Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

Posted:

புதுடில்லி: மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பின் படி, குழந்தைகள் கல்விச் செலவை திருப்பிக் கொடுக்கும் ஆண்டு உச்ச வரம்பு, இது வரை, 12 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனிமேல், 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்று திறனாளி பெண் ஊழியரின், குழந்தை பராமரிப்பு, மாதச் செலவுத்தொகை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அது போல், ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தையின் கல்விச் செலவுத் தொகையை திருப்பி கொடுப்பதற்கான ஆண்டு உச்சவரம்பு தொகை, 24 ...

நிதிஷ்குமார் - சரத் யாதவ் மோதல் : ஆம் ஆத்மி விவகாரத்தால் குழப்பம்

Posted:

வாரணாசியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, ஐக்கிய ஜனதா தளம் முடிவெடுத்திருந்தாலும், இந்த விஷயத்தில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களான, நிதிஷ்குமாருக்கும் சரத் யாதவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.பல்வேறு வியூகங்கள் : பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, உ.பி., மாநிலம், வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். நரேந்திர மோடியை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகள் தரப்பில், பல்வேறு வியூகங்கள் வகுக்கப் பட்டு வருகின்றன. ...

"என்கவுன்டரில்' அமித் ஷாவுக்கு தொடர்பில்லை: சி.பி.ஐ.,

Posted:

ஆமதாபாத்: பரபரப்பான தேர்தல் நேரத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கு கிடைத்த பெரிய நிம்மதியாக, "குஜராத்தில், 2004ல் நடந்த, இஸ்ரத் ஜஹான், "என்கவுன்டர்' வழக்கில், அமித் ஷா மீது குற்றம் சுமத்த எவ்வித ஆதாரங்களும் இல்லை' என, சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத்தில், 2004ல், மும்பையிலிருந்து காரில் வந்த முஸ்லிம் பெண் இஸ்ரத் ஜஹான் மற்றும் அவருடன் வந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள், மத்திய உளவுப்பிரிவினர் மற்றும் மாநில தீவிரவாத எதிர்ப்பு படை போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.தாக்குதல் : "முதல்வர் ...

'ஜல்லிக்கட்டு' விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை: காளைகள் துன்புறுத்தலை ஏற்க முடியாது என தீர்ப்பு

Posted:

புதுடில்லி : தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான, 'ஜல்லிக்கட்டு' போட்டிகளை நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. 'மனிதர்களைப் போலவே, விலங்குகளுக்கும் சில அடிப்படை உரிமைகள் உள்ளன. அவை மீறப்படுவதை ஏற்க முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.பாரம்பரிய விளையாட்டுதமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில், காளைகளை அடக்கும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதான இடம் உண்டு. ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகையின் போது, தமிழகத்தின் பல பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.இதற்காக, ஆண்டு ...

மோடி பிரசார கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு: உ.பி., அரசு மீது தேர்தல் கமிஷனில் பா.ஜ., புகார்

Posted:

வாரணாசி:வாரணாசியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, இன்று பங்கேற்கவிருந்த பிரசாரக் கூட்டத்துக்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. ''உ.பி., மாநில ஆளுங்கட்சியான, சமாஜ்வாதியின் நெருக்கடியே, கூட்டத்துக்கு அனுமதி அளிக்காததற்கு காரணம்' என, பா.ஜ., சார்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.வாரணாசி தொகுதிஉ.பி., மாநிலத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. நரேந்திர மோடி, இங்குள்ள வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் ...

கேரளாவின் உளுத்த சட்டத்தை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்:ல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடியாக உயர்த்த அனுமதி

Posted:

புதுடில்லி: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை, 136 அடியிலிருந்து, 142 அடியாக உயர்த்தும் தமிழக அரசின் கோரிக்கைக்கு எதிராக, கேரள மாநில அரசு இயற்றிய சட்டம் செல்லுபடியாகாது; அந்த சட்டம், அரசியல் சாசனத்திற்கு விரோதமானது' என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன, 'பெஞ்ச்' நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.மேலும், 'அணையின் பாதுகாப்பு கருதி, தேவையான பராமரிப்பு வேலைகளை, தமிழக அரசு மேற்கொள்வதற்கு, கேரளா எந்த இடையூறும் செய்யக் கூடாது' என்றும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.தற்போதைய கேரள மாநிலம், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், திருவிதாங்கூர் ...

வெளிநாடுகளில் கருப்பு பணம்: நிறுவனங்களிடம் ஆய்வு

Posted:

புதுடில்லி: சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை முடக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை தர, அந்நாட்டு வங்கிகள் மறுத்து வரும் நிலையில், சந்தேகத்திற்கு இடமான, நுாறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பண பரிவர்த்தனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.நம் நாட்டில், முறைகேடான விதத்தில் சம்பாதிக்கும் பெரும் பணத்தை, இங்கே வைத்திருந்தால் பிரச்னையாகும் என, கருதும் பெரும் தொழிலதிபர்கள், அந்த பணத்தை, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்துள்ளனர்.பல லட்சம் கோடி ரூபாய் அவ்வாறு சட்டவிரோதமாக முதலீடு ...

இந்த வெற்றியை தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஜெயலலிதா உருக்கம்

Posted:

சென்னை : முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள, முதல்வர் ஜெயலலிதா, ' வரலாற்று சிறப்பு மிகுந்த, இந்த வெற்றியை, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்' என, தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, என் தலைமையிலான அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு, அரசியல் சாசனப் பிரிவிற்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த, அரசியல் சாசனப் பிரிவு, ஐந்து பேர் கொண்ட குழுவை ஏற்படுத்த உத்தரவிட்டது. அப்போது, தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, 'ஐவர் குழுவில், தமிழகம் இடம் ...

நீர்வழி திட்டத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்!

Posted:

கடந்த இரு நாட்களாக, இந்தியாவின் நீர் பயன்பாடு மற்றும் தமிழக ஆறுகளை எவ்வாறு இணைக்கலாம் என்பது குறித்து பார்த்தோம்.இனி, தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களையும் உள்ளடக்கக் கூடிய தென்னக இணைப்பை, எப்படி உருவாக்குவது எனப் பார்ப்போம்.இந்த மாநிலங்கள் அனைத்தும், கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, தாமிரபரணி, முல்லைப் பெரியாறு, வைகை, பாலாறு ஆகிய ஆறுகளையே, நீர்பாசனத்துக்கு பெரிதும் சார்ந்திருக்கின்றன. வெள்ளம் ஏற்படும்போது, இம்மாநிலங்களில், நீருக்கு பிரச்னை இருப்பதில்லை. 30, ஜனவரி 2013 அன்றைய மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி, ...

'புகார் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்கவில்லை'

Posted:

சென்னை:''தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., சார்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டும், இதுவரையில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.அவரது பேட்டி:தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., சார்பில் பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?இதுவரையில் எடுக்கவில்லை.ஜல்லிக்கட்டு பற்றி, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பற்றி?தீர்ப்பு பற்றிய முழு விவரம் வரவில்லை. எனவே, அது பற்றி இப்போது கூறுவதற்கில்லை.தமிழகத்தில், அன்றாடம் கிலோ கணக்கில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்படும் நிகழ்ச்சிகள் ...

'ஜெ.,வுடன் ரகசிய உடன்பாடு இல்லை': தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

Posted:

திருச்சி: "முதல்வர் ஜெயலலிதாவுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் எந்தவித ரகசிய உடன்பாடும் இல்லை," என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள, எட்டு மாவட்ட அதிகாரிகள், அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.பயிற்சிக்கு பின், நிருபர்களிடம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது:தென் சென்னை, சேலம், நாமக்கல்லில் புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில், சேலம், நாமக்கல்லில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், ...

பாராட்டு விழா வேண்டாம்: விவசாயிகள் வேண்டுகோள்

Posted:

'முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தாமதமாக கிடைத்த நீதிக்கு பாராட்டு விழாவை நடத்துவதில் ஆர்வம் காட்டாமல், மதகுகளை கீழே இறக்கி, நீர்மட்டத்தை உயர்த்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இந்த தீர்ப்பு குறித்து விவசாயிகள் கூறியதாவது:பெரியாறு, வைகை பாசன நீர் பயன்படுத்துவோர் சங்க தலைவர், புத்தி சிகாமணி:முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த வலியுறுத்தி, விவசாயிகள், தமிழக அரசு உள்ளிட்ட, ஐந்து பேர் இணைந்து, தொடர்ந்த வழக்கை, 2006 வரை சுப்ரீம் கோர்ட் கண்டுகொள்ளவில்லை. மத்திய நீர்வளத்துறை தான் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™