Tamil News | Online Tamil News |
- தேர்தலில் ஊழல் முக்கிய பிரச்னை: மோடி பேட்டி
- பெரியாறில் 142 அடியாக உயர்த்த ஆயத்தம்: அரசாணை வெளியிடும் பணிகள் துரிதம்
- பெண்கள் ஓட்டு குறைவால் கட்சியினர் குழப்பம்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
- தாமதமின்றி தக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்: கருணாநிதி
- கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி
- குஜராத்தில் என்கவுன்டர்கள் குறைவு; உ.பி.,யில் அதிகம் : விசாரிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
- 'பென் டிரைவ்' மூலம் கனிமொழி வாக்குமூலம்:'2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கு விசாரணை விறு விறு
- பங்களாவை காலி செய்யாத 'மாஜி'க்கள் 22 பேர்
- சுயநல அரசியல்வாதி: மம்தா மீது ராகுல் தாக்கு
- வாரணாசி நகரில் பிரதமர் வேட்பாளர் மோடி கலக்கினார்: லட்சக்கணக்கானோருடன் பிரமாண்ட பேரணி
- பிளஸ் 2 ரிசல்டை எதிர்பார்த்து 8 லட்சம் மாணவர்கள் ஆவல்: பள்ளிகள், இன்டர்நெட்டில் இன்று காலை வெளியீடு
| தேர்தலில் ஊழல் முக்கிய பிரச்னை: மோடி பேட்டி Posted: புதுடில்லி: இந்த தேர்தலில் ஊழல் முக்கிய பிரச்னை எனவும், நாட்டின் கருவூலத்தின் முதல் உரிமை ஏழை மக்களுக்கு தான் உள்ளது எனவும் பா.ஜ.,பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.இது தொடர்பாக தனியார் டிவிக்கு நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் அரசியல் கருத்துகளுக்கு செவி சாய்ப்பதில்லை; முக்கியமான பிரச்சனைகளின் மீது மட்டுமே என் கவனம் இருக்கும். பணவீக்கம் பற்றி ஆளும் கட்சியினருக்கு அக்கறை இல்லை. அதன் உறுப்பினர் யாரும் ஒருமுறை கூட பணவீக்கம் பற்றி வெளிப்படையாக பேசவில்லை. மோடிக்காக ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் தொந்தரவு ... |
| பெரியாறில் 142 அடியாக உயர்த்த ஆயத்தம்: அரசாணை வெளியிடும் பணிகள் துரிதம் Posted: கம்பம் : முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கான அரசாணையை வெளியிட, தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அணையில் மதகுகளை (ஷட்டர்) இறக்க பொதுப்பணித்துறையினர் ஆயத்தமாகி வருகின்றனர்.முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக, கடந்த 1979 முதல் கேரளா முரண்டு பிடித்து வருகிறது. பல சட்டரீதியான போராட்டங்களை தமிழகம் நடத்தி, இறுதியில் வெற்றி கண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், 'பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்' என, உத்தரவிட்டது.இந்நிலையில் தீர்ப்பின் ... |
| பெண்கள் ஓட்டு குறைவால் கட்சியினர் குழப்பம்: யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? Posted: கோவை:லோக்சபா தேர்தலில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள நான்கு லோக்சபா தொகுதிகளில் பெண்கள் ஓட்டு சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது. பெண்கள் ஓட்டுப்போட முன்வராதது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் அரசியல் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை துவக்கி, 39 லோக்சபா தொகுதியிலும், அரசின் சாதனைகளை விளக்கியும், தி.மு.க., காங்., மற்றும் பா.ஜ., கட்சிகளை விமர்சனம் செய்தும் விளாசித்தள்ளினார். அதற்கேற்ப, கிராமப்பகுதிகளில், விலையில்லா கறவை மாடு, ஆடு, தாலிக்கு ... |
| தாமதமின்றி தக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்: கருணாநிதி Posted: சென்னை:'முல்லை பெரியாறு பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில், முதல்வர் ஜெயலலிதா தாமதமின்றி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:முல்லை பெரியாறு பிரச்னைகளில், தமிழகத்தின் உரிமைகளை பெற, எந்தவிதமான நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை என்றும், கேரள அரசின் சட்டத் திருத்தத்திற்கு நான் மதிப்பளித்தேன் என்றும், கடைந்தெடுத்த பொய்யை முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார்.பெரியாறு, வைகை, பாசன நீர் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் புத்திசிகாமணி வெளியிட்ட அறிக்கையில், 'முல்லை பெரியாறு அணையின் ... |
| கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி Posted: புதுடில்லி:கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சுப்ரீம் கோர்ட், நேற்று தள்ளுபடி செய்தது. 'மேலும், அணு உலையின் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்கு, புதிதாக குழு எதையும் அமைக்க வேண்டிய அவசியமில்லை' என்றும், கோர்ட் உத்தரவிட்டுள்ளது.மின்சார உற்பத்தி தமிழகத்தின் நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில், மின்சார உற்பத்திக்காக, ரஷ்யாவின் உதவியுடன், அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடை, போராட்டங்கள், சட்டப் பிரச்னைகளை கடந்து, தற்போது, அங்கு வெற்றிகரமாக மின்சார உற்பத்தி துவங்கியுள்ளது.இதற்கிடையே, 'பூவுலகின் ... |
| Posted: புதுடில்லி: கடந்த பத்தாண்டுகளில், நாடு முழுவதும் நடந்த, "போலீஸ் என்கவுன்டர்' சம்பவங்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற, குஜராத் மாநில அரசின் கோரிக்கையை, சுப்ரீம் கோர்ட் நேற்று நிராகரித்தது.போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகள் அல்லது போலீசாரை தாக்க முனைபவர்களை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதை, என்கவுன்டர் என்கின்றனர்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் மாநில அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. அதில், நாடு முழுவதும், கடந்த பத்தாண்டுகளில், போலீசாரால் ... |
| 'பென் டிரைவ்' மூலம் கனிமொழி வாக்குமூலம்:'2ஜி ஸ்பெக்ட்ரம்' வழக்கு விசாரணை விறு விறு Posted: முன்னாள் அமைச்சர் ராஜாவைத் தொடர்ந்து, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யான கனிமொழியும், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், தன் வாக்குமூலத்தை, 'பென் டிரைவ்'வில் எடுத்து வந்து, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் அளித்தார்.'2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., அறிக்கை அளித்தது. சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., மத்திய தொலை தொடர்பு துறை முன்னாள் அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான ராஜா, அந்த கட்சியின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் பல்வேறு தொலை ... |
| பங்களாவை காலி செய்யாத 'மாஜி'க்கள் 22 பேர் Posted: புதுடில்லி:மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகி, பல ஆண்டுகள் ஆன பிறகும், 22 முன்னாள் அமைச்சர்கள், டில்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாக்களை காலி செய்யாமல், தொடர்ந்து குடியிருந்து வருகின்றனர்.மத்திய அமைச்சர்கள், அமைச்சகங்களின் செயலர்கள் போன்றோருக்கு, டில்லி, லுட்யன்ஸ் பகுதியில், பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன. அவரவர் தகுதிக்கு ஏற்ப, குறைந்தபட்சம் மூன்று படுக்கையறைகள் முதல், எட்டு படுக்கையறைகள் வரை உள்ள பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன. பரப்பளவு, வசதி, சொகுசு போன்றவற்றின் அடிப்படையில், 'டைப் 1' முதல், 'டைப் 10' வரை, பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன. ... |
| சுயநல அரசியல்வாதி: மம்தா மீது ராகுல் தாக்கு Posted: கோல்கட்டா:''திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவும், அவரின் கட்சியினரும், சுயநலமாக செயல்படுகின்றனர்; மக்களுக்காக, அவர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை,'' என, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் பேசினார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தம் உள்ள, 42 லோக்சபா தொகுதிகளில், 25 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. மீதமுள்ள, 17 தொகுதிகளுக்கு, இம்மாதம், 12ல், தேர்தல் நடக்கவுள்ளது.இந்த தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, டெப்ரா என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில், ... |
| வாரணாசி நகரில் பிரதமர் வேட்பாளர் மோடி கலக்கினார்: லட்சக்கணக்கானோருடன் பிரமாண்ட பேரணி Posted: வாரணாசி:உ.பி.,யில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பிரசார கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, நேற்று வாரணாசியை கலக்கும் வகையில், லட்சக்கணக்கான கட்சி தொண்டர்களுடன், அவர், பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார்.தேர்தல்சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உ.பி.,யின் வாரணாசி தொகுதியிலும், குஜராத்தின் வதோதரா தொகுதியிலும் மோடி போட்டியிடுகிறார். வதோதரா தொகுதியில், தேர்தல் முடிந்துள்ள நிலையில், வாரணாசியில், இம்மாதம் 12ல், தேர்தல் நடைபெற உள்ளது.நேற்று அவர், பெனியாபாக் மற்றும் ரோஹனியா என்ற இரண்டு ... |
| பிளஸ் 2 ரிசல்டை எதிர்பார்த்து 8 லட்சம் மாணவர்கள் ஆவல்: பள்ளிகள், இன்டர்நெட்டில் இன்று காலை வெளியீடு Posted: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. இன்று காலை, 10:00 மணிக்கு, தேர்வுத் துறை இணையதளங்கள் மற்றும் பள்ளிகளில் வெளியிடப்படும், பிளஸ் 2 தேர்வு முடிவை எதிர்பார்த்து, 8 லட்சம் மாணவ, மாணவியர், ஆவலுடன் உள்ளனர்.மார்ச், 3ம் தேதி முதல், 25ம் தேதி வரை, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்த்து, 2,242 மையங்களில் நடந்த தேர்வுகளில், 8.26 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்களில், 3.8 லட்சம் பேர், மாணவர்கள்; 4.45 லட்சம் பேர், மாணவியர்.பி.இ., சேர்க்கை மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம், மாநிலம் முழுவதும் பரபரப்பாக விற்பனை ஆகி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 09,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |