Daily Thanthi |
- தாம்பரம் அருகே தண்ணீர்தொட்டியில் தவறி விழுந்து 2½ வயது குழந்தை சாவு
- ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் 2,100 பேர் பலி
- வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றி பஞ்சாப்பின் சாதனைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது
- நாசவேலை நடத்த சதித்திட்டம் தமிழகத்துக்கு கடல் வழியாக மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
- ராஜஸ்தான் 4-வது வெற்றி டெல்லி அணியை தோற்கடித்தது
- பாலின சர்ச்சையில் சிக்கிய தடகள வீராங்கனை: பயிற்சியாளர் படிப்பை முடித்தார், சாந்தி ‘சிறந்த வீரர்களை உருவாக்கி பெருமை சேர்ப்பேன்’ என்று பேட்டி
- கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ் கட்டணம் திடீர் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது
- போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்
- தலீபான் ஆதரவு சன்னி முஸ்லிம்கள்
| தாம்பரம் அருகே தண்ணீர்தொட்டியில் தவறி விழுந்து 2½ வயது குழந்தை சாவு Posted: 03 May 2014 01:08 PM PDT தாம்பரம், தாம்பரம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 2½ வயது குழந்தை தாம்பரத்தை அடுத்துள்ள அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சத்யா. தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி கற்பகம். இவர்களுக்கு ஹரிஷ் (வயது 2½) என்கிற ஆண் குழந்தை இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஹரிஷ் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவனது பெற்றோர் வந்து பார்த்தபோது ஹரிஷை காணவில்லை. இதனால் பதறிப்போன அவனது பெற்றோர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் குழந்தை ஹரிஷ் கிடைக்கவில்லை. தண்ணீர் தொட்டியில் குழந்தை அப்போது எதிர் வீட்டில் திறந்து கிடந்த தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது ஹரிஷ் மயங்கிய நிலையில் கிடந்தான். உடனே குழந்தை ஹரிசை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்தபோது அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலை நசுங்கி ஒருவர் சாவு * கொருக்குப்பேட்டை இளையமுதலி தெருவை சேர்ந்த சுதாகர் (35) என்பவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (30), சுரேஷ் (26) ஆகியோர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது திடீரென 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக்கொண்டதில் கீழே விழுந்த சுதாகர் மீது மினி வேன் ஒன்று ஏறி, இறங்கியதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். * ஆவடியை அடுத்த வெள்ளானூர் பகுதியை சேர்ந்தவர் தேவன் (43). கடந்த மாதம் 28–ந்தேதி கன்னடபாளையம் அருகே உள்ள கடையில் இருந்த இரும்பு பீரோவை நகர்த்தியபோது திடீரென அவர் நெஞ்சு பகுதியில் பீரோ விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த தேவன் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். * வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சத்தீஷ் (25). நேற்று அதிகாலை மாநகர பஸ்சில் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் பஸ் கண்டக்டர் செல்வம் (45) என்பவரை தாக்கியதாக செல்வத்தை போலீசார் கைது செய்தனர். * எம்.ஜி.ஆர்.நகர் பாரதியார் தெருவை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மகன் சாய் சங்கர் (17). பிளஸ்–2 தேர்வு எழுதி முடித்த இவர் நேற்று முன்தினம் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். image: category:Tagging: |
| ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் 2,100 பேர் பலி Posted: 03 May 2014 01:07 PM PDT Flash News Text: ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கரம் நிலச்சரிவில் 2,100 பேர் பலி |
| வரதராஜ பெருமாள் கோவிலில் பிரமோற்சவ விழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது Posted: 03 May 2014 12:47 PM PDT காஞ்சீபுரம் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது. வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சோழர், பல்லவர், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில், 3 ராஜ கோபுரங்கள் மற்றும் 5 பிரகாரங்களை கொண்டது. பல வரலாற்று சிறப்புகளை உடைய காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா வருகிற 12-ந்தேதி(திங்கட்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று மாலை சிம்ம வாகனம், 13-ந்தேதி அதிகாலை அம்ச வாகனம், மாலை சூர்ய பிரபையில் உற்சவம் நடக்கிறது. கருடசேவை உற்சவம் 14-ந்தேதி முக்கிய திருவிழாவான கருடசேவை உற்சவம் நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் உற்சவர் பெருமாள் எழுந்தருளுவார். அதிகாலை 5 மணியளவில் கோபுர தரிசனம் நடைபெறும். பின்னர் கருட வாகனத்தில் பெருமாள் வலம் வருவார். அங்கிருந்து தேசிகர் கோவிலுக்கு சென்று விசேஷ மரியாதை அளிக்கப்படும். பிள்ளையார்பாளையம், கங்கைகொண்டான் மண்டபம், பூக்கடை சத்திரம், மூங்கில் மண்டபம், காந்தி ரோடு வழியாக உற்சவர் பெருமாள் மீண்டும் கோவிலை சென்றடைவார்¢. அன்று இரவு அனுமந்த வாகன உற்சவம் நடக்கிறது. 15-ந்தேதி அதிகாலை சேஷ வாகனம், மாலை சந்திரபிரபை வாகன உற்சவமும், 16-ந்தேதி அதிகாலை நாச்சியார் கோலத்தில் தங்கப்பல்லக்கு, அன்று மாலை யாளி வாகனத்தில் உற்சவமும், 17-ந்தேதி அதிகாலை தங்க சப்பரம், மாலை யானை வாகன வீதிஉலாவும் நடைபெறும். தேர்த்திருவிழா விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா 18-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. 19-ந்தேதி பகல் தொட்டித்திருமஞ்சனம், மாலை குதிரை வாகனம், 20-ந்தேதி அதிகாலை ஆள்மேல்பல்லக்கு, காலை சிறப்பு வாய்ந்த தீர்த்தவாரி, மாலை புண்ணியகோடி விமானம், 21-ந்தேதி பகல் த்வாதசஆராதனம், இரவு வெட்டிவேர் சப்பரம் என 10 நாட்களும் தொடர்ந்து உற்சவங்கள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலரும், உதவி ஆணையருமான என்.தியாகராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். image: category:Tagging:News Group Category: |
| Posted: 03 May 2014 12:45 PM PDT மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில், பஞ்சாப் அணியின் சாதனைப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது. ஓஜா நீக்கம் 8 அணிகள் இடையிலான 7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 2–வது கட்ட ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே–ஆப்' என்ற அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 22–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதின. மும்பை அணியில் ஒரே ஒரு மாற்றமாக பிரக்யான் ஓஜா நீக்கப்பட்டு, ஜஸ்பிரித் பம்ரா சேர்க்கப்பட்டார். 169 ரன்கள் இலக்கு இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பஞ்சாப்புக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. ஷேவாக் ஒரு ரன்னில் ரன்–அவுட் ஆக, புஜாரா 19 ரன்னில் வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும், கிளைன் மேக்ஸ்வெல்லும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். வழக்கம் போல் தாக்குதல் பாணியை கடைபிடித்த மேக்ஸ்வெல் 45 ரன்களில் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் ஆரம்பத்தில் நிதானம் காட்டிய சஹாவும் போக போக வேகத்தை கூட்டினார். ஹர்பஜன்சிங், பொல்லார்ட்டின் ஓவர்களில் பந்தை எல்லைக்கோட்டிற்கு வெளியே ஓடவிட்டார். மேக்ஸ்வெல் ஆடிய விதத்தை பார்த்த போது பஞ்சாப் அணி 180 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் இறுதி கட்டத்தில் பஞ்சாப்பின் ரன்வேகம் சற்று தளர்ந்து போனது. குறிப்பாக கடைசி 8 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 20 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. சஹா 59 ரன்களுடன் (47 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ராயுடு 8 ரன் அடுத்து 169 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு பவுண்டரியுடன் தொடக்கம் தந்த பென் டங் (5 ரன்) அதே ஓவரில் நடையை கட்டினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான விக்கெட் கீப்பர் சிதம்பரம் கவுதம் ரன் ஏதுமின்றி வெளியேறி இருக்க வேண்டியது. அதிர்ஷ்டவசமாக கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த அவர் சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் அட்டகாசமான 2 சிக்சர்களை தூக்கி, உள்ளூர் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்தார். இதற்கு மத்தியில் 2–வது விக்கெட்டுக்கு இறங்கிய அம்பத்தி ராயுடு 8 ரன்னிலும், அதைத் தொடர்ந்து சிதம்பரம் கவுதம் 33 ரன்களிலும் (29 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினர். பொல்லார்ட் அதிரடி 10 ஓவர்களில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்து. இந்த சூழலில் கேப்டன் ரோகித் ஷர்மாவும், கோரி ஆண்டர்சனும் கைகோர்த்து நேர்த்தியாக ஆடினர். அவ்வப்போது சிக்சர், பவுண்டரி விளாசி ரசிகர்களை குஷிப்படுத்திய இவர்கள் வெற்றிப்பாதையை உருவாக்கினர். ஆனால் ரோகித் ஷர்மாவும் (39 ரன், 34 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஆண்டர்சனும்(35 ரன், 3 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி 3 ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டன. கீரன் பொல்லார்ட்டும், ஆதித்ய தாரேவும் களத்தில் இருந்தனர். 18–வது ஓவரை வீசிய பாலாஜியின் பந்து வீச்சில் ஆதித்ய தாரே ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்ட அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து 2 ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. 19–வது ஓவரை அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் வீசினார். இந்த ஓவரை சர்வ சாதாரணமாக எதிர்கொண்ட பொல்லார்ட் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்து நொறுக்கி அவரை திகைக்க வைத்ததுடன், நெருக்கடியையும் குறைத்தார். இந்த ஓவரில் 20 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவையாக இருந்த நிலையில், சந்தீப் ஷர்மா வீசிய முதல் பந்தை பொல்லார்ட் சிக்சராக்கி ஆட்டத்தை சுபமாக முடித்து வைத்தார். மும்பை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 170 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொல்லார்ட் 28 ரன்களுடனும் (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஆதித்ய தாரே 16 ரன்களுடனும் (6 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் நின்றனர். ஆல்–ரவுண்டர் கோரி ஆண்டர்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார். மும்பைக்கு முதல் வெற்றி ஐக்கிய அரபு நாட்டில் நடந்த முதற்கட்ட சுற்றில் 5 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து கடும் விமர்சனத்திற்குள்ளான மும்பை அணிக்கு இது தான் முதல் வெற்றியாகும். கடந்த சீசனில் வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 8 ஆட்டங்களிலும் மும்பை வெற்றி பெற்றது. இது தங்களின் கோட்டை என்பதை மீண்டும் ஒரு முறை மும்பை அணியினர் நிரூபித்து இருக்கிறார்கள். அதே சமயம் நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று கம்பீரமாக பயணித்துக் கொண்டிருந்த பஞ்சாப்பின் வீறுநடைக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. அவர்களுக்கு இது தான் முதல் தோல்வியாகும். சென்னை முதலிடம் இதுவரை புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்த பஞ்சாப் அணி இந்த தோல்வியின் மூலம் 2–வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்கோர் போர்டு பஞ்சாப் புஜாரா (சி) கவுதம் (பி) ஆண்டர்சன் 19 ஷேவாக் (ரன்–அவுட்) 1 சஹா (நாட்–அவுட்) 59 மேக்ஸ்வெல் (சி) டங் (பி) ஹர்பஜன்சிங் 45 பெய்லி (சி) ஆண்டர்சன் (பி) ஹர்பஜன் 15 டேவிட் மில்லர் (சி) டங் (பி) மலிங்கா 16 ஜான்சன் (நாட்–அவுட்) 0 எக்ஸ்டிரா 13 மொத்தம் (20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 168 விக்கெட் வீழ்ச்சி: 1–13, 2–24, 3–93, 4–130, 5–165 பந்து வீச்சு விவரம் ஜாகீர்கான் 3.3–0–28–0 பம்ரா 4–0–25–0 ஆண்டர்சன் 2–0–17–1 மலிங்கா 4–0–25–1 ஹர்பஜன்சிங் 4–0–34–2 பொல்லார்ட் 2.3–0–32–0 மும்பை பென் டங் (சி) சஹா (பி) சந்தீப் ஷர்மா 5 கவுதம் எல்.பி.டபிள்யூ (பி) ரிஷி தவான் 33 அம்பத்தி ராயுடு எல்.பி.டபிள்யூ (பி) சந்தீப் ஷர்மா 8 ரோகித் ஷர்மா (சி) சஹா (பி) பாலாஜி 39 கோரி ஆண்டர்சன் (சி) மில்லர் (பி) ரிஷி தவான் 35 பொல்லார்ட் (நாட்–அவுட்) 28 ஆதித்ய தாரே (நாட்–அவுட்) 16 எக்ஸ்டிரா 6 மொத்தம் (19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு) 170 விக்கெட் வீழ்ச்சி: 1–6, 2–23, 3–70, 4–123, 5–126 பந்து வீச்சு விவரம் சந்தீப் ஷர்மா 3.1–0–29–2 எல்.பாலாஜி 4–0–38–1 ஜான்சன் 4–0–37–0 அக்ஷர் பட்டேல் 4–0–40–0 ரிஷி தவான் 4–0–23–2 image: category:Tagging: |
| Posted: 03 May 2014 12:43 PM PDT சென்னை, பெங்களூரில் இருந்து கவுகாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த வியாழக்கிழமை காலை சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது அதில் 2 குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்பு பற்றி விசாரணை இதில் ஆந்திராவைச் சேர்ந்த சுவாதி என்ற பெண் என்ஜினீயர் பலி ஆனார். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூர், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவர்கள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். பீகார் தலைநகர் பாட்னா ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த குண்டு வெடிப்பிலும், சென்னை சென்டிரலில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடந்த குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான வெடிபொருள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தேசிய பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தீவிரவாதிகள் ஊடுருவல் இதைத்தொடர்ந்து பாட்னா ரெயில் நிலைய குண்டு வெடிப்பில் கைதாகி இருக்கும் இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளிடம் மத்திய உளவுப்பிரிவு மற்றும் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த மேலும் சில தீவிரவாதிகள் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஊடுருவி இருப்பதாகவும், 'சிலிப்பர் செல்' பிரிவைச் சேர்ந்த அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாகவும் தெரிய வந்தது. எச்சரிக்கை இதுபற்றி மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அதில், கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவியுள்ள அந்த தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடக்கூடும் என்று எச்சரித்து உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் போலீசார் 'உஷார்'படுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளையும், தமிழகத்தில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்பு இல்லை இதற்கிடையே கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பக்கீரிமாலிமார் தெருவில் உள்ள பள்ளிவாசலில் பதுங்கி இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி (வயது 39) என்ற இந்திய முஜாகிதீன் இயக்க தீவிரவாதியை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் அவரை கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ராஜஸ்தானுக்கு நேற்று அழைத்துச் சென்றனர். இதற்காக சென்னை கொண்டு வரப்பட்ட அஷ்ரப் அலியை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் இரவு விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து, அஷ்ரப் அலியை விமானம் மூலம் நேற்று மதியம் போலீசார் ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மர்ம நபர் பற்றி விசாரணை சென்னை சென்டிரல் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் குண்டுகள் வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் அங்கு இருந்து வெளியேறி சென்ற மர்மநபரின் வீடியோ பதிவை நாங்கள் நேற்று முன்தினம் வெளியிட்டு உள்ளோம். அந்த வீடியோ பதிவை அஷ்ரப் அலிக்கு போட்டுக்காட்டி, அதில் பதிவாகி இருந்த மர்ம நபரை பற்றி விசாரித்தோம். இதில், அஷ்ரப் அலிக்கும், சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு சம்பவத்துக் கும் தொடர்பு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்பு நடந்த சென்டிரல் ரெயில் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட வெடிமருந்தை ஆய்வு செய்தபோது, அந்த வெடிமருந்தும், பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த ஆண்டு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவத்தில் சேகரிக்கப்பட்ட வெடிமருந்தும் ஒன்றாக இருப்பது தெரிய வந்தது.. எனவே, கவுகாத்தி ரெயிலில் நடந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் இயக்க தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 'ஐ.ஜி.' மகேஷ்குமார் அகர்வால் சென்டிரல் ரெயில் நிலைய குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. 'ஐ.ஜி.' மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது:- ரெயிலில் குண்டு வைத்த தீவிரவாதிகள் மிகப்பெரிய 'நெட்வொர்க்'காக அமைத்து செயல்பட்டு உள்ளனர். இவர் கள் பல மாநிலங்களில் கூடி சதித்திட்டம் தீட்டிய பின்னர் குண்டு வைத்து இருக்கிறார் கள். இதனால், சி.பி.சி.ஐ.டி. போலீசார் 150-க்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் தலைமையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு சென்று அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டு இருக்கிறது. குற்றவாளிகள் யார்? என்பது பற்றியெல்லாம் ஓரளவு தடயங்களும், தகவல்களும் எங்களுக்கு கிடைத்து உள்ளது. குற்றவாளிகள் எந்நேரத்திலும் பிடிபடலாம். அதற்கு காலக்கெடு சொல்ல முடியாது. ஒத்துழைப்பு அதே நேரம், இந்த வழக்கு விசாரணைக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்து பெரும் ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த நேரத்தில் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பதிவான வீடியோவில் பதிவாகி இருந்த சந்தேகத்துக்கு இடமான நபரின் படத்தை நேற்று முன்தினம் வெளியிட்டோம். அந்த படத்தை பார்த்துவிட்டு, பொதுமக்கள் பலர் எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல தகவல்களை கொடுத்து வருகின்றனர். அவற்றின் அடிப்படையில் நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். எனவே, குற்றவாளிகளை விரைவில் நெருங்கிவிடுவோம். இந்த சதித்திட்டத்தில் தொடர்புடைய அனைவரையும் விரைவில் கைது செய்து விடுவோம். இவ்வாறு ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் கூறினார். News Category:Hot Topic Icon : News Group Category: |
| ராஜஸ்தான் 4-வது வெற்றி டெல்லி அணியை தோற்கடித்தது Posted: 03 May 2014 12:42 PM PDT புதுடெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு டெல்லியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் களம் இறங்கி பேட் செய்த குயின்டான் டீ காக் (42 ரன்), முரளிவிஜய் (13 ரன்), கேப்டன் கெவின் பீட்டர்சன் (14 ரன்), தினேஷ் கார்த்திக் (12 ரன்), டுமினி (39 ரன், கெதார் ஜாதவ் (28 ரன், நாட்-அவுட்) என்று அனைவரும் இரட்டை இலக்கை தொட்டனர். ராஜஸ்தான் தரப்பில் பவுல்க்னெர், பிரவின் தாம்பே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்து 153 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் கருண் நாயர் நங்கூரம் போன்று நிலைத்து நின்று விளையாடினார். அவருக்கு ரஹானே (12 ரன்), சஞ்சு சாம்சன் (34 ரன், 2 பவுண்டரி, 2 சிக்சர்), ரஜத் பாட்டியா (17 ரன்) கணிசமான ஒத்துழைப்பு கொடுத்ததால், ராஜஸ்தான் அணி வெற்றியை நோக்கி துரிதமாக பயணித்தது. இறுதியில் கருண் நாயரும், கேப்டன் ஷேன் வாட்சனும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 156 ரன்கள் திரட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை சுவைத்தது. கருண் நாயர் 73 ரன்களுடனும் (50 பந்து, 8 பவுண்டரி 2 சிக்சர்), வாட்சன் 2 சிக்சருடன் 16 ரன்களுடனும் (10 பந்து) களத்தில் இருந்தனர். 6-வது ஆட்டத்தில் ஆடிய முன்னாள் சாம்பியன் ராஜஸ்தானுக்கு இது 4-வது வெற்றியாகும். 6-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய டெல்லிக்கு 4-வது தோல்வியாகும். image: category:Tagging: |
| Posted: 03 May 2014 12:34 PM PDT திருவரங்குளம், பாலின சர்ச்சையில் சிக்கிய தமிழக தடகள வீராங்கனை சாந்தி பயிற்சியாளர் படிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறார். தடகள மங்கை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கத்தக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தி (வயது 33). ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் 2006–ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதன் பிறகு அவரிடம் நடத்தப்பட்ட பாலின பரிசோதனையில் அவர் பெண் தன்மை குறைந்தவர் என்ற சர்ச்சை கிளம்பியது. பாலின பிரச்சினையால் அவரிடம் இருந்து பதக்கம் பறிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு அப்போதைய தமிழக அரசு ரூ.15 லட்சம் பரிசும், டி.வி.யும் வழங்கி கவுரவித்தது. பாலின விவகாரத்தால் அவரால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. திறமை இருந்தும் அதை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்காமல் தவித்தார். குடும்பத்தின் ஏழ்மை காரணமாக தனது சொந்த ஊரில் உறவினர் வீட்டு செங்கல் சூளையில் செங்கல் தயாரிக்கும் வேலை செய்தார். அதில் கூலியாக கிடைத்த பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்தினார். பயிற்சியாளராகிறார் சாந்தியின் சோக வாழ்க்கை குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு ஆதரவு கரம் நீட்டியது. மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் வீராங்கனை சாந்தி கடந்த ஆண்டு விளையாட்டு பயிற்சியாளர் படிப்பிற்கான பயிற்சி பெற பெங்களூரில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அங்கு பயிற்சியை முடித்து, தடகள பயிற்சியாளர் தகுதியை அடைய வேண்டும் என்ற அவரது கனவு கடந்த 30–ந்தேதி நிறைவேறியது. அன்று பயிற்சியாளருக்குரிய சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டது. இப்போது சொந்த ஊருக்கு திரும்பியிருக்கும் சாந்தி மேலும் 2 மாத பயிற்சியை மயிலாடுதுறையில் நிறைவு செய்தவுடன் தேசிய விளையாட்டு அகாடமியில் பயிற்சியாளர் பணியை ஏற்க இருக்கிறார். இது குறித்து சாந்தி நிருபர்களிடம் கூறுகையில், 'நான் பயிற்சியாளராகி, இந்தியாவிற்கு உலக அளவில் புகழ் தேடி தரும் வீரர்களை உருவாக்குவேன். சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் நான் பெற முடியாத கோப்பை, பதக்கங்களை என் மூலம் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் பெற தயார்படுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்க்க பாடுபடுவேன்' என்றார். image: category: |
| கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ் கட்டணம் திடீர் உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது Posted: 03 May 2014 12:32 PM PDT பெங்களூர், கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக பஸ் கட்டணம் நேற்று திடீர் என உயர்த்தப்பட்டது. பழைய கட்டணத்தில் 8 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. கட்டணம் உயர்வு கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் பெங்களூர் மாநகர போக்கவரத்து கழக (பி.எம்.டி.சி.) பஸ் கட்டணம் கடந்த சில நாட்களுக்கு முன் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதற்கு பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் பயணிகளுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் அளித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பஸ் கட்டணமும் நேற்று திடீர் என்று உயர்த்தப்பட்டது. கட்டண உயர்வு சுமார் 8 சதவீதம் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– ரூ.207 கோடி இழப்பு டீசல் விலை உயர்வு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.207 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து கழகங்கள் மீதான இந்த சுமையை குறைக்கும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். அதாவது கிராமப்புற பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சாதாரண பஸ்களில் 7.66 சதவீதமும், இதர பஸ்களில் 7.96 சதவீதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது. வடமேற்கு, வடகிழக்கு போக்குவரத்து கழகங்களும் இதே அளவுக்கு பஸ் கட்டணத்தை உயர்த்துகின்றன. இந்த கட்டண உயர்வு மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.124 கோடி கிடைக்கும். இருந்தாலும் இழப்பை ஈடுசெய்வதில் ஆண்டுக்கு ரூ.83.95 கோடி பற்றாக்குறை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கட்டண விவரம் பெங்களூரில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் விரைவு பஸ்களின் பழைய மற்றும் புதிய கட்டண விவரம் (ரூபாயில்) வருமாறு:– பழைய கட்டணம் புதிய கட்டணம் 1. மைசூர் 120 132 2. மங்களூர் 307 332 3. ஊப்ளி 356 385 4. மண்டியா 83 90 5. தார்வார் 373 403 6. குல்பர்கா 548 592 7. பெல்லாரி 275 296 8. தாவணகெரே 230 249 9. சிமோகா 247 267 10. பெல்காம் 439 474 image: category:Tagging:News Group Category: |
| போர்ச்சுகல் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன் Posted: 03 May 2014 12:28 PM PDT ஓய்ராஸ், போர்ச்சுகல் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஓய்ராஸ் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் இரட்டையர் இறுதிசுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா– ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6–4, 6–3 என்ற நேர் செட்டில் எவா ஹிர்டினோவா (செக்குடியரசு)– வலேரியா சோலோவ் யவா (ரஷியா) இணையை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது. இந்த ஆட்டம் 1 மணி 18 நிமிடங்கள் நடந்தது. இந்த சீசனில் முதல் கோப்பையை பெற்ற இந்த ஜோடிக்கு ரூ.8¼ லட்சம் பரிசுத்தொகையும், 280 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோ சுவரேஸ் நவரோ 6–4, 3–6, 6–4 செட் கணக்கில் ரஷியாவின் குஸ்னட்சோவாவை வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றார். image: category:Tagging: |
| தலீபான் ஆதரவு சன்னி முஸ்லிம்கள் Posted: 03 May 2014 12:02 PM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
