Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கால்டுவெல் 200வது ஆண்டு விழா : போற்றி மகிழ கருணாநிதி அழைப்பு

Posted:

சென்னை : ''கால்டுவெல் 200வது ஆண்டு விழாவை, நன்றியுடன் போற்றி மகிழ்வோம்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.தமிழ் மொழியின், இலக்கணக் கட்டமைப்பும், இலக்கியச் செழுமையும் எவரையும் ஈர்க்கவில்லை. அதனால் தான் சமயத் தொண்டுகளாற்றிட வந்த, ஐரோப்பிய பாதிரியார்கள், தமிழ் மொழியினால், ஈர்க்கப்பட்டு, அதன் சிறப்புகளில் மயங்கி, அதன் மேன்மைகளை மேதினிக்கும் புலப்படுத்தினர்.அவர்களுள் முதன்மையானவர், தமிழ் தனித்தன்மை வாய்ந்த மொழி, செம்மொழி, திராவிட மொழி குடும்பத்தின் மூத்த முதல் மொழி எனக் கூறி, உரிய சான்றுகளுடன் நிறுவிய மாமேதை கால்டுவெல்.இவர், தமிழகத்தில் ...

ஓட்டு எண்ணும் மையங்களில் சரியான ஆள் நியமனம்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் ரகசிய உத்தரவு

Posted:

'ஓட்டு எண்ணும் மையங்களில், சந்தேகத்திற்கு இடமில்லாத சரியான ஆட்களை நியமிக்க வேண்டும்' என, தே.மு.தி.க.,வினருக்கு, அக்கட்சி தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது.பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இணைந்து, லோக்சபா தேர்தலை தே.மு.தி.க., சந்தித்துள்ளது. இதில், திருவள்ளூர்(தனி), வடசென்னை, மத்திய சென்னை, மதுரை, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம், விழுப்புரம்(தனி), கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் திருச்சி என, 14 தொகுதிகளில் போட்டியிட்டது.செய்ய வேண்டிய ஏற்பாடுகள்இதில், எட்டு தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் என, தே.மு.தி.க., தலைமை நம்புகிறது. பா.ஜ., ...

மின் வினியோக நேரம் குறைப்பு: பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலை

Posted:

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், விவசாய மின் இணைப்புகளுக்கான, மும்முனை மின் வினியோகம் குறைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் இன்றி பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.தமிழகத்தில், 32.5 லட்சம் எக்டேர் பரப்பளவில், தென்னை, கரும்பு, வாழை, மா, காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. இதில், 20 சதவீதம், அணை பாசன கால்வாய், ஏரி மூலம் பலன் பெறும் நஞ்சை நிலப்பரப்பு ஆகும்.ஆழ்துளை கிணறுமீதமுள்ள, 80 சதவீத விவசாய நிலங்களில், கிணறு, ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்கின்றனர். தமிழகத்தில், 20 லட்சம் விவசாய ...

உண்மையான புலி யார்: விளக்குகிறார் மோடி

Posted:

பன்குரா : ''மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த, 'சாரதா சிட் பண்ட்' மோசடியில் தொடர்புடையவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதோடு, அவர்கள் மோசடி செய்த பணத்தை ஏழைகளுக்குப் பெற்றுத் தருபவரே உண்மையான புலி,'' என, மம்தா பானர்ஜிக்கு, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்து உள்ளார்.மம்தா விமர்சனம்மேற்கு வங்கத்தில், சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய, திரிணமுல் காங்., தலைவரும், அம்மாநில முதல்வருமான, மம்தா பானர்ஜி, 'பேப்பர் புலிக்கும், மேற்கு வங்க புலிக்கும் வேறுபாடு உள்ளது. நரேந்திர மோடி பேப்பர் புலி போன்றவர்' என, ...

ரயிலில் குண்டு வைத்த சதிகாரர்கள் யார்?சரியான துப்பு கிடைக்காததால் திணறல்

Posted:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்து, ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. இருப்பினும், குண்டு வெடிப்பிற்கான தடயங்கள், சில, 'வீடியோ' காட்சிகள் தவிர, சதிகாரர்களை கண்டறியும் வகையிலான முக்கிய துப்பு எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.வழக்கை விசாரிக்கும், சி.பி.சி.ஐ.டி., போலீசார், ரயிலில் குண்டு வைத்த சதிகாரர்களை தேடி, பெங்களூரு, பாட்னா உள்ளிட்ட பல நகரங்களில் முகாமிட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், இம்மாதம் 1ல், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து, அசாம் மாநிலம் கவுகாத்தி செல்லும் ரயிலின், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், ...

அசாம் தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் : என்.ஐ.ஏ.,யிடம் விசாரணை ஒப்படைப்பு

Posted:

கவுகாத்தி: அசாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 32 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதல் குறித்த விசாரணை, தேசிய புலனாய்வு நிறுவனமான - என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், வங்க தேசத்தில் இருந்து குடிபெயர்ந்த முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், போடோ பழங்குடி இன மக்களுக்காக, தனி மாநிலம் உருவாக்கக் கோரியும், இங்குள்ள பல தீவிரவாத அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த தீவிரவாத அமைப்புகளில் ஒன்றான, போடோலேண்ட் தேசிய ஜனநாயக ...

'2ஜி' வழக்கு: வாக்கு மூலங்கள் பதிவு செய்வது இன்று துவக்கம்

Posted:

புதுடில்லி : '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் பணி, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் இன்று துவங்குகிறது.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய், மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உட்பட, 17 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள, இந்த மோசடி வழக்கின் விசாரணை, டில்லி, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும், 824 பக்கங்கள் கொண்ட, வழக்கு தொடர்பான, 1,718 ...

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் நலத்திட்டங்கள் ரத்து: மக்களை பயமுறுத்துகிறார் ராகுல்

Posted:

அமேதி : ''பாரதிய ஜனதா, மத்தியில் ஆட்சிக்கு வந்தால், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமல்படுத்திய நலத்திட்டங்கள் எல்லாம் ரத்தாகிவிடும்,'' என, மக்களை, காங்., துணைத் தலைவர், ராகுல் பயமுறுத்தி உள்ளார்.உத்தர பிரதேச மாநிலம், அமேதி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் ராகுல், அங்கு, நேற்று தீவிர பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில், பா.ஜ.,வுக்கோ, மோடிக்கோ தெளிவான நோக்கம் இல்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமல்படுத்திய நலத்திட்டங்களை எல்லாம் ரத்தாகி விடும். ...

பிரதமராகி விட்டது போல பேசி வரும் மோடி: காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கோபம்

Posted:

குல்லூ: ''பிரதமர் பதவியில் அமர்வதற்காக, கார்கில் போரில் உயிர் துறந்தவர்களின் பெயரை, நரேந்திர மோடி பயன்படுத்துகிறார்,'' என, காங்கிரஸ் தலைவர் சோனியா, குற்றம் சாட்டினார்.இமாச்சல பிரதேச மாநிலம், மாண்டி லோக்சபா தொகுதியில், நேற்று தேர்தல் பிரசாரம் செய்த, காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியதாவது:கார்கில் வீரர்:பிரதமர் பதவியில் அமர்வதற்காக, கார்கில் போரில் உயிர் துறந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் பெயரையும், அவரின், 'இந்த இதயம் மேலும் விரும்புகிறது' என்ற வாசகத்தையும் மோடி பயன்படுத்தி உள்ளார். பிரதமர் பதவிக்காக, கார்கில் போரில் உயிர் துறந்தவர்களின் ...

வாக்காளர்களுக்கு பணம்: ரப்ரி மீது வழக்கு

Posted:

பாட்னா: ஆர்.ஜே.டி., கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் மனைவியும், சரண் தொகுதி வேட்பாளருமான ரப்ரி தேவி மீது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம், 40 லோக்சபா தொகுதிகளை கொண்ட பீகாரில், கடந்த மாதம், 10ம் தேதி முதல், ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அங்குள்ள சரண் என்ற லோக்சபா தொகுதியில், லாலுவின், ஆர்.ஜே.டி., கட்சி சார்பில், லாலு மனைவி ரப்ரி போட்டியிடுகிறார்; அங்கு, இம்மாதம் 7ல், தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் இரவில், அந்த தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், வாக்காளர்களுக்கு, வேட்பாளர் ரப்ரி, ...

பதவி சுகங்களை அனுபவித்த பின் புறக்கணிப்பதா:'நன்றி மறந்த தி.மு.க.,' என காங்., மந்திரி கோபம்

Posted:

ஐதராபாத்: ''மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், பல பதவி சுகங்களை அனுபவித்து, நன்றி விசுவாசமே இல்லாமல் வெளியேறியது தி.மு.க.,'' என, மத்திய அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ், கடுமையாக கூறினார். இதன் மூலம், தமிழகத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், காங்கிரசை தனித்து போட்டியிட செய்த, தி.மு.க., மீது காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் வருத்தம், கோபம் வெளிப்படையாக தெரிய வருகிறது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர், கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ஜெய்ராம் ரமேஷ், ...

மே.வங்கத்திற்கு 50 ஆயிரம் வீரர்கள்: தேர்தல் கமிஷன் முடிவு

Posted:

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தல்களில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரால், ஏராளமான முறைகேடுகள் நடத்தப்பட்டதாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதால், நடைபெற உள்ள இரண்டு கட்ட தேர்தல்களுக்காக, கூடுதலாக, 15 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™