Tamil Star |
- அடுத்த டூயட் ஹைதராபாதில்! ரஜினியுடன் சோனாக்ஷியின் முதல் ஷெட்யூல் முடிந்தது!
- உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்!
- மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் Elanza 2 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் தளத்தில் பட்டியல்!
- இலங்கையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி சுசித்ரா துரைசுவாமிநாதன் ஆய்வு!
- ஆறடி உயர ஆல்கஹால் நமீதாவுக்கு இன்று பிறந்த நாள்!
- லட்சுமி ராய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய ரஜினி ! துள்ளிக் குதிக்கும் நடிகை
- மாண்டியா பார்வையற்ற மாணவர்கள் ரஜினியுடன் சந்திப்பு!
- துண்டாக வெட்டப்பட்டு பாதி உடலில் நடந்து செல்லும் பெண்……. நம்பமுடியாத அதிர்ச்சி!
- இவர் மலையாள பவர்ஸ்டாரா? சாம் ஆண்டர்சனா?…. பார்த்து நீங்களே சொல்லுங்க!
- இது மனிதர்களின் சோம்பேறித்தனமா?…. மாட்டின் திறமையா?
- பசங்க செய்தால் உடம்புக்குக் கேடு…. நாங்க செய்தால் ஒழுக்கக் கேடா?
- படமெடுத்து நிற்கும் பாம்புகளுக்கு முத்தம் கொடுக்க துடிக்கும் இளைஞன்!
- உண்மையான நட்பின் அர்த்தம்…. அசத்தலான நகைச்சுவையான காட்சி!
- ஸ்பெயின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ்! அரை இறுதியில் மரியா ஷரபோவா தகுதி
- பெங்களூர் அணிக்கு 199 ரன் இலக்கு: மில்லர் அதிரடி ஆட்டம்!
- ஆபத்து காலங்களில் மனித உயிர்களை காக்கும் பணிகளில் ஈடுபடுபவர்களூக்கு கேப்டன் மேபே டியாக்னி விருது ஐ.நா. அறிவிப்பு!
- சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி இந்தியர்கள் குறித்த தகவல்களை தர முடியாது! சுவிஸ் அரசு மறுப்பு!
- முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு தீவைத்த பௌத்த பிக்குகள்!
- முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடிச் சாட்சியத்தினை இசைப்பதிவாக்கிய தாயக கலைஞர்கள்!
| அடுத்த டூயட் ஹைதராபாதில்! ரஜினியுடன் சோனாக்ஷியின் முதல் ஷெட்யூல் முடிந்தது! Posted: 10 May 2014 03:55 AM PDT
லிங்கா படத்தின் முதல் ஷெட்யூலில் தன் பகுதிக்கான படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மும்பை திரும்பினார் நடிகை சோனாக்ஷி. அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கும்போது மீண்டும் அவர் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். இந்த முதல் கட்டப்படப்பிடிப்பு முழுவதும் மைசூர் அரண்மனை மற்றும் மேல்காட்டில் நடந்தது. அதில் 1940 களில் வரும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி நடிக்கிறார். ரஜினி - சோனாக்ஷி இடம் பெறும் பாடல் காட்சி மற்றும் சில முக்கிய காட்சிகள் கடந்த ஒரு வாரமாக படமாக்கப்பட்டன. தன்னுடைய பகுதி காட்சிகள் முடிந்ததும், மும்பை திரும்பினார் சோனாக்ஷி. இதுகுறித்து அவர் தனது ட்விட்டில், 'எனது முதல் தமிழ்ப் படமான லிங்காவில் எனது பகுதிக்கான முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. என்ன ஒரு அருமையான குழு! ஏதோ என் வீட்டிலிருந்தது போல உணர வைத்தார்கள்...," என்று குறிப்பிட்டுள்ளார். லிங்கா படக்குழு, மேலும் சில வாரங்கள் மைசூரில் தங்கி படப்பிடிப்பைத் தொடர்கிறார்கள். இதில் ரஜினி, அனுஷ்கா, ஜெகபதிபாபு வரும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இளவயது ரஜினியின் வில்லத்தனமான காட்சிகள் இனி படமாக உள்ளன. ஹைதராபாதில் படமாகும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ரஜினி - சோனாக்ஷியின் இன்னொரு டூயட் மற்றும் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.This posting includes an audio/video/photo media file: Download Now |
| உடல் சூட்டை தணிக்கும் பரங்கிக்காய்! Posted: 10 May 2014 03:37 AM PDT
குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இது இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று சொல் கிறோம்.பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் சிறிதளவு உண்டு. குளிர்ச்சி சுபாவம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும். பித்தம் போகும். பசியை தூண்டும். சிறுநீர் பெருகும். இது வீரியபுஷ்டியை ஏற்படுத்துவதுடன் மேக நோயையும் நீக்கும் தன்மை உடையது. மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றை குணப்படுத்தி விடும். ஆனால் பரங்கிக்காயை பொறுத்தவரை வேண்டாத சில குணங்களும் உண்டு. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தைத் தோற்றுவிக்கக் கூடியது. இது சீரணம் ஆவதற்கு வெகு நேரம் வரை பிடிக்கும். வாத குணம் உள்ளது. ஆனாலும் இத்தகைய விபரீத குணங்களை சரி செய்வதற்கு சுக்கும், வெந்நீரும் சாப்பிட்டால் போதும். பரங்கிக் கொடியின் நுனியில் காணப்படும் தளிர்களை கறி செய்து சாப்பிட்டால், வயிற்றுப் பையில் காணப்படும் பொருமல் வாய்வு, குன்மம், வறட்சி முதலிய குறைகள் நீங்கப்பெற்று நல்ல பசி உண்டாகும். பல மற்றவர்களும், நோயுற்று இளைத்தவர்களும், நோயாளி களும் இதை சாப்பிட வேண்டாம். மணற்பாங்கான இடங்களில் விளையும் பரங்கிக் காய் மிகவும் சுவையாக இருப்பதுடன் கெட்டியாகவும் இருக்கும். பரங்கிக்காயின் விதைகளை உலர்த்தி எடுத்து உரித்து சாப்பிட்டு வந்தால் உடல் புஷ்டி ஆகும். நல்ல சுவையுடனும் இருக்கும். பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்ப தற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் Elanza 2 ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் தளத்தில் பட்டியல்! Posted: 10 May 2014 03:21 AM PDT
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதன் புதிய பட்ஜெட்டை ஸ்மார்ட்போனான, கேன்வாஸ் Elanza 2 ஸ்மார்ட்போனை, அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட கேன்வாஸ் Elanza ஸ்மார்ட்ஃபோனின் பின் தோன்றலாக கேன்வாஸ் Elanza 2 ரூ. 8,900 விலையில் வந்துள்ளது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் Elanza 2 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 4.3 இயங்குகிறது. கேன்வாஸ் Elanza 2 ஸ்மார்ட்ஃபோனில் இரட்டை சிம் (ஜிஎஸ்எம் ஜிஎஸ்எம்) ஆதரவு வழங்குகிறது. மைக்ரோமேக்ஸ் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி டிஎஃப்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. சாதனத்தில் ரேம் 1GB உடன் 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 (MSM8212) பிராசசர் மூலம் இயங்குகிறது. ஸ்மார்ட்ஃபோனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. கேன்வாஸ் Elanza 2 ல் microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் Elanza 2 ஸ்மார்ட்போன் இணைப்பு விருப்பங்கள் ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், GPRS / EDGE மற்றும் 3 ஜி ஆதரிக்கிறது. இது ஒரு 2000mAh பேட்டரி ஆதரவு கொண்டுள்ளது, கேன்வாஸ் Elanza 2 ஸ்மார்ட்போன் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. பவுன்ஸ் பால் கிளாசிக், பப்பில் x ஸ்லைஸ், Fukrey, Kingsoft, Getit, ஒபேரா மினி, எம்! லைவ், ரேவேரி ஃபோன்புக் மற்றும் ஸ்மார்ட் பேட் போன்ற சில அப்ளிக்கேஷன்கள் ஏற்றப்பட்டு வருகிறது. மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் Elanza 2 ஸ்மார்ட்போன் அம்சங்கள்: இரட்டை சிம் (ஜிஎஸ்எம் ஜிஎஸ்எம்), 720x1280 பிக்சல் தீர்மானம் கொண்ட 5 இன்ச் எச்டி டிஎஃப்டி டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.2GHz குவாட் கோர் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 200 (MSM8212) பிராசசர், எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் முன் எதிர்கொள்ளும் கேமரா, microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவுபடுத்தக்கூடிய 4GB உள்ளடங்கிய சேமிப்பு, ப்ளூடூத், Wi-Fi, ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், GPRS / EDGE, 3 ஜி, ஆண்ட்ராய்டு 4.3, 2000mAh பேட்டரி.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி சுசித்ரா துரைசுவாமிநாதன் ஆய்வு! Posted: 10 May 2014 03:07 AM PDT
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாளும் சுசித்ரா துரைசுவாமிநாதன் தலைமையிலான குழு இன்று திடீரென யாழ்ப்பாணம் சென்றுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இலங்கை மற்றும் மாலத்தீவு விவகாரங்களுக்கான இணைச் செயலராக பதவி வகிப்பவர் சுசித்ரா துரை சுவாமிநாதன். இவரது தலைமையில் மற்றொரு அதிகாரி விஸ்வேஸ் நேம்கி உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று காலை யாழ்ப்பாணத்துக்கு சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் சென்றனர். அங்கு இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். பின்னர் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஆகியோரை சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்தனர். சுசித்ரா துரை சுவாமிநாதன் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணத்தில் நாளை வரை தங்கியிருப்பர். அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்துப் பேச இருப்பதாக கூறப்படுகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஆறடி உயர ஆல்கஹால் நமீதாவுக்கு இன்று பிறந்த நாள்! Posted: 10 May 2014 03:00 AM PDT
ஆறடி உயர ஆல்கஹால் என்று வர்ணிக்கப்பட்ட நமீதாவுக்கு இன்று பிறந்த நாள். படங்களில் பிஸியாக இல்லாவிட்டாலும், பத்திரிகைகளில், மீடியாவில் அவரைப் பற்றிய செய்திகளுக்குப் பஞ்சமில்லை என்பதே அவரது முக்கியத்துவத்தை உணர்த்தும். தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா தொடர்ந்து ஏய், அழகிய தமிழ்மகன், பில்லா, வியாபாரி, பாண்டி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சியாக நடித்து, இளைஞர்களைக் கவர்ந்தார். 2004-2005 ல் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாகத் திகழ்ந்தவர் நமீதா. கவர்ச்சியில் முத்திரை பதித்த நமீதா, தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாகத் திகழ்ந்தார். அத்தனை மொழிகளிலும் கவர்ச்சியில் கலக்கினார். குறிப்பாக இவரும் நயன்தாராவும் இணைந்து நடித்த தெலுங்குப் படங்கள், பில்லா, சிம்ஹா பெரும் வெற்றி பெற்றன எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்தில் மாயா ஆன்ட்டியாக புடவையில் கவர்ச்சி காட்டினார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக வந்து தன் குஜராத் தமிழில் குதூகலப்படுத்தினார். நமீதா இப்போது ஒரு கன்னடப் படத்தில் மட்டும் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிக்கும் புதுப்படம் விரைவில் தொடங்குகிறது. இடைப்பட்ட நாட்களை தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதிலும், குத்துச்சண்டை கற்பதிலும் செலவழித்தார். குஜராத் மாநிலம் சூரத்தில் மே 10-ம் தேதி பிறந்தவர் நமீதா. சினிமாவில் பரபரப்பாக இருந்த நாட்களில், அவர் தன் பிறந் நாளன்று ஆதரவற்றோருக்கு ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார். மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர்கள் கூட கொடுத்திருக்கிறார். 2001 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்ற நமீதா முதலில் நடித்தது தெலுங்கில்தான். 2004-ல் தமிழில் எங்கள் அண்ணா நடித்தார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நமீதா, விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கவும் முடிவு செய்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| லட்சுமி ராய்க்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிய ரஜினி ! துள்ளிக் குதிக்கும் நடிகை Posted: 10 May 2014 02:53 AM PDT
சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்துப் பேச மாட்டோமா என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. சாமானியர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கும் கூட. அப்படி இருக்கும் போது அவரிடமிருந்தே வாழ்த்துச் சொல்லி போன் கால் வந்தால் எப்படியிருக்கும்! நடிகை லட்சுமி ராய்க்கு சமீபத்தில் அப்படி ஒரு போன் கால் வந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து. மே 5-ம் தேதி லட்சுமி ராய்க்கு பிறந்த நாள். அன்றைய தினம் அவருக்கு சூப்பர் ஸ்டாரிடமிருந்து வாழ்த்துச் செய்தி போனில் வந்ததாம். இதுகுறித்து லட்சுமி ராய் கூறுகையில், "இன்று எனக்கு ஒரு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்த நாள் என் வாழ்வில் சிறப்பான நாள். இந்த நாட்டின் இணையற்ற சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வாழ்த்தால் நான் ஆசீர்வதிக்கப்பட்டேன்," என்றார். அன்றுதான் ரஜினி ட்விட்டரில் இணைந்து ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சி தந்தார் என்பது நினைவிருக்கலாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மாண்டியா பார்வையற்ற மாணவர்கள் ரஜினியுடன் சந்திப்பு! Posted: 10 May 2014 02:46 AM PDT
மைசூர் அருகே உள்ள மேல்கோட்டையில் பார்வையற்ற மாணவர்களைச் சந்தித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி. லிங்கா படப்பிடிப்புக்காக குழுவினருடன் மாண்டியாவில் முகாமிட்டுள்ளார் ரஜினி. முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி பார்வையற்றோர் பள்ளி மாணவர்கள், ரஜினியை எப்படியாவது சந்தித்துப் பேச வேண்டும், படமெடுத்துக் கொள்ள வேண்டும் என விரும்பினர். டாக்டர் பிகே பால் என்பவரிடம் அவர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து எப்படியாவது ரஜினியைச் சந்திக்க அழைத்துச் செல்லுமாறு கூறினார்களாம். ஆனால் படப்பிடிப்பு நடக்கும் இடம் எதுவென்று அவர்களுக்குத் தெரியவில்லையாம். உடனே அனைவரும் கிளம்பி மாண்டியா போலீஸ் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு ரஜினி ஷூட்டிங் நடக்கும் இடத்தைக் கேட்டுள்ளனர். மாண்டியாவிலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ள மேல்கோட்டை என்ற இடத்தில் படப்பிடிப்பு நடப்பதாக போலீசார் தெரிவித்தார்கள். மாணவர்கள் அங்கு சென்றபோது மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விஷயம் தெரிந்ததும், இந்த மாணவர்களைச் சந்திக்க வந்துவிட்டார் ரஜினி. பார்வையற்ற மாணவர்கள் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஒவ்வொரு மாணவரிடமும் பேசிய ரஜினி, அன்புடன் அவர்கள் கன்னத்தைத் தட்டி, நலம் விசாரித்தார். அனைவருடனும் படம் எடுத்துக் கொண்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| துண்டாக வெட்டப்பட்டு பாதி உடலில் நடந்து செல்லும் பெண்……. நம்பமுடியாத அதிர்ச்சி! Posted: 10 May 2014 02:26 AM PDT |
| இவர் மலையாள பவர்ஸ்டாரா? சாம் ஆண்டர்சனா?…. பார்த்து நீங்களே சொல்லுங்க! Posted: 10 May 2014 02:20 AM PDT |
| இது மனிதர்களின் சோம்பேறித்தனமா?…. மாட்டின் திறமையா? Posted: 10 May 2014 01:53 AM PDT |
| பசங்க செய்தால் உடம்புக்குக் கேடு…. நாங்க செய்தால் ஒழுக்கக் கேடா? Posted: 10 May 2014 01:48 AM PDT |
| படமெடுத்து நிற்கும் பாம்புகளுக்கு முத்தம் கொடுக்க துடிக்கும் இளைஞன்! Posted: 10 May 2014 01:45 AM PDT |
| உண்மையான நட்பின் அர்த்தம்…. அசத்தலான நகைச்சுவையான காட்சி! Posted: 10 May 2014 01:42 AM PDT |
| ஸ்பெயின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ்! அரை இறுதியில் மரியா ஷரபோவா தகுதி Posted: 10 May 2014 01:37 AM PDT
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா) தகுதி பெற்றார். கால் இறுதியில் சீனாவின் நா லியுடன் நேற்று மோதிய ஷரபோவா 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த அவர், பரபரப்பான டை பிரேக்கரில் 7-6 (7-5) என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடைசி செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 2-6, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் 2 மணி 31 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால் இறுதியில் பெத்ரா குவித்தோவாவுடன் (செக்.) மோதவிருந்த நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) காயம் காரணமாக விலகியதை அடுத்து, குவித்தோவா அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ரோமானியாவின் சிமோனா ஹாலெப் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் அனா இவானோவிச்சை (செர்பியா) வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெங்களூர் அணிக்கு 199 ரன் இலக்கு: மில்லர் அதிரடி ஆட்டம்! Posted: 10 May 2014 01:32 AM PDT
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 199 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பெங்களூர், எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பந்துவீசியது. பெங்களூர் அணியில் ரோஸ்ஸோ, டிண்டாவுக்கு பதிலாக சச்சின் ராணா, அல்பி மார்கெல் இடம் பெற்றனர். பஞ்சாப் அணியில் ரிஷி தவான், முரளி கார்த்திக் நீக்கப்பட்டு எல்.பாலாஜி, அறிமுக வீரர் ஷிவம் ஷர்மாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. பஞ்சாப் தொடக்க வீரர்களாக வீரேந்திர சேவக், மன்தீப் சிங் களமிறங்கினர்.அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.5 ஓவரில் 60 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.மன்தீப் 21, சேவக் 30 ரன் (24 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். வழக்கம் போல விளாச ஆரம்பித்த கிளென் மேக்ஸ்வெல் 25 ரன் எடுத்த நிலையில் (11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) சாஹல் சுழலில் எல்லைக் கோட்டருகே ஸ்டார்க் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் பெய்லி 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, பஞ்சாப் அணி 116 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சற்றே பின்னடைவை சந்தித்தது. ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், மேக்ஸ்வெல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் அபாரமாக விளையாடிய டேவிட் மில்லர் 23 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். ஸ்டார்க் வீசிய 13வது ஓவரில் அவர் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். ஹர்ஷால் பட்டேல் வீசிய 16வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 26 ரன் அடிக்க பஞ்சாப் ஸ்கோர் எகிறியது. மில்லர் 66 ரன் எடுத்து (29 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) வருண் ஆரோன் பந்துவீச்சில் சாஹல் வசம் பிடிபட்டார்.கடைசி கட்டத்தில் சாஹா, ஜான்சன் இருவரும் அதிரடியை தொடர்ந்தனர். சாஹா 17, அஷ்கர் 2, ஷிவம் 4 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன் குவித்தது. ஜான்சன் 16 ரன், பாலாஜி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பெங்களூர் பந்துவீச்சில் சாஹல், ஹர்ஷால், ஸ்டார்க் தலா 2, ஆரோன், அல்பி மார்கெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 10 May 2014 01:01 AM PDT
உலகெங்கும் கலவரம் ஏற்படும் இடங்களில் மனித உயிர்களை காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனி மனிதரோ அல்லது பல்வேறு அரசு பிரிவினருக்கோ முதல் முறையாக செனகல் நாட்டு சமாதான தூதரின் பெயரில் வீரதீர விருது வழங்கப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது. ருவாண்டாவில் கடந்த 1994ம் ஆண்டு டுட்சி மற்றும் ஹுட்டுஸ் இனத்தவருக்கு இடையே மிக பெரிய கலவரம் ஏற்பட்டது. 100 நாட்கள் நடைபெற்ற கலவரத்தின் போது சுமார் 8 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தை அடக்கி, ருவாண்டாவில் அமைதி ஏற்படுத்துவதற்காக செனகல் நாட்டை சேர்ந்த கேப்டன் மேபே டியாக்னி தலைமையில் ஐ.நா. அமைதி குழு சென்றது. இனக் கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான மக்களை மேபே டியாக்னி உயிருடன் மீட்டார். உலகெங்கும் நடைபெறும் கலவரம் மற்றும் ஆபத்து காலங்களில் மனித உயிர்களை காக்கும் பணிகளில் ஈடுபடும் தனி மனிதரோ, போலீஸ், ராணுவம், ஐ.நா. மற்றும் அதன் உதவி பிரிவை சேர்ந்தவர்களோ உயிரை துச்சமென மதித்து காப்பாற்றுபவருக்கு புதிய வீரதீர விருதை புதிதாக ஐ.நா. ஏற்படுத்தி உள்ளது. அந்த விருதுக்கு கேப்டன் மேபே டியாக்னி பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் ஐ.நா. சபையில் நேற்று கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தை அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டன.ஒவ்வொரு ஆண்டும் அனைத்து நாடுகளின் உறுப்பினர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்டவருக்கோ அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவருக்கோ இந்த விருதை ஐ.நா. பொதுச் செயலாளர் வழங்குவார் என்று ஐ.நா. அறிவித்துள்ளதுThis posting includes an audio/video/photo media file: Download Now |
| சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி இந்தியர்கள் குறித்த தகவல்களை தர முடியாது! சுவிஸ் அரசு மறுப்பு! Posted: 10 May 2014 12:51 AM PDT
கறுப்பு பண விவகாரத்தில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி இந்தியர்கள் குறித்த தகவல்களை தர முடியாது' என்று சுவிஸ் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்து ஏராளமான இந்தியர்கள் ரூ.70 லட்சம் கோடி வரை சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் ஜெர்மன் வங்கியில் பணம் பதுக்கிய 18 இந்தியர்களின் தகவல்களை இந்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்நிலையில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கியுள்ள இந்தியர்களின் கறுப்பு பண கணக்கு விவரங்களை தர வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. இதுகுறித்து சில தினங்களுக்கு முன்பு சுவிஸ் நிதியமைச்சர் ஈவ்லின் வித்மர் ஸ்லம்புக்கு, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கடிதத்தில் எச்எஸ்பிசி வங்கி கிளைகளில் கறுப்பு பணத்தை பதுக்கியவர்களின் கணக்கு விவரங்களை தர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் சர்வதேச ஒப்பந்த விதிகளை மீறி கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் தகவல்களை தர முடியாது என சுவிஸ் மறுத்துள்ளது. இதுகுறித்து சுவிஸ் நிதித்துறை செயலர் அளித்த பேட்டியில், 'வரி ஏய்ப்பு செய்வோர் மீது இந்தியாவை போலவே சுவிஸ் அரசும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளது. இந்தியா & சுவிஸ் நாடுகளுக்கு இடையே கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச வரி விதிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இரட்டை வரிவிதிப்பு முறை நடைமுறையில் உள்ளது. வங்கி தொடர்பாக ஏற்கனவே இந்தியா கோரி வந்த பல்வேறு கோரிக்கைகளில் சுவிஸ் முடிந்தவரை சாதகமான பதில்களை அளித்து வந்துள்ளது. தற்போது சர்வதேச விதிகளின்படி ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்ட தகவல்களை தர இயலாது' என்று தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு தீவைத்த பௌத்த பிக்குகள்! Posted: 10 May 2014 12:43 AM PDT
அளுத்கம நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் வணிக நிலையம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான 250 இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சகோதரரால், சிறுவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியே பௌத்த அடிப்படைவாதிகளால் இந்த வர்த்தக நிலையத்துக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான மொகமட் நயீம்கான்,இது தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார். சிறுவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமது சகோதரர் கைது செய்யப்பட்டு, வர்த்தக நிலையத்துக்குள் எடுக்கப்பட்ட எல்லா காணொளிப் பதிவுகளும் ஆராயப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். விகாரை ஒன்றில் கலந்துரையாடப்பட்ட பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கு பாதுகாப்பு வழங்குமாறு அவர்கள் கேட்கப்பட்டதாக தாம் அறிந்ததாகவும் மொகமட் நயீம்கான் தெரிவித்துள்ளார். 8ம் திகதி மாலை 5. 00 மணிக்கு வர்த்தக நிலையத்துக்குத் தீவைக்க முடிவு செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால், நேற்று அதிகாலையிலேயே தீவைப்பு இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மூன்று பௌத்த பிக்குகள் தலைமையில் சென்ற சுமார் 250 தொடக்கம் 300 பேர் வரை, இந்த வர்த்தக நிலையத்துக்கு தீவைத்து எரித்துள்ளனர். இதனால் இரண்டு மாடி வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவித்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடிச் சாட்சியத்தினை இசைப்பதிவாக்கிய தாயக கலைஞர்கள்! Posted: 10 May 2014 12:08 AM PDT
தமிழர் தேசத்தில் விடுதலை முரசமிட்ட கலைஞர்கள், தங்களின் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நேரடிச் சாட்சியத்தினை 'காய்ந்து போகாத இரத்தக்கறை' எனும் இசைத்தொகுப்பின் மூலம் பதிவாக்கியுள்ளனர். முள்ளிவாய்க்காலின் பெருவலியினையும், மக்களின் மனவிருப்பினையும், 10 பாடல்களாக பதிவாக்கம் செய்யப்பட்டுள்ள இத் தொகுப்பில், தமிழீழத் தாயகக் கலைஞர்களுடன் தமிழக கலைஞர்களும் கைகோர்த்துள்ளனர். இசைக்கலைஞர் சாகித்யன் இசையில் சாதுரியன், நிலவன், விஜி மற்றும் காசி ஆனந்தன் ஆகிய கவிஞர்கள் பாடல்வரிகளை எழுதியுள்ளனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்களுக்கான அமைச்சு, தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ம் நாளன்று வெளியிடுகின்றது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


















