Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கோழிகளுக்கு இசையை கேட்க வைத்து பெரிய முட்டைகளை இட வைத்து அதிசயம்!

Posted: 02 May 2014 11:38 PM PDT

egg

egg15-வயது இளம் விவசாயி தனது வாடிக்கையாளர்களுக்கு பெரிய கனமான முட்டைகளை கொடுப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடித்துள்ளான். நோவ ஸ்கோசியாவில் டிக்பி மாவட்டத்தைச் சேர்ந்த தியான் காமன் என்ற இந்த இளம் விவசாயி தனது கோழிகளுக்கு இசையை கேட்க வைத்து இந்த முயற்சியை செய்துள்ளார். நோவ ஸ்கோசியாவின் மிக இளைய பதிவுசெய்யப்பட்ட விவசாயி ஆன காமன் சில பால் பண்ணை விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு இசையை விளையாடவிட்டு அவைகளை தளர்த்தி அதன்மூலம் அதிக அளவிலான பாலை பெறுகின்றனர் என அறிந்துள்ளான். இதே கொள்கை தனது கோழிகளுக்கும் பலனளிக்கலாமென நினைத்து இக்கோட்பாட்டை தனது அறிவியல் கண்காட்சி பரிசோதனையில் சோதிக்க தீர்மானித்தான். முட்டைக்காக வளர்த்த 67-றோட் ஐலன்ட் ரெட் இன கோழிகளில் 10-ஐ எடுத்து அவைகளின் முட்டைகளின் அளவு நிறை என்பவற்றை இரண்டு வாரங்களிற்கு அளவிட்டான். அந்த இரண்டு வாரங்களும் 10-கோழிகளுக்கும் நாட்டுப்புற இசையை விளையாடவிட்டு முட்டைகளின் அளவுகளை அளந்தான். அடுத்த இரண்டு வாரங்கள் இசை இல்லாமல் முட்டைகள் எடுக்கப்பட்டன. பின்னர் பாரம்பரிய இசையை 2-வாரங்களுக்கு கோழிகளுக்கு விளையாட விட்டு முட்டைகளை சேகரித்தான். தான் இரண்டு வகை இசையையும் பயன் படுத்த நினைத்ததாகவும் தெரிவித்துள்ளான். முடிவுகள் சுவாரஸ்யமாக இருந்தன. தனது கோழிகள் பாரம்பரிய இசையா மொசாட்டிற்கு கனிந்திருந்தன என்ற முடிவுக்கு வந்தான். கோழிகள் பாரம்பரிய இசையை கேட்ட போது உற்பத்தியான முட்டைகள் இசையை கேட்காத போது உற்பத்தியான முட்டைகளை விட மிக கணிசமான அளவு பெரியதாகவும் கனமானதாகவும் அமைந்துள்ளது. வழக்கமாக பாவிக்கும் பெரிய அளவிலான முட்டை அட்டைப் பெட்டிகள் பாரம்பரிய இசை முட்டைகளிற்கு மிகவும் சிறியதாக இருந்துள்ளது. நாட்டுப்புற இசையின் போது உற்பத்தியான முட்டைகள் பாரம் அதிகமாக இருந்தபோதும் பெரிதாக இல்லாதது சுவாரஸ்யமாக இருந்ததென கூறப்பட்டுள்ளது. விவசாயிகள் சந்தை வாடிக்கையாளர்கள் பாரம்பரிய இசை முட்டைகளையே பெரிதும் விரும்புகின்றனர். கனடா பூராவிலுமான அறிவியல் காட்சி நீதிபதிகளின் கவனத்தை காமனின் பரிசோதனை கவர்ந்துள்ளது. அதனால் காமன் தேசிய அளவிலான அறிவியல் போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளான். வித்தியாசமான இசை வகைகளிலும் தனது பரிசோதனையை தொடரப்போவதாக காமன் தெரிவித்துள்ளான். கனடா-பூராவிலுமான அறிவியல் கண்காட்சி மே மாதம் 10-17-ந் தேதி வரை வின்சர். ஓன்ராறியோவில் இடம்பெற உள்ளது.  

This posting includes an audio/video/photo media file: Download Now

லிப் தைலத்தை கண் மடல்களில் பூசும் இளம் வயதினர்: கண்களிற்கு ஆபத்து என எச்சரிக்கை!

Posted: 02 May 2014 11:27 PM PDT

Eyes

Eyesஇளம் வயதினர் Burt's Bees வகை லிப் தைலத்தை கண் மடல்களில் பூசுவதால் ஒரு வித போதை உணர்வை பெறுகின்றனரென கூறப்படுகின்றது. இச்செய்கை 'Beezin' என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு செய்வதால் கண்களில் வீக்கம், தொற்றுநோய் போன்றன ஏற்படலாமென வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். இளம்வயதினர் இந்த லிப் தைலத்தை தங்களது கண் மடல்களில் தடவும் போது தைலத்தில் உள்ள பெப்பமின்ட் எண்ணெய் ஒரு வித தீவிரம் மிக்க தன்மையான உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்த உணர்வு போதையில் இருப்பது போன்ற உணர்வை அல்லது உயர்வான நிலையில் இருப்பது போன்ற தன்மையை உண்டாக்குகின்றது. இது அவர்களுக்கு போதைப்பொருள் ,மதுபானம் போன்றவற்றின் மாற்றீடாகவும் அமைகின்றது. வேறு சிலர் அதிக விழிப்பூட்டல் உணர்வை ஏற்படுத்த இந்த லிப் தைலத்தை காலை நேரத்தில் உபயோகிக்கின்றனர். கண்கள் உடலில் மிகவும் அதிக உணர்ச்சி மிக்க உறுப்பாகும். ஆதலால் இந்த முறை ஒரு ஆபத்தானதாகும் என கூறப்படுகின்றது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கதாநாயகிக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கமாட்டேன்! நயன்தாரா அதிரடி

Posted: 02 May 2014 08:37 AM PDT

nayantara

nayantaraகஹானி படத்தின் ரீமேக்கான அனாமிகா (நீ எங்கே என் அன்பே) படத்தில் கர்ப்பிணியாக நடிக்க தான் மறுத்ததாகக் கூறப்படுவது உண்மையில்லை என்றார் நயன்தாரா. கஹானி படத்தில் வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்திருந்தார். அதனால் அந்தப் பாத்திரத்துக்கு அனுதாபம் கிடைத்தது. ஆனால் நயன்தாராவோ புதிதாக திருமணமான பெண்ணாக மட்டும் நடித்தார். கர்ப்பிணியாக நடிக்க அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இதனை நயன்தாரா மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கஹானி ரீமேக்கில் நடிக்க நான் ஆசைப்பட்டேன். இந்தப் படத்தில் என் பாத்திரத்தை கர்ப்பிணியாக இருக்க வேண்டாம் என மாற்றியவர் இயக்குநர்தான். ஏற்கனவே ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் கர்ப்பிணியாகவும் இரு குழந்தைகளின் தாயாகவும் நடித்து இருக்கிறேன். என்னை பொருத்தவரை எந்த வேடம் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். நான் கமர்சியல் படங்களின் கதாநாயகிதானே," என்றார். இனி கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அஜீத் பேசும் பஞ்ச் வசனம்! கவுதம் மேனன் அதிரடி பேட்டி!

Posted: 02 May 2014 08:28 AM PDT

ajith

ajithஇந்த பஞ்ச் வசனத்தைப் பேசப் போகிறவர், அஜீத். கவுதம் மேனன் இயக்க, ஏஏம் ரத்னம் தயாரிக்கும் படத்தில்தான் இந்த முத்திரை வசனம் இடம்பெறப் போகிறது. இந்தப் படம் குறித்து ஆனந்த விகடனுக்கு கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி... சூர்யாவுடன் 'துருவ நட்சத்திரம்' டிராப் ஆன ஒரு வாரம் கழிச்சு, 'அஜித் படத்தை நீங்க டைரக்ட் பண்ணணும்'னு சொன்னாங்க. அஜித் சாரும் ரத்னம் சாரும் பேசி கன்ஃபர்ம் பண்ணாங்க. ஆனா, 'இதுதான் கதை'னு ஒன்-லைன்கூட அப்ப என்கிட்ட இல்லை. 'அவசரம் இல்லை கௌதம். பொறுமையாக் கதை பண்ணுங்க'னு சொன்னார் அஜித். முழுசா நாலு மாசம். ஆனா, எந்த பிரஷரும் இல்லை. ஃபர்ஸ்ட் ஹாஃப் வரை முடிச்சிட்டுப் போய் அவர்கிட்ட சொன்னேன். 'செஹண்ட் ஹாஃப் இதுல இருந்து அப்படியே வேற மாதிரி இருக்கும்'னு சொன்னேன். 'சூப்பர்... பண்ணுங்க'னு சொல்லிட்டார். ஃபுல் ஸ்கிரிப்ட் முடிச்சிட்டு சொன்னதும், 'நாளைக்கே ஷூட் போயிடலாம்'னு ஆர்வமாகிட்டார். 'ஸ்கிரிப்ட் நச்னு இருக்கு. எனக்கு இது ரொம்ப வித்தியாசமான படமா இருக்கும்'னு சொன்னார். 'நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும். எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா!' - இப்படி விதவிதமான பன்ச்சஸ் உடன் ஆக்ஷன்ல பின்னுவார். ரொமான்ஸ்ல அஜித்துக்கு இது ரொம்ப ஸ்பெஷல் படம். 'எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது ஏன் ஜெஸ்ஸி..?'னு 'விண்ணைத்தாண்டி வருவாயா'-ல ஒரு வசனம் வரும்ல. அப்படி இந்தப் படத்துலயும் 'உலகத்துலயே ரொம்ப அழகான ஒருத்தன்'னு அஜித் பத்தி ஒரு வசனம் வரும். அந்தச் சூழ்நிலை, எமோஷனோட கேட்கும்போது அதன் அழகு புரியும்!'' இப்படி விதவிதமான பன்ச்சஸ் உடன் ஆக்ஷன்ல பின்னுவார். ரொமான்ஸ்ல அஜித்துக்கு இது ரொம்ப ஸ்பெஷல் படம். 'எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது ஏன் ஜெஸ்ஸி..?'னு 'விண்ணைத்தாண்டி வருவாயா'-ல ஒரு வசனம் வரும்ல. அப்படி இந்தப் படத்துலயும் 'உலகத்துலயே ரொம்ப அழகான ஒருத்தன்'னு அஜித் பத்தி ஒரு வசனம் வரும். அந்தச் சூழ்நிலை, எமோஷனோட கேட்கும்போது அதன் அழகு புரியும்!'' -இப்படிப் போகிறது அந்தப் பேட்டி.  

This posting includes an audio/video/photo media file: Download Now

சிரியாவில் மீண்டும் நடைபெற்ற விஷகுண்டு தாக்குதல்: ஒருவர் பலி, 70 பேர் படுகாயம்!

Posted: 02 May 2014 02:57 AM PDT

syria

syriaசிரியாவில் மீண்டும் நடைபெற்ற விஷகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளார்.மேலும் 70 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெறுகிறது. அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சி படை வசம் சில நகரங்கள் உள்ளன. அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அதற்காக அந்நகரங்கள் மீது விஷ குண்டுகளை ராணுவம் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இட்லிப், ஹமா மாகாணங்களில் இது போன்று தாக்குதல் நடத்தியது. அதில் பலர் பலியானார்கள். இதற்கு ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் அதை சிரியா மறுத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் விஷகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. வீடியோ மூலம் அம்பலமாகியுள்ளது. கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அல் தமனாக் நகரின் மீது ஹெலிகாப்டர் 2 விஷகுண்டுகளை வீசியது. அவை குளோரின் கேஸை வெளியேற்றியது. இத்தாக்குதலில் ஒருவர் பலியானார். 70 பேர் காயம் அடைந்தனர். அந்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதே நேரத்தில் ரஷிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு கப்ரா ஷதா மற்றும் தல் மைனான்ங் கிராமங்களில் அல் கொய்தா தீவிரவாதிகள் விஷகுண்டு தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

வேற்று கிரகவாசிகள் கடத்த முயன்றதாக இங்கிலாந்து பெண் பேட்டி!

Posted: 02 May 2014 01:47 AM PDT

alliens_women

alliens_women

This posting includes an audio/video/photo media file: Download Now

விமானநிலைய பேக்கரி கடையில் அரங்கேறும் சம்பவம்!

Posted: 02 May 2014 01:40 AM PDT

Rats-Like-Egg-Puffs

Rats-Like-Egg-Puffs

This posting includes an audio/video/photo media file: Download Now

தயவு செய்து யாரையும் நம்பி இப்படி உயிரை பணயம் வைக்காதீர்கள்….

Posted: 02 May 2014 01:36 AM PDT

Unbelievably-Dangerous-KNIFE-TRICK

Unbelievably-Dangerous-KNIFE-TRICK

This posting includes an audio/video/photo media file: Download Now

முயற்சிகள் என்றும் தோற்பதில்லை!… எந்தளவு முயற்சித்தோம் என்பதில் தான் வித்தியாசம்!

Posted: 02 May 2014 01:32 AM PDT

Mountain-Ararat

Mountain-Ararat

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தல்: ஒகஸ்டின் ஜேசுதாசன் என்ற நபர் கைது!

Posted: 02 May 2014 01:22 AM PDT

Arrested

Arrestedபாகிஸ்தான் - இலங்கை ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை போலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து அனுப்பி வைக்கப்படும் ஹெரோயின் போதைப் பொருளை இலங்கையில் விநியோகம் செய்யும் பிரதானியாக குறித்த நபர் செயற்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒகஸ்டின் ஜேசுதாசன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் தொடர்புகளைப் பேணிய வெள்ளவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்கந்தராஜா என்பவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் நாட்டை விட்டு தப்பியோடியுள்ள வெலாசுதா மற்றும் பாகிஸ்தான் போதைப் பொருள் வர்த்தகர் முஹமட் சித்திக் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நீர் இறைக்கும் மோட்டார்களுக்குள் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதான சந்தேக நபர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரின் வீட்டு நிகழ்வுகளில் முன்னாள் போலிஸ் மா அதிபர் கலந்து கொண்டமைக்கான புகைப்பட ஆதாரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. பிரதான சந்தேக நபர், தற்போது சேவையில் உள்ள மிக முக்கியமான போலிஸ் உயர் அதிகாரிகளுடனும் தொடர்புகளைப் பேணியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபருக்கு கம்பஹா மற்றும் பண்டாரவளை ஆகிய பிரதேசங்களில் காணிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும் குறித்த சந்தேக நபர்கள் எப்போது, எங்கு வைத்து கைது செய்யப்பட்டார்கள் என்பது பற்றிய தகவல்களை போலிஸார் வெளியிடவில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் படுகொலை! கொழும்புவில் இன்று தீர்ப்பு!

Posted: 02 May 2014 01:12 AM PDT

Bhartha Lakshman

Bhartha Lakshmanமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை முடிவுக்கு வந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. சுமார் மூன்று வருடங்களாக இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இந்த வழக்கு குறித்த தீர்ப்பை வழங்க உள்ளார். வழக்கின் பிரதிவாதிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதா இல்லையா என்பதுவும் இன்று தீர்மானிக்கப்பட உள்ளது. 2011ம் அண்டு ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் போது பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 12 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்ற விசாரணைப் பிரிவினரால் சம்பவம் தொடர்பிலான விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தேர்தலுக்கு முன்னர் கொலை மிரட்டல்: ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா பேட்டி!

Posted: 02 May 2014 01:01 AM PDT

SarathFonseka

SarathFonsekaநடைபெறவுள்ள ஜனாதிபதிக்கு தேர்தலுக்கு முன்னர் தன்னை கொலை செய்து தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை, இல்லாமல் செய்யும் நோக்கம் இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பெலவத்தையில் நேற்று நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், என்னுடன் பேசும் சில அமைச்சர்கள், ஆட்சியாளரை தூஷண வார்த்தைகளால் திட்டுகின்றனர். 2015 ஆம் ஆண்டுக்குள் மக்களை அவதிக்குள்ளாக்கும் மோசடியான ஆட்சியை ஒழித்தி கட்டுவோம். துப்பாக்கிகளையும் கத்திகளையும் அரிவாள்களையும் காட்டி எம்மை அச்சுறுத்தி அடுத்த தேர்தலில் ஓரங்கட்ட ஆட்சியாளர் தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிரங்கிகளை தொட்டு பயன்படுத்திய நாங்கள், கைத்துப்பாக்கிகளுக்கு அரிவாள்களுக்கு அஞ்சப் போவதில்லை. பொய், களவு, மோசடியில்லாமல் சுதந்திரமான தேர்தலை நடத்தி எம்முடன் போட்டியிடுமாறு ஆட்சியாளருக்கு சவால் விடுக்கின்றேன் என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் போதையில் இரு பெண்களைக் கொன்ற வாகன ஓட்டுனருக்கு 7 வருட காவல்!

Posted: 02 May 2014 12:51 AM PDT

Driver-Arrest

Driver-Arrestமதுபோதையில் வாகனமோட்டியதுடன் இரு பெண்களைக் கொன்ற Cory Sater என்பவர் வியாழக்கிழமை நியு வெஸ்ட்மினிஸ்ரர் என அழைக்கப்படும் இடத்தில் நீதி மன்றத்தில் சமுகளித்திருப்பதாகப் பத்திரிகைகள் தெரிவித்திருக்கின்றன. Cory Sater மதுபானம் பாவித்த நிலையில் தனது ஜீப்பினை ஓட்டிச் சென்று இரு பெண்களைக் கொலைசெய்திருக்கின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கான தண்டனை ஆரம்பத்தில் 9 வருடங்கள் 6 மாதங்களாகக் கிடைத்துள்ளன எனவும் ஆனால் சில காரணங்களை முன்னிட்டு 7 வருடங்கள் 6 மாதங்களாக் குறைக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. இவ்வாறு தண்டனைக்காலம் குறைக்கப்பட்டதற்கான காரணம் அவரது குற்றம் சிறிதாகக் காணப்படுகின்றதுடன் இவர் (Single Parent) ஒரு ஒற்றைப் பெற்றோராகவும் இருப்பதே எனத் தெரியவருகிறது. அத்துடன் அவர் 8 வருடங்களுக்கு வாகனங்களைச் செலுத்தக்கூடாது எனவும் தடுக்கப்பட்டிருக்கின்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வியாழக்கிழமை நீதிபதி அவருக்கான தண்டனையை வழங்கியபோது குறிப்பிட்ட நபரது குடும்ப அங்கத்தினர்கள், மற்றும் நண்பர்கள். நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் மிகவும் உணர்ச்சி ததும்பக் காணப்பட்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கொழுப்பை விரட்டும் கொடிப்பசலை!

Posted: 02 May 2014 12:31 AM PDT

pasalai_keerai

pasalai_keeraiபசலைக் கீரைக்கு சமமான‌ அளவுக்கு உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை என சொல்லலாம். அந்தளவுக்கு இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். இதிலுள்ள‌ ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ஆனால் இதயநோய் வந்தவர்கள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. * குழந்தைகளுக்கு வரும் சில நரம்பு வியாதிகளை வராமல் தடுப்பதால் மேலை நாடுகளில் இதை கோதுமை, மைதா போன்ற மாவுகளில் கலந்து விற்கிறார்கள். இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவைத் தடுக்கிறது. மலச்சிக்கலுக்கு இது எதிரியாக வேலை செய்கிறது. * சாதாரணமாக கீரையை நறுக்கி விட்டு அலம்புவார்கள். அப்படிச் செய்தால் சத்துக்கள் வெளியேறிவிடும். பதிலாக ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து அப்படியே முழுசாக போட்டு அலசி எடுக்கவும். தண்ணீரில் மண் குப்பையெல்லாம் தங்கிவிடும். பின்பு நறுக்கி சமைக்கவும். முற்றிய தண்டுகளையும், வெளிறிய இலைகளையும் கிள்ளி போட்டுவிட வேண்டும். இதில் மிக அதிகமாக உள்ள பச்சயம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது. மேலும் இது ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. * ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது. * கட்டாக இருந்தால் பிரித்து கொஞ்சம் வாடிய மஞ்சள் இலை, தண்டை எடுத்துவிட்டு காற்றோட்டமாக சிறிது நேரம் வைத்தால் உள் ஈரம் போய்விடும். அலசும்போது இருக்கும் ஈரமே போதும். அதிக தண்ணீர் வைத்து வேகவைப்பது தவறு. * தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து மூடாமல் வேக விடலாம். நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்கலாம். கீரையில் இருக்கும் உப்பே இதற்கு போதுமானது; கூடுதலாக தேவையில்லை என்கிறார்கள். * தேவைப்பட்டால் கடைசியில் கொஞ்சமாக உப்பு போடலாம். வெந்தால் கீரை சுருங்கி விடுமென்பதால் முதலில் சேர்த்தால் உப்பு கரிக்கும். திறந்த நிலையில் குறைந்த நேரமே வேக வைக்கவும். * இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது. * ஒரு கப் பசலைக்கீரையில் இருக்கும் உணவுச்சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 மிஹி (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம். * இதை பச்சையாக சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். வெங்காயம் தக்காளி சேர்த்துக் கடைதல், தேங்காய், மிளகாய் வற்றல் சேர்த்து அரைத்துக் கூட்டு செய்தல், புளி, பருப்பு போட்டு குழம்பு, மோர், தேங்காய் அரைத்து மோர்க் குழம்பு இப்படி நிறைய முறையில் சமைக்கலாம். கொடிப்பசலையால் கொழுப்பை விரட்டுங்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நல்ல பாட்டுன்னாலே அது நான் இசையமைச்சதில்லேன்னு நினைக்கிறாங்க! தேவா வருத்தம்!

Posted: 02 May 2014 12:18 AM PDT

Deva

Devaதேவான்னாலே கானா, குத்துப்பாட்டுதான்னு முடிவு பண்ணிட்டாங்க. நல்ல பாட்டுன்னாலே அதை தேவா போட்டிருக்கமாட்டார்னு நினைக்கிறாங்க, என்றார் இசையமைப்பாளர் தேவா. தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. கானா பாட்டு என்ற ஒன்றை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்தியதே தேவாதான். மிகவும் பரபரப்பாக இயங்கிவந்த தேவா, திடீரென்று எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போய்விட்டார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவர் இப்போது இசையமைக்கும் படம் டம்மி டப்பாசு. இப்படத்தில் நாயகனாக மலையாள நகைச்சுவை நடிகர் பிரவீன் பிரேம் தமிழில் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் அறிமுகமாகிறார். இவர் நடிகர் அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். நன்கு தமிழ் பேசக்கூடிய ரம்யா பாண்டியன், இப்படத்திற்காக சென்னை தமிழை பயிற்சிப் பெற்று, சொந்தக் குரலில் பேசியுள்ளார். கண்ணன் ஒளிப்பதிவு செய்ய ரவி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் உள்ள தேவாவின் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது, 'நீங்கள் கானாவை பிரபலப்படுத்திய நேரத்தில் அதை மட்டமாக பலர் விமர்சித்தார்கள். ஆனால் இன்றைக்கு கானா பாட்டு இல்லாத படங்களே இல்லை என்ற நிலை வந்திருக்கிறது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த தேவா, "கானா பாடல்களைப் பற்றி அன்றைக்கு நிறைய பேருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். இதென்னய்யா பாட்டு, மட்டமான தமிழ்ல இருக்கேன்னு சொல்லியிருக்காங்க. இப்போ அதே கானா பாட்டு படங்கள்ல முக்கிய அம்சமா இருப்பதை நினைத்து சந்தோஷப்படறேன். கானா பாட்டு எங்கே கேட்டாலும் அது தேவா பாட்டுன்னு சொல்லிடறாங்க. ஆனா நான் போட்ட நல்ல பாடல்களை என்னுடையதுதான்னு பலரும் ஒப்புக்க மாட்டேங்கறாங்க. ஒருநாள் டிவி பாத்துக்கிட்டிருந்தேன். அதுல புல்வெளி புல்வெளின்னு ஒரு பாட்டு ஓடிக்கிட்டிருக்கு, ஆனா வேற இசையமைப்பாளர் பேர்ல. நான் மெலடிப் பாடல்கள்தான் அதிகம் போட்டிருக்கேன். ஆனால் அந்த மெலடிகளைக் கேட்பவர்கள், இது நிச்சயம் தேவா போட்டதா இருக்காது. வேற இசையமைப்பாளரோடதா இருக்கும்னு சொல்லிடறாங்க... அதுல எனக்கு வருத்தம்தான்," என்றார். மத்திய சென்னையில் குடிசை பகுதியில் வாழக்கூடிய பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையே ஏற்படும் காதலை சென்னையின் இயல்போடு நகைச்சுவையாக சொல்லும் படம் இந்த டம்மி டப்பாசு. இந்தப் படத்திலும் ஒரு அட்டகாசமான கானா பாடலைப் பாடியுள்ளாராம் தேவா.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாமுண்டீஸ்வரி கோயிலில் லிங்கா பட பூஜை! மேக்கப் போட்டு, வேட்டி சட்டையில், முறுக்கு மீசையுடன் கம்பீரமாகத் வந்த ரஜினி!

Posted: 02 May 2014 12:09 AM PDT

Lingaa

Lingaaமைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் இன்று அதிகாலை லிங்கா படத்தின் பூஜை நடந்தது. கிட்டத்தட்ட மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மேக்கப் போட்டு, வேட்டி சட்டையில், முறுக்கு மீசையுடன் கம்பீரமாகத் தோன்றினார் ரஜினி. கோச்சடையான் படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம் லிங்கா. கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தின் பூஜை இன்று அதிகாலை மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடந்தது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி மேக்கப்புடன் புதிய கெட்டப்பில் தோன்றினார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் அம்பரீஷ், அவர் மனைவி நடிகை சுமலதா மற்றும் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு வேளை தாய் பாசத்தையே ஓவர் டேக் பண்ணிடுவானோ?

Posted: 01 May 2014 11:58 PM PDT

emmett-birth

emmett-birth

This posting includes an audio/video/photo media file: Download Now

தவளைக்கு உணவான மனிதரின் விரல்!

Posted: 01 May 2014 11:52 PM PDT

Funny-australian-green

Funny-australian-green

This posting includes an audio/video/photo media file: Download Now

சூப்பர் கிங்ஸ்-நைட் ரைடர்ஸ் இன்று ராஞ்சியில்! 2வது கட்ட லீக் ஆட்டம் தொடக்கம்!

Posted: 01 May 2014 11:46 PM PDT

Kolkata-Knight-Riders-vs-Chennai-Super-Kings

Kolkata-Knight-Riders-vs-Chennai-Super-Kingsஐபிஎல் டி20 தொடர் 7வது சீசனின் 21வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட லீக் ஆட்டங்கள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றன. எட்டு அணிகளும் தலா 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. டோனி தலைமையிலான சென்னை அணி (8 புள்ளி) 2வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் (6 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளன.கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத், டெல்லி அணிகள் தலா 4 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக 5 தோல்விகளுடன் ஒரு புள்ளி கூட பெறாமல் கடை இடத்தில் உள்ளது. இந்த நிலையில், 2வது கட்ட லீக் ஆட்டங்கள் இந்தியாவில் இன்று தொடங்குகின்றன. ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இரவு 8.00 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.முதல் போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய சென்னை அணி, பின்னர் சுதாரித்துக் கொண்டு தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பதிவு செய்து உற்சாகமாக உள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் வேய்ன் ஸ்மித், பிரெண்டன் மெக்கல்லம் இருவரும் நல்ல பார்மில் உள்ளனர். ரெய்னா, டோனி, ஜடேஜா என வலுவான பேட்டிங் வரிசை சென்னை அணிக்கு சாதகமான அம்சம். ஹில்பென்ஹாஸ், மோகித் வேகமும், ஜடேஜா, அஷ்வின் சுழலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும். சென்னை வீரர்களின் துடிப்பான பீல்டிங்கும் முக்கிய பலமாக விளங்குகிறது.கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி, கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்சிடம் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் விரக்தி அடைந்துள்ளது. கடுமையாகப் போராடி இரண்டு முறை 'டை' செய்த பிறகும் தோல்வியை தழுவியது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. அதில் இருந்து இன்னமும் மீளமுடியவில்லை. எனினும், அடுத்து வரும் ஆட்டகளில் சிறப்பாக விளையாடுவோம்' என்கிறார் கொல்கத்தா கேப்டன் கம்பீர். சொந்த ஊரில் விளையாடும் டோனியும் இந்த போட்டியில் வெற்றியை வசப்படுத்தும் உறுதியுடன் களமிறங்குவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

சானியா மிர்சா-காரா பிளாக் அரை இறுதிக்கு முன்னேற்றம்: போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்!

Posted: 01 May 2014 11:39 PM PDT

Sania-Mirza

Sania-Mirzaபோர்ச்சுகல் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா-காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி தகுதி பெற்றது. கால் இறுதியில் சில்வியா சோலர் (ஸ்பெயின்) -ஷுவாய் ஸாங் (சீனா) ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் ரஷ்யாவின் ஸ்வெட்லனா கஸ்னட்சோவா 6-4, 6-1 என்ற நேர் செட்களில் யூஜெனி பவுச்சார்டை (கனடா) வீழ்த்தினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™