Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பேட்ஸ்மேன் மோடி மூன்று சதம் அடித்து சாதனை: அத்வானி புகழாரம்

Posted: 29 Jun 2014 10:56 PM PDT

முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்..பி.க்களுக்கு வழங்கப்படும் பயிற்சி முகாமில் எம்.பி.க்கள் முன் அத்வானி பேசியதாவது; பேடஸ்மேன் மோடி அணியின் கேப்டனான உடன் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே மூன்று சதம்(300 ரன்கள்) அடித்து சாதனை படைத்துள்ளார் கிரிக்கெட் அணியை போல், நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கட்சியை தலைமை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை ஏற்று நடத்திய மோடி மகத்தான வெற்றி பெற்றுத்தந்தார். மேலும் பா.ஜ.க 282 இடங்களையும், தே.ஜ.கூட்டணி 336 இடங்களையும் பிடித்ததற்கு மோடியே காரணம்.

முல்லைபெரியாறு இந்தியாவிலேயே மிகவும் பாதுகாப்பான அணை: கேரள நீதிபதி தாமஸ்

Posted: 29 Jun 2014 10:43 PM PDT

தமிழகத்திற்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதற்கான ஏற்பாடுகளை தமிழகம் தொடங்கியதும், கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது

எரிவாயு குழாய் விபத்து: சிரஞ்சீவியை எதிர்த்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Jun 2014 10:23 PM PDT

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நகரம் என்ற இடத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் 1500 ஏக்கர் பரப்பளவில் இருந்த பல வீடுகள் எரிந்து சாம்பலானது. 15 பேர் அதே இடத்தில் பலியானார்கள். 30–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காக்கி நாடா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று

திருப்பதி கோவிலில் ஒரே நாளில் ரூ.3½ கோடி உண்டியல் வருமானம்

Posted: 29 Jun 2014 10:19 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. தரிசனத்துக்கு பக்தர்கள் 24 மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. தற்போது பக்தர்கள் கூட்டம் குறைந்து உள்ளது.

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி மோசடி செய்த பெண் கொலை

Posted: 29 Jun 2014 09:13 PM PDT

திருவனந்தபுரம் அருகே சாந்தனூர் என்ற இடத்தை சேர்ந்தவர் மணிகண்டன் நாயர். இவரது மகன் தினேஷ் (வயது 23). இவர் படித்து விட்டு பிளம்பிங் மற்றும் கட்டிட தொழில் செய்து வந்தார். இவருக்கு வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது. இதனால் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புபவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சந்திரவள்ளி (48) என்ற பெண் தினேசை வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாக கூறினார். அவர், வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனத்திற்கு புரோக்கர் போல செயல்பட்டு வந்ததால் அவரை நம்பி தினேஷ் ரூ

சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்: பாஜக எம்பிக்களுக்கு அத்வானி வேண்டுகோள்

Posted: 29 Jun 2014 08:15 PM PDT

டெல்லியை அடுத்துள்ள சூரஜ்குந்த் நகரில் பா.ஜனதாவின் புதிய எம்.பி.க்களுக்கான 2 நாள் பயிலரங்கம் நடந்தது. இதில் பாராளுமன்ற மற்றும் டெல்லி மேல்-சபைக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். முகாமில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.

மகளுடைய காதலனின் கண்ணை தோண்டி அடித்துக் கொன்ற போலீஸ்காரர்

Posted: 29 Jun 2014 05:25 PM PDT

பீகார் மாநிலத்தை சேர்ந்த ராகுல் குமார்(22) என்பவர், பாட்னா மாவட்டம் தவ்லத்பூர் கிராமத்தை சேர்ந்த போலீஸ்காரர் அபய்குமார் என்பவரின் மகளான இளம்பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் தனக்கு வேலை கிடைத்திருப்பதாகவும், உடனடியாக செல்ல வேண்டும் என்றும் தனது

ஸ்ரீஹரிகோட்டாவில் பிரதமருடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

Posted: 29 Jun 2014 04:05 PM PDT

இந்திய விண்வெளிக் ஆராய்ச்சி முகமையை சேர்ந்த விஞ்ஞானிகள் பி.எஸ்.எல்.வி. –சி 23 என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளனர். இந்த ராக்கெட் இன்று காலை 9.52 மணிக்கு ஆந்திர மாநிலம், நெலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வருகை தந்தார்

நாட்டின் பருவமழை 42 சதவீதமாக குறையும்: டெல்லி வானிலை ஆய்வு மையம் தகவல்

Posted: 29 Jun 2014 02:49 PM PDT

நாட்டின் பருவமழை 42 சதவீதமாக குறையும்: டெல்லி வானிலை ஆய்வு மையம் தகவல்

ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தாருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு

Posted: 29 Jun 2014 02:11 PM PDT

ஈராக் நாட்டில் கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தாரை மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்து பேசினார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று ஈராக்கில் இருக்கும் இந்திய

பல்கலைக்கழக பட்டப்படிப்பு விவகாரம்: மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி வீட்டு முன் மாணவர்கள் போராட்டம்

Posted: 29 Jun 2014 01:52 PM PDT

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் 64 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பதவி வகித்து வரும் தினேஷ் சிங், 4 ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த விரும்பினார். ஆனால் இதற்கு பல்கலைக்கழக மானியக்குழு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எரிவாயு குழாய் வெடித்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிரஞ்சீவி ஆறுதல்

Posted: 29 Jun 2014 01:17 PM PDT

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மத்திய அரசின் கெயில் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு வயல்கள் உள்ளன. இங்கு எடுக்கப்படும் எரிவாயு, குழாயின் மூலம் அமலாபுரம் மண்டலத்தில் உள்ள நகரம் என்ற கிராமத்தின் வழியாக பொன்னமாதா என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் நோன்பு வாழ்த்து

Posted: 29 Jun 2014 11:40 AM PDT

ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 'ரமலான் நோன்பு துவங்கும் இவ்வேளையில் எனது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதுடன், இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என இறைஞ்சுகிறேன்' என தனது 'டுவிட்டர்' பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உ.பி.யில் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்தது: 35 பேர் படுகாயம்

Posted: 29 Jun 2014 06:52 AM PDT

உத்தரப்பிரதேசத்தின் பாராபங்கி அருகே உள்ள குர்சி சாலைப்பகுதியில் செயல்படும் தொழிற்சாலையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றிரவு ஸ்ரீ சாய் உணவு பொருள் தொழிற்சாலை என்ற பெயர் கொண்ட அந்த கம்பெனியில் 35 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில்

சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம்: விவரம் கேட்கும் மத்திய அரசு

Posted: 29 Jun 2014 04:34 AM PDT

இந்தியாவில் உள்ளவர்களின் கணக்கில் காட்டப்படாத கறுப்பு பண விவரங்கள் யார் பெயரில், எந்த வங்கியில் ஸ்விஸ் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலை தருமாறு அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு புதிய கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர்களின் கறுப்பு பண விவரங்களை பகிர்ந்து கொள்ள தயார் என அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் கடந்த வாரம்

உ.பி. எம்.எல்.ஏக்களுக்கு பணத்தட்டுப்பாடு: சம்பளத்தை உயர்த்த கோரிக்கை

Posted: 29 Jun 2014 03:59 AM PDT

உத்தரப்பிரதேச மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இக்கூட்டத்தில் கட்சிகளை கடந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் சம்பளத்தை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பாதுகாப்பில் அந்நிய முதலீடு: மோடியை சந்திக்கும் மேற்கத்திய நாடுகள்

Posted: 29 Jun 2014 02:49 AM PDT

நாட்டின் பாதுகாப்பிற்கான ஆயுதங்களை இதுவரை இறக்குமதி செய்து வந்த இந்தியா தற்போது பாதுகாப்பிற்காக நவீன ஆயுதங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நிய நாட்டின் முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் இத்திட்டத்தை தெரிந்து கொண்ட மேற்கத்திய நாடுகள், பல்லாயிரம் கோடி மதிப்பிலான இந்த ஆயுத உற்பத்தி திட்டத்தை தங்கள் நாட்டிற்கு சாதகமாக மாற்ற திட்டமிட்டுள்ளன. இந்த ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை தொடங்குவதில் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.

மோடி அரசிடமிருந்து விரைவில் அதிசயத்தை எதிர்பார்க்காதீர்கள்: மனோகர் பாரிக்கர்

Posted: 29 Jun 2014 01:48 AM PDT

ஆட்சியின் தொடக்கத்திலேயே மோடி அரசிடமிருந்து அதிசயங்களை எதிர்பார்க்காதீர்கள் என மக்களிடம் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். கோவா மாநில தொழிலதிபர்களின் கூட்டத்தில் உரையாற்றும்போது பாரிக்கர் கூறியதாவது, மக்கள் பெருமளவில் என்னைப் பார்த்து கேட்கையில், நல்ல நாட்கள் வந்திருக்கவேண்டும், ஆனால் அவை வந்துவிட்டதா என்றார்கள். அதற்கு நான் பதிலளிக்கையில் வரவில்லை, கண்டிப்பாக நல்ல நாட்கள் வரும் என்றேன்.

மேற்கு வங்காளத்தில் ரெயிலில் இருந்து பெண்ணை கீழே தள்ளிய டிக்கெட் பரிசோதகர்

Posted: 28 Jun 2014 11:51 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபூரை சேர்ந்தவர் அர்பிதா சமந்தா (22). இவர் ஹவுராவில் இருந்து பஷ்குராவுக்கு ஒரு ரெயிலில் ரிசர்வ் பெட்டியில் பயணம் செய்தார். அவருடன் மேலும் 2 பேர் வந்திருந்தனர். ரெயிலில பயணம் செய்ய அர்பிதா டிக்கெட் எடுக்கவில்லை. அப்போது அங்கு டிக்கெட் பரிசோதகர் மந்தீப் கவுர் வந்து அப்ரிதாவிடம் டிக்கெட் கேட்டார். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த டிக்கெட் பரிசோதகர் மந்தீப் கவுர் பயணி அர்பிதாவை தாக்கினார். அப்போது ரெயில் பெக்னான் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ஓடும் ரெயிலில் இருந்து அவரை கீழே தள்ளினார்.

கொல்கத்தாவில் கடத்தப்பட்ட மகள், மகளின் தோழிகளை உ.பி.யில் காப்பாற்றிய தந்தை

Posted: 28 Jun 2014 11:45 PM PDT

மேற்கு வங்காளத்தில் உள்ள தெற்கு 24 பர்கானா பகுதியில் உள்ள சாப்ரகலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பர்கத் லஸ்கர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது உறவு முறையான மன்னன் என்பவர் அவரை சந்தித்து புது டெல்லியில் உள்ள செல்வந்தர் வீடுகளில் உதவிப்பணி புரிய பெண்கள் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். அதற்கு கிடைக்கும் சம்பளத் தொகை மிகவும் அதிகமாக இருந்ததால் லஸ்கர் தன்னுடைய


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™