Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முஸ்லிம்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஜனாதிபதி தலைமையில் சிறப்பு பேச்சுவார்த்தை!

Posted: 09 May 2014 11:59 PM PDT

Mahinda-Rajabakshe

Mahinda-Rajabaksheமுஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஆளும் கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வெசாக் தினத்தின் பின்னர் இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக நேரத்தை ஒதுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில், ஜனாதிபதியை அமைச்சர் ரிசாட் பதியுதின் சந்தித்து முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து விளக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேரத்தை ஒதுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் ஜனாதிபதியிடம் விளக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வியட்நாமின் நிலைப்பாடு திருப்தி இலங்கை ஆதரவு!

Posted: 09 May 2014 11:53 PM PDT

viatnam_jayartna

viatnam_jayartnaசீனாவுக்கும் வியட்நாமிக்கும் உள்ள பிணக்கில், வியட்நாமின் நிலைப்பாட்டை இலங்கை ஆதரிக்கின்றது என பிரதமர் டி.எம்.ஜயரட்ன கருத்து வெளியிட்டுள்ளதாக, வியட்நாம் பிரதமரின் அலுவலகம் தெரிவித்திருக்கின்றது. வியட்நாமின் இறைமைக்கு உட்பட்டதும் அதன் விசேட பொருளாதார வலயத்திற்குள் அமைவதுமான கடற்பிரதேசத்தில் சீனா எரிபொருள் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வருவதாக வியட்நாம் குற்றம் சுமத்தி வருகின்றது. ஐ.நாவின் 1988 ஆம் ஆண்டின் கடல் சட்டப் பிரகடனத்திற்கு அமைவாக இந்தப் பகுதியிலிருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும் என வியட்நாம் வலியுறுத்தி வருகின்றது. வியட்நாமுக்கு விஜயம் செய்திருக்கும் பிரதமர் டி.எம்.ஜயரட்ன, வியட்நாம் பிரதமர் நிகுஜென்ரன் டங்க் நேற்றைய தினம் சந்தித்துள்ளார். இதன்போது, வியட்நாமின் மேற்படி நிலைப்பாட்டுக்கு பிரதமர் முழு ஆதரவு வழங்கினார் என வியட்நாம் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இத்தகைய பிணக்குகள் சர்வதேச சட்டத்திற்கு அமைவாக அமைதியாக கையாளப்பட வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை ஜனநாயக நாடாக உள்ளது: அமைச்சர் மகிந்த சமரசிங்க கருத்து!

Posted: 09 May 2014 11:49 PM PDT

Mahinda-Samarasinghe

Mahinda-Samarasingheஇலங்கையில் ஜனநாயகம் உரிய வகையில் பேணப்படுவதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உலக இளைஞர் மாநாட்டில் நேற்று கலந்துக் கொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்தசமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். தெற்கில் ஏற்பட்ட இரண்டு கிளர்ச்சிகள் மற்றும் வடக்கு கிழக்கு யுத்தத்துக்கு மத்தியிலும் இலங்கையில் அரசாங்கம் தேர்தல்களை நடத்திய ஆட்சி நடத்தி இருக்கிறது. இலங்கை ஒரு பல தேசிய மற்றும் பல கலாசார நாடு என்பதால், நாங்கள் தனிப்பட்ட அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கா- கல்வின் சிபேர்ட் கைவண்ணத்தில் கட்டப்பட்ட 7 நவீன மணல் அரண்மனைகள்!

Posted: 09 May 2014 11:43 PM PDT

Aranmanai

Aranmanaiகொலராடோவில் வளர்ந்து பெரும்பாலான நேரத்தை கட்டுமான தளங்களில் செலவிட்டவர் கல்வின் சிபேர்ட் என்பவர். இவர் பாரிய திட்டாக காணப்பட்ட இடங்களில் கோட்டைகளை கட்டியுள்ளார். சிக்கல்கள் குறைவான கோபுரங்கள் போலவும், விசித்திர கதைகளில் வரும் அகழிகள் போலவும் பெரும்பாலான அமைப்புக்கள் இவரது கட்டிடக்கலையின் தூண்டுகோலாளர்களான போல் றுடோல்ப் ,கொட்விறைட் போம் மற்றம் கியோவனி மிசெலுச்சி போன்றவர்களின் வன்மையான அமைப்புக்களை கொண்டதாகவும் அமையப்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மணல் மற்றும் தண்ணீர் எடுப்பதற்கு ஒரு 5-கலன் வாளி, மேற்பரப்புகளை சமப்படுத்த ஒரு பிளாஸ்ரிக் பிளேஸ்மற், கூரான மூலைகளை எடுப்பதற்கு ஒரு பிளாஸ்ரிக் துண்டு என்பனவற்றையே உபயோகித்துள்ளார். ஒரு ஹாட்வெயர் கடையில் டொலர்-1.50ற்கு வாங்கும் கருவி என அவர் கூறியுள்ளார். இந்த துல்லியமான அமைப்புக்களை செய்வதற்கு பயிற்சிக்கு அடுத்ததாக மணலின் இழையமைப்பு சரியானதாக இருந்தது முக்கியமானதென கூறப்பட்டுள்ளது. சிபேர்ட் எல்லாவற்றையும் தனது கையால் வடிவமைத்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் வெடிகுண்டு புரளீ: இளைஞர்கள் கைது!

Posted: 09 May 2014 11:34 PM PDT

emergency-service

emergency-serviceநெருக்கடியான சம்பவம் நடந்து கொண்டிருப்பதாக அவசர சேவைக்கு தவறான அறிக்கையை கொடுத்து அவசர கால பதில் நடவடிக்கைகளை எடுக்க செய்யும் சம்பவங்கள் வட அமெரிக்கா பூராகவும் இடம் பெற்றது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரனையை தொடர்ந்து இரண்டு ஒன்ராறியோ இளைஞர்கள், ஒரு மொன்றியலைச் சேர்ந்த இளைஞன் ஆகியோர் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஒட்டாவாவைச் சேர்ந்த 16-வயது இளைஞன் வட அமெரிக்கா பூராகவும் சிறப்பு ஆயதங்கள் மற்றும் சூழ்ச்சித்திறன் அணி எனப்படும் உயர் சிறப்பு பொலிஸ் பிரிவினரின் கவனத்தை பெறக்கூடிய டசின் கணக்கான சம்பவங்களை வடிவமைத்தாரென 60-குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார் . ஏப்ரல் மாதம் 30-ந்திகதி ரொறொன்ரோ மேற்கு சமூக ஜீன் வனியர் கத்தோலிக்க மேல்நிலைப்பள்ளியில் இடம்பெற்ற வெளியேற்றம் சம்பந்தமாக குறும்புத்தனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் சம்பவம் நடந்த இரண்டு நாட்களின் பின்னர் மில்ரன். ஓன்ராறியோவை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டான். சொப்பிங் சென்ரர், இரண்டு தனியார் வீடுகள் மற்றும் ஒரே பாடசாலையை இரு தடவைகள் தொலைபேசி அல்லது கணனி மூலம் இலக்கு வைத்ததாக லாவல் கியுபெக் மொன்றியல் வடக்கை சேர்ந்த 15-வயது இளைஞன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளான். மில்ரன் சம்பவத்தில் குற்றவாளி பயமுறுத்தலுக்கு திட்டமிட்டதாகவும் – பாடசாலை பகுதியில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டுள்ளது அது வெடிக்கப்போகின்றது. பரிச்சயமான ஒருவரால் இணையத்தளம் மூலம் வெளியிடப்பட்டுள்ளதென தெரியவந்துள்ளதாக சம்பவத்தை புலன்விசாரனை செய்யும் அதிகாரிகள் தெரிவத்துள்ளதாக அறியப்படுகின்றது. குறிப்பிட்ட பரிச்சயமானவர் ஒட்டாவாவை சேர்ந்த 16-வயதுடையவரென அடையாளம் கண்டுள்ளதாக புலன்விசாரனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வட அமெரிக்கா பூராகவும் இடம்பெற்ற டசின் கணக்கான சம்பவங்களுக்கும் பொறுப்பானவர் இவரென நம்புவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒட்டாவா இளைஞன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு பொதுமக்கள் குறும்பு, சொத்துக்கள் குறும்பு, கொலை மிரட்டல்கள் மற்றும் தவறான செய்திகளை அனுப்பி கலவர உணர்வை ஏற்படுத்தும் சம்பவங்களை கண்டம் முழவதிலும் ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டுள்ளன. இவரது ஈடுபாடுகள் ஒன்ராறியோ, அல்பேர்ட்டா, பென்சில்வேனியா, புளொரிடா, கலிபோர்னியா, ரெக்சஸ மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளை இலக்குவைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவரது வீட்டைச் சோதனை இட்ட அதிகாரிகள் தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், வெடிமருந்துகள், துப்பாக்கிகள் போனறனவற்றை பறிமுதல் செய்துள்ளனர் என ஒட்டாவாபோலிசார் தெரிவித்துள்ளனர். பல அதிகார எல்லைக்குட்பட்ட புலன்விசாரனையில் ஒட்டாவா போலிசாருடன் லாவல் போலிசார், கியுபெக் மாகாண போலிசார், ஹால்ரன் பிரதேச பொலிஸ், கல்கரி பொலிஸ் மற்றம் புலனாய்வு துறை அதிகாரிகளும் அடங்கியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடா மாகாணங்களில் வேலைவாய்ப்பு தட்டுப்பாடுகள் மக்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றன!

Posted: 09 May 2014 11:24 PM PDT

Open-Office

Open-Officeஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட கனடாவில் 28,900 தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன எனவும் அதே நேரம் வேலையற்றோர் விதாசாமானது 6.9ஆகவும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இந்த இழப்பு எதிர்பார்க்காமல் நடந்தேறிய சம்பவம் எனவும் கூறப்படுகின்றது. குறிப்பாக கனடாவானது 2013 டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வாறான வேலைவாய்ப்பு வீழ்ச்களைக் கனடா எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படகின்றது. கனடாவில் சில மாகாணங்களில் வேலைவாய்ப்புகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றபோது வேறு சில மாகாணங்களில் வேலைவாய்ப்புக்கள் அதிகம் காணப்படவும் செய்கின்றன. இதனால் ஒட்டாவா வேலையற்ற நிலையில் ஊழியர் காப்புறுதி நிதி பெறுபவர்களை தொழில் வழம் உள்ள இடங்களுக்கு நகரும்படி எதிர்பார்ப்பதாகவும் தெரிகிறது. அண்மிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மிய கருத்தெடுப்பின்படி கனடிய வேலையற்றோர் வீதாசாசரமானது 6.9 சதவீதமாகவிருக்கின்றது எனத் தெரியவருகிறது. கனடியப் பொருளியல் நிபுணர்கள் ஏப்பிரல் மாதத்தில் கிட்டத்தட்ட 12,000 வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்திருக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது. குறிப்பிட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட 30,900 முழு நேர தொழில்வாய்ப்புக்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதே வேளை. 2 000 எண்ணிக்கையிலான பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் உருவாகியுள்ளன எனத் தெரிய வருகிறது. கனடாவில் 27,100 தொழில்கள் 15- 24 வயது வரையுள்ள இளைஞர்கள் கையில் இருக்கும்போது 13.4 சதவீதமாக இழைஞர்கள் மத்தியில் வேலையற்றோர் தொகையிருக்கின்றது.  

This posting includes an audio/video/photo media file: Download Now

தெலுங்கில் தோல்வியடைந்த விஜயசேதுபதி படங்கள்!

Posted: 09 May 2014 02:32 AM PDT

Vijay-Sethupathi

Vijay-Sethupathiதமிழில் விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்கள் தொடர்ச்சியாக ஹிட்டடித்தன. இதனால் கோலிவுட்டில் அவரது மார்க்கெட் கிடுகிடுவென்று உயர்ந்தது. அதோடு, அவர் நடித்த படங்களின் தெலுங்கு உரிமையை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போட்டி போட்டன. அந்த வகையில், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா ஆகிய படங்களின் தெலுங்கு ரைட்ஸ் எதிர்பார்க்காத அளவுக்கு வியாபாரம் ஆனது. அதுமட்டுமின்றி, அந்த படங்களை தமிழை விடவும் பெரிய அளவில் செலவு பண்ணி தயாரித்தார்களாம். ஆனால், தமிழில் வெற்றி பெற்ற அந்த இரண்டு படங்களுமே தெலுங்கில் ஓடவில்லை. இதனால், விஜயசேதுபதி அதற்கடுத்த நடித்த படங்களில் ரைட்ஸை வாங்குவதற்கு இப்போது ஆளில்லை. அதுமட்டுமின்றி, தமிழில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தெலுங்கிலும் ஒரு கால் பதித்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த விஜயசேதுபதியும் இப்போது ஜர்க் அடித்து விட்டார். தமிழ்நாட்டு ரசிகர்களுக்குத்தான் தான் செலக்ட் பண்ணி நடிக்கிற கதைகள் பிடிக்கிறது. அதனால், அகல கால் வைக்க ஆசைப்பட வேண்டாம் என்று தெலுங்கு சினிமா ஆசையை மூட்டை கட்டி விட்டார் விஜயசேதுபதி.

This posting includes an audio/video/photo media file: Download Now

த்ரிஷா பிறந்த நாளில் மீண்டும் ஜோடியாக நயன்தாரா – சிம்பு!

Posted: 09 May 2014 02:24 AM PDT

nayan-simbu

nayan-simbuநயன்தாராவுக்கும் சிம்புவுக்கும் சண்டை, இருவரும் பேசிக் கொள்வதில்லை, சிம்புவுடன் நடிக்க நயன்தாரா ஏகத்துக்கும் கண்டிஷன் போடுகிறார் என்றெல்லாம் பொய்யாய் செய்திகளை சிலர் பரப்பிக் கொண்டிருக்க, அவர்களோ ஜோடியாய் இரவு விருந்துகளில் பங்கேற்று ஜாலியாக இருப்பதை போட்டோக்களெடுத்து ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். சமீபத்தில் சென்னையில் நட்சத்திர ஓட்டலில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் த்ரிஷா. செம சரக்குப் பார்ட்டி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் அத்தனை பேரும் ஆஜராகிவிட்டார்கள். த்ரிஷாவின் ஆஸ்தான டிசைனர் ஒருவர் இருப்பாரே.. அவரும் தவறாமல் வந்து நடிகைகளைக் கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்தார். அமலா பால், ரம்யா கிருஷ்ணன், நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா என பலரும் பங்கேற்ற இந்த விருந்துக்கு, ஜோடியாக வந்தனர் சிம்புவும் நயன்தாராவும். நெருங்கி அணைத்தபடி போஸ் கொடுத்தனர். மற்ற நடிகைகள், த்ரிஷாவின் அம்மா, மற்றும் நண்பர்களுடனும் இதே போல கட்டிப்பிடித்து போஸ் கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அங்குசம் படத்தின் இயக்குநர் மனுக்கண்ணன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

Posted: 09 May 2014 02:11 AM PDT

Director-Manukannan

Director-Manukannanஅங்குசம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான மனுக்கண்ணனை மர்ம நபர்கள் சிலர் இன்று தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையமாகக் கொண்டு, ஒரு உண்மைச் சம்பவத்தை சினிமாவாக இயக்கியிருக்கிறார் மனுக்கண்ணன். இந்தப் படத்துக்கு வரி விலக்கு பெறுவதிலேயே அரசுத் தரப்போடு மோதியவர் மனுக்கண்ணன். தமிழக அமைச்சர் ஒருவர் பணம் கேட்பதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், படம் சில தடங்கல்களைக் கடந்து இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று தன் படம் வெளியாக உள்ள அமைந்தகரை பிவிஆர் அரங்குக்குப் போய் பார்த்துவிட்டு, படத்தின் தயாரிப்பு நிர்வாகி குமரனுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அமைந்தகரை சாலை ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார் மனுக்கண்ணன். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தினர் சில மர்ம நபர்கள். தாக்கிய இருவரும் பைக்கில் வந்துள்ளனர். முகத்தில் கர்ச்சீப் கட்டியிருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. கண்ணன் மீதான தாக்குதலை தடுக்க முயன்ற டிரைவர் மற்றும் தயாரிப்பு நிர்வாகி குமரனையும் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மனுக்கண்ணன், குமரனை மற்றும் டிரைவரை பில்ரோத் மருத்துவமனையில் சேர்ர்த்துள்ளனர். பட்டப்பகலில், காலை பத்தரை மணிக்கெல்லாம் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது திரையுலகில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விஜயகாந்த் மகனுக்காக 6 மாதமாக கதாநாயகி தேடிய சகாப்தம் யூனிட்!

Posted: 09 May 2014 02:01 AM PDT

shanmuga-pandian

shanmuga-pandianவிஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் படம் சகாப்தம். இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை 12 நாட்கள் மட்டுமே நடந்துள்ளது. அதில் சண்முகப்பாண்டியன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கியுள்ளனர். முன்னதாக, கடந்த ஆறு மாதமாக அவருக்கு பொருத்தமான கதாநாயகி தேடும் படலத்தை நடத்தியிருக்கிறார்கள். காரணம், சண்முகப்பாண்டியன் 6.4 உயரம். அதனால் கிட்டத்தட்ட 5.5 அடிக்கு மேலாவது கதாநாயகி இருந்தால்தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், பல மாநிலங்களிலும் சகாப்தம் யூனிட் சல்லடை போட்டு கதாநாயகியை தேடி வந்திருக்கிறார்கள். அப்படி எங்குமே சிக்காத கதாநாயகியை தற்போதுதான் புனேயில் கண்டு பிடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, படத்தில் இரண்டு கதாநாயகிகள். ஒருவர் நகரம், இன்னொருவர் கிராமம். இரண்டுவிதமான கெட்டப்புகளுக்கும் நல்ல உயரமான நடிகையாக தேடியவர்களுக்கு இப்போது வட மாநிலத்தில் இருந்தே 5.11 அடி உயரம் அந்த இரண்டு நடிகைகளும் கிடைத்து விட்டதால் நாளை முதல் பொள்ளாச்சியில் படப்பிடிப்பு துரிதமாக தொடங்குகிறது. அதேசமயம், ஒவ்வொரு படத்திலுமே இதேமாதிரி உயரம் கொண்ட கதாநாயகி வேண்டுமென்றால் சண்முகப்பாண்டியனுக்கேற்ற கதாநாயகி தேடுவதிலேயே பாதி நேரம் போய் விடும் என்கிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கத்தி பர்ஸ்ட் லுக்கோடு பாடலையும் கேட்கும் விஜய் ரசிகர்கள்!

Posted: 09 May 2014 01:52 AM PDT

vijay

vijayதுப்பாக்கி படத்தில், ''கூகுள் கூகுள்...'' என்ற பாடலை தனது சொந்தக்குரலில் பாடிய விஜய், அதற்கடுத்து நடித்த தலைவாவில் ''வாங்கண்ணா வணக்கங்கண்ணா...'' என்ற பாடலையும் பாடியிருந்தார். அதேபோல் ஜில்லாவில் பாடிய கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலும் சூப்பர் ஹிட்டானது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக தனது படங்களில் பின்னணி பாடாமல் இருந்த விஜய், இனிமேல் படத்துக்குப்படம் பாடி விடுவது என்ற முடிவில் இருக்கிறார். மேலும், விஜய் பின்னணி பாடும் பாடல்களை மக்கள் மத்தியில் திரும்பத்திரும்ப ஒலிக்க வைத்து ஹிட் பண்ணிவிடும் அவரது ரசிகர்கள், ஒரு பாடல் என்றில்லாமல் இரண்டு பாடல்களாவது படத்துக்குப்படம் பாட வேண்டும் என்று விஜய்யை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். அதனால், இப்போது கத்தியில் ஒரு பாடலை பாடியிருக்கும் விஜய், இன்னொரு பாடலை பாடுவது பற்றி ஆலோசனையில் உள்ளாராம். மேலும், தற்போது கத்தி படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டதால், அடுத்த மாதம் பர்ஸ்ட் லுக்கை வெளியிட தயாராகிக்கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அதனால் அதை ஆவலுடன் எதிர்பார்த்திக்கும் விஜய் ரசிகர்கள், பர்ஸ்ட் லுக்கோடு விஜய் பாடிய ஒரு பாடலையும் வெளியிட வேண்டும் என்று விண்ணப்பித்து வருகிறார்களாம். அதனால் ரசிகர்கள் சார்பாக முருகதாஸிடம் தனது கோரிக்கையை முன்வைத்திருக்கிறாராம் விஜய்.

This posting includes an audio/video/photo media file: Download Now

வரப்போகுது பேஸ்புக் பணப்பரிமாற்றம்!

Posted: 09 May 2014 01:31 AM PDT

FB-banking

FB-bankingஇன்றைய உலகில் பல்வேறு சமூக வலைதளங்கள் புழக்கத்தில் இருந்தாலும், பெரும்பாலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வலைதளங்களின் வரிசையில் பேஸ்புக் முதலிடத்தில் இருந்து வருகிறது. வலைதளங்களை பயன்படுத்துபவர்களில் 80 சதவீதம் பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் கூகுள் வலைதளத்திற்கு இணையாக பேஸ்புக்கும் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி அதை இலவசமாகவும் வழங்கி வரும் பேஸ்புக் வலைதளம், தற்போது மேலும் ஒரு புதிய சேவையை துவக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், பேஸ்புக் இணையதளம் மூலம் வங்கியில் நடப்பது போல பணிப்பரிமாற்றம் செய்யும் சேவையை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவை வங்கிகள் அளிக்கும் "இன்டர்நெட் பேங்கிங்" வசதியை போன்றதாகும். இதன் மூலம் உலகின் எந்த மூலைக்கும் ஒரு நொடியில் பணத்தை அனுப்பிவிட முடியும். இந்த சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்களின் பேஸ்புக் கணக்கையே பயன்படுத்தி பணப்பரிமாற்றங்களை செய்துகொள்ளலாம். தற்போது இந்த சேவையை துவக்குவதற்கான ஆயத்த பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் இலவசமாகவே, இவ்வசதியை அனைத்து பேஸ்புக் வாடிக்கையாளர்களும் பெறலாம். பேஸ்புக் நிறுவனம் இச்சேவையை முதலில் ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தி, அங்கு கிடைக்கும் வெற்றியை பொறுத்து பிறநாடுகளிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டம் முழுமையாக வெற்றிபெற்றால் வங்கிகள் வழங்கும் அனைத்து சேவைகளையும் பேஸ்புக் மூலமாக பெறலாம். குறிப்பாக இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபின் பேஸ்புக் பயன்படுத்தும் அனைவரும் அனைத்து கட்டணங்களையும் பேஸ்புக் வலைதளத்தின் மூலமாகவே செலுத்தலாம். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் பேஸ்புக், கூகுள் நிறுவனத்தை மிஞ்சிவிடும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்களை பரபரக்க வைக்கும் உதைபந்தாட்ட விளம்பரம்… 2 நாட்களில் 3 கோடி ரசிகர்கள்!

Posted: 09 May 2014 01:21 AM PDT

Nike-Football-Winner

Nike-Football-Winner

This posting includes an audio/video/photo media file: Download Now

அம்புட்டு ருசியாவா இருக்குது இந்த முதலையின் கண்ணீர்!

Posted: 09 May 2014 12:58 AM PDT

muthalai

muthalai

This posting includes an audio/video/photo media file: Download Now

கோச்சடையானுக்கு முன் லிங்கா வந்துவிடும்! சமூக வலைத்தளங்களில் கலாட்டா!

Posted: 09 May 2014 12:38 AM PDT

kochadaiyaan

kochadaiyaanஎருதின் வலி காக்கைகளுக்குத் தெரியாது என்றொரு வழக்குச் சொல் இருக்கிறது தமிழில். கோச்சடையான் நிலை அப்படித்தான் ஆகிவிட்டது. அந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் எழுதுவதும் பேசுவதும் அப்படித்தான் இருக்கிறது. 'ஹை.. பாத்தியா.. நான் சொன்ன மாதிரி கோச்சடையான் வரல' என்ற உணர்வைப் பிரதிபலிப்பதாகவே, இவர்களின் ரியாக்ஷன் அமைந்திருக்கிறது. கோச்சடையான் மாதிரி பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படங்கள் கடைசி நேரத்தில் வெளியாகாமல் போவதில் சினிமாத் துறை சந்திக்கும் பெரு நஷ்டமோ, அந்தப் படம் மீதான ஆர்வமிழப்பு ஏற்படுத்தும் பின்னடைவுகளும் தெரியாமல் அடிக்கப்படும் கமெண்டுகள் இவை. பேஸ்புக்கில் இரு நபர்களின் உரையாடல் அதற்கு ஒரு சாம்பிள்... ஒருவர்: இல்லை தமிழ் மட்டும் தள்ளிப்போகுதா.. விக்ரமசிம்ஹா ரிலீஸ் ஆகுமில்லையா? மற்றவர்: இல்லே... எதுவும் ரிலீஸ் ஆகாது. உலக அளவில் 23-ம் தேதிக்கு தள்ளிப் போயிடுச்சி. ஒருவர்: புக்கிங் க்ளோஸ் பண்ணிட்டாங்க. இவனுங்க ஒண்ணும் ரிலீஸ் பண்ணவே வேணாம். மற்றவர்: படம் அப்படி ஒண்ணும் இல்ல போலிருக்கு.. அதான் பயந்துட்டாங்களோ.. கோச்சடாயானுக்கு முன், லிங்காவே வந்துடும் போலிருக்கு! ஒருவர்: அட ரஜினி வெறுப்பாளனே, வதந்திய கிளப்பாதே... இன்னொருவர் இப்படி கமெண்ட் அடித்திருக்கிறார்... 'தமிழகத்தில் கத்திரி வெயில் தள்ளிப் தள்ளிப் போகிறது கோச்சடையான் மாதிரி'. அதற்கு இன்னொருவர் அடித்த கமெண்ட்: கத்திரி வராமலே போகட்டும்!

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிசயப் பிறவியான ஆட்டுக்குட்டி!

Posted: 09 May 2014 12:07 AM PDT

Croatian-Goat-Born-With-8-Legs

Croatian-Goat-Born-With-8-Legs

This posting includes an audio/video/photo media file: Download Now

உனக்கு அப்படி என்னதாம்மா கோபம் அந்த பெண்ணின் மேல..

Posted: 09 May 2014 12:04 AM PDT

Girl-hits-other-girl-with-a-shovel

Girl-hits-other-girl-with-a-shovel

This posting includes an audio/video/photo media file: Download Now

இதை பார்த்தாவது அந்த கொடிய பழக்கத்தை விட்டொழிக்களாமே!

Posted: 09 May 2014 12:01 AM PDT

Heart-Touching

Heart-Touching

This posting includes an audio/video/photo media file: Download Now

நெஞ்சம் பதறவைக்கும் படு பயங்கரமான விபத்து….. வேகம் ஏற்படுத்திய விளைவு!

Posted: 08 May 2014 11:55 PM PDT

Accident

Accident

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்பெயின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் செரீனா வில்லியம்ஸ் முன்னேற்றம்!

Posted: 08 May 2014 11:48 PM PDT

serena_williams

serena_williamsஸ்பெயின் நாட்டில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் கர்லா சுவாரெஸ் நவர்ரோவுடன் (ஸ்பெயின்) நேற்று மோதிய செரீனா 6-2, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்று போட்டியில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சக வீராங்கனை லூசி சபரோவாவை வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா (போலந்து), நா லி (சீனா) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் தாமஸ் பெர்டிச் (செக்.) 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கிரிகோர் திமித்ரோவை (பல்கேரியா) வீழ்த்தினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™