Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கர்நாடகத்தில் இருந்து ப.சிதம்பரம் மேல்சபை எம்.பி. ஆகிறார்

Posted: 07 May 2014 11:16 PM PDT

கடந்த பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் இருந்து ப.சிதம்பரம் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய மந்திரி ஆனார். இந்த முறை அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வில்லை. அதற்கு பதிலாக அவர் தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சிவகங்கை தொகுதியில் களமிறக்கியுள்ளார். இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து பாராளுமன்ற மேல்சபை

மோடி மனைவிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு?: மத்திய பாதுகாப்பு படை ஆய்வு

Posted: 07 May 2014 11:05 PM PDT

பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக நடத்தப்பட்டு வரும் தேர்தல் இறுதியை எட்டி உள்ளது. அடுத்த வாரம் 16–ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவி ஏற்பார் என்றும் கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு எந்தெந்த தலைவர்களுக்கு எத்தகைய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று

முன்னாள் பிரதமர்களுக்கு இலவச மின்சாரம்: புதிய சட்டம் அமல்

Posted: 07 May 2014 11:00 PM PDT

பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் வேறு வீட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறும் அவர் மோதிலால் நேரு மார்க்கில் உள்ள ஷீலாதீட்சித் வீட்டில் தங்க உள்ளார். தற்போது அந்த வீடு சீரமைக்கப்பட்டு

மோடி ஒரு குரங்கு: மம்தா பானர்ஜி கடும் தாக்கு

Posted: 07 May 2014 10:45 PM PDT

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் புதுமையான அணுகு முறையை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடை பிடித்து வருகிறார். அவர் எந்த மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு சென்றாலும், ஒன்று அம்மாநிலத்தின் முக்கிய பிரச்சினையை கையில் எடுக்கிறார். அல்லது அம்மாநில முக்கிய தலைவரின் தவறுகளை கடுமையாக விமர்சித்து பேசுகிறார்.

விசாகப்பட்டினம் அருகே ஓட்டுப்பதிவு எந்திரத்துக்கு தீவைத்த நக்சலைட்டுகள்

Posted: 07 May 2014 10:40 PM PDT

சீமாந்திராவில் நேற்று நடந்த தேர்தலில் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. ஒரு சில இடங்களில் தெலுங்குதேசம் கட்சி தொண்டர்களுக்கும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை விரட்டியடித்தனர்

வாரணாசியில் ராகுல் சனிக்கிழமை பிரசாரம்

Posted: 07 May 2014 10:35 PM PDT

பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வதோதரா, வாரணாசி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வதோதரா தொகுதியில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. வாரணாசி தொகுதியில் வரும் 12–ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் களம் இறங்கியுள்ளார். காங்கிரஸ் சார்பில் உள்ளுர்

சீமாந்திராவில் தெலுங்குதேசம் ஆட்சியை பிடிக்கும்: சந்திரபாபுநாயுடு பேட்டி

Posted: 07 May 2014 10:28 PM PDT

சீமாந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது. தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த மாவட்டத்தில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஓட்டு பதிவு குறித்து சந்திர பாபுநாயுடு கூறியதாவது:– தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ரவுடிகள் போல் செயல்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷன் இதனை கண்டு கொள்ளவே

சீமாந்திராவில் ஆட்சி அமைக்க கூட்டணி அமைப்போம்: ஜெகன்மோகன் பேட்டி

Posted: 07 May 2014 10:22 PM PDT

ஆந்திராவில் 2–வது கட்டமாக சீமாந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. மாநிலத்தில் சராசரியாக 80 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. இது கடந்த பொது தேர்தலை விட அதிகமாகும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான புலிசெந்தலாவில்

எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவ முடிவு: நிதீஷ்குமார் அரசு கவிழும் அபாயம்

Posted: 07 May 2014 10:21 PM PDT

பீகாரில் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டதையடுத்து பீகாரில் பா.ஜனதாவுடன் இருந்த கூட்டணியை முதல்–மந்திரி நிதீஷ்குமார் முறித்துக்கொண்டார். இதனால், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள்

திருவனந்தபுரத்தில் கனமழை: 245 வீடுகள் இடிந்தன

Posted: 07 May 2014 10:12 PM PDT

கேரளாவில் கடந்த 20 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கேரள அருகே அரபிக் கடலுக்கு நகர்ந்தது. இதனால் கேரளாவில் மழை கொட்டி வருகிறது. தலைநகரான திருவனந்தபுரத்தில் கனமழை தொடருவதால் திருவனந்தபுரம் நகரம் ஸ்தம்பித்துள்ளது. பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் நகரில் இதுவரை மழைக்கு 245 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மின் கம்பங்களில் மரங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது.

முல்லைபெரியாறு வழக்கில் கேரள அரசு முறையாக வாதாடாததால் தோல்வி: அச்சுதானந்தன்

Posted: 07 May 2014 10:08 PM PDT

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. மேலும் புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி இல்லையென்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: கேரளாவில் இன்று முழு அடைப்பு

Posted: 07 May 2014 08:33 PM PDT

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது கேரள அரசையும், அம்மாநில மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தநிலையில் புதிய அணை கட்ட வலியுறுத்தி இன்று முழுஅடைப்பு போராட்டம் நடத்த முல்லைப்பெரியாறு போராட்டக்குழு அழைப்பு

சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய கேரளா முடிவு

Posted: 07 May 2014 08:27 PM PDT

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. 119 ஆண்டுகள் பழமையான முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது எனவும், அணையின் நீர்மட்ட உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடியாக

கோலார் தங்கவயலில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கீடு

Posted: 07 May 2014 05:12 PM PDT

கோலார் தங்கவயலில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தங்கவயல் நகரசபை தலைவர் பக்தவச்சலம், துணை தலைவர் தாஸ் சின்னசவரி ஆகியோர் நேற்று நகரசபை அலுவலகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:– கோலார் தங்கவயலில் குடிநீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. இதை தீர்க்க மாவட்ட நிர்வாகம் மூலம் ரூ.1¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு

மேதா பட்கர் ஒரு மாவோயிஸ்ட்: சுப்ரமணியசாமி கருத்து

Posted: 07 May 2014 04:00 PM PDT

தீவிரவாதிகளான அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை வழங்கியிருக்கக்கூடாது என பிரபல சமூக சேவகரான மேதா பட்கர் தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்தார். பொதுவாக தூக்கு தண்டனை என்பதையே ரத்து செய்ய வேண்டும் என்பது மேதாவின் எண்ணம். தவறான செய்திகளை வெளியிட்டு தன்னை அடிப்படைவாதி என்று கூறி தன் மீது களங்கம் விளைவிக்க முயற்சி

கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

Posted: 07 May 2014 02:57 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு மே மாதம் 15 விதிமுறைகளை வழங்கியது. இந்த விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கியிருப்பதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான 8ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது

Posted: 07 May 2014 01:55 PM PDT

நாடாளுமன்ற தேர்தலுக்கான 8ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இந்தியாவில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 502 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்னும் ஒரே ஒரு கடடத் தேர்தல் மட்டுமே நடக்க வேண்டி உள்ளது. இதுவரை தேர்தல் நடைபெற்ற எட்டு கட்டங்களிலும் ஒட்டுமொத்தமாக 66 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 8 ஆம்

மும்பையில் பார் நடனத்திற்கு எதிராக தடை: மகாராஷ்டிரா அரசு

Posted: 07 May 2014 01:13 PM PDT

மகாராஷ்டிராவில் பார் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக பல மாதங்களாக கூறப்பட்டு வந்தது. இதற்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதன் மீது விசாரணை நடைபெற்றது. இன்று நடைபெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார் நடனம் குறித்து மகாராஷ்டிரா அரசுக்கு தங்களது கடும் கண்டனத்தை

வங்கதேசத்தினரை வெளியேற்ற வேண்டுமென பேசியதற்கு ஜெயிலா? மம்தாவுக்கு மோடி கேள்வி

Posted: 07 May 2014 12:31 PM PDT

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, அம்மாநிலத்தில் உள்ள வங்கதேசத்தினர் வெளியேற்றப்படுவார்கள் என கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அம்மாநில முதல்வர் மம்தா, மோடியை தேர்தல் ஆணையம் கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

அனுமதியின்றி வாக்குச்சாவடிக்குள் சென்ற பிரியங்காவின் செயலர் வெளியேற்றம்

Posted: 07 May 2014 10:38 AM PDT

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. ராகுலை எதிர்த்து பா.ஜ.க சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். அங்கு இரு தரப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™