Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


வெளியுறவுக் கொள்கையை வைத்து இந்திய எல்லைகளை மீட்பாரா புதிய பிரதமர்?

Posted:

புதுடில்லி : இந்தியா கிட்டதட்ட தனது எல்லைப்புற பாதுகாப்பை இழந்துள்ள நிலையிலேயே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வெளியுறவுக் கொள்கைகள் எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகளை முடக்கி வைத்து விட்டது. 2005ம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுஆயத ஒப்பந்த உடன்படிக்கைக்கு பிறகு, இந்தியா மற்ற நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களால் ஏராளமானற்றை இழந்துள்ளது. சமீபத்திய தேர்தலில் மோடியை முன்னிறுத்தி பா.ஜ., பெற்ற அமோக வெற்றி, நாட்டை நல்லதொரு ...

இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை

Posted:

இலங்கை விவகாரங்களைக் கவனிக்க, தன் நேரடி கண்காணிப்பின் கீழ், சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க, பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.நாட்டின், 15வது பிரதமராக, கடந்த மாதம், 26ம் தேதி மோடி பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவுக்கு வரும்படி, இலங்கை அதிபர் ராஜபக் ஷேக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். அதற்கு, தமிழகத்தில் உள்ள பா.ஜ., கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, மற்ற கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.இந்தப் பிரச்னையால், மோடி பதவியேற்பு விழாவை, முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்தார். பா.ஜ., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., தலைவர் வைகோ, அன்றைய தினம், டில்லியில், ...

'சார்க்' தலைவர்கள் பங்கேற்பு பிரதமர் மோடி பெருமிதம்

Posted:

புதுடில்லி : ''தே.ஜ., கூட்டணி அரசின் பதவியேற்பு விழாவுக்கு, தெற்காசிய கூட்டமைப்பான, 'சார்க்' நாடுகளின் தலைவர்களை அழைத்தது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு,'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிரதமராக பொறுப்பேற்ற பின், நரேந்திர மோடி, முதல் முறையாக, டில்லி, அசோகா சாலையில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.அங்கு, மோடி பேசியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். இதற்காக, இரவும், பகலும், அயராமல் உழைத்த கட்சி நிர்வாகிகளை பாராட்டுகிறேன். தேர்தலில் உறுதியளித்தபடி, திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ...

ஜூன் 1ல், 280 மெகாவாட் மின்பற்றாக்குறை: தமிழக அரசின் பெருமிதம் புஸ்...

Posted:

தமிழக காற்றாலைகளில், 2,030 மெகாவாட் மின் உற்பத்தி செய்தபோதும், நேற்று, 280 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டது.கடந்த, மே மாத இறுதியில், தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் அடைந்ததால், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தது. இதனால், 'ஜூன், 1 முதல், தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்யப்படும்' என, தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.ஜூன், 1ம் தேதியான, நேற்றைய மின்தேவை, 10,780 மெகாவாட் ஆக இருந்த நிலையில், தெர்மல் மற்றும் காற்றாலைகள் கைகொடுத்த போதிலும், மொத்தம், 10,500 மெகாவாட், மின்சாரமே வினியோகம் செய்யப்பட்டது. இதனால், 280 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டது. ...

தமிழக அரசின் இட்லி, பொங்கல் வியாபாரம் விஸ்தரிப்பு: 360 'அம்மா' உணவகங்கள் திறக்க முதல்வர் உத்தரவு

Posted:

சென்னை: சென்னையில், 200 உட்பட, தமிழகம் முழுவதும், 360 'அம்மா' உணவகங்களை திறக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், தமிழக அரசின், இட்லி, பொங்கல் வியாபாரம் விஸ்தரிக்கப்படுகிறது.இது தொடர்பாக, முதல்வர் ஜெ., வெளியிட்டுள்ள அறிக்கை:மலிவு விலையில் தரமான உணவு வழங்க, 2013 பிப்., 19ல், 15 அம்மா உணவகங்கள் சென்னையில் திறக்கப்பட்டன.அதன்பின், இத்திட்டம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 200 வார்டுகளுக்கும் விரிவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில், 203 உணவகங்கள், மதுரை மாநகராட்சியில், 11, மற்ற மாநகராட்சிகளில் தலா, 10 என, 294 அம்மா உணவகங்கள், தற்போது செயல்பட்டு ...

வருமான வரி செலுத்துவோருக்கு ஏராள எதிர்பார்ப்பு: வழங்குவாரா பிரதமர் மோடி என காத்திருப்பு

Posted:

புதுடில்லி:நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில், அமோக வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள, பா.ஜ.,வின், பிரதமர் நரேந்திர மோடியிடம், நாட்டு மக்கள் பலதரப்பினரும், பல விதமான எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர். அவற்றில், சாதாரண நடுத்தர மக்கள் என்ற பிரிவில் வரும், மாத சம்பளதாரர்களின், வருமான வரி எதிர்பார்ப்புகள், சற்று அதிகமாகவே உள்ளன.அவையாவன:* வருமான வரி விலக்கு உச்சவரம்பை, தற்போதுள்ள, ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் என்ற அளவிலிருந்து, குறைந்தபட்சம், ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது, சம்பளதாரர்களின் முக்கிய எதிர்பார்ப்பு. ...

விளம்பரத்துக்கு ரூ.187 கோடி வீண்

Posted:

புதுடில்லி:'பாரத் நிர்மாண்' விளம்பரத்துக்காக, காங்., தலைமையிலான, முந்தைய மத்திய அரசு, 187 கோடி ரூபாய் செலவழித்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மக்களின் ஆதரவை பெறுவதற்காக, இரண்டு ஆண்டுகளாகவே, காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு, அதிக அளவில் விளம்பரங்களை வெளியிட்டது.'தேர்தல் அறிவிப்பு வெளியாகும் வரை, 'பாரத் நிர்மாண்' என்ற பெயரில் அதிக அளவில் விளம்பரங்கள் வந்தன இதற்காக செலவிடப்பட்ட தொகை குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கேட்கப்பட்டிருந்தது.இதற்கு, மத்திய விளம்பரத்துறை இயக்குனரகம் அளித்து உள்ள ...

தி.மு.க., உயர்நிலை கூட்டத்தில் மாவட்ட செயலர்கள் ராஜினாமா?

Posted:

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில், 217 தொகுதிகளில், அ.தி.மு.க., முன்னிலை பெற்றது. திருவாரூர், பாளையங்கோட்டை, ஆத்தூர், கடலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் மட்டுமே தி.மு.க.,வும் மீதமுள்ள 13 சட்ட சபை தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி முன்னிலையும் பெற்றது. இப்படி நுணுக்கமான புள்ளி விவரங்களை வைத்து, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம், அறிவாலயத்தில், இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.அக்கூட்டத்திற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைவம வகிக்கிறார். கூட்டத்தில் பேசும் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின், ...

மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்:பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

Posted:

சென்னை:'இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட, 33 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதிஉள்ளார்.அவரின் கடித விவரம்:தமிழகத்தில், 45 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்து, மீன் பிடிக்கச் சென்ற, 33 அப்பாவி மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்; ஏழு படகுகளும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.67 தாக்குதல் சம்பவம்கடந்த மூன்றாண்டுகளில், 76 சம்பவங்களில், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், கைது செய்யப்பட்டுள்ளனர். 67 சம்பவங்களில், தமிழக மீனவர்கள் மீது, தாக்குதல் நடத்தி ...

ஆங்கில வழி வகுப்பு துவங்க நெருக்கடி: புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது திணிப்பு

Posted:

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக, ஆங்கில வழி வகுப்பு துவங்க தலைமை ஆசிரியருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆங்கில புலமை இல்லாத ஆசிரியர்கள் மீது, ஆங்கிலம் திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், மாணவரின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், அரசின் ஆங்கில வழித்திட்டம் முழுமையடையாத நிலை ஏற்பட்டுள்ளது.ஐந்து ஆங்கில வழி பள்ளிஅரசு பள்ளிகளில் மாணவரின் சேர்க்கை நாளுக்கு நாள் சரிந்து வரும் நிலையில், 2011ம் ஆண்டு முதல், தமிழகத்தின் ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா ஐந்து ஆங்கில வழி பள்ளி துவங்கப்பட்டு, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™