Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


குதிரையிடம் கடி வாங்கினால் எப்படியிருக்கும்?…. பாருங்க இந்த மனிதனின் கூத்தை!

Posted: 22 May 2014 12:18 AM PDT

Horse

Horse

This posting includes an audio/video/photo media file: Download Now

உலக சாம்பியனை நேர் செட்களில் வெல்வேன் என எதிர்பார்க்கவில்லை சாய்னா நெஹ்வால்

Posted: 22 May 2014 12:05 AM PDT

Saina-Nehwal

Saina-Nehwalஉபெர் கோப்பைக்கான மகளிர் பேட்மின்டன் தொடரில், நடப்பு உலக சாம்பியனான தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டனானை நேர் செட்களில் வீழ்த்துவேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை' என்று இந்திய அணி கேப்டன் சாய்னா நெஹ்வால் கூறியுள்ளார். டெல்லி, ஸ்ரீ போர்ட் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில், தாமஸ் கோப்பைக்கான ஆண்கள் பிரிவில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 தோல்வியுடன் கால் இறுதி வாய்ப்பை நழுவவிட்ட நிலையில், உபெர் கோப்பைக்கான மகளிர் பிரிவில் சாய்னா நெஹ்வால் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பதிவு செய்து கால் இறுதிக்கு முன்னேறியது. கனடா, ஹாங்காங் அணிகளை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் கால் இறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய மகளிர் அணி, கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தாய்லாந்து அணியுடன் மோதியது. இதில் உலகின் 4வது ரேங்க் வீராங்கனையும், நடப்பு உலக சாம்பியனுமான ரட்சனோக் இன்டனானுடன் இந்திய அணி கேப்டன் சாய்னா நெஹ்வால் மோதினார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த போட்டியின் முதல் செட் கடும் போராட்டமாக அமைந்தது. உலக சாம்பியனுக்கு ஈடுகொடுத்து விளையாடிய சாய்னா 22-20 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய அவர் 22-20, 21-14 என்ற நேர் செட்களில் வென்று அசத்த, இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, இரட்டையர் ஆட்டத்தில் ஜுவாலா கட்டா - அஷ்வினி பொன்னப்பா வெற்றியை வசப்படுத்த இந்தியா 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்றது. இன்டனானை வீழ்த்தியது குறித்து சாய்னா நெஹ்வால் கூறுகையில், உலக சாம்பியன் வீராங்கனையை நேர் செட்களில் வீழ்த்துவேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றியை இன்னும் கூட என்னால் நம்ப முடியவில்லை. கடுமையான பயிற்சிக்கு கிடைத்த பரிசு இது. அடுத்து வரும் ஆட்டங்களிலும் இந்த வெற்றி தொடரும் என நம்புகிறேன்' என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்பு!

Posted: 21 May 2014 11:59 PM PDT

NawazSharif

NawazSharifநாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி வரும் 26ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இவ்விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாகவும் நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

எகிப்து அதிபர் மாளிகை சீரமைப்பு பணி: ஹோசினி முபாரக்கிற்கு சிறை தண்டனை!

Posted: 21 May 2014 11:53 PM PDT

Hosini-mubarak

Hosini-mubarakஎகிப்தில் மக்கள் புரட்சியைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பதவியை இழந்தவர் முன்னாள் அதிபர் ஹோசினி முபாரக். அதிபர் மாளிகையை சீரமைப்பதாகக் கூறி அரசு நிதியில் 104 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முபாரக்கிற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஊழல் வழக்கில் ஹோசினி முபாரக்கின் (வயது 86), இரண்டு மகன்கள் அல்லா முபாரக் (53), காமல் முபாரக் (வயது 50) ஆகியோரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் மாளிகையை சீரமைப்பதாகக் கூறி அரசு நிதியில் 104 கோடிக்கு முறைகேடு செய்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது எகிப்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு 102 கோடி அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எகிப்தில் அதிபர் ஹோசினி முபாரக் சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். கடந்த 2011ம் ஆண்டில் எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அதிபர் பதவியிலிருந்து முபாரக் விலகினார். அவர் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், 2011ல் அதிபருக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ச்சி ஏற்பட்டபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கொல்ல சதி செய்ததாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பான மற்றொரு வழக்கில் முபாரக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஹபீப் அல்&அட்லி ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி என அறிவித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2013 ஜனவரியில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறையில் இருந்து முபாரக் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், கெய்ரோ புறநகர் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனை வளாகத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைக்கு சாதகமான திட்டங்களை முன்னெடுக்கும் இந்தியாவின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் யார்?

Posted: 21 May 2014 11:45 PM PDT

Rajabaksa-Modi

Rajabaksa-Modiஇந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இலங்கைக்கு சாதகமான திட்டங்களை முன்னெடுக்கும் என்று எதிர்ப்பார்க்கிறது. எனினும் மோடியின் அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கும் என்பதை உள்ளூர் மற்றும் சர்வதேச சாதகங்களே தீர்மானிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நரேந்திர மோடி இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் தலையிடுவதன் முன்னர் இந்தியாவில் உள்ள பிராந்தியங்களின் பிரச்சினைகளை ஒரு நிலைக்கு கொண்டு வரவேண்டியிருக்கும். எனவே அவர் இலங்கை விடயத்தில் தலையிட ஒருவருட காலமாவது செல்லும் என்பதே மஹிந்த ராஜபக்சவின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது. நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தவேளையில் அமெரிக்க கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஐக்கிய நாடுகளில் அமரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான யோசனைக்கு மோடி ஆதரவு வழங்கமாட்டார் என்று ராஜபக்ச அரசாங்கம் எண்ணுகிறது. எனினும் இலங்கை விடயத்தில் இந்தியாவின் தலையீடு அடுத்து வரப்போகும் இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் கையிலேயே தங்கியுள்ளது என்று இலங்கையின் செய்தித்தாள் ஒன்று கூறியுள்ளது. இந்தநிலையில் தேசியபாதுகாப்பு ஆலோசகராக யாரை மோடி நியமிப்பார் என்பதும் இந்த விடயத்தில் செல்வாக்கும் செலுத்தும் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சிவ்சங்கர் மேனன், மஹிந்த ராஜபக்சவின் நண்பராவார். எனவே அங்கு இலங்கை அரசாங்கத்துக்கு சார்பான விடயங்களே முன்னெடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முன்னாள் தேசிய புலனாய்வு பணிப்பாளர் அஜித்குமார் டொவால், முன்னாள் வெளியுறவு செயலர் கனவால் சிபால், இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகரத்தில் 1988 ஆம் காலப்பகுதியில் அரசியல் செயலராக இருந்த எஸ் ஜெய்சங்கர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சியாம் ஷரன், அத்துடன் முக்கியமானவராக கருதப்படும் இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராக 1984 ஆம் ஆண்டில் பதவிவகித்த ஹார்டீப் பூரியின் பெயரே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காக பேசப்படுகிறது. இவர் அண்மையில் வெளியிட்ட கருத்தில், இந்தியா விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயற்படலாம். எனினும் தமிழர்களுக்கு எதிராக செயற்பட முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே பூரி இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்ட்டால் அது இலங்கை விடயத்தில் மாற்றம் ஒன்றை கொண்டு வரலாம். அதேநேரம் இலங்கை சீனாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் பாதுகாப்பு உடன்பாடுகள் மற்றும் பாகிஸ்தான் சட்டத்தரணி ஒருவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைக்கு எதிராக செயற்பட வாடகைக்கு அமர்த்தியுள்ளமை போன்ற விடயங்கள், புதிய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டவைகளாக இருக்கும். இலங்கையை பொறுத்தவரை தொடர்ந்தும் சீனா மற்றும் பாகிஸ்தான் விடயங்களில், பழைய முன்னெடுப்புகளையே மேற்கொள்ளும் என்பது உறுதி. அதற்கு பதிலாக மோடி அரசாங்கம் சீனா, பாகிஸ்தான் விடயங்களில் எவ்வாறான கொள்கையை கடைப்பிடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும் என்று இலங்கை செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இந்திய தேர்தலில் தோல்வி கண்ட காங்கிரஸ் அரசாங்கம், தமது இறுதிக்காலத்தில் இயல்பாக இரண்டு வருட காலத்துக்கு நீடிக்கப்படும் விடுதலைப் புலிகளின் தடையை ஐந்து வருடங்களுக்கு நீடித்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் அரசாங்கம் பதவிக்கு வந்தால், இலங்கைக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிக்கும் அல்லது. இலங்கை எதிரான சர்வதேச விசாரணைக்கு ஆதரவளிக்கும் என்ற அடிப்படையிலேயே காங்கிரஸ் அரசாங்கம் புலிகள் மீதான தடையை ஐந்து வருடங்களுக்கு நீடித்திருக்கலாம் என்றும் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

குண்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது!

Posted: 21 May 2014 11:23 PM PDT

Arrest

Arrestகுண்டுகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மீட்டியாகொட உடுவெல சந்தியில் குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடும் நோக்கில் குறித்த நபர்கள் குண்டுகளை வைத்திருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 24 மற்றம் 37 வயதான நபர்களே இவ்வாறு நேற்று கைது செய்ய்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குண்டுகளை வைத்திருந்தவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கையில் இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளது! திஸ்ஸ அத்தநாயக்க அதிரடி

Posted: 21 May 2014 11:19 PM PDT

malicious-site-blocked

malicious-site-blockedஇலங்கையில் சில இணைய செய்தி இணைய தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சில இணைய தளங்கள் கூட உத்தியோகப் பற்றற்ற ரீதியில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் எட்டு இணையத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கைத் தமிழர் நலன் பாதுகாக்கப்படும்: தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

Posted: 21 May 2014 11:08 PM PDT

Tamilisai-soudarrajan

Tamilisai-soudarrajanஇலங்கைத் தமிழர் பிரச்சினைகள் குறித்து நாங்கள் தெரிவித்து உள்ளோம். நிச்சயமாக இலங்கைத் தமிழர் நலன் பாதுகாக்கப்படும். இவ்வாறு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன், தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ், இந்திய தமிழர்களான மீனவர்களையும், இலங்கை தமிழர்களையும் காப்பாற்றவில்லை. இதனால் தான் காங்கிரஸ், தி.மு.க.வை மக்கள் புறக்கணித்தார்கள். தமிழக முதலமைச்சர், தமிழர் நலன் கருதி ஏதாவது கோரிக்கை வைத்தால் மோடி நிச்சயமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார். தமிழக முதலமைச்சரின் உதவி மத்திய அரசுக்கு தேவை இல்லை. அதனால் செவிசாய்க்க மாட்டார் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கை தமிழர் நலன் பாதுகாக்கபடும். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிச்சயமாக தீர்வு ஏற்படும். நதிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, இலங்கை தமிழர் பிரச்சினைகள் குறித்து நாங்கள் தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மேயர் வோட்டின் வாகனத்தை போதையில் ஓட்டிய பெண்! ரொறொன்ரோவில் பரபரப்பு

Posted: 21 May 2014 11:00 PM PDT

Toyota4Runner

Toyota4Runnerமஸ்கோகா லேக் பகுதியை சேரந்த பெண் ஒருவர் போதையில் வண்டி ஒட்டிய காரணத்திற்காக தடுக்கப்பட்ட போது அந்த வாகனம் றொப் வோட்டின் வாகனமென தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் செவ்வாய்கிழமை பிற்பகல் நடந்துள்ளது. வாகனத்திற்குள் வோட் இருக்கவில்லை எனவும் அச்சமயம் அவர் தவறான போதைப்பொருள் பயன்படுத்தல் சம்பந்தமான புனர்வாழ்வு சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அவர் சிகிச்சையில் இருந்ததால் அவரது வாகனம் லைசென்ஸ் தகடு அகற்றப்பட்டு சட்டகாவலில் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது. ஆனால் ஆதாரங்கள் வாகனம் மேயருடையதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 36-வயதுடைய லீஆன் மக்றொப் என்ற சந்தேக நபர் மீது வாகனம் திருடிய குற்றம் சுமத்தப்படவில்லை. மேயரின் சகோதரரும் பிரச்சார மேலாளருமான டக் வோட் மக்றொப் என்பவர் யாரென தனக்கு தெரியாதெனவும் வாகனம் சட்டகாவலில் வைக்கப்பட்டது சம்பந்தமாக தான் எதுவும் கேள்விப் படவில்லை எனவும் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். மேயரின் வழக்கறிஞர் டெனிஸ் மொறிஸ் என்பவரும் மேயரின் வாகனம் சம்பந்தப்பட்ட தகவல் குறிப்பு எதுவும் தனக்கு தெரியப்படுத்தப் படவில்லை என தெரிவித்துள்ளார். மக்றொப் என நம்ப படும் பெண் ஒருவர் வாகன கைப்பற்று கிடங்கை அண்மித்து அங்குள்ள ஊழியர் ஒருவருடன் பேசியுள்ளார். ஊழியர்களிடம் தனது உடமைகளை எடுத்து செல்ல வந்துள்ளதாக கூறியுள்ளார். இச்செய்தி யு ரியுப் வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் வீடியோவில் அப்பெண் தான் மேயர் சிகிச்சை பெறும் நிலையத்தில் தானும் ஒரு நோயாளியாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

டெல்லஸ் நிறுவனம் 1.1 பில்லியன் நிதியைச் செலவு செய்கிறது கனடா அறிவிப்பு!

Posted: 21 May 2014 10:54 PM PDT

Telus

Telus2016ம் ஆண்டளவில் கனடிய ஒன்றாரியோவில் TELUS நிறுவனம் 1.1 பில்லியன் நிதியைச் செலவிடவுள்ளது. TELUS நிறுவனமானது ஒன்றாரியோவில் 2014ம் ஆண்டில் 500 மில்லியன் டொலர்களை தனது உள்கட்டுமானப் பணிகளுக்காகச் செலவிடம் என 2012ம் ஆண்டில் தெரிவித்திருப்பதாகத் தெரியவருகிறது. இவற்றைத் தவிர குறிப்பிட்ட நிறுவனமானது வருகின்ற 2015லும் 2016லும் மேலும் 600 மில்லியன் டொலர்களையும் தனது திட்டங்களில் முதலீடு செய்வதற்த் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. எனவே 3 வருடகாலங்களில் மொத்தமாக 1.1 பில்லியன் டொலர்களை செலவிடவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றது. குறிப்பிட்ட செலவானது பல்வேறுவகையான திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளது எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக மிக விரைவான திட்டமாகிய wireless network திட்டத்தின் விரிவாக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. TELUS ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் குறிப்பிட்ட தொகையானது சுகாதாரப் பாரமரிப்புத் தொழிலுக்கும் செலவிடப்படவுள்ளது எனத் தெரிவித்திருக்கின்றது. வன்கூவரைத் தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமானது கனடாவிலுள்ள பெரும் தொலைபேசிச் சேவை நிறுவனமாகக் காணப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் உலகில் நான்காவது தரத்துக்கு ரொறன்ரோ தேர்வு

Posted: 21 May 2014 10:43 PM PDT

canada

canadaஉலகில் வாழ்வதற்கும் பணிபுரிவதற்கும் உலகில் நான்காவது சிறந்த தரத்தை ரொறன்ரோ கொண்டிருக்கின்றது எனத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. ரொறன்ரோ குறிப்பாக மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரம், திடமான தேசிய அரசியல், எளிமை போன்ற முக்கியமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ரொறன்ரோ அதிகளவு பெறுபேறுகளைப் பெற்றுள்ளது என Toronto Star செய்தித் தாபனம் வெளியிட்டிருக்கின்றது. போக்குவரத்து நெருக்கடி, மற்றும் Gardiner Expressway வீதியில் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகள், மக்கள் நெரிசல் போன்ற காரணங்களினார் ரொறன்ரோ 3வது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் மக்களின் வாழ்க்கைத்தரம், ஸ்திரமான அரசியில் நிலை என்பனவே ரொறன்ரோ 4வது இடமாகத் தெரிவு செய்யப்படுவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக அமைகின்றன. குறிப்பாக உலகில் 30 நகரங்கள் இவ்வாறான ஆய்வுக்கு கல்வி, நாட்டின் தொழில்நுட்பம், மற்றும் இயற்கைச் சுற்றாடல் போன்ற காரணஙிகளும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிகிறது. இந்த ஆய்வில் லண்டன் முதல் தடவையாக முன்னணி வகிக்கின்றது. நியுயோக் இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையான் குறித்த ராம்கோபால்வர்மாவின் கருத்தால் சர்ச்சை!

Posted: 21 May 2014 04:23 AM PDT

ram-gopal-varma

ram-gopal-varmaகோச்சடையானில் ரஜினியின் மார்பு குறித்து பிரபல இயக்குநர் ராம்கோபால்வர்மா டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தால் சர்ச்சை உண்டாகியுள்ளது. பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரஜினியின் கோச்சடையான் படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக உள்ளது. இந்நிலையில் ரஜினி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா. ரஜினியின் மார்பை விமர்சித்து அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை. கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை' எனக் கருத்து தெரிவித்துள்ளார். ராம்கோபால்வர்மா கருத்தைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களது பதில்களை தெரிவித்து வருகின்றனர். அதில், பலர் 'முழுக்க முழுக்க மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படத்திற்கும் அனிமேஷனுக்கு வித்தியாசம் தெரியாமல் ராம்கோபால் வர்மா உளறுகிறார்' என தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இளையராஜாவை மோசடி செய்யும் இன்னுமொரு இசை நிறுவனம்?

Posted: 21 May 2014 04:18 AM PDT

ilayaraja

ilayarajaஇளையராஜா சார் மட்டும் ராயல்டி விஷயங்களில் இப்போதுள்ளவர்களைப் போல கடுமையாக நடந்து கொண்டிருந்தால், இன்றைக்கு பில் கேட்ஸை விட பெரிய கோடீஸ்வரராகியிருப்பார். ஆனால் அவர் தனக்கான ராயல்டி பற்றி கவலைப்படாமல், மேலும் மேலும் பாடல்களைத் தந்து கொண்டே இருக்கிறார்! -இது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் சில தினங்களுக்கு முன் சொன்னது. இதில் துளி கூட மிகையில்லை என்பதுதான் உண்மை. தன் பாடல்களை பல நிறுவனங்கள், ரசிகர்கள் உலகமெங்கும் பயன்படுத்தி வந்தாலும், பாடல்களுக்கான ராயல்டி என ராஜா எதுவும் பெறவில்லை. இந்த விஷயத்தை மிகத் தாமதமாக உணர்ந்த ராஜா, அதை ஒழுங்குபடுத்த முயன்றார். அப்போதுதான் இவரது பாடல்களை வெளியிட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்து, ஆனால் ராஜாவுக்கு எதுவுமே தராமலிருந்த எக்கோ இசை நிறுவனம் மாட்டியது. ரூ 30 கோடிக்கு மேல் அவர்கள் இளையராஜாவுக்கு உரிமைத் தொகை தரவேண்டியிருந்தது. அவர்கள் மீது போலீசில் புகார் தரப்பட்டு வழக்கும் நடந்து வருகிறது. அந்த சமயத்தில் இளையராஜாவின் இசை வெளியிடும் உரிமையைப் பெற்றது மலேசியாவைச் சேர்ந்த அகி மியூசிக் எனும் நிறுவனம். இந்த உரிமையைப் பெற இளையராஜாவுக்கு ஒரு பைசா கூட தரவில்லை அகி மியூசிக் என்பதை அதன் உரிமையாளரான அகிலன் என்பவரே தனது ப்ளாகில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இளையராஜாவுக்கு உரிய உரிமைத் தொகையைத் தருவதில் அகி மியூசிக்கும் எக்கோ நிறுவன வழியில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருப்பதால் அதுபற்றி வெளிப்படையாக பேச மறுத்து வருகிறது இசைஞானி தரப்பு. இளையராஜாவுக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தபோது, 'இளையராஜாவை மோசடி செய்வதற்கென்றே கிளம்பி வருகிறார்கள் சிலர். அப்படித்தான் இந்த அகி மியூசிக்கும். இவர்கள் செய்திருக்கும் பலே மோசடிகளை வழக்கு முடிந்ததும் அம்பலப்படுத்தவிருக்கிறோம். இனி இளையராஜாவை மோசடி செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டதும், அவர் பெயருக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் டாஸ்மாக், காண்டம் குறியீடு போன்றவற்றை அட்டையில் போட்டு, அசிங்கமான தலைப்புகளில் அவர் பாடல்களை வெளியிடும் கேவலமான முயற்சியில் இறங்கியுள்ளது அகி மியூசிக். இதனை வன்மையாகக் கண்டித்துள்ளார் இளையராஜா. விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவிருக்கிறார்கள்,' என்றனர். வெளிநாடுகளில் ராயல்டி என்பது மிகப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதில் மோசடி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடுகின்றன வெளிநாட்டு நீதிமன்றங்கள். ஆனால் இந்தியாவில் இன்னும் இந்த விஷயம் ரொம்ப சாதாரணமாகவே பார்க்கப்படுகிறது. இதுபற்றி அகி மியூசிக் உரிமையாளர் அகிலனைத் தொடர்கொண்டு விசாரித்தோம். அவர் அளித்துள்ள விளக்கம் இது: "ராயல்டி தராமல் என்பது சுத்த பொய். அதை ராஜா ஸார் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஆபாச படங்களா? அது எப்படி சாத்தியம்? அறிவிற்கு பொருந்தாத குற்றச்சாட்டு. ஒரு 10 பேர் திரும்ப திரும்ப இப்படி எதாவது செய்துகொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். குறை சொல்லிக்கொண்டே இருப்பவர்கள் ஏதோ ஒருவகை பொறாமையால் இதைச் செய்கிறார்கள் என்றே நினைக்கிறேன்," என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்தி படத்தில் விஜய்க்காக ஒரு பாடல் எழுதுகிறார் தனுஷ்!

Posted: 21 May 2014 04:10 AM PDT

vijay-and-dhanush

vijay-and-dhanushஏ ஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய்க்காக ஒரு பாடல் எழுதுகிறார் நடிகரும், அவ்வப்போது தன் படங்களில் மட்டும் பாடலாசிரியராக அவதாரம் எடுத்து வந்தவருமான தனுஷ். துப்பாக்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் கத்தி. இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துல மொத்தம் 5 பாடல்கள். இவற்றில் ஒரு பாடலைத்தான் தனுஷ் எழுதப் போகிறார். இந்தப் பாடலை பாடப் போகிறவர் விஜய் என்பது இன்னொரு ஹைலைட். விஜய்யின் பெரிய ரசிகராக தன்னைக் காட்டிக் கொள்பவர் தனுஷ். அதனால் இந்தப் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டதா என்றால்... இல்லை.. இசையமைப்பாளர் அனிருத், தனுஷின் கண்டுபிடிப்பல்லவா.. அந்த நன்றி விசுவாசம்தான் தனுஷை பாடல் எழுத வைத்திருக்கிறது!

This posting includes an audio/video/photo media file: Download Now

இணையதளத்தில் கவர்ச்சி படம்: ஸ்ருதி ஹைதராபாத் போலீசில் புகார்!

Posted: 21 May 2014 04:04 AM PDT

shruti-haasan

shruti-haasanதன் அனுமதி இல்லாமல் தன்னை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதை எதிர்த்து நடிகை ஸ்ருதி ஹாஸன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகை ஸ்ருதி ஹாஸன் ராம் சரண் தேஜாவுடன் சேர்ந்து நடித்த தெலுங்கு படம் யவடு. யவடு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ரிலீஸானது. இந்நிலையில் யவடு படத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடித்தபோது ஸ்ருதியை தகாத கோணங்களில் புகைப்படம் எடுத்து அதை இணையதளத்தில் அனுமதி இன்றி வெளியிட்டுள்ளனர். இதையடுத்து ஸ்ருதி ஹைதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் சிஐடி சட்டப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ருதி நடித்த தெலுங்கு படமான ரேஸ் குர்ரத்தில் அவர் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிடைச்ச கேப்ல பொண்ணுங்கள எப்படி இம்ப்ரஸ் பண்றானு பாருங்க!

Posted: 21 May 2014 03:55 AM PDT

ball

ball

This posting includes an audio/video/photo media file: Download Now

பாம்பு கொலை செய்யப் படுவதைப் பார்த்ததுண்டா?

Posted: 21 May 2014 03:51 AM PDT

Cutting-the-head-off-a-snake

Cutting-the-head-off-a-snake

This posting includes an audio/video/photo media file: Download Now

மனசாட்சி இல்லா தந்தையின் கொடூர செயல்!

Posted: 21 May 2014 03:47 AM PDT

Dad-Allegedly-Throws-Toddler-Into-Pool

Dad-Allegedly-Throws-Toddler-Into-Pool

This posting includes an audio/video/photo media file: Download Now

சுக்குநூறாகும் ட்ரக்கிலிருந்து உயிர் பிழைக்கும் சாரதி!

Posted: 21 May 2014 03:44 AM PDT

Truck-smashes-into-overpass

Truck-smashes-into-overpass

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்த குட்டி ஹீரோ பண்ற வித்தையை பாருங்க…. நம்பவே முடியலல!

Posted: 21 May 2014 03:06 AM PDT

Kazuya-Murata

Kazuya-Murata

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™