Daily Thanthi |
- வாரணாசி பா.ஜனதா சார்பில் தர்ணா - 05
- சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் - 01
- ரெயில்வே தண்டவாளத்தில் மரம் - 04
- மோடி உயர்சாதி வகுப்பை சேர்ந்தவர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி - 03
- பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன்
- பிரேசிலில் 3 வயது சிறுமி கற்பழிப்பு: சந்தேகமான நபரின் மர்ம உறுப்பை அறுத்த மர்ம நபர்கள்
- தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு
- எகிப்தில் கி.மு.1100 காலத்தின் கல்லறை கண்டெடுப்பு
| வாரணாசி பா.ஜனதா சார்பில் தர்ணா - 05 Posted: 08 May 2014 09:11 AM PDT |
| சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் - 01 Posted: 08 May 2014 08:59 AM PDT |
| ரெயில்வே தண்டவாளத்தில் மரம் - 04 Posted: 08 May 2014 08:43 AM PDT |
| மோடி உயர்சாதி வகுப்பை சேர்ந்தவர்: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 08 May 2014 08:31 AM PDT புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் தோமாரியாகாஞ் பகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இரண்டு நாட்களுக்கு முன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசினார். மேலும், தன்னை ஒரு இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும் அவரது தலைமையிலான அரசும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவே இருக்கும் என்றும் பேசியிருந்தார். இந்நிலையில், மோடி உயர்சாதி வகுப்பை சேர்ந்தவர். ஆனால் அவர் அரசியல் ஆதாயங்களுக்காக ஓ.பி.சி தகுதியை முறைகேடாக பெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்த விபரங்கள் வருமாறு:- மோடி குஜராத் முதல்வராக வந்த மறுவருடம் அதாவது கடந்த செப்டம்பர் 2001ல் அவர் ஓ.பி.சி. வகுப்பை சேர்ந்தவர் என்று மாநில அரசால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சக்திசின் கோகில் இன்று வெளியிட்டுள்ளார். அதில் மோடி 'மோத் காஞ்சிஸ்' என்ற வகு்ப்பை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி முதல்வராவதற்கு முன்பு வரை 'மோத் காஞ்சிஸ்' என்ற வகுப்பு பணக்கார உயர்சாதி வகுப்பாகவே இருந்துள்ளது. ஆனால் மோடி ஓ.பி.சி சமுதாயத்தை சேர்ந்தவர்களின் வாக்குகளை பெறுவதற்காக முதல்வரான பிறகு அவரது சாதியை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பாக அறிவித்துள்ளார். மோடி முதல்வராவதற்கு முன்பு வரை அந்த சமுதாயத்திற்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது கிடையாது. ஓ.பி.சி பட்டியலிலும் இருந்தது கிடையாது. மோடி தன்னை ஓ.பி.சி வகுப்பை சேர்ந்தவர் என்று தன்னை கூறிக்கொள்வது போலியானது. பிற்படுத்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில், உயர்சாதி வகுப்பை ஓ.பி.சி பட்டியலில் சேர்த்து அவர்களுடைய உரிமைகளை பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் நரேந்திர மோடி. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு கோகில் தெரிவித்துள்ளார். image: category:News Group Category: |
| மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி - 03 Posted: 08 May 2014 08:21 AM PDT |
| பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் Posted: 08 May 2014 08:19 AM PDT |
| பிரேசிலில் 3 வயது சிறுமி கற்பழிப்பு: சந்தேகமான நபரின் மர்ம உறுப்பை அறுத்த மர்ம நபர்கள் Posted: 08 May 2014 07:39 AM PDT சாவோ பாலோ, பிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாநிலத்தில் 3 வயது சிறுமியை கற்பழித்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில் நபரின் மர்ம உறுப்பை மர்ம நபர்கள் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவோ பாலோ மாநிலத்தின் செவரீனியா நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ்கோ டி சோசா டி கேஸ்ட்ரோ. இவருக்கு வயது 66. இவர் செவனோவாக்ஸ் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். சிறுமி கற்பழிப்பு அந்த பண்ணையின் உரிமையாளர்கள் தங்களது 3 வயது பேத்தியை மகள் வீட்டில் இருந்து வார விடுமுறையை கழிக்க அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்பு அந்த சிறுமி தனது சொந்த வீட்டிற்கு சென்று விட்டாள். ஆனால், அவள் கற்பழிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அவளது உடலில் இருந்துள்ளன. கொடூர தாக்குதல் இதனை சிறுமியின் தாயார் கவனித்துள்ளார். இதனை தொடர்ந்து தான் டி சோசா டி கேஸ்ட்ரோ மீதான கொடூர தாக்குதல் நடந்துள்ளது. மர்ம நபர்கள் அவரது ஆண் உறுப்பை அறுத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற கேஸ்ட்ரோவின் 3 விரல்களும் அறுபட்டன. இதனை தொடர்ந்து கேஸ்ட்ரோ உடனடியாக அருகிலுள்ள பாரிடோஸ் நகரில் உள்ள சந்தா காசா டி மைசரிகார்டியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அங்கு அவருக்கு உறுப்பை ஒட்ட வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இது குறித்து விசாரணை அதிகாரி மார்சிலோ பியூப்போ என்பவர் கூறும்போது, தாக்குதல் நடக்கும்போது கேஸ்ட்ரோ சுய நினைவுடன் தான் இருந்துள்ளார். எனவே, அவர் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்ட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனுடன், பாதிக்கப்பட்ட சிறுமியின் தடயவியல் சோதனை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், சிறுமி உண்மையில் கற்பழிக்கப்பட்டு இருப்பாள் என பியூப்போ தெரிவித்துள்ளார். image: category:News Group Category: |
| தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது: மோடி குற்றச்சாட்டு Posted: 08 May 2014 07:38 AM PDT ரோகானியா, வாரணாசியில் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தேர்தல் ஆணையத்தை பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் நடந்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:- அம்மா-மகன் (காங்கிரஸ்) அரசால் தான் நான் என்னுடைய வாரணாசி பேரணியை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவர்கள் (சோனியா மற்றும் ராகுல்) செய்த மேட்ச் பிக்ஸிங். பாதுகாப்பு இடர்பாடுகள் இருந்ததால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அப்படி இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். மத்தியில் தற்போது இருக்கும் அம்மா-மகன் அரசால் ஒரே ஒரு ஆளுக்கு கூட பாதுகாப்பு தர முடியாதா? மத்திய உள்துறை மற்றும் நிதி மந்திரிகள் மோடிக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என்று அவர்களாகவே கூறி வருகிறார்கள். தேர்தல் ஆணையம் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் யாருடைய அழுத்தத்தின் கீழ் செயல்படுகிறது என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய பேச்சு முக்கியமில்லை. ஏனென்றால் மக்கள் என்னுடைய கருத்தை நான் அமைதியாக இருக்கும் போது கூட தெரிந்து கொண்டு விடுவார்கள். அரசாங்கம் என்னுடைய பாதுகாப்பை பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை. நான் எனது நாட்டுக்காக உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். இப்போது வரையிலும் எனது ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மற்ற வேட்பாளர்களுக்கு உள்ள உரிமைகள் எனக்கும் கிடையாதா? அண்மையில் எனது தாய் கங்கையை பார்ப்பதற்கும் கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த 14 வருடங்களாக எனக்கு குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சி.பி.ஐயும் அவர்களை சுதந்திரமாக விட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். image: category:Tagging:News Group Category: |
| எகிப்தில் கி.மு.1100 காலத்தின் கல்லறை கண்டெடுப்பு Posted: 08 May 2014 06:47 AM PDT கெய்ரோ, எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கு பகுதியில் கி.மு.1100 ஆம் காலத்தை சேர்நத கல்லறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தொல்பொருள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த கல்லறை பழங்காலத்தில் ராணுவப் பெட்டகங்களை பாதுகாக்கும் காவலாளி ஒருவனுடையதாகும். அவன் பல்வேறு நாடுகளுக்கு அரச தூதராகவும் இருந்துள்ளான். அதற்கான குறிப்புகளும் அந்த கல்லறையின் கல்வெட்டில் காணப்படுகின்றன. இங்குதான் பல படிக்கட்டு அமைப்புகளைக் கொண்ட பிரமிடுகளில் அமைந்துள்ளன. இங்குள்ள சக்காரா என்ற மிகத் தொன்மையான கல்லறைப் பகுதியானது மெம்பிஸ் நகர அரசர்கள் பலரையும், உயர் குடியினரையும் அடக்கம் செய்த இடுகாட்டுப் பகுதியாகும். இந்நிலையில், அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த கல்லறை கல்வெட்டு மூலம் சக்காராவின் பண்டைய வரலாறை ஆராய்ச்சி செய்வதற்கு உதவியாக இருக்கும் என கெய்ரோ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




