Tamil Star |
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் சானியா ஜோடி!
- சூதாட்ட புகாரிலும் சிக்காமல் இருக்க வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ராகுல் டிராவிட் அட்வைஸ்!
- நைஜீரிய போகோ ஹாரம் பயங்கரவாதிளால் இளம்பெண்களை மீட்கும் பணியில் சீனா!
- புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தை: உடலை எடுத்துவர உதவிக்கரம் நீட்டிய பெண் தொழிலாளர்கள்!
- இடைக்கால நிர்வாகசபை முறையை அமுல்படுத்த தமிழத் தேசியக் கூட்டமைப்பின் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பு!
- உள்நாட்டு ஆயுதங்களுடன் ஒருவர் கைது!
- நியூஸிலாந்து புதிதாக இலங்கை உட்பட்ட 14 நாடுகளுடன் வான்வெளி உடன்படிக்கை!
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு!
- போதை மருந்து கடத்தல்காரர்கள் கனடா- குவிபெக்கில் கைது!
- ஒன்றாரியோ மாகாண தேர்தல் பிரச்சாரம்!
- தொலைபேசி பயன்படுத்துவதை குளியலறையில் ஏன் நிறுத்த வேண்டும்?
- தமிழ் பாடல் ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்தது! இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்!
- குத்து பாடலுக்கு நடனம் ஆடுகிறார் ஆண்ட்ரியா!
- தாய்மார்களுக்கு பூண்டு அவசியம்
- நாவல் பழத்தின் சுவை!
- ஆப்கானிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து ராணுவ வீரர் உடல் வருகை!
- வித்யா பாலனுக்கும் கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும் பிரச்சனை! இடையே புகுந்த புதுமுக நடிகை?
- மைத்திரிபால சிறிசேனவின் விட்டுக் கொடுத்ததால் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ!
- வீர மரணடைந்த முகுந்த் வரதராஜன் தன் குழந்தைக்கு வீரத்தை ஊட்டி நெகிழ வைத்த காட்சி!
- முதன் முதலாக மீன் பிடிக்கும் பெண் ஏற்படுத்தும் அளவற்ற ஆர்ப்பாட்டம்!
| மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் சானியா ஜோடி! Posted: 07 May 2014 11:59 PM PDT
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது. முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடக்கிறது. இதில், மகளிர் இரட்டையர் பிரிவு 2ம் சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, சீன தைபேயின் சான், ரஷ்யாவின் ஸ்யீப்பர்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சானியா ஜோடி 6-4, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முன்னேறியது. ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் நம்பர்-1 வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், சீனாவின் சுவாய் பெங்கை எதிர்த்து விளையாடினார். இதில் செரினாவின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாத பெங்க் 2-6, 3-6 என்ற செட்களில் விரைவிலேயே தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சூதாட்ட புகாரிலும் சிக்காமல் இருக்க வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: ராகுல் டிராவிட் அட்வைஸ்! Posted: 07 May 2014 11:55 PM PDT
ஐபிஎல் தொடரில் எந்த சூதாட்ட புகாரிலும் சிக்காமல் இருக்க வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்' என ராகுல் டிராவிட் அறிவுரை வழங்கி உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக உள்ள ராகுல் டிராவிட் அகமதாபாத்தில் நேற்று அளித்த பேட்டி: ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் இதுவரை எந்த சூதாட்ட சர்ச்சையும் எழவில்லை. ஆனாலும், வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லா தருணத்திலும் கண்ணையும், காதையும் கூர்தீட்டி வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், கிரிக்கெட் விளையாட்டை சீர்கெட வைக்க சிலர் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சதியில் வீரர்கள் சிக்கிக் கொள்ளாமல் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ராஜஸ்தான் அணியில் உள்ள மும்பையை சேர்ந்த தாம்பே தனது 42வது வயதிலும் சாதித்து வருகிறார். 20 ஆண்டாக இவர் போராடிய பிறகு இவரது திறமை வெளிப்பட்டுள்ளது. இதுபோல, பல திறமைசாலிகள் இந்தியாவில் கவனிக்கப்படாமலேயே இருக்கிறார்கள். இவ்வாறு டிராவிட் கூறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நைஜீரிய போகோ ஹாரம் பயங்கரவாதிளால் இளம்பெண்களை மீட்கும் பணியில் சீனா! Posted: 07 May 2014 11:48 PM PDT
நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இளம் பெண்களை மீட்கும் பணியில் நைஜீரியாவுக்கு உதவ சீனா, பிரிட்டன் நாடுகள் முன்வந்துள்ளன. நைஜீரிய நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் சுமார் 300 இளம் பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டனர். அவர்களை, பாலியல் தொழிலுக்கு விற்கப்போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். இந்நிலையில், இளம் மாணவிகளை மீட்கும் பணியில் உயர் தொழில்நுட்ப உதவிகளை செய்ய உள்ளதாக சீனா மற்றும் பிரிட்டன் நாடுகள் தெரிவித்துள்ளனThis posting includes an audio/video/photo media file: Download Now |
| புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தை: உடலை எடுத்துவர உதவிக்கரம் நீட்டிய பெண் தொழிலாளர்கள்! Posted: 07 May 2014 11:41 PM PDT
புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தையின் பூதவுடலை அங்கிருந்து வன்னிக்கு எடுத்துவர பெண் தொழிலாளர்கள் உதவிக்கரம் நீட்டி முன்னுதாரணமாகியுள்ளனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் யாழ் மாவட்டத் தளபதிகளுள் ஒருவராக இருந்தவர் மகேந்தி. அவருட்பட மூன்று பேர் குடும்பத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை. அனைவரும் மாவீரர்களே. இந்நிலையில் அவர்களது சகோதரனான யோகேந்திரன் தனது குடும்பத்துடன் வன்னியில் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் அவரது மகளான தமிழ்மதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு சென்று மருத்துவ சிகிச்சையினைப்பெற போதிய பணவசதியின்மையினாலேயே அக்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரச அம்புலன்ஸ் மூலம் கொழும்புக்கு சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்ட இக்குழந்தை தற்போது உயிரிழந்துள்ளது. எனினும் பூதவுடலை வன்னிக்கு எடுத்துவர பணமின்மையால் கடந்த சில நாட்களாக கொழும்பில் பிரேத அறையில் அச்சிறு குழந்தையினது பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது. சம்பவம் பற்றி அறிந்த கிளிநொச்சியிலுள்ள தனியார் ஆடை தையற் தொழிற்சாலை பெண்பணியாளர்கள் இணைந்து திரட்டி வழங்கிய பணத்தை அடுத்து பூதவுடல் சொந்த இடத்திற்கு நேற்று எடுத்துவரப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் யுத்த அவலங்களை தாங்கிய பெண் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 07 May 2014 11:32 PM PDT
இடைக்கால நிர்வாகசபை முறைமையை அமுல்படுத்துவது என்ற தமிழ்த தேசியக் கூட்டமைப்பின் திட்டத்திற்கு அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இடைக்கால நிர்வாகசபை முறைமையை அமுல்படுத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும், இந்த முயற்சிக்கு ஒரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது. சுயாட்சி கோரும் முனைப்பின் ஒர் கட்டமாக மீண்டும் ஆயுதமேந்தி வன்முறைகளில் ஈடுபட அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மீண்டும் நாட்டை பயங்கரவாதத்திற்கு நகர்த்த முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உள்நாட்டு ஆயுதங்களுடன் ஒருவர் கைது! Posted: 07 May 2014 11:19 PM PDT
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களுடன் ஒருவரை போலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். வெலிகந்த மஹாவலிதென்ன சிங்கப்புரஎ என்னும் இடத்தில் வைத்து சந்தேக நபரை போலிஸார் கைது செய்துள்ளனர். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. வெலிகந்த போலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று பொலனறுவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக போலிஸார் தெரிவிக்கின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நியூஸிலாந்து புதிதாக இலங்கை உட்பட்ட 14 நாடுகளுடன் வான்வெளி உடன்படிக்கை! Posted: 07 May 2014 11:02 PM PDT
நியூஸிலாந்து புதிதாக இலங்கை உட்பட்ட 14 நாடுகளுடன் வான்வெளி உடன்படிக்கைகளை செய்து கொள்ளவுள்ளது. இலங்கையை தவிர பின்லாந்து சவூதி, எத்தியோப்பியா, ஷம்பியா போன்ற நாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன. இதனையடுத்து நியூஸிலாந்தின் வர்த்தகத்துக்கு பாரிய வழி திறந்துவிடப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் கெரி பிரௌன்லி தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸுடன் செய்துக்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையின்படி நியூஸிலாந்தின் நேரடி விமானங்கள் இலங்கைக்கு சேவைகளை மேற்கொள்ளும் என்று பிரௌன்லி குறிப்பிட்டுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு அவசர அழைப்பு! Posted: 07 May 2014 10:54 PM PDT
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாளையதினம் அவசர சந்திப்பு ஒன்றுக்கு அழைத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்து ஆராயவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனாதிபதி தமது கட்சி மட்டத்தில் எதிர்வரும் தேர்தல்கள் குறித்து கலந்தாலோசனைகளை நடத்தி வருகிறார். குறிப்பாக கடந்த மேல் மற்றும் தென்மாகாண சபை தேர்தல்களின் போது ஆளும் கட்சிக்கு பின்னடைவுகள் ஏற்பட்டன.இதனை சரிசெய்துக்கொள்வற்கான காரணிகள் அரசாங்கத்திடம் இல்லை. நாட்டில் வீதி அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் பொருட்களின் விலையுயர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். இதுவே ஆளும் கட்சிக்கான வாக்கு பின்னடைவுக்கான காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே மக்களை திருப்திபடுத்த உடனடியாக முடியாதநிலையில் தேர்தலை நடத்தி ஆட்சியை மேலும் 4 வருடங்களுக்கு தக்கவைத்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது. இதன் அடிப்படையில் எதிர்வரும் ஊவா மாகாணசபை தேர்தலை எதிர்வரும் அக்டோபருக்குள் நடத்தி அதில் வரும் முடிவுகளை மையமாகக் கொண்டு எதிர்வரும் டிசம்பருக்குள் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வதா? அல்லது பொதுத்தேர்தலுக்கு செல்வதா? என்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்து வருகிறார். எனினும் ஜனாதிபதி தேர்தலை நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அரசாங்கத்தை தக்கவைப்பதில் பிரச்சினைகள் இருக்கப் போவதில்லை என்ற நம்பிக்கை ஜனாதிபதிக்கு உள்ளது. எனவே தமது கருத்துக்களை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கையாக்கிக் கொள்ளும் வகையிலேயே தற்போது கட்சி தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| போதை மருந்து கடத்தல்காரர்கள் கனடா- குவிபெக்கில் கைது! Posted: 07 May 2014 10:45 PM PDT
குவிபெக் மாகாணத்தில் பாரிய கடத்தல்காரர்களின் கும்பல் ஒன்று போலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறிப்பாக செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்ற என அழைக்கப்படுகின்ற போதை மருந்து கடத்தல் சம்பந்தமாக 69 போர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனத் தெரிவருகிறது. புதன்கிழமை போலிசாரினால் பாரியளவில் நடாத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது குறிப்பிட்ட கடத்தல்காரர்கள் சிக்கியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இந்தக் கும்பல் கைப்பற்றப்பட்டபோது போதைப்பொருள் மட்டுமல்ல காசு, ஆயுதங்கள், வாகனங்கள். மற்றும் திருடப்பட்ட வள்ளம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கைது முயற்சியானது போலிசாரின் கூட்டு முயற்சியின் விழைவாக ஏற்பட்ட நிகழ்வு எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக 650ற்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பங்கெடுத்திருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. இந்த முயற்சியானது ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட செயல் எனவும் போலிசார் தெரிவித்திருக்கின்றார்கள். அகப்பட்டுக்கொண்ட கடத்தல்காரர்கள் 5 வேறுபட்ட குழுக்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஒன்றாரியோ மாகாண தேர்தல் பிரச்சாரம்! Posted: 07 May 2014 10:36 PM PDT
ஒன்றாரியோ மாகாணத்தில் உத்தியோகபூர்வமாகத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் வைன் கத்லீனால் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டவுடன் தேர்தலுக்கான பரப்புரைகள் ஆங்காங்கே ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன. யூன் மாதம் 12ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்சமயம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனக் கனடியன் பிறஸ் என அழைக்கப்படுகின்ற செய்தித் தாபனமானது தகவல் வெளியிட்டுள்ளது. ஒன்றாரியோவில் 3 முக்கியமான கட்சிகளின் தலைவர்கள் கடந்த கிழமையிலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள் வைன் கத்லீன் கிச்சினர் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது லிபரலுக்கு சாத்திக் கூறுகள் அதிகமாகவுள்ளன எனத் தெரிவித்திருக்கின்றார். மேலும் வைன் குறிப்பிடுகையில் கொன்சவேட்டிவ் கட்சியினது போக்கிலிருந்து போக்குவரத்து எவ்வளவு முக்கியமானது என்பதை அவர்கள் விழங்கிக்கொள்ளவில்லையெனத் தெரியவருகிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு லிபரல் ரொறன்ரோவின் பொருளாதார வளர்ச்சியைக் குறித்த திட்டங்களை லிபரல் வைத்திருக்கின்றது எனப் பத்திரிகையாளர் மத்தியில் தெரிவித்திருக்கின்றார். Progressive Conservative கட்சியின் தலைவரான Tim Hudak மிசசாக்காவிலுள்ள பல தொழில் நிறுவனங்களுக்கு விஜயம் செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. Tim Hudak மிசசாக்காவில் பத்திரிகை நிருபர்களிடம் தான் ஒன்றாரியோவில் பணியாற்றுவதற்கான திட்டங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார் எனத் தெரியவருகிறது. இவற்றைத் தெடார்ந்து மற்றைய இரு தலைவர்களும் தாம் தமது தனிப்பட்ட விருப்பு சம்பந்தமாகப் போட்டியிட முன்வந்ததாத் தெரிவித்திருக்கின்றார்கள். NDP கட்சியினது தலைவரான Andrea Horwath ரொறன்ரோ குயின்ஸ் பாக்கிலும், ஆகிய இரு இடங்களில் நிகழ்வுகளை நடாத்தியிருக்கின்றார் எனத் தெரிகிறது. அத்துடன் இன்று Nigara Falls ல் மாலை 3:30க்கு நிகழ்வ ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது எனத் தெரியவருகிறது. அத்துடன் பேசுகையில் தான் தொழில் மற்றும் நிதி விடையங்கள் பற்றிய சம்பவங்களில் பாதிக்கப்படுகின்ற ஒன்றாரியோ குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவம் தெரிவித்திருக்கின்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொலைபேசி பயன்படுத்துவதை குளியலறையில் ஏன் நிறுத்த வேண்டும்? Posted: 07 May 2014 10:28 PM PDT
ஹமில்ரன் புனித ஜோசப் சுகாதார பராமரிப்பு நிறுவன தொற்று நோய் கட்டுப்பாட்டு மேலாளர் ஆன் பயலாசோவ்ஸ்கி உலக கை சுகாதார தினத்தின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஸ்மாட்போன்கள் மற்றும் ரப்லெட்கள் போன்றவற்றை புனித ஜோசப்பில் பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனையில் சில சாதனங்கள் மேலதிக அழுக்கானவைகளாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குளியலறைக்குள் வைக்கப்பட்டிருந்த ஸ்மாட்போன்கள், ரப்லெட்களில் கரிம பொருட்களின் அளவை கணக்கிடும் சோதனை செய்யப்பட்ட போது அவைகளில் பெருமளவிலான நுண்ணுயிரகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை மலத்திரவம் மற்றும் இ.