Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரம்: விவாதத்துக்கு தயார் என மத்திய அரசு அறிவிப்பு

Posted:

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசமைப்பு சட்டத்தின், 370வது பிரிவு குறித்து முடிவு செய்ய, விரிவான விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளது,'' என, பிரதமர் அலுவலக இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஜித்தேந்திரா சிங் கூறியுள்ளார்.பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சராக ஜித்தேந்திரா சிங், நேற்று பொறுப்பேற்றார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, 'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசமைப்பு சட்டத்தின், 370வது ...

4 ஆண்டுகளாகியும் கட்டப்படாத காளஹஸ்தி ராஜகோபுரம்

Posted:

காளஹஸ்தி: காளஹஸ்தி சிவன் கோவிலில், ராஜகோபுரம் இடிந்து விழுந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், இதுவரை கோபுரம் எழுப்பும் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால், பக்தர்கள் மிகவும் மனவருத்தத்தில் உள்ளனர்.காளஹஸ்தி சிவன் கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் முதலிகளால் பாடல் பெற்ற தலம். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த அந்த தலத்தில், கி.பி., 1516ம் ஆண்டு, கஜபதி ராஜாக்களை வீழ்த்தியதன் நினைவாக, கிருஷ்ண தேவராயரால், 136 அடி உயரத்தில், ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டது. மாநில அறநிலைய துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், ...

கவுரவம் பார்க்காதீங்க: சிறையை விட்டு வெளியே வாங்க: டில்லி ஐகோர்ட் 'அட்வைசை' ஏற்ற கெஜ்ரிவால் விடுதலை

Posted:

புதுடில்லி: 'அவதூறு வழக்கில், மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவுப்படி, உரிய பிணைத்தொகையை செலுத்தி, அரவிந்த் கெஜ்ரிவால், சிறையை விட்டு வெளியே வர வேண்டும். பிணைத்தொகை செலுத்துவதை, கவுரவ பிரச்னையாக்கக் கூடாது' என, டில்லி உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. இந்த ஆலோசனையை ஏற்ற கெஜ்ரிவால், பிணைத்தொகைக்கான பத்திரத்தில் கையெழுத்திட்டு, அது, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சமர்ப்பிக்கப்பட்டதால், திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.பா.ஜ., முன்னாள் தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி மீது, சில மாதங்களுக்கு முன், ஆம் ஆத்மி தலைவர் ...

நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி சேவை வரி நிலுவை: சிறப்பு திட்டம் அமல்படுத்துமா மத்திய அரசு?கோவையில் 60 கோடி ரூபாய் வசூல்!

Posted:

கோவை: தன்னார்வ வரி செலுத்துவோரை ஊக்குவிக்க பிரத்யேக திட்டங்களை மத்திய அரசு அறிவித்தால், நாடு முழுவதும் நிலுவையிலுள்ள பல ஆயிரம் கோடி சேவைவரி வசூலிக்க வாய்ப்பு ஏற்படும்.மத்திய அரசின் வருவாயில் சேவை வரித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, மக்களிடம் இருந்து சேவைவரி பெறும் நிறுவனங்கள் அனைத்தும், வரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரி செலுத்த தவறுவோரிடம் இருந்து அபராதம் மட்டுமே வசூலிக்கப்பட்ட காரணத்தால், நாடு முழுவதும் கோடிக்கணக்கில் சேவை வரி நிலுவை வைக்கப்பட்டது. இதனால் அபராதம் மட்டுமின்றி கைது ...

மீனவர் பிரச்னை குறித்து ராஜபக் ஷேயுடன் மோடி பேச்சு

Posted:

புதுடில்லி:இலங்கை அதிபர் ராஜபக் ஷேயுடன், நேற்று பேச்சு நடத்திய, பிரதமர் நரேந்திர மோடி, ''தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,'' என, அவரிடம் வலியுறுத்தினார்.நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் ராஜபக் ஷே, நேற்று முன்தினம் பங்கேற்றார்.இதைத் தொடர்ந்து, ராஜபக் ஷேயுடன், பிரதமர் மோடி, நேற்று பேச்சு நடத்தினார். இதுகுறித்து, வெளியுறவு செயலர் சுஜாதா சிங் கூறியதாவது: இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான நிவாரண பணிகளை விரைவு படுத்தும்படியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களுக்கு, அதிக ...

குஜராத்தில் இருந்து மோடி கொண்டு வந்த 'சொத்து'

Posted:

குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக பணியில் இருந்த போதும், அங்கு நரேந்திர மோடி 'ஒரு துறவி போன்றே' வாழ்ந்தார். சொந்த பந்தங்களை தேடிச்சென்று சந்திப்பது இல்லை. உறவினர்களும், முதல்வர் அலுவலகம் வருவது இல்லை. அதிகாலை 5 மணிக்கே எழுந்து யோகா செய்வது, பத்திரிகைகள் படிப்பது, லேப்டாப்பில் மின்னஞ்சல் பார்ப்பது என்று தான் அவரது அதிகாலை பொழுது விடிந்தது.ஒரு நாள் கூட விடுப்பு எடுத்தது இல்லை. ஓய்வெடுக்க எங்கும் சென்றது இல்லை. கட்சி அல்லது ஆட்சி என்று தான் அவரது நாட்கள் நகர்ந்தன.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளிடமும், கடைநிலை ஊழியர்களிடம் ஒரே மாதிரி பழகும் குணம் கொண்டவர். ...

அமைச்சரவையில் வாரிசுகளுக்கு வேலையில்லை

Posted:

அரசியல் தலைவர்களின் வாரிசுகள் முதல்வராக, அமைச்சர்களாக பதவியேற்பது இந்தியாவில் வழக்கமான ஒன்று. கடந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் சச்சின் பைலட், அகதா சங்மா, வாசன், ஜோதிராதித்யா சிந்தியா, புரந்தேஸ்வரி, மிலிந்த் முரளி தியோரா ஆகியோர் இடம் பெற்றனர். ஆனால் இம்முறை மோடி அமைச்சரவையில், ஒரே ஒரு வாரிசுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் பிரசாரத்தின் போது, நரேந்திர மோடி, ராகுலை 'இளவரசர்' என அழைத்தார். வாரிசின் கையில் தான் ஆட்சி நடக்கிறது என்றும் கடுமையாக விமர்சித்தார். சொன்னது போலவே வாரிசு யாருக்கும் அமைச்சரவையில் மோடி ...

ஜூன் 1ம் தேதியில் இருந்து மின்தடை அறவே நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பு

Posted:

சென்னை:'தமிழகத்தில், இதுவரை நடைமுறையில் உள்ள, மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும், ஜூன் 1ம் தேதியில் இருந்து, அறவே நீக்க உத்தரவிட்டு உள்ளேன்' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.முதல்வர் ஜெயலலிதா தலைமையில், தலைமைச் செயலகத்தில், நேற்று, தமிழகத்தின் மின் நிலைமை குறித்த, ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தலைமைச் செயலர் மோகன்வர்கீஸ் சுங்கத், தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மை செயலர் சண்முகம், மின்சார வாரியத் தலைவர் ஞானதேசிகன் ...

ஜூன் முதல் வாரத்தில் லோக்சபா கூடுகிறது

Posted:

புதுடில்லி: பதினாறாவது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர், அடுத்த மாதம் முதல் வாரத்தில் துவங்குகிறது. கூட்டத்தொடர் துவங்கும் தேதி, இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது.இதுதொடர்பாக, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, தன் அலுவலக பொறுப்பை ஏற்ற முதல் நாளிலேயே, மிகவும் புத்துணர்ச்சியுடனும், கடுமையாகவும் பணியாற்றி உள்ளார். நேற்று மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மிக முக்கியமான இரண்டு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. இன்று இரண்டாவது கூட்டம் ...

ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் 17 துறைகள்: சிறந்த நிர்வாகத்திற்காக மோடி புதிய அணுகுமுறை

Posted:

புதுடில்லி: மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 17 அமைச்சர்களின் கீழ் செயல்பட்ட அமைச்சகங்கள், தற்போது, ஏழு அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளன. சிறப்பான நிர்வாகம் மற்றும் மக்களுக்கு நல்ல பலன் கிடைப்பதை உறுதி செய்ய, பிரதமர் மோடி, இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.வெளிநாட்டு இந்தியர் விவகாரம்: மன்மோகன் சிங் தலைமையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2009ல் இரண்டாவது முறையாக பதவியேற்ற போது, வெளிநாட்டு இந்தியர் விவகாரம் என்ற துறை உருவாக்கப்பட்டது. அதற்கென, தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டார். ஆனால், ...

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க சிறப்பு குழு: மோடி அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் முடிவு

Posted:

புதுடில்லி: கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரவும், கருப்புப் பணம் தொடர்பான விவகாரங்களை கண்காணிக்கவும், சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று முதல் முறையாக கூடிய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.ராம்ஜெத்மலானி வழக்கு: 'சுவிட்சர்லாந்து உட்பட, பல வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள், 'டிபாசிட்' செய்துள்ள, கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச ...

பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் - மோடி ஆலோசனை: பயங்கரவாத ஒழிப்பு குறித்து முக்கிய பேச்சு

Posted:

புதுடில்லி:நாட்டின், 15வது பிரதமராக நேற்று முன்தினம் பதவியேற்ற நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, ''பாக்., மண்ணில் இந்தியாவுக்கு எதிராக உருவாகும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும். பாக்.,கில் நடந்து வரும், மும்பை தாக்குதல் குற்றவாளிகள் மீதான விசாரணையை விரைவாக நடத்தி, குற்றம் புரிந்தவர்களை தண்டிக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.பிரதமராக நேற்று முன்தினம் மாலை பதவியேற்ற மோடி, நேற்று காலை தன் அலுவலகம் சென்றார். அங்கு அவரை, முதன்மை செயலர், நிருபேந்திர மிஸ்ராவும் மற்றும் அதிகாரிகளும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™