Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அமைச்சரவை கூட்டத்தில் அமளி! இனவாதி, நீ ஒரு மதவாதி என அமைச்சர் ரிசாத்தினை திட்டிய ஜனாதிபதி

Posted: 19 Jun 2014 11:29 PM PDT

Rajapaksa

Rajapaksaஅமைச்சரவைக் கூட்டம் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது அப்போது அங்கு பேருவளை மற்றும் அளுத்கம சம்பவம் குறித்து அலசப்பட்டது. இந்த வேளையில் குறிக்கிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஜனாதிபதியை நோக்கி 1983 ஜூலையில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு பிறகு உங்களின் ஆட்சியில் தான் மீண்டும் ஒரு இனக்ககலவரமும் பேரழிவும் ஏற்பட்டுள்ளன அளுத்கமை மற்றும் பேருவளை சம்பவத்திற்கான முழுப்பொறுப்பையும் உங்கள் தலைமையிலான இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் காரணமானவர் ஞானசார தேரர். ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இனியும் நீங்கள் கைது செய்யாவிட்டால் இதைவிட மோசமான அழிவை இந்த நாடு சந்திக்கும் என்றார். அப்போது ஜனாதிபதி அமைச்சர் ரிசாத் பதியுதீனைப் பார்த்து, நீங்கள் முஸ்லிம்களுக்காக பேசுவதைப்போல், இங்குள்ள சிங்கள அமைச்சர்கள் சிங்கள மக்களுக்கு பேசத் தொடங்கினால் என்ன நடக்கும் என்று தெரியுமா எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் நீங்கள் அப்படி கூறக் முடியாது. நீங்கள் ஜனாதிபதி சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல. தமிழ் ,முஸ்லிம் மக்கள் என அனைவருக்கும் பொதுவானவர். நீங்கள் அனைவரையும் சமனாகவே பார்க்க வேண்டும். வாக்கை மையமாகக் கொண்டு நீங்கள் செயற்பட கூடாது என்றார். இந்த பதில் ஜனாதிபதிக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. கதிரையை விட்டு ஆவேசத்துடன் எழுந்த ஜனாதிபதி உன்னுடைய பேச்சை உடன் நிறுத்து. வாயைப் பொத்து என்று உரத்து சத்தம் இட்டு, நீ ஒரு இனவாதி, நீ ஒரு மதவாதி, உன்னுடைய செயற்பாடுகளை அவாதானித்துக் கொண்டுதான் வருகிறேன் என சீறிப்பாய்ந்தார். இதன் பிற்பாடு அமளிதுமளி ஏற்பட்டது. இந்த வேளை அமைச்சர் ரிசாத்தை நோக்கி கை நீட்டிய சம்பிக்க ரணவக்க பொதுபல சேனாவை மட்டும் தடைசெய்ய முடியாது என்றார். இதனை கடுமையாக எதிர்த்த அமைச்சர் ரிசாத் பதியுதீன், பொதுபலசேனாவை மட்டும் முடியாது என்றால் தடைசெய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் ஏதும் இருக்கின்றதா எனக் கேட்டார். எந்தவொரு முஸ்லிம் அமைப்பும் இனவாதமாக செயற்படவில்லை எனக் கூறினார். இதன் பிற்பாடு அமைச்சரவை கலைந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நாட்டில் குழப்பங்களை விளைவிக்க சில கடும்போக்குவாத சக்திகள் முயற்சி!

Posted: 19 Jun 2014 11:05 PM PDT

keheliya

keheliyaநாட்டில் குழப்பங்களை விளைவிக்க சில கடும்போக்குவாத சக்திகள் முயற்சித்து வருவதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். அளுத்கம, பேருவளை சம்பவங்களை அடிப்படையாக் கொண்டு நாட்டில் குழப்பம் விளைவிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இடமளிக்கக் கூடாது. பள்ளிவாசலுக்கு செல்லும் முஸ்லிம் மக்களை குழப்பும் வகையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர். முஸ்லிம் மக்கள் அமைதியான முறையில் மதவழிபாடுகளில் ஈடுபட வேண்டும். சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ஏற்கனவே உறுதியளித்துள்ளார். கடும்போக்குவாதிகள் மக்களை பிழையாக வழிநடத்தி வன்முறைகளைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான முயற்சிகளுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என சகல இன சமூகங்களிடமும் கேட்டுக் கொள்வதாக கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

முதுகெலும்பில்லாத அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்கள்: சண் குகவரதன் பேட்டி!

Posted: 19 Jun 2014 10:50 PM PDT

sankugavarathan

sankugavarathanதம் சார்ந்த சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத முதுகெலும்பில்லாத அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முஸ்லிம்கள் தீர்மானம் எடுக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளைக் கடுமையாகக் கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது கவலையையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அளுத்கம, பேருவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யுத்தம் முடிந்து 5 வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால், நாட்டுக்குள் இனங்களிடையே, மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. மதங்களிடையே குரோதத்தை விதைப்பதற்கு அரசு ஊக்கமளிப்பதை எம்மால் காணக்கூடியதாகவுள்ளது. பெளத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபலசேனா ஆரம்பம் தொடக்கம் முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கை கடைப்பிடித்தது. ஆனால், அரசு இதனைத் தடுக்க எதுவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதுபோன்று அரசுக்குள் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களும் உணர்ச்சிபூர்வமான வசனங்களுடன் அறிக்கைகளை வெளியிட்டார்களே தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் பிரதிபலனையே இன்று அளுத்கமவில் அப்பாவி முஸ்லிம் மக்கள் அனுபவிக்கின்றனர். மூன்று உயிர்கள் அநியாயமாகப் பலியாகியுள்ளன. அந்த மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த சொத்துகள், வாகனங்கள் உட்பட வர்த்தக நிலையங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. 80இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவையனைத்தையும் பார்த்துக்கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இன்னமும் அரசுடன் ஒட்டிக்கொண்டுள்ளனர். உண்மையிலேயே அமைச்சர் ஹக்கீம் உட்பட முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை தூக்கியெறிந்துவிட்டு அரசை விட்டு வெளியேறி இருக்கவேண்டும். ஆனால், அந்தளவுக்கு இவர்களுக்கு முதுகெலும்பில்லை. முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுத்து வெட்கம் கெட்ட அரசியல் நடத்துகின்றனர். முஸ்லிம் மக்கள் இந்தப் பச்சோந்திகளை அடையாளம் கண்டு அரசியலிலிருந்து ஓரம் கட்டவேண்டும். அன்பையும், அஹிம்சையையும் போதித்த புத்த பகவானின் போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு பெளத்த குருமார் வன்முறைகளைத் தூண்டுவது எவ்விதத்தில் நியாயமாகும். இனியும் முஸ்லிம் மக்களைக் கொடுமைப்படுத்தாது அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

முஸ்லீம் மக்கள் மீதான சிங்களபௌத்த இனவெறி தாக்குதலுக்கு கண்டனம்!

Posted: 19 Jun 2014 10:40 PM PDT

gowthaman

gowthamanதடைகளை தாண்டி எதிர்காலத்தை நோக்கி தமிழீவிடுதலையில் தமிழகம் தமிழக உணர்வாளர்களின் போராட்டங்களின் ஏக்கம் இந்திய அரசின் வெளியுறவு கொள்கையை மாற்றி நீதியான தீர்பை தமிழர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலையில் தமிழகம் எனும் தலைப்பில் இனமான இயக்குனரும் தமிழின உணர்வாளருமான வ.கௌதமன் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இன்றைய இந்த சந்திப்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சார்பில் புலம்பெயர்ந்த தமிழ் பிரதிநிதிகள் இணையவழியில் தமிழக முதல்வரிடம் முக்கியமான அவசர வேண்டுகேளை பதிவு செய்துள்ளதுடன் இந்திய பிரதமர் தமிழக முதல்வரின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி தருமாறும் வலியுறுத்தியுள்ளார்கள். தமிழின உணர்வாளரான வ.கௌதமன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழக முதல்வர் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்த வேண்டியும் வலியுறுத்தியுள்ளார்கள். இந்தியா பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றால் ஈழம் மலர வேண்டும், இன்று சிங்கள அரசு ஐ.நா விசாரணை குழுவினை நாட்டிற்குள் நுளைய விடாதவாறு தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது. தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் தமிழகத்தினதும், இந்தியாவினதும் பாதுகாப்பினை கருத்தில் கொண்டுதான் திருகோணமலையினை அமெரிக்காவிற்கு கொடுக்க மறுத்தார். ஆனால் இன்று அங்கு சீனா,பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகள் காலூன்ற தொடங்கிவிட்டன. இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது. அதுமட்டுமல்ல இன்று தமிழர் வாழ் இடங்களில் முழுமூச்சுடன் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்கின்றார்கள். ஒரு திறந்தவெளி சிறைச்சாலையில் தமிழர்கள் படை முற்றுகைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார் அவர். இன்று சிங்கள தேசத்தில் தமிழர்கைள அழிப்பதோடு மட்டும் நின்று விடாமல் இன்னும் இரத்தவெறி தீராமல் தமிழ், முஸ்லீம் உறவுகளை சிதைக்க தொடங்கியுள்ளார்கள். அதற்கு நாங்கள் தமிழகத்தில் இருந்து கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை சோ்ந்தவர்கள் அந்தந்த நாடுகளில் இருந்து ஸ்கைப் ஊடாக தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். இன்றைய சந்திப்பில் மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத்தினை சோ்ந்த பிரதீப்குமார், தமிழ் இளையோர் மற்றும் மாணவர் கூட்டமைப்பினை சோ்ந்த பிரபாகரன், லொயோலா கல்லூரி மாணவன் செம்பியன், சட்டக்கல்லூரி மாணவர் ஜோதிலிங்கம் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்கள். கனடா அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் இணைத்தலைவர் பேராசிரியர் சிறீரஞ்சன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். டென்மார்க் தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக சுகுநேந்திரன் மார்க்கண்டு தமிழகத்தில் மாணவர்களின் எழுச்சி போராட்டத்திற்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழக முதல்வரின் தீர்மானங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிங்கள மனித உரிமையாளர் வீராஜ் மென்டிஸ் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களும் அதன் பின்னணியில் உள்ள நாடுகளும் அவற்றை எவ்வாறு தமிழர்கள் போராடி உண்மையினை உலகிற்கு சொல்ல வேண்டும் என்பது தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான நிர்மானுசன் பாலசுந்தரம், தமிழகத்திலும் இந்தியாவிலும் ஒரு திருப்புமுனையான வரலாற்று முக்கியத்துவமான ஒருகால கலகட்டம் உருவாகியுள்ளது. எதிர்வரும் 5 ஆண்டுகள் என்பது எங்கள் போராட்டத்தின் எதிர்காலம் உங்களுடைய கைகளில் வந்துள்ளதாக நாங்கள் எண்ணுகின்றோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி பேதங்களை மறந்து உங்களுடைய தொப்புள்கொடி உறவுகளுக்காக இன்று இனஅழிப்பினை சந்தித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் இன அழிப்பினை நிறுத்துவதற்கும் இழந்து விட்ட இறையாண்மையினையும் உரிமையினையும் பெற்றுக்கொள்ள தமிழகத்தில் உள்ள உறவுகளும் ஆட்சியில் இருப்பவர்களும் எமக்கான ஆதரவு கருத்தினை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இன்று ஈழத்தில் நடந்து கொண்டிருப்பது இனஅழிப்பு. இந்த இனஅழிப்பினை சிங்கள பௌத்த பேரினவாத அரசு மூன்று வகையாக ஈடுபடுத்தி வருகின்றது. முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நேரடியான இனஅழிப்பினை மேற்கொண்டது. கடந்த ஜந்து ஆண்டுகளில் சிங்கள தேசம் 10ஆயிரம் சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பினை சிங்கள அரசு அபகரித்துள்ளது. அங்கு நில ஆக்கிரமிப்பு சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலை தொடருமாக இருந்தால் இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் என்ற அடையாளம் இல்லாமல் தமிழினம் வாழ்ந்ததற்கான எந்த சான்றும் இல்லாமல் அழிந்து போகக் கூடிய பேராபத்தை ஏற்படுத்தும். அத்துடன் தமிழின அழிப்பு இனப்பரம்பலை கட்டுப்படுத்தல், திட்டமிட்ட ரீதியில் தமிழர்களின் இனவிருத்தி செயற்பாட்டினை கருத்தடையினை பயன்படுத்தி அழித்து வருகின்றார்கள். இந்நிலையில் தமிழகத்தின் உண்மையான நடவடிக்கை தமிழகம் மத்தியை நோக்கி நகர்த்துகின்ற நடவடிக்கையில்தான் இருக்கின்றது. ஈழத்தமிழர்களின் போராட்ட நடவடிக்கையினை ஏனைய மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழகத்திற்கு உண்டு என்றும் தெரிவித்த அவர் இன்று ஈழத்தமிழர்கள் மத்தியில் ஒரு ஆயுதப் போராட்டம் என்பது இல்லை நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை அடக்குமுறையாளர்கள்தான் தீர்மானிப்பார்கள் என்றும் அவர் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈழத்தமிழினத்தின் உரிமைப் போரின் மாமனிதர் இராஐரட்னம் காலமானார்!

Posted: 19 Jun 2014 10:29 PM PDT

rajaratnam

rajaratnamஈழத்தமிழினத்தின் உரிமைப் போரை மனதில் நிறுத்தி நீண்டகாலம் அயராது உழைத்த மாமனிதர் இராஐரட்னம் தனது 89வது வயதில் அமெரிக்காவில் காலமானார். தமிழீழத்தின் வடமராச்சி அல்வாயில் பிறந்தவர் இவர். சிங்கர் இராஐரட்னம் என ஆரம்ப காலத்தில் பலராலும் அறியப்பட்ட இராஐரட்னம் அவர்கள் தமிழர் உரிமைப்போர் தீவிரமடையாத தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் விவகாரத்தில் அதீத அக்கறையும் நீண்ட தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக செயற்பட்டார் என்பது பலரும் அறியாத அதியுட்சசெயற்பாடு. அத்தகைய ஒரு நிலையை அவர் கடைசி வரை பேனினார் என்பதே ஒரு வரலாற்று அதிசயம். படம் போடுவதற்காவும், அறிக்கைகள் விடுவதற்காகவும் அவர் செயற்பாடு என்றும் அமைந்ததில்லை. மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் தன்னைப்போல் சிந்திப்பவர்களுடன் மனம் திறந்து ஆழமாகப் பேசுவார். ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இன்றைய இளையவர்கள் பலரும் இன்றையநிலை, காலம் சார்ந்து சிந்திக்கத்தவறுபவற்றையே சிந்திக்கும் வல்லமை பெற்ற காலத்தையும் வென்றவர். இவரது ஆற்றலையும், ஆழுமையையும், தீர்க்கதரிசனத்தையும் இனம் கண்டு கொண்ட தமிழீழத் தேசியத்தலைமை இவர் மீது ஆழமான அன்பையும், பற்றுறுதியையும், நீண்ட தொடர்பாடலையும் கொண்டிருந்தது என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. அதேபோன்று தமிழ் தாயின் தவப்புதல்வனான இவர் தமிழர் தேசம் பேரழிவை சந்தித்த போதெல்லாம் எவ்வித விளம்பரமுமின்றி தனி மனிதனாக மட்டுமன்றி குடும்பமாக தமிழர் தேசத்தை தாங்கி நின்ற வரலாறு யாரும் அறியாத உச்சம். இலங்கைத் தமிழ்ச் சங்கம், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் தலைவர் மட்டுமின்றி, 2003ஆம் ஆண்டு இவருக்கு அச்சங்கம் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கொளரவித்தமையையும் இங்கு நினைவில் கொள்ளலாம். இந்தியா என்பது வெறுத் தமிழகம் அல்ல அதையும் கடந்து வெல்லப்பட வேண்டியது என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த பாரதீக ஐனதா ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியவர். அது குறித்த பார்வை, வெற்றியை நோக்கிய உபாயங்கள், அதை வென்றெடுப்பதற்கான கடினமான உழைப்பு அனைத்தும் ஒன்று திரண்ட ஒரு புரட்சித் தமிழனே மாமனிதர் இராஐரட்னம் அவர்கள். தமிழர் வரலாறு, தமிழர் உரிமைப்போராட்டத்தின் நியாயத்தன்மை குறித்து புத்தகம், கட்டுரைகள், விளக்கக்குறிப்பேடுகள் என பலவற்றை எழுதி தமிழர் அமைப்புக்களின் பெயரில் தானே அச்சிட்டு வெளியிட்டார். இவரது துணைவியாரின் ஆழமான தமிழினப்பற்றே இவர் தனது இனப்பணியை முழுமையாகச் செய்வதற்கும், இவரது பிள்ளைகளும் இனப்பற்றுடன் இயங்குவதற்கும் பாரிய பின்புலமான அமைந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும், தனது இனத்தின் மேல் கொண்ட உச்சமான பற்றுறுதி காரணமான தமிழர் தாயகத்தில் பல பாடசாலைகளில் கணனிக்கூட அமைப்பு மற்றும் வைத்தியசாலைகளின் மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி என பல திட்டங்களை தனது மக்களுக்காக தானாகவே செய்து கொடுத்தார். இனம், உரிமை சார்ந்த பயணத்தினால் இவரது குடும்பம் பல்வேறு உச்சசவால்களையும், சரிவுகளையும் சந்தித்தாலும், அது குறித்த எவ்வித வருத்தத்தையும் இவரோ இவரது குடும்பமோ என்றும் வெளியிட்டதில்லை. மாறாக முன்னரை விடப் பலமடங்கு என்றும் தொண்டாற்றுபவர்களாகவே திகழ்திருக்கின்றார்கள். தமிழர் தேசியத்தால் 'அப்பா" என பேரன்புடன் அழைக்கப்பட்ட மாமனிதர் இராஐரட்னம் இவர்களது மறைவு ஈழத்தமிழினத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அவரின் வாழ்க்கையில் இருந்து நாம் பலதைக் கற்றுக் கொள்ளவேண்டும். பெரும்பணம், கல்வி, உச்சவேலைவாய்ப்பு என அனைத்தும் பெரிதாக அமைந்தாலும் சாமானியனாக, இனப்பற்றுடன், உச்ச அர்ப்பணிப்புடன் இயங்குவது என்பதற்கு இவர் ஒரு வரலாற்றுப்புத்தகம். இவரது இழப்பால் துயருறும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் துயரில் ஈழத்தமிழினமும் முழுமையான இணைந்து கொள்கிறது. மாமனிதர்கள் மரணத்தை வென்றவர்கள். என்றும் எம் மனங்களில் வாழ்வார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொலம்பிய மாகாணத்தில் குழந்தைகளை ஆபாசப் பொருளாகப் பாவிக்கப்படுகின்ற திடுக்கிடும் தகவல்!

Posted: 19 Jun 2014 10:22 PM PDT

children

childrenகுறிப்பிட்ட சம்பவமானது நாடுதழுவியரீதியில் நடைபெறுவதாகக் போலிசார் தெரிவித்திருக்கின்றார்கள். 32 குற்றச்சாட்டுக்கள் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் 11 பேர் இனங்காணப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள் எனப் பொதுமக்களின் கவனத்திற்குப் போலிசார் தெரியப்படுத்தியிருக்கின்றார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விடையம் சம்பந்தமாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்துவதற்காக போலிசார் பத்திரிகை மாநாடொன்றை நடத்தியிருக்கின்றார்கள் எனத் தெரிகிறது. குறிப்பிட்ட மாநாட்டில் கனடாவில் எங்கெல்லாம் இவ்வாறான நடவடிக்கைகள் குழந்தைகள்மேல் பிரயோகிக்கப்படுகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டியிருக்கின்றார்கள் எனத் தெரிகிறது. 4 மாதங்களாக போலிசாரின் அயராத முயற்சியில் 167ற்கு மேற்பட்ட துப்புத் துலக்கல் நடவடிக்கைகள் நூற்றுக்கணக்கான போலிசாரினால் மேற்கொள்ளப்பட்டதன் விழைவு கனடாவில் எந்தப் பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது என்பதை வெளிக்கொணர்ந்திருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றார்கள். குறிப்பாக பிரிட்டிஸ்கொலம்பியாவில் Burnaby, Vernon, Williams lake, Duncan, and Sidney ஆகிய இடங்களில் குறிப்பிட்ட நடவடிக்கள் அதிகளவில் நடக்கின்றன எனப் போலிசார் தெரிவித்திருக்கின்றார்கள். ஆனால் குறிப்பிட்ட குற்றங்களை இளைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்கள் Surrey and Kelowna ஆகிய பகுதிகளில் வசித்திருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. நனைமோ எனுமிடத்தில் 43 வயது மதிக்கத்தக்க ஒருவர்மேல் இவ்வாறாக 6 குற்றச்சாட்டுக்கள் சாட்டப்பட்டுள்ளன எனப் போலிசார் தெரிவித்திருக்கின்றார்கள். Revelstoke இடத்தில் வசிக்கும் 31 வயதுடைய வேறொருவர் 6 குற்றங்கள் சாட்டப்பட்ட நிலையில் இருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவதானமாகக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள் எனப் பொலிசார் தெரிவித்திருக்கின்றார்கள். அத்துடன் மேலும் போலிசார் தெரிவிக்கையில் இந்தச் சம்பவம் இதனுடன் முடிவடையவில்லையெனவும் நாடுதழுவிய ரீதியில் பாரிய முன்னெடுப்புடன் நடைபெறுகின்றனவெனவும் போலிசாராகிய தமக்கு இது ஒரு தொடர் யுத்தம் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்குத் தெரிய வேண்டியது கைதுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன எனவும் தெரிவித்திருக்கின்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கலிபோர்னியாவில் பிரதான நெடுஞ்சாலையில் வாகனத்திற்கு தீ!

Posted: 19 Jun 2014 10:12 PM PDT

fire

fireகலிபோர்னியாவில் ஓக்லான்ட மற்றும் சான்பிரான்சிஸ்கோவிற்கு இடையில் உள்ள பிரதான நெடுஞ்சாலையில் மனிதன் ஒருவர் தனது வாகனத்திற்கு தீ வைத்து விட்டு அதனால் வெளிப்பட்ட தீச்சுவாலையை சுற்றி நடனமாடியுள்ளதால் அதிகாரிகள் அந்நபரை கைது செய்துள்ளனர். அதிகாரிகள் அவரின் பெயரை வெளியிடவில்லை ஆனால் வேண்டுமென்றே தனது காருக்கு பே பிரிட்ஜ் ரொல் பிளாசாவில் தீ வைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரிய போக்குவரத்து தடையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீதி மிகவும் பிசியான நீடித்த பாதை என்றும் கலிபோர்னியாவின் இரு நகரங்களை இணைக்கும் பாதை எனவும் கூறப்பட்டுள்ளது. தீ மூட்டிவிட்டு நடனமாடியதால் ஏற்பட்ட தீச்சுவாலை மூலம் காயமடைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீதியின் பல லேன்கள் மூடப்பட்டிருந்தன.

This posting includes an audio/video/photo media file: Download Now

தெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை ஷகிலா: வேறென்ன, பலான விவகாரம்தான் கதை!

Posted: 19 Jun 2014 02:55 AM PDT

shakeela

shakeelaதெலுங்கில் ஒரு படத்தை இயக்குகிறார் முன்னாள் கவர்ச்சி நடிகை ஷகிலா என்பது பழைய செய்தி. அது என்ன மாதிரியான படம் என்று விசாரித்தால்... கிட்டத்தட்ட அவர் முன்பெல்லாம் மலையாளத்தில் நடித்தாரே அந்த மாதிரி பி கிரேடு கதைதான் என்பது தெரிய வந்தது. அந்தப் படத்துக்காக கொஞ்சம் தனது சொந்தக் கதையையும் சேர்த்து திரைக்கதை தயார் செய்திருக்கிறாராம். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்ற பெயரில், பாலியல் சமாச்சாரங்களையே பிரதானமாக இந்தக் கதையில் எடுக்கப் போகிறாராம். "இன்றைக்கு பெண்களுக்கு எதிராக அதிகம் நடப்பது செக்ஸ் வன்முறைகள்தான். அதனால் அத்தகைய சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுக்கிறேன். இப்படிப்பட்ட கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் ஒரு பெண்தான் இந்தப் படத்தின் நாயகி," என்று அவர் ஒப்புதல் வாக்குமூலமும் தந்துள்ளார். மேலும், "சினிமா நடிகை ஆன பிறகுதான், படம் இயக்குவதில் ஆர்வம் பெருகிறது. என் நீண்ட நாள் கனவு இதன் மூலம் நிறைவேறிவிட்டது," என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிலிம்பேர் விருதுகளை பெறுவது என்பது ஒவ்வொரு நடிகரின் கனவு! தனுஷ்

Posted: 19 Jun 2014 02:50 AM PDT

dhanush

dhanushபிலிம்பேர் விருதுகளை பெறுவது என்பது ஒவ்வொரு நடிகரின் கனவு எனத் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ். திரையுலகில் சிறந்த கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஐடியா நிறுவனம் பிலிம்பேர் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி, 2013ம் ஆண்டிற்கான 61வது பிலிம்பேர் விருது சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஏற்கனவே நான்கு முறை பிலிம்பேர் விருதுகளை வாங்கிய நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். மற்ற விருதுகளை விட பிலிம்பேர் விருது தனிச்சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்த விருது அனைத்து மொழி படங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் ஆரோக்கியமான விஷயமாகும்.இவ்விருதை ஒரு தடவையாவது பெற்று விட வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகனின் கனவு. எனக்கும் அந்த கனவு இருந்தது. நான் 2002ம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தேன். ஆனாலும் இந்த விருதுக்காக நான் சில காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இறுதியாக ஆடுகளம் திரைப்படத்திற்காக எனக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. அதன் பின்னர் 3 திரைப்படத்தி்றகாக எனக்கு மூன்று பிலிம்பேர் விருதுகள் கிடைத்தது. இந்த விருது இந்த வருடமும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறென். இந்த வருடம் மட்டுமல்ல அனைத்து வருடமும் ஒரு பிலிம்பேர் விருது வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தாண்டும் விருது பெயர்ப்பட்டியலில் தனுஷ் நடித்த மரியான் திரைப்படம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாரப் பத்திரிகை கருத்துக் கணிப்பு விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாராமே!

Posted: 19 Jun 2014 02:42 AM PDT

actor-vijay

actor-vijayஒரு பிரபல வாரப் பத்திரிகை கருத்துக் கணிப்பு நடத்தி, விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. தமிழ்ப் பத்திரிகையுலகில் ரஜினி, சூப்பர் ஸ்டார் இந்த இரண்டு வார்த்தைகளும் எவர்கிரீன். எப்போதெல்லாம் சுவாரஸ்யமும் வியாபாரமும் குறைகிறதோ, அப்போதெல்லாம் உடனடியாக கைகொடுக்கும் மாமருந்து இந்த இரு வார்த்தைகளும். கரு பழனியப்பன் தான் இயக்கிய சதுரங்கம் படத்தில் இதைச் சித்தரிக்கும் வகையில் ஒரு காட்சி வைத்திருப்பார். ஒரு பிரபல வாரப் பத்திரிகை, 'இந்த வாரம் பரபரப்பா மேட்டர் ஒண்ணுமில்லையே.. என்ன பண்ணலாம்?' என்று ஆலோசனை கேட்க, 'அரசியலில் ரஜினி?' அப்படின்னு போடுங்க... - என்பார். அதுதான் தொன்னூறுகள் தொடங்கி இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது தமிழ்ப் பத்திரிகையுலகில். ஆண்டுதோறும், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று - நடிகர்கள் அலசுகிறார்களோ இல்லையோ - பத்திரிகைகள் அலசோ அலசென்று அலசுவார்கள். முன்பு அஜீத்தை மையமாக வைத்து இந்த அலசல்களை நடத்தினர். அவர் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு, ஆளை விடுங்க சாமி, நான் இதுக்குள்ளயே வரல என்று தன் வேலையை மட்டும் பார்க்க ஆரம்பிக்க, இன்று அவர் ரேஞ்சே வேறு என்று தனி மகுடம் சூடிக் கொண்டார். லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்று தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டவர்களுக்கு அடுத்த படம் எப்போது வரும் என்றே தெரியாத நிலை. இந்த நிலையில்தான் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் சில வாரங்களாக ஒரு வாரப் பத்திரிகை பெரிய அலசல் வேலையில் இறங்கியது. ஏதோ தமிழ்நாட்டு தேர்தல் ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி, அதில் விஜய்க்குதான் முதலிடம் அதனால் அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் என கட்டுரை வெளியிட்டுள்ளது. விஜய்க்கு அடுத்துதான் அஜீத், சூர்யா என்று பட்டியல் போட்டுள்ளார்கள். சூப்பர் ஸ்டார் என்ற பட்டப் பெயர், தமிழகத்தில் இன்றும் பவர்புல் பெயராக இருக்கும் எம்ஜிஆருக்கே கூட பயன்படுத்தப்படவில்லை. அவருக்கு முன், திரையுலகின் பெரும் சக்தியாகத் திகழ்ந்த பாகவதருக்கும் கூட இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதில்லை. இந்திய அளவில் ராஜேஷ் கன்னா, அமிதாப் என யாருக்கும் இந்தப் பட்டம் சூட்டப்பட்டதில்லை. அது ரஜினிகாந்த் என்ற ஒருவருக்கு மட்டுமே எழுபதுகளின் இறுதியில் சூட்டப்பட்டது. இன்றுவரை அவருக்கு மட்டுமே உரித்தான பட்டப் பெயராகத் திகழ்கிறது. ஒப்பீட்டளவில் அந்தப் பட்டப்பெயரே, தமிழ் சினிமாவின் உச்சமாகத் திகழ்வதால், அதை வைத்தே யார் முன்னணி நடிகர் என்ற கணிப்பை நடத்துகிறார்கள்!  

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நெல்லைத் தமிழ் பேசும் கமல்!

Posted: 19 Jun 2014 02:38 AM PDT

kamal

kamalத்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நெல்லைத் தமிழ் பேசி நடிக்கவிருக்கிறார் கமல் ஹாஸன். மலையாளத்தில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸனும் கவுதமியும் நடிக்கிறார்கள். நெல்லையை கதைக் களமாக வைத்து இந்த படத்தை எடுக்கப் போகிறார்கள். திருநெல்வேலியில் வசிக்கும் நடுத்தர தம்பதி கேரக்டரில் கமல், கவுதமி நடிக்கின்றனர். கமல், படம் முழுவதும் நெல்லை தமிழ் பேசி நடிக்கப் போகிறாராம். நெல்லைக்கு பக்கத்து மாவட்டமான ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கமல். பரமக்குடியில் பிறந்து வளர்ந்தவர். அதனால் நெல்லை வட்டார வழக்கு அவருக்கு அத்தனை கஷ்டமான விஷயமில்லை. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கமல் ஏற்கெனவே இளையராஜாவிடம் பேசியுள்ளார். இன்னொரு தரப்பு ஜிப்ரான் இசையமைக்கக் கூடும் என்கிறார்கள். தற்போது உத்தமவில்லன் படத்தில் கமல் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் த்ரிஷ்யம் பட வேலைகளில் இறங்குகிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் தமிழினத்துக்கு எதிரானது அல்ல: சொல்வது ராஜபக்சே!

Posted: 19 Jun 2014 02:29 AM PDT

mahinda-rajapaksa

mahinda-rajapaksaஇலங்கையில் நிகழ்ந்த யுத்தம் ஒருபோதும் தமிழ் இனத்துக்கு எதிரானது அல்ல பயங்கரவாதத்துக்கு எதிரானதுதான் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் ராஜபக்சேவை ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் நாகோவ் இன்று சந்தித்து பேசினார் . இந்த சந்திப்பின் போது 2009 ஆம் ஆண்டு யுத்தத்துக்குப் பின் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ராஜபக்சே விவரித்தார். அப்போதுதான், தாங்கள் நிகழ்த்தியது தமிழ் இனத்துக்கு எதிரான யுத்தம் அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமே. போரினால் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீளக் குடியேற்றப்பட்டுவிட்டனர் என்று ராஜபக்சே கூறியிருக்கிறார். மேலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களை ஆசிய வளர்ச்சி வங்கி பார்வையிடலாம் என்றும் ராஜபக்சே அழைப்பு விடுத்திருக்கிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வான் தாக்குதல் நடத்துங்க: அமெரிக்காவிடம் கெஞ்சும் ஈராக்!!

Posted: 19 Jun 2014 02:25 AM PDT

iraq-crisis

iraq-crisisசதாம் உசேனின் ஆதரவுப் படையான சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். தலைநகர் பாக்தாத்தை நெருங்கிவிட்ட நிலையில் அவர்கள் மீது விமான தாக்குதல்கள் நடத்துங்கள் என்று அமெரிக்காவிற்கு ஈராக் கோரிக்கை விடுத்துள்ளது. ஈராக்கில் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். முதலில் மொசூல் நகரைக் கைப்பற்றத் தொடங்கிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் படிப்படியான முன்னேறிவிட்டனர். திக்ரீத், பைஜா, ஜலாலா என பல முக்கிய நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். வசமாகிவிட்டன. தற்போது தலைநகர் பாக்தாத்துக்கு மிக அருகில் அந்த அமைப்பினர் வந்துவிட்டதால் உச்சகட்ட போர் நடைபெறும் நிலை உருவாகி உள்ளது. தலைநகர் பாக்தாத்தைக் காப்பாற்றும் வகையில் அமெரிக்காவிடம் ஈராக் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவோ, ஈராக்கின் வேண்டுகோளை பரிசீலித்துக் கொண்டிருபதாக கூறி வருகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாம்புகளின் வாயைக் கடித்து வித்தை: தாய்லாந்து கலைஞரின் வினோத விளையாட்டு!

Posted: 19 Jun 2014 02:19 AM PDT

having-snake

having-snakeபொதுவாக பாம்பு மற்றவர்களைக் கடிக்கும் எனத் தான் கேள்வி பட்டிருப்போம், ஆனால், பாம்புகளையே கடித்து வித்தை காட்டுகிறார் தாய்லாந்து கலைஞர் ஒருவர். 'பாம்பு புத்துக்குள்ள எப்டி கையை விட்டீங்க, பாம்பு கடிக்கலையா..?' என படையப்பா படத்தில் பிரபலமான வசனம் ஒன்று வரும். அந்தளவிற்கு பாம்பென்றால் படையும் நடுங்கும் மனோநிலையைக் கொண்டவர்கள் நமது மக்கள். அதற்கு முக்கியக் காரணம் ஒரே கடியில் உயிரைப் பறிக்கும் விஷத்தன்மை கொண்டவைகள் பாம்புகள் என்பது தான். ஆனால், தாய்லாந்து பாம்பாட்டி ஒருவர் விஷ பாம்புகளை வைத்து விதவிதமான விளையாட்டுகளைச் செய்து பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறார். பாம்பு வித்தை பிரபல சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தாய்லாந்தின் உல்லாச நகரமான பட்டயாவில் தான் இந்தக் கலைஞர் பாம்புகளை வைத்து வித்தை செய்து வருகிறார். சிறை பிடிக்கப் படும் பாம்பு மஞ்சளும், கறுப்பும் கலந்த நிறத்தில் தரையில் ஊர்ந்து ஓடும் பயங்கரமான விஷப்பாம்பை, மெல்ல குனிந்து மண்டியிட்டு, தனது வாயால் கவ்வி, அது தனது தலையை சுற்றிப் பின்னிக் கொள்வதற்குள், பாம்பின் தலையை தனது பல்லால் கடித்து, சில நிமிடங்கள் வரை இவர் சிறைபடுத்தி வைக்கிறார். பறவைகள் ஸ்டைலில் அதோடு விடாமல், கொடிய விஷம் கொண்ட கருநாகப்பாம்பின் வாயுடன் தனது உதடுகளை பொருத்தி, தனது வாயில் வைத்திருக்கும் உணவை ஊட்டி விட்டு பார்வையாளர்களை மிரள வைக்கிறார் இவர். பார்வையாளர் கருத்து இவரது வித்தையை காண வந்த பார்வையாளர் ஒருவர், 'நான் இதைப்போல் எத்தனையோ பாம்பாட்டிகளை பார்த்து விட்டேன். அவர்களது உயிர் பாம்புக் கடியில் தான் போய் உள்ளது' என கருத்துத் தெரிவித்துள்ளார். அருகிலேயே மருத்துவமனை... இவர் வித்தை காட்டி வரும் இடத்திற்கு அருகிலேயே பாம்புக் கடிக்கென அதிநவீன சிகிச்சையளிக்கும் தாய்லாந்தின் சிறப்பு மருத்துவமனையான 'ரெட் கிராஸ் இன்ஸ்டிட்டியூட்' உள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நகைக்கடை உரிமையாளரை அநாகரீகமாக மிரட்டி பணம் பறிக்கும் பொலிஸ்!

Posted: 19 Jun 2014 02:04 AM PDT

Jewllery-shop

Jewllery-shop

This posting includes an audio/video/photo media file: Download Now

திருடர்களை தலைதெறிக்க ஒடவைக்கும் தம்மாத்துண்டு சிறுவன்

Posted: 19 Jun 2014 01:54 AM PDT

Introducing-Siren-Boy

Introducing-Siren-Boy

This posting includes an audio/video/photo media file: Download Now

55 பேருக்கு அல்வா கொடுத்துட்டு கோல் போடுவது எப்படி?…. பாருங்க உங்களுக்கே ஒரு உற்சாகம் ஏற்படும்!

Posted: 19 Jun 2014 01:52 AM PDT

Shinji-Kagawa-&-Hiroshi-Kiyotake-VS-55-Kids

Shinji-Kagawa-&-Hiroshi-Kiyotake-VS-55-Kids

This posting includes an audio/video/photo media file: Download Now

இளைஞர்களுக்கு கட்டாயம் பயன்படும் காணொளி!

Posted: 19 Jun 2014 01:49 AM PDT

How-to-Pack-a-Suitcase-Efficiently

How-to-Pack-a-Suitcase-Efficiently

This posting includes an audio/video/photo media file: Download Now

நீங்க சொகுசா பயணம் செய்ற கார் எப்படி தயாராகிறதுனு தெரியுமா?

Posted: 19 Jun 2014 01:18 AM PDT

a-bmw-employee-works

a-bmw-employee-works

This posting includes an audio/video/photo media file: Download Now

துள்ளிக் குதித்து வந்த மான் முதலைக்கு உணவாகும் பரிதாபக் காட்சி!

Posted: 19 Jun 2014 01:09 AM PDT

Crocodile-Catches-A-Leaping-Impala

Crocodile-Catches-A-Leaping-Impala

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™