கோலி போன்ற எதிலிருந்தாவது வந்திருக்கலாமெனவும் இது காய்ச்சலை ஏற்படுத்துகின்ற வைரஸ் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் குளியலறைக்கு உங்கள் தொலைபேசிகளை எடுத்துச் செல்வது அவ்வளவு சிறந்ததல்ல என அவர் தெரிவித்துள்ளார். சோதனையின் ஒரு தூய்மையான வாசிப்பு 30-மதிப்பெண் என்றும் புனித ஜோசப்பில் சோதிக்கப்பட்ட சில கருவிகள் 100-ற்கும் மேற்பட்ட ஸ்கோர்களை காட்டியதாகவும், ஒருவரின் கைத்தொலைபேசி 400-ஸ்கோர்களை காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கையடக்க கருவிகளின் எந்த பாகங்களில் நோய்க்கிருமிகள் பரவுகின்றன என்பது உறுதியாக கூற முடியாதென கூறப்பட்டுள்ளது. London School of Hygiene and Topical Medicine. மற்றும் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் பிரகாரம் பிரித்தானியாவில் 6-ற்கு-1 மொபைல் போன் இ.கோலி என்ற பக்ரீரியாவினால் மாசுபடுத்தப் பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மல பக்டீரியா மற்றும் காய்ச்சல் வைரஸ்கள் ஒருவரின் கைகளிலும், மேற் பரப்புகளிலும் நீண்ட நேரம் தங்கி இருக்க கூடியவை என்று கூறப்பட்டுள்ளது. கிளொஸட்ரீடியம் எனப்படும் கிருமி கருவிகளில் நாட்கணக்கில் உயிருடன் இருக்க கூடியது என ஆன் தெரிவித்துள்ளார். பத்திரிகை, மகசின் போன்றவற்றை மாற்று பொருட்களாக குளியலறையில் உபயோகிக்க விரும்பாது தங்கள் தொலைபேசியை உபயோகிக்க விரும்புபவர்கள் அவர்களது கைகளை கழுவியபின்னர் துணியால் துடைக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆனால் இரசாயனப் பொருட்கள், ஸ்பிரேகளை விலக்கி வைக்கும் படி- இவைகள் எலக்ரோனிக் வகைகளிற்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ் பாடல் ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்தது! இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்! Posted: 07 May 2014 03:45 AM PDT
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல் ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்தது. ஹாலிவுட் படம் மில்லியன் டாலர் ஆர்ம் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இப்படத்தில் 90களில் தான் இசை அமைத்த தமிழ் பட பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது அப்பாடல் பற்றி அறிவித்திருக்கிறார். என் சுவாச காற்றே என்ற படத்தில் உன்னிகிருஷ்ணன், சித்ரா இணைந்து பாடிய, திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள்போல் என்ற பாடல்தான் ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்திருக்கிறது. மைதானம் ஒன்றில் இரண்டு சிறுவர்கள் ஓடுவதுபோல் வரும் சூழலின் பின்னணியில் இப்பாடல் ஒலிப்பதுபோல் படத்தில் இடம்பெறுகிறது. தமிழில் எவ்வாறு ஒலிப்பதிவு செய்யப் பட்டு படத்தில் இடம்பெற்றதோ அதிலிருந்து இசை மற்றும் பாடல் வரிகளில் எந்தவொரு மாற்றமும் செய்யாமல் தமிழிலேயே இப்பாடல் படத்தில் ஒலிக்கும் என்றார் ரஹ்மான். தமிழில் தற்போது காவியத் தலைவன் படத்திற்கு இசை அமைத்து வருகிறார். அத்துடன் ரஜினி நடிக்கும் லிங்கா படத்துக்கும் இசை அமைக்கிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| குத்து பாடலுக்கு நடனம் ஆடுகிறார் ஆண்ட்ரியா! Posted: 07 May 2014 03:39 AM PDT
குத்து பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக் கொண்டார் ஆண்ட்ரியா. விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் பூஜை. ஹரி டைரக்டு செய்கிறார். கமலின் விஸ்வரூபம் படத்துக்கு பிறகு ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. ஒன்றிரண்டு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். குத்து பாடலுக்கு நடனம் ஆடியது இல்லை. முதன்முறையாக பூஜை படத்தில் குத்துபாடலுக்கு நடனம் ஆடுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடலுக்கு ஆட பெரிய நடிகையை பட குழு தேடியது. படத்தில் இது விஷாலின் ஓபனிங் பாடலாக இடம்பெறுகிறது. இதில் ஆடுவதற்கு ஆண்ட்ரியா ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த வாரம் ஷூட்டிங் நடக்கிறது. இதற்காக சென்னையில் மார்க்கெட் செட் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தாய்மார்களுக்கு பூண்டு அவசியம் Posted: 07 May 2014 03:31 AM PDT
குழந்தை பெற்ற பெண்கள் தினமும் சத்தான அதே சமயம் உடலுக்கு ஒத்துக் கொள்ளும் உணவை தேர்வு செய்து உண்ண வேண்டும். குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பதால் பால் சுரப்பதற்கு உதவும் உணவுகளையும் அதிகமாக உண்ண வேண்டும். எனவே தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப் பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு. சுறா போன்ற மீன்களுடன் அதிகமாக பூண்டை போட்டு புட்டு செய்து பிள்ளை பெற்றவர்களுக்குத் தருவார்கள். இதுவும் பால் சுரப்பதற்கு உதவி செய்யும். தசைவலி இருக்கும் இடத்தில் பூண்டை நசுக்கி வைத்துக் கட்டினால் வலி சீக்கிரம் குறையும். உடம்பில் கொழுப்பு சேரவிடாமல் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. இதனால்தான் பிள்ளை பெற்ற பெண்களுக்கு தலைக்கு ஊற்றும் போது நல்லெண்ணையைக் காய்ச்சி அதில் பூண்டு போட்டு அந்த எண்ணெயை தேய்த்து உடல் முழுவதும் மசாஜ் செய்கின்றனர். பூண்டிற்கு இத்தகைய மருத்துவ குணம் இருப்பதால் பிள்ளை பெற்ற பெண்கள் பூண்டினை ஏராளமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 07 May 2014 03:23 AM PDT
நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நீரிழிவு நோய்: நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும். ரத்தப்போக்கு: பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம். சிறுநீர் எரிச்சல்: சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும். பேதி: நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம். தொண்டைப் புண், தொண்டை அழற்சி: 10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும். பிற பயன்கள்: * நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு. * தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும். * நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு. * நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு. * இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆப்கானிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து ராணுவ வீரர் உடல் வருகை! Posted: 07 May 2014 03:16 AM PDT
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து ராணுவ வீரர் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். அவரது உடல் லண்டன் கொண்டு வரப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்தவர் கிஷோர் சவுகான். தொழில் அதிபரான இவர் நீண்ட வருடங்களுக்கு முன்பே இங்கிலாந்தில் குடியேறிவிட்டார். இவரது மகன் ராகேஷ் சவுகான் (29). இங்கிலாந்து விமான படையில் விமானியாக பணிபுரிந்து வந்தார். கடந்த ஏப்ரல் 26ம் தேதி தனது சக அதிகாரிகள் 4 பேருடன் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அப்போது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 50 கிமீ தொலைவில் கந்தகாருக்கு அருகே தக்தாபுல் மாவட்டத்தின் மேலே பறந்த போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் சென்ற ராகேஷ் சவுகான் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து விசாரணை நடத்த இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் பலியான ராகேஷ் சவுகான் உள்ளிட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டு இங்கிலாந்துக்கு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று ராகேஷ் சவுகானுக்கு லண்டனில் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. ராகேஷ் தனது சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் பணிபுரிய ஆர்வமாக இருந்தார். இறுதியில் நாட்டிற்காக உயிர் நீத்தார் என அவரது தந்தை கிஷோர் சவுகான் தெரிவித்தார். ராகேஷூக்கு கதே மெட்டில்டன் என்ற மனைவியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வித்யா பாலனுக்கும் கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும் பிரச்சனை! இடையே புகுந்த புதுமுக நடிகை? Posted: 07 May 2014 03:09 AM PDT
நடிகை வித்யா பாலனுக்கும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே பிரச்சனையாக உள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. பாலிவுட் நடிகை வித்யா பாலன் தயாரிப்பாளர் சித்தார்த் ராய் கபூரை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் வித்யாவுக்கு மவுசு குறையவில்லை. அவர் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். வித்யா கடந்த சில மாதங்களாக புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. தாயாக மனதளவில் தான் இன்னும் தயாராகவில்லை என்றும், தான் கர்ப்பமாக இல்லை என்றும் வித்யா தெரிவித்தார். வித்யா தனது படவேலைகளில் பிசியாக வெளியூர், வெளிநாடு என்று சென்று கொண்டிருந்த வேளையில் சித்தார்த்துக்கும் ஒரு புதுமுக நடிகைக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாம். சித்தார்த்தின் புது நட்பு பற்றி அறிந்த வித்யா தனது வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வீட்டில் இருந்து அவரை கண்காணித்து வருகிறாராம். புதுமுக நடிகை விவகாரம் தொடர்பாக சித்தார்த்துக்கும், வித்யாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறதாம். வித்யாவின் திருமண வாழ்வில் பிரச்சனை என்று கூறப்படும் நேரத்தில் அவர் அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார். சித்தார்த் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தானவர். தனது பால்யகால தோழியை முதலில் மணந்த சித்தார்த் அவரை பிரிந்த பிறகு 2008ம் ஆண்டில் பெண் தயாரிப்பாளர் ஒருவரை மணந்தார். அந்த பெண் தயாரிப்பாளருக்கும், சித்தார்த்துக்கும் கடந்த 2011ம் ஆண்டு விவாகரத்து ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மைத்திரிபால சிறிசேனவின் விட்டுக் கொடுத்ததால் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ! Posted: 07 May 2014 03:00 AM PDT
மைத்திரிபால சிறிசேனவின் விட்டுக் கொடுப்பின் காரணமாகவே பிரதமர் பதவி மஹிந்த ராஜபக்ஷவைத்தேடி வந்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் 47 வருட கால அரசியல் வாழ்க்கை மற்றும் 25 வருடகால பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் கௌரவிக்கும் வகையில் பொலன்னறுவையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ராஜித சேனாரத்தின மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளின் பின் அனுர பண்டாரநாயக்க, லக்ஷ்மன் கதிர்காமர், ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரின் பெயர்களோடு மைத்திரிபாலவின் பெயரும் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது. அப்போது கட்சியில் பெரும்பாலானவர்களின் ஆதரவு மைத்திரிபால சிறிசேனவுக்கே இருந்தது. அதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பொலன்னறுவைக்கு ஹெலிகொப்டர் ஒன்றை அனுப்பினார். உடனடியாக கொழும்பு வந்து பிரதமர் பதவியைப் பொறுப்பெடுக்க தயாராகுமாறும் மைத்திரிபாலவுக்கு தகவல் அனுப்பினார். ஆனால் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதனை மறுத்துவிட்டார். மேலும் அந்தப் பதவிக்கு பொருத்தமானவர் மஹிந்த ராஜபக்சதான், அவரையே நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றும் பெருந்தன்மையாக கூறிவிட்டார். அத்துடன் ஆளுனர் அலவி மௌலானா தனிப்பட்ட முறையில் சந்திரிக்காவுக்கு அளித்த நெருக்குதல் என்பன எல்லாம் சேர்ந்து தான் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கியது. அந்த வகையில் தன்னைத் தேடி வந்த பதவி, அதிகாரத்தை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்த பரந்த மனப்பான்மை கொண்டவர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன. அவரது தியாக குணம் இன்றைய அரசியல்வாதிகள் யாரிடமும் இல்லை என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன பாராட்டியுள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| வீர மரணடைந்த முகுந்த் வரதராஜன் தன் குழந்தைக்கு வீரத்தை ஊட்டி நெகிழ வைத்த காட்சி! Posted: 07 May 2014 02:49 AM PDT |
| முதன் முதலாக மீன் பிடிக்கும் பெண் ஏற்படுத்தும் அளவற்ற ஆர்ப்பாட்டம்! Posted: 07 May 2014 02:45 AM PDT |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















