Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வெட்கப்படுகிறேன்...!

Posted: 01 Jun 2014 12:32 PM PDT

ஆண் என சொல்லிக்கொள்வதில் வெட்கப்படுகிறேன். ஆண் என சொல்லிக்கொள்வதில் வெட்கப்படுகிறேன். இந்த அழகிய முகங்களை அமிலம் கொண்டு சிதைத்ததற்காக ஆண் என்பதில் வெட்கம் கொள்கிறேன். ஆணுக்குரிய அம்சம் இருப்பவனெல்லாம் ஆணல்ல. தனக்கு நிகரான பலமில்லாதவரிடம் தன் பலத்தை நிரூபிக்க முயலும் எவனொருவனும் ஆணென சொல்வதில் வெட்கப்படுகிறேன். Kumaran Guruswamy

காலண்டரை பார்க்காமலே ராகு காலம் எம கண்டம் அறியும் வழி

Posted: 01 Jun 2014 12:02 PM PDT

பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், யமகண்டம் பார்ப்பது பலருக்கும் வழக்கம். அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து ராகு காலம், எமகண்டத்தை பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும். அப்படி இல்லாமல், ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம், யமகண்டத்தை எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு. அதற்கு, கீழ்க்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். `திருநாள் சந்தடியில் வெயிலில் புறப் பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?' இந்த வாக்கியம், ...

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IPL T 20 கோப்பையை வென்றது

Posted: 01 Jun 2014 11:23 AM PDT

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் IPL T 20 கோப்பையை வென்றது

IPL T 20 கிரிக்கெட் விளையாட்டில் பஞ்சாப் அணியை கொல்கொத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 19.3 ஓவர்களில் , இலக்கான 200 ரன்களை எடுத்து ஜெயித்து, கோப்பையை வென்றது .
வாழ்த்துக்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் .

ரமணியன்

நான் ரசித்த கவிஞர் வாலி

Posted: 01 Jun 2014 10:40 AM PDT

நான் ரசித்த கவிஞர் வாலி சாக்கடையில் விழுந்தாலும் சந்தனத்தில் விழுந்தாலும் எதுவுமே - ஒட்டிக் கொள்ளாமல் உள்ளது உள்ளபடியே எழுந்து வருகிறது - என்னுடைய நிழல். நிழலுக்கு இருக்கும் – இந்த நிட்காமிய ஞானம் – என் உடலுக்கும் வாய்க்குமாயின்- ஆதிசங்கரரைப் போல் அடியேனுக்கும் - கள்ளும் ஒன்று; காய்ச்சிய ஈயமும் ஒன்று!'——கவிஞர் வாலி ரசிப்பதற்காக ! ரமணியன்

மனை மடித் தூக்கம்!

Posted: 01 Jun 2014 08:31 AM PDT

உன் அழகு எனை ஈர்க்கும் பார்க்கும் பலரும் பொறாமை கொள்ளும் அழகில் வீழும் பலரைக்காண பயம் கொள்வேன் சில வேளை உன் தெகிட்டாத அழகில் வீழும் கோடிப் பணமுடையான் உன் உளம் மாற்றி எனை அகற்றி உன் அகம் நிரப்ப வந்திட்டால் என் செய்வேன் என்னவளே உன் அழகு சில வேளை எனக் கெதிரி எனக் கருதி உன் ஒப்பனைக்கெதிரியாய் கதிரவன் ஔியாய் வந்து ஒப்பனை களைத்து உனை மீட்பேன் நீ காணும் காட்சி நானாக வேண்டும் நான் காணும் காட்சி நீயாக வேண்டும் என்றும் எதிலும் உனைக் காண வேண்டும் நீ இல்லா மணம் மனமில்லா ...

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Posted: 01 Jun 2014 08:27 AM PDT

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! மேகங்களின் மோதல் மின்னல் விழிகளின் மோதல் காதல் ! புவி ஈர்ப்பு சக்தியை வென்றது விழி ஈர்ப்பு சக்தி ! பேசாவிட்டாலும் பார்வையாலேயே பசியாறி விடுகின்றனர் ! நடந்து செல்கையில் திரும்பி ஒரு பார்வை அதிர்வலைகள் ! இமைக்காமல் பார்ப்பதில் அவளுக்கு நிகர் அவளே ! காந்த அலை வீசும் கண்கள் வலை ! பரவச நிலை மிதக்கும் கலை காதல் ! பார்க்காததால் வரையவில்லை இரவிவர்மன் ! காதலன் விழிகளுக்கு அவன் காதலி பேரழகி ! அடிக்கடி ...

பச்ச மட்ட

Posted: 01 Jun 2014 08:15 AM PDT

பச்சை மட்டை இழைச்சி பக்குவமா அடச்சி குந்த வச்சி என்ன ஊரறிய அழைச்சி சொல்லிப் புட்டாங்க கூந்தலிலே பூவும் வச்சி அழகான பொட்டும் வச்சி ஆடையதை மாத்தித் தச்சி சாமந்திப் பட்ட எனை உலகறியச் செய்துட்டாங்க வெச்ச கண்ணு வாங்காம என் அழக ரசிச்சவங்க ரசிச்ச மட்டும் செய்தாங்க என்னிலை மாத்தாம அன்று வித்தியாசம் இல்லாம சேர்ந்திருந்து விளையாடிப்புட்டம் அருகருகே இருந்துபுட்டம் கூச்சமேதும் இல்லாம சுதந்திரமா இருந்து புட்டம் சத்தமிட்டு சிரித்தாலும் கூவித்தான் அழைத்தாலும் தொட்டுத்தொட்டு ...

சிவன்போரூர் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் ராமர் வழிபட்ட தலம்

Posted: 01 Jun 2014 06:36 AM PDT

ராமபிரானின் இஷ்ட தெய்வமாக இருப்பவர் சிவபெருமான். தமிழகத்தில் உள்ள "ராமேஸ்வரம்' என்னும் திருத்தலம், உலகப் புகழ் பெற்றது. இத்தலம் நீங்கலாக மதுரை, கயத்தாறு, திருவாரூருக்கு செல்லும் வழியில் உள்ள ராமநாதீச்சரம் திருக்கோயில், குடந்தைக்கு அருகிலுள்ள பாபநாசம் போன்ற பல தலங்களில் சிவ பூஜை செய்துள்ளார் சக்ரவர்த்தி திருமகன். சென்னையில் விளிம்புப் புற நகரான போரூரிலும் ஸ்ரீராமநாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. தசரத நந்தனன் இவ்வழியே வரும்போது, இவ்விடம் இலுப்பைக் காடாக இருந்ததாம். அங்கே ஓரிடத்தில், பூமிக்கடியில் ...

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே......

Posted: 01 Jun 2014 05:43 AM PDT

பஞ்சத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு பையன் ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் ஐ.நா. சபை நடத்திய முகாம் ஒன்றுக்கு உணவுக்காக ஊர்ந்து செல்கிறான். இந்த பையன் எப்போது சாவான் நாம் சாப்பிடலாம் என்று பையனை தூக்கி செல்ல தயாராக அருகிலேயே பிணம் தின்னி கழுகு ஒன்று காத்திருப்பதையும் காணலாம். இந்த பையன் உயிர் பிழைத்தானா அல்லது கழுகுக்கு இரையானானா என்று யாருக்கும் தெரியாது. ஏனென்றால் இந்த போட்டோவை எடுத்த போட்டோகிராபரும், போட்டோ எடுத்த உடன் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார். இந்த படத்தை பார்த்ததும் ...

இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 01 Jun 2014 05:26 AM PDT

இறைவன் தந்த பரிசு ! நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் . 9486264022. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668 kavignareagalaivan@gmail.com நூல் ஆசிரியர் கவிஞர் ம .கதிர்வேல் அவர்கள் தச்சுத் தொழிலாளி. இவருக்கு மரத்தை செதுக்குவது மட்டுமல்ல சொற்களை செதுக்குவதும் கை வந்த காரணத்தால் கவிதை வடித்துள்ளார் .நூல் ஆசிரியருக்கும் ,பதிப்பாளர் இனிய நண்பர் ஏகலைவன் அவர்களுக்கும் பாராட்டுக்கள் .வாசகன் ...

கவித்தென்றல் ! நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 01 Jun 2014 05:25 AM PDT

கவித்தென்றல் ! நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் ! mail2mariammal@gmail.com நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வாசகன் பதிப்பகம் .11/96 சங்கிலி ஆசாரி நகர் .சன்னியாசி குண்டு சேலம் .636015. விலை ரூபாய் 35. செல் 9944391668kavignareagalaivan@gmail.com நூல் ஆசிரியர் கவிஞர் பி .மாரியம்மாள் அவர்கள் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி .உடலில் குறை இருந்தாலும் உள்ளத்தில் குறை இல்லாத காரணத்தால் ஆழ்ந்து சிந்தித்து கவிதை வடித்துள்ளார் .குடத்து விளக்காக இருந்த கவிஞர் பி .மாரியம்மாள் அவர்களின் ...

சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் திருவிழா

Posted: 01 Jun 2014 04:51 AM PDT

படம் சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் சிங்கம்புணரி.ஜூன்.1 : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருள்மிகு ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவிற்கு முன்னதாக காலையில் பூரனை புஷகலை உடனுறை ஸ்ரீ ...

மோடியின் முதலடிகள்!

Posted: 01 Jun 2014 04:37 AM PDT

தெற்காசிய நாடுகளின் (சார்க்) தலைவர்களை, தன் பதவியேற்பு விழாவுக்கு அழைத்து, மறுநாள் அவர்களுடன் தனி தனியாக பேச்சு நடத்தி, தான் ராஜ தந்திரி என்பதை, முதல் நாளிலேயே நிரூபித்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி. சில அயல்நாட்டு தலைவர்களுக்கு, இந்தியாவின் சில பகுதிகளில், எதிர்ப்பு இருந்தது. அவர்கள் நாடுகளிலும், சில அமைப்புகள் எதிர்த்தன. ஆனாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அல்லது கவலைப்பட்டதாக காட்டிக் கொள்ளாமல், அவர்கள் வந்தனர்; மகிழ்ந்தனர்; சென்றனர். வராமல் இருந்திருந்தால், அவர்கள் கெட்ட பெயர் சம்பாதித்திருக்க ...

தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் ஜி.மோகன்குமார் படுகாயம் அடைந்து வீர மரணம் அடைந்தார்

Posted: 01 Jun 2014 02:28 AM PDT

மணிப்பூர் மாநிலம் தியோகோத்தங், சுராசந்த்புர் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹவில்தார் ஜி.மோகன்குமார் படுகாயம் அடைந்து வீர மரணம் அடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் கோவை கொண்டு வரப்படுகிறது. முக்கிய பிரமுகர்கள், ராணுவ வீரர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் மாலையில் அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இந்தியாவுக்காக உயிர் துறந்த இந்த சகோதரனின் ஆன்மா சாந்தியடையவும் ...

பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி அதிரடி நடவடிக்கை

Posted: 01 Jun 2014 02:00 AM PDT

துடில்லி : முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையால், மத்திய அரசு பணிகள் வேகம் பிடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, காஸ் விலை நிர்ணயம், ஊழல் விவகாரங்கள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள், நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள், பெரிய அளவிலான ...

வாழ்வை இனிதாக்கும் மாயா ஏஞ்சலோவின் 10 பொன்மொழிகள்

Posted: 01 Jun 2014 01:19 AM PDT

வாழ்வை இனிதாக்கும் மாயா ஏஞ்சலோவின் 10 பொன்மொழிகள் ஏழு சுயசரிதைகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பல கவிதைத் தொகுப்புகள் என கடந்த 50 ஆண்டு காலமாக தனது எழுத்துகள் மூலமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர் மாயா ஏஞ்சலோ. மண்ணை விட்டுச் சென்ற அந்த மாய மனுஷி மனிதத்துக்காக விட்டுச் சென்றவை அனைத்தும் உன்னதப் படைப்புகள். இவ்வேளையில் அவரை நினைவுகூரும் வகையில், அவர் உதிர்த்தவற்றில் நம்மைச் செதுக்கக் கூடிய 10 பொன்மொழிகளின் தொகுப்பு இங்கே: 1. "மக்கள் நீங்கள் என்ன கூறினீர்கள் என்பதை மறந்துவிடுவர்; நீங்கள் ...

பிரதமர் அலுவலக பேஸ்புக் சாதனை

Posted: 01 Jun 2014 01:03 AM PDT

புதுடில்லி: நாட்டின் 15வது பிரதமராக நரேந்திரமோடி பதவி ஏற்ற பின்னர், கடந்த மே 27ம் தேதி, பிரதமர் அலுவகத்திற்கான பேஸ்புக் துவக்கப்பட்டது. இதுவரை, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இதில் கணக்கு துவக்கி உள்ளனர். இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவிற்கான அதிகாரி அன்கிதாஸ் கூறுகையில், 'இது எங்களை வியப்பளிக்க வைக்கிறது. மிக விரைவில் ஒயிட் ஹவுசின் பேஸ்புக் விரும்பிகளின் எண்ணிக்கையை, இந்திய பிரதமர் அலுவலக பேஸ்புக் கணக்கு மிஞ்சிவிடும் என எதிர்பார்க்கிறோம்,' என்றார். ஏற்கனவே, மோடிக்கு ...

ரமணியின் கவிதைகள்

Posted: 31 May 2014 11:08 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 31 May 2014 09:31 PM PDT

*
நிர்மலமான பரந்த ஆகாயம்
எண்ணங்கள் கடந்த மனம்
வார்த்தைகளற்ற மௌனம்.
*
விசும்பை எட்டும்
குசும்புப் பேச்சு
கலக மொழி.
*
யார் வெறுத்தாலும் சரி
என்னைக் கவரும் அழகு நிறம்
காக்கையின் கருமை.
*
சொல்லடி படுவான் மனிதன்
கல்லடி படுவான்
கனி தரும் மாமரம்.
*
குறைந்தால் குறைபடுவார்கள்
மிகுந்தால் சபிப்பார்கள்
மண்ணில் இறங்கும் மழை.
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™