Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொறன்ரோ மருத்துவமனையின் 12வது மாடியில் தீ

Posted: 20 May 2014 11:46 PM PDT

St.Michels-hospitsl

St.Michels-hospitslரொறன்ரோவில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த மருத்துவமனையாகிய St.Michels மருத்துவமனையில் செவ்வாயக்கிழமை மாலையில் தீ பற்றியிருக்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வானுயர்ந்த தொடர் மாடிக்கட்டிடத்தின் 12வது மாடியில் தீ பரவியிருக்கின்றது. ஆனால் தெய்வாதீனமாக பரவிய தீயானது தீயணைப்பு பணியாளர்களின் முயற்சியின் காரணமாக எவருக்கும் காயமேதும் ஏற்படாமல் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பிட்ட சம்பவம் இன்று மாலை 5.15அளவில் ஆரம்பித்திருக்கின்றதெனத் தெரிவிக்கப்பட்டள்ளது. ஆனால் ரொறன்ரோ தீயணைப்புச் சேவையினரும் பொலிசாரும் குறிப்பிட்ட தீயானது ஒரு மணித்தியாலமளவில் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாத் தெரிவித்திருக்கின்றார்கள். Queen, Victoria, Dundas போன்ற வீதிகள் Jarvis, Yonge ஆகிய வீதிகளுக்கிடையிலான பகுதிகள் குறிப்பிட்ட தீயின் காரணமாக மூடப்பட்டிருந்தன எனப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் பூங்காக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்குத் தடை!

Posted: 20 May 2014 11:39 PM PDT

canada-park

canada-parkரொறன்ரோப் பகுதிகளிலுள்ள பூங்காக்களில் அங்கு விசேட நிகழ்வுகள் ஏதாவது இடம்பெறும்போது வாகனங்கள் புற்தரைகளில் நிறுத்தப்படுவது சம்பந்தமாக ரொறன்ரோ நகரசபையில் வாக்கெடுத்பு நடத்தப்பட்டிருக்கின்து. பூங்கா மற்றும் சுற்றாடல் சம்பந்தமாகப் பணியாற்றுகின்ற ரொறன்ரோ நகரசபை கவுன்சிலர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் காரணமாக வாகனங்கள் புற்தரைமீது நிறுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. ஆனால் இந்தத் திட்டமானது 2015ம் ஆண்டிலிருந்து அமுலுக்கு வரவிருக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இங்கு இலாப நோக்குடன் நடத்தப்படுகின்ற பொது நிகழ்வுகளின்போதே அதிகளவும் வாகனங்கள் பூங்காக்களுக்குள் நிறுத்தப்படுகின்றன. இந்தத் திட்டமானது வெற்றியளிக்கும் பட்சத்தில் இலாபகர நிகழ்வுகளுக்கு மட்டுமல்லாது ஏனைய நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மனவளர்ச்சி குன்றிய தனது மகளை அமைச்சர் ரப்பொல்ற்றின் காரியாலயத்தில் விடப்போவதாக பயமுறுத்திய லின்டா மேர்பி!

Posted: 20 May 2014 11:32 PM PDT

Linda-merby

Linda-merbyஒன்ராறியோ தாய் ஒருவர் தனது உளவியல் ரீதியாக அங்கவீனமான 20-வயதுடைய மகளிற்கு நிரந்தர கவனிப்பு தேடி தீவிரமாக அலைந்தார். முயற்சி பலனளிக்காததால் ஒன்ராறியோ சமூக மற்றும் சமூக சேவைகள் பிரதி அமைச்சர்  றப்பொல்ற்றின் காரியாலயத்தில் தனது மகளை விடப்போவதாக பயமுறுத்தினார். ஒட்டாவாவிற்கு வெளியே உள்ள ஒரு சிறிய சமூகத்தை சேர்ந்த லின்டா மேர்பி என்ற இந்த தாய் செவ்வாய்கிழமை காலை தனது மகள் ஆஸ்லி கோபேட்டை அமைச்சரின் காரியாலயத்தில் விடுவதற்கு சென்றுள்ளார். அப்போது றப்பொல்ற் விடுமுறையில் இருந்துள்ளார். மேர்பி செவ்வாய்கிழமை காலை மகளிற்கான மாற்று ஆடைகள் மற்றும் கவனிப்பு பட்டியலுடன் காரியாலயத்திற்கு சென்றார். இவரது மகள் அடுத்த மாதத்திலிருந்து முழுநேர பராமரிப்பு திட்டத்திற்கு செல்ல வேண்டும் அதற்கான செலவு வருடமொன்றிற்கு 2,6000 டொலர்கள். ஆஸ்லி ஒரு 2-வயது குழந்தைக்குரிய மனவளர்ச்சி கொண்டவர். நிலையான ஒரு அடிப்படையில் இவரை பராமரிப்பது கடினம் என தெரிவித்து மேர்பி அமைச்சருக்கு இம்மாத ஆரம்பத்தில் எழுதியுள்ளார். மகளை அமைச்சரின் காரியாலயத்தில் விடுவதென உறுதிகொண்டார்.மகளை ஒரு நாள்பட்ட அங்கவீனர்களை பராமரிக்கும் இல்லத்தில் விட வருடக்கணக்காக முயன்றுள்ளார். றப்பொல்டின் காரியாலயத்திற்கு வெளியே காத்திருக்கும் படி முதலில் கூறப்பட்டுள்ளது. பின்னர் 4 ஒன்ராறியோ மாகாண பொலிசார் வந்து தாயும் மகளும் அங்கு நிற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளனர். பின்னர் அவர் ஒரு போர்ட்ரூமிற்கு அனுப்ப பட்டு அங்கு  உயர் அதிகாரி ஒருவரை சந்தித்தார். பல வருட முயற்சியின் பின்னர் அவருடைய மகளிற்கு ஒரு இல்லத்தில் அனுமதி கிடைத்துள்ளது. அண்மையில் கடந்த வாரம் மகளுக்கு ஒரு இடம் கிடைப்பது முடியாத காரியம் என கூறப்பட்டதாக தெரிவித்தார். கடுமையான நடவடிக்கையினால் தான் ஏமாற்றம் அடைந்ததாகவும் ஆனாலும் தனது மகளுக்கு ஒட்டாவா பிரதேச பராமரிப்பு இல்லத்தில் ஒரு இடம் கிடைத்து விட்டதெனவும் கூறினார். இது ஒரு தேர்தல் பிரச்சார காலமாகையால் பிரச்சார வழிப்பிரயாணத்தில் புறொகிரசிவ் கொன்சவேட்டிவ் தலைவர் ரிம் குடாக் மேர்பியின் கதையை அரசாங்கத்தின் ஒரு தோல்வி என்று அழைத்ததோடு தான் சமூக சேவைக்கு அதிக பணம் கிடைக்ககூடியதாக செய்வார் என கூறியுள்ளார். முன்னணி சேவைகளிற்கு அதிக முதலீடு செய்ய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக என்டிபி தலைவர் அன்ரியா ஹோவத் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கேன்ஸ் விழாவில் சர்வதேசக் கலைஞர்களுடன் கலந்துரையாடிய கமல் ஹாஸன்!

Posted: 20 May 2014 02:53 AM PDT

kamal

kamalகேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கலந்து கொண்ட கமல் ஹாஸனின் பேச்சும் கலந்துரையாடலும் அங்கு வந்திருந்தவர்களைக் கவரும் வகையில் அமைந்தது. 2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் கமல்ஹாஸன். கேன்ஸ் விழாவில் இந்திய அரங்கை திறந்து வைக்க, ஃபிக்கி (இந்திய தொழில் கூட்டமைப்பு) பிரதிநிதியாகச் சென்றிருந்தார் கமல் ஹாஸன். மத்திய அரசும், பிக்கி அமைப்பும் இணைந்து இந்த இந்திய அரங்கப் பகுதியை அமைத்திருந்தன. இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்த மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை மற்றும் ஃபிக்கி அமைப்புக்கு வாழ்த்துக் கூறிய கமல், "இப்படி ஒரு உலகத் திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருப்பது மிகச் சிறப்பு. இதன் மூலம் வர்த்தகத்தை ஒருங்கிணைக்க முடியும்... இன்னொரு பக்கம், இத்தகைய விழாக்களுக்கு தனியாக வர முடியாத இந்திய படைப்பாளிகள், இந்தியாவின் சார்பில் வந்து உலக கலைஞர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் திறமைகளை உலகம் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பையும் இந்த இந்திய அரங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது," என்றார். இந்த விழாவில் கமல் ஹாஸனுடன் பல சர்வதேசக் கலைஞர்களும் ஆர்வத்துடன் கலந்துரையாடினர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

தம்பி சத்யாவின் படத்தைப் பார்த்து கண்கலங்கிய ஆர்யா!

Posted: 20 May 2014 02:47 AM PDT

Arya

Aryaநடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா. இவரும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து, புத்தகம் என்ற படத்தில் நடித்தார். ஆர்யாவே தம்பியை வைத்து சொந்தமாக படித்துறை என்ற படம் எடுத்து, ஏனோ அதை வெளியிட வேண்டாம் என முடிவெடுத்தும்விட்டார். இந்த நிலையில் சத்யாவை வைத்து மீண்டும் ஒரு படம் எடுத்துள்ளார். அமரகாவியம் என்று தலைப்பு. விஜய் ஆன்டனியை வைத்து 'நான்' படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இந்த காதல் கதையை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்த பின்னர் தயாரிப்பாளர் என்ற முறையில் ஆர்யாவும் அவருடைய ஓரிரு நண்பர்களும் படம் பார்த்தனர். காட்சி முடிந்தவுடன் ஆர்யாவின் கண்களில் கண்ணீர் துளிகள். ஈரமான கண்களுடன் யாரிடமும் பேசாமல் அவர் திரையரங்கை விட்டு வெளியேறினார். எதையும் மறைத்து பேசி பழக தெரியாதவர் என்ற அறியப்படும் ஆர்யா, தான் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்தின் படப்பிடிப்புக்கு சென்றார். என்ன நினைத்தாரோ என்னவோ, சட்டென தனது உதவியாளரை அழைத்து 143 என்ற எண் டிசைன் செய்த கேக் வாங்கி வரச் சொன்னார். கேக் வந்தவுடன் தனது படக் குழுவினருக்கு கொடுத்து மகிழ்ந்தாராம். அது என்ன 143 கேக் என்ற கேள்விக்கு '143 என்கிற எண் காதலுக்கு மிக முக்கியமான எண் என விளக்கம் கொடுத்திருக்கிறார். "I Love you என்ற அந்த மூன்று முக்கிய வார்த்தைகளின் இன்னொரு வடிவம் தான் 143. படம் பார்த்த வினாடியே பரவசத்தில் எனக்கு தோன்றியதுதான் இந்த கேக் யோசனை," என்றார் ஆர்யா. படத்தை பற்றி ஆர்யா மேலும் கூறுகையில், "இயக்குனர் ஜீவா ஷங்கர் இதற்கு முன்னர் 'நான்' திரைப்படத்தை இயக்கியவர். என் நெருங்கிய நண்பரும் கூட. நாயகன் சத்யா என் தம்பி. நாயகி மியா ஜார்ஜ் - சத்யா ஜோடி, ஒரு இனிமையான காதல் கதையை நம் கண் முன் நிறுத்தப் போகிறது. ஒரு நடிகனாக நான் சினிமாவில் பல படங்களை பார்த்து இருக்கிறேன், அந்த மன நிலையே வேறு. ஆனால் முதல் முறையாக ஒரு தாயாரிப்பாளர் என்ற முறையில் 'அமர காவியம்' பார்த்து எனக்கு கிடைத்த பிரமிப்பும், பெருமிதமும் சொல்லில் அடங்காதவை. இந்த உணர்வு என்னை மேலும் தரமான படங்களை தர வேண்டும் என சொல்ல வைக்கிறது" என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்கள் செல்போனில் ICE நம்பர் இருக்கிறதா?

Posted: 20 May 2014 02:31 AM PDT

ICE

ICEநம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது. அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும். மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்த எண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் ICE என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும். ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும். இன்று ஏறத்தாழ அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும். இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்பட்ட எண்களை ICE1, ICE2, ICE3 ..... எனவும் பதிவு செய்துகொள்ளலாம். இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை மகிழ்ச்சி! நிர்பந்தங்கள் இன்றி மோடி சுதந்திரமாக செயல்படுவார்

Posted: 20 May 2014 02:20 AM PDT

srilanka

srilankaமுதலமைச்சர் ஜெயலலிதாவால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பாடாத நிலை உருவாகியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை கூறியுள்ளது. கொழும்பில் பேட்டி அளித்த அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சர், இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைத்திருப்பது இலங்கைக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்றார். எந்த நிர்பந்தங்கள் இல்லாமல் சுயமாக முடிவெடுக்கும் மத்திய அரசை வரவேற்பதாக அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்த போதிலும் ஜெயலலிதாவால் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் நெருக்கடி நிர்பந்தங்கள் இல்லாமல் நரேந்திர மோடியால் சுதந்திரமாக முடிவு எடுக்க முடியும் என்ற அவர், இதையே இலங்கை விரும்புகிறது என்றார். தேர்தல் வெற்றியை அடுத்து முதல் முதலில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டு தலைவர் ராஜபக்க்ஷே தான் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் வாழ்த்து சொல்ல முயன்ற இலங்கை அதிபரை மோடி 4 மணி நேரம் காக்கவைத்ததாக அந்நாட்டு எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மீன் வளத்தை இந்தியா சுரண்டினால் சர்வதேச உதவியை நாடுவோம்! இலங்கை அமைச்சர்

Posted: 20 May 2014 02:13 AM PDT

minister

ministerஇலங்கை மீன் வளத்தை இந்தியா சுரண்டினால், இப்பிரச்னையை சர்வதேச அமைப்பின் உதவியை நாடுவோம் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜீதா சினரத்னே கூறியுள்ளார். மீனவர் பிரச்னை தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே நடந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இலங்கை கடற்பகுதியில் ஆண்டுக்கு 70 நாள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், இரு தரப்பினரும் அடுத்த மாதம் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜீதா சினரத்னே கொழும்புவில் நேற்று அளித்த பேட்டியில், ''இலங்கையின் மீன்வளத்தை யாராவது சுரண்ட முயற்சித்தால், இப்பிரச்னை தீர்க்க சர்வதேச நாடுகளின் உதவியை இலங்கை நாடும். இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதால், வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என நம்புகிறேன்.'' என்றார். ஜெயலலிதா பங்கேற்காதது மகிழ்ச்சி இலங்கை அரசின் செய்தி தொடர்பாளரும், ஊடக அமைச்சருமான கெகலியா ராம்புக்வெல்லா கொழும்பில் நேற்று அளித்த பேட்டியில், ''இந்தியாவில் பா.ஜ கட்சி தனிப்பெரும்பான்மையுடன், எந்த கட்சியையும் சாராமல் வலுவான ஆட்சி அமைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கட்சி 37 இடங்களில் வென்றாலும், மத்தியில் எந்த நிர்பந்தமும் கொடுக்க முடியாத நிலையில் இருப்பார். இதனால் தமிழகத்தின் வற்புறுத்தல் இல்லாமல் மத்திய அரசால் முடிவெடுக்க முடியும்'' என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அனுஷ்காவால் அப்சட் ஆன அஜீத்!

Posted: 20 May 2014 02:05 AM PDT

ajith-anushka

ajith-anushkaதல 55' படத்தில் நடிக்கும் அனுஷ்காவின் கால்ஷீட் பிரச்சனை அஜீத்தை எரிச்சல் அடைய வைத்துள்ளதாம். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்து வரும் 'தல 55' என்ற படத்தில் அனுஷ்கா, த்ரிஷா என்று இரண்டு நாயகிகள். அதில் அனுஷ்கா வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனுஷ்காவால் பட வேலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. அனுஷ்கா தெலுங்கில் பாகுபலி, ருத்ரம்மா தேவி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர அவர் அஜீத் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் 2 பெரிய படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு டேட்ஸ் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அஜீத், அனுஷ்தா வரும் காதல் காட்சிகள் ரகசிய இடத்தில் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அனுஷ்காவின் கால்ஷீட் சொதப்பலால் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பாதிக்கப்பட்டது. படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதால் அஜீத் எரிச்சல் அடைந்துள்ளார். இதையடுத்து அவர் கௌதம் மேனனை அணுகி பிரச்சனையை தீர்க்குமாறு தெரிவித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்கா படத்திலும் அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் அந்த படத்திற்கு இன்னும் அவர் டேட்ஸ் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடும் விமல்!

Posted: 20 May 2014 01:58 AM PDT

sunny-leone

sunny-leoneவடகறியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுடன் நடிகர் ஜெய் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டு பரபரப்பு கிளப்பினார்கள் அல்லவா... அடுத்து கோடம்பாக்கத்தில் பல நடிகர்களும் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என சன்னி லியோனுக்கு தூதுவிட, இப்போது அவர் மேலும் ஒரு படத்தில் முக்கால் நிர்வாணமாக ஆட ஒப்புக் கொண்டிருக்கிறாராம். ஆனால் அவருடன் ஆடும் வாய்ப்பு, யாரும் எதிர்ப்பார்க்காத பரோட்ட சூரிக்குக் கிடைத்தது பலரின் வயிற்றுக்குள் அடுப்பு மூட்டி இருக்கிறதாம்! விமல், சூரி மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில்தான் சன்னி லியோன் கவர்ச்சிக் குத்தாட்டம் போடவிருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் சூரி ஹைவேஸ் ஒன்றில் ஒரு கவர்ச்சிப்பாடலுக்கு நடனம் ஆடுவது போன்ற காட்சி உள்ளது. இந்த குத்தாட்டத்திற்கு புகழ்பெற்ற நடிகை ஒருவர் ஆடினால் நன்றாக இருக்கும் என நினைத்த இயக்குநர் கண்ணன், தயாரிப்பாளருடன் ஆலோசனை செய்து சன்னி லியோனை ஒப்பந்தம் செய்தார். இந்தப் பாடலுக்கு ஆட சன்னி லியோனுக்கு ரூ.35 லட்சம் சம்பளமாக கொடுக்க சம்மதித்துவிட்டார்களாம் (ரூ 40 லட்சத்து பலே நடனமே ஆடக்கூடியவராயிற்றே அம்மணி!). இந்தப் பாடலுக்காக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் தேசிய நெடுஞ்சாலை போன்ற செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சன்னி லியோன் நடனமாடும் இந்த குத்துப் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் பிருந்தா நடனம் அமைக்கின்றார். வடகறி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களைத் தொடர்ந்து மேலும் 3 படங்களுக்கு சன்னியிடம் பேசி வருகின்றனர். இவற்றில் ஒன்றில் சன்னியை இரண்டாவது நாயகியாக நடிக்கக் கேட்டுள்ளார்களாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாயாஜால் அரங்கிரல் ஒரு நாளைக்கு 100 காட்சிகள்! கோச்சடையான் புதிய சாதனை!

Posted: 20 May 2014 01:09 AM PDT

kochadaiyaan

kochadaiyaanசென்னையில் உள்ள மாயாஜால் அரங்கிரல் ரஜினியின் கோச்சடையான் படம் நாளொன்றுக்கு 100 காட்சிகள் வீதம் வெளியாகவிருக்கிறது. இதுவரை எந்தப் படத்துக்கும் இத்தனை காட்சிகள் ஒதுக்கப்பட்டதில்லை. இதற்கு முன் வெளியான ரஜினியின் எந்திரனுக்குக் கூட 90 காட்சிகள்தான். ஆனால் அதையும் தாண்டியுள்ளது கோச்சடையான். மாயாஜாலில் மொத்தம் 16 அரங்குகள் உள்ளன. இவற்றில் தினசரி நான்கு காட்சிகள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. முதல் காட்சி 7 மணிக்குத் தொடங்குகிறது. கடைசி காட்சி இரவு 11.44-க்கு. அதுவரை தொடர் காட்சிகளாக படங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். இந்தக் கணக்குப்படி ஒரு நாளைக்கு நூறுக்கும் அதிகமான காட்சிகள் மாயாஜாலில் திரையிடப்படுகின்றன. முன்பு ரஜினியின் எந்திரன் படம் வெளியானபோது, அந்தப் படம் முதலில் 81 காட்சிகளும், அடுத்த வாரத்திலிருந்து 90 காட்சிகளுக்கு மேலும் திரையிடப்பட்டது. அந்த சாதனையை கோச்சடையான் படம் முறியடித்துள்ளது. கோச்சடையான் 2 டி, 3டி மற்றும் ஆரோ 3 டி என மூன்று வடிவங்களில் இந்த அரங்கில் வெளியாகிறது. இந்த மூன்றும் சேர்த்து நாளொன்றுக்கு நூறு காட்சிகளாக இந்தப் படம் ஓடவிருக்கிறது. நேற்று மாலைக்குப் பிறகுதான் மாயாஜாலில் கோச்சடையானுக்கு முன்பதிவு தொடங்கியது. நாளைக்குள் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுவிடும் என நம்புகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆச்சரியத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் அட்டகாசமான காட்சி!

Posted: 20 May 2014 12:51 AM PDT

Amazing-Sand-Art-on-Ukraine's-Got-talent

Amazing-Sand-Art-on-Ukraine's-Got-talent

This posting includes an audio/video/photo media file: Download Now

குடும்பத்தினர் கண்முன்னே தந்தையை சுட்டுக் கொன்ற மகன்…. இப்படியும் ஒரு மகனா?

Posted: 20 May 2014 12:47 AM PDT

Father-Shot-Dead

Father-Shot-Dead

This posting includes an audio/video/photo media file: Download Now

கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்வையிட்ட காட்சி!

Posted: 20 May 2014 12:43 AM PDT

Human-Transformer---NOLATron

Human-Transformer---NOLATron

This posting includes an audio/video/photo media file: Download Now

வெறும் 15 நொடியில எவ்வளவு பெரிய வேலையை முடிச்சிட்டாங்க!

Posted: 20 May 2014 12:39 AM PDT

Peeling-a-Head-of-Garlic

Peeling-a-Head-of-Garlic

This posting includes an audio/video/photo media file: Download Now

டயர் இல்லாமல் கார் ஒட்டுவது சாத்தியமா?…. எப்படி இந்த சாரதியோட திறமை

Posted: 20 May 2014 12:36 AM PDT

no-tires-on-car

no-tires-on-car

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறுமியைப் பதம் பார்த்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய சிறுமி!

Posted: 20 May 2014 12:32 AM PDT

8-year-old-Girl-Makes-Incredible-Escape

8-year-old-Girl-Makes-Incredible-Escape

This posting includes an audio/video/photo media file: Download Now

இத்தாலி ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஜோகோவிச் சாம்பியன்!

Posted: 20 May 2014 12:10 AM PDT

Joko-vic

Joko-vicஇத்தாலியில் நடந்த ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலுடன் நேற்று முன்தினம் இரவு மோதிய ஜோகோவிச் 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். எனினும், அடுத்த 2 செட்களிலும் அபாரமாக விளையாடி நடாலின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து புள்ளிகளைக் குவித்த அவர் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றினார். நடப்பு சாம்பியனும், ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் 7 முறை பட்டம் வென்றவருமான நடால் இம்முறை 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். செர்பியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பால்கன்ஸ் பகுதி மக்களுக்கு தனது வெற்றியை சமர்ப்பித்த ஜோகோவிச், அடுத்த வாரம் தொடங்க உள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் பட்டம் வென்று சாதனை படைக்கும் முனைப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்!

Posted: 20 May 2014 12:03 AM PDT

Mumbai-indians

Mumbai-indiansராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 25 ரன் வித்தியாசத்தில் வென்றது. அகமதாபாத், சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மும்பை அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக மைக்கேல் ஹஸி, சிம்மன்ஸ் களமிறங்கினர். அபாராமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.3 ஓவரில் 120 ரன் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தது. இருவரும் அரை சதம் கடந்து அசத்தினர். அங்கித் ஷர்மா வீசிய 15வது ஓவரில் சிம்மன்ஸ் 62 ரன் (51 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹஸி 56 ரன் (39 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து கூப்பர் வசம் பிடிபட்டு வெளியேறினர். அடுத்து வந்த போலார்டு - கேப்டன் ரோகித் ஷர்மா ஜோடி 3வது விக்கெட்டுக்கு 5 ஓவரில் 56 ரன் விளாசியது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. ரோகித் 40 ரன் எடுத்து (19 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். போலார்டு 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து, 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. கருண் நாயர் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்சி நிற்க, கேப்டன் வாட்சன் உள்பட 6 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். கூப்பர் 5 ரன் எடுத்த நிலையில், ஹர்பஜன் சுழலில் சிக்சருக்கு தூக்கிய பந்தை எல்லைக் கோட்டருகே நின்ற போலார்டு அற்புதமாக பிடித்து வெளியேற்றியது மெய்சிலிர்க்க வைத்த 'கேட்ச்' ஆக அமைந்ததுடன் ரசிகர்களின் ஆரவார பாராட்டுகளை அள்ளியது. அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 48 ரன் விளாசி (24 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஹர்பஜன் சுழலில் சான்டோகி வசம் பிடிபட ராஜஸ்தான் 12 ஓவரில் 75 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், பிராட் ஹாட்ஜ் - பாக்னர் ஜோடி வெற்றியை வசப்படுத்த போராடியது. இருவரும் இணைந்து 8வது விகெட்டுக்கு 69 ரன் சேர்க்க, ராஜஸ்தான் அணிக்கு சற்று நம்பிக்கை பிறந்தது. ஹாட்ஜ் 40 ரன் (30 பந்து, 3 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பியதை அடுத்து மும்பை வெற்றி உறுதியானது. ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன் மட்டுமே எடுத்து 25 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பாக்னர் 31 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), பாட்டியா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பதற்கு திடீர் தடை! நியூயார்க்கில் புதிய சட்டம்

Posted: 19 May 2014 11:56 PM PDT

No-smoking

No-smokingஅமெரிக்காவின் நியூயார்க் நகரில், சிகரெட் பிடிப்பதற்கான வயது வரம்பு 18ல் இருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் டீன்-ஏஜ் ஆண்களும், பெண்களும் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இளம் வயதினர் சிகரெட் பிடிப்பதை கட்டுப்படுத்துவதற்காக, முன்னாள் மேயர் மைக்கேல் புளோம்பர்க் தனது 2வது பதவி காலம் முடியும் தருவாயில், புதிய சட்ட மசோதா ஒன்றை கொண்டு வந்தார். கடைகளில் சிகரெட் வாங்குவதற்கான வயது வரம்பை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தக்கூடிய அந்த மசோதா கடந்த நவம்பர் 19ம் தேதி பரிந்துரைக்கப்பட்டது. 6 மாத காத்திருப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த மசோதா தற்போது சட்டமாக அமலுக்கு வந்துள்ளது. புதிய உத்தரவை தொடர்ந்து, அனைத்து கடைகளிலும், '21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் கிடையாது' என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சிகரெட் வாங்க வரும் இளம் வயதினரிடம், அவர்களின் வயதுச் சான்றுக்கான அடையாள அட்டையை ஸ்கேன் செய்த பின்னரே சிகரெட் பாக்கெட்டுகள் விற்கப்படுகிறது. மேலும், தனியார் கட்டிடம், பூங்காக்கள், சாலை உள்ளிட்ட பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் விற்பனை வரியும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சிகரெட் பிடிப்பது பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்களும், கடைக்காரர்களும் கூறுகின்றனர். இச்சட்டம் சிகரெட்டுக்கு மட்டுமின்றி இ-சிகரெட், புகையிலை பொருட்களுக்கும் பொருந்தும். இது குறித்து நியூயார்க் நகர மக்கள் கூறுகையில், 'இச்சட்டத்தின் மூலம் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் சிகரெட்டே பிடிக்க முடியாதபடி செய்ய முடியாதுதான். என்றாலும், இந்த உத்தரவு சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள ஒரு நல்ல முடிவாகும்' என்கின்றனர். நியூயார்க்கில் சிகரெட் பழக்கத்துக்கு ஆளாகும் டீன்-ஏஜ் பருவத்தினர் எண்ணிக்கை ஆண்டுதோறும் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2002ல் 21.5 சதவீதம் இருந்த சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை 2011ல் 14.8 ஆக குறைந்துள்ளது. ஆனாலும், இளைஞர்களை பொறுத்த வரையில் 2007 கணக்கெடுப்பின்படி 8.5 சதவீதத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. இதனையும் கட்டுப்படுத்துவதற்காகத்தான் தற்போது சிகரெட் பிடிப்பவர்களின் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புகையிலை பழக்கத்தால், ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 6 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™