Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதியில் தரிசனத்துக்கு 1 லட்சம் பக்தர்கள் காத்திருப்பு

Posted: 10 May 2014 10:34 PM PDT

கோடை விடுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாகவே பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. வார விடுமுறை மற்றும் சனிக்கிழமை என்பதால் நேற்று திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் இருந்தது. தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு வெளியானதால் தமிழக பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை 44,610 பக்தர்கள்

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

Posted: 10 May 2014 10:29 PM PDT

சீமாந்திராவில் உள்ள 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதியில் கடந்த 7–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவின் போது பல இடங்களில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. கடப்பா, அனந்தபுரம், பிரகாசம் மாவட்டத்தில் நடந்த மோதலில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தெலுங்குதேசம்

உலகத் தலைவர்களுக்கு பிரியாவிடைக் கடிதங்கள் அனுப்பிய பிரதமர் மன்மோகன் சிங்

Posted: 10 May 2014 05:32 PM PDT

இந்தியாவில் பொதுத் தேர்தல் முடிந்து அதன் முடிவுகள் வரும் 16ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து மறுநாள் தற்போதைய இந்தியப் பிரதமரான மன்மோகன்சிங் தனது பதவியிலிருந்து விலகுகின்றார். இரண்டு முறை ஐக்கிய முற்போக்கு முன்னணியின் தலைவராக அரசை வழிநடத்தியபின் மன்மோகன்சிங் அரசியலிலிருந்து விலகுவதான தனது அறிவிப்பை வெளியிட்டார். வரும் 14ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைமையால் இவருக்கான பிரிவுபசார விழா

வாரணாசி உள்பட 41 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு

Posted: 10 May 2014 04:45 PM PDT

543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் தேதி முதல் மே 12-ந் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 9-வது இறுதிக்கட்டமாக நாளை 3 மாநிலங்களில் உள்ள 41 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது உத்தர

2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த 26 பேர் கொண்ட குழு இன்று கொழும்பு பயணம்

Posted: 10 May 2014 04:14 PM PDT

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும், இன்னல்களுக்கும் உள்ளாகின்றனர். பன்னாட்டு கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டப்படும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறைகளில் அடைத்து விடுகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம், தமிழக மீனவர்களை

விமானப்படை அதிகாரியை கொன்ற மனைவி: கள்ளக்காதலனுடன் கைது

Posted: 10 May 2014 02:45 PM PDT

இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ரமேஷ் சந்திரா (வயது 40). இவரது மனைவி பெயர் சுதா சந்திரா (28). இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. தென்மேற்கு டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் சுப்ரதோ பூங்கா என்ற இடத்தில் உள்ள அரசு குடியிருப்பில் இவர்கள் வசித்து வருகிறார்கள்.

மீரட்டில் பயங்கர கோஷ்டி மோதல்: பதட்டம்-துணை ராணுவ வீரர்கள் குவிப்பு

Posted: 10 May 2014 02:22 PM PDT

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் இரு பிரிவினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குத்ரி பஜார் பகுதியில் உள்ள மசூதி அருகே தண்ணீர் குளிர்விக்கும் மையம் அமைக்கப்பட்டது. இதற்கு அங்குள்ள ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுக்கும் மற்றொரு

பெண் டாக்டர் படுகொலை: ஒரு தலைக்காதலால் அத்தை மகனே சுட்டுக்கொன்ற விபரீதம்

Posted: 10 May 2014 01:42 PM PDT

போபால் நகரில் மணக்கோலத்தில் இருந்த பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு தலைக்காதலால் அத்தையின் மகனே சுட்டுக்கொன்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சினிமாபட கிளைமாக்ஸ் காட்சிகளையெல்லாம் மிஞ்சும் வண்ணம் நிகழ்ந்த, நெஞ்சை பதை பதைக்கச் செய்யும் இந்த கொடூர கொலை பற்றிய விவரம்

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 10 May 2014 12:48 PM PDT

காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியான கல்சியா பகுதியில் நேற்று அதிகாலையில் ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 2.30 மணியளவில் 4 தீவிரவாதிகள், பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

நான் பிரதமர் ஆவதை தடுப்பது தான் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளின் நோக்கம்: நரேந்திர மோடி

Posted: 10 May 2014 12:33 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா தொகுதியில் பிந்தரா கிராமத்தில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு டெல்லியில் ஒரே தட்டில் இருந்து தான் உணவு கிடைக்கிறது. சோனியா காந்தி தான்

ஆந்திர பிரதேசம்: 29 வாக்குசாவடிகளில் மறுதேர்தல்

Posted: 10 May 2014 12:19 PM PDT

ஆந்திர பிரதேசத்தில் 29 வாக்குச்சாவடிகளில் மே 13-ந் தேதி மறு தேர்தல் நடைபெறும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரி பகன்வார்லால் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் 11 வாக்குச்சாவடிகளிலும், சீமாந்திராவில் 18 வாக்குச்சாவடிகளிலும் ஏப். 30 மற்றும் மே 7ந் தேதி நடைபெற்ற தேர்தலின் போது முறைகேடுகள் தொடர்பாக புகார்கள் வந்ததால் மறுதேர்தல்

தேர்தல் முடிவுக்குப் பின்னர் 3-வது அணிக்கு முயற்சி: பிரகாஷ் காரத்

Posted: 10 May 2014 11:36 AM PDT

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அல்லாத மதச்சார்பற்ற மாற்று அணி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் மீண்டும் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் காரத் பேசியதாவது:-

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 14-ம்தேதி பிரிவுபசார விருந்து அளிக்கிறார் சோனியா

Posted: 10 May 2014 11:15 AM PDT

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரியாவிடை அளிக்கும் வகையில் மே 14-ம் தேதி விருந்து அளிக்க உள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த விருந்துக்கு சோனியா ஏற்பாடு செய்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாடிய 8 வயது சிறுவன் சாவு: போதை பார்ட்டியால் வந்த வினை

Posted: 10 May 2014 11:01 AM PDT

டெல்லி அருகே உள்ள நொய்டாவில், 8 வயது சிறுவன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த எதிர்பாராத விபத்தில் பலியானான். நொய்டாவின் 58-வது செக்டாரில் நேற்று இரவு பிரியன்ஷு என்ற 8 வயது சிறுவனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. அவனது வீட்டில் நடந்த இந்த கொண்டாட்டத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். பின்னர் உறவினர்கள் ஒன்று சேர்ந்து மது

பிரச்சாரம் முடிந்ததும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் மோடி ஆலோசனை

Posted: 10 May 2014 10:38 AM PDT

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை உத்தர பிரதேசத்தில் முடித்த கையோடு டெல்லி சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தேர்தல் நிலவரம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர். மேலும், முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயையும் சந்தித்து ஆசி பெற்றார்.

மீனவர் பிரச்சினை: திட்டமிட்டபடி 12ஆம் தேதி இந்தியா-இலங்கை இடையே பேச்சுவார்த்தை

Posted: 10 May 2014 10:05 AM PDT

இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகளிடையே குறிப்பிட்டபடி வரும் 12ஆம் தேதியன்று மீனவர் பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இலங்கை உயர் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசத்தில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள ஐந்து படகுகளோ அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள 24 இலங்கை மீனவர்களோ இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருக்கமாட்டார்கள் என்று இலங்கை

பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு ஆதரவு இல்லை: மாயாவதி திட்டவட்டம்

Posted: 10 May 2014 07:07 AM PDT

பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்காது என்று அந்த கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். லக்னோவின் இன்று நிருபர்களிடம் பேசிய மயாவதி:- ''மத்தியில் ஆட்சியமைக்க எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது. உத்தர பிரதேசத்தில் மட்டும் பகுஜன் கட்சி அதிகமான இடங்களில் வெற்றிபெறும். மத்தியில் ஆட்சியமைக்க பா.ஜதனா மற்றும் காங்கிரஸ் அணிக்கு உதவி தேவைப்பட்டால் பகுஜன் சமாஜ் சட்சி ஆதரவு அளிக்காது என்பதை நான் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

திருவனந்தபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

Posted: 10 May 2014 05:19 AM PDT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லயத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். கல்லயத்தைச் சேர்ந்த மனோகரன் (வயது 66), அவரது மனைவி மகேஸ்வரி (61). மகன் பிஜு (36), சஜு (33), பிஜுவின் மனைவி கிருஷ்னெந்து (வயது 24) ஆகியோர் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். மனோகரனுக்கு பணப்பிரச்சினை இருந்துள்ளது. இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்துள்ளார்.

41 தொகுதிக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

Posted: 10 May 2014 04:57 AM PDT

மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் 41 தொகுதிகளிலும் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது. 41 தொகுதிகளுக்கும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இன்றிரவு முதல் நாளை முழுவதும் பூத் சிலிப் கொடுக்கும் பணி

ராகுல் தேர்தல் விதிமுறையை மீறவில்லை: சம்பத் விளக்கம்

Posted: 10 May 2014 04:46 AM PDT

அமேதி தொகுதியில் கடந்த 7–ந்தேதி வாக்குப்பதிவு நடந்த போது ராகுல்காந்தி ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு வாக்களிக்கும் தடுப்பு பகுதிக்குள் அத்துமீறி சென்று வாக்குப்பதிவு எந்திரத்தை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக புகைப்பட ஆதாரங்களுடன் செய்திகள் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™