Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஒய்.எஸ்.ஆர். காங். சட்டமன்ற கட்சி தலைவராக ஜெகன்மோகன்ரெட்டி தேர்வு

Posted: 21 May 2014 10:49 PM PDT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவராக ஜெகன் மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது:– நாடு முழுவதும் மோடி அலை வீசியது. இதை பயன்படுத்தி சந்திரபாபு நாயுடு சீமாந்திராவில் ஆட்சியை பிடித்து விட்டார். ஆட்சியை பிடிப்பதற்காக

பாராசூட்டில் 40 அடி உயரத்தில் தனியாக பறந்த 11 மாத குழந்தை

Posted: 21 May 2014 10:42 PM PDT

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் மலபார் ஏரோ போர்ஸ் என்ற பெயரில் தனியார் பாராகிளைடிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ள இந்த இடத்தில் பாராசூட்டில் சுற்றுலா பயணிகள் பறந்து சாகசம் செய்யவும் வசதி உள்ளது. இதற்காக பாராசூட்டில் பறப்பவர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டு

சீமாந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங். தொண்டர்கள் 2 பேர் வெட்டிக்கொலை

Posted: 21 May 2014 10:33 PM PDT

சீமாந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் வினு கொண்டா பகுதியை சேர்ந்தவர் தத்தமுனையா (வயது 40). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர். சட்டமன்ற தேர்தலில் போது இவருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று தத்தமுனையா அந்த பகுதி ரோட்டில் நடந்த சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து

பவன்கல்யாணுக்கு மத்திய மந்திரி பதவி: சந்திரபாபு நாயுடு சிபாரிசு

Posted: 21 May 2014 10:23 PM PDT

ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி காங்கிரசில் இணைந்து மத்திய மந்திரி ஆனார். தெலுங்கானா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். பாராளுமன்ற தேர்தலின் போது நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் அரசியலில் குதித்தார். ''ஜன சேனா'' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார். அவர் நரேந்திரமோடியை சந்தித்து பா.ஜனதாவுக்கு

பேஸ் புக்கில் வெளியிட தண்டவாளத்தில் படுத்த மாணவன் தலை துண்டாகி சாவு

Posted: 21 May 2014 10:13 PM PDT

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதியின் மகன்கள் எட்வின் (வயது 16) 10–ம் வகுப்பு மாணவர். காட்வின். இவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று எட்வினும், காட்வினும் சில நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. அவர்களில் யாராவது ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து

உலககோப்பை கால்பந்து போட்டிக்கு பந்து சப்ளை செய்யும் பாகிஸ்தான் நிறுவனம்

Posted: 21 May 2014 08:55 PM PDT

உலக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலககோப்பை கால்பந்து போட்டிகள் பிரேசிலில் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்க உள்ளன. ஒரு மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் 32 அணிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளன. இந்த கால்பந்து திருவிழாவிற்கு உலக அளவில் இந்தப் போட்டியின் தரவரிசையில் 159ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்த பந்துகள்

போராட்டத்துக்கு தயார் ஆகுங்கள்: காங். கட்சியினருக்கு ராகுல் வேண்டுகோள்

Posted: 21 May 2014 04:42 PM PDT

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ரேபரேலி மற்றும் அமேதி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இங்கு முறையே சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வெற்றி பெற்றனர்

மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் கருணை மனு தள்ளுபடி

Posted: 21 May 2014 03:17 PM PDT

இந்தியாவின் நிதித் தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு, மார்ச் மாதம் 12-ந் தேதி பிற்பகல் 1.30 மணி முதல் 3.40 மணி வரை தொடர்ந்து 13 குண்டுவெடிப்புகளை தீவிரவாதிகள் அரங்கேற்றினார்கள்

அரசியல் ஆதாயம் தேட கெஜ்ரிவால் நாடகம் ஆடுகிறார்: பா.ஜனதா கண்டனம்

Posted: 21 May 2014 02:01 PM PDT

கோர்ட்டில் ஜாமீன் பத்திரம் எழுதித்தர மறுத்ததால், கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஹர்சவர்த்தன், "கெஜ்ரிவால் தொடர்ந்து நடத்தி வருகிற அரசியல்

ராஜீவ் காந்திக்கு மோடி நினைவஞ்சலி

Posted: 21 May 2014 01:47 PM PDT

பாராளுமன்ற தேர்தல் பிரசார களத்தில் காங்கிரசுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையே வார்த்தை யுத்தங்கள் நடைபெற்றன. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

வட மாநிலங்களில் நிலநடுக்கம்: சென்னையிலும் பூமி அதிர்ந்தது

Posted: 21 May 2014 10:22 AM PDT

வங்கக்கடலில் உருவான நில நடுக்கத்தால், வட மாநிலங்களில் நேற்று இரவு 9.50 மணிக்கு பூமி குலுங்கியது. ஒடிசா மாநிலம் பாரதீப் துறைமுகத்துக்கு 275 கி.மீ. கிழக்கில், கடல் மட்டத்துக்கு 10 கி.மீ. ஆழத்தில் நில நடுக்கம் தாக்கியது. அது ரிக்டர் அளவுகோலில்

ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி: மும்பை ஓட்டல் சாதனை

Posted: 21 May 2014 09:12 AM PDT

இந்தியாவில் முதல் முறையாக மும்பையைச் சேர்ந்த ஒரு ரெஸ்டாரண்ட், ஆளில்லா விமானம் மூலம் பீட்சா டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள மும்பையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவை டெலிவரி செய்வதற்கான மாற்று வழியை சிந்தித்த பிரான்சிஸ்கோஸ் பிட்சாரியா தான் இந்த சாதனையை எட்டியுள்ளது.

மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்கிறார்

Posted: 21 May 2014 07:46 AM PDT

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 26-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்காக சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இலங்கை அதிபர் ராஜபக்சே பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மோடிக்கு நிதிஷ்குமார் வாழ்த்து

Posted: 21 May 2014 06:46 AM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின் தங்களது 17 வருட கூட்டணி உறவை முறித்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம், நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விடம் படுதோல்வி அடைந்தது. மோடியும் பிரதமர் பதவிக்கு தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

குஜராத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்திபென்

Posted: 21 May 2014 06:14 AM PDT

குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் பதவியேற்க உள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரும் 26-ம் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளதால், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில், வருவாய்த்துறை மந்திரி ஆனந்திபென் பட்டேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1–ந்தேதி தொடங்கும்: வானிலை மையம் தகவல்

Posted: 21 May 2014 05:42 AM PDT

கேரளாவில் வழக்கமாக ஜூன் மாதம் 1–ந்தேதி தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும். கடந்த ஆண்டு இம்மழை முன்கூட்டியே தொடங்கியது. மே மாதம் இறுதியில் ஆரம்பித்த மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் கேரளாவுக்கு அதிக அளவு மழை பொழிவு கிடைக்கும். அணைகளிலும் தண்ணீர் பெருகும். ஆனால் கடந்த

தேர்தல் தோல்விக்கு பின் அமேதிக்கு சென்ற ராகுல், பிரியங்கா

Posted: 21 May 2014 05:00 AM PDT

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பின் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமேதி தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்காவுடன் சென்றார்.

டெல்லி முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க. அறிவித்தால் ஏற்க தயார்: கிரண் பேடி

Posted: 21 May 2014 04:15 AM PDT

கடந்த வருடம் நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால், அம்மாநில சட்டப்பேரவை தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு மீண்டும் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அரசியலில் குதிக்க தயார் என அறிவித்த கிரண் பேடி, இன்று மீண்டும் ஒரு படி மேலே போய் பாரதீய ஜனதா கட்சி டெல்லி

நிதின் கட்காரி மான நஷ்ட வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்ற காவல்

Posted: 21 May 2014 04:15 AM PDT

ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான நிதின் கட்காரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் 10000 ரூபாய்க்கான ஜாமீன்

குஜராத் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் மோடி

Posted: 21 May 2014 03:21 AM PDT

நாட்டின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் தான் வகித்து வரும் குஜராத் முதல் மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்தார். 12 வருடமாக அம்மாநில முதல்வராக பதவி வகித்து வந்த மோடி இன்று ஆளுநர் கமலா பெனிவாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™