Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


இனிப்பை தரும் கரும்பு உற்பத்தியாளர்களின் நிலை கசப்பாக உள்ளது : ராமதாஸ்

Posted: 30 May 2014 10:00 PM PDT

இனிப்பான சர்க்கரையை வழங்கும் கரும்பை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளின் நிலைமை தமிழ்நாட்டில் மிகவும் கசப்பானதாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்த தனியார் சர்க்கரை ஆலைகள் அதற்காக தர வேண்டிய

உத்தரப்பிரதேச பலாத்கார விவகாரம் : ஐ.நா. கடும் கண்டனம்

Posted: 30 May 2014 09:53 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலம் பதௌன் மாவட்டத்தில் இரண்டு சகோதரிகள் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் "மிகக் கொடுமையான குற்றம்" என்று ஐக்கிய நாடுகள் சபை கடும்

பள்ளிக்குச் சொந்தமான இடத்தை ஆக்ரமித்துள்ளதாக ஆர்.எஸ். பாரதி மீது புகார்

Posted: 30 May 2014 09:41 PM PDT

திமுக உறுப்பினரும் ஆலந்தூர் நகர்மன்ற முன்னாள் தலைவருமான ஆர்.எஸ். பாரதி மீது மன்றக்கூட்டத்தில் நில ஆக்கிரமிப்பு புகார் கூறப்பட்டது.

உ.பி. இடைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டியிடாது: மாயாவதி அறிவிப்பு

Posted: 30 May 2014 09:38 PM PDT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

தில்லி பல்கலை அலுவலர்கள் பணியிடை நீக்க விவகாரம்: மறுபரிசீலனை செய்ய ஸ்மிருதி இரானி கோரிக்கை

Posted: 30 May 2014 09:35 PM PDT

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி குறித்த கோப்புகளை முறைகேடான வகையில் வெளியில் பரவவிட்டதற்காக, தில்லி பல்கலையில் பணிபுரியும் அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சஸ்பென்ட் ஆன பல்கலை ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்ப்பு : ஸ்மிருதி இரானி பெருந்தன்மை

Posted: 30 May 2014 09:34 PM PDT

ஸ்மிருதி இரானியின் கல்வி தகுதி குறித்த விவரங்களை வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தில்லி பல்கலைக்கழக அதிகாரிகள் 5 பேரையும், மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள கல்வித் துறை அமைச்சர் ஸ்மிருதி

உத்தரப்பிரதேச பலாத்கார விவகாரம் : 5வது குற்றவாளி கைது; மேலும் 2 பேர் தலைமறைவு

Posted: 30 May 2014 09:29 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம் பதௌன் பகுதியில் 14, 15 வயதையுடைய சிறுமிகள் இருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 5வது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் 2

ஜம்மு- ஹோட்டலில் தீ விபத்து: 4 பேர் உடல் கருகி பலி

Posted: 30 May 2014 08:04 PM PDT

சனிக்கிழமை இன்று காலை ஜம்முவில் ஹோட்டல் ஒன்றில் நிகழ்ந்த தீவிபத்தில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 12 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

உ.பி., சிறுமிகள் பலாத்கார கொலை: சம்பவ இடத்தை இன்று பார்வையிடுகிறார் ராகுல்

Posted: 30 May 2014 07:58 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம் பதௌன் பகுதியில் 14, 15 வயதையுடைய சிறுமிகள் இருவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மிருதி இரானி குறித்த கோப்புகள் வெளியிட்ட தில்லி பல்கலை அலுவலர்கள் 5 பேர் இடைநீக்கம்

Posted: 30 May 2014 07:53 PM PDT

மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வி குறித்த கோப்புகளை முறைகேடான வகையில் வெளியில் பரவவிட்டதற்காக, தில்லி பல்கலையில் பணிபுரியும் அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

10 ஆயிரம் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் வெளியீடு

Posted: 30 May 2014 07:39 PM PDT

புதிய பள்ளிகள், மேல்முறையீடு செய்த பள்ளிகள் உள்பட 10 ஆயிரத்து 55 தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விவரங்கள் தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

பாஜக ஆட்சியில் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகம்: 2 வாரங்களில் பவுனுக்கு ரூ.1,424 குறைந்தது

Posted: 30 May 2014 07:37 PM PDT

மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்திய சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது. கடந்த 2 வாரங்களுக்குள் தங்கம் பவுனுக்கு ரூ.1,424 குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நட்சத்திர பேட்மின்டன் லீக்: ஆகஸ்ட் மாதம் தொடக்கம்

Posted: 30 May 2014 07:34 PM PDT

திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் பேட்மின்டன் லீக் போட்டிகள் சென்னையில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியன் பேட்மின்டன் செலிபரிட்டி லீக் (ஐ.பி.சி.எல்.) என அழைக்கப்படும் இந்த போட்டிகள் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நேரு உள்விளையாட்டு அரங்கில்

கத்தரி முடிந்தும் தணியாத வெய்யில்: சென்னையில் 104 டிகிரி வெயில்

Posted: 30 May 2014 07:32 PM PDT

கொளுத்தும் கத்தரி முடிந்தும் சென்னையில் வெய்யில் தகித்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 104 டிகிரி வெயில் வெள்ளிக்கிழமை (மே 30) பதிவானது.

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 2-ல் திறக்கப்படும் : பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

Posted: 30 May 2014 07:29 PM PDT

கோடை விடுமுறைக்குப் பிறகு அனைத்துப் பள்ளிகளும் திட்டமிட்டபடி ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சூலூர் பேரூராட்சி தேர்வு

Posted: 30 May 2014 05:26 PM PDT

சூலூர் பேரூராட்சி தமிழக அரசின் திடக்கழிவு மேலாண்மை சிறப்புத்திட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. திடக்கழிவு என்பது தற்போது ஒவ்வொரு பேரூராட்சியிலும் தற்போது பெரும் பிரச்னையாகி

பட்டங்களுக்காக வேளாண் ஆராய்ச்சிகள் கூடாது

Posted: 30 May 2014 05:25 PM PDT

வேளாண் ஆராய்ச்சிகள் வெறும் பட்டங்களுக்கும், பதவிகளுக்காகவும் இருக்கக் கூடாது என்று, தமிழக வேளாண்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

என்.டி.சி. மில் தொழிற்சங்கங்களின் அங்கீகாரத் தேர்தல்: 96.38 % வாக்கு பதிவு

Posted: 30 May 2014 05:25 PM PDT

தமிழகத்தில் உள்ள 7 என்.டி.சி. மில்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலில் 96.38 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஆதிவாசி சிறுமி பலாத்காரம் செய்து கொலை: கேரள காங்கிரஸ் பிரமுகர் கைது

Posted: 30 May 2014 05:25 PM PDT

ஆதிவாசி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக, கேரள காங்கிரஸ் பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

முன்விரோதத்தில் ஊர்க்காவல் படை இளைஞரைத் தாக்கிய 5 பேர் கைது

Posted: 30 May 2014 05:24 PM PDT

முன்விரோதம் காரணமாக ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய 5 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அந்த ஊர்க்காவல் படை இளைஞர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 30 May 2014 05:24 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சங்கனூர் இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

தபால் துறை குறைதீர் கூட்டம்

Posted: 30 May 2014 05:24 PM PDT

கோவை மேற்கு மண்டல தபால் துறை சார்பில் குறைதீர் கூட்டம் (தாக் அதாலத்) வரும் ஜூன் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 30 May 2014 05:24 PM PDT

சூலூர் பேரூராட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மழைநீர் சேகரித்தல், திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

நேரு மேலாண்மைக் கல்லூரி தொழிற்கூடங்களுடன் ஒப்பந்தம்

Posted: 30 May 2014 05:23 PM PDT

கோவை, நேரு மேலாண்மைக் கல்லூரி, 20 தொழிற்கூடங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

வெள்ளியங்கிரி மலையில் இலவச தரிசன வசதி

Posted: 30 May 2014 05:13 PM PDT

கோவையில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோவிலில், இந்த ஆண்டில் பக்தர்கள் இலவச தரிசனம் மேற்கொள்ள சிவனடியார் திருக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது.

கோவையில் நான்கு இளைஞர்கள் சாவு

Posted: 30 May 2014 05:12 PM PDT

கோவை அருகே வெள்ளிக்கிழமை காலை, அதிவேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் ஒருவரு

எஸ்.எஸ்.குளத்தில் சமுதாய வளைகாப்பு

Posted: 30 May 2014 05:12 PM PDT

சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் தமிழக அரசின் குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், 70 கர்ப்பிணிகளுக்கு புதன்கிழமை கோவில்பாளையம், ராகவேந்திரா திருமணமண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

நான்கு சிறுவர்களின் பெற்றோருக்கு சூலூர் எம்எல்ஏ ஆறுதல்

Posted: 30 May 2014 05:12 PM PDT

சித்தநாயக்கன்பாளையத்தில் வியாழக்கிழமை குட்டையில் மூழ்கி பலியான நான்கு சிறுவர்களின் குடும்பத்தினருக்கு சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் தினகரன் வெள்ளிக்கிழமை ஆறுதல் கூறினார்.

குட்டையை தூர்வார மதிமுக கோரிக்கை

Posted: 30 May 2014 05:12 PM PDT

சின்னத் தடாகத்தில் உள்ள பொன்னேரி குட்டையைத் தூர்வார வேண்டும் என்று பெ.நா.பாளையம் ஒன்றிய மதிமுக செயலாளர் தடாகம் ஆனந்தன் கேட்டுக் கொண்டுள்ளார்.

வனத்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி

Posted: 30 May 2014 05:11 PM PDT

பெ.நா.பாளையம், போளுவாம்பட்டி வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதிகளில் திரியும் அரிய வகை விலங்குகளை புகைப்படம் எடுப்பதற்காக டிராப் காமிராக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி அண்மையில் மாங்கரையில் நடந்தது.

பாரதியார் பல்கலை. எம்.பில், பி.எச்டி. படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 30 May 2014 05:11 PM PDT

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.பில், மற்றும் பி.எச்டி. ஆய்வு படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நாளை நன்னெறிக் கழக விருது வழங்கும் விழா

Posted: 30 May 2014 05:11 PM PDT

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில் விருது வழங்கும் விழா கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (நாளை) நடைபெறுகிறது.

தபால் துறை சார்பில் நாளை எம்.டி.எஸ். தேர்வு

Posted: 30 May 2014 05:10 PM PDT

தபால் துறை சார்பில் நடைபெறும் எம்.டி.எஸ். (பல்பணி ஊழியர்கள்) தேர்வு ஜூன் முதல் தேதி நடைபெறுகிறது.

ஜூலை 4-க்குள் வாகனப் பதிவு பெயர் மாற்றம்

Posted: 30 May 2014 05:10 PM PDT

வாகனங்களுக்கு பெயர் மாற்றம் செய்யாதவர்கள் கோவையில் வரும் ஜூலை 4-க்குள் பெயர் மாற்றம் செய்துகொள்ள வேண்டும் என்று, மாநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் குப்பைகள் இன்று அகற்றம்

Posted: 30 May 2014 05:10 PM PDT

ஈஷா அறக்கட்டளை மற்றும் சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் வெள்ளியங்கிரி மலையில் சனிக்கிழமை பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படவுள்ளன.

2,720 எம்பிபிஎஸ் விண்ணப்பங்கள் கோவையில் விநியோகம்

Posted: 30 May 2014 05:10 PM PDT

கோவை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை தொடர்பாக மொத்தம் 2,720 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இயேசு அழைக்கிறார்:நாளை பிரார்த்தனை கூட்டம்

Posted: 30 May 2014 05:09 PM PDT

கோவை, காருண்யா நகரில் "இயேசு அழைக்கிறார்' சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனை கூட்டம் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டயப் பயிற்சி தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 30 May 2014 05:09 PM PDT

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2012-13-ஆம் ஆண்டில் நடைபெற்ற 14-ஆவது அஞ்சல்வழிக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி இறுதித் தேர்வு முடிவுகள்

ஓய்வூதியர் குறைகேட்புக் கூட்டம்: ஜூன் 2-க்குள் மனு அளிக்கலாம்

Posted: 30 May 2014 05:08 PM PDT

அஞ்சல் துறை ஓய்வூதியர் குறைகேட்புக் கூட்டம் ஜூன் 4-ஆம் தேதி பகல் 12 மணி அளவில் நடைபெறுகிறது.

திருமண உறவைப் பாதுகாப்பதுதான் குடும்ப நல நீதிமன்றத்தின் முக்கிய நோக்கம்

Posted: 30 May 2014 05:08 PM PDT

திருமண உறவு முறியாமல் பாதுகாப்பதுதான் குடும்ப நல நீதிமன்றத்தின் முக்கிய நோக்கம் என்று ஈரோடு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்கா ராமன் கூறினார்.

அம்மாபேட்டையில் அம்மா திட்ட முகாம்

Posted: 30 May 2014 05:07 PM PDT

பவானியை அடுத்துள்ள அம்மாபேட்டையில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு, அந்தியூர் வட்டாட்சியர் ஜான் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். அம்மாபேட்டை

கருணாநிதி பிறந்த நாள்: திமுக இளைஞரணி நாளை ரத்த தானம்

Posted: 30 May 2014 05:07 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி, திமுக இளைஞரணி சார்பில் ஈரோடு பட்டேல் வீதியில் ஜூன் 1-ஆம் தேதி ரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 47.07 அடி

Posted: 30 May 2014 05:06 PM PDT

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 47.07 அடியாக இருந்தது.

உலக நாடுகளை வழிநடத்தும் தலைவர்களை உருவாக்குவது அவசியம்

Posted: 30 May 2014 05:06 PM PDT

உலக நாடுகளை வழிநடத்தும் தலைவர்களை உருவாக்குவது அவசியம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் அறிவியல் தொழில்நுட்ப ஆலோசகர் வி.பொன்ராஜ் கூறினார்

கோபி: காவல் துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Posted: 30 May 2014 05:06 PM PDT

கோபி அருகே உள்ள டி.என்.பாளையத்தில் காவல் துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி:கோபி பகுதி மக்கள் எஸ்பியிடம் மனு

Posted: 30 May 2014 05:05 PM PDT

ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் கோபி பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடக் கோரி அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 May 2014 05:05 PM PDT

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மொடக்குறிச்சியில் ஜூன் 7-இல் மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம்

Posted: 30 May 2014 05:05 PM PDT

மொடக்குறிச்சியில் மின் இணைப்பு பெயர் மாற்ற முகாம் ஜூன் 7-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

பாலிடெக்னிக் வாரியத் தேர்வு: அல்-அமீன் கல்லூரி சிறப்பிடம்

Posted: 30 May 2014 05:05 PM PDT

பாலிடெக்னிக் வாரியத் தேர்வில் ஈரோடு, கருந்தேவன்பாளையம் அல்-அமீன் பாலிடெக்னிக் சிறப்பிடம் பிடித்துள்ளது.

மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

Posted: 30 May 2014 05:04 PM PDT

மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழை நடைபெற்றது.

இலவச ஆயத்த ஆடை தொழில்நுட்ப பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

Posted: 30 May 2014 05:04 PM PDT

மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிமைப்பு மையத்தில் இலவசமாக ஆயத்த ஆடை தொழில்நுட்பப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

அந்தியூர்: தலையில் காயத்துடன் லாரி ஓட்டுநர் சடலம்

Posted: 30 May 2014 05:04 PM PDT

அந்தியூரில் தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் லாரி ஓட்டுநர் சடலம் மீட்கப்பட்டது.

கோவை மேயர் ராஜிநாமாவுக்கு மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒப்புதல்

Posted: 30 May 2014 05:03 PM PDT

கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமியின் ராஜிநாமாவுக்கு வெள்ளிக்கிழமை நடந்த மாமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அங்கலக்குறிச்சியில் வெடிவிபத்து நடந்த வீட்டின் உரிமையாளர் கைது

Posted: 30 May 2014 05:03 PM PDT

பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியில் வியாழக்கிழமை நடந்த வெடிவிபத்தில் நான்குபேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் பழனிசாமியை போலீஸார் கைது செய்தனர்.

பிணந்தின்னிக் கழுகுகளைப் பாதுகாக்க கிராமசபைகளில் ஜூன் 1-ல் தீர்மானம்

Posted: 30 May 2014 05:02 PM PDT

பிணந்தின்னிக் கழுகுகளைப் பாதுகாக்க "டைக்குளோபினாக்' மருந்துக்கு கட்டுப்பாடு விதித்து, வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் கிராமசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் பரிந்துரை செய்துள்ளார்.

வெள்ளக்கோவில் மின் வாரியத்துக்குப் பாராட்டு

Posted: 30 May 2014 05:02 PM PDT

மின் தடங்கலை உடனடியாகச் சரி செய்த, வெள்ளக்கோவில் மின் வாரிய ஊழியர்களுக்கு பொது மக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

முறியாண்டம்பாளையத்தில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 30 May 2014 05:02 PM PDT

அவிநாசி அருகே முறியாண்டம்பாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "அம்மா' திட்ட முகாமில், சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.ஏ.கருப்பசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

மே 31 மின் தடை

Posted: 30 May 2014 05:02 PM PDT

பல்லடம் அருகேயுள்ள நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சேடபாளையம், வேலம்பாளையம், சேகாம்பாளையம், வளையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம் ஒருபகுதி,

பல்லடத்தில் இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம்

Posted: 30 May 2014 05:01 PM PDT

இந்து முன்னணி திருப்பூர் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம், பல்லடம் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தப்பியோடிய கைதியைப் பிடித்த போலீஸாருக்குப் பாராட்டு

Posted: 30 May 2014 05:01 PM PDT

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், தப்பியோடிய விசாரணைக் கைதியை போலீஸார் தேடிப்பிடித்து கைது செய்தனர்.

கூட்டுறவுச் சங்க ஊழியர் குடும்பத்துக்கு உதவித் தொகை

Posted: 30 May 2014 05:00 PM PDT

பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தபோது, உயிரிழந்த தண்டபாணி என்பவரது மனைவி சரோஜாவிடம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் உதவித் தொகையை சங்கத் தலைவர் ஏ.சித்துராஜ், கோவை மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநர்

கொலை வழக்கில் இருவரிடம் போலீஸார் தீவிர விசாரணை

Posted: 30 May 2014 05:00 PM PDT

டாஸ்மாக் மதுபானக் கிடங்கில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேரை வெள்ளிக்கிழமை பிடித்த திருப்பூர் போலீஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

நொய்யல் ஆறு மாசு: தில்லி சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு

Posted: 30 May 2014 04:59 PM PDT

சாயப்பட்டறைகளில் பூஜ்ய சதவீதக் கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகள் கையாளப்பட்டு வரும் நிலையில், நொய்யலாற்றின் மாசுபாடு குறித்து தில்லியை தலைமையிடமாகக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

மங்கல்யான் ராக்கெட் பொருள்காட்சி

Posted: 30 May 2014 04:59 PM PDT

திருப்பூர் குமரன் சாலை டவுன்ஹால் மைதானத்தில், மங்கல்யான் ராக்கெட் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது .

"பள்ளி வாகன ஓட்டுநர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்'

Posted: 30 May 2014 04:59 PM PDT

பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று, திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் திருநாவுக்கரசு பேசினார்.

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்காங்கயம் குளோபல் மெட்ரிக் 100% தேர்ச்சி

Posted: 30 May 2014 04:58 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், காங்கயம் குளோபல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நூல் விலையை கிலோவுக்கு ரூ.10 குறைக்கக் கோரிக்கை

Posted: 30 May 2014 04:58 PM PDT

ஜூன் 1-ஆம் தேதிமுதல் 100 சதவீத மின் விநியோகம் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்திருப்பதால், நூல் விலையில் கிலோவுக்கு ரூ.10 வீதம் குறைப்பு செய்ய முன்வர வேண்டும் என்று, நூற்பாலைச் சங்கங்களுக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள

"பின்னலாடை தொழிலைப் பாதுகாக்க தனியாக கமிட்டி அமைக்க வேண்டும்'

Posted: 30 May 2014 04:58 PM PDT

பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்கவும், அதன் வளர்ச்சிக்காகவும் தனியாகக் கமிட்டி அமைத்து உதவ வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் எம்.பி. முத்துரத்தினம் வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

சிவன்மலைக் கோவிலில் வாகனங்கள் நிறுத்த நிழற்கூரை அமைக்கப்படுமா?

Posted: 30 May 2014 04:57 PM PDT

காங்கயம் அருகே, சிவன்மலை முருகன் மலைக்கோவிலில், வாகனங்கள் நிறுத்துவதற்கு நிழற்கூரை அமைத்து தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூன் 13-இல் திருப்பூர் மாவட்டத்தில் ஜமாபந்தி

Posted: 30 May 2014 04:57 PM PDT

மாவட்டத்தில் வருவாய் கணக்குத் தணிக்கைப் பணி (ஜமாபந்தி) ஜூன் 13-இல் தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஜூன் 10-இல் தாராபுரம் நகராட்சிக் கடைகள் ஏலம்

Posted: 30 May 2014 04:57 PM PDT

தாராபுரம் நகராட்சிக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளுக்கு வரும் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளதாக, நகராட்சி ஆணையாளார் நாராயணன் தெரிவித்துள்ளார். தாராபுரம் நகரில் பல்வேறு பகுதிகளில் நகராட்சிக்குச் சொந்தமாக மொத்தம் 217 கடைகள் உள்ள

கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

Posted: 30 May 2014 04:57 PM PDT

கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை வியாழக்கிழமை கிலோ ரூ.72 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகர்வு அதிகரித்ததால் வெள்ளிக்கிழமை கொள்முதல் விலை கிலோ ரூ.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காங்கயம் ஈபிஈடி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை

Posted: 30 May 2014 04:56 PM PDT

காங்கயம் ஈபிஈடி குழும கல்வி நிறுவனங்களில் இரண்டு வாரம் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிப் பட்டறை முகாம் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. திரவ இயக்கவியல் என்னும் தலைப்பில், கோரக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்து

மே 31 மின் தடை

Posted: 30 May 2014 04:56 PM PDT

நீலகிரி மின்பகிர்மான வட்டத்தில் ஜெகதளா மற்றும் சாண்டிநள்ளா பகுதிகளில் சனிக்கிழமை (மே 31) நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகளின் காரணமாக இத்துணை மின் நிலையங்களுக்கு

மாவட்ட ஹாக்கிப் போட்டியில் ஜெகதளா அணி வெற்றி

Posted: 30 May 2014 04:55 PM PDT

மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டியில் ஜெகதளா அணி வெற்றி பெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹாக்கி வீர்ரகளில் தேசிய அளவில் விளையாடி, தற்போது உயிருடன் இல்லாமல் இருக்கும் ஹாக்கி வீரர்களின் நினைவாக மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டி

கூடலூரில் 2 நாள் வாசனை திரவியக் கண்காட்சி தொடக்கம்

Posted: 30 May 2014 04:55 PM PDT

 நீலகிரி கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியாக கூடலூரில் 2 நாள் வாசனை திரவியக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வால்பாறையில் தொடங்கியது கோடைவிழா

Posted: 30 May 2014 04:55 PM PDT

மலர்க் கண்காட்சியுடன் வால்பாறை கோடைவிழாவை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் வெள்ளிக்கிழமை காலை துவக்கி வைத்தார்.

குடும்ப அட்டை கோரி திருநங்கைகள் தர்னா

Posted: 30 May 2014 04:31 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளில் விடுபட்டோருக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டைகள் வழங்கக் கோரி மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தில் திருநங்கைகள்

தேர்தல் செலவுக் கணக்கு அளித்தல்: ஜூன் 5இல் வேட்பாளர்களுக்கு பயிற்சி

Posted: 30 May 2014 04:31 PM PDT

மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய செலவுக் கணக்குகளை சரியாக சமர்ப்பிக்கும் வகையில் அவர்களுக்கு ஜுன் 5 ஆம் தேதி தேர்தல் ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

குடிநீர்க் கட்டணம் செலுத்தாத இணைப்பு துண்டிப்பு

Posted: 30 May 2014 04:31 PM PDT

தச்சநல்லூர் மண்டலம் முருகன்குறிச்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்பை வெள்ளிக்கிழமை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

நெல்லையில் ஓர் மழைக்காலம்: 2013-க்கு நவம்பர், 2014-க்கு மே

Posted: 30 May 2014 04:30 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்தாண்டும், நிகழாண்டு இதுவரையும் பெறப்பட்ட மழையளவுகளில் 2013 நவம்பர், 2014-ல் மே மாதங்களில் மட்டுமே அதிகப்படியான மழை பெறப்பட்டுள்ளது.

தாமிரவருணி நதி மாசுபடுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழு

Posted: 30 May 2014 04:30 PM PDT

தாமிரவருணி நதி மாசுபடுவதைத் தடுக்க அரசு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டுமென விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

நெல்லை அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை

Posted: 30 May 2014 04:30 PM PDT

திருநெல்வேலி அரசு இசைப் பள்ளியில் 2014-15ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

சிறு-குறு நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுக்காக ரூ.708 கோடி கடன்: இந்தியன் வங்கி சாதனை

Posted: 30 May 2014 04:30 PM PDT

சிறு-குறு நடுத்தர தொழில்கள் மேம்பாட்டுக்காக இந்தியன் வங்கியின் திருநெல்வேலி மண்டலத்தில் கடந்த நிதியாண்டில் ரூ.708 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

சமூக நல்லிணக்க கைப்பந்து விளையாட்டு விழா

Posted: 30 May 2014 04:29 PM PDT

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை மற்றும் பிஎஸ்என் கல்லூரி இணைந்து சமூக நல்லிணக்க கைப்பந்து விளையாட்டு விழாவை பிரான்சேரியில் வெள்ளிக்கிழமை நடத்தின. கல்லூரி மாணவர்களுக்கு இடையே சாதி, மத மோதல்கள் உருவாகாமல் தடுக்கவும், மாணவர்

4 வயது சிறுவன் தாயிடம் ஒப்படைப்பு

Posted: 30 May 2014 04:29 PM PDT

திருநெல்வேலி சந்திப்பில் பெற்றோரை பிரிந்து தவித்த 4 வயது சிறுவனை போலீஸார் அவனது தாயாரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.

அம்பையில் செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல்

Posted: 30 May 2014 04:29 PM PDT

அம்பாசமுத்திரம் நகராட்சி சந்தையில் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோவுக்கும் மேற்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.

"புகையிலையால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மரணம்'

Posted: 30 May 2014 04:29 PM PDT

உலகளவில் புகையிலையால் ஆண்டுக்கு 60 லட்சம் பேர் இறக்கிறார்கள் என்றார் இதயவியல் சிகிச்சை நிபுணர் அருணாசலம்.

விருது பெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு

Posted: 30 May 2014 04:28 PM PDT

பாளையங்கோட்டையில் பல்வேறு நூல்கள் எழுதி தமிழ்மணி விருதுபெற்ற எழுத்தாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 30 May 2014 04:28 PM PDT

: திருநெல்வேலியில் கருவூலக அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மோர்தானா அணையில் தேனீக்கள் கொட்டியதில் அதிகாரிகள் காயம்

Posted: 30 May 2014 04:27 PM PDT

மோர்தானா அணையில் ரூ. 4 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக பொதுப்பணித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அணை வளாகத்தை பார்வை

கூட்டுறவு சங்க பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையம் இன்று திறப்பு

Posted: 30 May 2014 04:27 PM PDT

ஆம்பூர் அருகே கூட்டுறவு சங்கம் மூலம் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை அமைச்சர் கே.சி. வீரமணி சனிக்கிழமை திறந்து வைக்கிறார்.

குடிநீர் கேட்டு மறியல்; அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

Posted: 30 May 2014 04:27 PM PDT

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியல் மற்றும் ஆந்திர அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6.75 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் தயார்

Posted: 30 May 2014 04:26 PM PDT

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் 6.75 லட்சம் பேருக்கு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன என்று முதன்மைக் கல்வி அலுவலர் பெ.சுப்பிரமணி தெரிவித்தனர்.

குடியாத்தத்தில் நாளை திருவாசகம் முற்றோதல்

Posted: 30 May 2014 04:26 PM PDT

குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

லாரி டிரைவரை கட்டிப்போட்டு ரூ. 12 ஆயிரம் பறிப்பு: 5 பேர் கைது

Posted: 30 May 2014 04:26 PM PDT

வாலாஜாபேட்டை அருகே லாரி டிரைவரை கட்டிப் போட்டு ரூ. 12 ஆயிரத்தை பறித்துச் சென்ற வழக்கில் 5 இளைஞர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அம்மா திட்ட முகாமில் 74 பேருக்கு நல உதவி

Posted: 30 May 2014 04:26 PM PDT

வாலாஜா வட்டம் செங்கல்நத்தம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்த அம்மா திட்ட முகாமில் 74 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேல்விஷாரம் குடிநீர்ப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு

Posted: 30 May 2014 04:25 PM PDT

மேல்விஷாரம் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவர் பி.அப்துல் ரஹ்மான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரதமருக்கு நன்றி தெரிவித்து 1000 இ-போஸ்ட் அனுப்பிய வணிகர்கள்

Posted: 30 May 2014 04:25 PM PDT

சில்லறை விற்பனையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதியில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு வேலூரைச் சேர்ந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் வெள்ளிக்கிழமை 1000 இ.போஸ்ட்களை அனுப்பினர்.

கொலை வழக்கில் கைதானவர் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 30 May 2014 04:25 PM PDT

சத்துவாச்சாரியில் நகைக்கடை நடத்தி வந்த முத்துகுமரன் கடந்த மாதம் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையோரம் மீட்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™