Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தலித் சிறுமிகள் பாலியல் படுகொலை! ஐ.நா.சபை கடும் கண்டனம்

Posted: 31 May 2014 01:13 AM PDT

uttar-pradesh-murder

uttar-pradesh-murderஉத்தர பிரதேசத்தில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் உஷைத் கிராமத்தைத் சேர்ந்த, 14, 15 வயதுள்ள இரு சிறுமிகள் கடந்த 27 ஆம் தேதி இரவு காணாமல் போயினர். இதுகுறித்த வழக்கை காட்ரா சதாத்கஞ்ச் காவல்துறை பதிவு செய்ய மறுத்தது. 28ஆம் தேதி காலை இரு சிறுமிகளின் உடல்களும் மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டன. இச்சம்பவத்தால் வெகுண்டெழுந்த கிராம மக்கள் காவல்துறை யின் அலட்சியத்தைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கினர். இதைத்தொடர்ந்து காவல்துறை யினர் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரு காவலர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப் பட்டனர். பிரேதப் பரிசோதனையில் இரு சிறுமிகளும் கும்பலால் பலாத் காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது படுபயங்கரமான செயல் எனவும், கொடூர குற்றச் செயல் எனவும் ஐ.நா.வின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபனே துஜ்ஜாரிக் தெரிவித்துள்ளார். "ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் சட்டத்தால் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரசிகர்களின் 'செல்லக்குட்டி ரெய்னா' புதிய சாதனை

Posted: 31 May 2014 01:05 AM PDT

raina

rainaஅனைத்து ஐபிஎல் சீசன்களிலும் சராசரியாக 400 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டித்தொடர்களை ஆரம்பித்து தற்போது 7வது சீசன் சென்றுகொண்டுள்ளது. இதில் 7 முறையும் பிளை ஆப் சுற்றுக்கு வந்தது சென்னை. 5 முறை பைனலுக்கு சென்றது மட்டுமின்றி இரண்டு முறை கோப்பையை வென்று அசத்தியது சென்னை. அனைத்து சீசன்களிலும் சீராகவும், சிறப்பாகவும் ஆடும் ஒரே அணி சென்னைதான். மற்ற அணிகள் ஒரு சீசனில் 'ஓஹோ' என ஆடினால் அடுத்த சீசனில் 'அட்டர் பிளாப்'பாகிவிடும். சென்னை அணியின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணம், சுரேஷ் ரெய்னாதான். டோனியைப்போலவே, ரெய்னாவும் ஆரம்பம் முதல் அனைத்து சீசன்களிலும் சென்னை அணிக்காக ஆடி வருகிறார். சென்னை அணியைப்போலவே ஐபிஎல்லில் சீராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதும் ரெய்னா மட்டுமே. 7 ஐபிஎல் சீசன்களிலும் அட்டகாசமாக விளையாடி புது சாதனைகளை படைத்தவண்ணம் உள்ளார். ஐபிஎல் வீரர்களிலேயே 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை நடப்பாண்டு தொடரின் தொடக்கத்திலேயே பெற்றார் ரெய்னா. தற்போது அவரின் ஐபிஎல் மொத்த ரன் எண்ணிக்கை 3238. மொத்தம் 114 பந்தையங்களில் ஆடி இந்த ரன்களை அடித்துள்ளார். அடுத்த இடத்தில் இருப்பது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா. இவர், 2903 ரன்களுடன் உள்ளார். மூன்றாம் இடம் கொல்கத்தாவின் கம்பீருக்கு. இவர் மொத்தம் 2783 ரன்களை விளாசியுள்ளார். ரெய்னா இதுவரை 23 அரை சதங்கள் அடித்து, அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை கம்பீருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளின் 7 சீசனிலும் சராசரியாக 400 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் சுரேஷ் ரெய்னா பதிவு செய்து, சென்னை ரசிகர்களின் செல்லக்குட்டியாக மாறியுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சென்னை தோல்வியால் வெளிநாட்டு வீரர்களை திட்டிய டோணி!

Posted: 31 May 2014 12:59 AM PDT

dhoni

dhoniஅனுபவம் மிக்க சில சர்வதேச வீரர்களின் பொறுப்பற்றதனத்தால்தான் தோற்று துவண்டுபோய் கிடக்கிறோம் என்று அனலை அள்ளி கக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மகேந்திரசிங் டோணியின் முகத்தில் முழிக்க வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் சக வீரர்கள். பின்னே என்ன.. மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் எதற்கும் கலங்காத டோணி யவே இப்படி ஆத்திரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுவிட்டார் பிரண்டன் மெக்கல்லம். வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நேற்று பஞ்சாப்பை எதிர்கொண்டது சென்னை அணி. வழக்கம்போல பஞ்சாப் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி 226 ரன்களை குவித்தது. 'ரன் உபயம் வீரேந்திரசேவாக்' என்று மைதானத்தில் எழுதிபோடவில்லை. மற்றபடி சதம் அடித்து சென்னை பவுலர்களைசிதைத்துவிட்டார் சேவாக். பெரிய ஸ்கோர்தான் என்றாலும் 'சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்' போல சென்னையும் வரிந்து கட்டி அடித்தது. ஸ்கோர் பார்முலா ஒன் கார்போல கிடுகிடுவென உயர்ந்தது. அதிலும் 25 பந்துகளில் ரெய்னா 87 ரன் அடித்து சீறும் சிங்கமாக காட்சியளித்தபோது, பஞ்சாப் அணி வயிற்றில் புளி கரைந்தது. அப்போதுதான் அந்த புண்ணியகாரியத்தை செய்தார் நியூசிலாந்து இறக்குமதியான பிரண்டன் மெக்கல்லம். அப்படியும், இப்படியுமா, ஓடுவதுபோல பாவலா செய்து ரெய்னாவை ரன் அவுட்டுக்கு பலி கொடுத்தார் மெக்கல்லம். ஒருவகையில் பஞ்சாப்புக்கு இந்தாண்டின் மிகப்பெரிய உதவியை செய்தார் மெக்கல்லம். ரெய்னா ரன் அவுட் ஆனதும் தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டனர் சென்னை ரசிகர்கள். மெக்கல்லமும் அதிரடி ஆட்டக்காரர்தானே இந்த முக்கியமான தருணத்தில் அணிக்கு கைகொடுப்பார் என்று எதிர்பார்த்து திரையில் விழிவைத்து காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால் 16 பந்தில் 11ரன் மட்டுமே எடுத்த மெக்கல்லமும் ரன் அவுட் ஆகி கடுப்பேற்றினார். மிடில் ஆர்டர் பெயிலாக இவ்விரு ரன் அவுட்டுகளும்தான் காரணமாகிவிட்டது. இறுதியில் கேப்டன் டோணி வந்தும் இமாலய ஸ்கோருக்கு முன்பு எதுவும் செய்ய முடியவில்லை. இறுதி பந்து வரை களத்தில் இருந்த டோணி கடைசி பந்தை சிக்சருக்கும் விரட்டினார். எப்போதும் கடைசி பந்தை டோணி சிக்சருக்கு தூக்கினால் அப்போது அவரது அணிதான் வெற்றி பெறும். ஆனால் இம்முறை டோணியின் சிக்சருக்கு எதிரணிதான் மகிழ்ச்சியடைந்தது. பந்தையத்துக்கு பிறகு நொந்துபோய் டிவி வர்ணணையாளரிடம் டோணி பேசியபோது வழக்கத்துக்கு மாறாக அவரது பேச்சில் அனல் தெறித்தது. "சில சர்வதேச விளையாட்டு வீரர்கள் பொறுப்பற்றதனமாக ஆடியதால்தான் தோல்வியடைய நேரிட்டது. ரெய்னா ஆடிய விதத்தை பார்க்கும்போது, நாங்கள் வெற்றி பெறுவோம் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தோம். இந்த பொறுப்பற்ற ஆட்டத்தால்தான் மிடில் ஆர்டர் சரிந்து தோல்வியை பெற வேண்டியதாயிற்று" என்று ஓப்பனர் டுப்ளிசியையும், குறிப்பாக மெக்கல்லத்தையும் வாட்டினார் டோணி. சென்னை பந்து வீச்சாளர்கள் மீதும் கடுமையான கோபத்தில் டோணி இருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. "சென்னைகிட்ட இருக்கிற பவுலர்களை எதிரணி வீரர்கள் அடித்து நொறுக்காவிட்டால்தான் அது ஆச்சரியம். பஞ்சாப் எப்படியும் வழக்கம்போல 200 ரன்னை கடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அதே நேரம் பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு அந்த பெருமையை அளித்தே ஆக வேண்டும்" என்றார். சென்னையுடனான இந்த சீசனின் மூன்று பந்தையங்களிலும் பஞ்சாப் 200 ரன்னுக்கு மேல்தான் எடுத்திருந்தது. இதுதான் டோணியின் கோபத்துக்கு காரணம். ஜூன் 8ம்தேதி மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு நடுவேயான டெஸ்ட் பந்தையம் ஆரம்பிக்கிறது. சென்னை பைனலுக்கு சென்றிருந்தால், மெக்கல்லத்தை மே.இந்திய தீவுகளுக்கு எதிரான நியூசிலாந்து அணியில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்தது. முன்கூட்டியே சென்னை வெளியேறியதால் மெக்கல்லத்துக்கு மே.இந்திய சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது. அவர் டாட்டா காட்டிவிட்டார். ஆனால் சென்னை ரசிகர்கள்தான் மெக்கல்லம் மீது கொலைவெறியில் உள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி பெல்ஜியத்துடன் இன்று இந்தியா பலப்பரீட்சை!

Posted: 31 May 2014 12:48 AM PDT

Hockey-players

Hockey-playersஉலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரில், ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது. நெதர்லாந்தின் ஹேக் நகரில் உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடர் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. மொத்தம் 12 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி பெல்ஜியம், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, ஸ்பெயின் அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது. கோலாலம்பூரில் 1975ம் ஆண்டு நடந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, அதன் பிறகு அரை இறுதிக்கு கூட முன்னேற முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்து வந்துள்ளது. இந்த நிலையில், சர்தாரா சிங் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி இம்முறை வெற்றிகளைக் குவிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இந்திய அணியின் உயர் செயல்பாட்டுக்கான இயக்குனர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ், 'நாம் கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளோம். போட்டிகள் எத்தனை சவாலாக இருக்கும் என்பதை வீரர்கள் அனைவரும் உணர்ந்துள்ளனர். சிறப்பாக விளையாடி வெற்றிகளைக் குவிக்க முடியும் என நம்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார். பி பிரிவில் ஜெர்மனி, நெதர்லாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா இடம் பெற்றுள்ளன. ஜூன் 10 தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 13ம் தேதியும், இறுதிப் போட்டி ஜூன் 15ம் தேதியும் நடைபெற உள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மட்டக்களப்பைச் சேர்ந்த இலங்கையர் தொடர்பில் மர்மம்! கொலை என சந்தேகம்!

Posted: 31 May 2014 12:41 AM PDT

sachuthan

sachuthanமலேசியாவில் மரணமான இலங்கையர் அவுஸ்திரேலியா அனுப்புவதாக ஏமாற்றியே கொலை செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாகன விபத்தில் மரணித்தமை தொடர்பாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த 24ம் திகதி மலேசியாவில் விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் விபதுக்குள்ளாகியதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு களுதாவளையை பிறப்பிடமாக கொண்ட அருந்தவச்செல்வன் சச்சுதன் என்பவரே வாகன விபத்தில் உயிர் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் சுமார் 4 வருட காலமாக மலேசியாவில் தொழில் புரிந்துள்ளார். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று அவருடைய உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது இதன் போது அவருடைய மனைவி கருத்து தெரிவிக்கையில், தனது கணவன் கடந்த ஒரு வருடத்துக்கு முதல் தான் அவுஸ்திரேலிய செல்வதற்காக ஒரு தரகரிடம் இலங்கை பணம் 8 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. அதற்க்கு பணம் தேவை, பணத்தை தனது கணக்குக்கு போடும்படி மனைவியிடம் கூறியுள்ளார். அதன் படி மனைவியும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். தரகர்கள் அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி இவரை ஏமாற்றி உள்ளனர். இதன் காரணமாக இறந்தவருக்கும் தரகருக்கும் இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தனக்கு கணவன் தொலைபேசி மூலம் அறிவித்துள்ளார் என தெரிவித்தார். இவருடைய மரணம் திட்டமிட்டு செய்யப்படுள்ளது என தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மஹிந்த ராஜபக்‌ச அழைத்தால் அரசியலுக்கு வருவேன் கோத்தபாய ராஜபக்‌ச பேட்டி!

Posted: 31 May 2014 12:35 AM PDT

mahinda_kodapaya

mahinda_kodapayaஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச அழைத்தால் அரசியலுக்கு வருவராம் அவரது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்‌ச. அப்படி வந்தால் கொழும்பில்தான் தேர்தலில் குதிப்பாராம்! - இதனை அவரே தெளிவாகக் கூறியிருக்கின்றார். விஜய பத்திரிகை நிறுவனம் 'தேசய' (தேசம்) என்றொரு சிங்கள வார இதழை இவ்வாரம் முதல் வெளியிடுகின்றது. அதன் முதலாவது இதழுக்கு வழங்கிய விசேட செவ்விலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச இத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்த தகவல்களின் சாராம்சம் வருமாறு:- ஜனாதிபதி என்னிடம் ஒப்படைத்த பணிகளை நான் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் அரசியலுக்கு வருமாறு ஜனாதிபதி என்னைப் பணித்தாரானால் நான் அரசியலுக்கு வருவேன். நான் நாட்டுக்கு என்ன செய்துள்ளேன் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எனக்கு மக்கள் அங்கீகாரமளிப்பார்கள். நான் அரசியலுக்கு வருவது நாட்டுக்குத் தேவை எனக் கருதி ஜனாதிபதி என்னை அழைப்பாராயின் அதற்குப் பின் நிற்கமாட்டேன். நாட்டுக்கு எந்த வகையில் நான் பணியாற்றுவது பொருத்தமானது என ஜனாதிபதி கருகின்றாரோ அந்த வகையில் நான் பணியாற்றுவேன். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்களை நான் செவ்வனே நிறைவேற்றியமை போல எதிர்காலத்திலும் எனக்கு வழங்கப்படும் பொறுப்புகளை நான் தொடர்ந்து நிறைவேற்றுவேன். அரசியலுக்கு வருவதானால் நான் அம்பாந்தோட்டையில் குதிக்கமாட்டேன். கொழும்பில்தான் நான் இப்போது வசிக்கிறேன். இங்கிருந்துதான் அரசியலுக்குள் நுழைவேன். எனது குடும்பம் அரசியலில் இருபத்தியைந்து வருடங்களுக்கு மேல் பொறுப்பான பணிகளை ஆற்றியிருக்கின்றது. நான் அரசியலுக்கு வருவதால் ராஜபக்‌சக்களின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்றோ, அது தவறு என்றோ கூறமாட்டேன். அமெரிக்காவில் கென்னடி பரம்பரை, இந்தியாவில் நேரு தலைமுறை என்றெல்லாம் அரசியலில் இல்லையா? அது போன்றதுதான் இதுவும். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீதியரசர்தான், கல்வி கற்றவர்தான். ஆனால் இப்போது அவர் திறமையானவராகச் செயற்படவில்லை. சிறந்த நிர்வாகியாகச் செயற்படவில்லை. அவர், அதிக அழுத்ததுக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடிப்படைவாதத்துக்குள் அழுந்திப் போயிருக்கின்றார். மக்களுக்கு சேவை செய்வதற்கான அதிகாரங்கள் அவருக்கு இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பிரயோகித்து நிறைவேற்றும் திறமையற்றவராகவே அவர் உள்ளார். இத்தகைய சாரப்பட அந்தப் பேட்டியில் கருத்து வெளியிட்டிருக்கின்றார் கோத்தபாய ராஜபக்‌ச.

This posting includes an audio/video/photo media file: Download Now

அரசியல் அமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த தயார்! இந்தியாவுக்கு அறிவித்தது இலங்கை

Posted: 31 May 2014 12:29 AM PDT

srilanka_parliament

srilanka_parliamentஇலங்கை அரசியல் அமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள போலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளது. இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி , அரசியல் அமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையான அமுல்படுத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் இதனை கூறியுள்ளது. போலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால், போலிஸ் திணைக்களம் முற்றாக வீழ்ச்சியடையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும் 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள ஏனைய அதிகாரங்களை அமுல்படுத்த முடியும் என அரசாங்கம் இந்தியாவிற்கு தெரியப்படுத்தியுள்ளது. இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்ற அதிகாரத்தை மாகாணங்களுக்கு பரவலாக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் மேற்படி தனது முடிவை இந்தியாவுக்கு அறிவித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேசிய முன்னணியின் அமைச்சருமான விமல் வீரவன்ஸ ஒரு சிறந்த நடிகர் ! முஹிபுர் ரஹ்மான் கருத்து

Posted: 31 May 2014 12:23 AM PDT

vimal-veerasinga

vimal-veerasingaதேசிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ ஒரு சிறந்த நடிகர் என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஹிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்கும் முன்னரே அவரை இலங்கைக்கு வருகை தருமாறு அரசாங்கம் அழைப்பு விடுத்தது. விமல் வீரவன்ஸ இரண்டு, மூன்று கூட்டங்களை நடத்தி அரசாங்கத்தை விமர்சித்ததும், அவரது 12 யோசனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி சந்தர்ப்பம் வழங்கினார். வாக்குகள் பிரிந்து விடும் என்று ஜனாதிபதி பயந்தார். விமல் அரசாங்கத்தில் இருந்து வெளியேற மாட்டார். அவர் ஒரு சிறந்த நடிகர். அரசாங்கத்திற்கு கெட்டகாலம் தொடங்கி விட்டது என்ற புரிந்து கொண்ட விமல் இந்த நாடகம் நடிக்க ஆரம்பித்து விட்டார். உண்மை எது பொய் எது என்பதை விரைவில் அறிந்து கொள்ள முடியும் என்றும் முஹிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வனராஜா பிரதேசத்தில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்ற மோதி விபத்து!

Posted: 31 May 2014 12:18 AM PDT

hatton-bus

hatton-busஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நோர்வூட்டிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் ஹட்டனிலிருந்து நோர்வூட்டிற்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் படுங்காயத்திற்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 30 நிமிடங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது. ஹட்டனிலிருந்து நோர்வூட்டிற்கு சென்ற பஸ் வேகமாக வந்ததாலையே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் போலிஸார் தெரிவித்தனர். மேற்படி பஸ்ஸின் சாரதியை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை ஹட்டன் போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஜனாதிபதி ஒபாமாவுடன் ஹிலாரி கிளிண்டன் இரகசிய விருந்து!

Posted: 31 May 2014 12:13 AM PDT

hilary_meets_obama

hilary_meets_obamaஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் முன்னாள் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் சேர்ந்து மதிய உணவு உட்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி ஹிலாரி (66) வரும் 2016ம் ஆண்டின் ஜனநாயக கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஒபாமாவுடன் ஹிலாரி சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டது அந்நாட்டின் அரசியல் வட்டாரங்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக வெளியான செய்தியில்,இந்த விருந்து முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் ஆனால் அவர்கள் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா, கல்கரியில் கட்டப்படும் பல மில்லியன் டாலர் கொண்ட குடும்ப வீடு

Posted: 31 May 2014 12:09 AM PDT

House

Houseவெளிப்பார்வைக்கு ஒரு புதிய ஹொட்டேல் போல் தோற்றமளிக்கும் இக்கட்டிடம் மேற்கு கல்கரியில் கட்டப்படும் ஒரு மிகப் பெரிய ஒற்றை- குடும்ப வீடாகும். கல்கரி மக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மத்தியில் இது குறித்து பரவலாக பேசப்படுகின்றது. 80-ஏக்கரில் அமைக்கப்பட்டு வரும் இந்த இரண்டு அடுக்கு வீடு பூர்த்தியடையும் போது 11,000 சதுர-அடிகளை கொண்டதாக அமையும் என கூறப்படுகின்றது. இந்த வீடு 9-கார் கராஜ்கள் 7-வ்வயபிளேசஸ் மற்றும் 2-காவலர் வீடுகள் போன்றவற்றையும் கொண்டிருக்கும். இந்த வீட்டின் விலாசம் 242131 ரேஞ்ச் வீதி. றொக்வியு கவுன்ரி.என்றும் ஆனால் இது புதிதாகையால் இதனை கூகுள் படத்தில் கண்டுபிடிக்க முடியாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் ஆவணங்களின் பட்டியல் மதிப்பு 3,159,594 டாலர்கள் ஆகும். அனுமதி வரையறைகளின் செலவு 10,000-ற்கும் மேலாகுமெனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலம் காலியாக இருந்த ஒரு விவசாய நிலமெனவும்  11,500 டாலர்கள் பெறுமதியான தெனவும் தெரிவிக்கப் படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

நடு வீதியில் வெறுங்காலுடன் தனியாக நின்ற குழந்தையை காப்பாற்றிய ஹீரோ பஸ் டிரைவர்!

Posted: 31 May 2014 12:00 AM PDT

hero

heroபோட்லான்ட். ஒறெகொன் என்ற இடத்தில் நடு வீதியில் வெறுங்காலுடன் தனியாக நடந்துகொண்டிருந்த குழந்தை ஒன்றை பஸ் டிரைவர் ஒருவர் தனது விரைவான நடவடிக்கையினால் கண்டு பிடித்து காப்பாற்றியதால் ஒரு ஹீரொவென பாராட்டப்பட்டார். பேரூந்தில் இருந்த பாதுகாப்பு கமரா வெள்ளிக்கிழமை குழந்தை நடந்துவந்த காட்சியை படம் பிடித்துள்ளதை கண்ட சாரதி விரைவாக பேரூந்தை நிறுத்தி விட்டு 2-வயதுடைய ஜேம்ஸ் என்ற குழந்தை பிசியான சந்தியில் அலைந்து திரிய முன்னர் காப்பாற்றினார். குழந்தையை தனது பேரூந்தில் இருக்கவைத்து பொலிசார் மற்றும் மனித சேவைகள் திணைக்கள அதிகாரிகள் வரும்வரை காத்திருந்தார். அந்த நேரத்தில் குழந்தையை அமைதிப்படுத்தி பின்னர் ஹாட் சொக்கலேட் கொடுத்துள்ளார். குழந்தையை காணவில்லை என தந்தையார் ஏற்கனவே அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். அதிகாரிகள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் தந்தை இரவு வேலை செய்த களைப்பில் நித்திரையாகி விட்ட சமயம் ஜேம்ஸ் தனக்கே தெரியாமல் அலைந்து திரிய ஆரம்பித்துள்ளார் என கருதப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒன்றாரியோ லண்டனில் 10 வயதுச் சிறுவன் மீட்பு!

Posted: 30 May 2014 11:55 PM PDT

london

londonஒன்றாரியோவிலுள்ள லண்டனில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் கிட்டத்தட்ட 2 வருடங்களாக ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றான் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சிறுவன் ஒரு மோசமான நிலையிலுள்ள ஒரு படுக்கையறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றான் எனவும் தெரியவருகிறது. சிறுவனை அடைத்து வைத்திருந்த மாமா மாமி ஆகிய இருவர்மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. வெள்ளிக்கிழமை மாலை நடத்தப்பட்ட பத்திரிகை மாநாட்டில் போலிசார் இது ஒரு பயங்கரமான சம்பவம் எனவும் தாம் அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்தபோது அவன் அணிந்திருந்த பிஜாமா சிறுநீரால் நனைந்திருந்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பிட்ட சிறுவன் வியாழக்கிழமை மாலை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றான் எனவும் அங்கு மருத்துவப் பரிசோதனையின்போது சிறுவன் மிகவும் குறைந்தளவ உடல் எடையைக் கொண்டிருந்ததாகவும், ஊட்டச்சத்துக்கள் அற்ற நிலைகாணப்பட்டதாகவும் தெரியவந்திருக்கின்றது. அத்துடன் சிறுவன் ஒவ்வொரு நாளும் இரு வேளைகள் மட்டும் உணவு கொடுக்கப்பட்டிருக்கின்றான் எனவும் அதுவும் கடைகளில் பெறப்பட்ட உணவு வகைகளே கொடுக்கப்பட்டன எனப் போலிசார் தெரிவித்திருக்கின்றனர். குறிப்பிட்ட சிறுவனின் அறை மட்டுமல்ல அந்த முழு வீடே அழுக்கடைந்த நிலையில் காணப்பட்டது எனப் போலிசார் தெரிவித்திருக்கின்றார்கள். சிறுவனை அடைத்து வைத்திருந்தவர் மாமா, மாமி மட்டுமல்ல சிறுவனின் பாதுகாவல்களாகவும் விளங்கியிருக்கின்றார்கள் . சிறுவனின் பெற்றோர்கள் இந்த நாட்டில் இல்லையெனவும் தெரியவருகிறது. இதுவரையில் அவர்களுடனான தொடர்பு கிடைக்கவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் போலிசாரினால் காணப்பட்டபோது மிகவும் குழப்பமடைந்து காணப்பட்டதாகப் போலிசார் தெரிவித்திருக்கின்றனர். தற்போது சிறுவன் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டு children Air Society னது பாதுகாப்பில் விடப்பட்டிருக்கின்றான் எனத் தெரிகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு விரைவில் திருமணம்! நண்பரையே மணக்கிறார்

Posted: 30 May 2014 02:42 AM PDT

divyadarshini

divyadarshiniவிஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு விரைவில் டும்டும்டும் கொட்டப் போகிறார்கள். தன்னுடைய பால்ய நண்பரையே மணக்க இருக்கிறாராம் அவர். டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினியைத் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவ்வளவு அழகான தொகுப்பாளினியாக மக்கள் மனம் கவர்ந்தவர்.தெளிவான உச்சரிப்பாலும்,கலகலப்பான பேச்சாலும் அனைவரையும் கட்டிப் போட்டவர். தொகுப்பாளினி, பகுதி நேர பேராசிரியை என்று பன்முகங்கள் காட்டி ஜொலித்துவரும் டிடி, சமீபத்தில் நடைபெற்ற விஜய் டிவி "டெலி அவார்டு" நிகழ்ச்சியில் சிறந்த தொகுப்பாளினியாக விருது பெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் . இதுபற்றி டிடி கூறுகையில், ''ரொம்பவே சந்தோஷமான தருணம் இது.மொத்தமாக 29 பிரிவுகளில் கொடுக்கப்பட்ட விருதில் சிறந்த தொகுப்பாளினி விருது எனக்கு கிடைத்துள்ளது. நாம ஏதோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறோம். அது மக்களுக்கு பிடிப்பதால்தான் இப்படியான விருதுகள் வரைக்கும் செல்ல முடிகிறது. முதலில் அவர்களுக்கு நன்றி. இந்த நிகழ்ச்சியின்போது விஜய் டிவி குழுவினர் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து அரட்டை அடித்து கொண்டாடியதை மறக்கவே முடியாது'' என்கிறார் திவ்யதர்ஷினி. அதேநேரத்தில் மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக டிடியின் வீட்டில் அவரது திருமணத்தைப் பேசி முடித்துள்ளார்களாம். மாப்பிள்ளையின் பெயர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''அவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணியாற்றியவர். விரைவில் படம் இயக்கப் போகிறார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேல் நாங்கள் இருவரும் நண்பர்கள். என்னோட வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கின நேரம். அவரோட வீட்டில் அவருக்கு பொண்ணு பார்க்க தொடங்கினாங்க. ஒரு வழியாக ரெண்டு பேர் வீட்டிலும் உள்ள பெரியவங்களே பேசி எங்கள் திருமணத்தை முடிவு செய்துட்டாங்க. ஜூன் இறுதியில் சென்னையில் திருமணம். இத்தனை நாட்களாக என்னோட நண்பனாக இருந்த ஸ்ரீகாந்தை, "ஹாய் மாமா'' என்றுதான் செல்லமாக கூப்பிடுவேன். அவ்ளோ ஜாலியான, கேரிங்கான நபர். இப்போ என்னோட லைஃப் பார்ட்னராகவே ஆகிட்டார். ரொம்பவே சந்தோஷமா இருக்கு. உங்க எல்லோரோட ஆசீர்வாதமும் எங்க ரெண்டு பேருக்கும் வேண்டும்'' என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார். தனது திருமணம் குறித்து டிவிட்டரிலும் செய்தி போட்டுள்ளார் திவ்யதர்ஷினி மொத்ததில் விஜய் டிவியில் "நம்ம வீட்டு கல்யாணம்" தொகுப்பாளினியாக இருந்த திவ்ய தர்ஷினியை விரைவில் அதே நிகழ்ச்சியில் விருந்தினராக பார்க்கலாம். வாழ்த்துக்கள் டிடி!

This posting includes an audio/video/photo media file: Download Now

பார்த்திபன் இயக்குனர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார்! சுரேஷ் காமாட்சி கண்டனம்

Posted: 30 May 2014 02:35 AM PDT

parthiban-suresh-kamatichi

parthiban-suresh-kamatichiஇயக்குனர் மணிவண்ணனை அவமதித்துவிட்டார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் என கண்டனம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அமரர் மணிவண்ணன் இயக்கிய 50 வது படம் அமைதிப்படை 2. இந்தப் படத்தைத் தயாரித்தவர் வி ஹவுஸ் சுரேஷ் காமாட்சி. தற்போது கங்காரு என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். மறைந்த அய்யா மணிவண்ணன் அவர்கள் இயக்கிய நாகராஜ சோழன் எம் ஏ எம் எல் ஏ (அமைதிப்படை இரண்டாம் பாகம்) படத்தின் எடிட்டராக சுதர்சன் என்பவரை அறிமுகப்படுத்தினார். அப்போது கிரீன் பார்க்கில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை அறிமுகப்படுத்திப் பேசியும் உள்ளார். அமைதிப்படையைத் தொடர்ந்து தொடர்ந்து இரண்டு மூன்று படங்களில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றினார் சுதர்சன். இப்பொழுது பார்த்திபன், தான் இயக்கி வெளிவர இருக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் மணிவண்ணன் அறிமுகப்படுத்திய எடிட்டர் சுதர்சனை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் மணிவண்ணன் அய்யா முறையாக அறிமுகப்படுத்தவில்லையா? 50 படம் இயக்கிய மணிவண்ணன் அறிமுகப்படுத்திய ஒரு தொழில்நுட்ப கலைஞனை மீண்டும் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்று அழிப்பிதழில் அச்சிட்டிருப்பது மணிவண்ணன் அவர்கள் சுதர்சனை முறை தவறி அறிமுகப்படுத்திவிட்டதாக குறிப்பிடுகிறது. இது பார்த்திபனின் முறையற்ற செயல். பெருமைக்காக மாவிடிப்பதில் பார்த்திபனை மிஞ்ச ஆள் இல்லை. ஓதுவது வேதம்: இடிப்பது பிள்ளையார் கோயில் என்பதாகத்தான் இருக்கும் அவர் நடத்தை போலும். வெளியில் தன்னை ஒரு அறிவாளியாகவும், மனிதாபிமானமுள்ளவராகவும் காட்டிக்கொள்ளும் பார்த்திபனுக்கு ஏன் இந்த வேலை? இது முழுக்க முழுக்க அவரது கசட்டு எண்ணத்தைத்தான் காட்டுகிறது. அதை இந்த 'முறையாக' என்ற ஒரு வார்த்தை காட்டிக் கொடுத்துவிட்டதே. இன்றைய காலகட்டத்தில் 50 படங்களை இயக்குவது என்பது சாமானியமான விஷயம் அல்ல... எவ்வளவு பெரிய சாதனை? மணிவண்ணன் தனது 50 வது படத்தில் அறிமுகப்படுத்திய ஒரு கலைஞனை... இயக்குவதில் 20 படத்தைக் கூடத் எட்டாத பார்த்திபன் முறையாக அறிமுகப்படுத்துகிறேன் என்பது முறையா? அடுத்தவரின் அறிமுகத்தை தனது அறிமுகம் என பறைசாற்றி கொள்வது முறையா? தைரியம் இருந்தால் ஒரு உதவி படத் தொகுப்பாளரை அவர் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். ஏற்கனவே படத் தொகுப்பாளராக வேலை செய்து அனுபவம் வாய்ந்த ஒருவரை, தான் 'முறையாக' அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறுவது மறைந்த இயக்குநர் மணிவண்ணன் அவர்களை அவமானப்படுத்துவதாகும். இதை எங்கள் நிறுவனம் கடுமையாகக் கண்டிக்கிறது. பார்த்திபன் தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். தாம் எதையாவது புதுமையாக செய்கிறோம், எழுதுகிறோம் என்பதற்காக இந்த விஷயத்தையும் சாதாரணமாக அல்லது புதுமைக் கிறுக்குகளில் இதையும் ஒன்றாக எடுத்துக்கொண்டாரோ என்னவோ? ஆனால் அந்த புதுமைக் கிறுக்கு, படிக்கும் வாசகர்களையும் படம் பார்க்கும் ரசிகர்களையும் பிடிக்காமல் இருந்தால் சரிதான்!! -இவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் 5 நாட்களுக்கான கலெக்ஷன் ரூ 51 கோடி!

Posted: 30 May 2014 02:23 AM PDT

kochadaiyyan

kochadaiyyanகோச்சடையான் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்டது. இதில் முதல் 5 நாட்களுக்கான கலெக்ஷன் ரிப்போர்ட் கிடைத்துள்ளது. இதுவரை தியேட்டர்கள் மூலம் ரூ 51 கோடியை வசூலித்துள்ளது இந்தப் படம். இதன் மூலம் படத்தின் மொத்த வருவாய் ரூ 100 கோடியைத் தாண்டியது. மேலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் ரூ 50 கோடியைத் தாண்டிய முதல் படம் கோச்சடையான்தான். ரஜினி, தீபிகா படுகோன் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் கடந்த 23-ம் தேதி உலகெங்கும் வெளியானது. 6 மொழிகளில், 3000-க்கும் அதிகமான அரங்குகளில் படம் வெளியானது. முதலில் 6000 அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டவர்கள், பின்னர் கடைசி நேர நெருக்கடி காரணமாக அதில் பாதி அளவு தியேட்டர்களில்தான் வெளியிட்டனர். வெளிநாடுகளில் எக்ஸ் மேன் படம் ரிலீசானதால், கோச்சடையானுக்கு அதிக அரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது. படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்றுள்ளது இந்தப் படம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் 42 கோடியை வசூலித்த கோச்சடையான், அடுத்த இரு தினங்களில் மேலும் 9 கோடியை வசூலித்துள்ளது. இவை வார நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் ரூ 15 கோடியும், உள்நாட்டில் ரூ 36 கோடியையும் ஈட்டியுள்ளது இந்தப் படம். இன்றிலிருந்து வார விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் மேலும் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இந்தப் படத்தின் வசூல் தொகை விவரம்: அமெரிக்கா: ரூ 2.56 கோடி மலேசியா: ரூ 1.12 கோடி பிரிட்டன் (அயர்லாந்து உள்பட) : ரூ 80 லட்சம் ஆஸ்திரேலியா: 65 லட்சம்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்

Posted: 30 May 2014 02:12 AM PDT

shruti-haasan

shruti-haasanநடிகை ஸ்ருதி ஹாஸனும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தீவிரவாக காதலிக்கிறார்களாம். பாலிவுட், டோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி ஹாஸன் ஹரியின் பூஜை படம் மூலம் மீண்டும் கோலிவுட் பக்கம் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஸ்ருதி, ரெய்னாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் சுரேஷ் ரெய்னா நடிகை ஸ்ருதி ஹாஸன் தனது அதிர்ஷ்ட தேவதை என்று நினைத்து வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது ஸ்ருதி அரங்கிற்கு வராத போதிலும் அவர் சிறப்பாக விளையாடினார். ஸ்ருதி, ரெய்னா இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உறவில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இது குறித்து அவர்கள் பொதுவில் பேச விரும்பவில்லை. ஸ்ருதியும், ரெய்னாவும் அவரவர் வேலையில் படுபிசியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து வருகின்றனர் என்றார் அந்த நபர். முன்னதாக ஸ்ருதி நடிகர் சித்தார்த்துடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ரெய்னா முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேலின் மகள் பூர்ணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் பூர்ணா இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெய்னாவுடனான காதல் விவகாரம் குறித்து அறிந்ததும் முன்னணி நாளிதழ் ஒன்று ஸ்ருதிக்கு போன் மேல் போன் போட்டும் அவர் பதில் அளிக்கவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்

Posted: 30 May 2014 01:51 AM PDT

katharikai

katharikaiநீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் 'ஏ'யும், வைட்டமின் 'சி'யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் 'பி' தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் 'பி' பயன்படுகிறது. பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது. முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம். கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிலிப்ஸ் XENIUM W6610 ஸ்மார்ட்போன் ரூ.20,650 விலையில் அறிமுகம்!

Posted: 30 May 2014 01:21 AM PDT

XENIUM-W6610

XENIUM-W6610பிலிப்ஸ் நிறுவனம் மூன்று அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தொடங்கி இந்திய ஸ்மார்ட்போன் அரங்கில் மீண்டும் நுழைந்துள்ளது. பிலிப்ஸ் S308 மற்றும் W3500 ஸ்மார்ட்போன்கள் தவிர நிறுவனம் மேலும் XENIUM W6610 ஸ்மார்ட்போனை ரூ.20,650 விலையில் தொடங்கியுள்ளது. பிலிப்ஸ் XENIUM W6610 ஸ்மார்ட்போனின் பெரிய சிறப்பம்சமாக 5300mAh திறன் கொண்ட பேட்டரி இந்திய சந்தையில் தற்போது கிடைக்கும். குறிப்புகள், இப்போது தேதியில் XENIUM W6610 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்குகின்றது மற்றும் ஒரு இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்) சாதனம் ஆகும். இது ஒரு 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் qHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே வருகிறது. XENIUM W6610 ஸ்மார்ட்போனில் ரேம் 1GB உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு வருகிறது. இது எல்இடி ப்ளாஷ் மற்றும் CMOS சென்ஸார் கொண்ட 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. XENIUM W6610 ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்கள், 3 ஜி, Wi-Fi,, மைக்ரோ-USB, மற்றும் ப்ளூடூத் உள்ளிட்டவை அடங்கும். பிலிப்ஸ் XENIUM W6610 ஸ்மார்ட்போன் குறிப்புகள்: இரட்டை சிம் (ஜிஎஸ்எம் + ஜிஎஸ்எம்), 540x960 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் qHD ஐபிஎஸ் டிஸ்ப்ளே, ரேம் 1GB, 1.3GHz குவாட் கோர் பிராசசர், microSD அட்டை வழியாக 32 ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடிய 4GB உள்ளடிக்கிய சேமிப்பு, 8 மெகாபிக்சல் ஆட்டோ ஃபோகஸ் பின்புற கேமரா, 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 3 ஜி, Wi-Fi, மைக்ரோ-USB, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன், 5300mAh பேட்டரி.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிற நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை நிறுத்த அமெரிக்கா முடிவு: வெளியுறவு கொள்கை தயார்

Posted: 30 May 2014 01:06 AM PDT

obama

obamaபிற நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை அமெரிக்கா தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புவதால் அமெரிக்கா தனது வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவர உள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அந்த நாட்டு மிலிட்டரி அகாடமியில் உரையாற்றுகையில் அமெரிக்க அரசு தனது வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர உள்ளதை மறைமுகமாக தெரிவித்தார். பத்தாண்டுகளுக்கும் மேலாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிறுத்தப்பட்டு அந்த நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை தனது கையில் வைத்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒரு பிரச்சினை என்றால் அழையா விருந்தாளியாக மூக்கை நுழைப்பதை அமெரிக்கா பல நெடுங்காலமாக செய்து வருகிறது. பியூ ஆய்வு மையம் மற்றும் வால்ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை, பொதுமக்களிடம் அமெரிக்க அரசின் வெளியுறவுக்கொள்கை தொடர்பாக எடுத்த கருத்துக்கணிப்பில் 52 சதவீதம் பேர் "அமெரிக்கா பேசாமல் தனது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். 1964ம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இதுபோல கூறியுள்ளது இப்போதுதான் முதல் தடவை. அதே நேரம் அமெரிக்கா பிற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில் தவறு இல்லை என்று 38 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர், உக்ரைன் விவகாரம் ஆகியவற்றில் அமெரிக்க கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துவருகின்ன. 51 சதவீத மக்கள் ஒரு கருத்துக்கணிப்பில் இதை தெரிவித்துள்ளனர். அதே நேரம் 37 சதவீதம், அமெரிக்கர்கள், ஒபாமாவின் நிலைப்பாடு சரிதான் என்று கூறியுள்ளனர். உலகின் பெரிய அண்ணனாக அமெரிக்கா தன்னை நடத்திக்கொண்டிருந்த நிலை இப்போது மாறியுள்ளது என்று 53 சதவீதம் பேர் கருதுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உலக நாடுகளின் தலைவர் போல நடந்துகொண்டதை ஒப்பிட்டால், இப்போது அதன் ஆதிக்கம் குறைந்துள்ளதாக அம்மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம் இந்த நிலைப்பாட்டை மக்கள் வரவேற்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களின் கருத்தை தொடர்ந்து, அமெரிக்கா தனது வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்காவில் எழுந்துள்ளது. ஆசிய நாடுகளில், ரஷ்யா அதன் அதிபர் புட்டின் தலைமையில் இப்பிராந்தியத்தின் சக்தி வாயந்த நாடாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. மற்றொரு முக்கியமான நாடான இந்தியாவும் ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இந்திய-ரஷ்ய உறவால் சீனாவும் வாலாட்டுவதை நிறுத்திக்கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவுடன் சீனா தற்போது நட்புக்கரம் நீட்ட தொடங்கியுள்ளது. ஆசியாவின் இம்மூன்று ராணுவ பலம் பொருந்திய நாடுகளும் நட்பாக இருப்பது அமெரிக்காவின் மூக்கை ஆசியாவுக்குள் நுழைக்க முடியாமல் செய்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் அமெரிக்கா தானாகவே தனது வேலையை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அயல்விவகாரத்துறை பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™