மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பட்டப்பகலில் நகைக்கடையில் ரூ.2.5 கோடி நகைகள் கொள்ளை
- கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை டாய்லெட் குழியில் திணித்து கொன்ற தாய்
- அசாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு
- திருவனந்தபுரத்தில் யானை தந்தங்களுடன் தமிழக வாலிபர் கைது
- தேர்தல் பிரசாரத்தின்போது நடிகை ரோஜா மயங்கி விழுந்தார்
- கோடை காலத்தை முன்னிட்டு திருப்பதியில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள்
- வங்கி கணக்கு தகவல்களை தராத சுவிஸ் நாட்டுக்கு இந்தியா கண்டனம்
- தேர்தல் முடிவுக்கு பிறகு தொங்குப் பாராளுமன்றம்: இ.கம்யூனிஸ்ட் ஆரூடம்
- இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு விசா இன்றி தவித்த பெண் பாகிஸ்தான் திரும்பினார்
- பெங்களூர்: ஸ்டெம்செல் கொடையாளியால் உயிர் பிழைத்த சிறுவன்
- மோடி அமைச்சரவையில் பங்கேற்கமாட்டேன்: ராஜ்நாத் உறுதி
- திக்விஜய்-அம்ருதா புகைப்படங்களை இணையதளத்திலிருந்து நீக்க போலீஸ் கோரிக்கை
- 24 வயது ஆண்மகனை சேர்த்து வைக்க போலீசிடம் உதவி கேட்ட 50 வயது பெண்
- ஷார்ஜாவில் முக்கிய தீவிரவாதியை தூக்கியது இந்தியா
- சீமாந்திராவில் சோனியா பொதுக்கூட்டத்தில் குறைவான கூட்டம்
- அமேதியில் ராகுலுக்கு எதிராக மோடி, அத்வானி, சுஷ்மா, ஜெட்லி பிரச்சாரம்
- தெலுங்கானா விஷயத்தில் மோடி பொய்மேல் பொய் சொல்கிறார்: ஆனந்த் சர்மா
- அசாமில் மீண்டும் வன்முறை: பலி 21 ஆக உயர்வு-ஊரடங்கு உத்தரவு
- இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு நீதிபதியை நியமிக்க திட்டம்
- அமேதியில் முன்னேற்றம் இல்லை: பிரியங்கவுக்கு கெஜ்ரிவால் பதில்
| பட்டப்பகலில் நகைக்கடையில் ரூ.2.5 கோடி நகைகள் கொள்ளை Posted: 02 May 2014 11:13 PM PDT மகாராஷ்டிர மாநிலம், தானேவில் உள்ள நகைக்கடை ஒன்றில் பட்டப்பகலில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டோம்பிவாலி பகுதியில் உள்ள ராஜ்ரத்னா ஜுவல்லர்ஸ் நகைக்கடையை நேற்று மதிய உணவு இடைவேளைக்கு மூடிவிட்டு சென்றபோது இந்த |
| கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை டாய்லெட் குழியில் திணித்து கொன்ற தாய் Posted: 02 May 2014 11:06 PM PDT கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரில் உள்ளது எருமையூர். இங்கு வசித்து வருபவர் பினோஜ் (வயது 31). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதே பகுதியில் வசித்து வருபவர் சிபிதா (37). இவருக்கு திருமணமாகி 9 வயதில் மகன் உள்ளான். சிபிதாவின் கணவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பினோஜூக்கும் சிபிதாவுக்கும் |
| அசாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு Posted: 02 May 2014 10:35 PM PDT அசாம் மாநிலத்தில் 'உல்பா' தீவிரவாதிகள் இயக்கமும், ''போடோ'' தீவிரவாதிகள் இயக்கமும் செயல்பட்டு வருகிறது. 'போடோ' தீவிரவாதிகள் 'போடோ' இன மக்களுக்கு தனி மாநிலம் கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்கள் 'போடோ' தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்கள். வங்காள மொழி பேசும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அசாமில் மேற்கு |
| திருவனந்தபுரத்தில் யானை தந்தங்களுடன் தமிழக வாலிபர் கைது Posted: 02 May 2014 09:39 PM PDT திருவனந்தபுரத்தில் இருந்து கோவை செல்லும் ரெயிலில் யானை தந்தங்கள் மற்றும் சந்தன கட்டைகள் கடத்தப்படுவதாக மாநில உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர் |
| தேர்தல் பிரசாரத்தின்போது நடிகை ரோஜா மயங்கி விழுந்தார் Posted: 02 May 2014 09:29 PM PDT நடிகையும் இயக்குனர் செல்வமணியின் மனைவியுமான ரோஜா, ஆந்திர மாநில நகரி சட்டமன்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் 7-ந்தேதி (புதன்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. தனது வெற்றிக்காக ரோஜா, கடந்த 2 மாதங்களாக தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். இதற்காக சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை தவிர்த்துள்ளார். நகரியை அடுத்த சத்திரவாடாவில் நேற்று மதியம் நடிகை |
| கோடை காலத்தை முன்னிட்டு திருப்பதியில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் Posted: 02 May 2014 09:25 PM PDT திருமலை- திருப்பதி தேவஸ்தான முதன்மை அதிகாரி எம்.ஜி.கோபால் நேற்று திருமலை அன்னமய பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோடை விடுமுறை தொடங்கி விட்டதால், திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக, திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தேவஸ்தான நிர்வாகம் விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முக்கியமாக, கோடை வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பக்தர்களை காப்பதற்காக, திருமலையில் நான்கு மாடவீதிகளிலும் கூரை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சூட்டில் இருந்து கால்களை காக்கும் |
| வங்கி கணக்கு தகவல்களை தராத சுவிஸ் நாட்டுக்கு இந்தியா கண்டனம் Posted: 02 May 2014 09:12 PM PDT இந்தியர்கள் பலர் வெளிநாட்டு வங்கிகளில் தங்கள் கறுப்பு பணத்தை போட்டு வைத்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக சுவிஸ் நாட்டில் உள்ள வலிமையான வங்கி ரகசியம் தொடர்பான சட்டங்களால் அங்கு தங்கள் கறுப்பு பணத்தை வைப்பது மிகவும் பாதுகாப்பானது என்று கருதி நீண்டகாலமாக இந்தியர்களும், பல வெளிநாட்டினரும் அங்கு தங்கள் கறுப்பு பணத்தை வைத்துள்ளனர். சுவிஸ் வங்கியின் எச்.எஸ்.பி.சி. கிளையில் ஏமாற்றம் அடைந்த ஊழியர் ஒருவர் 2011-ம் ஆண்டு வெளிநாட்டினரின் வங்கி கணக்கு விவரங்களை |
| தேர்தல் முடிவுக்கு பிறகு தொங்குப் பாராளுமன்றம்: இ.கம்யூனிஸ்ட் ஆரூடம் Posted: 02 May 2014 08:51 PM PDT தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் எந்த பிரதானக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பானமை கிடைக்காமல், தொங்குப் பாராளுமன்றமே அமையும் என்றும் அதனையடுத்து, மூன்றாவது அணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அக்கட்சியின் தேசிய செயலாளர் சுரவராம் சுதாகர் ரெட்டி, இந்த தேர்தலில் |
| இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு விசா இன்றி தவித்த பெண் பாகிஸ்தான் திரும்பினார் Posted: 02 May 2014 08:36 PM PDT ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியில் வாழ்ந்த தனது தந்தை மரணம் அடைந்த செய்தியை அறிந்த பாகிஸ்தானில் வசிக்கும் மாய் பாத்திமா என்ற பெண், தனது தாயை சந்தித்து ஆறுதல் கூற கடந்த பிப்ரவரி மாதம் 22-ம் தேதி கணவருடன் ராஜஸ்தானுக்கு வந்தார். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 14-ம் தேதி ஜெய்சால்மர் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. |
| பெங்களூர்: ஸ்டெம்செல் கொடையாளியால் உயிர் பிழைத்த சிறுவன் Posted: 02 May 2014 08:16 PM PDT மருத்துவ உலகில் மனித உயிர் காக்கும் தொழில்நுட்பங்கள் எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளன. அவற்றுள் ஸ்டெம்செல் எனப்படும் குருத்தணு மாற்று சிகிச்சை முறையும் ஒன்றாகும். இந்த முறை பற்றிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும் முன்பின் அறியாத ஒருவரைக் காப்பாற்ற முன்வரத் துணியும் மனிதர்கள் இன்னும் குறைவாகவே இருந்து வருகின்றனர். இந்த வகையான சிகிச்சைமுறையில் தலசீமியா என்ற மரபணு ஹீமோகுளோபின் நோய்க்குறைபாட்டால் ஆபத்தை எதிர்நோக்கியிருந்த |
| மோடி அமைச்சரவையில் பங்கேற்கமாட்டேன்: ராஜ்நாத் உறுதி Posted: 02 May 2014 04:48 PM PDT பா.ஜ.க தலைவரான ராஜ்நாத் சிங், தேர்தலுக்குப் பின் பா.ஜ.க கணடிப்பாக ஆட்சியமைக்கும். அப்போது பதவியேற்கும் மோடி அமைச்சரவையில் தான் இடம்பெறப்போவதில்லை என அவர் உறுதியுடன் தெரிவித்தார். கட்சியின் தலைவராக உள்ள தனக்கான பணிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. நான் கட்சித்தலைவராக இல்லாத போது மந்திரியாக இருந்திருக்கிறேன். பா.ஜ.க.வில் திறமை மிக்கவர்கள் அதிகம் |
| திக்விஜய்-அம்ருதா புகைப்படங்களை இணையதளத்திலிருந்து நீக்க போலீஸ் கோரிக்கை Posted: 02 May 2014 04:11 PM PDT காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான திக்விஜய் சிங்குக்கும், டி.வி.பெண் அறிவிப்பாளர் அம்ருதா ராய்க்கும் தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக கடந்த 2 மாதங்களாக ஊடகங்களிலும், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் தகவல்கள் கசிந்தன. ஆனால், அதுபற்றி திக்விஜய்சிங் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. |
| 24 வயது ஆண்மகனை சேர்த்து வைக்க போலீசிடம் உதவி கேட்ட 50 வயது பெண் Posted: 02 May 2014 01:54 PM PDT 50 வயதுடைய பெண் ஒருவர் தனது காதலரான 24 வயது ஆண்மகனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவருடன் வந்து அளித்த புகாரால் போலீசார் அரண்டு போனார்கள். மணி நகரில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு தனது கணவருடன் வந்த ஆஷா என்ற அந்த 50 வயது பெண், ரிக்சா டிரைவரான 24 வயதுடைய தனது காதலனான ஜிக்னேஷ் அவரது திருமணத்திற்கு பின் தன்னை மறந்து விட்டதாக தெரிவித்தார். மீண்டும் அவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இருவருக்கும் இடையே உறவு நேர்ந்தது எப்படி என்று போலீசார் கூறுகையில்: |
| ஷார்ஜாவில் முக்கிய தீவிரவாதியை தூக்கியது இந்தியா Posted: 02 May 2014 12:45 PM PDT இந்திய முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் ஹவாலா பரிமாற்றத்தில் ஈடுபட்ட முக்கிய புள்ளியை ஷார்ஜாவில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்படுகிறார். பைசான் ஆஸ்மி என்ற அந்த நபர் தேசிய புலனாய்வு துறையால் கைது செய்யப்பட்டு நேற்று மாலை கிளம்பிய விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்படுகிறான். கடந்த பல ஆண்டுகளாகவே ஆஸ்மி தீவிரவாத |
| சீமாந்திராவில் சோனியா பொதுக்கூட்டத்தில் குறைவான கூட்டம் Posted: 02 May 2014 12:08 PM PDT காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி இன்று சீமாந்திராவில் தனது பிரச்சாரத்தை தொடங்கியிருததார். குண்டுரில் உள்ள பொன்னுரு சாலையில் உள்ள இஸ்லாமியர் கல்லூரி மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. ஆந்திராவில் இருந்து சீமாந்திரா தனியாக பிரிக்கப்பட்ட பின், தற்போது தான் முதன் முறையாக அங்கு சோனியா பேசுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது கூட்டத்திற்கு பொதுமக்கள் குறைவான அளவிலேயே வந்திருந்தனர். ஏறத்தாழ 7000 பேர் மட்டுமே அவரை காண வந்திருந்ததாக கூறப்படுகிறது. வரும் 7ந் தேதி அங்கு தேர்தல் நடைபெற உள்ளது. 30 நிமிடம் |
| அமேதியில் ராகுலுக்கு எதிராக மோடி, அத்வானி, சுஷ்மா, ஜெட்லி பிரச்சாரம் Posted: 02 May 2014 10:49 AM PDT உ.பி.யில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாரதீய ஜனதா கட்சி சார்பில் டி.வி. சீரியல் நடிகையான ஸ்மிருதி ராணி போட்டியிடுகின்றார். ராகுல் குடும்பத்தினருக்கு அபரிதமான செல்வாக்கு உள்ள இந்த பகுதியில் இம்முறை பாரதீய ஜனதா கட்சியை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டுமென்று அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு |
| தெலுங்கானா விஷயத்தில் மோடி பொய்மேல் பொய் சொல்கிறார்: ஆனந்த் சர்மா Posted: 02 May 2014 10:32 AM PDT தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரித்த விவகாரத்தில் மோடி பொய்மேல் பொய் சொல்கிறார் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா குற்றம் சாட்டியுள்ளார். ஆனந்த் சர்மா டெல்லியில் பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- விசாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்த மோடி ஆந்திராவை பிரிக்கும்போது மக்களிடம் கருத்து கேட்கவில்லை என்று கூறியுள்ளார். |
| அசாமில் மீண்டும் வன்முறை: பலி 21 ஆக உயர்வு-ஊரடங்கு உத்தரவு Posted: 02 May 2014 09:21 AM PDT அசாம் மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இனக் கலவரம் ஏற்பட்ட கோக்ராஜர் மாவட்டத்தில் மீண்டும் தீவிரவாதிகள் தாககுதல் நடத்தி வருகின்றனர். 2012ல் போடோக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மிகப்பெரிய அளவிலான கலவரம் வெடித்ததையடுத்து அங்கு பாதுகாப்பிற்காக 10 |
| இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம்: வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு நீதிபதியை நியமிக்க திட்டம் Posted: 02 May 2014 08:11 AM PDT குஜராத் மாநிலத்தில் முதல் மந்திரி நரேந்திர மோடி உத்தரவின்பேரில் ஒரு இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்தது. எனவே, இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று பெண்கள் அமைப்பினர் மற்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, |
| அமேதியில் முன்னேற்றம் இல்லை: பிரியங்கவுக்கு கெஜ்ரிவால் பதில் Posted: 02 May 2014 07:20 AM PDT உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்காக பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்தின் போது, ''எனது சசோதரர் ராகுல் காந்தியினால் அமேதி தொகுதி பல்வேறு முன்னேற்றங்கள் அடைந்துள்ளது'' என்றார். இதற்கு ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |