Tamil Star |
- பார்வையை இழக்க இருக்கும் 9-வயது சிறுவனின் ஆசை!
- தினமும் இரண்டு சாத்துகுடி பழங்கள் சாப்பிடலாம்!
- ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி!
- இரவு நேரங்களில் கிளப்பில் கும்மாளம் போடும் ஹிருணிக்காவும் ஹரின் பெர்ணான்டோவும்!
- மூதாட்டிக்கு சொந்த ஊரில் நடந்த அவலம்!
- ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 2011ம் ஆண்டுக்கு பிறகு இன்று அதிகம் உணரப்பட்டது!
- பேஸ்புக்கில் 1 கோடி பேர்! சோனாக்ஷி சின்ஹாவுக்கு பேஸ்புக்கில் பிரமாண்ட ரசிகர் வட்டம்!
- ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி ஆதரவு திரட்டும் சந்திரபாபு நாயுடு மகன்!
- நயன்தாரா – பிரகாஷ் ராஜூக்கு நடிக்க ஒரு ஆண்டு தடை: தெலுங்கு பட இயக்குனர்கள் சங்கம் அறிவிப்பு!
- தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாலிபர்களே…… சற்று இதையும் அவதானியுங்கள்!
- தெருச்சண்டையில் கொடூரமாக தூக்கிவீசப்பட்ட குழந்தை!
- இல்லத்தரசிகளின் கண்ணீரை நொடிப் பொழுதில் நிறுத்த இது சூப்பர் ஐடியா!
- பறவைகளில் சிறந்த பாடகனாக திகழும் Lyre Bird…. கேட்டுப் பாருங்க!
- 2வது சுற்றில் மரியா ஷரபோவா தகுதி: மாட்ரிட் ஓபன் டென்னிஸ்!
- சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று மோதல்!
- மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலி: ஒட்டகத்தால் பரவுகிறதா?
- ரசாயன ஆயுதங்களை அகற்றும் பணிகளில் சிரியா தாமதமா!
- இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை! ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது இராணுவத்தின் துப்பாக்கி தாக்குதல் நியாயம்!
- விமான நிலையம் மற்றும் துறைமுகத்திற்கு விஜயம் செய்து ஆய்வு ! புதன்கிழமை அறிக்கை வெளியீடு!
- முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எச்சரிக்கை! எனது அழைப்பினை தொடர்ந்து புறக்கணித்தால் களத்தில் இறங்குவேன் பசில் ராஜபக்ச!
| பார்வையை இழக்க இருக்கும் 9-வயது சிறுவனின் ஆசை! Posted: 05 May 2014 11:32 PM PDT
பார்வையை முழுவதுமாக இழக்க முன் உலகில் தான் பார்க்க விரும்பும் விடயங்களை ரெக்சசை சேர்ந்த 9-வயது சிறுவன் பட்டியல் தயாரித்துள்ளான். முன்னய சுகாதார பிரச்சினை காரணமாக விடப்பட்ட வடு திசு காரணமாக பென் பியர்ஸ் என்ற சிறுவனின் இரண்டு கண்களும் மெதுவாக பார்வையை இழக்க ஆரம்பித்துள்ளன. பென் 4-மாதங்கள் முன்னதாக பிறந்துள்ளான் அதனால் வளர்ச்சி குன்றியநிலையில் உள்ளான். பிறந்ததிலிருந்து அவனது கண் இமைகள் ஒன்றாக இணைந்த வண்ணம் இருக்கின்றது என கூறப்பட்டுள்ளது. இவன் வளரும்போது கண்கள் வளருகின்றன ஆனால் வடு ரிசு நீட்சியடையவில்லை. இதனால் வளரும்போது பார்வை குறைந்து கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. இது தவிர பென் ஆரோக்கியமானவன். தான் பார்வையற்றவனாக இருக்க விரும்பவில்லை என அவன் கூறியுள்ளான். பார்வையை முற்றாக இழப்பதற்கு முன்னர் பென்னால் எவ்வளவு அதிகமாக பார்க்க கூடியவைகளை பார்க்க முடியுமோ அவ்வளவையும் பார்த்தால் முடிந்தவரை அவ்வளவும் அவனது கற்பனை நினைவாக பதியும் என வைத்தியர்கள் பென்னின் பெற்றோரிடம் பரிந்துரைத்துள்ளதாக அறியப்படுகின்றது. அவனது பெற்றோர் அவனை NASA திட்ட கட்டுப்பாட்டு நிலையம் முதல் யுனிவேர்சல் ஒலான்டோவிலுள்ள ஹரி பொட்டர் வேள்ட் வரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். தங்களால் முடிந்த அளவு இடங்களிற்கு மிக விரைவாக அவனை அழைத்து செல்ல முயற்சி செய்வதாக பென்னின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தினமும் இரண்டு சாத்துகுடி பழங்கள் சாப்பிடலாம்! Posted: 05 May 2014 04:18 AM PDT
மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது. பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. பழங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். கடந்த இதழில் உலர்ந்த திராட்சையின் பயன்களைக் கண்டோம். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் சாத்துக்குடியின் மருத்துவக் குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது. நோயுற்றவர்களுக்கு நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது. இரத்த விருத்திக்கு சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும். இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். எலும்புகள் வலுவடைய சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும். மலச்சிக்கல் தீர மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம் பல இதழ்களில் அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். நன்கு பசியைத் தூண்ட பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும். குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது. பெண்களுக்கு நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது. முதியோர்களுக்கு வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி! Posted: 05 May 2014 04:01 AM PDT
இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி இல்லை என்றால் இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.. தொண்டைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அரு மருந்தாகும். பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்பட்டால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுவதுண்டு. எனவே, சுக்குத்துளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும். மருத்துவகுணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் சட்னி, பொங்கல் போன்றவைகளில் சேர்த்து சாப்பிட்டால் பல்வேறு நோய்கள் குணமாகிவிடும். வெள்ளைப்பூண்டு: பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக்கூடியது. தினமும் இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதய அடைப்பை நீக்கும். ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும். சளித்தொல்லையை நீக்கும். மலேரியா, யானைக்கால், காசநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சளித்தொல்லை இருந்தால் வெள்ளை பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் போதும். சளி தொல்லை நீங்கும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் துளசி சாற்றை சாப்பிடுவது நல்லது. உடலில் தடைபட்டிருக்கும் ரத்த குழாயை துளசி சாறு குணப்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து விடும். நாம் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. உணவில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். வெங்காயத்திலும், வெள்ளைப்பூண்டிலும் உள்ள 'செலினீயம்' என்னும் உலோகப்பொருள் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும். நரம்பு தளர்ச்சி நீங்க: நரம்பு தளர்ச்சி சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் வருகிறது. மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சத்தான உணவை உட்கொள்ளாமை போன்றவைகளால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க: நன்றாக உறங்க வேண்டும்.மன அளவிலும், உடல் அளவிலும் உடலைப் பாதுகாக்க வேண்டும். உறங்குவதற்கு முன் அதிக நீரைப் பருக வேண்டும்.தூங்குவதற்கு முன் சூடான பானம் எதுவும் அருந்த கூடாது. தொண்டைப்புண்: தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியவை உதவும். மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது மஞ்சளைப் பொடியாக்கிவிட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். பின் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை சேர்த்து கலக்கி குடித்தால் தொண்டையை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படும். உடல் தளர்ச்சி: வெங்காயத்தில் வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவை உள்ளன. உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். இருதயத்தை வலுப்படுத்தும். உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியை திரும்பவும் தரக்கூடியது. இளமையைப் பாதுகாக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து, காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. வயிற்றுப்புண்: வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் ஒரு டீஸ்பூன், நிறைய பூண்டு போட்டு நன்றாக வேக வைத்து தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண்ணும், வாய்ப்புண்ணும் குணமாகிவிடும். வலிப்பு நோய்: வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசியில் இளநீரையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் நரம்பு பலமடைந்து வலிப்பு குணமாகும். தலைவலி: தலைவலி வந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்புடன் சேர்த்துப் பருகினால் தலைவலி உடனே குணமாகும். நெல்லிக்காய்: நெல்லிக்கனியில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட சுமார்25மடங்கு சத்து அதிகமாக நெல்லிக்கனியில் உள்ளது. இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது. பல் தொடர்பான வியாதிகள், மலச்சிக்கல், எலும்புத்தாடை, நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றை குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம். அதே போல் மூளைக்கோளாறு, இதய நோய், காசநோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். கற்றாழை கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உப பொருட்கள் உள்ளன. மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு எனர்ஜியை தரக்கூடியது. ரத்த ஓட்டத்தை சீராக்குவது. மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது. தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரவு நேரங்களில் கிளப்பில் கும்மாளம் போடும் ஹிருணிக்காவும் ஹரின் பெர்ணான்டோவும்! Posted: 05 May 2014 03:48 AM PDT
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் இரவு நேர களியாட்ட விடுதியில் இருந்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு பீ.ஆர்.சி விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியில் இருக்கும் இந்த இரவு நேரடி களியாட்ட விடுதியில் இவர்கள் இருந்ததை பலர் கண்டுள்ளனர். ஹரின் பெர்ணான்டோவும் ஹிருணிக்காவும் நள்ளிரவு ஒரு மணி வரை அங்கு இருந்ததுடன்> இருவரும் மிக நெருக்கமாக காணப்படடதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி களியாட்ட விடுதியில் இருந்தவர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டதாக தெரியவருகிறது. ஹிருணிக்கா பிரேமச்சந்திர கடந்த மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளை பெற்று தெரிவானார். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், அண்மைய காலத்தில் இரண்டு பிரதான கட்சிகளின் முக்கிய நபர்களாக மாறியுள்ள இவர்கள் இருவரும் இரவு நேர களியாட்ட விடுதியில் சந்தித்து கொண்டமை குறித்து அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மூதாட்டிக்கு சொந்த ஊரில் நடந்த அவலம்! Posted: 05 May 2014 03:33 AM PDT
கனடாவிலிருந்து வந்து தனது சொந்த வீட்டிலிருந்தவர்களை வெளியேற்ற முயன்ற மூதாட்டி ஒருவரை வீட்டில் குடியிருப்பவர்கள் தாக்கி காயப்படுத்தி, கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ள சம்பவமொன்று சாவகச்சேரி, நுணாவில் மேற்கு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் காயமடைந்த, குணாநந்தன் தயாளசோதி (வயது 78) என்ற மூதாட்டி சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது, நுணாவில் மேற்கைச் சேர்ந்த குறித்த மூதாட்டி, தான் கனடாவுக்குச் செல்வதற்கு முன்னர், வீடில்லாமல் தவித்த ஒரு குடும்பத்தினரை தனது வீட்டில் குடியிருக்க அனுமதித்து, வாடகை ஒப்பந்தமும் செய்துவிட்டுச் சென்றுள்ளார். கனடாவிலிருந்து அண்மையில் திரும்பி வந்த மூதாட்டி, இருபகுதியினரும் செய்து கொண்ட வாடகை ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில், வீட்டிலிருந்து வெளியேறுமாறு குடியிருந்தவர்களைக் கேட்டுள்ளார். வீட்டிலிருந்தவர்கள், தாம் வெளியேறுவதற்கு ஒரு மாத கால அவகாசம் கேட்டபோது, அதற்குச் சம்மதித்து விட்டுச் சென்ற மூதாட்டி, ஒரு மாதத்தின் பின்னர் திரும்ப வந்து, கடந்த ஏப்ரல் 12ம் திகதி வீட்டை விடுவிக்குமாறு கேட்ட போது, குடியிருந்தவர்கள் மீணடும் அவகாசம் கேட்டுள்ளனர். இதனையடுத்து, சாவகச்சேரி போலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். வீட்டில் குடியிருந்தவர்களை அழைத்து சாவகச்சேர் பொலிஸார் விசாரித்த போது, இரு நாட்களில் வீட்டிலிருந்து தாம் வெளியேறி விடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும், அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறாததால், நேற்று பகல் வீட்டிற்குச் சென்ற மூதாட்டி வீட்டினை விடுமாறு குடியிருப்பாளர்களைக் கேட்ட போது, வீட்டிலிருந்தவர்கள் மூதாட்டியைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். அத்துடன், 'வீட்டுக்கு இனிமேல் திரும்ப வந்தால், கனடாவுக்கு பெட்டிக்குள் வைத்து அனுப்பி விடுவோம்' என கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். காயமடைந்த மூதாட்டி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து விட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூதாட்டியைத் தாக்கிய நபரை போலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 2011ம் ஆண்டுக்கு பிறகு இன்று அதிகம் உணரப்பட்டது! Posted: 05 May 2014 03:10 AM PDT
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை 5.18 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் டோக்கியோவின் தெற்கில் உள்ள இசு ஒஷிமா தீவு அருகே கடலுக்கு இடியில் 160 ஆழத்தில் உள்ள இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது. 2011ம் ஆண்டுக்கு பின் இன்று ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் மத்திய டோக்கியோவில் தான் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுகத்தால் 4 பேர் காயம் அடைந்ததாக டோக்கியோ தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ரயில் சேவை தாமதானது. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ரிக்டர் அளவுகோலில் 9 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து தற்போது தான் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் 18 ஆயிரத்து 500 பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேஸ்புக்கில் 1 கோடி பேர்! சோனாக்ஷி சின்ஹாவுக்கு பேஸ்புக்கில் பிரமாண்ட ரசிகர் வட்டம்! Posted: 05 May 2014 02:19 AM PDT
லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் சோனாக்ஷி சின்ஹாவுக்கு பேஸ்புக்கில் ரசிகர் பிரமாண்ட ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. தபாங் என்ற படத்தின் மூலம் அதிரடியாக அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. முதல் படமே பெரிய வெற்றியைப் பெற்றதோடு, சோனாக்ஷிக்கு ஏகப்பட்ட விருதுகள் - பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்வரிசை நாயகியானார். அடுத்து அவரது தென்னிந்திய சினிமா பிரவேசம் தமிழில் நடந்துள்ளது. ரஜினிக்கு ஜோடியாக லிங்காவில் நடிக்கிறார். இந்த நிலையில் அவரது பேஸ்புக் பக்கத்தைப் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 கோடியாக உயர்ந்துள்ளது. தீபிகா படுகோன், மாதுரி தீக்ஷித் போன்ற நடிகைகளின் பேஸ்புக் பக்கங்களுக்கும் 1 கோடிக்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர். தீபிகா படுகோன் பக்கத்தை 1.7 கோடி பேர் லைக் செய்துள்ளனர். இவர்கள் வரிசையில் இப்போது சோனாக்ஷி சின்ஹாவும் இணைந்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரஜினியின் பஞ்ச் டயலாக் பேசி ஆதரவு திரட்டும் சந்திரபாபு நாயுடு மகன்! Posted: 05 May 2014 02:03 AM PDT
தந்தை சந்திரபாபு நாயுடுவுக்காக ஓட்டுக் கேட்டுப் பிரச்சாரம் செய்யும் மகன் லோகேஷ், ரஜினியின் பஞ்ச் டயாலாக்குகளை தெலுங்கில் பேசி மக்களைக் கவர்ந்துள்ளார். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டம் குப்பம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக அவரது மகன் லோகேஷ் 'யுவ பிரபஞ்சனம்' என்ற பெயரில் யாத்திரையை தொடங்கி தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்கிறார். சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்தினரும் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் தனது பிரசார கூட்டங்களில் நடிகர் ரஜினிகாந்த் தனது படத்தில் பேசும் 'பஞ்ச் டயலாக்கை' பேசி ஆதரவு திரட்டி வருகிறார். ரஜினி நடித்த படையப்பா படம் ''நரசிம்ஹா'' என்ற பெயரில் தெலுங்கில் 'டப்' செய்யப்பட்டு திரையிடப்பட்டது. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி ஆந்திராவில் சாதனை படைத்தது. இந்த படத்தில் வரும் ''அதிகமா ஆசைப்படுகிற ஆம்பிளையும், அதிகமா கோப்படுகிற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை'' என்ற பஞ்ச் மிகப் பிரபலம். இந்த வசனத்தை தனது பிரசாரத்தின் போது லோகேஷ் பேசி வாக்கு கேட்கிறார். சோனியா காந்தி, ஜெகன் மோகன் ரெட்டி இருவரையும் இந்த வசனத்தைச் சொல்லி பகிரங்கமாக தாக்குகிறார். "சோனியா 3-வது முறையாக மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் ஆசையில் மாநிலத்தை பிரித்து விட்டார்,'' என்று குற்றம் சாட்டி வருகிறார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நயன்தாரா – பிரகாஷ் ராஜூக்கு நடிக்க ஒரு ஆண்டு தடை: தெலுங்கு பட இயக்குனர்கள் சங்கம் அறிவிப்பு! Posted: 05 May 2014 01:54 AM PDT
அனாமிகா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ஒத்துழைப்பு தராததால் தெலுங்கு சினிமாவில் நடிக்க நயன்தாராவுக்கு ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது தெலுங்கு இயக்குநர்கள் சங்கம். அதேபோல ஆகடு படத்தின் உதவி இயக்குநரைத் திட்டியதற்காக நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, பிரகாஷ் ராஜ் இருவருமே தெலுங்கில் முக்கியமான நடிகர்கள். சேகர் கம்மூலா இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் அனாமிகா. தமிழில் நீ எங்கே என் அன்பே என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு, செய்தியாளர் சந்திப்பு என எந்த நிகழ்வுக்கும் நயன்தாரா வரவில்லை. எனவே மிகவும் கொதிப்படைந்திருந்தார்கள் இயக்குநரும் தயாரிப்பாளரும். இது பற்றி தெலுங்கு பட இயக்குனர்கள் சங்கத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு, இயக்குநர் சங்கம் சார்பில் நேற்று நயன்தாராவுக்கு எதிராக அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அடுத்த ஒரு ஆண்டுக்கு நயன்தாரா தெலுங்கில் நடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதேபோல் ஆகடு பட ஷூட்டிங்கின்போது உதவி இயக்குனர்களை தரக்குறைவாக திட்டியதாக பிரகாஷ்ராஜ் மீது புகார் தரப்பட்டிருந்தது. அந்தப் படத்திலிருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டார். பின்னர் அந்தப் புகார் குறித்து இயக்குநர் சங்கம் விசாரணை மேற்கொண்டது. அவர் திட்டியதும், தரக்குறைவாக நடந்து கொண்டதும் நிரூபணம் ஆனதாகக் கூறி, தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாலிபர்களே…… சற்று இதையும் அவதானியுங்கள்! Posted: 05 May 2014 01:35 AM PDT |
| தெருச்சண்டையில் கொடூரமாக தூக்கிவீசப்பட்ட குழந்தை! Posted: 05 May 2014 01:30 AM PDT |
| இல்லத்தரசிகளின் கண்ணீரை நொடிப் பொழுதில் நிறுத்த இது சூப்பர் ஐடியா! Posted: 05 May 2014 01:27 AM PDT |
| பறவைகளில் சிறந்த பாடகனாக திகழும் Lyre Bird…. கேட்டுப் பாருங்க! Posted: 05 May 2014 01:21 AM PDT |
| 2வது சுற்றில் மரியா ஷரபோவா தகுதி: மாட்ரிட் ஓபன் டென்னிஸ்! Posted: 05 May 2014 01:15 AM PDT ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா தகுதி பெற்றார். முதல் சுற்றில் செக் குடியரசின் கிளாரா கோகலோவாவுடன் நேற்று மோதிய ஷரபோவா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி ஒரு மணி, 3 நிமிடம் மட்டுமே நீடித்தது. மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் அனா இவானோவிச் 6-1, 7-6 (7-4) […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் இன்று மோதல்! Posted: 05 May 2014 01:02 AM PDT
ஐபிஎல் டி20 தொடர் 7வது சீசனின் 25வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. டோனி தலைமையிலான சென்னை அணி முதல் லீக் ஆட்டத்தில் 200 ரன்னுக்கு அதிகமாக விளாசியும், பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் - மில்லர் அதிரடியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு சிறப்பாக விளையாடி வரும் சூப்பர் கிங்ஸ், தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. தொடக்க வீரர்கள் வேய்ன் ஸ்மித், பிரெண்டன் மெக்கல்லம் இருவரின் அதிரடி ஆட்டம் சென்னை அணியின் முக்கிய பலமாக விளங்குகிறது. அவர்களைத் தொடர்ந்து ரெய்னா, டுபிளெஸ்சிஸ், டோனி, ஜடேஜா என்று அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் அணிவகுப்பது, எதிரணி பவுலர்களுக்கு சவாலாக உள்ளது. மோகித் ஷர்மா, பென் ஹில்பென்ஹாஸ் வேகமும், ஜடேஜா - அஷ்வின் சுழல் கூட்டணியும் எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. துடிப்பான பீல்டிங்கும் சென்னை அணிக்கு கூடுதல் சாதகம். தொடர்ச்சியாக 6வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் அந்த அணி களமிறங்கும் நிலையில், டெல்லி அணி 6 போட்டியில் 4 தோல்விகளை சந்தித்துள்ளதால் சற்று தடுமாற்றத்துடன் இப்போட்டியை எதிர்நோக்குகிறது. கேப்டன் கெவின் பீட்டர்சன், முரளி விஜய், டுமினி, டிகாக், மனோஜ் திவாரி, சவுரவ் திவாரி என்று அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகம் இருந்தாலும், அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடாதது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ராஸ் டெய்லர், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பார்மில் இல்லாததும் நெருக்கடியை அதிகரிக்கிறது. நதீம், ஷமி, பார்னெல் ஆகியோர் துல்லியமாகப் பந்துவீசி சென்னை பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே டெல்லி அணி வெற்றி பற்றி நினைக்க முடியும். சென்னையுடன் ஒப்பிடும்போது டேர்டெவில்ஸ் சற்று பலவீனமான அணியாகவே இருந்தாலும், டி20 போட்டியில் எந்த அணியையும் அலட்சியப்படுத்திவிட முடியாது என்பதால் இன்றைய ஆட்டமும் கடைசி வரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம். டெல்லி அணியில் 3 வீரர்கள் குறைப்பு ஐபிஎல் 7வது சீசனுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் மொத்தம் 23 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் உள்ளூர் வீரர் மிலிந்த் குமார், அரியானா சுழல் ஜெயந்த் யாதவ், கர்நாடகா வேகம் ஷரத் ஆகிய 3 பேரை தற்காலிகமாக வீட்டுக்கு அனுப்ப டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 'இந்த வீரர்களை உடனடியாக களமிறக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதாலும், பயிற்சியின்போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்கும் விதமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இவர்களுக்கு உடனடியாக அழைப்பு விடுக்கப்படும்' என்று டேர்டெவில்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்.எஸ்.டோனி (கேப்டன்), பாபா அபராஜித், ஆர்.அஷ்வின், சாமுவேல் பத்ரீ, வேய்ன் பிராவோ, பேப் டு பிளெஸ்சிஸ், ஜான் ஹேஸ்டிங்ஸ், மேட் ஹென்றி, பென் ஹில்பென்ஹாஸ், ரவீந்திர ஜடேஜா, பிரெண்டன் மெக்கல்லம், மிதுன் மன்ஹாஸ், ரோனித் மோரே, பவான் நேகி, ஆசிஷ் நெஹ்ரா, ஈஷ்வர் பாண்டே, சுரேஷ் ரெய்னா, விஜய் ஷங்கர், மோகித் ஷர்மா, வேய்ன் ஸ்மித். டெல்லி டேர்டெவில்ஸ்: கெவின் பீட்டர்சன் (கேப்டன்), மயாங்க் அகர்வால், நாதன் கோல்டர் நைல், குவின்டான் டி காக், ஜீன் பால் டுமினி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சித்தார்த் கவுல், மில்ந்த் குமார், முகமது ஷமி, ஷாபாஸ் நதீம், ஜிம்மி நீஷாம், வேய்ன் பார்னெல், ஷரத், ராகுல் ஷர்மா, லஷ்மி ரத்தன் சுக்லா, ராகுல் சுக்லா, ராஸ் டெய்லர், மனோஜ் திவாரி, சவுரவ் திவாரி, ஜெய்தேவ் உனத்காட், முரளி விஜய், ஜெயந்த் யாதவ்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலி: ஒட்டகத்தால் பரவுகிறதா? Posted: 05 May 2014 12:45 AM PDT
சவுதி அரேபியாவில் பரவி வரும் மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். சவுதி அரேபியா, மலேசியா, ஜோர்டான், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் மெர்ஸ் எனப்படும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் நிமோனியா, மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மெர்ஸ் வைரஸ் பரவி வருகிறது. இதனால் நேற்று வரை 109 பேர் பலியாகி உள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சவுதி சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜெட்டாவில் 25 வயது வாலிபர் ஒருவர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இறந்தார். இதேபோல் காசநோய், அனிமியாவால் பாதிக்கப்பட்ட 69 வயது பெண் மெக்காவில் காலமானார். இவர்களுடன் சேர்த்து மெர்ஸ் வைரசுக்கு இதுவரை 109 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 396 பேர் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதிகாரிகள் கூறினர். இதற்கிடையில் மெர்ஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் 4 டாக்டர்கள் பணியை ராஜினாமா செய்து விட்டனர். நோயாளிகளிடம் இருந்து தங்களுக்கும் வைரஸ் தொற்றி கொள்ளும் என்ற பயத்தில் டாக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் ஒட்டகங்கள் மூலம் மெர்ஸ் வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதுவரை தடுப்பு மருந்து இல்லை. இதனால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரசாயன ஆயுதங்களை அகற்றும் பணிகளில் சிரியா தாமதமா! Posted: 05 May 2014 12:41 AM PDT
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பதவி விலக கோரி மக்கள் போராடி வருகின்றனர். அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அதிபர் பஷார் ரசாயன ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதாக ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. தலைநகர் டமாஸ்கசில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு எதிர்ப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் சிரியா அரசு விஷவாயு தாக்குதலை மேற்கொண்டது. இதில் ஏராளமான மக்கள் பலியானார்கள். இதையடுத்து மேற்கத்திய நாடுகள் சிரியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன. சிரியா மீது போர் தொடுப்போம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியது. அதன்பின், 1,300 டன் ரசாயன ஆயுதங்களை அழிக்க அதிபர் பஷார் ஒப்புக் கொண்டார். அதன்பின் ரசாயன ஆயுதங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டன. எனினும், ரசாயன ஆயுதங்களை அகற்றும் பணியில் தாமதம் ஏற்படுவதை சர்வதேச நாட்டு பார்வையாளர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், சிரியாவில் தற்போது மீதமுள்ள 8 சதவிகித ரசாயன ஆயுதங்களை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்படுத்த கூடாது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் பேசியிருக்கிறேன். ரசாயன ஆயுதங்களை அழிக்க அதிபர் பஷார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 05 May 2014 12:07 AM PDT
வெலிவேரிய, ரத்துபஸ்வெல பகுதியில் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நியாயப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேவையின்றி இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டமையும், இராணுவத்தினர் பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியமையும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பில் விசாரணை நடத்திய இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு, தமது அறிக்கையை இறுதி செய்துள்ளது. இதில் இராணுவம் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமது வரையறைக்குள்ளேயே செயற்பட்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கை இராணுவ தளபதி மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| விமான நிலையம் மற்றும் துறைமுகத்திற்கு விஜயம் செய்து ஆய்வு ! புதன்கிழமை அறிக்கை வெளியீடு! Posted: 04 May 2014 11:57 PM PDT
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம் மற்றும் துறைமுகத்திற்கு விஜயம் செய்து மேற்கொண்ட ஆய்வு குறித்த அறிக்கை புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. இந்த அறிக்கை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது. கடந்த திங்கடகிழமை இந்த அறிக்கை வழங்கப்படவிருந்த போதிலும் சில காரணங்களினால் அது தாமதமானது. அறிக்கையில் காணப்பட்ட சில குறைபாடுகள் காரணமாக அதனை குறித்த தினத்தில் வழங்க முடியாது போனதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். புதன்கிழமை கட்சியின் தலைமைத்துவச் சபையிடம் வழங்கப்படும் அறிக்கை பின்னர் ஊடகங்களுக்கும் வழங்கப்படும். அறிக்கை கையளிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பில் பதிலளிக்க அரசாங்கத்திற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அம்பாந்தோட்டைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 04 May 2014 11:35 PM PDT
