ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்
- விளையாட்டு செய்தித் துளிகள்
- பெண்களுக்கான கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 50வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
- உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014
- உலகச் செய்திகள்!
- பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து!
- பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல்
- கனவாகும் மெடிக்கல் படிப்பு!
- சாதனை இயக்குநர் ராமநாராயணன் காலமானார்!
- இந்தியும் இந்தியாவும்..
- வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயசெட்டி நினைவு நாள்: ஜூன் 23, 1925
- சஞ்சய் காந்தி நினைவு தினம்: ஜுன் 23, 1980
- எனக்கு மட்டும்...
- தனித்த பொழுது
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- சிறந்த செல்வம்!!
- tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2
- சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…!
- மிச்சமிருக்கும் ஒரு கவிதை
- நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..!
- ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது
- காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..!
- 200 கோடியில், எந்திரன் – 2!
- மீண்டும் ஜோடி சேர்ந்த பிரசன்னா – சினேகா!
- சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்!
- பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்
- சரும பாதுகாப்பு - டிப்ஸ்
- இந்த வார சினிமா செய்திகள்..
- காலத்தின் தூண்களாக நிற்கும் தேர்கள்
- வணங்கத்தொடங்கினால் வளரத் தொடங்குவாய்..!
- இளமையாக இருக்க நெல்லிக்காய்!
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (43)
- சப்தபதி மந்திரம்
- இடைவெளி
- சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்
- tamil kathal kavithai SMS kavithaigal தமிழ் காதல் கவிதை
- இலங்கை: இன அழிப்பைத் தொடர்ந்து மத அழிப்பு...
- கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வு: மத்திய அரசு பரிசீலனை!
- கிரைண்டரை கையாளும் வழிகள்
- காலிஃப்ளவர்..!
- மீண்டும் மீண்டும்..
- - அத்து மீறல்
- தேசிய மொழியே இல்லாத நாடு இந்தியா..!
- கூண்டு கிளி - கல்யாண்ஜி
- மீண்டும் இராக்கா, மிஸ்டர் ஒபாமா?
| மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள் Posted: 22 Jun 2014 03:22 PM PDT சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம். வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும். அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம். உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான ... |
| Posted: 22 Jun 2014 03:20 PM PDT * 37வது தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) கோவையில் இன்று தொடங்குகிறது. இதில் 500க்கும் அதிகமான வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். * பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது அவரை சந்தித்த இளம் டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னாவின் கோரிக்கையை ஏற்று அவரது பயணச் செலவுகளை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தார். 'இந்த உதவி எனக்கு புதிய உத்வேகத்தை கொடுத்தது. ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனையாக உள்ள நான் விரைவில் உலக தரவரிசையிலும் குற்றிப்பிடத்தக்க ... |
| பெண்களுக்கான கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 50வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. Posted: 22 Jun 2014 03:18 PM PDT சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று பெண்கள் அணிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி 50வது இடத்தில் உள்ளது. இதன்மூலம் இந்திய பெண்கள் அணி இரண்டாவது முறையாக டாப்-50வது இடத்திற்குள் முன்னேறியுள்ளது. ஆசிய அணிகளுக்கான தரவரிசையிலும் இந்திய அணி ஒரு இடம் முன்னேறி, 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுக்கான (2014) தகுதிச் சுற்றில் பங்கேற்றது. அடுத்து, பாகிஸ்தானில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து ... |
| உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014 Posted: 22 Jun 2014 03:16 PM PDT உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா பிரேசில் நாட்டில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த கோலாகல கால்பந்து செய்திகள் மற்றும் கண்ணோட்டங்களை இங்கு பார்க்கலாம் உலகம் முழுக்க 100 கோடி 'வெறி பிடித்த ரசிகர்கள்' கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது. உலகின் ஒரு மாத 'வைரல் டிரெண்டிங்' ஆகவிருக்கும் போட்டியைப் பற்றி சில சுவாரஸ்யங்கள் ... |
| Posted: 22 Jun 2014 03:13 PM PDT தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| பட்ஜெட்டில் காத்திருக்கும் மோடியின் கசப்பு மருந்து! Posted: 22 Jun 2014 03:10 PM PDT இந்திய பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்து வருவதாகவும், அதனை மீட்டெடுக்க கசப்பு மருந்துகள் தேவையாக உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமையன்றுதான் கூறியிருந்தார். அவர் அவ்வாறு கூறிய ஒரே வாரத்தில், பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாகவே பயணிகள் ரயில் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் உயர்த்தி மக்களை அதிரவைத்துள்ளது ரயில்வே துறை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடந்த கால ஆட்சியில் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள், குறுகிய கால இடைவெளியில் ... |
| பாக்தாத்தை நோக்கி தீவிரவாதிகள்; எந்த நேரத்திலும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் Posted: 22 Jun 2014 03:08 PM PDT ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் மேலும் 2 நகரங்களைக் கைப்பற்றி விட்டனர். அவர்கள் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் வான்வழி தாக்குதல் நடத்தலாம் என தெரியவந்துள்ளது. ஈராக் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். ஈராக்கிலும், சிரியாவிலும் தங்களுக்கென்று ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். இந்த நிலையில் கடந்த 9 ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2வது பெரிய ... |
| Posted: 22 Jun 2014 03:07 PM PDT மாட்டுப்பண்ணை,கோழிப்பண்ணை போன்று தமிழ்நாட்டில் தற்போது 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக 'பள்ளிப்பண்ணைகள்' வைத்து நடத்துபவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அதனால்தான் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் கணித பாடப்பிரிவில் 3,882 பேர்,இயற்பியலில் 2,710 பேர், வேதியியலில் 1,693 பேர், உயிரியியலில் 652 பேர் என்று 200 க்கு 200 மதிப்பெண் எடுத்துள்ள நிலையில்,மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கட் ஆப் மதிப்பெண்ணாக ... |
| சாதனை இயக்குநர் ராமநாராயணன் காலமானார்! Posted: 22 Jun 2014 03:04 PM PDT பிரபல சினிமா இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராமநாராயணன் சிங்கப்பூரில் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 9 மொழிகளில் 125 படங்களை ராமநாராயணன் இயக்கியுள்ளார். விலங்குகளை ஹீரோவாக காண்பித்து சாதனை படைத்தார். அவருக்கு வயது 67 தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 125-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் என்ற சாதனையை தன்வசம் கொண்டிருந்த ராம. நாராயணன், பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ... |
| Posted: 22 Jun 2014 03:00 PM PDT புதிய பாஜக அரசு பதவியேற்ற சிலநாட்களில் உள்துறை அமைச்சகம் இவ்வாறு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. "It is ordered that government employees and officials of all ministries, departments, corporations or banks, who have made official accounts on Twitter, Facebook, Google, YouTube or blogs, should use Hindi, or both Hindi and English, but give priority to Hindi." "ட்விட்டர், பேஸ்புக், கூகுள், யூடியூப் அல்லது வலைப்பூக்களில் அலுவலக ரீதியான கணக்கு வைத்திருக்கும் அமைச்சர்கள், துறைகள், வாரியங்கள் ... |
| வெள்ளுடை வேந்தர் சர்.பி.தியாகராயசெட்டி நினைவு நாள்: ஜூன் 23, 1925 Posted: 22 Jun 2014 02:57 PM PDT வெள்ளுடை வேந்தர் சர் பி. தியாகராய செட்டி என்னும் பிட்டி தியாகராயர் சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்த அய்யப்ப செட்டியார், வள்ளி அம்மாள் தம்பதியருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அவர், 1876 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டம் பெற்றார். தியாகராயர் மனைவியின் பெயர் சின்னவள்ளி அம்மாள். அவருக்கு ஒரு புதல்வரும் ஏழு மகள்களும் பிறந்தனர். தியாகராயர் நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராவார். திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ... |
| சஞ்சய் காந்தி நினைவு தினம்: ஜுன் 23, 1980 Posted: 22 Jun 2014 02:55 PM PDT சஞ்சய் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன். 11 ஆம் வகுப்பு வரையே பயின்ற, சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் க்ரூ என்னுமிடத்தில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டித் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்ஜய் தனது அன்னையின் அருகில் இருக்க ... |
| Posted: 22 Jun 2014 12:56 PM PDT - அவளின் முந்தானை என் முகத்தில் உரசியதும் கீழே விழுந்த அவளின் கைக்குட்டையை நான் பத்திரப்படுத்தியதும் என் கால்தடத்தில் அவள் நடந்ததும் மற்றவர்களுக்கு அசட்டுத் தனமாய்த் தெரியும் எனக்கு கவிதையாய்…1 - ———————– >ஆர்.சத்தியன் (எழுத மறந்த கவிதை) |
| Posted: 22 Jun 2014 11:23 AM PDT அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் யாரோ சதி செய்து காலத்தால் கேட்டகாமலே கொடுக்கப்பட்டு அல்லது தாமே விரும்பி ஏற்றுக்கொண்டு இப்படி அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் அப்போது எப்போதும் நிசப்தம் நிறைந்திருக்கும். அம்மா அந்நியபட்டு போவாள். துக்கமும் மகிழ்ச்சியும் இரட்டையர்களாய் ஒருசேர கண்களில் தெரிவார்கள்.. ஆதனாலெது எது வென புலப்படாது.. எல்லா கேள்விகளுக்கும் பதில் தயாராகயிருக்கும், ஆனால் எங்கிருந்தும் ஏதும் கேட்கபடாது. காற்றாடி றெக்கையால் தும்பியின் றெக்கை வெட்டப்பட்டு ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 22 Jun 2014 10:39 AM PDT ![]() |
| Posted: 22 Jun 2014 10:10 AM PDT பொக்கை வாய் திறப்பாய்! பொங்கியே நீ சிரிப்பாய்! உன்னிதழோரம் வடியும்! உமிழ் நீரும் ! இலை மேல் பனியாய்! அழகூட்டும் உந்தனுக்கு!! கருத்தில்லா ஒலி மொழிவாய்! கரும்பின் மிகு சுவையாய்! காதுக்குத் தேனாய்! கனி மொழி மழலையாய்! எம்மொழியும் அதற்கீடாய்! காணலையே ஜெகமதிலே!! அழுக்காக நீ இருப்பாய் ! அலங்காரமாயிருப்பாய்! அழகுடையும் உடுத்திருப்பாய்! சில வேளை உடையேதும் உடுத்தியிராய்! ஆனாலும் உன்னழகு! குறையலையே எப்போதும்! உன்னுள்ளம் வெறுமையாய்! மாசுகள் அற்றதாய்! கவலைகள் இன்றியே இருப்பதால் ... |
| tamil kathal kavithai sms kavithaigal தமிழ் காதல் கவிதை 2 Posted: 22 Jun 2014 08:55 AM PDT [சிலுக்கவைக்கும் உன் அழகு tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை] ! " சில்லென்று பொழியும் மழையில் சிலுக்கவைக்கும் உன் அழகு சுவர் ஓரம் ஒண்டி இருக்கும் நான் உன் அழகில் திகைத்து நிட்க்கிறேன் உன் கண்களே அடிக்கடி அலை பாயுகிறது மழையே நின்று நேரங்கள் கடக்கிறது உன் கால்கள் ஏனோ நகர மறுக்கிறது !!! % எழுதியவர் % by manoranjan ulundurpet மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~! ! [உறங்காத கண்கள் uRangaatha ... |
| சும்மா, உடம்பை பார்த்து கண் வைக்காதீங்க…! Posted: 22 Jun 2014 08:51 AM PDT -- பிச்சை எடுக்கிறது மகா கேவலம்ப்பா...! - நான் உங்களை பிச்சை எடுக்க சொல்லலியே... போடத்தானே சொல்றேன்...! - >ச.ஆ.கேசவன் - ---------------------------------- - உடம்பு நல்லாத்தானே இருக்கு...எதுக்கு பிச்சை எடுக்குறே? - முடிஞ்சா தர்மம் போடுங்க...சும்மா உடம்பை பார்த்து கண்ணு வைக்காதீங்க...! - >வி.ரேவதி - ----------------------------------- - அவர் போலி டாக்டர்னு எதை வெச்சு சொல்றீங்க? - கிட்னில மண் இருக்குதுன்னு சொல்றாரே...! - >நிர்மலா - ------------------------------------------- |
| Posted: 22 Jun 2014 08:48 AM PDT எனது வேசித் தொழிலில் ஒரு ஆணுடைய பணத்தை ஏற்றுக்கொண்ட பிறகு இரண்டாவது ஆணினுடையதை ஏற்றுக்கொள்ளலாகாது ஐயா. மீறினால் என்னை நிர்வாணமாக நிறுத்தி கொல்வார்கள் ஐயா. மேலும் கேடு கெட்டவர்களோடு நான் உடனுறைந்தால் சிவந்த, சூடேறிய கத்தி கொண்டு எனது மூக்கையும் காதையும் அறுப்பார்கள் ஐயா. மாட்டேன், முடியாது. உங்களை அறிந்த பிறகு அதைச் செய்ய மாட்டேன். கட்டுகளற்ற சிவனே, என் சொல் உண்டு. கவிதையை எழுதியவர் கன்னடப் பெண் கவிஞர் சூலே சங்கவா. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கவிஞரான சூலே சங்கவா எழுதியதில் ... |
| நெருப்புக்கோழின்னா அவிச்ச முட்டையா போடும்..! Posted: 22 Jun 2014 08:42 AM PDT - "கண் மைக்கும் லிப்ஸ்டிக்குக்கும் போட்டி வைச்சா லிப்ஸ்டிக்தான் ஜெயிக்குமா, எப்படி?" - "வாய்மையே வெல்லும்னு சொல்லியிருக்காங்களே..!" - -மா.செல்லம்மாள், - ————————————– - மீனா: துணி துவைக்க எந்தக் கல்லு வசதி? - ராமு: நீயே சொல்லு.. - மீனா: சலவைக்கல்லுதான்..! - -சிவ.இராமலிங்கம், ஆத்தூர். - ————————————— - சங்கர்: என்னடா, கையிலே மணி..? - சுரேஷ்: ஸ்கூல்ல துணிமணி எல்லாம் எடுத்துக்கிட்டு வரச்சொன்னாங்கடா..! - -கே.மகாலெட்சுமி, - —————————————- - ராமு: நெருப்புக்கோழின்னா ... |
| ஜெயலலிதாவை பழிவாங்குவதற்காக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது Posted: 22 Jun 2014 07:49 AM PDT பெங்களூரு: ''ஜெயலலிதாவை பழி வாங்கும் விதமாக, அவர் வீட்டில் இல்லாத போது, அப்போதைய, தி.மு.க., அரசு, அவரது வீட்டில் சோதனை நடத்தியது,'' என, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், அவரின் வழக்கறிஞர் குமார் வாதிட்டார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில், நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், தன் வாதத்தை துவக்கினார். ஜெயலலிதாவை பழி வாங்கும் விதமாக, அவர் மீது சொத்து குவிப்பு வழக்கை அப்போதைய தி.மு.க., அரசு தொடர்ந்தது.எந்த வழக்கிலும் விசாரணை ... |
| காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி ..! Posted: 22 Jun 2014 07:40 AM PDT காதலில் வெற்றி அடைஞ்சதுக்கு தற்கொலை முயற்சி செஞ்சியா? - ஆமாம்...அவளையே கட்டி வெக்குறதா அவ அப்பா சொல்லிட்டாரு...! - >சூரப்பன் - ------------------------------------- - மருந்துக் கடையில வேலை கேட்டுப் போனியே... இன்டர்வியூ'ல என்ன கேள்வி கேட்டாங்க? - ஒரு கிறுக்கு கிறுக்கி இந்த மருந்ததோட பேர் என்னன்னு கேட்டாங்க..! - >ஜே.கீர்த்தனா - -------------------------------------- - மன்னா...வஞ்சப்புகழ்ச்சியா பாடட்டுமா? - வேணாம் புலவரே...கஜானா காலி, பஞ்ச்ப் புகழ்ச்சியே பாடி விடும்! - >எம்.மாரிமுத்து - ------------------------------------- நன்றி: ... |
| Posted: 22 Jun 2014 07:35 AM PDT - ரஜினி – ஷங்கர் கூட்டணியில் உருவான படம், எந்திரன்.அப்படம், 150 கோடி ரூபாயில் தயாரானது. இந்நிலையில், தற்போது, லிங்கா என்ற படத்தில் நடித்துவரும் ரஜினியும், ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கரும், எந்திரன்-2 மூலம், மீண்டும் இணைகின்றனர். அப்படத்தை, முந்தைய படத்தை விட, இன்னும் பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ள ஷங்கர், 200 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டுள்ளார். அதோடு, ரஜினி படங்களுக்கு, தற்போது ஹாலிவுட்டிலும், வரவேற்பு கிடைத்திருப்பதால், அப்படத்தில், அவருக்கு ஜோடியாக, ஒரு ஹாலிவுட் நடிகையை, நடிக்க ... |
| மீண்டும் ஜோடி சேர்ந்த பிரசன்னா – சினேகா! Posted: 22 Jun 2014 07:34 AM PDT - புதிய படங்களில் நடிக்க, தனக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் சினேகா. ஆனால் , யாருமே கண்டு கொள்ளாததால், கணவர் பிரசன்னாவுடன் இணைந்து, கேம் சேஞ்சர் என்டர்டெய்ன்மென்ட் என்றொரு பட தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி விட்டார். அந்நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும், டோனாவூர் ராதா என்ற முதல் படத்தில், பிரசன்னா – சினேகா இருவருமே இணைந்து நடிக்கின்றனர். இதையடுத்து, இன்னொரு படத்தில் பிரசன்னா நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை நடிக்கிறார். இந்த படத்திலும் சினேகாவுக்கு ... |
| சுந்தர்.சிக்கு டேக்கா கொடுக்கும் அஜீத்! Posted: 22 Jun 2014 07:33 AM PDT - சுந்தர்.சி இயக்கத்தில் ஏற்கனவே உன்னைத்தேடி என்ற படத்தில் நடித்துள்ளார் அஜீத். அதனால், மீண்டும் அவரை வைத்து, ஒரு படம் இயக்கி, தன் மார்க்கெட்டை உயர்த்திக்கொள்ள நினைக்கும் சுந்தர். சி, அஜீத்துக்காக தற்போது ஒரு அதிரடி கதையை தேர்வு செய்து வைத்துள்ளார். அதை அவரிடம் சொல்வதற்கு பல முயற்சிகள் எடுத்தும், அஜீத் செவிசாய்க்கவில்லை. அதனால், இப்போது மனைவி குஷ்பூ மூலம் முயற்சி எடுத்து அஜீத்தை, 'அட்டாக்' செய்து வரும் சுந்தர்.சி. தொடர்ந்து அஜீத் தனக்கு டேக்கா கொடுத்தால், தன் அடுத்த படத்தை மீண்டும் ... |
| பணிபுரியும் பெண்களை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் Posted: 22 Jun 2014 07:30 AM PDT வழக்கறிஞரும் குடும்பநல ஆலோசகருமான ஆதிலட்சுமி லோக-மூர்த்தி நம் நாட்டை 'தாய் நாடு' என்றும், நதிகளை 'கங்கா, யமுனா, காவிரி' என்று பெண்ணாகப் பாவிக்கும் அதே சமுதாயம்தான் ரத்தமும் சதையுமான பெண்களை போகப் பொருட்களாகப் பார்க்கிற அவலத்தையும் செய்கிறது. இன்று இந்த தேசத்தின் மூலை முடுக்கிலெல்லாம் பேசப்படும் செய்தியாகிவிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, நாம் அனைவரும் சேர்ந்து களை எடுக்க வேண்டிய ஒரு விஷச்செடியாக வளர்ந்து நிற்கிறது. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இவ்வாறு ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், ... |
| Posted: 22 Jun 2014 07:29 AM PDT - கரும்புள்ளிகள் குறைய... * தக்காளியை நறுக்கி, மூக்கின் நுனியில் இருக்கும் கரும் புள்ளிகள் மேல் தேய்த்து வந்தால், கரும் புள்ளிகள் குறையும். - ------------------------------------- - * பப்பாளி எந்த வகை சருமத்துக்கும் நல்லது. நம்முடைய சருமத்தின் மீது படிந்திருக்கும் இறந்து போன செல்களை நீக்கி, சருமத்தை மேலும் மென்மையாக்க பப்பாளி உதவுகிறது. பப்பாளியை கூழாக்கி, பேஸ் பேக்காக பயன் படுத்தலாம். - --------------------------------------- - * ஆரஞ்சு தோலை நிழலில் உலர்த்தி பொடி செய்து, ... |
| Posted: 22 Jun 2014 07:28 AM PDT - சோயா அக்தர் என்ற பெண் இயக்குனரின் படத்தில், இணை இயக்குனராக பணியாற்ற உள்ளார், இந்தி நடிகை தீபிகா படுகோனே. - ——————————– |
| காலத்தின் தூண்களாக நிற்கும் தேர்கள் Posted: 22 Jun 2014 07:27 AM PDT பொங்கியெழும் ஜனத்திரள் சமுத்திரத்தின் நடுவே, மனிதத் தலைகளைத் தாண்டி பிரம்மாண்டமான கலைப்பொருளாக அசைந்தாடி வரும் தேரைக் கண்டு ரசிக்கும் கண்கள் பாக்கியம் செய்தவை. கலாச்சாரம், பக்தி ஆகியவற்றுடன் பிரமிப்பூட்டும் கலைநுட்பங்களைக் கொண்டவை கோயில் தேர்கள். தமிழகமெங்கும் உள்ள கோயில்களில் ஆயிரக் கணக்கான தேர்கள் உள்ளன. மாசிமகம், ஆடிப்பூரம், பங்குனி மாதம், தைப் பூசம், சித்திரை மாதம், மார்கழி உற்சவம் போன்ற பல நிகழ்ச்சிகளில் நான்கு வீதிகளிலும் தேரோட்டங்கள் நடைபெறுவது பல ஊர்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. ... |
| வணங்கத்தொடங்கினால் வளரத் தொடங்குவாய்..! Posted: 22 Jun 2014 07:27 AM PDT - நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி பண விஷயத்தில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஓரே மதம்தான். - -வால்ட்டேர். - ——————————- - கடினமான செயலின் சரியான பெயர் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் கடினம். - -செஸ்டர்ன். - ——————————- - துன்பம் வந்து விடுமோ என்று நினைக்கும் எண்ணங்கள் இருக்கிறதே இவை துன்பத்தை விட துயரமானவை. - -ஹைஸாடிக். - ———————————- - எப்போது நீ வணங்கத் தொடங்குகிறாயோ அப்போதிலிருந்து நீ வளரவும் தொடங்குகிறாய். - -ஸ்டர் பீல்டு. - ——————————- - பிறருடைய ... |
| Posted: 22 Jun 2014 07:25 AM PDT நீண்டகாலம் வாழ்ந்து, அவ்வையார் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில், தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை, அவ்வையாருக்கு மன்னர் அதியமான் கொடுத்ததாக வரலாறு உண்டு. இவ்வளவு சிறப்பும், பயனும் உள்ள நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் – சி அதிகம் உள்ள இந்த நெல்லிகாய் உடலுக்கு புரதச்சத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ... |
| Posted: 22 Jun 2014 07:16 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| Posted: 22 Jun 2014 07:04 AM PDT - ஏழடியும் வைத்து தோழியென வருவாய் தோழமை கொண்டு நாம் வாழ இவ்வுறுதியாம் - இணை பிரியலாகாது வானமே நான் எனில் நானிலம் நீயே கானமே நான் எனில் பாடலும் நீயே உயிர் தரும் தேகம் நானேயாகில் உயிர் பெறும் தேகம் உனதேயன்றோ மனமும் சொல்லும் நானும் நீயும் தினமும் என் துணையாய் வருவாய் நீ - —————————– - கி கஸ்தூரி ரங்கன் _________________ |
| Posted: 22 Jun 2014 06:43 AM PDT - தங்கையின் திருமணத்திற்கு பாக்கு வெற்றிலை மாற்றவே இரவு பகல் உழைக்க வேண்டியிருந்தது - மாப்பிள்ளை வீட்டாரின் காகிதக்குறிப்பில் சவரன் முதல் தலையணை வரை கூறப்பட்டு பெறப்பட்டுவிட்டது - நடந்த திருமணத்தால் வட்டிக்கடைக்காரரும் துணிக்கடைக்கார்ரும் நகை வியாபாரியும் கூட புது உறவுகளானார்கள் - மாப்பிள்ளை மட்டும் வெகு தொலைவில்…! - —————————- >ஆர்.சத்தியன் (எழுத மறந்த கவிதை) |
| சொத்துக்காக ஒருவரை குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம் Posted: 22 Jun 2014 06:40 AM PDT பெரம்பலூர் அருகே சொத்துக்காக மகனை அடித்து கொலை செய்த தாய், மனைவி உள்பட 4 பேரை மருவத்தூர் காவல்துறையினர் சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலையில் உள்ள துரைசாமி கிணற்றில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் கைகள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மருவத்தூர் காவல்துறைக்கு கடந்த 11 ஆம் தேதி இரவு 7 மணியளவில் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ... |
| tamil kathal kavithai SMS kavithaigal தமிழ் காதல் கவிதை Posted: 22 Jun 2014 05:49 AM PDT [உன் முகம் un mugam tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை] ! " இன்று முதல் உன்னை பார்ப்பதை நிருத்திக்கொள்ள போகிறேன் !! " ஏன் என்றால் நான் எங்கு சென்றாலும் எதைப்பார்த்தாலும் உன் முகம் தான் தெரிகிறது !!! ! " inru muthal unnai paarppathai niruththikkolla pookireen !! " een enraal naan enku senraalum ethaipparththaalum un mugam thaan therigirathu !!! ! % எழுதியவர் % by manoranjan உளுந்டுர்பெட் மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை !~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ [மோதிய ... |
| இலங்கை: இன அழிப்பைத் தொடர்ந்து மத அழிப்பு... Posted: 22 Jun 2014 04:50 AM PDT தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களர்கள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அதோடு, முஸ்லிம்கள் மீதும் தொடர் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர். சர்வதேச நாடுகளும் இந்தத் தாக்குதலை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. 'திடீர் என முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் ஏன்? இவ்வளவு பெரிய பிரச்னை எதனால் நடந்தது?' என இலங்கையில் இருக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா-அத் துணைச் செயலாளர் ரஸ்மினிடம் கேட்டோம். ''கடந்த சில ஆண்டுகளாகவே தமிழர்கள் என்றாலோ, முஸ்லிம்கள் என்றாலோ இங்கு இருக்கும் சிங்களர்களுக்கும் ... |
| கேஸ் சிலிண்டர் கட்டணமும் மாதம் ரூ.10 உயர்வு: மத்திய அரசு பரிசீலனை! Posted: 22 Jun 2014 04:48 AM PDT புதுடெல்லி: ரயில் கட்டண உயர்வை தொடர்ந்து, சமையல் கேஸ் சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் 10 ரூபாய் உயர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நேற்று முன்தினம் (20ஆம் தேதி) ரயிலில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், இந்த கட்டண உயர்வு 25ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட நாட்டின் ... |
| Posted: 22 Jun 2014 04:44 AM PDT உரலுக்கு பதிலாக மாவு அரைப்பதற்கு நாம் பயன்படுத்தும் மின் சாதனம் கிரைண்டர். பொதுவாக கிரைண்டரை தக்க விதத்தில் பயன்படுத்தினால் அது பல காலம் பழுதின்றி பயன்படும். அந்த வகையில், கிரைண்டரில் அதற்கு தக்க அளவுக்கு பொருட்களைப் போட்டு அரைக்க வேண்டும். கூடுதலாகவோ, குறைவாக பொருட்களைப் போட்டு அரைப்பதால் கூட கிரைண்டர் விரைவில் தேய்வு அடையும். கிரைண்டர் வாங்கும் போது அரைக்கும் கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டியது அவசியம். கிரைண்டரில் உட்பகுதியில் மாவு தள்ளும் ... |
| Posted: 22 Jun 2014 04:31 AM PDT நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் ... |
| Posted: 22 Jun 2014 04:26 AM PDT - தூரத்தில் அவள் முகம் பார்த்து பூவென அமர்ந்தது வண்ணத்துப்பூச்சி - அடடா முதல் தோல்வி - பறந்து போய் பின்பு திரும்பிப் பார்த்தது படபடக்கும் அவளின் கண்ணிமைகளைக் கண்டு தன் ஜோடியின் சிறகென நினைத்து மேலும் தோற்றது…! - பாவம்…மீண்டும் மீண்டும் ஏமாற்றம் முதல் முறையாய்…! - ——————— >ஆர்.சத்தியன் (எழுத மறந்த கவிதை) |
| Posted: 22 Jun 2014 04:24 AM PDT - வார்த்தை மாறிய வாக்கியங்களும் நேரமறியா கேலிக் கிண்டல்களும் உளறிய விஷயங்களும் என்றேனும் அவமானப்படச் செய்யும் - அப்போதுதான் அத்துமீறலின் அர்த்தம் புலப்படும் - பாம்பின் உறக்கத்தைக் கெடுத்த தவளை போலாகிவிடும் சில நேரம் நம் வாழ்க்கையும் - ———————- >ஆர்.சத்தியன் |
| தேசிய மொழியே இல்லாத நாடு இந்தியா..! Posted: 22 Jun 2014 04:19 AM PDT இந்தி மொழி பயன்பாடு குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று முன்பே நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2009ம் ஆண்டு, சுரேஷ் கச்சாடியா என்பவர் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவின் தேசிய மொழி இந்தி, நாட்டின் பெரும்பாலான மக்கள் இந்திதான் பேசுகிறார்கள். எனவே, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் அட்டையின்மீது இந்தி மொழியில் அப்பொருள் குறித்த விவரங்களை ... |
| Posted: 22 Jun 2014 04:14 AM PDT - "பேசும் கேள் என் கிளி" என்றான் கூண்டைக்காட்டி வால் இல்லை வீசிப்பறக்க சிறகில்லை வானம் கைப்பட வழியில்லை - "பார் பார் இப்போது பேசும்" என மீண்டும் மீண்டும் அவன் சொல்ல "பறவை என்றால் பறப்பது" எனும் "பாடம் முதலில் படி" என்றேன் - —————————- கல்யாண்ஜி |
| மீண்டும் இராக்கா, மிஸ்டர் ஒபாமா? Posted: 22 Jun 2014 04:00 AM PDT இராக்கில் அமெரிக்கா மீண்டும் தலையிட வேண்டும், ராணு வத்தை அனுப்பிவைக்க வேண்டும், இராக்கிய ராணு வத்தை எதிர்க்கும் கலகக்காரர்களை விமானத் தாக்குதல் மூலம் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையெல்லாம் கேட்டு அச்சத்தால் நினைவுகள் பின்னிழுக்கின்றன. சர்வதேச விவகாரங்களில் சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாமல் அதிபர் ஒபாமா தயங்குகிறார் என்று விமர்சகர்கள் கேலி செய்கின்றனர். ராணுவம் தலையிடுவதால் சில சமயங்களில், சாதாரண பிரச்சினைகள் படுமோசமாகிவிடுவதை 2003-ல் இராக்கில் அமெரிக்க ராணுவம் தலையிட்டதிலிருந்து தெரிந்துகொள்ள ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
