Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நாட்டு மக்களுக்கு ராஜபக் ஷே அறிவுரை

Posted:

கொழும்பு:இலங்கையின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் தீயசக்திகளுக்கு யாரும் துணை போகக் கூடாது; நாட்டு மக்கள் யாரும், மத வேற்றுமை பாராட்டக் கூடாது, என, இலங்கை அதிபர், ராஜபக் ஷே வேண்டுகோள் விடுத்துள்ளார்.இலங்கையில், பெரும்பான்மை சமூகமாக, சிங்களர்கள் உள்ளனர். தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் இருந்த போதிலும், சிறுபான்மை சமூகங்களான அந்த இரு சமூகங்களுக்கு, சம உரிமை வழங்கப்படுவதில்லை.அந்நாட்டின், இரண்டு கோடி மக்கள் தொகையில், முஸ்லிம்கள், 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படுவதாக, ...

போராடும் அ.தி.மு.க., பறிகொடுக்கும் தி.மு.க.,: பார்லிமென்டில் அறை ஒதுக்கீடு விவகாரம்

Posted:

அதிக எண்ணிக்கையில் எம்.பி.,க்களை வைத்துள்ள, அ.திமு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே, பார்லிமென்டின் கீழ்தளத்தில், அலுவலகத்தை பெறுவதற்கு, போராடிக் கொண்டிருக்கின்றன.அதே சமயம், தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறிய அறையையும்கூட, தி.மு.க., பறிகொடுக்க கூடும் என, தெரிகிறது.கீழ் தளத்திற்கு கிராக்கிபார்லிமென்ட் கட்டடம், கீழ் தளத்தோடு சேர்த்து, மொத்தம் நான்கு தளங்களைக் கொண்டது. இதில், மிக நீளமான, வட்ட வடிவ, கீழ் தளத்தில் தான், முக்கிய அலுவலகங்கள் உள்ளன. சபாநாயகர், துணை சபாநாயகர், லோக்சபா செகரட்டரி ஜெனரல், ராஜ்யசபா தலைவர், துணைத் ...

பொய்க்கணக்கு காட்டிய வேட்பாளர்களுக்கு 'நோட்டீஸ்'

Posted:

சென்னை: சரியான தேர்தல் செலவு கணக்கை காட்டாமல், குறைத்துக் காட்டிய வேட்பாளர்களிடம், விளக்கம் கேட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்கள், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான, 30 நாட்களுக்குள், வேட்பாளர்கள் அனைவரும், தேர்தல் செலவு கணக்கு விவரங்களை, தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.அதன்படி, மொத்தமுள்ள, 845 வேட்பாளர்களில், 748 பேர், தேர்தல் செலவு கணக்கை விவரங்களை, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமர்ப்பித்தனர்.சமர்ப்பிக்க முடியாதவர்கள், அதற்கான காரணத்தை தெரியப்படுத்தி, பின் சமர்ப்பிப்பதாக, அவகாசம் ...

பயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்

Posted:

பாக்தாத்: 'ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் பிடிபட்டுள்ள, 39 இந்தியர்களும், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.ஆசியா கண்டத்தின் மேற்கு ஓரத்தில், பெர்சியன் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈராக்கில், ஷியா பிரிவு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரதமர், நுாரி அல் - மாலிகி தலைமையிலான அரசு, 2006 முதல் பதவியில் உள்ளது. அல் - குவைதாஇந்த அரசு, சன்னி பிரிவு முஸ்லிம்களை துன்புறுத்தியதால், சன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவான, அல் - குவைதா பயங்கரவாதி அமைப்பினர், ஈராக்கில் நுழைந்தனர்.மனித வெடிகுண்டு, கார் ...

மா.செ.,க்களை களையெடுக்க விஜயகாந்த் அதிரடி திட்டம்?

Posted:

கடந்த சில நாட்களாக, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த விஜயகாந்த், நேற்று முன்தினம் இரவு, சென்னை திரும்பினார். அடுத்த கட்டமாக, கட்சியில் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும், கட்சியின் தோல்விக்கு காரணமான, மாவட்ட செயலர்கள் சிலரை, 'களையெடுக்க' திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தலுக்கு முன், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், சிங்கப்பூர், மலேசியா என, வெளிநாடுகளுக்கு பறந்தார். அங்கு தங்கி, கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட கையோடு, தமிழகம் வந்து, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தார்.தமிழகத்தில், பா.ஜ., கூட்டணியில், 14 இடங்களை பெற்று, தன் ...

புதிய மாவட்டங்களில் வாரிசுகளுக்கு மா.செ., பதவி: 'மாஜி'க்கள் நெருக்கடி; கருணாநிதிக்கு சிக்கல்

Posted:

தி.மு.க.,வில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட விவகாரத்தில், கடும் கோபத்தில் இருக்கும் மாவட்டச் செயலர்கள், தாங்கள் இழந்த அதிகாரத்தை, தங்களது வாரிசுகளுக்கு பெற்றுத் தரும் புதிய திட்டத்தோடு, காய் நகர்த்த துவங்கி உள்ளனர். இதனால், தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, அடுத்த சிக்கல் காத்திருக்கிறது என்கிறது, அறிவாலய வட்டாரம்.கட்சியில், காலங்காலமாக கோலோச்சி வரும், மாவட்டச் செயலர்களை மாற்றினால் தான், கட்சி வளரும் என்ற கருத்தின் படி, சீரமைப்பு நடவடிக்கைகளில், தி.மு.க., தலைமை இறங்கி உள்ளது. தற்போதுள்ள, 35 மாவட்டங்களைப் பிரித்து, 65 ஆக மாற்றி அமைத்துள்ளனர்.கணக்கு பார்த்து ...

பாலாறு விவகாரம்: முதல்வர் காட்டம்

Posted:

சென்னை : 'பாலாறு குறித்த கருணாநிதி அறிக்கை, அதிகாரத்தை இழந்த நிலையில், எதையோ நினைத்து மனக்கோட்டை கட்டுவதாக உள்ளது' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கடந்த, 1892ல், சென்னை- - மைசூரு ஒப்பந்தப்படி, மேல் பகுதியில் உள்ள மாநிலங்கள், கீழ் பகுதி யில் உள்ள மாநிலங்களின் அனுமதியின்றி, புதிய அணையோ, நீர் தடுப்பு கட்டுமானங்களையோ மேற்கொள்ள முடியாது.கடந்த, 2006ல், சித்துார் மாவட்டத்தில், குப்பம் அருகே, பாலாற்றின் குறுக்கே, 2 டி.எம்.சி., அடி நீரை தேக்கும் வகையில், அணை ஒன்றை கட்டும் பணிகளை, ஆந்திர அரசு துவங்க இருப்பதாக, பத்திரிகைகளில் செய்தி ...

கச்சத்தீவு: நிலவியல் ரீதியாக இந்திய நிலப்பரப்பே!

Posted:

சமீப காலங்களில், நாடுகளுக்கு உள்ளேயும், நாடுகளுக்கு இடையேயும், வளர்ந்து வரும் எல்லைப் பங்கீடுகள், மிகப்பெரிய பிரச்னைகளாக உருவெடுத்து வருகின்றன. இந்தியா - இலங்கை இடையே, வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள கச்சத்தீவும், இரு நாடுகளுக்கும் இடையே, மிகப்பெரிய பிரச்னையாக வளர்ந்து வருகிறது.சரித்திர மற்றும் ஆவணங்களின் ஆதாரப்படி, கச்சத்தீவு பண்டைய காலத்தில், ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது. 1974ல், மத்திய அரசு, கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததால், இந்திய மீனவர்கள், தங்கள் மீன்பிடி படகு களை ஓய்விற்கு நிறுத்த முடியாமலும், வலைகளை உலர வைக்க ...

'மோடியின் கனவு திட்டத்தை செயல்படுத்தினால்10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்'

Posted:

ஆமதாபாத்:குஜராத் முதல்வராக, நரேந்திர மோடி இருந்த போது, அவரின் கனவு திட்டமாக இருந்த, 'கிப்ட்', நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டால், கூடுதலாக, 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என, கூறப்பட்டு உள்ளது.நாட்டின், வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றான, குஜராத்தின் முதல்வராக, 13 ஆண்டுகளாக இருந்த நரேந்திர மோடி, நாட்டின் பிரதமராக, சமீபத்தில் ஆகியுள்ளார். அவர், குஜராத்தில் முதல்வராக இருந்த போது, 'குஜராத் இன்டர்நேஷனல் பினான்ஸ் டெக் சிட்டி- கிப்ட்' என்ற பெயரில், உலக அளவில் நிதிச் சேவையாற்றும் கட்டமைப்பை உருவாக்கினார்.மொத்தம், 65 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ...

கறுப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர் பட்டியல்: மத்திய அரசிடம் அளிக்க சுவிட்சர்லாந்து முடிவு

Posted:

புதுடில்லி:சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை, அந்த நாட்டு அரசு தயாரித்து வருகிறது. இந்த பட்டியல், விரைவில் மத்திய அரசிடம் வழங்கப்படவுள்ளதாக, சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவைச் சேர்ந்த வி.ஐ.பி.,க்கள், வரி ஏய்ப்பு செய்வதற்காக, ஏராளமான பணத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், ரகசியமாக பதுக்கி வைத்துள்ளனர். 'இந்த கறுப்பு பணத்தை மீட்டு, இந்தியா கொண்டு வர வேண்டும்'என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, கறுப்பு பணத்தை மீட்க, விசாரணை குழுஅமைக்கும்படி, சுப்ரீம் ...

கட்சி நிர்வாகிகள் நீக்கத்தால் தி.மு.க.,வில் கொந்தளிப்பு: அப்பாவிகளை பழிவாங்கி விட்டதாக கடும் புகார்

Posted:

சென்னை : கட்சி நிர்வாகிகள், 33 பேரை, தி.மு.க., மேலிடம் நேற்று முன்தினம், 'சஸ்பெண்ட்' செய்தது, அந்தக் கட்சித் தொண்டர்கள் மற்றும் கீழ்மட்ட நிர்வாகிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பாவிகள் பலரை பழிவாங்கி விட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆராய, தி.மு.க.,வில், சமீபத்தில், ஆறு பேர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தோல்விக்கான காரணங்கள் குறித்தும், கட்சி யின் மறுசீரமைப்பு குறித்தும், 150 பக்க அறிக்கையை, கட்சி தலைமைக்கு வழங்கியது.அதன் அடிப்படையில், தி.மு.க.,வில், மாவட்ட எல்லைகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™