Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு மன்மோகன்சிங் பதவி விலகினார்

Posted: 16 May 2014 10:45 PM PDT

பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிரதான எதிர்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். சில தினங்களுக்கு முன்பு பிரதமர் அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங் விடைபெற்றார். அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்து அளித்து நினைவு பரிசும் வழங்கினார்.

சீமாந்திரா முதல் மந்திரியாக சந்திரபாபுநாயுடு திருப்பதியில் பதவி ஏற்பு

Posted: 16 May 2014 10:40 PM PDT

சீமாந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்து உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம்–பா.ஜனதா கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபுநாயுடு 47 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 5–வது முறையாக அவர் இந்த தொகுதியில் வெற்றி பெறுவது

பா.ஜ.க.வை ஆட்சியில் அமர வைக்க தனி மனிதராய் போராடி வென்ற மோடி

Posted: 16 May 2014 10:29 PM PDT

அலை. இதில் இருந்து தப்பிக்க தெரியாமல் சிக்கிக் கொண்டால் அவ்வளவுதான். நம்மை வாரிச் சுருட்டி வீசி மூச்சையே அடக்கி விடும் வலிமை அதற்கு உண்டு. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி அலையில் சிக்கி இப்படித்தான் சின்னா பின்னமாகி இருக்கிறது காங்கிரஸ் கட்சி. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்து இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அனைத்து துறைகளிலும்

கேரளாவில் பா.ஜனதா கால் ஊன்ற முடியாது: உம்மன்சாண்டி பேட்டி

Posted: 16 May 2014 10:10 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தைப் போல கேரளாவிலும் மோடி அலை எடுபடவில்லை. இங்குள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மற்ற 8 தொகுதிகளில் கம்யூனிஸ்டு கட்சி வென்றது. பா.ஜனதா கட்சியால் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து

பதவியில் இருந்துகொண்டே முதல்-மந்திரி, பிரதமர் ஆவது புதிய சாதனை

Posted: 16 May 2014 08:35 PM PDT

சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரி பதவியில் இருந்தவாறு பாராளுமன்றத் தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமரானது கிடையாது. இப்போது நரேந்திர மோடி, குஜராத் முதல்-மந்திரியாக இருந்துகொண்டே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நேரடியாக பிரதமராக

ஆம் ஆத்மி கட்சியின் வீழ்ச்சி

Posted: 16 May 2014 08:26 PM PDT

'ஊழல் ஒழிப்பு' என்ற கோஷத்தை முக்கியமாக வைத்து தொடங்கப்பட்ட அரசியல் கட்சி, 'ஆம் ஆத்மி'. அதன் அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றியவர். அவர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுடன் இணைந்து, ஊழல் ஒழிப்புக்கான 'ஜன லோக்பால்' மசோதாவுக்காக குரல் எழுப்பி வந்தார். அதுதொடர்பாக நடைபெற்ற போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்தி

அக்சர்தாம் கோவில் வழக்கு: 6 பேரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 16 May 2014 08:19 PM PDT

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள அக்சர்தாம் கோவிலை வன்முறை கும்பல் தாக்கியதில் அந்த கோவில் பலத்த சேதமடைந்தது. மேலும், இந்த தாக்குதலின் போது, அப்பாவிகள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பு 281 பக்கங்க

இது பா.ஜனதாவுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி: சுஷ்மா சுவராஜ்

Posted: 16 May 2014 08:00 PM PDT

பாரதீய ஜனதாவின் அமோக வெற்றி குறித்தும், மந்திரிசபையில் இடம்பெறுவீர்களா? என்ற கேள்விக்கும் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:- இது முழுக்க முழுக்க பாரதீய ஜனதாவின் வெற்றி, வரலாற்று வெற்றி. பிரதமர் வேட்பாளர் மோடி தலைமையிலான பா.ஜ.க.வுக்கு மக்கள் தெளிவான முடிவை கொடுத்திருக்கிறார்கள். எங்களால் எந்த நிர்ப்பந்தமும் இன்றி தனித்து ஆட்சி அமைக்க முடியும். என்றாலும் நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தான் ஆட்சி அமைப்போம். ஆட்சியில் இடம்பெறுவேனா? என்பது கற்பனையான கேள்வி. அது பிரதமரின் தனிப்பட்ட அதிகாரம். சில குறிப்பிட்ட முடிவுகளை பாராளுமன்ற குழு எடுக்கும். இதுபோன்ற கேள்விகள் முதிர்ச்சியில்லாதது. இவ்வாறு அவர் கூறினார்.

அருணாசலப் பிரதேசம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி

Posted: 16 May 2014 05:03 PM PDT

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்த காயத்துக்கு மருந்திடும் வகையில் அருணாசலப் பிரதேசம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் பதிவான வாக்குகளில் 49.5 சதவீதத்தை அக்கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

டீக்கடையில் இருந்து பிரதமர் நாற்காலி வரை: மோடி கடந்து வந்த பாதை

Posted: 16 May 2014 04:12 PM PDT

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி(53) விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இந்த உயர் தகுதியை அவர் அவ்வளவு எளிதில் அடைந்து விடவில்லை. முறையான திட்டமிடல், திட்டத்தை செயல்படுத்த நேரம்-காலம் கருதாமல் பம்பரமாய் சுழன்று உழைத்த வல்லமை. சுமார் பத்து, பதினைந்து கட்சித்

உ.பி.யில் மாயாவதி கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை

Posted: 16 May 2014 01:45 PM PDT

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, 15-வது பாராளுமன்றத்தில் 21 எம்.பி.க்களைப் பெற்றிருந்தது. இந்த கட்சியின் தலைவர் மாயாவதி, காங்கிரஸ், பாரதீய ஜனதா அல்லாத 3-வது அணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் பிரதமர் ஆகலாம் என்ற கனவில் உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.

பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறார், மன்மோகன் சிங்

Posted: 16 May 2014 01:00 PM PDT

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் கொடுத்த 'மரண அடி'யை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார். இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அவர்,

37 தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க.வின் வரலாற்று சாதனை

Posted: 16 May 2014 12:28 PM PDT

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. 37 தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற

பிரதமராகும் மோடிக்கு தொலைபேசியில் ஒபாமா வாழ்த்து

Posted: 16 May 2014 12:01 PM PDT

16-வது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதையடுத்து, நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்ட நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, மோடிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் மோடியை எதிர்த்த காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் பறிபோனது

Posted: 16 May 2014 10:52 AM PDT

பா.ஜ.க.வின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, வாரணாசி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 லட்சத்து 36 ஆயிரத்து 854 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஒடிசா முதல் மந்திரியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார்

Posted: 16 May 2014 10:30 AM PDT

ஒடிசா சட்டசபை தேர்தலில் அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரின் டெபாசிட் பறிபோனது. ஹிஞ்சிலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், தொடர்ந்து நான்காவது முறையாக அத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆட்சி மாற்றம் எதிரொலி: ரெயில் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு

Posted: 16 May 2014 10:11 AM PDT

ரெயில்களின் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை முறையே 14.2 மற்றும் 6.5 சதவீதம் வரை உயர்த்த மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரெயில்வே அமைச்சகம் சமீபத்தில் முடிவு செய்தது. இந்த புதிய கட்டண விகிதத்தை வரும் 20-ம் தேதி முதல்

பா.ஜனதா வெற்றியில் மோடியின் பங்கு என்ன? மதிப்பீடு செய்ய அத்வானி யோசனை

Posted: 16 May 2014 08:20 AM PDT

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்ததில் இருந்தே அதிருப்தியில் இருந்த அத்வானியை, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சமாதானம் செய்தனர். அதன்பின்னர் பிரசாரத்தில் கவனம் செலுத்தினாலும், மோடி அலை வீசுவதாக கூறியதை அவரால் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில் இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில்

மணிப்பூரில் இரண்டு தொகுதிகளையும் தக்க வைத்தது காங்கிரஸ்

Posted: 16 May 2014 08:20 AM PDT

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், மணிப்பூரின் இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக்கொண்டது. மணிப்பூர் உள்புறத் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான தாக்கோம் மெயின்யா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோய்ராங்தெம் நாராவை தோற்கடித்தார்.

காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்ற சோனியா-ராகுல்

Posted: 16 May 2014 08:20 AM PDT

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தெரிவித்தனர். மேலும் பா.ஜனதா தலைமையிலான புதிய அரசு சிறப்பாக செயல்படவும் வாழ்த்து தெரிவித்தனர். டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது ராகுல் பேசுகையில், "பா.ஜனதாவுக்கு


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™