மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- தாவூத் இப்ராகிமையும் நவாஸ் ஷெரிப் அழைத்து வருவாரா?: காங். கிண்டல்
- பாரதீய ஜனதா கட்சிக்கு ஜகத் பிரகாஷ் புதிய தலைவர்
- மோடி பதவி ஏற்பு விழா: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு
- காங்கிரஸ் எழுச்சிபெற பிரியங்காவுக்கு முக்கிய பதவியா?
- சிறிய அமைச்சரவை: மந்திரிகள் தேர்வு பற்றி மவுனம் சாதிக்கும் பா.ஜ.க.
- என் உயிருக்கு ஆபத்து: சந்திரபாபு நாயுடு கவர்னரிடம் புகார்
- பதவி ஏற்பு விழாவுக்கு மோடி குடும்பத்தினருக்கு அழைப்பு இல்லை
- கணவர் அழைத்தால் சேர்ந்து வாழத் தயார்: மோடியின் மனைவி பேட்டி
- தெலுங்கானா முதலமைச்சராக சந்திரசேகரராவ் 2-ந்தேதி பதவி ஏற்கிறார்
- கேரள மந்திரிகளை செல்போனில் மிரட்டிய 2 புரோக்கர்கள் கைது
- அனுமதியின்றி வெளிமாநிலங்களுக்கு சென்ற சரிதா நாயருக்கு பிடிவாரண்டு
- திருவனந்தபுரம் அருகே குழந்தைகளை விற்ற தந்தை கைது
- பாக். பிரதமருக்கு அழைப்பா?: மோடி முடிவிற்கு சிவசேனா அதிருப்தி
- பெண் குழந்தைகளின் கல்விக்கு நரேந்திரமோடி ரூ.21 லட்சம் நன்கொடை
- மோடி, அத்வானிக்கு வெடிகுண்டு மிரட்டல்
- காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு ஆதரவு பெருகுகிறது
- இந்திய தூதரகம் மீது தாக்குதல்: மோடி கண்டனம்
- நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தள அரசு வெற்றி
- மோடியுடன் வைகோ சந்திப்பு
- காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ராணுவ வீரர் தற்கொலை
| தாவூத் இப்ராகிமையும் நவாஸ் ஷெரிப் அழைத்து வருவாரா?: காங். கிண்டல் Posted: 23 May 2014 11:34 PM PDT நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வருவது, எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிப்பது, காஷ்மீர் பிரச்சனை தவிர இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள முக்கிய பிரச்சனையாக, மும்பை தொடர்குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு |
| பாரதீய ஜனதா கட்சிக்கு ஜகத் பிரகாஷ் புதிய தலைவர் Posted: 23 May 2014 11:30 PM PDT பா.ஜ.க. தேசிய தலைவர் ராஜ்நாத்சிங், மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபையில் உள்துறை மந்திரியாக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. மத்திய மந்திரி சபையில் நரேந்திர மோடிக்கு அடுத்தப்படியாக ராஜ்நாத் சிங்குக்கு இரண்டாவது இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மந்திரி பதவி ஏற்பதால் ராஜ்நாத்சிங் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க. புதிய தலைவராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. |
| மோடி பதவி ஏற்பு விழா: வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு Posted: 23 May 2014 11:06 PM PDT நரேந்திர மோடி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் உள்ள வெளிப்புற முற்றத்தில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 6 மணிக்கு தொடங்கும் விழா இரவு 7.45 மணி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி பதவி ஏற்கும் விழாவுக்கு வருமாறு முதன் முதலாக தெற்காசிய |
| காங்கிரஸ் எழுச்சிபெற பிரியங்காவுக்கு முக்கிய பதவியா? Posted: 23 May 2014 11:06 PM PDT பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார குழு தலைவராக இருந்தார். பாரதீய ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் மீது கடுமையான குற்றச் சாட்டுகளை கூறின. ஊழல்கள் குறித்தும் பிரசாரம் செய்தன. மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் பிரசாரத்தின் போது, மத்திய ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. சோனியா, ராகுல் ஆகியோர் பிரசாரம் செய்தனர் என்றாலும் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு முன்பு இவை |
| சிறிய அமைச்சரவை: மந்திரிகள் தேர்வு பற்றி மவுனம் சாதிக்கும் பா.ஜ.க. Posted: 23 May 2014 11:01 PM PDT மந்திரிகள் தேர்வு பற்றி பா.ஜனதா தலைவர்கள் ரகசியமாக வைத்துள்ளனர். நரேந்திரமோடி 26–ந்தேதி பிரதமராக பதவி ஏற்கும்போது அவருடன் யார் – யார்? மந்திரியாக பதவி ஏற்பார்கள், கூட்டணி கட்சியினர் மந்திரியாக நியமிக்கப்படுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அது பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து விடாமல் பா.ஜனதா தலைவர்கள் ரகசியம் காத்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மோடி |
| என் உயிருக்கு ஆபத்து: சந்திரபாபு நாயுடு கவர்னரிடம் புகார் Posted: 23 May 2014 10:42 PM PDT சீமாந்திரா புதிய முதல்–மந்திரியாக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு அடுத்த மாதம் 9–ந் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஒரு புகார் கடிதம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:– கடந்த 2003–ம் ஆண்டு திருப்பதி அலிபிரியில் என் மீது கன்னி வெடி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மாபியா கும்பலைச் சேர்ந்த கங்கிரெட்டி |
| பதவி ஏற்பு விழாவுக்கு மோடி குடும்பத்தினருக்கு அழைப்பு இல்லை Posted: 23 May 2014 10:29 PM PDT நரேந்திரமோடி வருகிற 26–ந் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக பதவி ஏற்கிறார். ஜனாதிபதி மாளிகைக்கு வெளியில் உள்ள திறந்த வெளியில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாநில முதல் – மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள், எம்.பிக்கள், சிறப்பு அழைப்பாளர்கள், |
| கணவர் அழைத்தால் சேர்ந்து வாழத் தயார்: மோடியின் மனைவி பேட்டி Posted: 23 May 2014 10:27 PM PDT நாட்டின் பதினான்காவது பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு அவரது இளம் வயதில் யசோதா பென் என்ற பெண்ணுடன் குடும்பத்தார் திருமணம் நடத்தி வைத்தனர். ஆனால், இந்த திருமணம் வெறும் சமூகச் சடங்காக அமைந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளில் தீவிரப் பற்று கொண்ட மோடி, திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் வீட்டை விட்டுப் பிரிந்து சென்று, அரசியலில் |
| தெலுங்கானா முதலமைச்சராக சந்திரசேகரராவ் 2-ந்தேதி பதவி ஏற்கிறார் Posted: 23 May 2014 10:03 PM PDT ஆந்திராவில் இருந்து பிரிந்து இந்தியாவின் 29–வது மாநிலமாக உருவாகியுள்ள தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்–மந்திரியாக டி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகரராவ் பதவி ஏற்கிறார். முதல்–மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட அவர் கவர்னர் நரசிம்மனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். தெலுங்கானா மாநிலம் ஜூன் 2–ந்தேதி அதிகாரப்பூர்வமாக செயல்பட உள்ளது. அன்றைய தினமே சந்திரசேகரராவ் முதல்– மந்திரியாக பதவி ஏற்கிறர். அவருடன் 15 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். |
| கேரள மந்திரிகளை செல்போனில் மிரட்டிய 2 புரோக்கர்கள் கைது Posted: 23 May 2014 09:52 PM PDT கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா மற்றும் கல்வி மந்திரி வி.கே.அப்ருதீன் ஆகியோருக்கு கடந்த 1 வாரமாக மர்ம நபர் ஒருவர் செல்போனில் மிரட்டல் விடுத்தார். இதுபற்றி மந்திரிகள் இருவரும் திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தனர். அவர்கள் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல் போனில் மிரட்டல் விடுத்த மர்மநபர்களை தேடி வந்தனர். |
| அனுமதியின்றி வெளிமாநிலங்களுக்கு சென்ற சரிதா நாயருக்கு பிடிவாரண்டு Posted: 23 May 2014 09:51 PM PDT கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். தற்போது இவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். கேரளாவை விட்டு வெளியே செல்வதாக இருந்தால் கோர்ட்டு அனுமதி பெற்றுதான் செல்ல வேண்டும். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு சரிதா நாயர் கர்நாடகா மாநிலத்தில் |
| திருவனந்தபுரம் அருகே குழந்தைகளை விற்ற தந்தை கைது Posted: 23 May 2014 09:47 PM PDT திருவனந்தபுரத்தை அடுத்த கஞ்சரங்காடு பகுதி யைச் சேர்ந்தவர் சுலைமான், (வயது 48). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு 9 குழந்தைகளும், 2–வது மனைவிக்கு 2½ வயது மற்றும் 11 மாதத்தில் 2 குழந்தைகளும் உள்ளனர். சுலைமான் முதல் மனைவியுடன் வசித்து வந்தார். 2–வது மனைவி வீட்டிற்கு எப்போதாவது ஒரு முறை சென்று வருவார். |
| பாக். பிரதமருக்கு அழைப்பா?: மோடி முடிவிற்கு சிவசேனா அதிருப்தி Posted: 23 May 2014 09:14 PM PDT நாட்டின் பதினான்காவது பிரதமராக வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி, பதவியேற்பு விழாவுக்கு வரும்படி இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பியது, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகத் தமிழர்களின் அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும் இலக்காகியுள்ளது. காங்கிரஸ், பா.ஜ.க. தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் இந்த முடிவை மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் |
| பெண் குழந்தைகளின் கல்விக்கு நரேந்திரமோடி ரூ.21 லட்சம் நன்கொடை Posted: 23 May 2014 04:49 PM PDT குஜராத் அரசில் பணியாற்றும் டிரைவர்கள் மற்றும் பியூன்களின் பெண் குழந்தைகளது கல்விக்காக நரேந்திரமோடி தனது சொந்த சேமிப்பில் இருந்து ரூ.21 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். இத்தகவலை அவர் 'டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். |
| மோடி, அத்வானிக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 23 May 2014 03:14 PM PDT உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகர ரெயில் நிலைய சூப்பிரண்டுக்கு பெயர், முகவரி இன்றி ஒரு கடிதம் வந்தது. அதில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை வருகிற ஜூன் மாதம் 20-ந் தேதிக்குள் வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. |
| காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு ஆதரவு பெருகுகிறது Posted: 23 May 2014 05:13 AM PDT நாடாளுமன்ற தேர்தலில் பெருத்த தோல்விக்கு பின் காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு ஆதரவு பெருகியுள்ளது. அக்கட்சியின் இரு முக்கிய தலைவர்கள் பிரியங்காவை மிகப்பெரிய போராளி என்றும், மக்களுடன் இணைவதில் அவருக்கு இயற்கையாகவே பலம் உள்ளது எனவும் கூறியுள்ளனர். உணவு அமைச்சராக பதவி வகித்த கே.வி.தாமஸ் கூறுகையில், வாக்குச்சாவடி வாரியாக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தவேண்டும் |
| இந்திய தூதரகம் மீது தாக்குதல்: மோடி கண்டனம் Posted: 23 May 2014 03:45 AM PDT ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹீரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பிரதமர் பதவியை ஏற்க இருக்கும் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரை தொடர்பு கொண்டு கேட்டு அறிந்தார். பிறகு அவர் வெளியிட்ட |
| நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தள அரசு வெற்றி Posted: 23 May 2014 03:39 AM PDT நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பீகாரில் மைனாரிட்டி அரசை நடத்தி வந்த நிதிஷ்குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு பதிலாக ஐக்கிய ஜனதா தள கட்சியை சேர்ந்த ஜித்தன் ராம் மஞ்சியை புதிய முதல்வராக அவர் தேர்வு செய்தார். புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் பீகார் சட்டப்பேரவையில் |
| Posted: 23 May 2014 02:49 AM PDT இலங்கை அதிபர் ராஜபக்சேவை மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு அழைத்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, வைகோ, பழ. நெடுமாறன் ஆகியோர் ராஜபக்சே வருகைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் மதிமுக பொதுசெயலாளரான வைகோ பா.ஜ.க தலைவரான ராஜ்நாத் சிங்கை சந்தித்து ராஜபக்சே வருகை |
| காஷ்மீரில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு ராணுவ வீரர் தற்கொலை Posted: 23 May 2014 02:38 AM PDT துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் காஷ்மீர் ராணுவத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்ட்டி என்ற பெயர் கொண்ட அந்த வீரர், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள க்ரூ பகுதியில், 'ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் யூனிட்' |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |