Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஹைதராபாதிடம் ராஜஸ்தான் சுருண்டது

Posted: 08 May 2014 01:53 PM PDT

ஐபிஎல் தொடரின் 30-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வீழ்த்தியது. இதன்மூலம் இத்தொடரில் 3-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது ஹைதராபாத்.

ஒவ்வொரு மேஜைக்கும் விடியோ கேமரா: திமுக வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம்

Posted: 08 May 2014 01:49 PM PDT

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு விடியோ கேமரா வைக்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்றுக் கொண்டு திமுகவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 08 May 2014 01:49 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

புதுகையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

Posted: 08 May 2014 01:31 PM PDT

 புதுக்கோட்டை நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீஸார் திடீர்

குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல்

Posted: 08 May 2014 01:31 PM PDT

புதுக்கோட்டை நகராட்சி பிள்ளைதண்ணீர்பந்தல் பகுதியில் குடிநீர் கோரி பொதுமக்கள் நூற்றுக்கும் அதிகமானோர் வியாழக்கிழமை இரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

13 உள்ளாட்சிப் பதவிகளுக்கு மே 18-இல் தேர்தல்

Posted: 08 May 2014 01:31 PM PDT

தமிழகத்தில் காலியாக உள்ள 13 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி மீது வழக்கு

Posted: 08 May 2014 01:31 PM PDT

தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் எஸ். ரவிச்சந்திரன், கீழவாசல் டபீர் குளம் சாலை பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலை. வேந்தருக்கு நிபந்தனை ஜாமீன்

Posted: 08 May 2014 01:31 PM PDT

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரேஷன் அரிசி கடத்தல்: ஆலை உரிமையாளர் கைது

Posted: 08 May 2014 01:31 PM PDT

தஞ்சாவூரில் மினி வேனில் கடத்தப்பட்ட 1.50 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்த சம்பவத்தில் அரிசி ஆலை உரிமையாளரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது

அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி மீது வழக்கு

Posted: 08 May 2014 01:30 PM PDT

தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் எஸ். ரவிச்சந்திரன், கீழவாசல் டபீர் குளம் சாலை பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பி.ஏ., பி.எல். படிப்புக்கு மே 12 முதல் விண்ணப்பம்: தொலை கல்வியில் புதிதாக 5 படிப்புகள் அறிமுகம்

Posted: 08 May 2014 01:30 PM PDT

பி.ஏ., பி.எல்., பி.ஏ., பி.எல். (ஹானர்ஸ்), பி.காம்.பி.எல். (ஹானர்ஸ்) உள்ளிட்ட படிப்புகளுக்கு மே 12 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

நகைகள் திருட்டு

Posted: 08 May 2014 01:30 PM PDT

தஞ்சாவூரில் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள் திருடப்பட்டது புதன்கிழமை தெரிய வந்தது. தஞ்சாவூர் காவேரி நகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கே. வாஞ்சீஸ்வரன் (59). இவர் மே 2-ம் தேதி

காலமானார் அ. சிதம்பரம்

Posted: 08 May 2014 01:30 PM PDT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் செயலர் அ. சிதம்பரம் (62), ஒரத்தநாடு அருகிலுள்ள பூவாத்தூரில் மே 7-ம் தேதி காலமானார்.

குடந்தை ரயில் நிலையத்தில் புதிய அதிகாரிகளுக்கு பயிற்சி

Posted: 08 May 2014 01:30 PM PDT

தென்னக ரயில்வேயில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உதவி நிலைய மேலாளர்களுக்கு கும்பகோணம் ரயில் நிலையத்தில் செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஓஎன்ஜிசி மைதானத்தில் கைப்பந்து போட்டி இன்று தொடக்கம்

Posted: 08 May 2014 01:29 PM PDT

காரைக்கால் ஓஎன்ஜிசி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் கைப்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை (மே 9) தொடங்குகிறது.

காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வரை முற்றுகையிட்ட ஊழியர்கள்

Posted: 08 May 2014 01:29 PM PDT

காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வரை ஊழியர்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு வரும் வேளாண் செயலருக்கு கருப்புக் கொடி காட்டவும் ஊழியர்கள் முடிவு

அரசலாற்றில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்க வலியுறுத்தல்

Posted: 08 May 2014 01:28 PM PDT

காரைக்காலில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி உள்ளிட்டவற்றின் கழிவுகளை அரசலாற்றில் கொட்டப்படுவதை தடுத்து, அவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மாநில வலுதூக்கும் போட்டி: மயிலாடுதுறை மாணவர்களுக்கு பதக்கம்

Posted: 08 May 2014 01:28 PM PDT

மாநில அளவிலான டெட் லிப்ட் வலுதூக்கும் போட்டிகளில் மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மாணவர்கள் பதக்கங்கள் வென்றனர்.

பெயர்களை உதிர்ப்பவர்கள்

Posted: 08 May 2014 01:27 PM PDT

ஸ்ரீராமநவமி உற்சவத்தின்போது ஒரு கோயிலில் பிரபல பாடகரின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். எனக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தானாக வலிய பேச ஆரம்பித்தார்.

"வெற்றி பெற தெளிவான சிந்தனை அவசியம்'

Posted: 08 May 2014 01:27 PM PDT

வெற்றியை ஒட்டுமொத்தமாக பெற வேண்டுமானால் தெளிவான சிந்தனை வேண்டும் என்றார் கரூர் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி.

மாவட்டத்தில் 3வது நாளாக பரவலாக மழை

Posted: 08 May 2014 01:27 PM PDT

கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை வரை பரவலாக மழை பெய்தது. அணைப்பாளையத்தில் மட்டும் புதன்கிழமை 51.20 மி.மீ., மழை பதிவானது.

அரசு பெண் ஊழியரிடம் நூதன முறையில் ரூ. 40,000 திருட்டு

Posted: 08 May 2014 01:27 PM PDT

கரூர் அருகே அரசு பெண் ஊழியரிடம் வியாழக்கிழமை நூதன முறையில் ரூ. 40,000 திருடிய பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.

பயங்கரவாதத்தை வதம் செய்வோம்

Posted: 08 May 2014 01:27 PM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1948லிருந்து இந்தியா பாகிஸ்தானிடையே பிரச்னை துவங்கி, வளர்ந்து பெரிதாகிக் கொண்டே போகிறது.

சாலையோரம் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனங்கள் திருட்டு

Posted: 08 May 2014 01:27 PM PDT

கரூரில் இருவேறு இடங்களில் சாலையோரம் நிறுத்தியிருந்த 2 இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் புதன்கிழமை திருடிச்சென்றனர்.

தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 08 May 2014 01:26 PM PDT

தொழிலாளியை அரிவாளால் வெட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வியாழக்கிழமை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இளைஞர் கைது

Posted: 08 May 2014 01:26 PM PDT

கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியதாக இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பயமுறுத்தும் "எல் நினோ'!

Posted: 08 May 2014 01:26 PM PDT

பசிபிக் பெருங்கடலில் "எல் நினோ' உருவாகி வருகிறது என்பதும் அதன் தாக்கம் இந்தியாவை பாதிக்கும் என்பதும் நம்மைக் கவலைப்பட வைக்கிறது.

தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

Posted: 08 May 2014 01:26 PM PDT

கரூர் தாந்தோணி ஒன்றியம் ஆண்டாங்கோயில்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 52-ம் ஆண்டு விழா மற்றும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஆகியவை அண்மையில் நடைபெற்றது.

அரசு மதுபானகடைகளுக்கு மே 16-ல் விடுமுறை

Posted: 08 May 2014 01:25 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் மே 16-ம் தேதி அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது.

இன்று புனித சூசையப்பர் கோயில் தேரோட்டம்

Posted: 08 May 2014 01:25 PM PDT

பாளையம் புனித சூசையப்பர் கோயில் திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை (மே 9) நடைபெறுகிறது.

பெரம்பலூர்மாவட்டத்தில் 55.60 மி.மீ., மழை

Posted: 08 May 2014 01:25 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 55.60 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

தொழிலாளர் மேலாண்மை பட்டய, பட்டப் படிப்பில் சேர அழைப்பு

Posted: 08 May 2014 01:25 PM PDT

தொழிலாளர் மேலாண்மை பட்டய, பட்டப் படிப்பில் சேர அழைப்பு விடுத்துள்ளார் தொழிலாளர் ஆய்வாளர் விஸ்வநாதன்.

வேட்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மறு வாக்குப் பதிவு தேதி மாற்றம்: பிரவீண்குமார் தகவல்

Posted: 08 May 2014 01:24 PM PDT

சேலம் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியதால், மறுவாக்குப் பதிவு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.

தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு கூட்டம்

Posted: 08 May 2014 01:24 PM PDT

பெரம்பலூர் மாவட்ட கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் தொடர்பான சிறப்பு கூட்டம் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை

முல்லைபெரியாறு தீர்ப்பு: அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 08 May 2014 01:24 PM PDT

முல்லைப்பெரியாறு பிரச்னையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் வியாழக்கிழமை பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வாகன விதிமுறை மீறல்: 81 பேர் மீது வழக்கு

Posted: 08 May 2014 01:24 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் வாகன விதிமுறைகளை மீறியதாக புதன்கிழமை 81 பேர் மீது வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

பேப்பர் கடையில் பணம் திருடியவர் கைது

Posted: 08 May 2014 01:23 PM PDT

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் பேப்பர் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து பணம் திருடியவரை போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.

நாகமங்கலம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் ஜூன் 8-ல் குடமுழுக்கு

Posted: 08 May 2014 01:23 PM PDT

அரியலூர் மாவட்டம், நாகமங்கலம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஜூன் 8-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்குள் தகராறு: 5 பேர் மீது வழக்கு

Posted: 08 May 2014 01:23 PM PDT

அரியலூரில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சாலை விபத்தில் இளைஞர் காயம்; பேருந்து ஓட்டுநர் கைது

Posted: 08 May 2014 01:23 PM PDT

அரியலூர் அருகே புதன்கிழமை பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் காயமடைந்தார்.

அரியலூரில்திருமணம் செய்து கொள்ளுவதாகக் கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது

Posted: 08 May 2014 01:22 PM PDT

அரியலூரில் திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்தவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

குளத்தூரில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

Posted: 08 May 2014 01:22 PM PDT

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள குளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்க டிஜிட்டல் தகவல் பலகை

Posted: 08 May 2014 01:20 PM PDT

புதுகை தமிழ்நாடு வேளாண்மை விற்பனைக் குழு அலுவலகத்தில் ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் தகவல் பலகை விவசாயிகளுக்கு சிறந்த முறையில் பயனளித்து வருகிற

உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளம் மதிக்க வேண்டும்: அமைச்சர் நாராயணசாமி

Posted: 08 May 2014 01:19 PM PDT

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு மதிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்தார்.

கந்தர்வகோட்டையில் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க கோரிக்கை

Posted: 08 May 2014 01:19 PM PDT

கந்தர்வகோட்டையில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோடைகாலப் பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ்

Posted: 08 May 2014 01:19 PM PDT

கலை பண்பாட்டுத் துறை சார்பில், புதுக்கோட்டை ஜவகர் சிறுவர் மன்றத்தில் நடைபெற்ற கோடைகாலப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுகை அருகே குளத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி சாவு

Posted: 08 May 2014 01:19 PM PDT

புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள குளத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாளியின் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை 425 பேரின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு

Posted: 08 May 2014 01:19 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3-வது நாளாக வியாழக்கிழமை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

ராயவரத்தில் முந்திரி தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்

Posted: 08 May 2014 01:18 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி ராயவரத்தில் முந்திரித் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுகையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

Posted: 08 May 2014 01:18 PM PDT

புதுக்கோட்டை நகரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீஸார் திடீர்

சிபிஐ முதல் பெண் கூடுதல் இயக்குநராக அர்ச்சனா ராமசுந்தரம் பொறுப்பேற்பு

Posted: 08 May 2014 01:18 PM PDT

மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கூடுதல் இயக்குநராக தமிழக பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் (56) வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இதையொட்டி, அவருக்கு சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, சிபிஐ உயரதிகாரிகள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பெற்றோர்-குழந்தைகள் உறவு மேம்பட பயிலரங்கு

Posted: 08 May 2014 01:17 PM PDT

புதுக்கோட்டை ஜேசிஐ சென்ட்ரல் சங்கம் மற்றும் ஆத்மா யோகா மையம் ஆகியவை இணைந்து நடத்திய பெற்றோர்-குழந்தைகள் உறவு மேம்பாடு குறித்த பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.

பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு சேர்க்கை: மே 13 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 08 May 2014 01:17 PM PDT

பி.இ., பி.டெக்., இரண்டாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 13 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது

Posted: 08 May 2014 01:17 PM PDT

புதுக்கோட்டையில் 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குடந்தை பொருட்காட்சியின் முகப்பு சரிந்து விழுந்தது

Posted: 08 May 2014 01:16 PM PDT

கும்பகோணத்தில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பொருட்காட்சியின் முகப்பு சரிந்தது. பொதுமக்கள் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வீடு இடிந்து பெண் காயம்

Posted: 08 May 2014 01:16 PM PDT

தஞ்சாவூரில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் லேசான பாதிப்பு ஏற்பட்டது.

வடிகால் வசதி கோரி சாலை மறியல்

Posted: 08 May 2014 01:16 PM PDT

கும்பகோணத்தில் வடிகால் வசதி கோரி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கும்பகோணம் மேலக்காவேரியில் பெருமாண்டி மாரியம்மன் கோயில் கள்ளர்தெரு உள்ளது. இங்கு

தாண்டவந்தோட்டம் கோயில் பாரிவேட்டை

Posted: 08 May 2014 01:16 PM PDT

கும்பகோணம் அருகே தாண்டவந்தோட்டம் ஸ்ரீ முத்து வேலாயுத சுவாமி திருக்கோயில் பிரம்மோத்சவ விழாவில் வியாழக்கிழமை கொட்டும் மழையில் பாரிவேட்டை திருவிழா நடைபெற்றது.

திருவாரூர், நாகை, காரைக்காலில் தொடர் மழை

Posted: 08 May 2014 01:15 PM PDT

திருவாரூரில் புதன்கிழமை மாலையிலிருந்து இடைவிடாமல் இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் அதிகபட்சமாக குடவாசலில் 102.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருணாநிதி

Posted: 08 May 2014 01:15 PM PDT

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

சீர்காழியில் முளைப்பாலி திருவிழா

Posted: 08 May 2014 01:15 PM PDT

உலக நன்மைக்காக சீர்காழி ஏழைகாத்த அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று, புதன்கிழமை இரவு முளைப்பாலி எடுத்தனர்.

"மற்றவர்களுக்கு வேலை வழங்கும் நிலைக்கு உயர வேண்டும்

Posted: 08 May 2014 01:15 PM PDT

மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்காமல், தங்களால் பலரும் வேலைவாய்ப்புப் பெறும் நிலைக்கு உயருவதை லட்சியமாக ஏற்க வேண்டும் என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து.

ஆலங்குடி குருபரிகார கோயிலில் இன்று திருக்கல்யாணம்

Posted: 08 May 2014 01:14 PM PDT

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் சித்திரைப் பெருவிழாவின் 7-ம் நாளான வெள்ளிக்கிழமை இரவு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

முல்லைப் பெரியாறு அணை தீர்ப்பை கண்டித்து இடுக்கி மாவட்டத்தில் பந்த்

Posted: 08 May 2014 01:14 PM PDT

முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டித்து, கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சமர சமதி என்ற அமைப்பின் சார்பில், வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர்

Posted: 08 May 2014 01:14 PM PDT

புதுக்கோட்டை

Posted: 08 May 2014 01:13 PM PDT

ரயில்வே காவல் நிலையத்தில்: இளைஞர் மர்மச் சாவு: 5 போலீஸார் சஸ்பெண்ட்

Posted: 08 May 2014 01:04 PM PDT

விழுப்புரம் ரயில்வே காவல் நிலையத்தில் இளைஞர் மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக அந்தக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உள்பட 5 ரயில்வே போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு: சட்ட ரீதியாக அனுமதி பெற்றுத்தர அரசுக்கு வேண்டுகோள்

Posted: 08 May 2014 01:03 PM PDT

ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி, சட்டரீதியாக அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த பயமா? 104-ஐ அழைக்கலாம்

Posted: 08 May 2014 01:00 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் குறித்த பயமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் 104 சேவை எண்ணை அழைத்து ஆலோசனை பெறலாம்.

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: ரயில்கள் தாமதம்

Posted: 08 May 2014 12:59 PM PDT

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, அவ்வழியே சென்ற மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விரிசல் சரி செய்யப்பட்ட பிறகு, சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.

17 அரசு செவிலியர் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி

Posted: 08 May 2014 12:59 PM PDT

தமிழகத்தில் 17 அரசு நர்சிங் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங்க கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்

Posted: 08 May 2014 12:58 PM PDT

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அர்ச்சனா ராமசுந்தரம் சஸ்பெண்ட்

Posted: 08 May 2014 12:58 PM PDT

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத் தலைவர் டிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்தை வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து மாநில தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெடிகுண்டு மிரட்டல்: 2 பேர் கைது

Posted: 08 May 2014 12:55 PM PDT

மதுரையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ராமநாதபுரத்தில் பெண் கைது: ரூ.12 லட்சம், 3 கிலோ கஞ்சா பறிமுதல்

Posted: 08 May 2014 12:54 PM PDT

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வியாழக்கிழமை அதிகாலையில் போலீஸார் நடத்திய சோதனையில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.12.66 லட்சம் ரொக்கம் மற்றும் 3 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

2ஜி: தயாளு அம்மாளுக்கு தெரிந்தே ரூ. 200 கோடி பரிவர்த்தனை: கலைஞர் டிவி சரத்குமார் வாக்குமூலம்

Posted: 08 May 2014 12:53 PM PDT

கலைஞர் டிவிக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் நடைபெற்ற ரூ. 200 கோடி மதிப்பிலான நிதிப் பரிவர்த்தனை அந் நிறுவனத்தின் 60 சதவீத பங்குதாரரான தயாளு அம்மாளுக்கு தெரிந்தே நடைபெற்றது என்று கலைஞர் டிவி முன்னாள் மேலாண் இயக்குநர் சரத்குமார் சிபிஐ நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்தார்.

திரிபுரா தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்க வலியுறுத்தல்

Posted: 08 May 2014 12:48 PM PDT

திரிபுரா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அஷுதோஷ் ஜிண்டால் பாரபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரை நீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் உள்பட அந்த மாநிலத்தில் உள்ள நான்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

நிலக்கரிச் சுரங்க முறைகேடு விசாரணை: மூத்த அதிகாரியை மாற்றியது சிபிஐ

Posted: 08 May 2014 12:47 PM PDT

நிலக்கரிச் சுரங்க முறைகேடு வழக்கை விசாரித்து வந்த சிபிஐ இணை இயக்குநர் ஓ.பி. கல்ஹோத்ரா மாற்றப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்துள்ளார்.

மோடி பிரதமராவதை தடுப்பேன்: லாலு

Posted: 08 May 2014 12:47 PM PDT

"பிகார் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தியதுபோல், அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடி பிரதமராவதையும் தடுத்து நிறுத்துவேன்' என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து தர்னா: பாஜகவுக்கு காங்கிரஸ் கண்டனம்

Posted: 08 May 2014 12:46 PM PDT

தேர்தல் ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக பாஜகவுக்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புரி ஜகந்நாதர் ரதங்களை உருவாக்க மரக்கட்டைகளுக்குத் தட்டுப்பாடு

Posted: 08 May 2014 12:45 PM PDT

புரி ஜகந்நாதர் வருடாந்திர ரத யாத்திரை ஜூன் 29ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, 3 தேர்களை உருவாக்கத் தேவைப்படும் பெரிய மரக்கட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஸ்ரீ ஜகந்நாதர் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தேர்தல் வன்முறை

Posted: 08 May 2014 12:41 PM PDT

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்ததாகவும், 12 வீடுகள் சேதமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

4-வது முறையாக ஆட்சி: நவீன் நம்பிக்கை

Posted: 08 May 2014 12:40 PM PDT

பிஜு ஜனதா தளத்துக்கு இம்முறை பெரும்பான்மை கிடைக்காது என மாநில உளவுப் பிரிவின் தகவல் மற்றும் பல கருத்துக் கணிப்புகள் தெரிவித்தபோதிலும், 4-வது தடவையாக இந்த முறையும் ஆட்சி அமைப்பதில் கட்சியின் தலைவரும் முதல்வருமான நவீன் பட்நாயக் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செங்கம்: ஏரி, கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Posted: 08 May 2014 12:38 PM PDT

செங்கம் பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான ஏரி, கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தூர் வாரப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தனிநபர் கழிவறை கட்டுதல்: ஆய்வுக் கூட்டம்

Posted: 08 May 2014 12:38 PM PDT

தனிநபர் கழிவறை கட்டுதல் பற்றிய ஆய்வுக் கூட்டம்  போளூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. போளூர் ஒன்றியத்தில் 35 ஆயிரத்து 427 குடியிருப்புகள் உள்ளன.

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு

Posted: 08 May 2014 12:38 PM PDT

செய்யாறில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல்களை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் புதன்கிழமை திறந்துவைத்தார்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Posted: 08 May 2014 12:37 PM PDT

மக்களவைத் தேர்தலில் தமக்கு ஆதரவு அளிக்குமாறு தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வகையில், பாதிரியார்கள் மற்றும் பிஷப்புகளுக்கு கோரிக்கை விடுத்ததாக ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தும்கா தொகுதி வேட்பாளருமான பாபுலால் மராண்டியை தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தேர்தல் ஆதாயத்துக்காக பாஜக, சமாஜவாதி நாடகம்: மாயாவதி

Posted: 08 May 2014 12:37 PM PDT

வாராணசியில் தேர்தல் ஆதாயத்துக்காக பாஜகவும், சமாஜவாதியும் நாடகமாடுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர் வழிகாட்டி நிகழ்ச்சி ஆலோசனைக் கூட்டம்

Posted: 08 May 2014 12:36 PM PDT

மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினருக்குப் பயிற்சி

Posted: 08 May 2014 12:36 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த பூண்டி ஊராட்சியில் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

சீமாந்திரத்தில் தேர்தல் வன்முறை: போலீஸ் உள்பட 12 பேர் காயம்

Posted: 08 May 2014 12:36 PM PDT

சீமாந்திரத்தில் நடைபெற்ற தேர்தலின்போது இரு வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரும் மோதிக் கொண்டதில் போலீஸ்காரர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கோரி தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 08 May 2014 12:35 PM PDT

செய்யாறு அருகே விபத்தில் இறந்த இரு தொழிலாளர்கள் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரி, தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ் காந்தி குறித்து விமர்சனம்: மோடியின் கீழ்த்தரமான சிந்தனை அரசியலுக்கு உகந்தது அல்ல: சோனியா

Posted: 08 May 2014 12:35 PM PDT

"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மறைந்து 23 ஆண்டுகளுக்கு பிறகு, அவரை விமர்சித்துள்ள மோடியின் கீழ்த்தரமான சிந்தனை அரசியலுக்கு உகந்ததல்ல' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

பைக்-கார் மோதல்: 2 பேர் சாவு

Posted: 08 May 2014 12:35 PM PDT

பேர் சாவுஆரணி, மே 8: சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில், 2 பேர் இறந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த மானாமதியைச் சேர்ந்த தேசிங்கு மகன் மின்வாரிய

உலக செஞ்சிலுவை தின விழா: தீயணைப்பு வீரர்களுக்குப் பாராட்டு

Posted: 08 May 2014 12:35 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செஞ்சிலுவை தின விழாவில், சிறப்பாகப் பணிபுரிந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

தீபம் ஏற்றும் மலையில் தீ விபத்துகள் தடுக்கப்படுமா?

Posted: 08 May 2014 12:34 PM PDT

திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றும் மலையில் அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளை முற்றிலும் தடுக்க, வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்களிடையே வலுத்துள்ளது.

சிறுமி கொலை: தந்தை கைது

Posted: 08 May 2014 12:34 PM PDT

சாத்தனூர் அருகே சிறுமியை கொலை செய்ததாக, தந்தை கைது செய்யப்பட்டார். சாத்தனூர் அருகேயுள்ள ஜி.குப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி (35). இவர்

துணி வியாபாரி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

Posted: 08 May 2014 12:34 PM PDT

திருவண்ணாமலை அருகே துணி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், டிவியைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கால்டுவெல் பிறந்த நாள் விழா

Posted: 08 May 2014 12:33 PM PDT

திருவண்ணாமலை கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழ் அறிஞர் கால்டுவெல்லின் 200-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

ஊதியம் கேட்டு தொழிலாளர்கள் மறியல்

Posted: 08 May 2014 12:33 PM PDT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், சேத்துப்பட்டு ஒன்றியத்துக்குள்பட்ட ஓதலவாடி கிராமத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதியம் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™