Tamil News | Online Tamil News |
- தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல்
- ஏழுமலையானின் ரூ.2 லட்சம் கோடி சொத்து யாருக்கு சொந்தம்?
- மோடி அதிரடியால் மத்திய அரசு பணிகள் வேகம் : இழுத்தடிக்கும் குழுக்களை கலைத்து உத்தரவு
- தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதி ரூ.1.50 லட்சம் கோடி: மோடியை சந்திக்கும் போது கேட்க ஜெ., திட்டம்
- மிதப்பு வேண்டாம்; சட்டசபை தேர்தலுக்கு தயாராகுங்க: பா.ஜ., பொதுச் செயலர்களுக்கு மோடி ஆலோசனை
- எதிர்க்கட்சி தலைவர் பதவியேற்கும்படி ராகுலுக்கு நிர்ப்பந்தம்: மூன்றாவது நபர் கூடாது என தலைவர்கள் எதிர்ப்பு
- காவிரி, பெரியாறு, பாலாறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா?
- இன்று முதல் மின் தடை இல்லை
- தெலுங்கானா மாநிலம் நாளை உதயமாகும் நிலையில் குழப்பம்: பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படாததால் சிக்கல் நீடிப்பு
- பழைய கணக்கை முடிக்க பெட்டியோடு வரணும்: தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு
- அனல் மின் நிலையங்களில் ஊழியர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி
- 'ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது': சதானந்த கவுடா தகவல்
| தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு: கடும் வெயிலால், தள்ளிவைக்க வலியுறுத்தல் Posted: பள்ளி கல்வித் துறை அறிவிப்புப்படி, தமிழகம் முழுவதும், நாளை (2ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால், 'அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயிலின் கொடுமை நீடிப்பதால், பள்ளி திறப்பு தேதியை, 10 நாட்களுக்கு, தள்ளிவைக்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். 'பத்தாம் வகுப்பு மாணவர்கள், வெயிலால் பாதிக்கக்கூடாது என, பொது தேர்வு நேரத்தை, ஒரு மணி நேரம் முன்னதாக மாற்றிய தமிழக அரசு, இப்போது, மவுனம் காப்பது ஏன்?' என, ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.எந்த மாற்றமும் இல்லை: 'கோடை விடுமுறைக்குப் பின், தமிழகம் முழுவதும், நாளை, 2ம் ... |
| ஏழுமலையானின் ரூ.2 லட்சம் கோடி சொத்து யாருக்கு சொந்தம்? Posted: திருப்பதி: 'திருமலை ஏழுமலையானின் சொத்துகள் சீமாந்திராவுக்கே சொந்தம்' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆந்திர மாநிலம், நாளை, இரண்டாக பிரிய உள்ளது. இரண்டு மாநிலங்களுக்காக, ஆந்திராவில் உள்ள, அனைத்து துறைகளும் சமமாக பிரிக்கப்படுகின்றன.சேஷாசலம் மலை: திருமலை - திருப்பதி கோவில் உள்ள சேஷாசலம் மலை, சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இதில், திருமலை ஏழுமலையான் சொத்துகளை பிரிப்பது கடினம் என்பதால், இதன் முழு உரிமையை, சீமாந்திராவிடம், ஆந்திர அரசு வழங்கி உள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திரா ஒன்றாக இருந்தபோது, ... |
| மோடி அதிரடியால் மத்திய அரசு பணிகள் வேகம் : இழுத்தடிக்கும் குழுக்களை கலைத்து உத்தரவு Posted: புதுடில்லி : முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்கள் எல்லாம் நேற்று கலைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையால், மத்திய அரசு பணிகள் வேகம் பிடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.மன்மோகன் சிங் பிரதமராக இருந்த, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, காஸ் விலை நிர்ணயம், ஊழல் விவகாரங்கள், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்னைகள், நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள், பெரிய அளவிலான மின் திட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ... |
| Posted: தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2011ல் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி கேட்டார். இம்முறை நரேந்திர மோடியிடம், குறைந்தது, 1.50 லட்சம் கோடி ரூபாய் கேட்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்த வேண்டிய திட்டங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்ய வேண்டும். அதற்கேற்ப, தமிழக முதல்வர், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.தமிழக முதல்வராக, மூன்றாவது முறையாக, 2011ல், ஜெயலலிதா ... |
| மிதப்பு வேண்டாம்; சட்டசபை தேர்தலுக்கு தயாராகுங்க: பா.ஜ., பொதுச் செயலர்களுக்கு மோடி ஆலோசனை Posted: புதுடில்லி:பா.ஜ., பொதுச் செயலர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, 'லோக்சபா தேர்தல் வெற்றியால் மிதப்பாகி விடாதீர்கள். அடுத்த சில மாதங்களில், சில மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு தயாராகுங்கள்' என, ஆலோசனை தெரிவித்தார்.நாட்டின், 15வது பிரதமராக, கடந்த மாதம், 26ம் தேதி, மோடி பதவியேற்றார். பதவியேற்றது முதல், பிரதமருக்கான பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் அவர், நேற்று தன் ரேஸ்கோர்ஸ் இல்லத்தில், பா.ஜ., பொதுச் செயலர்களுடன், ஆலோசனை நடத்தினார்.வழிமுறைகள் என்ன?காலை உணவின் போது, ஒரு மணி நேரம் நடைபெற்ற ... |
| Posted: புதுடில்லி:'லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஏற்க வேண்டும். கட்சி கடும் நெருக்கடியை சந்திக்கும் இந்த நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பேற்பதை, அவர் தட்டிக் கழிக்கக் கூடாது' என்றும், காங்., இளம் தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, காங்கிரஸ் கட்சிக்குள் மாறுபட்ட குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. இந்த விஷயத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், சோனியாவுக்கு ஆதரவாகவும், இளம் தலைவர்கள் பலர், ராகுலுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளனர். அதேநேரத்தில், இரு ... |
| காவிரி, பெரியாறு, பாலாறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்குமா? Posted: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நீர் ஆதார பிரச்னைகளுக்கு, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஜெயலலிதா சந்திப்பில் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, தமிழகம், புதுச்சேரிக்கு ஆண்டுதோறும், 205 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட காலம் தாழ்த்தியதை, கர்நாடகா சாதகமாக பயன்படுத்தி வந்தது. கடந்த, 10 ஆண்டுகளாக காங்., தலைமையிலான மத்திய அரசு இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், உச்ச நீதிமன்றம் மூலம் ... |
| Posted: 'ஜூன் முதல், மின் தடை இருக்காது' என்ற தமிழக அரசின் உத்தரவு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. காற்றாலைகளில் கூடுதல் மின்சாரம் கிடைப்பதால், அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் இருக்காது என, தெரிகிறது.சீசன் துவக்கம்தமிழகத்தில் மின் தேவை, உற்பத்தியை காட்டிலும் அதிகம் உள்ளது. இதனால், நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, மின் தடை அமல்படுத்தப்பட்டது.தற்போது, வல்லூர், மேட்டூர் மற்றும் வட சென்னை விரிவாக்கம் ஆகிய, புதிய அனல் மின் நிலையங்களில் இருந்து, கூடுதலாக, 2,550 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.சீசன் துவங்கியுள்ளதால், காற்றாலைகளில், ... |
| Posted: நாட்டின், 29வது மாநிலமாக, 'தெலுங்கானா' நாளை உதயமாக உள்ள நிலையில், சீமாந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகளில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. கிராமங்கள் இணைப்பு, மின்சாரம், நீர் ஆதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளில் இன்னும் முழுத் தீர்வு காணப்படாததால், மாநிலப் பிரிவினைக்குப் பின்னும், இரு மாநிலங்களிடையே சுமூகமான நிலை ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.ஆந்திராவை பிரித்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற தெலுங்கானா பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு, நாளை நனவாக உள்ளது. பல ஆண்டுகளாக, தனி மாநில கோரிக்கையை ... |
| பழைய கணக்கை முடிக்க பெட்டியோடு வரணும்: தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு Posted: தேர்தல் செலவிற்கு வசூலித்த பணத் தையும், அதற்கான கணக்கு வழக்கையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என, தே.மு.தி.க., நிர்வாகிகளுக்கு 'இ-மெயில்' மூலம் அக்கட்சி தலைமை. ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளது.லோக்சபா தேர்தலில் சந்தித்த மிகப் பெரிய தோல்வியால், தே.மு.தி.க.,விற்கு இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அதுவரை கட்சியை கட்டி காக்க வேண்டிய நிர்பந்தம், கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.14 வேட்பாளர்கள்கட்சி வளர்ச்சிக்காக கோடி மற்றும் லட்சக்கணக்கில் முதலீடு செய்த மாவட்ட செயலர்கள், அடுத்து ... |
| அனல் மின் நிலையங்களில் ஊழியர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி Posted: தமிழகத்தில் உள்ள, மத்திய, மாநில அரசுகளின், அனல் மின் நிலையங்களில், சமீபகாலமாக, ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இதற்கு, அங்கு பணியில் உள்ள, அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என, கூறப்படுகிறது.90 சதவீதம் பேர்தமிழகத்தில், மத்திய அரசுக்கு சொந்தமாக, கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், திருவள்ளூர் மாவட்டத்தில், வல்லூர் அனல் மின் நிலையமும் உள்ளன.தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு, எண்ணுார், தூத்துக்குடி, வட சென்னை, மேட்டூரில், அனல் மின் நிலையங்கள் உள்ளன.இந்த அனல் மின் நிலையங்களில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ... |
| 'ரயில் கட்டண உயர்வு தவிர்க்க முடியாது': சதானந்த கவுடா தகவல் Posted: பெங்களூரு: ''அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பயணிகள் ரயில் கட்டண உயர்வு தவிர்க்க இயலாதது,'' என, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.மத்திய ரயில்வே அமைச்சராக பதவியேற்ற பின், மங்களூருவுக்கு வருகை தந்த அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்தனர்.பின், அவர், கூறியதாவது: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே, இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், சரக்கு கட்டணம், 5 சதவீதம், பயணிகள் கட்டணம், 10 சதவீதம் உயர்த்தப்பட்டன; ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூன் 01,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |