ஈகரை தமிழ் களஞ்சியம் |
- திருமண வாழ்த்து கூற வாங்க....
- பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி
- ஃபிலிமோத்ஸவ் - சுஜாதா
- காரல் மார்க்ஸ் பிறந்த தினம்: மே 5, 1818
- பி.யு.சின்னப்பா பிறந்த தினம்: மே.5, 1916
- நகரம் - சுஜாதா
- நாயனம் - ஆ மாதவன்
- நிலை - வண்ணதாசன்
- தனுமை - வண்ணதாசன்
- புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன்
- சாமியார் ஜுவுக்குப் போகிறார் - சம்பத்
- மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV
- அஸ்த்ரா ஏவுகணை சோதனை வெற்றி
- இரு கிராமங்களின் கதை
- நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம்
- தேவை திருப்பி அடிக்கும் மனோபாவம்!
- மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145
- மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது
- மலேசிய விமானம் மாயமானதில் ‘திடீர்’ திருப்பம்; 11 தீவிரவாதிகள் கைது
- 800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள்
- ஆண்டுக்கு 1,000 மெகாவாட் மின்தேவை அதிகரிப்பு
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (5) Flora in Tamilnadu
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- மூச்சு நின்றால் போச்சு!
- சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்!
- பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது
- பராமரிப்பில்லாத திருவாரூர் தியாகராசர் கோயில்!
- இளைப்பாறல்...!! { கவிதை }.
- காதல் ஒரு காவியமாகும்!!
- கவிதையில் யாப்பு
| Posted: 04 May 2014 01:39 PM PDT இன்று மணவிழா காணும் என் தங்கைக்கு நான் கூறும் வாழ்த்து.... |
| பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Posted: 04 May 2014 01:02 PM PDT கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கைது செய்யப்பட்ட இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பதுங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் லைகன் மோகரா பகுதியைச் சேர்ந்த ஷபீர் அலி மகன் அஷ்ரப் அலி (39). இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர், ஜெய்ப்பூர், புனே, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர். இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ... |
| Posted: 04 May 2014 12:59 PM PDT மந்திரி வந்திருக்க வேண்டும். எல்லோரும் தேர்தல் உற்சவத்தில் கவனமாக இருந்ததால் டில்லி அதிகாரி ஒருத்தர் மட்டுமே வந்திருந்தார். வெள்ளைக்கார டைரக்டர்கள் சிலர் வந்திருந்தார்கள். எதற்கெடுத்தாலும் 'வெரி நைஸ்', 'வெரி நைஸ்' என்றார்கள். மற்றொரு 'கல்யாணராம'னைத் தேடி தமிழ் சினிமா டைரக்டர்கள், கதாசிரியர்கள், பத்திரிக்கையாளர் என்று பல பேர் டேரா போட்டிருந்தார்கள். சகட்டுமேனிக்கு சினிமா பார்த்தார்கள், குடித்தார்கள். விலை போகாத ஹிந்தி நடிகர்கள், குறுந்தாடி வைத்த புதிய தலைமுறை டைரக்டர்கள், புதுக் கவிஞர்கள், ... |
| காரல் மார்க்ஸ் பிறந்த தினம்: மே 5, 1818 Posted: 04 May 2014 12:58 PM PDT கார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் ... |
| பி.யு.சின்னப்பா பிறந்த தினம்: மே.5, 1916 Posted: 04 May 2014 12:57 PM PDT பி.யு.சின்னப்பா, தமிழ் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். 1916 ஆம் ஆண்டு மே மாதம் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உலகநாத பிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. புதுக்கோட்டை என்ற தனது பிறந்த ஊரையும் சேர்த்து பி.யு.சின்னப்பாவானார். இவருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சின்னப்பாவின் தகப்பனார் அப்போது பிரபலமான நாடக நடிகர். அவருடன் சேர்ந்து சிறுவயதிலேயே பாடவும் கற்றுக் கொண்டார். சிலம்பம், மல்லு, குஸ்தி ... |
| Posted: 04 May 2014 12:43 PM PDT சுவர்களில் ஓரடி உயர எழுத்துக்களில் விளம்பரங்கள் விதவிதமாக ஒன்றி வாழ்ந்தன. நிஜாம் லேடி புகையிலை , ஆர்.கே.கட்பாடிகள் -எச்சரிக்கை! புரட்சி தீ! சுவிசேஷக் கூட்டங்கள் - ஹாஜி மூசா ஜவுளிக்கடை (ஜவுளிக்கடல் ) - 30 .9 -1973 அன்று கடவுளை நம்பாதவர்கள் சுமக்கப் போகும் தீச்சட்டிகள் மதுரையில் ஒரு சாதாரண தினம். எப்போதும் போல "பைப்" அருகே குடங்கள் மனிதர்களுக்காக வரிசைத் தவம் இருந்தன . சின்னப் பையன்கள் 'டெடன்னஸ்" கவலை இன்றி மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் போக்குவரத்துக் கழக பஸ்கள் தேசியம் ... |
| Posted: 04 May 2014 12:41 PM PDT இறந்தவருக்கு ஒன்றும் தெரியாது. புதியமல் ஜிப்பா, வேஷ்டி அணிந்து கொண்டு, நெற்றியில் மூன்று விரல் திருநீற்றுப் பட்டையுடன், நீட்டி நிமிர்ந்து அந்திமத்துயில் கொள்கிறார். கறுப்பு உடம்பு, வயசாளி, மேல்வரிசைப் பல் கொஞ்சம் பெரிசு, உதட்டை மீறி ஏளனச் சிரிப்பாக அது வெளித் தெரிகிறது. தலைமாட்டில் குத்து விளக்கும், நுனி வாழையிலையில் நிறை நாழி பழமும் ஊதுவத்தியும், சிவப்பு அரளிப்பூ மாலையுமாக ஜோடித்திருக்கிறார்கள். சாவு மணம் ஊதுவத்தியிலிருந்து கமழ்கிறது. 'யென்னைப் பெத்த யப்போவ்.. யெனக்கினி ஆரிருக்கா?... என்று ... |
| Posted: 04 May 2014 12:38 PM PDT 'தேர் எங்கே ஆச்சி வருது?' 'வீட்டைப் பார்த்துக்கோ.' என்று சொல்லிவிட்டு எல்லோரும் புறப்பட்டு போகும்போது கோமு கேட்டாள். 'வாகையடி முக்குத் திரும்பிட்டுதாம். பார்த்திட்டு வந்திருதோம். நீ எங்கியும் விளையாட்டுப் போக்கில் வெளியே போயிராத, என்ன?' அழிக்கதவைச் சாத்திவிட்டு எல்லோரும் வெளியே போனபோது கோமு அவர்களைப் பார்த்துக் கொண்டு உள்ளேயே நின்றாள். கம்பிக் கதவிற்கு வெளியே ஒவ்வொருவராக நகர்ந்து நகர்ந்து, தெருப்பக்கமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். முடுக்கு வழியாக, இங்கிருந்து தெருவைப் பார்க்க முடியாது. ... |
| Posted: 04 May 2014 12:36 PM PDT இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயே vdaவீட்டுப்பக்கம் ... |
| புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திரசோழன் Posted: 04 May 2014 12:33 PM PDT தோட்டப்பக்கம் வேலி ஓரம் கிடந்த சோளத்தட்டுக் கட்டை இழுத்துப்போட்டு உதறி, குத்துக்காலிட்டு அமர்ந்தபடி அடுப்புக்கு தட்டை அடித்து சீராய் அடுக்கிக்கொண்டிருந்த வனமயிலு எதிர்வீட்டில் குடியிருக்கும் வாலிபனைப் பார்த்து முணுமுணுத்துக் கொண்டாள். "கண்ணைப் பாரேன் நல்லா... கோழி முட்டையாட்டம் வச்ச கண்ணு வாங்காம பாக்கறத. இவனெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்கமாட்டானா... எம்மா நேரமா பாத்துக்னுகிறான்யா இதே மாதிரி..." பக்கத்தில் சற்று தள்ளி தொட்டியில் கைவிட்டுக் கலக்கியபடி மாட்டைப் பிடித்துத்rajendaracholan ... |
| சாமியார் ஜுவுக்குப் போகிறார் - சம்பத் Posted: 04 May 2014 12:31 PM PDT தினகரன் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார். 'அன்னா ஜுக்கு' என்ற குமாரின் கீச்சுக்குரல் அவரை எழுப்பியது. எழுந்து கொண்டார். முகம் அலம்பிக் கொண்டு உடை அணிந்து கொண்டார். மனைவியும் தயாரானாள். குமாருக்கு கௌபாய் ட்ரெஸ்! வெளியே முதல்நாள் பெய்த மழையில் புல் பாத்திகளில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைப் பூமி மெள்ள மெள்ள முடிந்தமட்டும் உறிஞசிவிட்டன பிறகும், வேறு வழியில்லாமல் தேங்கிக் கிடந்தது. இப்போது நல்ல வெயிலில் ஆவியாக மாறிக் கொண்டிருக்கிறது. புல், கலங்கலான மழைத் தண்ணீர் பட்டுச் சாம்பல் பூத்திருந்தது. ... |
| மெர்ஸ் நோய் - Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV Posted: 04 May 2014 12:23 PM PDT Group: Group IV ((+)ssRNA) வரிசை: Nidovirales குடும்பம்: Coronaviridae துணைக்குடும்பம்: Coronavirinae பேரினம்: Betacoronavirus இனம்: MERS-CoV மெர்ஸ் நோய் (Middle East respiratory syndrome coronavirus - MERS-CoV) ஒரு வகை வைரஸ் கிருமியால் பரவுகிறது. இவ்வகை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், நுரையிரல் அலர்ஜி மற்றும் சிறுநீரகம் செயல் இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. ஒட்டகங்கள் மூலம் பரவும் இந்த ஆட்கொல்லி நோய்க்கான வைரஸ் கிருமிகள் கடந்த ஒன்றை ஆண்டுக்கு ... |
| Posted: 04 May 2014 12:17 PM PDT விண்ணில் உள்ள ஒரு இலக்கை விண்ணில் இருந்தே தாக்கக்கூடிய, 'அஸ்த்ரா' ஏவுகணை இந்தியாவில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாகும். இந்திய ராணுவ ஆராய்ச்சி கழகத்தால் (டி.ஆர்.டி.ஓ.) இதன் திறன் மேம்படுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. கடற்படை விமானமான எஸ்.யு.30 எம்.கே.ஐ.யில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியது. டி.ஆர்.டி.ஓ.வும், இந்திய விமானப்படையும் இணைந்து ஐதராபாத் அருகே நடத்திய இந்த சோதனையில், ஏவுகணையின் செயல்பாட்டை அதிநவீன கேமராக்கள் படம்பிடித்தன. அனைத்து ... |
| Posted: 04 May 2014 12:16 PM PDT இந்தியா என்பது கிராமங்களின் தொகுப்புதான். இந்திய கிராமங்களைப் பற்றி எழுதுவது என்றால், ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் எழுதலாம். அவ்வளவு பொக்கிஷங்களை அவை புதைத்துவைத்திருக்கின்றன. எனினும், குஜராத்தின் மதாபரும் தேசாரும் எதனாலோ திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. உலகின் பணக்காரக் கிராமம் மதாபர்க்காரர்கள் சிலர் தங்கள் ஊரை இந்தியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் ஆசியாவின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள்; சிலர் உலகின் பணக்காரக் கிராமம் என்று சொல்கிறார்கள். ... |
| நீ எங்கே என் அன்பே: திரை விமர்சனம் Posted: 04 May 2014 12:10 PM PDT பெயர் தெரியாத ஊர், மொழி அறியாத மக்கள் என்று அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வந்திறங்கும் அனாமிகா (நயன்தாரா), அங்கு பணிபுரியும் தனது கணவர் அஜய் சுவாமிநாதனை (ஹர்ஷவர்தன் ரானே) கடந்த இரண்டு வாரங்க ளாகக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். முதலில் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத போலீஸ், அவளின் கணவரின் சாயலும் 'பீப்பிள் பிளாசா'வில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தேடப் பட்டுவரும் முக்கியக் குற்றவாளி யான தீவிரவாதி மிலன் தாம்ஜியின் சாயலும் ஒத்துப்போகவே இதைத் துருவ ஆரம்பிக்கிறது. ... |
| தேவை திருப்பி அடிக்கும் மனோபாவம்! Posted: 04 May 2014 12:09 PM PDT அது ஒரு கோடைக்காலம். இளங்காலைப் பொழுது. ஆப்கானிஸ்தானத்தின் தலைநகரம் காபூலில் இந்தியத் தூதரகம் இருக்கும் கட்டிடத்துக்குப் பக்கத்தில், பழைய டொயோட்டா கார் ஒன்று வந்து நிற்கிறது. அதிலிருந்து யாரோ இறங்கப்போகிறார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், திடீரென மின்னல் வெட்டியதைப் போலப் பளிச்சென்று ஒரு ஒளியும் டமாரென்று ஓசையும் ஒரே சமயத்தில் வெளிப்பட்டது. அதையடுத்து 58 பேர் உயிரிழந்தனர், 141 பேர் காயம் அடைந்தனர். இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் உடல்கள் அழுத்தமான காற்றில் தூக்கி வீசப்பட்டதைப் போல நாலாபுறங்களிலும் ... |
| மகாராஷ்டிரத்தில் ரயில் தடம்புரண்டு 18 பேர் பலி; காயம் 145 Posted: 04 May 2014 12:02 PM PDT மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிழந்தனர்; 145 பேர் காயமடைந்தனர். மும்பையில் இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில், திவா - சஸ்வந்த்வாடி பயணிகள் ரயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.40 மணியளவில் நாகோதானே - ரோஹா ரயில் நிலையங்களுக்கு இடையே விபத்துக்குள்ளானது. இதில், இன்ஜின் மற்றும் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார். காயமடைந்த 145 ... |
| மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது Posted: 04 May 2014 11:53 AM PDT கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது. மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து ... |
| மலேசிய விமானம் மாயமானதில் ‘திடீர்’ திருப்பம்; 11 தீவிரவாதிகள் கைது Posted: 04 May 2014 11:51 AM PDT மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் 'திடீர்' திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய விமானம் மாயம் சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இந்த ... |
| 800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் Posted: 04 May 2014 11:40 AM PDT வருவாய் இல்லாத வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம், அதிகரிக்கும் இயக்கச் செலவு உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும், 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில், நிர்வாகத்தினர் கை வைத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள, எட்டு போக்குவரத்து கழகங்ககளில், 22 ஆயிரம் பஸ்கள் உள்ளன. இவற்றில், 20,500 பஸ்கள், அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன. நிலைமையை சமாளிக்க: நிர்வாகம், ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பம் ... |
| ஆண்டுக்கு 1,000 மெகாவாட் மின்தேவை அதிகரிப்பு Posted: 04 May 2014 11:38 AM PDT தமிழகத்தின் மின்தேவை ஆண்டுக்கு, 1,000 மெகாவாட் அதிகரித்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும், 1,000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி மற்றும் வினியோகம் செய்யாத பட்சத்தில், வரும் ஆண்டு களில் மின்தேவை மேலும்அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த, 1957ல் தமிழ்நாடு மின்வாரியம் உதயமான போது, தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன், 256 மெகாவாட். மின்வாரியம் துவங்கி, 56 ஆண்டு ஆகியுள்ள நிலையில், தற்போது மின் உற்பத்தி நிறுவு திறன், 10, 500 மெகாவாட் ஆக உள்ளது. ஆனால், ஆறு ஆண்டுகளாக மின் உற்பத்தி நிறுவு திறன் ... |
| தமிழ்நாட்டில் தாவரங்கள் (5) Flora in Tamilnadu Posted: 04 May 2014 11:36 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 04 May 2014 09:09 AM PDT ![]() |
| Posted: 04 May 2014 08:52 AM PDT இரத்த அழுத்தம் (பி.பி.), சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு மருத்துவரிடம் சென்றால், நடக்கச் சொல்கின்றார், மூச்சுப் பயிற்சி (யோகா) செய்யுங்கள் என்கின்றனர். இதனை நம் சித்தர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியிருக்கிறார்கள். அதன் மகத்துவம் இன்று உலகெங்கும் மக்களால் உணரப்படுகிறது. எவர் ஒருவர் மூச்சுக்காற்றை கட்டி ஆளும் வல்லமைப் பெற்றிருக்கிறாரோ அவர் வாழ்நாள் கூடுகிறது. ஒரு கணக்கு பார்ப்போம். மனிதன் நிமிடத்துக்கு 12 முறை மூச்சு விடுகிறான். சராசரி ஆயுள் 100. ஆமை நிமிடத்திற்கு 4 தடவை மூச்சுவிடுகிறது ... |
| சிங்காரவேலரின் சொத்தை பறிமுதல் செய்து, லேடி வெலிங்டன் கல்லூரியாக மாற்றிய ஆங்கிலேயன்! Posted: 04 May 2014 08:01 AM PDT சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கவுதமன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது: இந்தியாவின் மூத்த தொழிற் சங்கத் தலைவரான சிங்காரவேலர், 1860-ம் ஆண்டு பிறந்தவர். நாட்டிலேயே முதன்முறையாக 1923-ம் ஆண்டு மே தினத்தைக் கொண்டாடியவர். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றி பெறச் செய்வதில் பெரும் பங்காற்றியவர். பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பலருக்கு ஏராளமான உதவிகளை செய்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட பல மொழிகளை அறிந்த சிங்காரவேலர் மிகச் சிறந்த வழக்கறிஞர். ... |
| பிற மொழியைக் கலந்து பேசுவது மொழியைச் சிதைத்து விடுகிறது Posted: 04 May 2014 06:45 AM PDT மதுரை தமிழோடு பிற மொழியைக் கலந்து பேசுவதே, மொழிச் சிதைவுக்குக் காரணமாக இருக்கிறது என்று பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார். உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம் என்ற கருத்தரங்கில், மொழிச் சிதைவு என்ற தலைப்பில் அவர் பேசியது: பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இரு வகையாக தமிழ் பயன்பாட்டில் இருக்கிறது. தூய தமிழைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுவது எழுத்துத் தமிழைத்தான். அதற்காக பேசும்போது, தூய தமிழ் இருக்க வேண்டும் ... |
| பராமரிப்பில்லாத திருவாரூர் தியாகராசர் கோயில்! Posted: 04 May 2014 06:32 AM PDT பாரம்பரியம் மிக்க திருவாரூர் தியாகராஜர் கோயிலையும், கோயில் வளாகத்தையும் பராமரித்து பாதுகாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற திருவாரூர் கோயில் ஆழித்தேர், கமலாலயக் குளம் ஆகியவற்றை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு பிரதான ராஜகோபுரங்களுடன் தேவாசிரியன் மண்டபம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிறுசிறு கோயில் மண்டபங்கள் உள்ளன. கமலாலயக் குளத்தின் நடுவில் கீழ்திசை நோக்கு சுவாமியை பார்த்தவாறு கோயில் ... |
| Posted: 03 May 2014 08:10 PM PDT * வெயிலுக்கு இலைகளின் மறைவில் இளைப்பாறுகிறது பறவைகள். * மேலே விண் கீழே மண் இரண்டையும் அளக்கிறது கண்கள். * புல்லுக்கட்டுத் தூக்கிப் போகிறாள் புள்ளதாச்சிப் பெண். * வாங்கிப் போடப் போடக் குவிகிறது பொருளாசை. * எண்ணி எண்ணிப் பார்க்கிறான் மறந்துப் போகிறது எண்ணிக்கை. *** |
| Posted: 03 May 2014 07:50 PM PDT காதல் என்றொரு சுமை அது நமை ஆட்கொண்டு வலுவிழக்கச் செய்திடும் பிணியாகும் அது சில வேளை இனிதாகி கனிவாகி சுகம் தந்து மலர்ந்திடும் வாசமலராகும்! அதைக் கொண்டவர் உள்ளம் பசி மறந்து தன்னிலை அகன்று காதல் பித்தனாக்கும் மாயையாகும்! வெற்கம் அது அறியாது இடம் மறந்து குலம் மறந்து காதல் மொழி பேசும் காவியமாகும்! உறவுகள் சிறிதாகும் அப்போது சொந்தம் வெறுத்து உடன் பிறந்தவர் மறந்து கொண்டவன் பின்னே மறையும் திரையாகும்! நினைவுகள் நிறைந்திடும் பூரண கும்பம் நிறை கலசம் காதல் கொண்டவர் ... |
| Posted: 03 May 2014 07:08 PM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
