Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அரசு ஊழியரை தாக்கிய வழக்கில் யஷ்வந்த் சின்காவுக்கு 14 நாள் சிறை

Posted:

ஹஜாரியாபாக் (ஜார்க்கண்ட்):அரசு ஊழியரை தாக்கிய வழக்கில், ஜாமின் கோர மறுத்ததால், பா.ஜ., மூத்த தலைவர் யஷ்வந்த் சின்காவையும், அவரின் ஆதரவாளர்களையும், 14 நாட்களுக்கு சிறையில் அடைக்க, ஜார்க்கண்ட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா:ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை சேர்ந்த ஹேமந்த் சோரன், முதல்வராக பதவி வகிக்கிறார்.ஜார்க்கண்டில், கடுமையான மின் வெட்டு அமலில் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ...

வருமான கணக்கு தாக்கல் செய்ய தவறியதாக வழக்கு: ஜெ., சசிகலா ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு

Posted:

சென்னை : 'வருமான வரித் துறையினர் தொடர்ந்த வழக்கில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர், வரும், 9ம் தேதி தவறாமல் ஆஜராக வேண்டும்' என, சென்னை, எழும்பூர் பொருளாதார நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விசாரணை:முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மீது, வருமான வரித் துறை வழக்கு தொடர்ந்தது, 'சசி என்டர்பிரைசஸ்' நிறுவனம் தொடர்பான, வருமான கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய தவறியதாக, இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.சென்னை, எழும்பூரில் உள்ள, பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும், நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. ...

வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: மோடிக்கு சோனியா கடிதம்

Posted:

புதுடில்லி:'ஆந்திரா சீமாந்திரா பகுதிக்கு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த வாக்குறுதிகளை, உங்கள் அரசு நிறைவேற்ற வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் எழுதி உள்ளார்.மறுசீரமைப்பு சட்டம்இது தொடர்பாக, மோடிக்கு, சோனியா எழுதியுள்ள கடிதம்:ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம், 2014ன்படி, ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது, சீமாந்திரா பகுதிக்கு, சிறப்பு அந்தஸ்து வழங்குவது, போலாவரம் பல்நோக்கு பாசன திட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் முதலீடுகள் தொடர்பாக, பல வாக்குறுதிகளை, மன்மோகன் சிங் ...

அமைச்சராக பதவியேற்ற 9 நாளில் விளையாடிய விதி

Posted:

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம், நாதரா கிராமத்தில், விவசாய குடும்பத்தில், 1949 டிசம்பர், 12ல் பிறந்தவர் கோபிநாத் முண்டே. அவரின் தந்தை பாண்டுரங் முண்டே, தாயார் லிம்பாபாய்.புனே பல்கலையில் பி.காம்., படித்தார். கல்லூரியில் படிக்கும் போது, மறைந்த, பா.ஜ., மூத்த தலைவர் பிரமோத் மகாஜன் மூலம் அரசியலில் நுழைந்தார். இவர்கள் இருவரும், சிறந்த நண்பர்கள். பிரமோத் உடன் சேர்ந்து, அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தில் இணைந்தார்.அவசரநிலை பிரகடனத்தின் போது, நாசிக் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 1971ல் ஆர்.எஸ்.எஸ்.,ல் இணைந்து பல பொறுப்புகளை வகித்தார். ஜனதா கட்சி உடைந்து, பா.ஜ., ...

பிரதமர் மோடி நெருக்கடிக்கு இணங்கிய ராஜபக் ஷே: கைதான 3 நாளில் ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை

Posted:

ராமேஸ்வரம்:பிரதமர் மோடி கொடுத்த நெருக்கடியால், கைது செய்யப்பட்ட மூன்றே நாளில், தமிழக மீனவர்கள் 33 பேரை, இலங்கை அதிபர் ராஜபக் ஷே விடுதலை செய்ததாக, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.ராமேஸ்வரத்தில் இருந்து மே 30 இரவில், மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்களில், 29 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். மேலும், இன்ஜின் பழுதாகி, காற்றின் வேகத்தால் இலங்கை மன்னார் பகுதிக்கு சென்றுவிட்ட படகையும், 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து, மன்னார் மீன்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.இவர்கள் மீது வழக்கு பதியாமல், ...

எரியும் பள்ளி வாகனம்: சுதாரிக்குமா போக்குவரத்து துறை?

Posted:

மதுரையில் பள்ளி வாகனம் எரிந்த சம்பவம், பள்ளி வாகன பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை கேள்விக்குறியாக்கியுள்ளது. விபத்துகளை தடுக்க, வாகன ஆய்வை முறைப்படுத்துவதோடு, ஓட்டுனர்களுக்கு போதிய பயிற்சியை அளிக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.பள்ளி வாகனங்களில் விபத்து ஏற்படாமல் தடுக்க, அவற்றில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை போக்குவரத்து துறையின் கண்காணிப்பு குழுக்கள் ஆய்வு செய்கின்றன. படிக்கட்டு, அவசரகால கதவு, டயர்கள், முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள், வேகக் கட்டுபாட்டு கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு, ஆய்வில் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.அதன் ...

பா.ஜ., கூட்டணியை விட்டு வெளியேறுமா தே.மு.தி.க.,?

Posted:

பா.ஜ., கூட்டணியை விட்டு தே.மு.தி.க., வெளியேறுமா என்பது குறித்து, இன்று நடக்கவுள்ள அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - - தி.மு.க.,விற்கு மாற்றாக, பா.ஜ., உருவாக்கிய கூட்டணியில், 14 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. ஆனால், ஒரு இடத்தில் கூட அக்கட்சியால் வெற்றிப் பெற முடியவில்லை; 10 தொகுதிகளில், 'டிபாசிட்' இழந்ததுதான் மிச்சம்.தேர்தல் படுதோல்வியால், தே.மு.தி.க., மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி உள்ளது. இருப்பினும், கூட்டணிக்கு தலைமை ஏற்ற, பா.ஜ., மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பா.ஜ., மேலிட ...

தமிழகத்திற்கு ரூ.3.54 லட்சம் கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்

Posted:

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, டில்லியில் சந்தித்து, 64 பக்கங்கள் கொண்ட, கோரிக்கை மனு கொடுத்தார். அதில் தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு, 3.54 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரியுள்ளார்.மனுவில் அவர் கூறியிருப்பதாவது:*மாநிலங்களுக்கு இடையே மின்சாரம் கொண்டு வர, தேவையான மின் தடங்களை உருவாக்க, 2,250 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.*அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசு பங்காக, 284.95 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இதுவரை 57 கோடி ரூபாய் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மீதி பணத்தை, விரைவாக வழங்க ...

கட்சியை சீரமைக்க பட்டியல் தயார்: கருணாநிதி அறிவிப்பு

Posted:

சென்னை:கட்சியை சீரமைக்கும் பணியில், தற்போதைய நிர்வாகிகளை நீக்கி, புதியவர்களை நியமிக்கும் பட்டியல் தயாராக உள்ளது. விரைவில் அப்பட்டியல் வெளியிடப்படும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.தி.மு.க.. தலைவர் கருணாநிதியின், 91வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் பொதுசெயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின், கூட்டணிக் கட்சி தலைவர்கள், காதர் மொய்தீன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்க தோல்வி ...

'அமலாக்க துறையின் குற்றச்சாட்டு பொய்': சிறப்பு கோர்ட்டில் கனிமொழி வாதம்

Posted:

புதுடில்லி:'கலைஞர், 'டிவி'க்கு பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் வழக்கில், எனக்கு எந்த தொடர்பும் இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் புனையப் பட்டுள்ளன' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி தரப்பில், நேற்று, டில்லி சிறப்பு கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. இதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெறுவதற்காக, கலைஞர் 'டிவி'க்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, மத்திய அமலாக்க துறை சார்பில், சிறப்பு கோர்ட்டில் ...

சூழ்நிலைக்கு ஏற்ப, ராஜ்யசபாவில் பா.ஜ.,வுக்கு ஆதரவு: பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஜெ., அறிவிப்பு

Posted:

''ராஜ்யசபாவில், அவ்வப்போதைய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில், பா.ஜ.,வுக்கு ஆதரவு தரப்படும்,'' என, டில்லியில், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய பின், முதல்வர் ஜெயலலிதா கூறினார். அதேநேரத்தில், தே.ஜ., கூட்டணியில், அ.திமு.க., சேரலாம் என, கடந்த சில நாட்களாக வதந்திகள் உலா வந்தன. அப்படி எதுவும் நேற்று நடக்கவில்லை.டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்த, முதல்வர் ஜெயலலிதா, அவரிடம், தமிழகத்துக்கு தேவயான கோரிக்கைகளை, 64 பக்க அறிக்கையாக அளித்தார். 50 நிமிட சந்திப்புக்கு பின், தமிழ்நாடு இல்லம் திரும்பிய, முதல்வர் ஜெயலலிதா, நிருபர்களிடம் ...

லோக்சபா கூடும் சமயத்தில் மந்திரி முண்டே பலி:வெற்றி விழா கொண்டாட சென்றவர் விபத்தில் சிக்கினார்

Posted:

புதுடில்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில், பிற்பட்ட வகுப்பினர் மத்தியில் பிரபலமான தலைவரும், அம்மாநிலத்தின், பா.ஜ., முதல்வர் வேட்பாளராக, இந்த ஆண்டு இறுதியில் முன்னிறுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டவருமான, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, 64, நேற்று மரணம் அடைந்தார்.வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக, தன் தொகுதிக்கு செல்ல, டில்லி விமான நிலையம் சென்ற போது, அவர் பயணித்த கார் மீது மற்றொரு கார் மோதியது. இதில், ஏற்பட்ட அதிர்ச்சியில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.சோகம்லோக்சபா இன்று கூட உள்ள நிலையில், மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™