வடமாகாண முதலமைச்சர் தொடர்ந்தும் எனது அழைப்பினைப் புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கப் போவதாக அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். வட மாகாண சபை முதலமைச்சரை சந்திப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் சந்தர்ப்பம் கேட்டமைக்கு இன்னும் சாதகமான பதில் வழங்கப்படவில்லை என்பது குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வடமாகாண சபையின் முதலமைச்சரினால் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரை சந்திக்க முடியுமாயின் ஏன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான என்னை சந்திக்க முடியாது? அண்மைக்காலமாக முதலமைச்சருக்கு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு நான் வடக்கின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருக்கின்றேன். எனது அழைப்பை முதலமைச்சர் தொடர்ந்து புறக்கணித்தால் மீண்டும் வடக்கு களத்தில் இறங்கி பணியாற்றுவது குறித்து முடிவை எடுத்து விடுவேன் என்றும் அமைச்சர் எச்சரித்தார். வடக்கில் மூலை முடுக்குகள் குறித்து என்னை விட அறிந்தவர் எவரும் இல்லை. வடக்கு முதலமைச்சருக்கு வடக்கின் எல்லைகள் கூட தெரியாது. வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதைவிடுத்து அவர் புலம்பெயர் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றார். வட மாகாண சபை உரிய முறையில் இயங்கப்படுவதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் உலகம் முழுவதும் கூறிக்கொண்டிருக்கின்றார். நாங்கள் செய்துகாட்டுகின்றோம் என்றுதான் இவர்கள் வட மாகாண சபை அதிகாரத்தை பெற்றுத்தருமாறு கேட்டிருந்தனர். மேலும் உள்ளூராட்சி மன்றங்களையும் பெற்றுக்கொண்டனர். வட மாகாண சபையினதும் உள்ளூராட்சி மன்றங்களினதும் அதிகாரங்களை பெற்றுக்கொண்ட கூட்டமைப்பினர் தற்போது மக்களுக்கு சேவை செய்யாமல் மத்திய அரசாங்கத்தை குறைகூற ஆரம்பித்துவிட்டனர். யாழ். மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக வருமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனை ஜனாதிபதி கோரினார். ஆனால் அவர் மறுத்தார். எனினும் அதில் தற்போது இணைந்துகொண்டு அரசாங்கத்தைக் குறைகூறுகின்றார். அங்கு சென்றும் அரசாங்கத்தையே விமர்சிக்கின்றனர். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வட மாகாண சபைக்கு சிறந்த சந்தர்ப்பம் உள்ளது. மீன்பிடி, சுகாதாரம், கல்வி, விவசாயம், கைத்தொழில் என முக்கியமான விடயதானங்கள் மாகாண சபையிடம் உள்ளன. ஆனால் உரிமையாக உள்ள விடயங்களை விட்டுவிட்டு உரிமையற்ற விடயங்களையும் கோருவதையும் அதற்காக பிரேரணைகளை நிறைவேற்றுவதையும் கூட்டமைப்பினர் செய்துவருகின்றனர். வட மாகாண சபை முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடவேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் இனனும் இருக்கின்றேன். ஆனால் அவர் அதற்கு இதுவரை சாதகமான பதிலை அளிக்காமல் இருக்கின்றார். வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு உண்மையான ஆர்வம் கூட்டமைப்பினருக்கு இருந்தால் அதற்கு வழிகளும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அவ்வாறு நேர்மையான நோக்கம் இருந்தால் கூட்டமைப்பினர் எம்முடன் இணைந்து செயற்படலாம். வடக்கு முதலமைச்சரை சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே நான் இன்னும் இருக்கின்றேன். அண்மைக்காலமாக வட மாகாண முதலமைச்சருக்கு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு நான் வடக்கின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருக்கின்றேன் என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















