மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மோடி நல்லாட்சி தருவார்: நடிகர் இன்னசென்ட் எம்.பி
- அமெரிக்க கலாச்சார மையம் தாக்கப்பட்ட வழக்கு: 2 பேர் தூக்கு ஆயுளாக குறைப்பு
- டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து
- நவீன் பட்நாயக் 4-வது முறையாக ஒடிசா முதல்வராக பதவி ஏற்றார்
- பா.ஜனதா எம்.பிக்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மீது மோடி பாச மழை
- எளிமையான முதல்–மந்திரிகளில் ரங்கசாமியும் ஒருவர்: மோடி பாராட்டு
- தேர்தலில் தோல்வி: நடிகை ராக்கி சாவந்த் கட்சிப்பதவியில் இருந்து ராஜினாமா
- பிரேமலதாவை மனம் திறந்து பாராட்டிய மோடி
- தேர்தல் தோல்வி எதிரொலி: மண்டியாவில் வீட்டை காலி செய்தார் நடிகை ரம்யா
- பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு 3 கட்சிகள் கூட்டணி?
- நரேந்திரமோடிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு
- பீகார் புதிய முதல்-மந்திரியாக ஜிதன்ராம் மஞ்சி பதவி ஏற்றார்
- முதல்-மந்திரி பதவியில் இருந்து நரேந்திர மோடி இன்று விலகல்
- சட்டசபையை கலைத்து விடாதீர்கள்: டெல்லி கவர்னரிடம் கெஜ்ரிவால் கெஞ்சல்
- பிரதமரின் 'டுவிட்டர்' கணக்கு மூடல்: பாரதீய ஜனதா கொதிப்பு
- சொந்த மண்ணில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
- தேர்தலில் படுதோல்வி: பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்புகள் கூண்டோடு கலைப்பு
- தே.ஜ. கூட்டணியில் இருந்திருந்தால் நிதிஷ் குமார் தோல்வி அடைந்திருக்க மாட்டார்: சிவசேனா
- பீகாரில் 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
- ராஜஸ்தானில் சமுதாய அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை
| மோடி நல்லாட்சி தருவார்: நடிகர் இன்னசென்ட் எம்.பி Posted: 20 May 2014 10:53 PM PDT கேரளாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சாலக்குடி தொகுதியில் கம்யூனிஸ்டுகள் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்ட பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட்டும் அமோக வெற்றி பெற்றார். திருச்சூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் இன்னசென்ட் எம்.பி. தனது அரசியல் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி கூறினார். அவர் கூறியதாவது:– பாராளுமன்றத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று நான் சுயமாகதான் முடிவு எடுப்பேன். எனது நடவடிக்கைகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. |
| அமெரிக்க கலாச்சார மையம் தாக்கப்பட்ட வழக்கு: 2 பேர் தூக்கு ஆயுளாக குறைப்பு Posted: 20 May 2014 10:49 PM PDT கொல்கத்தாவில் கடந்த 2002-ம் ஆண்டு அமெரிக்க கலாச்சார மையம் தாக்கப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர்களின் தூக்கு தண்டனையை |
| டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து Posted: 20 May 2014 10:41 PM PDT டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாஸ்திரி பவனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் 8 தீயணைப்பு வண்டிகளுடன் |
| நவீன் பட்நாயக் 4-வது முறையாக ஒடிசா முதல்வராக பதவி ஏற்றார் Posted: 20 May 2014 10:39 PM PDT மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. 147 சட்டசபை தொகுதிகளில் 115 இடங்கள் பெற்று பட்நாயக் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார். அவர் இன்று 4-வது முறையாக முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். |
| பா.ஜனதா எம்.பிக்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மீது மோடி பாச மழை Posted: 20 May 2014 10:29 PM PDT பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பா.ஜனதா எம்.பிக்கள் கூட்டத்தில் நரேந்திரமோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விஜயகாந்த் தலைவர்கள் அமர்ந்திருந்த முன் வரிசையில் மோடி, பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருக்கு |
| எளிமையான முதல்–மந்திரிகளில் ரங்கசாமியும் ஒருவர்: மோடி பாராட்டு Posted: 20 May 2014 09:02 PM PDT புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. அதில் நரேந்திரமோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பா.ஜனதா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலந்து கொண்டனர். புதுவையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்திருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்–மந்திரியுமான ரங்கசாமி கலந்து கொண்டார். |
| தேர்தலில் தோல்வி: நடிகை ராக்கி சாவந்த் கட்சிப்பதவியில் இருந்து ராஜினாமா Posted: 20 May 2014 05:14 PM PDT 36 வயதான கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ராஷ்டிரிய ஆம் என்ற கட்சியை தொடங்கினார். அதில் துணை தலைவராகவும் பதவி வகித்தார். மேலும் வட மேற்கு மும்பை தொகுதியில், மிளகாய் சின்னத்தில் போட்டியிட்டார் |
| பிரேமலதாவை மனம் திறந்து பாராட்டிய மோடி Posted: 20 May 2014 04:56 PM PDT புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டத்தில், மோடி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டனர் |
| தேர்தல் தோல்வி எதிரொலி: மண்டியாவில் வீட்டை காலி செய்தார் நடிகை ரம்யா Posted: 20 May 2014 04:41 PM PDT மண்டியா பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக ரம்யா இருந்து வந்தார். இந்த நிலையில், அவருக்கு மண்டியா தொகுதியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் ரம்யா தோல்வி அடைந்தார். அவர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் புட்டராஜுவிடம் |
| பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு 3 கட்சிகள் கூட்டணி? Posted: 20 May 2014 04:11 PM PDT பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. மேலும் அதன் தலைவருக்கு மத்திய மந்திரி அந்தஸ்து உள்பட பல சலுகைகளும் உண்டு. பாராளுமன்ற சட்டம் 1977-ன் படி பார்த்தால் தற்போதைய பாராளுமன்றத்தில் காங்கிரசுக்கு |
| நரேந்திரமோடிக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு Posted: 20 May 2014 02:01 PM PDT இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திரமோடியுடன் ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே நேற்று டெலிபோனில் பேசினார். அப்போது மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஜப்பானில் நடைபெறும் இரு நாட்டு பிரதமர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க |
| பீகார் புதிய முதல்-மந்திரியாக ஜிதன்ராம் மஞ்சி பதவி ஏற்றார் Posted: 20 May 2014 01:40 PM PDT பீகார் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார், தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏ.க்கள் கூடி அவரை மீண்டும் முதல்-மந்திரியாக தேர்வு செய்ததை நிதிஷ்குமார் |
| முதல்-மந்திரி பதவியில் இருந்து நரேந்திர மோடி இன்று விலகல் Posted: 20 May 2014 01:10 PM PDT பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திர மோடியை, புதிய பிரதமராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்துள்ளார். மோடி, 26-ந் தேதி பிரதமராக பதவி ஏற்கிறார். இதையடுத்து, குஜராத் முதல்-மந்திரி பதவியை மோடி இன்று ராஜினாமா செய்கிறார் |
| சட்டசபையை கலைத்து விடாதீர்கள்: டெல்லி கவர்னரிடம் கெஜ்ரிவால் கெஞ்சல் Posted: 20 May 2014 12:17 PM PDT டெல்லி முதல் மந்திரி நாற்காலி 'சுட்டு விட்டதால்' பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியை வீழ்த்தி எம்.பி.யாகும் ஆசைக் கனவுடன் அவரை எதிர்த்து வாரனாசி தொகுதியில் போட்டியிட்டு, மூக்கை உடைத்துக் கொண்டார் |
| பிரதமரின் 'டுவிட்டர்' கணக்கு மூடல்: பாரதீய ஜனதா கொதிப்பு Posted: 20 May 2014 12:05 PM PDT பிரதமர் அலுவலகத்துக்கு என்று 'டுவிட்டர்' சமூக வலைத்தள கணக்கு உண்டு. இதை 14 லட்சம் பேர் பின்பற்றி வந்தனர். இப்போது பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகி, புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார் |
| சொந்த மண்ணில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு Posted: 20 May 2014 10:45 AM PDT பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதையடுத்து, வரும் 26-ம் தேதி பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்றிரவு தனது சொந்த மாநிலமான குஜராத்தை வந்தடைந்தார். தலைநகர் அகமதாபாத் விமான நிலையத்தில் அவருக்கு பா.ஜ.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர் |
| தேர்தலில் படுதோல்வி: பகுஜன் சமாஜ் கட்சியின் அமைப்புகள் கூண்டோடு கலைப்பு Posted: 20 May 2014 07:38 AM PDT மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியை சந்தித்ததையடுத்து அக்கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. |
| தே.ஜ. கூட்டணியில் இருந்திருந்தால் நிதிஷ் குமார் தோல்வி அடைந்திருக்க மாட்டார்: சிவசேனா Posted: 20 May 2014 05:09 AM PDT பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்திருந்தால், நிதிஷ் குமாருக்கு இதுபோன்ற தோல்வியை சந்தித்திருக்க மாட்டார் என்று சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சாம்னாவில் சிவசேனா வெளியிட்டுள்ள தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:- மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். மோடி சூறாவளி, பீகார் முழுவதையும் |
| பீகாரில் 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா Posted: 20 May 2014 04:57 AM PDT பீகாரில் பா.ஜனதாவைச் சேர்ந்த 2 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று ராஜினாமா செய்தனர். விஜயகுமார் மிஸ்ரா மற்றும் ராணா கங்கேஷ்வர் சிங் ஆகியோர் சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரியை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். அவர்கள் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சட்டசபை பொறுப்பு செயலாளர் ஜா தெரிவித்துள்ளார். மிஸ்ரா ஜலே சட்டசபை தொகுதியில் |
| ராஜஸ்தானில் சமுதாய அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை Posted: 20 May 2014 04:40 AM PDT ராஜஸ்தானின் பன்ஸ்வாரா நகரில் ஒரு சமுதாய அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. அஞ்சுமன் இஸ்லாமியா அமைப்பின் தலைவரான அபுலாலா (45), நேற்று இரவு ரஜதலப் பகுதியில் உள்ள தனது உறவினரின் கடையில் அமர்ந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த அபுலாலா, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |