Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மோடிக்கு ஒபாமா வாழ்த்து!

Posted: 16 May 2014 11:47 PM PDT

obama

obamaமக்களவைதேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா ஜ க  பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்பாட் பிக்சிங் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரிக்க முத்கல் தலைமையில் புதிய குழு

Posted: 16 May 2014 11:44 PM PDT

muthkal

muthkalஐபிஎல் தொடரில் எழுந்த ஸ்பாட் பிக்சிங் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்த, முன்னாள் நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் புதிய குழுவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. முத்கல் குழுவில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த நாகேஸ்வர ராவ், நிலய் தத்தா ஆகிய இருவரும் தக்கவைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு உதவியாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பி.பி.மிஷ்ராவை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய குழு தனது விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சீலிட்ட உறையில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணைக் குழு உறுப்பினர்களுக்கு ஊதியமாக பணி நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் வழங்க வேண்டும் என்றும், இதற்கான செலவையும் கிரிக்கெட் வாரியமே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கிரிக்கெட் வாரியத்தில் அமித் ஷாவுக்கு பதவி? பாஜக வெற்றி எதிரொலி

Posted: 16 May 2014 11:36 PM PDT

Amith-shah

Amith-shahமத்தியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பிசிசிஐ)பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் பாஜக பொதுச் செயலருமான அமித் ஷா, கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவராக உள்ள அவர், பிசிசிஐ-ன் 5 துணை தலைவர்களுள் ஒருவராக நியமிக்கப்படலாம் என தெரிகிறது. மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் மேற்கு மண்டல பிரதிநிதியாக உள்ள ரவி சாவந்த்துக்கு பதிலாக அமித் ஷாவுக்கு பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் இதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும். ஆட்சி மாற்றத்தின் எதிரொலியாக, தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ள ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியும் பிசிசிஐ நிர்வாகியாக விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தலில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அந்த சங்கத்தை பிசிசிஐ சஸ்பெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து!

Posted: 16 May 2014 11:29 PM PDT

Navas-sherif

Navas-sherifமக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு மோடி வருகை தருமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கர்ப்பிணித் தாய்க்கு உதவிய 8 வயது சிறுமி

Posted: 16 May 2014 11:26 PM PDT

child

childஅமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள டம்பா நகரில் வசிக்கும் க்ரிஸ்டில் கர்சியா தனது இரண்டாவது குழந்தையை பிரசவிக்கும் தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார். டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு 2 வாரங்கள் முன்னதாகவே வீட்டில் தனியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குளியல் அறைக்குள் இருந்தபோது அவரது கருப்பையின் பனிக்குடம் உடைந்து, பிரசவ வலி வாட்டி, வதைக்கத் தொடங்கியது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது மகளான ஜாஸ்மின் மெக்எனானியை அழைத்த க்ரிஸ்டில் கர்சியா, '911'க்கு போன் செய்து, 'எனது தாய் பனிக்குடம் உடைந்த நிலையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார்' என்று தெரிவிக்கும்படி கூறினார். அந்த சிறுமியும் அவ்வாறே செய்தாள். அவசர உதவி வாகனம் வந்து சேர்வதற்குள் குழந்தையின் தலை வெளியே எட்டிப்பார்க்க தொடங்கி விட்டது. உடனடியாக ஜாஸ்மினை அழைத்து, குழந்தையின் தலையை பத்திரமாக பிடித்துக் கொள்ளும்படி தாய் கூற, அந்த சிறுமியும் அவ்வாறே செய்து, தனது தம்பி இந்த பூமியில் பிறக்க உறுதுணையாக இருந்தாள். பின்னர், அங்கு வந்து சேர்ந்த டாக்டர்கள் உடனடியாக குழந்தையின் தொப்புள் கொடியை துண்டித்து, தாயையும் சேயையும் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மகளின் புத்தி சாதுர்யத்தை புகழ்ந்து பாராட்டும் க்ரிஸ்டில் கர்சியா, 'ஜாஸ்மின் எனக்கு மிகப் பெரிய துணையாக இருந்தாள். நிலமையை புரிந்துக் கொண்டு, பதற்றப்படாமல் நான் சொன்னபடி கேட்டு, அவள் நிதானமாக செயல்பட்டாள்' என்று பெருமைப்பட குறிப்பிடுகிறார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

நரேந்திர மோடியின் வெற்றி, ஒட்டுமொத்த இலங்கையருக்கும் கிடைத்த வெற்றி!

Posted: 16 May 2014 11:21 PM PDT

Narendra-modi

Narendra-modiஇந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் வெற்றி, ஒட்டுமொத்த இலங்கையருக்கும் கிடைத்த வெற்றிக்குச் சமம் என்பதாக சிஙகள இணையத்தளங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, நரேந்திர மோடியின் வெற்றியைத் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனையடுத்து நாட்டிற்குள் முதலீடு செய்யப்படும் அமெரிக்க டொலர்களின் அளவும் அதிகரிக்கும். அதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு ஏற்படும். இவ்வாறான நிலையில் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு இந்திய சந்தையில் விலை குறைவாக இருக்கும். அதன் மூலம் இலங்கை ஏற்றுமதியாளர்கள் கூடுதலான ஏற்றுமதி வாய்ப்புகளையும், வருமானத்தையும் ஈட்டக் கூடியதாக இருக்கும். அத்துடன் நரேந்திர மோடி பயங்கரவாதம், தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடியவர். இதன் காரணமாக இல்ங்கையில் தனிநாடு கோரும் போராட்டங்களுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு ஆதரவளிக்க மாட்டார். இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்த காங்கிரசின் வெளியுறவுக் கொள்கை நரேந்திர மோடி தலைமையிலான அரசில் முற்றாக மாற்றமடையும். மேலும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவான போக்கைக் கொண்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்படவுள்ள சூழல், நரேந்திர மோடி அரசில் சுப்பிரமணியன் சுவாமிக்கு உள்ள முக்கியத்துவம் என்பன காரணமாக இலங்கைக்கு சாதகமான வெளியுறவுக் கொள்கை வகுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லங்காதீபவின் எசென மற்றும் அரசுக்கு சார்பான இணையத்தளங்களில் இந்த செய்திகள் பிரசுரமாகியிருந்தன.

This posting includes an audio/video/photo media file: Download Now

மஹரகம பிரதேசத்தில் வர்த்தகர் கடத்தல்! கப்பம் கோரிய நபர்கள் கைது

Posted: 16 May 2014 11:14 PM PDT

Kidnapped

Kidnappedமஹரகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கடத்தி கப்பம் கோரிய இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டு லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹரகம பமுனுவ வீதியில் தைத்த ஆடை வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியில் வந்த கடத்தல்காரர்கள் போத்தல் ஒன்றை உடைத்து குத்திக் கொலை செய்வதாக அச்சுறுத்தியே வர்த்தகரை கடத்தியுள்ளனர். வர்த்தகரின் நண்பர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி, இரண்டு லட்ச ரூபா கப்பம் வழங்குமாறு கோரியுள்ளனர். குறித்த நண்பர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்ததுடன், கடத்தப்பட்டவரையும் மீட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

பொது வேட்பாளராக போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை: சரத் பொன்சேகா கருத்து

Posted: 16 May 2014 11:10 PM PDT

sarath-pon-seka

sarath-pon-sekaபொது வேட்பாளராக போட்டியிடுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நான் போட்டியிடப் போவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. எனினும், நான் அவ்வாறான ஓர் தீர்மானத்தை எடுக்கவில்லை. இந்த அனைத்து தகவல்களும் அடிப்படையற்றவை. கட்சியின் கொள்கைகளுக்கு அமைவாக யாரேனும் போட்டியிட்டால் அதற்கு பூரண ஆதரவளிக்கத் தயார். பொதுமக்களின் இதயத் துடிப்பை உணர்ந்தவர் ஒருவரே பொது வேட்பாளராக போட்டியிட வேண்டும். சுயலாப நோக்கில் தேர்தலில் போட்டியிட நான் எப்போதும் விரும்பியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்

This posting includes an audio/video/photo media file: Download Now

ரியாத்தில் சமையல் எரிவாயு கசிவு: எரிகாயங்களுக்கு உள்ளான இலங்கை பெண்!

Posted: 16 May 2014 10:48 PM PDT

Fire

Fireரியாத்தில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக இலங்கை பெண் ஒருவர் பாரிய எரிகாயங்களுக்கு உள்ளானார்.

ரியாத் தகவல் ஒன்று இதனை தெரிவித்துள்ளது. கொழும்பில் இருந்து 50 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள அளுத்கமவை சேர்ந்த பாத்திமா ஷாபியா என்ற 38 வயது பெண்ணே பாதிக்கப்பட்டவராவார்.

இவர், தற்போது அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல் மூலம் அறியவந்துள்ளது.

எனினும் இன்னும் ஐந்து நாட்களிலேயே அவருடைய உடல்நிலையி;ல் முன்னேற்றங்கள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவர் பணிப்பெண் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீப்பிழம்பும் ஏற்பட்ட போதே ஷாபியா பாரிய காயங்களுக்கு உள்ளானார்.

இந்தநிலையில் காயங்களுக்கு உள்ளான பெண் தொடர்பில் அவருடைய எஜமானிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற பயன்பாடு தொடர்பிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி லண்டனில் ஏற்பாடு! முக்கிய இராஜதந்திரிகள் பங்கேற்பு

Posted: 16 May 2014 10:42 PM PDT

London

Londonலண்டனில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வுகளில் முக்கிய இராஜதந்திரிகள் பலர் பங்கேற்கவுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் உயிரிழந்தார்கள். இதனை நினைவுகூரும் வகையில் லண்டனில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் இந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கியது தொடர்பில் இலங்கை தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்வுகளில் தென்னாபிரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் மற்றும் ஐரோப்பிய யூனியனின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஆகியோர் உட்பட முக்கிய இராஜதந்திரிகள் கலந்து கொள்ளவுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வின் போது தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டையும் வழங்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கோடைகாலத்தில் கனடிய மக்கள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய 5 உணவுப் பொருட்கள்!

Posted: 16 May 2014 10:33 PM PDT

food

foodவிக்டோரியா தின நீண்ட வார இறுதி விடுமுறை உத்தியோக பூர்வமான கோடைகால ஈடுபாட்டின் ஆரம்பமாகும். வெளிப்புறங்களில் நீண்ட நேரங்களை செலவிட விரும்புபவர்கள் அடுத்த சில மாதங்கள் BBQ ,பாரியோக்கள், சுடரொளி களியாட்டங்கள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பர். ஆனால் கோடைகால உணவுப்பொருட்கள் சிலவற்றின் விலை கடந்த வருட கோடைகாலத்தில் இருந்த விலையை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகின்றது. BBQ இறைச்சி. BBQ செய்வதற்கு உபயோகிக்கும் இறைச்சிவகைகளான பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்றவற்றின் விலை அதிகரித்து வருகின்றது. சராசரியாக ஒரு பக்கெட் ஹொட்டோக்கின் விலை 2010-ல் டொலர்கள் 2.97 ஆக இருந்தது 2014-மார்ச் மாதம் டொலர்கள் 3.60-ஆக உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. இந்த வருட ஆரம்பத்தில் யு.எஸ் பன்றி விவசாயிகள் ஒரு கொடிய வைரசை எதிர் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் பன்றிகளின் தொதை 50சத விகிதத்திற்கும் மேலாக குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. இதே போல் மாட்டிறைச்சி விடயத்திலும் தேவை அதிகமாகவும் வநியோகம் குறைவாகவும் இருந்துள்ளது. தேசிக்காய். மோசமான காலநிலை, மொய்ப்புத்தன்மைகள் காரணமாக தேசிக்காயின் விலை உச்சாணிக்கொம்பை எட்டியுள்ளது. தேசிக்காய் பயிரிடப்படும் மெக்சிக்கன் பிரதேசத்தில் காலநிலையும் மரங்களில் ஏற்பட்ட மொய்ப்புத்தன்மையும் தேசிக்காயின் விலையை உயர்த்தியுள்ளது. பழவகை. மிக பிரபல்யமான பழங்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன. திராட்சை பழம், அப்பிள் மற்றும் ஒறேஞ் போன்ற வற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. ஒருவகை பக்ரீரியா காரணமாக வுளொரிடா ஆரஞ்சு பயிர் பாதிப்படைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 2010-ல் ஒரு கிலோ ஆரஞ்ச் பழத்தின் விலை 1-டொலர்களாக இருந்தது மார்ச் 2014-ல் டொலர்கள் 3.46 ஆக உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு. கோடைகாலத்தின் மிக பிரபல்யமான சைட் டிஷ் உருளைக்கிழங்காகும். உருளைக்கிழங்கு சலாட், வறுத்த உருளைக்கிழங்கு, பேக் செய்த கிழங்கு என வகை வகையான விதத்தில் BBQஉடன் பரிமாறப்படும். எதிர்பாராத விதமாக உருளைக் கிழங்கின் விலையும் அதிகரித்துள்ளது. 2010-ல் 4.54-கிலோகிராம் கிழங்கு டொலர்கள் 4.24ற்கு வாங்க கூடியதாக இருந்துள்ளது. தற்போது விலை உயர்ந்து அதே அளவை டொலர்கள் 5.59-ற்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கோப்பி. கோப்பியின் விலையும் அதிகரித்துள்ளது. 2014 ஏப்பிரல் மாதத்தில் ஒரு இறாத்தல் அரபிக்கா கோப்பியின் விலை டொலர்கள் 2.26 ஆக அதிகரித்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் அகதிகளை ஏற்றுக்கொள்வதில் மாற்றங்கள் அகதிகள் எண்ணிக்கை குறைக்கின்றனவா?

Posted: 16 May 2014 10:28 PM PDT

Sri-Lanka

Sri-Lankaகனடாவில் அகதிகளை ஏற்றுக்கொள்வதில் கொள்கைரீதியாகக் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் அகதிகள் வருகையைக் குறைவிற்குக் காரணமாகவிருக்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனத் தெரியவருகிறது. உலகளாவியரீதியில் அகதிகள் தொகை அதிகரித்தவண்ணம் இருக்கையில் கனடாவில் தஞ்சம் கோருவோரது தொகை கணிசமானளவு குறைந்திருப்பதாக வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. 2012ம் ஆண்டிலும் பார்கக் 2013ம் ஆண்டு உலகளாவியரீதியில் அகதிகள்அந்தஸ்துக் கோரியிருப்போர் தொகையானது 28 சதவீதம் அதிகரித்திருக்கின்றது எனவும் இதற்கான காரணமாக சிரியாவில் இடம்பெறுகின்ற நெருக்கடி நிலையென ஐக்கிய நாடுகள் தாபனத்தின் அகதிகளுக்கான ஆணையாளர் தெரிவித்திருக்கின்றார். ஆனால் குறிப்பிட்ட இக்காலகட்டத்திற்குள் கனடாவிற்குள் தஞ்சம் கோரியோரினது தொகை முன்பிலும் பார்க்க அரைவாசியாகக் குறைவடைந்திருக்கின்றது எனத் தெரிவித்திருக்கின்றார். 2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கனடிய மத்தியரசானது அகதிகள் விடையத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பிட்ட மாற்றங்கள் அகதி விண்ணப்பப் பரிசீலனையில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியதன் விளைவாக அகதிகள் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றது என நம்பப்படுகின்றது. ஆனால் குடிவரவு அமைச்சரான Chris Alexander ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் உண்மையான அகதிகள் பயன்பட உதவுகின்றது எனத் தெரிவித்திருக்கின்றார். எண்ணிக்கை குறைவடைகின்றபோது விண்ணப்பித்த அகதிகளின் கோரிக்கைகள் துரிதமாகப் பரிசீலனை செய்து கொள்ள முடிகின்றது எனவும் அத்துடன் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட அகதிகளை இனங்கண்டு அவர்கள் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் அளிக்க முடியும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தை புறக்கணித்த கனடா தூதுவர்!

Posted: 16 May 2014 03:14 AM PDT

Canada

Canada"நாட்டுக்குள் வெற்றி வாகை சூடியோர் தோல்வி அடைந்தோர் என்ற பிரிவை உருவாக்கும் இத்தகைய வெற்றித் திருவிழாக் கொண்டாட்டங்களை விடுத்து, இந்த மோதலினால் பாதிக்கப்பட்டோருக்காக ஒருநாள் நினைவு தினத்தை அனுஷ்டிக்குமாறு இலங்கை அரசை கனடா தூண்ட விழைகிறது. " என்றும் அவர் கூறுகின்றார். "யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்காக ஒரே தினத்தை நினைவு நாளாக அனுஷ்டிப்பது இங்கு சமாதானத்தை நிலைநிறுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் என இலங்கையின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது பரிந்துரையில் கூறியிருக்கின்றது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை தென்னிலங்கையில் இலங்கை அரசு நடத்தவுள்ள ஐந்தாம் ஆண்டு யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் இலங்கைக்கான கனடாத் தூதுவர் ஷெல்லி வைட்டிங் அம்மையார் பங்குபற்ற மாட்டார். இத்தகைய வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் தேசிய நல்லிணக்க நகர்வுகளுக்கு முட்டுக்கட்டையாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!

Posted: 16 May 2014 02:56 AM PDT

kochadaiyaan

kochadaiyaanஉலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. இப்படத்தில் பணியாற்றிய சவுன்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி இந்த திரையிடலில் பங்கேற்றார். கேன்ஸ் விழாவில் தான் பங்கேற்றதை, கோச்சடையான் பேனருடன் நின்று படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டே கேன்ஸ் விழாவில் கோச்சடையான் ட்ரலைவர் வெளியிடப்படும் என்றும், ரஜினி அதில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் ரஜினியால் பங்கேற்க முடியவில்லை. அதன் பிறகு பல மாதங்கள் கழித்தே கோச்சடையான் ட்ரைலர் வெளியானது. இந்த ஆண்டு கேன்ஸ் தொடங்கும்போது, படமே வெளியீட்டுக்கு தயாராகிவிட்டதால், இப்படத்தை கேன்ஸ் விழாவின் போட்டியற்ற பிரிவில் திரையிட முடிவு செய்து அனுப்பி வைத்தனர். கோச்சடையான் திரையிடலின்போது, படத்தில் பணியாற்றிய ஆஸ்கர் விருது வென்ற சவுன்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி கலந்து கொண்டார். கோச்சடையான் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. வரும் மே 23-ம் தேதி கோச்சடையான் உலகெங்கும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம் தமிழ் சினிமாவில் காலியாகத்தான் உள்ளது !

Posted: 16 May 2014 02:52 AM PDT

illayaraja

illayarajaபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இடம் இன்னும் தமிழ் சினிமாவில் காலியாகத்தான் உள்ளது என்றார் இசைஞானி இளையராஜா. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வாழ்க்கையை இரண்டரை மணிநேர ஆவணப் படமாக எடுத்துள்ளார் சாரோன் புஷ்பராஜ் என்பவர். இந்த விழாவில் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, ஆவணப் படத்தை வெளியிட்டனர். விழாவில் பேசிய இளையராஜா, "அண்ணன் எம்எஸ்வி இசையில்தான் முதல் முதலாக பாசவலை படத்தில் பாடல் எழுதினார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். அவரிடம் பாடலுக்கு இசையமைத்ததை, இருவரின் அனுபவங்களை அண்ணன் வாயால் சொல்லக் கேட்க வேண்டும் என்ற ஆவலில்தான் நான் வந்தேன். ஆனால் அவர் நன்றி வணக்கம் என முடித்துக் கொண்டார். அவர்களின் பாடல்களைக் கேட்டு ரசித்தவனாகிய நான் இப்போது அவரைப் பற்றிப் பேசுவதை என்னவென்பது. குட்டியாடு தப்பிவந்தா குள்ளநரிக்கு சொந்தம் குள்ளநரி மாட்டிகிட்டா குறவனுக்கு சொந்தம் தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லம் சொந்தம் சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்! அண்ணன் சிவாஜி நடித்த 'பாசவலை (1956)' படத்தில் அண்ணன் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய முதல் பாட்டு இதுதான். என்ன ஒரு மொழிநடை, சொல்வளம்... அவரது பெருமைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய மொழி, நடை, சிந்தனை, சொல்லோட்டம், தெளிந்த நீரோடையைப் போன்ற நடை இருக்கிறதே, அந்த இடம் இன்றுவரை திரைத் துறையில் காலியாகத்தான் இருக்கிறது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாட்டெழுத வந்த காலத்தில் உடுமலை நாராயணகவி இருந்தார். பாபனாசம் சிவன் பல பாடல்களை எழுதிக்கொண்டிருந்தார். இன்னும் தஞ்சை ராமைய்யாதாஸ், கே.டி.சந்தானம் போன்ற பல பாடலாசிரியர்கள் இருந்தார்கள். கவியரசராய் கண்ணதாசன் வலம் வந்துகொண்டிருந்தார். அந்த நேரத்தில் பட்டுக்கோட்டையார் வந்து தன் எளிய சொற்களால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர். பரத நாட்டிய பாடல்களை அவர் எழுதினாலும் அந்த மொழியில் வளம் சிறப்பாக இருக்கும். அதே போன்று சின்ன பயலே... சின்ன பயலே... சேதிகேளடா, தூங்காதே தம்பி தூங்காதே என எளிய நடையில் அவர் எழுதிய பல பாடல்களை நான் ரசித்திருக்கிறேன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாண்டித்தேவன் படத்தில் வரும், தேனாறும் பாயுது... செங்கதிரும் சாயுது... ஆனாலும் மக்கள் வயறு காயுது... என்ற பாடலை நான் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். பட்டுக்கோட்டையின் ரசிகனாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இயக்குனர் சாரோன் ஏழுவருடம் உழைத்து இந்த ஆவணப்படத்தை உருவாக்கி இருக்கிறார். அவர் வாழ்க என்று வாழ்த்துகிறேன்,' என்றார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வந்துவிட்டது மோதிர மவுஸ்!

Posted: 16 May 2014 02:46 AM PDT

NOD-Mouse

NOD-Mouseஉலகில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களில் நானோ தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரித்துள்ளது. இன்றைய (டேபுள் கம்யூட்டர்கள்) கணிப்பொறிகள் இயங்குவதில் மவுஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கனிப்பொறி திரையில் நமக்கு தேவையானவற்றை நேரடியாக தேர்வு செய்ய மவுஸ் பயன்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள மவுஸ்கள் மனிதனின் உள்ளங்கை அளவில் உள்ளது. வயர் இணைப்பு, புளூடூத் போன்ற இணைப்புகள் மூலமாக இந்த மவுஸ்கள் செயல்படுகின்றன. தனிநபர் கனிப்பொறி மற்றும் லேப்டாப்களில் கூட இந்த மவுஸ்களின் பயன்பாடு இருந்து வருகிறது. ஆனாலும் உள்ளங்கை அளவு இருந்த மவுசின் வடிவம் மட்டும் மாறாமல் இருந்தது. தற்போது அதுவும் மாறிவிட்டது. உள்ளங்கை அளவில் இருந்த மவுஸ், விரலில் மாட்டும் மோதிரத்தின் அளவுக்கு மாறிவிட்டது. புளூடூத் வசதியுடன் இயங்கும் இந்த மோதிரம் மவுசிற்கு ' NOD மவுஸ் ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை கனிப்பொறியில் உள்ள புளூடூத்துடன் இணைத்து, பின்னர் விரலில் மாட்டிக் கொண்டு கனிப்பொறியை இயக்கலாம். இதனால் கனிப்பொறிக்கு மிக அருகிலேயே அமர்ந்து கொண்டு இயக்குவதால் ஏற்படும் கண் எரிச்சலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. தற்போது வெளிவந்துள்ள NOD மவுஸ் அறிமுகமான சில நாட்களிலேயே 3,000க்கும் மேற்பட்ட மவுஸ்கள் விற்பனை ஆகியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

ராஜ நாகம் முட்டையிடும் மிக அரிய காட்சி!

Posted: 16 May 2014 02:34 AM PDT

King-Snake-Laying-an-Egg

King-Snake-Laying-an-Egg

This posting includes an audio/video/photo media file: Download Now

எல்லோருக்கும் இப்படியொரு அதிர்ஷ்டம் கிடைக்குமா?

Posted: 16 May 2014 02:31 AM PDT

Today-was-his-day

Today-was-his-day

This posting includes an audio/video/photo media file: Download Now

பேயிடம் மாட்டிக்கொண்டு மனிதர் படும் பயங்கரமான அவஸ்தை

Posted: 16 May 2014 02:25 AM PDT

PARANORMAL-GHOST

PARANORMAL-GHOST

This posting includes an audio/video/photo media file: Download Now

வினோத நோயினால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் அவலநிலை!

Posted: 16 May 2014 01:03 AM PDT

Haitian-Teen-has-FOUR-POUND

Haitian-Teen-has-FOUR-POUND

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™