Tamil Star |
- வாள் சண்டைக்காட்சியில் நடித்த போது அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு படப்பிடிப்பு ரத்து!
- நயன்தாரா – சிம்புவின் இது நம்ம ஆளு நேற்று முதல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!
- மோடியின் பதவி ஏற்பு விழாவில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்
- நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா: இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு!
- பெட்ரோல் பங்கில் செல்போன் பேசியதால் எரிந்து போன நபர்… இனியாவது ஜாக்கிரதையாக இருங்கள்
- அதி வேகம் ஏற்படுத்திய மிகக் கொடூரமான விபத்து!
- உலகத்துல இப்படியொரு பக்திமானா?
- இல்லத்தரசிகள் மற்றும் திருமணமாகாத ஆண்களுக்கு!
- சிங்கம் சிங்கிளா வந்தால் இது தான் கதி…. பாவம் இப்படி உயிரை விட்டுருச்சே
- ஏரியை சூறையாடும் மூடு பனியின் கண்கொள்ளாக்காட்சி!
- கடலுக்குள் விழுந்ததை கண்டறிய உதவிய சாட்டிலைட் தகவல்கள் வெளியீடு!
- பீதி அடைந்த மக்கள்,அதிர்ந்த துபாய் ஈரானில் நிலநடுக்கம்!
- மின்த்ராவை ரூ.2,000 கோடிக்கு வாங்கிய ஃபிளிப்கார்ட் நிறுவனம்!
- ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் 2வது சுற்றுக்கு ஷரபோவா தகுதி
- ஈடன் கார்டனில் கிங்ஸ் லெவன் – நைட் ரைடர்ஸ் இன்று மோதல்!
- இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்பதை முன்னிட்டு அமெரிக்க இந்தியர்கள் கொண்டாட்டம்!
- இணையத்தளங்கள் மீதான தடை: மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு
- புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை செல்வது உறுதி!
- இலங்கை தமிழர்களின் உரிமைகளை இந்திய மோடி அரசாங்கம் பாதுகாக்கும்!
- இலங்கைக்காக மாலைதீவு செயல்படும்! ஜனாதிபதி யமீன் அப்துல் கயூம் உறுதி!
| வாள் சண்டைக்காட்சியில் நடித்த போது அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு படப்பிடிப்பு ரத்து! Posted: 27 May 2014 03:36 AM PDT
ருத்ரமாதேவி படத்தில் சண்டைக்காட்சியில் நடித்த போது அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தெலுங்கில் 'ருத்ரமாதேவி', 'பாகுபலி' என இரு சரித்திரப் படங்களில் நடித்து வருகிறார் அனுஷ்கா. இந்த இரு படங்களுமே தமிழிலும் வெளியாகவிருக்கின்றன. 'ருத்ரமாதேவி'யில் ராணியாக நடிக்கும் அனுஷ்கா, வாள் சண்டை, குதிரை சவாரி காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. ஏற்கெனவே யோகா டீச்சர் என்பதால், இதற்கான பயிற்சிகளை ஒரு மாதத்தில் கற்றுக் கொண்டார். தனித்தனி ஸ்டனட் நடிகர்கள் இதற்காக அவருக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். ருத்ரமாதேவி படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அனுஷ்கா பங்கேற்ற வாள் சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. கொஞ்சம் கடினமான சண்டைக் காட்சி அது. ஒரு கட்டத்தில் அனுஷ்காவுக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டுவிட்டது. மிகுந்த வலியால் அவதிப்பட்ட அவர், தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்காலிகமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இப்போது அனுஷ்கா ரெஸ்ட் எடுத்து வரும் அனுஷ்கா, தினமும் புத்தூர் தைலம் தேய்த்து சிகிச்சை பெற்று வருகிறாராம்! இதனால் ரஜினி, அஜீத் படங்களில் நடிக்க அவர் கொடுத்த தேதிகள் தள்ளிப் போய் உள்ளதாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நயன்தாரா – சிம்புவின் இது நம்ம ஆளு நேற்று முதல் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது! Posted: 27 May 2014 03:30 AM PDT
சிம்பு படங்கள் தொடங்குவதுதான் வெளியில் தெரியும். படம் முடிந்ததா, வெளிவருமா என்பதெல்லாம் சிதம்பர ரகசியம்தான். இன்றைய தேதிக்கு அவர் நடிக்கும் நான்கு படங்கள் வாலு, வேட்டை மன்னன், கவுதம் மேனன் படம் மற்றும் இது நம்ம ஆளு... ஆரம்பிக்கப்பட்டதோடு சரி. எப்போது வருமென்று தெரியாது. திடீர் திடீரென இந்தப் படங்களை தூசி தட்டுவார்கள், அப்புறம் திடீரென கிடப்பில் போட்டு விடுவார்கள். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்புவும் நயன்தாராவும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த படம் இது நம்ம ஆளு. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பாக செய்திகள் வந்ததோடு சரி. திடீரென ஒரு நாள் படம் நின்றுவிட்டதாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்துள்ளது இந்தப் படத்துக்கு. வேக வேகமாக படத்தை எடுத்து முடித்து வெளியிடப் போகிறார்களாம். இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி ராஜேந்தர் தயாரிக்கிறார், சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தை இப்போது முடித்தாலும், வாலு படம் வெளியான பிறகுதான் வெளியிடப் போகிறார்களாம்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மோடியின் பதவி ஏற்பு விழாவில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் Posted: 27 May 2014 03:22 AM PDT
பிரதமர் நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரடியாக தொலைபேசியில் அழைத்ததோடு, அரசு அழைப்பிதழையும் அனுப்பி வைத்தார் நரேந்திர மோடி. ஆனால் இந்த விழாவில் தமிழினப் படுகொலையை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதால், தமிழர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது. எனவே இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ளவில்லை. லிங்கா படப்பிடிப்புக்காக மைசூரிலேயே தங்கிவிட்டார் ரஜினி. அவருக்குப் பதிலாக அவர் மனைவி லதா செல்வார் என்று கூறப்பட்டது. ஆனால் விழா நடந்த குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில், ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா பங்கேற்றார். தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் ஐஸ்வர்யாவை சில முறை காட்டினார்கள். அவர் தனியாகவே அமர்ந்திருந்தார். அருகில் லதாவோ, கணவர் தனுஷோ இல்லை. லதா ரஜினி விழாவுக்குச் சென்றாரா என்று அவரது இல்லத்தில் விசாரித்த போது, அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. இதன்மூலம் விழாவுக்கு லதா சென்றாரா இல்லையா என்பதை வெளியில் சொல்ல ரஜினி குடும்பம் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா: இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்பு! Posted: 27 May 2014 03:17 AM PDT
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற விழாவில் பல இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமிதாப், ரஜினி பங்கேற்கவில்லை. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தேசிய தலைவர்கள், மதத்தலைவர்கள், தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர். இவர்களிடையே விழா அரங்கில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் பலரையும் காண முடிந்தது. மத்திய அரசின் அழைப்பை ஏற்று இவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் தனது தந்தையும், சினிமா வசன கர்த்தாவுமான சலீம்கானுடன் விழாவுக்கு வந்திருந்தார். இருவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமர்ந்திருந்த வரிசையின் பின்பக்கத்தில் இருந்தனர். இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான ஹ்ரித்திக் ரோஷன் தனது தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனுடன் வந்திருந்தார். இதேபோல் இன்னொரு பிரபல நடிகர் அனுபம் கெர் தனது மனைவி கிரன் கெருடன் விழாவில் கலந்து கொண்டார். கிரன் கெர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் சண்டிகார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் ஓபராய், டெல்லி ராஜ்ய சபை எம்.பி.க்கள் என்ற முறையில், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் தெண்டுல்கர், இந்தி நடிகை ரேகா ஆகியோரும் கலந்து கொண்டனர். மோடியின் தீவிர ஆதரவாளரான விவேக் ஓபராய் தனது சட்டையில் தாமரை சின்னத்தை அணிந்து வந்திருந்தார். இவர்களைத் தவிர, பா.ஜனதாவில் உள்ள சினிமா நட்சத்திரங்களான, பரேஷ் ரவால், சத்ருகன் சின்கா, வினோத் கன்னா, ஸ்மிரிதி இரானி போன்றோரும் விழாவில் பங்கேற்றனர். நடிகர் தர்மேந்திரா தனது மனைவியும் பாஜக எம்பியுமான ஹேமமாலினியுடன் விழா அரங்கில் அமர்ந்திருந்தார். இதேபோல், இந்தி பட அதிபர் மதூர் பந்தார்கர், இசையமைப்பாளர் பப்பி லஹிரி, பூனம் தில்லான், போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி ஆகியோரும் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். மோடி பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் ரஜினிகாந்த், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் இவர்கள் கலந்து கொள்ளவில்லை. அமிதாப்பச்சன், தான் படப்பிடிப்பில் தீவிரமாக இருப்பதால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும் விரைவில் தங்களை சந்திப்பேன் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்துகொள்வதால் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று ரஜினிகாந்த்தை தமிழ்நாட்டில் தமிழர் அமைப்புகள் வலியுறுத்தி இருந்ததால் இதில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனுஷை விழாவில் பார்க்க முடிந்தது. மனைவி லதா ரஜினி கலந்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், அவரை விழாவில் காண முடியவில்லை. 84 வயது லதா மங்கேஷ்கர் தனது உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தான் கைப்பட எழுதிய கடிதத்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் லதா மங்கேஷ்கர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பெட்ரோல் பங்கில் செல்போன் பேசியதால் எரிந்து போன நபர்… இனியாவது ஜாக்கிரதையாக இருங்கள் Posted: 27 May 2014 03:08 AM PDT |
| அதி வேகம் ஏற்படுத்திய மிகக் கொடூரமான விபத்து! Posted: 27 May 2014 03:00 AM PDT |
| உலகத்துல இப்படியொரு பக்திமானா? Posted: 27 May 2014 02:57 AM PDT |
| இல்லத்தரசிகள் மற்றும் திருமணமாகாத ஆண்களுக்கு! Posted: 27 May 2014 02:54 AM PDT |
| சிங்கம் சிங்கிளா வந்தால் இது தான் கதி…. பாவம் இப்படி உயிரை விட்டுருச்சே Posted: 27 May 2014 02:35 AM PDT |
| ஏரியை சூறையாடும் மூடு பனியின் கண்கொள்ளாக்காட்சி! Posted: 27 May 2014 02:30 AM PDT |
| கடலுக்குள் விழுந்ததை கண்டறிய உதவிய சாட்டிலைட் தகவல்கள் வெளியீடு! Posted: 27 May 2014 01:38 AM PDT
மாயமான மலேசிய விமானத்தின் செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயானது. பின்னர் அந்த விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடலில் மாதக்கணக்கில் தேடும் பணி நடந்து வருகிறபோதிலும் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாயமான விமானத்தின் பாதையை கண்டுபிடிக்க உதவிய இங்கிலாந்தை சேர்ந்த இன்மார்சாட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் தகவல்களை மலேசிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. விமானத்தில் இருந்து செயற்கைக்கோளுக்கு வந்த சிக்னல்களை வைத்து மலேசிய விமானம் தெற்கு இந்திய கடல்பகுதியில் விழுந்தது என்பதை கூறியதே இந்த இன்மார்சாட் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. விமானம் கடலுக்குள் விழுந்தது என்பதை தீர்மானிக்க உதவிய செயற்கைக்கோள் தகவல்களை வெளியிட மலேசியா முதலில் தயங்கியது. இதையடுத்து அந்த தகவல்களை வெளியிடுமாறு விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகே செயற்கைக்கோள் தகவல்களை மலேசியா இன்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| பீதி அடைந்த மக்கள்,அதிர்ந்த துபாய் ஈரானில் நிலநடுக்கம்! Posted: 27 May 2014 01:33 AM PDT
ஈரானில் 5.1 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து துபாயில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள க்வெஷம் தீவின் தென்மேற்கில் 66 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் துபாயின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து பல கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். மக்கள் சமூக வலைதளங்களில் நில அதிர்வு குறித்து தெரிவித்துள்ளனர். கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். இதனால் துபாயில் பரபரப்பு ஏற்பட்டது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| மின்த்ராவை ரூ.2,000 கோடிக்கு வாங்கிய ஃபிளிப்கார்ட் நிறுவனம்! Posted: 27 May 2014 01:26 AM PDT
இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட், ஆன்லைன் பேஷன் பொருட்கள் விற்பனை நிறுவனமான மின்த்ராவை ரூ.2,000 கோடிக்கு தற்போது வாங்கியுள்ளது. 'இது ஒரு 100% கையகப்படுத்தல் ஆகும் மற்றும் இந்த துறையில் முன்னோக்கி செல்ல பெரிய திட்டங்கள் உள்ளன,' என்று பெங்களூரு சார்ந்த ஃபிளிப்கார்ட் அமைப்பின் துணை நிறுவனரான சச்சின் பன்சால், கூறியுள்ளார். ஒருங்கிணைந்த நிறுவனம், ஒட்டுமொத்த ஊழியரின் (முழு நேரம்) வலிமை 4,000 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 3,000 பேரும், மின்த்ரா நிறுவனத்தில் சுமார் 750 பேரும் பணியாற்றுகின்றனர். இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் ஃபேஷன் வர்த்தகத்தில் ஒரு வலுவான பிடியை ஃபிளிப்கார்ட் நிறுவனம் தக்க வைத்துக்கொள்கிறது. 'ஃபிளிப்கார்ட் அடுத்த சில ஆண்டுகளில் ஆன்லைன் ஃபேஷன் வர்த்தகதத்தில் மிகப்பெரிய தயாரிப்பாக வளர்ந்து வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது' என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ளது. மின்த்ராவின் நிறுவனரான, முகேஷ் பன்சால், ஃபிளிப்கார்ட் குழுவில் இணைவார் மற்றும் ஃபேஷன் இகாமர்ஸ் வணிகத்தில் தலைமை வகிப்பார் என்றும் அறிவித்துள்ளனர். 'நாங்கள் ஃபிளிப்கார்ட் உடன் இணைத்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இணைப்பு இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஒரு சவாலாக இருக்கும்,' என்று முகேஷ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் 2வது சுற்றுக்கு ஷரபோவா தகுதி Posted: 27 May 2014 01:12 AM PDT
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா) தகுதி பெற்றார். முதல் சுற்றில் சக வீராங்கனை செனியா பெர்வாக்குடன் நேற்று மோதிய ஷரபோவா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். மற்றொரு முதல் சுற்றில் டொமினிகா சிபுல்கோவா (ஸ்லோவகியா) 7-5, 6-0 என்ற நேர் செட்களில் உள்ளூர் வீராங்கனை வர்ஜினி ரஸானோவை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் யூஜெனி பவுச்சார்டு (கனடா), தாமிரா பாஸ்செக் (ஆஸ்திரியா), பிளாவியா பென்னட்டா (இத்தாலி), சேபைன் லிசிக்கி (ஜெர்மனி) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரி (9வது ரேங்க்) 6-7 (4-7), 1-6, 2-6 என்ற நேர் செட்களில் ஸ்லோவகியாவின் மார்டின் கிளிஸானிடம் (59வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். பிரெஞ்ச் ஓபன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடிக்கு 5வது ரேங்க் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்னா - அய்சம் அல் குரேஷி (பாக்.) ஜோடிக்கு 6வது ரேங்க் வழங்கப்பட்டுள்ளது. பிரெஞ்ச் ஓபனில் 2ம் நாளான நேற்று மழை காரணமாக பல ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த தொடரில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள நம்பர் 1 வீரர் ரபேல் நடாலுக்கு, பிரதான ஸ்டேடியம் ஒதுக்கப்படாமல் முக்கியத்துவம் இல்லாத மைதானத்தில் விளையாட ஏற்பாடு செய்தது சர்ச்சையை கிளப்பியது.This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈடன் கார்டனில் கிங்ஸ் லெவன் – நைட் ரைடர்ஸ் இன்று மோதல்! Posted: 27 May 2014 12:58 AM PDT
ஐபிஎல் டி20 தொடரின் 7வது சீசனில், இறுதிப் போட்டிக்கு முன்னேற போகும் முதல் அணி எது என்பதை தீர்மானிக்கும் 'குவாலிபயர் 1' ஆட்டத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்ற இந்தியன் பிரிமியர் லீக் 20 ஓவர் போட்டி தொடர், கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முதல் 20 லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றன. இதையடுத்து, மே 2ம் தேதி முதல் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் இந்திய மைதானங்களில் நடத்தப்பட்டன. எட்டு அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோதிய நிலையில், புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. பஞ்சாப் அணி அதிகபட்சமாக 11 வெற்றிகளுடன் 22 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. கொல்கத்தா, சென்னை அணிகள் தலா 9 வெற்றியுடன் 18 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் கொல்கத்தா 2வது இடத்தை கைப்பற்றியது. நான்காவது இடம் யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கான கடைசி லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தட்டிப் பறித்தது. வெற்றி இலக்கான 190 ரன்களை அந்த அணி 14.3 ஓவரிலேயே எட்ட வேண்டும் என்ற மிகக் கடினமான சவாலை எதிர்கொண்ட நிலையில், மும்பை 14.4 ஓவரில் 195 ரன் விளாசி ரன் ரேட் அடிப்படையில் ராயல்சை பின்னுக்குத் தள்ளியது. அந்த அணியின் கோரி ஆண்டர்சன் 44 பந்தில் 95* ரன் அடித்து (9 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஐதராபாத் (12), பெங்களூர் (10) அணிகள் முறையே 6வது மற்றும் 7வது இடத்தை பிடித்த நிலையில், கெவின் பீட்டர்சன் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 புள்ளிகள் மட்டுமே பெற்று (2 வெற்றி, 12 தோல்வி) பரிதாபமாக கடைசி இடத்தை பிடித்தது. இந்த நிலையில், பிளே ஆப் சுற்று இன்று தொடங்குகிறது. கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்கும் குவாலிபயர் 1 ஆட்டத்தில், ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. குவாலிபயர் 2 எனப்படும் இந்த ஆட்டத்தில் 3வது, 4வது இடங்களைப் பிடித்த சென்னை - மும்பை அணிகளிடையே நடக்கும் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் குவாலிபயர் 1ல் தோற்ற அணி மோதும். அதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு தகுதி பெறும். பஞ்சாப் - கொல்கத்தா இரு அணிகளிலுமே அதிரடி ஆட்டக்காரர்கள் அதிகமுள்ளதால், குவாலிபயர் 1 ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்: ஜார்ஜ் பெய்லி (கேப்டன்), வீரேந்திர சேவக், அனுரீத் சிங், பர்விந்தர் அவானா, லஷ்மிபதி பாலாஜி, ரிஷி தவான், குர்கீரத் சிங் மான், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், மிட்செல் ஜான்சன், கரண்வீர் சிங், முரளி கார்த்திக், மன்தீப் சிங், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர், அக்ஷர் பட்டேல், திசாரா பெரேரா, செதேஷ்வர் புஜாரா, விருத்திமான் சாஹா, சந்தீப் ஷர்மா, ஷிவம் ஷர்மா, ஷர்துல் தாகுர், மனன் வோரா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கவுதம் கம்பீர் (கேப்டன்), மன்விந்தர் பிஸ்லா, பியுஷ் சாவ்லா, பேட் கம்மின்ஸ், தேவபிரதா தாஸ், ஜாக் காலிஸ், குல்தீப் யாதவ், கிறிஸ் லின், சயான் மொண்டால், மார்னி மார்கெல், சுனில் நரைன், மணிஷ் பாண்டே, யூசுப் பதான், வீர் பிரதாப் சிங், ஆந்த்ரே ரஸ்ஸல், ஷாகிப் அல் ஹசன், ரியான் டென்டஸ்சேட், ராபின் உத்தப்பா, வினய் குமார், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்பதை முன்னிட்டு அமெரிக்க இந்தியர்கள் கொண்டாட்டம்! Posted: 27 May 2014 12:52 AM PDT
இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்பதை முன்னிட்டு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் நேற்று அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் கூடி வாழ்த்து தெரிவித்து கோஷங்களை எழுப்பியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்திய பிரதமராக மோடி நேற்று பதவியேற்றதை முன்னிட்டு, அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு, நியூயார்க், நியூ ஜெர்சி, ஹோஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டாம்பா போன்ற பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் ஒன்று கூடினர். இதையடுத்து அவர்கள் கைகளில், நமோவுடன் இந்தியா, இந்தியாவை மோடி வளப்படுத்துவார், பாஜவுக்கு வாழ்த்துக்கள், உள்ளிட்ட ஸ்லோகங்களை பதாகைகளில் எழுதியும், கோஷமிட்டும் கொண்டாடினர். அப்போது அங்கு வந்த அனைவருக்கும் நமோ டீ மற்றும் இனிப்பு, கார வகைகள் வழங்கப்பட்டது. கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சர்வதேச இந்திய சமுதாய நண்பர்கள் அமைப்பை சேர்ந்த கவுரங் தேசாய் கூறுகையில், காங்கிரஸ் 60 ஆண்டு காலம் ஆட்சி செய்து என்ன சாதித்தது. இதுவரை எந்த முன்னேற்ற பாதைக்கும் அது வழிவகுக்கவில்லை. ஆனால் மோடி ஒரு வாக்குறுதி கொடுத்தால், 10 நலத்திட்டங்களை நிறைவேற்றுவார். இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் மேம்பாடு மட்டுமே மோடியின் மனதில் உள்ளது. அவர் நிச்சயம் சாதித்துக் காட்டுவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது என்றார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இணையத்தளங்கள் மீதான தடை: மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு Posted: 27 May 2014 12:41 AM PDT
இலங்கையில் இயங்கும் இணையத்தளங்களை தடை செய்தமையானது, நாட்டின் அரசியல் அமைப்பில் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயல் என கருத முடியும் என இலங்கை மனித உரிமை ஆணையகத்தின் தலைவர் பிரதீபா மாஹானாஹேவா தெரிவித்துள்ளார். இவ்வாறு இணையத்தளங்களை தடை செய்வதன் மூலம் அரசியல் அமைப்பின் 14 (1) (அ) சரத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல். பல செய்தி இணையத்தளங்களை அரசாங்கம் தடைசெய்துள்ளமைக்கு எதிராக இணையத்தளங்களுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் பல முறைப்பாடுகளை செய்துள்ளனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை செல்வது உறுதி! Posted: 27 May 2014 12:35 AM PDT
புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரியில் இலங்கை செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலில் நேற்று பயணத்தை மேற்கொண்ட பாப்பரசர் இலங்கை தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்துள்ளார். முன்னதாக இந்த மாத முற்பகுதியில் பாப்பரசர் இலங்கையின் காடினர் மெல்கம் ரஞ்சித்திடம் இலங்கை விஜயம் குறித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் காயங்களை குணப்படுத்த நல்லிணக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை தமிழர்களின் உரிமைகளை இந்திய மோடி அரசாங்கம் பாதுகாக்கும்! Posted: 27 May 2014 12:23 AM PDT
இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய இந்திய பிரதமர் அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மோடி, இலங்கைத் தமிழர்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பார் என்று ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதியின் வருகையொட்டி நேற்றைய பதவிப்பிரமாண நிகழ்வை தமிழக கட்சிகள் புறக்கணித்தமை குறித்து கருத்துரைத்த அவர், தமிழர்களின் பிரச்சினை குறித்து இந்திய அரசாங்கம் கரிசனை கொண்டுள்ளது. எனவே இலங்கை தமிழர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்டார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கைக்காக மாலைதீவு செயல்படும்! ஜனாதிபதி யமீன் அப்துல் கயூம் உறுதி! Posted: 27 May 2014 12:15 AM PDT
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்காக மாலைதீவு செயற்படும் என்று மாலைதீவின் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கச் சென்றுள்ள இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் மாலைதீவு ஜனாதிபதி யமீன் அப்துல் கயூம் ஆகியோர் புதுடில்லியில் நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு ஒத்துழைப்புகள் குறித்து இருவரும் பேச்சு நடத்தினர். இதன்போதே ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்காக மாலைதீவு செயற்படும் என்று மாலைதீவின் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















