Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


பெண்ணை மானபங்கப்படுத்தி 1 லட்சம் அபராதம் விதித்த கிராம பஞ்சாயத்து

Posted: 09 May 2014 11:18 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள பதல்கான் பகுதியில் ஒரு பழங்குடி ஆசிரியைக்கு கிராமப் பஞ்சாயத்தினரால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஒன்று தற்போது வெளியுலக கவனத்திற்கு வந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள பகர்கான் என்ற இடத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 35 வயதுடைய இந்த ஆசிரியையின் மருமகன் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தான்

ஆந்திராவில் ரதம் சாய்ந்து மின்சாரம் தாக்கியது: 3 பக்தர்கள் பலி

Posted: 09 May 2014 11:13 PM PDT

ஆந்திர மாநிலம் அனந்த புரம் மாவட்டத்தில் ராம்ராஜ் பள்ளி என்ற கிராமத்தில் சுங்குலம்மா என்ற கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த 7–ந்தேதி தொடங்கியது. நேற்று இரவு ரத உற்சவம் நடந்தது. சுற்றுவட்டார பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். ரதத்தில் அம்மனை எழுந்தருளச் செய்த பக்தர்கள் 7 காளைகளை பூட்டி இழுத்து வந்தனர்.

சீமாந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியை பிடிப்பது உறுதி: சந்திரசேகரராவ்

Posted: 09 May 2014 11:08 PM PDT

ஆந்திராவில் சீமாந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் தனித்தனியாக தேர்தல் நடந்தது. தெலுங்கானாவில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி கட்சி தனித்து போட்டியிட்டது. தேர்தல் நிலவரம் குறித்து தனது கட்சி நிர்வாகிகளுடன் சந்திர சேகரராவ் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வாரணாசி தொகுதியில் கெஜ்ரிவால், அருண் ஜெட்லி, அமித்ஷா வெளியேற உத்தரவு

Posted: 09 May 2014 10:50 PM PDT

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடி, ஆம் ஆத்மி கட்சி ஒருங் கிணைப்பாளர் கெஜ்ரிவால், காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். மும்முனை போட்டி நிலவும் வாரணாசியில் முக்கிய பிரதமுகர்கள் மோதிக் கொள்வதால், இங்கு பிரசாரத்தில் அனல் பறக்கிறது. நாடு முழுவதும் இருந்து வந்துள்ள பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி தொண்டர்கள் வாரணாசியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். மற்ற தொகுதிகளை விட இங்கு பிராசரம் அதிகளவில் நடந்து வருகிறது.

கேரளாவுக்கு வந்த விமானத்தில் வெடிகுண்டு சோதனையில் சிக்கிய 2 கிலோ தங்க கட்டிகள்

Posted: 09 May 2014 10:35 PM PDT

வளைகுடா நாடான துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு 'ஏர் அரேபியா' என்ற விமானம் நேற்று அதிகாலை வந்தது. அப்போது விமான நிலைய அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் மர்மநபர் ஒருவர் டெலிபோனில் பேசினார். அவர், ஏர் அரேபியா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடித்து சிதறும்

ராகுல்காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு

Posted: 09 May 2014 10:11 PM PDT

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி கடந்த 1–ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன் நகரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பா.ஜ.க.வையும், நரேந்திர மோடியையும் கடுமையாக தாக்கிப் பேசினார். ராகுல் பேசுகையில், ''பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடெங்கும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும். 22 ஆயிரம் பேர் பலியாவார்கள். இதற்கு முன்பு இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டது இல்லை'' என்றார்.

எந்த சூழ்நிலையிலும் காங்கிரசை ஆதரிக்க மாட்டோம்: ஜெகன்மோகன்

Posted: 09 May 2014 10:00 PM PDT

ஆந்திராவில் உள்ள சீமாந்திராவில் கடந்த 7–ந் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு தங்கள் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகவும், எனவே நாங்கள் ஆட்சி அமைப்போம் என்றும் தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார். ஆனால் தேர்தல் முடிவு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.

6 தேமுதிக எம்எல்ஏக்களின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 09 May 2014 09:00 PM PDT

தே.மு.தி.க. கொறடா சந்திரகுமார் உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டசபையில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகன் சட்டசபையில் முதல்-அமைச்சரை புகழ்ந்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த

ஊழல் வழக்கை சந்திக்கும் அமைச்சர்களை நீக்கக்கோரும் மனு தள்ளுபடி

Posted: 09 May 2014 08:27 PM PDT

ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்குகளில் தண்டனை பெற்ற அமைச்சர்களை அவர்களது பதவிகளில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி டிராபிக் ராமசாமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சவுகான் மற்றும் எம்.ஒய்.இக்பால் முன்பு விசாரணைக்கு வந்தது. டிராபிக் ராமசாமி சார்பில் வக்கீல் என்.ராஜாராமன்

சிறையிலிருந்து விடுதலை: எதிர்த்து கைதி தண்ணீர் தொட்டி மீது ஏறி போராட்டம்

Posted: 09 May 2014 04:59 PM PDT

கொலை வழக்கு ஒன்றில் தண்டனை பெற்ற கைதி ஒருவன் பெரேலி சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனது சிறை வாசம் முடிவடைந்ததால் சிறையிலிருந்து அவன் விடுவிக்கப்பட்டான். அவ்வாறு விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அந்த கைதி சிறையில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி போராட்டம் நடத்தி சிறை அதிகாரிகளை டென்ஷன் படுத்தினான்.

பாபா ராம்தேவ் வழக்கு விசாரணைக்கு தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Posted: 09 May 2014 04:11 PM PDT

யோகா குரு பாபா ராம்தேவ், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின் போது, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, தலித் இனத்தவரின் வீடுகளுக்கு தேனிலவு செல்வதாக கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக லக்னோ தொடங்கி பரவலாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: டெல்லி பேராசிரியர் கைது

Posted: 09 May 2014 02:26 PM PDT

டெல்லியில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜி.என். சாய்பாபாவுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி மகாராஷ்டிரா போலீசார் அவரை கைது செய்தனர். மகாராஷ்டிராவில் உள்ள மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியான கட்சிரோலியில் இருந்து வந்த காவல் துறை குழுவினர் வீல் சேரில் பயணிக்கும் சாய்பாபாவை இன்று கைது செய்துள்ளனர். அவருக்கு

அசாம் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி குத்திக்கொலை

Posted: 09 May 2014 02:17 PM PDT

அசாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் (எம்.டி. மகளிர் நலம் மற்றும் மகப்பேறு) முதல் ஆண்டு படித்து வந்தவர் டாக்டர் சரிதா. இவர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ஆஸ்பத்திரியில், தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவுப்பணி பார்த்தார். நேற்று அதிகாலை 5.30 மணி வரையில் அவர் பணியில் இருந்தார்.

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Posted: 09 May 2014 11:29 AM PDT

பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் 22000 மக்கள் கொல்லப்படுவார்கள் என்று காங்கிரஸ் துணை தலைவரான ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். இது குறித்து விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தற்போது ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள சோலன்னில் மே 1ந் தேதி நடந்த தேர்தல்

மாணவர் சுட்டுக் கொலை: முசாபர்நகரில் மீண்டும் பதட்டம்

Posted: 09 May 2014 09:18 AM PDT

உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் இன்று 10ம் வகுப்பு மாணவன் செல்போன் கடை அருகில் நின்றபோது, அவரை சில இளைஞர்கள் சுட்டுக்கொன்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. மாணவர் கொலை செய்யப்பட்டதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி

நான் டெல்லியில் இருந்தால் மோடியை சிறைக்கு அனுப்பியிருப்பேன்: மம்தா

Posted: 09 May 2014 09:09 AM PDT

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்றைய பிரச்சாரத்திலும் அவரை விட்டுவைக்கவில்லை. பெர்காம்பூரில் நடந்த பிரச்சாரத்தில் மம்தா பேசியதாவது:-

வாரணாசியின் சிறப்பு பார்வையாளராக பிரவீண்குமார் நியமனம்

Posted: 09 May 2014 08:17 AM PDT

தமிழகத்தின் தலைமையாக தேர்தல் அதிகாரியாக இருப்பவர் பிரவீண் குமார். இவரது தலைமையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிக்கும் அமைதியாக ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா போன்றவற்றை தடுப்பதற்காக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக 144 தடை உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வாரணாசி தொகுதிக்கு சிறப்பு பார்வையாளராக பிரவீண் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோடி பிரதமராவது இயலாத காரியம்: அஜய் மக்கான்

Posted: 09 May 2014 08:06 AM PDT

மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை பா. ஜனதாவுக்கு எக்காரணம் கொண்டும் ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் நரேந்திரமோடி பிரதமராவது இயலாத காரியம். பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து போதுமான இடங்களை பிடிக்காது என்று காங்கிரசை சேர்ந்த அஜய் மக்கான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்

சீட்டு நிறுவன மோசடியை சி.பி.ஐ. விசாரித்தால் எனக்கு என்ன? மம்தா ஆவேசம்

Posted: 09 May 2014 07:49 AM PDT

மேற்கு வங்காள மாநிலத்தில் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணைக்கு நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வந்த மேற்கு வங்காள அரசுக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இந்த உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்த உத்தரவை பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.

கொல்கத்தாவில் புத்த மடத்தை வாக்குச்சாவடியாக பயன்படுத்த துறவிகள் எதிர்ப்பு

Posted: 09 May 2014 06:27 AM PDT

கொல்கத்தாவின் பௌபசார் பகுதியில் உள்ள புத்த தர்மங்கர் சபா 117 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. இதனுள் ஒரு சிறிய பள்ளியும் செயல்பட்டு வருகின்றது. இந்தப் பள்ளி முதன்முறையாக வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்குசாவடியாக பயன்படுத்தப்பட உள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™