத வியாதிகள் ஒன்றன்பின் ஒன்றாக தொற்றத் தொடங்கும். உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு டயட் என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ... |
| Posted: 03 Jun 2014 06:10 AM PDT 'ஆறிலும் சாவு, நூறிலும் சாவு' என்று ஒரு பழமொழி சொல்வார்கள். இதற்கு, சாவு ஆறிலும் வரும், நூறிலும் வரும் என்றே நாம் எல்லோரும் பொருள் கொள்கிறோம். வாழ்க்கை நிலையற்றது என்பதைத் தான் இப்படிச் சொன்னார்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும், அதன் உண்மையான பொருள் இதுவல்ல. குருசேத்திர போரில் , போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி, அவனிடம் சென்று, பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறாள். அப்போது கர்ணன் கூறுகிறான்: 'தாயே! நான் பாண்டவர் ... |
| நேர்மறை எண்ணங்கள் (Positive Thinking) Posted: 03 Jun 2014 05:39 AM PDT மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது. எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் பலரிடம் பதிலிருக்காது. வாழ்க்கையில் பல பேர் பத்து சதவிகிதமாவது எதிர்மறை எண்ணங்களை (negative thinking) கொண்டிருப்பர். எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து வளர்த்துக் கொள்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுவர். ஆனால் நேர்மறை எண்ணங்கள் நம்பிக்கையை ஆதாரமாக பயன்படுத்தி மன அழுத்தத்தை ... |
| சொல்லாதே..! - உவமைக் கவிஞர் சுரதா Posted: 03 Jun 2014 05:19 AM PDT - (சிந்து) - தென்றலின் தங்கையவள்-செந் தேனின் கலசமவள்! கன்னியோ அஞ்சுகின்றாள்-கருங் கடலே கனைக்காதே! - குளிர்பிறை போன்றவளாம்-மலர்க் கொத்தினை ஒத்தவளாம்! கிளிமகள் அஞ்சுகின்றாள்-அல்லிக் கேணியே பொங்காதே! - உறவில் உறங்குபவள் -நிலவே உன்னைக்கண் டஞ்சுகின்றாள்! மறைவில் நடப்பவற்றை-நீ மாந்தர்க்குச் சொல்லாதே! - --------------------------- >உவமைக் கவிஞர் சுரதா (தேன்மழை - கவிதை தொகுப்பு) படம்: இணையம் |
| Posted: 03 Jun 2014 04:22 AM PDT * பிரச்சினையைப் பேசினாள் மகள் கீரையை அலசினாள் தாய். * பேரம் பேசி வாங்கிளாள் வீட்டம்மா கஷ்டத்தைக் கூறி ஆதங்கப்பட்டாள் கீரைக்காரி. * கலகமூட்டாமல் போவதில்லை வெளியூரிலிருந்து வரும் உறவினர்கள். * கடன் கொடுத்தவன் வாங்க அலையிறான் கடன் வாங்கியவன் கொடுக்க திணறுகிறான். * வீட்டை அழகுப் படுத்துகின.றன தவணையில் வாங்கிய பொருட்கள் * |
| சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு Posted: 03 Jun 2014 03:42 AM PDT லண்டன்: உலகிலேயே முதல் முறையாக சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான எக்ஸ்ரே ஒளியை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 50 மில்லியன் ஆண்டு பழமையான தாவர படிமங்களையும் துல்லியமாக படம் பிடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் டயமண்ட் லைட் சோர்ஸ் நிறுவனம் இணைந்து அதிக பிரகாசமுள்ள ஒளி பற்றி ஆய்வு செய்தன. அதில் சூரிய ஒளியை விட பல மடங்கு அதிக பிரகாசமாக ஒளிரும் எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்துள்ளன. இது ... |
| உள்ளதைச் சொல்லு! உள்ளத்தை வெல்லு!! Posted: 03 Jun 2014 03:35 AM PDT வயப்படுத்துதல்: சொல்லும் சொற்கள், அவற்றைக் கேட்பவர்களைத் தன்வயப்படுத்தி, மற்ற எல்லா எண்ணங்களையும் புறந்தள்ளுவதாக அமைவதை வயப்படுத்துதல் என்கிறோம். வாயிலிருந்து வருவது எல்லாமே பேச்சாக இருக்க முடியாது. வயிற்றில் இருப்பதன் மணம் வாய் வழியாக, வாயுவாக, ஏப்பமாக, விக்கலாக வெளிவருவதுடன் பேசும் வார்த்தைகள் நம் மனதிலிருந்து வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கேட்டார் பிணிக்குந் தகையவாய்க்கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல் (குறள் 643) கேட்பவர்கள் நம் சொற்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளுமாறு பேசுதல் ... |
| Posted: 03 Jun 2014 03:33 AM PDT மனிதச் செயல் எவ்வளவு சின்னஞ்சிறு வடிவில் இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய வடிவில் அது வெளிப்பட்டாலும் சரி, இரண்டு செயலுக்கும் மூலமுதற் காரணமாக இருப்பது ஆர்வமே. எந்த அளவு ஆர்வம் மனிதனிடத்தில் இருந்து வெளிப்படுகின்றதோ அந்த அளவு சிறப்புடையதாக செயல் அமைகின்றது என்பது மறுக்க முடியாததாகும். ஆர்வம் மிக்க மனிதர்களிடம் இருந்து, எப்போதும் அதிசயத்தக்க ஆற்றல் வெளிப்பட்ட வண்ணம் இருக்கும்.அவர்களை பார்த்தமாத்திரத்திலேயே, அனைவருக்கும் பிடித்துவிடும். ஆர்வமிக்கவர்கள் எந்நேரமும், சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் ... |
| ஸ்மார்ட்போன் S DUOS 2 S7582 APPS....... Posted: 03 Jun 2014 02:22 AM PDT அன்பு உறவுகளே , நான் SAMSUNG GALAXY S DUOS 2 S7582 வாங்கி உள்ளேன் இதற்கு தேவையான APPS களை கூறவும் மற்றும் உபயோகமானே தகவல்களை தரவும் ..... |
| மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மரணம் Posted: 03 Jun 2014 01:23 AM PDT மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, சாலை விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். டில்லி விமான நிலையம் அருகே இவருடைய கார் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் விபத்து நிகழ்ந்தது. இதில் காயம்அடைந்த அமைச்சர் கோபிநாத் முண்டே, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் மத்திய அமைச்சர் முண்டேஅமைச்சர்கள் ஹர்ஷவர்தன், கடகாரி ஆகியோர் மருத்துவ மனைக்கு விரைந்தனர். கோபிநாத் முண்டேக்கு தலையிலும் மார்பிலும் காயம் ஏற்பட்டதாகவும், ரத்தம் பெருமளவில் வெளியேறி ... |
| மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் Posted: 02 Jun 2014 09:46 PM PDT பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ... |
| Posted: 02 Jun 2014 08:25 PM PDT அன்பு செய்…!! * கனவுகள் மனதில் விதைத்திடுவோம் கடமையாய் முயற்சியில் உழைத்திடுவோம். படிப்பினில் முதன்மை பெற்றிடுவோம் பணியில் சேர்ந்து உயர்ந்திடுவோம். வாழ்வில் நன்மைகள் ஆற்றிடுவோம் ஏழ்மை நிலைதனை அகற்றிடுவோம். வேற்றுமை உணர்வை மறந்திடுவோம். ஒற்றுமையாய் வாழ்ந்து காட்டிடுவோம் பண்பு பணிவில் பழகிடுவோம் அன்பால் உலகை வென்றிடுவோம்…!!. * |
| Posted: 02 Jun 2014 06:28 PM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |