மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி கைது
- 40 இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தப் போவதாக உளவுதுறை எச்சரித்தது பரபரப்பு தகவல்கள்
- ஆந்திர சட்டசபை சபாநாயகராக சிவபிரசாத் ராவ் ஒருமனதாக தேர்வு
- மராட்டியம், அசாம், அரியானா முதல் –மந்திரிகள் மாற்றம்?: காங். மேலிடம் ஆலோசனை
- இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்
- கோபிநாத் முண்டே மகளுக்கு மத்திய மந்திரி பதவி: மராட்டிய பா.ஜனதா சிபாரிசு
- சபரிமலையில் பரிகார பூஜைகள் நடத்த 2–வது நாள் தேவபிரசன்னத்தில் முடிவு
- ஆந்திராவில் என்கவுண்டர்: மாவோயிஸ்டு தீவிரவாதி தலைவர் சுட்டுக்கொலை
- கேரளாவில் மீண்டும் கனமழை: திருவனந்தபுரம் இருளில் மூழ்கியது
- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் எம்.பி. பதவிக்கு போட்டி
- கொல்கத்தாவில் டிராம் மோதியதில் 10 கார்கள் சேதம்
- மழை-வெள்ளத்தால் சேதமடைந்த கேதார்நாத் கோவிலில் சீரமைப்பு பணி
- காஷ்மீரில் பள்ளிக்கூட மாணவி கற்பழிப்பு: 2 பேர் கைது
- சட்டசபை தேர்தலில் மாயாவதி கட்சியுடன் கூட்டணியா?: தேசியவாத காங்கிரஸ் பதில்
- உபரி மின்சாரத்தை வழங்குங்கள்: ஜெயலலிதாவுக்கு கேரள முதல்-மந்திரி கடிதம்
- அனைத்து துறைகளிலும் இந்தியை ஊக்குவிப்போம்: மத்திய மந்திரி சொல்கிறார்
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகிறார்கள்
- வங்காளதேச மக்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் மோடியின் திட்டத்திற்கு அசாம் எதிர்ப்பு
- கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி
- பிரதமர் அலுவலக செயலாளர் ராமானுஜத்திற்கு பணி நீட்டிப்பு
| காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி கைது Posted: 20 Jun 2014 12:05 AM PDT லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க மாவட்ட தலைவனாக காஷ்மீரில் செயல்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானின் முல்தான் பகுதியை சேர்ந்த முஹம்மது நவீத் ஜத் என்ற அந்த தீவிரவாதி, தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் மாவட்ட தலைவராக இயங்கி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. |
| 40 இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தப் போவதாக உளவுதுறை எச்சரித்தது பரபரப்பு தகவல்கள் Posted: 19 Jun 2014 11:27 PM PDT 40 இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஈராக்கில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. மொசூல், திக்ரித், கிர்குக் உள்ளிட்ட நகரங்களை கைப் பற்றியுள்ளனர். திக்ரித் நகரை கைப்பற்றிய அவர்கள் அங்கு ஆஸ்பத்திரி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 40 இந்தியர்களை கடத்தி சென்றனர். இந்திய தொழிலாளர்கள் கடத்தப்படுவதற்கு |
| ஆந்திர சட்டசபை சபாநாயகராக சிவபிரசாத் ராவ் ஒருமனதாக தேர்வு Posted: 19 Jun 2014 11:12 PM PDT மாநில பிரிவினைக்கு பின் ஆந்திர சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நேற்று கூடியது. முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர். பின்னர் மறைந்த உறுப்பினர் பிரபாகர், ஷோபாநாசி ரெட்டி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை ஒத்தி வைக்கப்பட்டது. |
| மராட்டியம், அசாம், அரியானா முதல் –மந்திரிகள் மாற்றம்?: காங். மேலிடம் ஆலோசனை Posted: 19 Jun 2014 10:54 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக காங்கிரஸ் செல்வாக்கு மிக்க மாநிலங்களான மராட்டியம், அரியானா, அசாம் மாநிலங்களிலும் மிக மோசமான தோல்வி அடைந்தது. இந்த 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கோஷ்டி பூசல் மற்றும் மாநில அரசின் நிர்வாகத்திறமை இன்மையும் ஒரு காரணமாக அமைந்தது. இதையடுத்து 3 மாநில கவர்னர்களையும் மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் |
| இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மோடிக்கு சோனியாகாந்தி கடிதம் Posted: 19 Jun 2014 09:59 PM PDT ஈராக்கில் இந்தியர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– ஈராக்கில் பணிபுரிந்த நமது இந்திய தொழிலாளர்கள் 40 பேரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து |
| கோபிநாத் முண்டே மகளுக்கு மத்திய மந்திரி பதவி: மராட்டிய பா.ஜனதா சிபாரிசு Posted: 19 Jun 2014 09:57 PM PDT கோபிநாத் முண்டே மகளுக்கு மத்திய மந்திரி பதவி அளிக்குமாறு மராட்டிய பா.ஜனதா சிபாரிசு செய்துள்ளது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கோபிநாத் முண்டே மத்திய மந்திரி சபையில் இடம் பெற்று இருந்தார். அவர் பதவி ஏற்றபின்பு டெல்லியில் இருந்து மும்பைக்கு திரும்ப விமான நிலையம் சென்ற போது கார் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த நிலையில் அவரது மகள் பங்கஜா |
| சபரிமலையில் பரிகார பூஜைகள் நடத்த 2–வது நாள் தேவபிரசன்னத்தில் முடிவு Posted: 19 Jun 2014 09:55 PM PDT கேரளாவில் உள்ள சுவாமி அய்யப்பன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த நிலையில் சுவாமி அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகை புரத்தம்மன் கோவில்களை புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தொடங்கும் முன்பு இறைவனின் அனுமதி கேட்கும் தேவபிரசன்னம் என்ற |
| ஆந்திராவில் என்கவுண்டர்: மாவோயிஸ்டு தீவிரவாதி தலைவர் சுட்டுக்கொலை Posted: 19 Jun 2014 09:48 PM PDT ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் நல்லமலைக் காடு உள்ளது. அடர்ந்த வனப்பகுதியான இங்கு மாவோஸ்டு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிடிப்படை போலீசார் நேற்று வனப்பகுதியில் புகுந்து மாவோயிஸ்டு தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளை சரண் |
| கேரளாவில் மீண்டும் கனமழை: திருவனந்தபுரம் இருளில் மூழ்கியது Posted: 19 Jun 2014 09:09 PM PDT கேரளாவில் தென் மேற்கு பருவ மழை கடந்த 7–ந்தேதி தொடங்கியது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதுவரை கேரளாவில் குறைந்த அளவே மழை பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவ மழை கண்ணாமூச்சி காட்டி வந்ததால் இந்த ஆண்டு மழை கைவிட்டு விடுமோ? என்று பொதுமக்கள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று கேரள மாநிலத்தில் கன மழை பெய்தது. குறிப்பா |
| மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் எம்.பி. பதவிக்கு போட்டி Posted: 19 Jun 2014 08:52 PM PDT தமிழகத்தைச் சேர்ந்தவரும், பா.ஜனதாவின் முன்னணி செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமாக திகழ்ந்த நிர்மலா சீதாராமன் மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவர் டெல்லி பாராளுமன்றத்திலோ, மேல்–சபையிலோ எம்.பி.யாக இல்லை. மத்திய மந்திரியாக நியமிக்கப்பட்டு இருப்பதால் அடுத்த 6 மாதத்துக்குள் அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டாக வேண்டும். ஆந்திராவைச் சேர்ந்த டெல்லி மேல்–சபை எம்.பி. நேதரமல்லி ஜனார்த்தன ரெட்டி கடந்த மாதம் 19–ந் தேதி மரணம் அடைந்தார். எனவே காலியாக |
| கொல்கத்தாவில் டிராம் மோதியதில் 10 கார்கள் சேதம் Posted: 19 Jun 2014 08:11 PM PDT இந்தியாவில் டிராம் போக்குவரத்து வசதிகள் நடைமுறையில் இருக்கும் ஒரு நகரம் கொல்கத்தா ஆகும். பேருந்துகள், கார்களுக்கு நடுவே சாலையில் இவற்றின் பயணமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். பரபரப்பான காலை நேரப் போக்குவரத்தில் நேற்று காலை வழக்கம்போல் 9.45 மணி அளவில் கொல்கத்தாவின் பாலிகஞ்ச் பகுதியில் உள்ள டெப்போவிலிருந்து பணியிலிருந்த டிரைவர் டிராம் வண்டியை வெ |
| மழை-வெள்ளத்தால் சேதமடைந்த கேதார்நாத் கோவிலில் சீரமைப்பு பணி Posted: 19 Jun 2014 04:46 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெய்த மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலும் சேதமடைந்தது |
| காஷ்மீரில் பள்ளிக்கூட மாணவி கற்பழிப்பு: 2 பேர் கைது Posted: 19 Jun 2014 03:49 PM PDT காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், போனியார் என்ற பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றார். அப்போது அவரை உறவினர் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் |
| சட்டசபை தேர்தலில் மாயாவதி கட்சியுடன் கூட்டணியா?: தேசியவாத காங்கிரஸ் பதில் Posted: 19 Jun 2014 02:46 PM PDT மராட்டியத்தில் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணி தொடரும். கூடுதல் தொகுதிகளை கேட்போம் என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் சரத்பவார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இடையே |
| உபரி மின்சாரத்தை வழங்குங்கள்: ஜெயலலிதாவுக்கு கேரள முதல்-மந்திரி கடிதம் Posted: 19 Jun 2014 01:04 PM PDT கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கேரளாவில் பருவமழை தாமதம், மத்திய மின்சார ஒதுக்கீட்டில் குறைவு, மின்நிலையங்களில் பழுது காரணமாக |
| அனைத்து துறைகளிலும் இந்தியை ஊக்குவிப்போம்: மத்திய மந்திரி சொல்கிறார் Posted: 19 Jun 2014 12:30 PM PDT இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி |
| இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 46 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்புகிறார்கள் Posted: 19 Jun 2014 12:01 PM PDT கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 46 மீனவர்களை 11 படகுகளுடன் 18-ந்தேதி இரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் |
| வங்காளதேச மக்களை விசா இல்லாமல் அனுமதிக்கும் மோடியின் திட்டத்திற்கு அசாம் எதிர்ப்பு Posted: 19 Jun 2014 06:32 AM PDT வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களைக் கண்டுபிடித்து வெளியேற்றுவோம் என்று பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அதன்படி வங்காளதேசத்தவர்களை தங்கள் நாட்டிற்கு அனுப்புவதில் மாநில பா.ஜனதா எம்.பி.க்கள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள |
| கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி Posted: 19 Jun 2014 05:58 AM PDT கர்நாடகா மாநிலத்தின் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ஜேவர்கியை சேர்ந்தவர் அனுமந்தா மாலிக் பாட்டீல். கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரியம்மா. இவர்களுக்கு 4 வயதில் அக்சதா என்ற மகள் உள்ளார். அனுமந்தா பீஜப்பூர் மாவட்டம் நாகடானா கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயின் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த |
| பிரதமர் அலுவலக செயலாளர் ராமானுஜத்திற்கு பணி நீட்டிப்பு Posted: 19 Jun 2014 05:49 AM PDT பிரதமர் அலுவலகத்தின் செயலாளராக உள்ள ராமானுஜத்திற்கு 3 மாத காலத்திற்கு பணி நீட்டிப்பு வழங்கி அமைச்சரவை குழு உத்தரவிட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் 1979 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமானுஜம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் பிரதமர் அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |