Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மும்பை இந்தியன்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது!

Posted: 24 May 2014 12:47 AM PDT

mumbai-indians

mumbai-indiansடெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் வென்றது. மும்பை, வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. மும்பை தொடக்க வீரர்களாக சிம்மன்ஸ், மைக் ஹஸி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 8 ஓவரில் 87 ரன் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது. சிம்மன்ஸ் 35 ரன் எடுத்து (25 பந்து, 5 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அடுத்து ஹஸியுடன் கேப்டன் ரோகித் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய ஹஸி 28 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 56 ரன் எடுத்து (33 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். ரோகித் 30, போலார்டு 11 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த வீரர்கள் ரன் வேகத்தை அதிகரிக்க முடியாமல் தடுமாறினர். தாரே 14, கோபால் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். மும்பை இந்தியன்ஸ் அணி 19.3 ஓவரில் 173 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 18 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லி பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 3, உனத்காட் 2, பார்னெல், நதீம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. முரளி விஜய், கேப்டன் பீட்டர்சன் இருவரும் துரத்தலை தொடங்கினர். விஜய் 8 ரன் எடுத்து கோபால் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். பீட்டர்சன் 44 ரன் எடுத்து (31 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஹர்பஜன் சுழலில் பலியாக, தினேஷ் கார்த்திக் 7 ரன் மட்டுமே எடுத்து டிலாங்கே பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஏமாற்றத்துடன் திரும்பினார். டெல்லி அணி 9.4 ஓவரில் 61 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், மனோஜ் திவாரி - டுமினி ஜோடி 4வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடியது. இருவரும் 4வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். பரபரப்பான கடைசி கட்டத்தில் மனோஜ் திவாரி 41 ரன் எடுத்து (31 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்க, டெல்லிக்கு நெருக்கடி ஏற்பட்டது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 25 ரன் தேவைப்பட்ட நிலையில், பூம்ரா வீசிய அந்த ஓவரில் 10 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து 15 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது. கைவசம் 6 விக்கெட் இருந்தும் அந்த அணி வீரர்கள் மந்தமாக பேட் செய்து வாய்ப்பை வீணடித்தனர். அந்த அணிக்கு இது 11வது தோல்வி ஆகும். டுமினி 45 ரன் (29 பந்து, 4 சிக்சர்), ஜாதவ் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் டிலாங்கே 2, கோபால், ஹர்பஜன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அரை சதம் விளாசிய மும்பை வீரர் மைக்கேல் ஹஸி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்பது உறுதி!

Posted: 24 May 2014 12:32 AM PDT

Nawaz-sherif

Nawaz-sherifநரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நவாஸ் ஷெரீப் பங்கேற்பை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. 26ம் தேதி நடைபெற உள்ள மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க கடந்த 4 நாட்களுக்கு முன் நவாஸ் ஷெரீப்பிற்கு அந்தியா அழைப்பு விடுத்திருந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள்!

Posted: 24 May 2014 12:28 AM PDT

Rajabakshe

Rajabaksheஅடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது, அரசாங்க தரப்பில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. ஜனாதிபதிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட ஆளும் கட்சி தரப்பினர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்களுக்கு, ஆளும் கட்சியின் சில அமைச்சர்களும் ஆதரவாக செயற்படவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே தமக்கு போட்டியாக ஜனாபதி தேர்தலில் நிற்கின்றவர்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக செயற்படுகின்ற ஆளும் தரப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான யாப்பு திருத்தம் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி தீhமானித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

போர்க்குற்றவாளிகளுக்கு தூதரக சிறப்பு வழங்கும் மகிந்த அரசு!

Posted: 24 May 2014 12:24 AM PDT

mahinda-gotta-desapriya

mahinda-gotta-desapriyaவெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற இராணுவத்தின் தாக்குதலுக்கு கட்டளையிட்ட அதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவை அரசாங்கம் துருக்கிக்கான இலங்கை தூதரகத்தின் இராணுவ இணைப்பாளராக நியமித்துள்ளது. ரத்துபஸ்வல பிரதேசத்தில் சுத்தமான குடிநீர் கோரி கடந்த வருடம் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள், தொழிலுக்கு சென்று திரும்பிய இளைஞர் ஒருவர் என மூன்று பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு கட்டளையிட்ட இராணுவ அதிகாரியான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தனவை அரசாங்கம் இரகசியமான முறையில் துருக்கிக்கான இலங்கை தூதரகத்தின் இராணுவ இணைப்பாளராக நியமித்துள்ளது. இந்த இராணுவ அதிகாரி போர்க் குற்றவாளி என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. போர்க்குற்றங்கள் சுமத்தப்படும் நபர்களை மேற்குலக நாடுகளில் தூதரக சிறப்புரிமைகளுடன் பாதுகாப்பாக வைத்திருப்பது ராஜபக்ச அரசாங்கத்தின் அடையாளமாக மாறியுள்ளது. போர்க்குற்றம் சுமத்தப்படும் இராணுவ அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐ.நாவுக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜகத் டயஸ் ஜேர்மனிக்கான இலங்கையின் பிரதி தூதுவராக நியமிக்கப்பட்டிருந்ததுடன் அவர் மீண்டும் இலங்கை திரும்பி இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பிரசன்ன சில்வா இங்கிலாந்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். சீனாவுக்கான தூதரக அதிகாரியான சுராஜ் பான்ஸஜய நியமிக்கப்பட்டிருந்ததுடன் இந்த பட்டியலில் தற்போது தேசப்பிரிய குணவர்தனவும் இணைக்கப்பட்டுள்ளார். ரத்துபஸ்வல சம்பவத்தை அடுத்து நாட்டில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பு காரணமாக தேசப்பிரிய குணவர்தனவை இராணுவத்தில் இருந்து நீக்கியுள்ளதாக அரசாங்கம் பிரசாரம் செய்தது. எனினும் பின்னர், அவர் மீண்டும் இராணுவத்தில் இணைக்கப்பட்டு தற்போது தூதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிளிநொச்சி கிளையின் அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் புலனாய்வுத்துறையால் கைது!

Posted: 24 May 2014 12:08 AM PDT

Arrest

Arrestதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி கிளையின் அமைப்பாளர் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் இலங்கை படைப்புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 26ம் நாள் கிளிநொச்சியில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி கிளையின் அமைப்பாளர் ஜெகதீஸவரனால் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிலையில் ஜெகதீஸ்வரன் நேற்றிரவு 10 மணியளவில் பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இலங்கை படைப்புலனாய்வாளர்கள் 5 பேரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டள்ளதாக தெரியவருகின்றது. ஜெகதீஸ்வரன் கிளிநொச்சி பொது வைத்திசாலையின் உத்தியோகத்தர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மகிந்த ராஜபக்சவுக்கும், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையில் நாளை சந்திப்பு!

Posted: 24 May 2014 12:03 AM PDT

Rajabaksa

Rajabaksaஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளது. விமல் வீரவன்ச கடந்த காலங்களாக அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இது அவரின் நடிப்பு என்று கூறப்படுகின்ற போதும், இந்த விடயம் அரசாங்கத் தரப்பில் இந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அரசாங்கத்துக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமைச்சர் சம்பிக்க கருத்துக்கு ஹிருனிகா பிரேமசந்திர கடம் அதிருப்தி!

Posted: 23 May 2014 11:57 PM PDT

Hirunika-Ramachandra

Hirunika-Ramachandraஅமைச்சர் சம்பிக்கவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர கடம் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்ட கருத்துக் குறித்தே இந்த அதிருப்தியை ஹிருனிகா தெரிவித்துள்ளார். பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் நாட்டில் போதை பொருளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே தேவை என்றால் குற்றச் செயல்களை தடுக்க முடியும் என சம்பிக்க அண்மையில் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார். அமைச்சரவை அந்தஸ்து அமைச்சுப் பொறுப்பை வகித்து வரும் அமைச்சர் சம்பிக்கவின் கருத்து அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனது தந்தை பாரதவின் பெயரை நேரடியாக பயன்படுத்தி போதைப் பொருள் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து மக்கள் மத்தியில் தவறான கருதுகோள்களை உருவாக்கும். தந்தையின் கொலையைத் தொடர்ந்து துமிந்த சில்வா வெளிநாடு சென்றதனால் போதைப்பொருள் வர்த்தகம் ஸ்தம்பிதம் அடைந்தது என்றே சம்பிக்க தெரிவித்திருக்க வேண்டும். கொள்கைகளுக்கு சம்பிக்க குரல் கொடுப்பவர் என்றால் உண்மையை மட்டுமே பேச வேண்டும். சம்பிக்க மற்றும் அவரது கட்சி மீது இருந்த நம்பிக்கை வலுவிழந்து விட்டது என ஹிருனிகா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நிர்வாண மனிதனால் வெள்ளைமாளிகை வாயிலில் பரபரப்பு!

Posted: 23 May 2014 11:20 PM PDT

America-police

America-policeவெள்ளிக்கிழமை பிற்பகல் மனிதனொருவர் தனது பிறந்தநாள் உடையில் வெள்ளைமாளிகை வாயிலில் நின்றுள்ளார். தடுக்க முற்பட்ட அதிகாரியை தாக்கியுள்ளார். பின்னர் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார். இச்சம்பவம் பிற்பகல் 3-மணியளவில் 1600 பென்சில்வேனியா அவெனியுவில் இடம்பெற்றுள்ளது. இந்த இடம் வெள்ளை மாளிகையை பார்வையிட வரும் உல்லாச பயணிகளினாலும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டக்காரர்களாலும் நன்கு அறியப்பட்ட ஒரு இடமாகும். இந்நபர் மைக்கேல் பிச்சாட் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக யு.எஸ். இரகசிய சேவைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறைந்தது நான்கு அதிகாரிகள் சேர்ந்து இவரை பிடித்து ஆடை ஒன்றினால் போரத்தி கைதுசெய்தனர். அதிபர் ஒபாமாவின் அட்டவணைப்படி அவர் சம்பவம் நடந்த போது வெள்ளை மாளிகையில் இருந்துள்ளார். ஆனால் கட்டுப்பாட்டிற்குள் வைக்கும் உத்தரவு பிறப்பிக்க படவில்லை. அதிபர் ஒபாமா வாசிங்டன் டி.சி.யில் முன்னறிவித்தல் எதுவும் இன்றி தலைநகரை சுற்றி நடந்து மக்களையும் உல்லாசபயணிகளையும் ஆச்சரியப்படுத்திய தினத்திற்கு அடுத்த நாள் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

இயற்கை எரிவாயு கட்டண அதிகரிப்பை எதிர்நோக்கும் ஒன்ராறியோ வாடிக்கையாளர்கள்!

Posted: 23 May 2014 11:08 PM PDT

Banbridge

Banbridgeஒன்ராறியோவை இறுக்கியிருந்த குளிர்நிறைந்த பனிக்காலம் ஒன்ராறியோ வாடிக்கையாளர்களின் பணப்பைகளையும் அடுத்த ஒரு சில வருடங்களிற்கு  விறைப்படைய  வைக்கப்போகின்றது. ஒன்ராறியோ எரிசக்தி வாரியம் இந்தவருட ஆரம்பத்தில் இடைக்கால விகித அதிகரிப்பை உறுதிப்படுத்தியது. ஆனால் கட்டண உயர்வை ஒரு நீண்டகாலத்திற்கு விரிவாக்க உள்ளதா என்பிரிட்ஜ் தெரிவித்துள்ளதாக அறியப்படுகின்றது. என்பிரிட்ஜினால் முதலில் முன்மொழியப்பட்ட 12-மாதங்களிற்கு பதிலாக  27-மாதங்களிற்கு விரிவாக்கப்படவுள்ளது. கடந்த 37-வருடங்களில் ஏற்பட்ட ஒன்ராறியோவின் மிகுந்த குளிரான பனிக்காலம் காரணமாக ஏற்பட்ட கூடுதல் செலவினை சரிப்படுத்த இவ்வருடம் கட்டண அதிகரிப்பு தேவைப்பட்டதெனவும் கூறப்பட்டுள்ளது. என்பிரிட்ஜின் ஆரம்ப திட்டத்தின் பிரகாரம் வருடமொன்றிற்கு இயற்கை எரிவாயுவிற்கு 1,000 டாலர்கள் செலுத்தும் சராசரி வாடிக்கையாளர் அடுத்த வருடம் கிட்டதட்ட 400 டாலர்கள் அதிகமாக செலுத்த வேண்டுமென அறியபடுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

அருந்ததியால் தாமதமான நேற்று இன்று!

Posted: 23 May 2014 02:17 AM PDT

Actress-Arundhati

Actress-Arundhatiஅம்முவாகிய நான் படத்தை இயக்கிய பத்மா மகன், நீண்ட இடைவெளிக்கு பிறகு ''நேற்று இன்று'' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கி இருக்கிறார். விமல், பிரசன்னா, ரிச்சர்ட், அருந்ததி, நந்தகி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் முடிந்து காப்பி ரெடியாகி ஒரு வருடத்திற்கு மேலாகிறது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் தள்ளிப்போய் இருக்கிறது. இதற்கு காரணம் ஹீரோயின் அருந்ததிதான். படத்தில் அவர் 5 அதிரடிப்படை வீரர்களுடன் காட்டுக்குள் செல்லும் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அப்படியென்றால் காட்சிகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது. அதனால் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் யாரும் வாங்க முன்வரவில்லை. இப்போது பத்மா மகனின் நண்பர் எஸ்.தணிகவேல் என்பவர் படத்தை வாங்கி வெளியிடுகிறார். அடுத்த மாதம் ரிலீசாகிறது. இதுபற்றி பத்மாமகன் கூறியதாவது: "இந்த படத்தை ஆரம்பிக்கும்போதே இதற்கு ஏ சான்றிதழ்தான் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். காரணம் படத்தில் ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கிறது. கண்ணை உறுத்தாத கிளாமர் இருக்கிறது. ஆனால் ஏ சான்றிதழ் பெற்றிருப்பதாலேயே படத்தை ஷகிலா படம் ரேன்ஞ்சுக்குத்தான் பார்க்கிறார்கள். படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்று யாரும் வாங்க முன்வரவில்லை. ஒரு சில கார்பரேட் கம்பெனிகள் அடிமாட்டு ரேட்டுக்கு படத்தை கேட்கிறார்கள். இதனால்தான் படம் தாமதமானது. இப்போது நண்பரின் உதவியால் படத்தை ரிலீஸ் செய்கிறேன்" என்கிறார் பத்மா மகன்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத்தை முந்திய தனுஷ்!

Posted: 23 May 2014 02:10 AM PDT

ajith-dhanush

ajith-dhanushதமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களே பாராட்டி வரும் ஒரு நடிகர் யார் என்றால் அது தனுஷ் மட்டுமே. ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற இவரை, ஒரு மேடையில் தன்னை வியக்க வைத்த ஒரு சிறந்த நடிகர் என்று விஜய்யே பாராட்டினார். அதுவும் அவரை தன் எதிரே வைத்துக்கொண்டு அந்த வார்த்தையை விஜய் சொன்னதால், சந்தோசத்தில் திக்குமுக்காடி திணறிப்போய் அமர்ந்திருந்தார் தனுஷ். அதையடுத்து, விழா முடிந்து வீட்டுக்கு வந்ததும் முதல்வேளையாக, தனது டுவிட்டரில், விஜய் அண்ணனின் பாராட்டு பெருமையாக உள்ளது. ஆனால், நான் அவரைவிட ஒன்றும் பெரிய நடிகன் இல்லை என்று தன்னடக்கத்தோடு தனது கருத்தை பதிவு செய்திருந்தார் தனுஷ். அப்படிப்பட்ட தனுஷ், ஜூம் என்ற நிறுவனம் நடத்தியுள்ள, ரசிகர்கள் விரும்பும் நடிகர்கள் பட்டியலில் 25ம் இடத்தை பிடித்துள்ளார். அவருக்குஅடுத்தபடியாக 27வது இடத்தை அஜீத் பிடித்திருக்கிறார். மேலும், தெலுங்கு நடிகர் ராம்சரண் 23வது இடத்தை பிடித்துள்ளாராம். மொத்தம் 50 இந்திய நடிகர்கள் பட்டியலிடப்பட்டு அவர்களில் 21 முதல் 50 பேர் கொண்ட பட்டியல் மட்டுமே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் முதல் 20 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட உள்ளதாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

படங்களே இல்லாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கும் பவர்ஸ்டார்

Posted: 23 May 2014 02:06 AM PDT

Srinivasan

Srinivasanலத்திகா என்ற படத்தை தயாரித்து நடித்த பவர்ஸ்டார் சீனிவாசன், அந்த படத்தை வெளியிட்டபோது செய்த பப்ளிசிட்டி பரபரப்பைக்கண்டு அசந்து போன நடிகர்களில் சந்தானமும் ஒருவர். அதனால்தான் அவரை தனது நண்பன் சேதுவுக்காக தான் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இன்னொரு ஹீரோவாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் பவர்ஸ்டார் கொடுத்த நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டதால், அதையடுத்து பல படங்களில் கமிட்டானார். ஆனால், எதிர்பாராவிதமாக மோசடி வழக்கில் அவர் சிறைக்கம்பி எண்ண சென்றதையடுத்து, அவருக்கான பட வாய்ப்புகள் குறைந்தன. இருப்பினும் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், மறுபடியும் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டினார். ஆனால், அதையடுத்து எதிர்பார்த்தபடி அவருக்கு யாரும் சான்ஸ் கொடுக்க முன்வரவில்லை. அதற்கு முக்கிய காரணம், ஜெயிலுக்கு செல்வதற்கு முன்புவரை தான் நடித்த பல படங்களுக்கு பைனான்ஸ் உதவி செய்து வந்தார் பவர்ஸ்டார். ஆனால் மோசடி வழக்கு பிரச்னைக்குபிறகு அவரது பண வரவு செலவு அனைத்தும் முடக்கப்பட்டதால், அவரால் யாருக்கும் பைனான்ஸ் தர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான், இப்போது அவர் யாரிடம் சான்ஸ் கேட்டாலும், ஏதாவது பைனான்ஸ் உதவி செய்ய முடியுமா எனறு கேட்பவர்கள், இவர் தனது நிலையை சொன்னதும் அப்புறம் பார்க்கலாம் என்று கட் பண்ணி விடுகிறார்களாம். இதனால்தான் படங்களே இல்லாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டிருக்கிறார் பவர்ஸ்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி ரத்து! உயர்நீதி மன்றம் உத்தரவு

Posted: 23 May 2014 01:54 AM PDT

kochadaiyaan

kochadaiyaanஇன்று வெளியாகும் கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் எர்ணாவூரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "திரைப்பட தணிக்கை துறையிடம் 'யு' சான்றிதழ் பெற்ற திரைப்படம், தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை வளர்க்கும் விதமாக உள்ள திரைப்படம், பெரும்பான்மையான வசனங்கள் தமிழில் உள்ள திரைப்படம் ஆகியவைகளுக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையின்படி பல திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசிடம் வரிவிலக்கு பெற்ற திரைப்படங்களைப் பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் வரியை வசூலிப்பதாகவும், இதில் மிகப்பெரிய மோசடி நடப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கும் 2011-ம் ஆண்டு அரசாணைக்கு தடை விதித்து கடந்த ஏப்ரல் 10-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையில், 'தெனாலிராமன்' மற்றும் 'என்னமோ ஏதோ' ஆகிய திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி கேட்டு அந்த திரைப்படங்களில் தயாரிப்பாளர் அரசிடம் விண்ணப்பம் செய்தனர். வரி விலக்கு தொடர்பான அரசாணைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அவர்களது விண்ணப்பத்தைப் பரிசீலிக்க முடியாது என்று தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை முதன்மை செயலாளர், ஆணையாளர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு 'கோச்சடையான்' படத்துக்கு வரி விலக்கு அளித்து கடந்த 12-ந் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வரி விலக்கு அளிக்கும் அரசாணைக்கு இந்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளபோது, இதுபோன்ற வரி விலக்கு அளிக்க முடியாது. ஆனால், கோச்சடையான் படத்துக்கு எப்படி வரி விலக்கு வழங்கப்பட்டது? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும். தமிழ்நாடு கேளிக்கை வரிச் சட்டம் அல்லது தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின் கீழ் ஏதாவது ஒரு உத்தரவு பிறப்பிக்கும்போது, தமிழக அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என்பதையும் இந்த அதிகாரிகள் கவனிக்கத் தவறியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களுடன் கூட்டுச்சேர்ந்து, தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு மிகப்பெரிய இழப்பை இந்த அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். கேளிக்கை வரி விலக்கு என்பது பொது மக்களுக்குத்தானே தவிர, அது தனி நபருக்கு இல்லை என்பதையும் இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. எனவே, கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு பைசலாகும் வரை அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார். உத்தரவு இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு: கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும். எனவே, திரையரங்கு உரிமையாளர்கள், கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரியை வசூலிக்கக்கூடாது. கேளிக்கை வரி சேர்க்காமல், அரசு நிர்ணயம் செய்துள்ள டிக்கெட் கட்டணத்தை மட்டுமே திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்க வேண்டும். இந்த வழக்கில், திரையரங்கு உரிமையாளர்களை எதிர்மனுதாரராக மனுதாரர் சேர்க்க வேண்டும். வழக்கை, ஏற்கனவே கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். ஏற்கெனவே வரி விலக்கு அளிக்கப்பட்ட அத்தனைப் படங்களுக்கும் திரையரங்குகள் முழுமையான கட்டணத்தையே பார்வையாளர்களிடமிருந்து வசூலித்துள்ளனர். எனவே அந்தப் படங்களுக்கு வசூலிக்கப்பட்ட தொகை, அவற்றிலிருந்து பொதுமக்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை போன்றவற்றையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என இன்னொரு வழக்குத் தொடரவிருக்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடலுக்கு உகந்த பாகற்காய்!

Posted: 23 May 2014 01:40 AM PDT

Pavakkai

Pavakkaiபாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள். பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சந்தையை அலங்கரிக்க வரும் லூமியா 630 வின்டோஸ் போன்!

Posted: 23 May 2014 01:29 AM PDT

Lumia-630

Lumia-630உலகில் இன்றைய நவீன யுகத்துக்கு ஏற்ப தினமும் ஒரு புது படைப்புகள் உதயமாகி கொண்டிருக்கிறது. இதில், இன்றைய அத்தியாவசிய தேவையாகிப் போன, மொபைல் போன்களில் பல வசதிகள் கொண்டு தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதில், தற்போது 'ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்' போன்களுக்கான மவுசு அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் வசதியுடன் வரும் ஸ்மார்ட் போன்களுக்கு மக்களிடம் எப்போதும் ஆதரவு இருக்கும். இவற்றின் ஆதிக்கத்தால், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவந்த போன்களின் விற்பனை சரிந்தது. நோக்கியா நிறுவன செல்போன்களின் விற்பனை சரிந்து பலத்த அடி வாங்கியது. அப்போதும், நோக்கியா நிறுவனம் தனது தயாரிப்புகளில் 'ஆண்ட்ராய்டு ஆப்ரேட்டிங் வசதியை புகுத்தாமல் இருந்ததால் தொடர்ந்து விற்பனை குறைந்தது. பொறுமையிழந்த நோக்கியா, தனது முடிவை மாற்றி தற்போது, அனைவரிடமும் வரவேற்பு பெற்ற 'ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை' தங்களது தயாரிப்புகளில் புகுத்தியது. இதிலும், மக்களுக்கு திருப்தி கிடைக்கவில்லை, என்று நோக்கியா நிறுவனம் உணர்ந்தது. அதேசமயம் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய லூமியா வகை போன்கள் மக்களிடையே வரவேற்பு பெற தொடங்கியது. இதை, உணர்ந்த நோக்கியா, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து 'விண்டோஸ் 8.1' ஆப்ரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய லூமியா 630 செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போன் 4.5 அங்குலம் நீளமும், 143 கிராம் எடையும் கொண்டது. இதில், இரு சிம்கார்டுகள் பயன்படுத்தும் வசதியும் உள்ளது. ஸ்மார்ட் சிம்கார்ட் என்ற புதிய தொழில்நுட்பம் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு சிம்கார்டில் பேசும் போது, இரண்டாவது சிம்கார்டில் போன் வந்தால் எளிதில் தெரிந்து கொள்ளலாம். இதில், 1.2 ஜிகாஹர்ட்ஸ் புராஸசர், 5 மெகாபிக்சல் கேமரா, ஒட் டச் அப்ளிகேஷன் லான்ச் வசதி, பேட்டரியை சேமிக்க சென்சார் கோர் என பல்வேறு வசதிகள் இதில் அணிவகுக்கிறது. வேகமாக டைப் செய்ய வசதியாக வோர்ட் பிரிடிக்டர், மோஷன்ஸ் இதில் உள்ளது. இன்பில்டாக 8 ஜிபி மெமரி கொண்ட இந்த போனில் 128 ஜிபி வரை நீட்டித்து கொள்ளும் வசதியும் உள்ளது. சிங்கிள் சிம் மற்றும் டபுள் சிம் மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டபுள் சிம்கார்டு வசதி கொண்ட போனை நோக்கியா இந்தியாவின் நிர்வாக இயக்குனர் பாலாஜி அறிமுகப்படுத்தினார். இதன் விலை ரூ. 11 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் சிங்கிள் சிம் வசதி கொண்ட போன்களின் விலை ரூ. 10 ஆயிரத்து 500 என நிர்ணயிக்கப்பட்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் இந்த போன்கள் சந்தையில் அணிவகுக்க உள்ளன. டிரஷர் டேக்: இன்றைய நிலையில் செல்போன்களில் பேசுவதால், ஏற்படும் கவன சிதறலால், பலவற்றை இழக்க நேரிடுகிறது. இந்த பிரச்னைகளை தவிர்க்க சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் டிரஷார் டேக். சிறிய சாவி அளவிலான இந்த டிரஷர் டேகை, நாம் கொண்டு செல்லும் உடமைகளுடன் இணைத்து விட்டால், அந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தை கடந்தால் உடனே செல்போனில் உங்களுக்கு எச்சரிக்கை ஓசை ஒலிக்கும். இந்த வசதி, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நோக்கியா லூமியா 630 போனில் உள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, இனிவரும் காலத்தில் மேலும் பல வசதிகள் புகுத்த நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், இழந்த இடத்தை மீண்டும் கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் நோக்கியா நிறுவனம் பயணத்தை தொடங்கியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

Tea மாஸ்டர் பார்த்திருப்பீங்க…. Tea டான்சர் பார்த்திருக்கீங்களா?

Posted: 23 May 2014 01:21 AM PDT

Mr-Teh-Tarik

Mr-Teh-Tarik

This posting includes an audio/video/photo media file: Download Now

பிறந்து 2 மாதத்தில இந்த தேவதை I Love You சொல்ற அழகைப் பாருங்க!

Posted: 23 May 2014 01:18 AM PDT

2-Month-Old-Baby-Girl

2-Month-Old-Baby-Girl

This posting includes an audio/video/photo media file: Download Now

எவ்வளவுதான் ஜாக்கிரதையா பார்த்தாலும் கண்டிப்பா பயப்பிடுவீங்க

Posted: 23 May 2014 01:15 AM PDT

27-Foot-'Lava-Twist'-Inflatable

27-Foot-'Lava-Twist'-Inflatable

This posting includes an audio/video/photo media file: Download Now

வானில் ஏவப்பட்ட ராக்கெட் வெடித்து சிதறும் காட்சி!

Posted: 23 May 2014 12:48 AM PDT

Proton-M-rocket-explosion

Proton-M-rocket-explosion

This posting includes an audio/video/photo media file: Download Now

அப்பா எங்க?… அப்பாவின் பாசத்திற்காக ஏங்கிய சிறுவனுக்கு கிடைத்த ஏமாற்றம்

Posted: 23 May 2014 12:45 AM PDT

Appa_enke_short_film

Appa_enke_short_film

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™