Tamil News | Online Tamil News |
- பிரதமரானாலும் விசாரணையை சந்திக்க தயார்: நரேந்திர மோடி பேட்டி
- அசாமில் தீவிரவாத தாக்குதல் நீடிப்பு: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது
- சென்னை ரயிலை நடுவழியில் நிறுத்தி கொள்ளை:தொடரும் சம்பவங்களால் பயணிகள் பீதி
- தமிழகத்தில் மேலும் பல பயங்கரவாதிகள் ஊடுருவல்: மத்திய உளவு போலீசார் எச்சரிக்கை
- விசாரணை அமைப்புகளுக்கிடையே பனிப்போர்: குண்டு வெடிப்பு வழக்கில் உண்மை வெளி வருமா
- தூர்தர்ஷன் தொலைக்காட்சி மீது நரேந்திர மோடி பாய்ச்சல்: சுதந்திரமாக செயல்படவில்லை என குற்றச்சாட்டு
- மூன்றாவது அணிக்கு ராகுல் கொடுத்த 'அல்வா'
- யார் சுகவாசி: மக்கள் தீர்மானிப்பர்: ஜெ.,வுக்கு கருணாநிதி பதில்
- பண பட்டுவாடா: அ.தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம்: குழு அமைத்து விசாரணை
- ஆண்டுக்கு 1,000 மெகாவாட் மின்தேவை அதிகரிப்பு: மின்பற்றாக்குறை மேலும் உயர வாய்ப்பு
- 800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள்: வருங்கால வைப்பு நிதி ரூ.2,000 கோடி 'அம்போ'
| பிரதமரானாலும் விசாரணையை சந்திக்க தயார்: நரேந்திர மோடி பேட்டி Posted: புதுடில்லி:நான் தவறு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டால் அல்லது சட்ட விரோதமாக செயல்பட்டதாக கூறப்பட்டால், மற்றவர்களை போல் இல்லாமல், விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாக பா.ஜ.,பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தான் பிரதமரானாலும் விசாரணையை சந்திக்க தயாராக உள்ளதாகவும் கூறினார்.தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது: நான் 4 அல்லது 5 மாதங்களாக பல மேடைகளில் உரையாற்றியுள்ளேன். நான் கடுமையான உழைப்பாளி, சிறு வயதில் தொழிலாளியாக பணிபுரிந்துள்ளேன். கட்சி எனக்கு வழங்கிய பணியை சிறப்பாக ... |
| அசாமில் தீவிரவாத தாக்குதல் நீடிப்பு: பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது Posted: கவுகாத்தி: அசாமில், போடோலேண்ட் தேசிய ஜனநாயக முன்னணி (சாங்பிஜித் பிரிவு) தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில், பலியானவர்கள் எண்ணிக்கை, 32 ஆக உயர்ந்துள்ளது.அசாமில், வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களின் ஆதிக்கம் மற்றும் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், போடோ பழங்குடி இன மக்களுக்காக, தனி மாநிலம் உருவாக்கக் கோரியும் போராடி வரும், தீவிரவாத அமைப்புகளில் ஒன்று, போடோலேண்ட் தேசிய ஜனநாயக முன்னணி. இந்த அமைப்பின் தீவிரவாதிகள், கடந்த வியாழக்கிழமை முதல், கோக்ராஜ்கர் உட்பட, சில மாவட்டங்களில் கடும் தாக்குதல் நடத்தி ... |
| சென்னை ரயிலை நடுவழியில் நிறுத்தி கொள்ளை:தொடரும் சம்பவங்களால் பயணிகள் பீதி Posted: சங்ககிரி:சங்ககிரி அருகே, சிக்னலில் கோளாறு ஏற்படுத்தி, சென்னையில் இருந்து சென்ற நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில், நேற்று அதிகாலை, பெண் பயணிகள் மூவரிடம், மர்ம கும்பல், 8 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றது. ஒரே வாரத்தில், இது போன்று இரண்டாவது கொள்ளை சம்பவம் நடந்துஉள்ளதால், ரயில் பயணிகளிடம் பீதி ஏற்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு, கோவை மாவட்டம், மேட்டுபாளையத்திற்கு, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. நள்ளிரவு, 2:50 மணிக்கு, சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, மாவெளிபாளையம் ரயில் நிலையத்தில் ரயில் ... |
| தமிழகத்தில் மேலும் பல பயங்கரவாதிகள் ஊடுருவல்: மத்திய உளவு போலீசார் எச்சரிக்கை Posted: சென்னை: பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யால் பயிற்சி அளிக்கப்பட்ட, மேலும் பல பயங்கரவாதிகள், தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக, மத்திய உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூரு - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த, இரட்டை குண்டு வெடிப்பு பற்றி சி.பி.சி.ஐ.டி., போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள், பீகார் மாநிலம், பாட்னாவில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் வைக்கப்பட்ட குண்டுகள் போல் இருப்பதை, தேசிய பாதுகாப்பு ... |
| விசாரணை அமைப்புகளுக்கிடையே பனிப்போர்: குண்டு வெடிப்பு வழக்கில் உண்மை வெளி வருமா Posted: சென்னை: சென்னை, சென்ட்ரல் ரயில் நிலைய வெடிகுண்டு வழக்கை விசாரிப்பதில், தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) மற்றும் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு இடையே, பனிப்போர் நீடிக்கிறது.தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார், இந்த சம்பவம், தமிழகத்தை குறிவைத்து நடத்தப்பட்டது இல்லை என்பதை உறுதி செய்ய, மெனக்கெட்டு வருகின்றனர். ஆனால், தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள், மத்திய உளவு அமைப்பின் தகவல் அடிப்படையில், பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் கைது எதிரொலியாக, இந்த சம்பவம் நடந்ததாக உறுதியாக கூறி வருகின்றனர். இதனால், சம்பவத்தின் உண்மை பின்னணி தெரியாமல் போய்விட வாய்ப்புள்ளதாக, ... |
| தூர்தர்ஷன் தொலைக்காட்சி மீது நரேந்திர மோடி பாய்ச்சல்: சுதந்திரமாக செயல்படவில்லை என குற்றச்சாட்டு Posted: ஆமதாபாத்: 'தொழில் ரீதியான சுதந்திரத்தை பேணிக்காக்க, பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் போராடி வருகிறது' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி, மறுப்பு தெரிவிக்கும் விதமாக, ''மத்திய அரசு, தூர்தர்ஷனை நிர்வகிக்கும் பிரசார் பாரதி அமைப்பைக் கட்டுப்படுத்துவதில்லை,'' என தெரிவித்துள்ளார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பேட்டி, சமீபத்தில், தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பானது. அதேநேரத்தில், மோடியின் பேட்டி, தாமதமாக ஒளிபரப்பானதாகவும், ... |
| மூன்றாவது அணிக்கு ராகுல் கொடுத்த 'அல்வா' Posted: புதுடில்லி: ''மத்தியில் ஆட்சி அமைக்க, மூன்றாவது அணியை, காங்கிரஸ் ஆதரிக்காது,'' என, அந்த கட்சியின் துணை தலைவர் ராகுல் கூறியுள்ளதால், தேர்தலுக்கு பின், மூன்றாவது அணியை அமைக்க திட்டமிட்டிருந்த அரசியல் கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஒரு அணியாகவும், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, ஒரு அணியாகவும், லோக்சபா தேர்தலை சந்திக்கின்றன. சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், அ.தி.மு.க., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள், தனித் தனியாக தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் கருத்து ... |
| யார் சுகவாசி: மக்கள் தீர்மானிப்பர்: ஜெ.,வுக்கு கருணாநிதி பதில் Posted: சென்னை: 'யார் சுகவாசி என, மக்கள் தீர்மானிக்கட்டும்' என, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து, நான் மட்டும் அல்ல; தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அறிக்கை விடுத்தனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு, என்னை மட்டும், முதல்வர் ஜெயலலிதா கடுமையாக தாக்கி அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், தி.மு.க., ஆட்சியின் போது, 1998ல், கோவையில் நடந்த குண்டு வெடிப்பை ஒப்பிட்டுள்ளார். கோவையில், குண்டு வெடிப்பு ... |
| பண பட்டுவாடா: அ.தி.மு.க., நிர்வாகிகள் கலக்கம்: குழு அமைத்து விசாரணை Posted: லோக்சபா தேர்தலில், கட்சி நிர்வாகிகள் ஒழுங்காக வேலை பார்த்தனரா, வாக்காளர்களுக்கு முறையாக பணம் சப்ளை செய்யப்பட்டதா என்பதை கண்டறிய, வரும், 8ம் தேதி, அ.தி.மு.க., விசாரணைக்குழு, திருச்சிக்கு வருகிறது. இதே போல, தமிழகம் முழுவதும் குழுவினர் செல்ல உள்ளதால், கட்சி பணத்தை, 'அமுக்கிய' நிர்வாகிகள், கலக்கத்தில் உள்ளனர்.மறைமுக மோதல்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் பணம் சப்ளை செய்யப்பட்டது. தேர்தலின் போது, மாவட்ட செயலர், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு இடையே, மறைமுக மோதல் இருந்தது. சில ... |
| ஆண்டுக்கு 1,000 மெகாவாட் மின்தேவை அதிகரிப்பு: மின்பற்றாக்குறை மேலும் உயர வாய்ப்பு Posted: தமிழகத்தின் மின்தேவை ஆண்டுக்கு, 1,000 மெகாவாட் அதிகரித்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும், 1,000 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி மற்றும் வினியோகம் செய்யாத பட்சத்தில், வரும் ஆண்டு களில் மின்தேவை மேலும்அதிகரிக்க வாய்ப்புள்ளது.கடந்த, 1957ல் தமிழ்நாடு மின்வாரியம் உதயமான போது, தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன், 256 மெகாவாட். மின்வாரியம் துவங்கி, 56 ஆண்டு ஆகியுள்ள நிலையில், தற்போது மின் உற்பத்தி நிறுவு திறன், 10, 500 மெகாவாட் ஆக உள்ளது. ஆனால், ஆறு ஆண்டுகளாக மின் உற்பத்தி நிறுவு திறன் மற்றும் வினியோக அளவை விட, தொழிற்சாலைகள் அதிகரிப்பு, தனிநபர் மின்நுகர்வு ... |
| 800 கோடி ரூபாய் நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள்: வருங்கால வைப்பு நிதி ரூ.2,000 கோடி 'அம்போ' Posted: வருவாய் இல்லாத வழித்தடங்களில் பஸ்கள் இயக்கம், அதிகரிக்கும் இயக்கச் செலவு உள்ளிட்ட காரணங்களால், போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுதோறும், 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில், நிர்வாகத்தினர் கை வைத்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள, எட்டு போக்குவரத்து கழகங்ககளில், 22 ஆயிரம் பஸ்கள் உள்ளன. இவற்றில், 20,500 பஸ்கள், அனைத்து மாவட்ட பகுதிகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இயக்கப்படுகின்றன.நிலைமையை சமாளிக்க: நிர்வாகம், ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம், 1.43 லட்சம் ஊழியர்கள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 04,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |