ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எம்மைப் பற்றி - கோ. செந்தில்குமார்
- ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி
- ஜனவரி முதல் பழைய காசோலைகளை வங்கிகள் ஏற்காது!
- பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?
- திப்பு சுல்தான் இறந்த தினம்: மே 4 -1799
- சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்: மே 4- 1767
- கிராமத்துக் கைமணம் – கம்பு
- திப்பு சுல்தான்
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 600 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டது
- சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடகை வீடு தர மறுப்பு!
- பிளாஸ்டிக் பூதத்தை எதிர்க்கும் மஞ்சப்பை
- மின்னல் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?-
- தமிழகத்தை துளைத்த தோட்டாக்களும்...சிதறடித்த வெடிகுண்டுகளும்!
- முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி -
- தேவாரத் திருமுறை இசைப் பயிற்சி முகாம்
- அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
- ஆங்கில இலக்கணம் -எளிய தமிழில்
- தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு
- கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்)
- உறக்கமில்லா இரவுகள்
- எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935
- பலாப்பழம்- வண்ணநிலவன்
- அப்பம் கேட்ட அரங்கநாதர்
- உலக பத்திரிகை சுதந்திர நாள்: மே 3
- 1,000 பெண்களில் 17 பேருக்கு ஆஸ்துமா பிரச்சினை: டாக்டர்கள் தகவல்
- கோயிலுக்குக் காவல் யார்?
- EEGARAI FLASH NEWS
- கணவன், மனைவியாக வாழ்ந்தவர் பிரிந்தால் ஜீவனாம்சம் கட்டாயம் - உயர் நீதிமன்றம்
- ரமணியின் கவிதைகள்
- கருப்புப் பண விவரத்தை தர மறுக்கும் சுவிஸ் அரசு: சிதம்பரம் கண்டனம்!
- கோடை கவிதைகள் {சென்ரியு }
- அழிவதற்கு ஒரு நகரம்!
- முத்திரைகளின் செயல்பாடுகள்
- சத்யஜித் ரே: இந்திய ஆன்மாவின் கலைஞர்
- மிருகம் - வண்ணநிலவன்
- எஸ்தர் - வண்ண நிலவன்
- காட்டில் ஒரு மான் - அம்பை
- நீர்மை - ந. முத்துசாமி
| எம்மைப் பற்றி - கோ. செந்தில்குமார் Posted: 03 May 2014 12:32 PM PDT பெயர்: கோ. செந்தில்குமார் சொந்த ஊர்: ஊசூர் (தங்க கோவில் அருகே), வேலூர் மாவட்டம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் ஆண்டவர் (கூகுள் தேடுபொறி) பொழுதுபோக்கு: ஆன்மீகம், அரசியல், சோதிடம், கைரேகை, எண் கணிதம், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள், மின்னணுவியல், மனையடி கலை, சித்த மருத்துவம் தொழில்: காவல் உதவி ஆய்வாளர் (தொழில் நுட்பம்) மேலும் என்னைப் பற்றி: ஆன்மீகச்சுடர் வலைப்பூவில் காண்க |
| ஆப்கானிஸ்தான் நிலச்சரிவில் சிக்கிய 2100 பேரும் பலி Posted: 03 May 2014 11:29 AM PDT ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தஜிகிஸ்தான் எல்லையில் உள்ள பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அவற்றில் வசித்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதையுண்டவர்களை உயிருடன் மீட்க ஐ.நா. பேரிடர் நிவாரணக் குழுவினரின் மேற்பார்வையில் ஏராளமான மீட்புப் படையினரும், உள்ளூர்வாசிகளும் மண்ணைத் தோண்டி ... |
| ஜனவரி முதல் பழைய காசோலைகளை வங்கிகள் ஏற்காது! Posted: 03 May 2014 11:11 AM PDT வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன் படுத்துவது ஜனவரி முதல் கட்டாயமாகிறது. காசோலைகளை பணமாக மாற்றுவதில் தற்போது ஏற்பட்டு வரும் தாமதத்தைத் தவிர்க்க ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண் டுள்ளது. இத்திட்டம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அமலாவதில் தாமதம் ஏற்பட்டது. வங்கிகளில் புதிய காசோலை முறையை 2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டிருந்தது. அதன்படி, ''சி.டி.எஸ்'' என்ற இந்த திட்டத்தின் கீழ், அனைத்து ... |
| பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? Posted: 03 May 2014 11:09 AM PDT ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா? இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன! அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். ... |
| திப்பு சுல்தான் இறந்த தினம்: மே 4 -1799 Posted: 03 May 2014 11:03 AM PDT திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டனம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782-ம் ஆண்டிலிருந்து 1799-ம் ஆண்டு வரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான வாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில- மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில- மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் ... |
| சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்: மே 4- 1767 Posted: 03 May 2014 10:42 AM PDT தியாகராஜ சுவாமிகள் (1767 -1847) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக இவர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர். திருவையாறில் இவர் சமஸ்கிருத மொழியில் பயிற்சி பெற்றார். இவருக்கு 8 வது ... |
| Posted: 03 May 2014 10:38 AM PDT கம்பு என்றாலே அதனைக்கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிடவேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டுமல்ல; சாதமாக அவலாக பொரியாக...எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம். > கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். > கம்பில் உள்ள லோகிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கனவே உள்ள கூடுதல் நார்ச்சத்தினாலும் காலை/மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டைதீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும், கம்பஞ்சோறும் பிரச்சினையைத்தராது. > அரிசியைப்போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி ... |
| Posted: 03 May 2014 10:35 AM PDT 1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும். 'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் ... |
| திருவண்ணாமலை மாவட்டத்தில் 600 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டது Posted: 03 May 2014 10:26 AM PDT தண்டராம்பட்டு தாலுகாவில் சாத்தனூர் அணை, செங்கம் தாலுகாவில் குப்பனத்தம் அணை, கலசப்பாக்கம் தாலுகாவில் மிருகண்டா அணை, போளூர் தாலுகாவில் செண்பகத்தோப்பு அணை என 4 அணைகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளன. இதன் மூலமாக விவசாய பணிகள் நடந்து வருகின்றன. சாத்தனூர் அணையின் உயரம் மொத்தம் 119 அடி. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 77.30 அடி. குப்பனத்தம் அணையின் உயரம் 59 அடி. நீர் இருப்பு 14.76 அடி. மிருகண்டா அணையின் உயரம் 23 அடி. நீர் இருப்பு ஏதுமில்லை. செண்பகத்தோப்பு அணையின் உயரம் 62 அடி. நீர் இருப்பு ... |
| சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடகை வீடு தர மறுப்பு! Posted: 03 May 2014 06:08 AM PDT சிங்கப்பூர்: இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் வீடு கிடையாது என்று சிங்கப்பூர் வாசிகள் இணையதளங்களில் விளம்பரம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் குறைந்த வாடகைக்கு வீடுகளை விடுவது தொடர்பாக இணையதளங்களில் நேரடியாக விளம்பரங்களை வெளியிடும் வீட்டின் உரிமையாளர்கள், "இந்தியர்கள் அணுக வேண்டாம்... 'மன்னிக்கவும்" என்ற சிறப்பு வாசகங்களுடன் தற்போது வாடகைக்கு ஆள் தேடுகின்றனர். இதனால், ஆன்லைன் மூலமாக குறைந்த வாடகையில் நேரடியாக வாடகை வீடுகளை பெறும் வசதி இந்தியர்களுக்கு கிடைக்காமல் ... |
| பிளாஸ்டிக் பூதத்தை எதிர்க்கும் மஞ்சப்பை Posted: 03 May 2014 06:05 AM PDT சென்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த சுற்றுச்சூழல் நிகழ்ச்சி அது. வித்தியாசமான உடையுடன் வலம்வந்த ஒருவர், அனைவரையும் கவர்ந்தார். அவருடைய உடல் முழுக்க நூற்றுக்கணக்கான பிளாஸ்டிக் கைப்பைகள் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்ப்பதற்கு, விநோதமாக இருந்தது. பெயரும் பயங்கரமாகத்தான் இருந்தது, பிளாஸ்டிக் பூதம். பிளாஸ்டிக் பைகளின் தீமைகளை விளக்குவதற்காக, இந்த விநோத வேஷத்தைப் போட்டிருந்தவர் கிருஷ்ணன். வேஷத்தைக் கலைத்துவிட்டால், உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு புத்தக விற்பனை நிறுவனமான அமேசான்.காமின் டிரெய்னிங் ... |
| மின்னல் தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?- Posted: 03 May 2014 05:54 AM PDT மதுரையில் மின்னல் தாக்கி மருத்துவ மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோடை மழைக்காலங்களில் மின்னல் தாக்குதலில் இருந்து நம்மை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்று இயற்பியல் துறை பேராசிரியை விளக்கமளித்துள்ளார். புதுவை மாநிலம் புதுப்பேட்டை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது ஒரே மகன் கிரண்ராஜ் (21) மதுரை மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துவந்தார். புதன்கிழமை மாலை மழையில் நனைந்தபடி மேல்மாடியில் குளித்துக் கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி அவர் இறந்தார். உடல் பரிசோதனை "வழக்கமாக ... |
| தமிழகத்தை துளைத்த தோட்டாக்களும்...சிதறடித்த வெடிகுண்டுகளும்! Posted: 03 May 2014 05:53 AM PDT இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகம் எப்போதும் அமைதிப்பூங்காதான். ஆனால், விதி(Rule) என்று ஒன்று இருந்தால், விதிவிலக்கும் இருக்கும் அல்லவா? அதற்கேற்ப, இந்த அமைதிப்பூங்காவும் சமயங்களில் தோட்டாக்களின் சீற்றத்தினாலும் வெடிகுண்டுகளின் கோரத்தினாலும் காயம்பட்ட வரலாறு நிறைய இருக்கிறது. சமயங்களில் இங்கு நடந்த கோரங்கள், உலகின் பார்வையைக்கூட தமிழகத்தின் பக்கம் திருப்பி உள்ளது. அப்படி நடந்த சில சம்பவங்கள்.. இலங்கைக்கு வைத்த குறி... மீனம்பாக்கத்தை சிதைத்த சூட்கேஸ் பாம்! 1984 ஆம் ... |
| முஸ்லிம்களின் டிஎன்ஏ-வை சோதிக்க வேண்டும்: அபு ஆஸ்மி - Posted: 03 May 2014 05:42 AM PDT காலியாபாத்(உ.பி.): சமாஜ்வாதி கட்சிக்கு வாக்காளிக்காத முஸ்லிம்களின் மரபணுவை ( டிஎன்ஏ) சோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று அக்கட்சியின் மகாராஷ்ட்ரா மாநில தலைவர் அபு ஆஸ்மி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றனர். மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என பா.ஜனதா தலைவர் ஒருவர் கூற, மோடியை துண்டுதுண்டாக வெட்டுவேன் என காங்கிரஸ் ... |
| தேவாரத் திருமுறை இசைப் பயிற்சி முகாம் Posted: 03 May 2014 05:25 AM PDT திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில், கோடைகால இலவச தேவாரத் திருமுறை இசைப் பயிற்சி முகாம், மே 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை தானப்ப முதலி தெருவிலுள்ள திருவாவடுதுறை ஆதீன மடத்தில், மேற்கண்ட நாள்களில் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், குடும்பப் பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் அருளிய அருட்பாக்கள் இசையோடு கற்பிக்கப்படும். ... |
| அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை Posted: 03 May 2014 05:04 AM PDT அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமே நெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம் போட்டு விழுந்து கொண்டிருந்தாள். புரிந்து கொள்ளும் வயதில்லை எனக்கு. நான்கு வயது. விடிகாலையில் கண் விழிக்கிறேன். ஏதோ தமுக்கு மாதிரி சத்தம் கேட்கிறது. கதவருகே சென்று பார்க்கிறேன். கல்யாணியைப் பலகையில் உட்கார்த்தி இருக்கிறார்கள். எதிரே எவனோ கொத்து இலையோட நிற்கிறான். ஆ ஊ வென்று சில மாதங்கள் மட்டுமே சிரிப்புக் காட்டிய தம்பிப் பாப்பா நான் இருந்த அறையிலேயே தொட்டிலில் இருக்கிறான். "நீரஜாட்சீ, ... |
| Posted: 03 May 2014 04:05 AM PDT ஆங்கில இலக்கணம் எளிய தமிழில் மென்நூல் தறவிறக்கம் செய்ய http://www.ziddu.com/download/4444611/eegarai tamilzhan-easy-english.pdf.html |
| தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு Posted: 03 May 2014 03:42 AM PDT தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:- வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்) மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்) பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி) கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) தூத்துக்குடி-93.56 ... |
| கருணாநிதி - ஜெயலலிதா அறிக்கைப் போர் (அக்கப் போர்) Posted: 03 May 2014 03:41 AM PDT ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்து கூறும் உரிமை கருணாநிதிக்கு இல்லை: ஜெயலலிதா தான் ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கருணாநிதி ரயில் குண்டுவெடிப்பு குறித்து கருத்துக் கூறும் தார்மீக உரிமையை என்றைக்கோ இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: இந்திய நாடே அதிர்ச்சியுறும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் கோவையில் நடைபெற்ற போது, அதை முன்கூட்டியே தடுக்கத் தவறிய அன்றைய முதல்வர் கருணாநிதி; ... |
| Posted: 03 May 2014 03:40 AM PDT நீ என்னில் இருந்த இடம் இன்று வெற்றிடமாய்... தொலைந்தது என் கனவுகள் மட்டுமே.... நினைவுகள் அல்ல... அவை இன்னும் உயிரோடு உறவாடி கொண்டு தான் இருக்கிறது... நீ பேசிய என் உறக்கமில்லா இரவுகள் இன்று ஊமையாய் ஓர் இருட்டறையில்.... |
| எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்: மே 3 -1935 Posted: 03 May 2014 03:37 AM PDT தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953-ம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை- வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர். ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் ... |
| Posted: 03 May 2014 03:31 AM PDT பக்கத்து வீட்டுக்குப் பலாப் பழம் வந்திருக்கிறது. செல்லப் பாப்பா புரண்டு படுத்தாள். கனமான அடி வயிறுதான் சட்டென்று சிமெண்டுத் தரையின் குளுமையை முதலில் உணர்ந்தது. உடம்பெல்லாம் ஒரு விதமான கூச்சம் பரவிற்று. பல திரிகள் கட்டையாகிவிட்டன. மாற்ற வேண்டும். சிலது எரியவே இல்லை. தீ சரியாக எரியாமல், அடுப்பில் எதை வைத்தாலும் இறக்குவதற்கு நேரமாகிவிடுகிறது. ஒரு சிறு விஷயம், திரிகளை மாற்றுவது என்பது. ஆனாலும் திரிகளை மாற்றவில்லை அவள். சிமெண்டுத் தரையில் வெறுமனே ஒன்றையும் விரிக்காமல் படுத்துக்கொள்கிறது அவளுக்குச் ... |
| Posted: 03 May 2014 03:28 AM PDT ஆழ்வார்களின் தீந்தமிழ்ப் பாசுரங்களால் பாடல் பெற்ற தலங்கள் பல உள்ளன. 'காக்கும் கடவுளான திருமால்' பள்ளி கொண்ட கோலத்தில் திருவரங்கத்தில் காட்சி தருகிறார். அங்கு தொடங்கி, நின்ற கோலத்தில் திருமலை திருப்பதி வரை காட்சி தந்து அருள்புரிகிறார். சூட்சும உலகத்தில் உள்ள பாற்கடல், வைகுந்தம் உட்பட நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் நின்றும், நடந்தும், கிடந்தும், அமர்ந்தும் பல்வேறு கோலங்களில் பெருமாள் காட்சி தருகிறார். ஐந்து தலை ஆதிசேஷன் குடை பிடிக்க, பாம்பு மெத்தையில் பள்ளி கொள்ளும் கோலத்திலும் பல்வேறு திருத்தலங்களில் ... |
| உலக பத்திரிகை சுதந்திர நாள்: மே 3 Posted: 03 May 2014 03:22 AM PDT உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் "மனித உரிமைகள் சாசனம்" பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆபிரிக்கப் பத்திரிகைகளால் ... |
| 1,000 பெண்களில் 17 பேருக்கு ஆஸ்துமா பிரச்சினை: டாக்டர்கள் தகவல் Posted: 03 May 2014 03:20 AM PDT ஆஸ்துமா நோயால் ஆயிரம் பெண்களில், 17 பெண்கள் பாதிக்கப் படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். உலக ஆஸ்துமா தினம் மே 6-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மருந்து உற்பத்தி நிறுவனமான சிப்லா, ஆஸ்துமா குறித்த விழிப் புணர்வு பிரச்சாரத்தை செய்ய வுள்ளது. இதுதொடர்பாக சிப்லா நிறுவனத்தின் சார்பில் குழந்தை கள் நலம் மற்றும் நுரையீரல் டாக்டர் பாலசந்திரன், டாக்டர் பிரசன்னகுமார் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆஸ்துமா நோயை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். முறையான சிகிச்சை ... |
| Posted: 03 May 2014 03:18 AM PDT கேரளத் தலைநகரம் திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மநாப சுவாமி ஆலயம், மறுபடியும் பரபரப்புச் செய்திகளில் அடிபடுகிறது. ஆலயத்தின் ரகசிய அறைகளில் ஆண்டாண்டு காலமாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நகைகள்குறித்த வழக்கில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 'அமிகுஸ் கூரியாஸ்' (நீதிமன்ற ஆலோசகர்), விலைமதிப்பு மிக்க நகைகள், கலைப்பொருள்கள் களவாடப்பட்டிருப்பதாகவும், நிதி நிர்வாகத்தில் முறைகேடுகள் காணப்படுவதாகவும் அறிக்கை அளித்திருக்கிறார். இது தொடர்பாக, ஆலய நிர்வாகமும் கேரள அரசும் பதில் தர வேண்டும் என்று நீதிமன்றம் ... |
| Posted: 03 May 2014 03:15 AM PDT சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| கணவன், மனைவியாக வாழ்ந்தவர் பிரிந்தால் ஜீவனாம்சம் கட்டாயம் - உயர் நீதிமன்றம் Posted: 03 May 2014 03:11 AM PDT மதுரை: கணவன், மனைவியாக சேர்ந்து வாழ்ந்தவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்தால் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேனியை சேர்ந்தவர் ஈஸ்வரி. வீரபாண்டியை சேர்ந்தவர் பாண்டியன். இருவரும் 1991ம் ஆண்டு முதல் கணவன், மனைவியாக இணைந்து வாழ்ந்தனர். பாண்டியன் திடீரென லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இதனால் ஜீவனாம்சம் கேட்டு ஈஸ்வரி, உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து ஈஸ்வரி மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தார். ... |
| Posted: 03 May 2014 12:45 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| கருப்புப் பண விவரத்தை தர மறுக்கும் சுவிஸ் அரசு: சிதம்பரம் கண்டனம்! Posted: 02 May 2014 09:49 PM PDT புதுடெல்லி: இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களைத் தர மறுக்கும் சுவிட்சர்லாந்து அரசுக்கு கண்டனம் தெரிவித்து மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஹெச்எஸ்பிசி கிளைகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய விவரத்தை தருவதில் ஒத்துழைக்க மறுப்பது, இருதரப்பு உறவை பாதிக்கக்கூடியது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த 4 மாதங்களில் மூன்றாவது முறையாக சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் எவலின் விட்மெருக்கு சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளதாக ... |
| Posted: 02 May 2014 08:27 PM PDT குளிர்ச்சியாக இருக்கிறது இளநீர் * குண்டு குண்டாக உருண்டு கிடக்கிறது பாதையோரம் தர்பூசணி. * குளிர்சாதன அறையில் அமர்ந்து ஒரு மணி நேரமாய் குடிக்கிறார்கள் தேனீர். * ஹெல்மெட் வழியே வழிகிறது துளித் துளியாய் வியர்வை. * * ஒடி வந்து பஸ் ஏறிய பயணியின் மேல் எரிந்து விழுந்தார் கண்டக்டர். * விசிறிக் கொண்டே விற்கிறான் பனைஒலை விசிறி. |
| Posted: 02 May 2014 05:32 PM PDT ஒரு நகரத்தைப் பற்றி இப்படி ஒரு தலைப்புடன் எழுதலாமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. பிழைப்பதற்காகச் செத்துக்கொண்டிருப் பவர்கள் வாழும் ஒரு நகரத்தைப் பற்றி எழுதும்போது வேறு எப்படித் தலைப்பிட முடியும்? நீங்கள் அலாங்கைப் பார்க்க நேரில் வர வேண் டாம்; அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் கதைகளைக் கொஞ்ச நேரம் கேளுங்கள். இதைவிட மோசமான ஒரு தலைப்பையே தேடு வீர்கள். அலாங்கின் கதை நாம் அவசியம் பேச வேண்டியது. ஏனென்றால், அதன் அழிவு, வளர்ச்சி என்ற சொல்லிலிருந்தே தொடங்குகிறது. காம்பே வளைகுடாவின் கரையோரத்தில் ... |
| Posted: 02 May 2014 05:08 PM PDT நாம் பயன்படுத்தும் பெரும்பாலான தந்திர யோக முத்திரைகளும் மூன்று நிலைகளில் செயல்படுகின்றன. * உடல் சார்ந்த நிலை * மனம், எண்ணம் சார்ந்த நிலை * ஆன்மிக நிலை ஒரு முத்திரையைச் செய்யத் துவங்கும்போது முதலில் அதன் பலன்களை நமது பருவுடலில் மட்டுமே உணரமுடியும். இதையே உடல் சார்ந்த நிலை செயல்பாடு என்கிறோம். அதே முத்திரையை மேலும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து செய்துவரும்போது, நமது எண்ணங்களிலும் உணர்வு நிலைகளிலும் பல மாற்றங்களை உணரமுடியும். இதையே மனம் சார்ந்த நிலை செயல்பாடுகள் என்கிறோம். ... |
| சத்யஜித் ரே: இந்திய ஆன்மாவின் கலைஞர் Posted: 02 May 2014 05:05 PM PDT ஒருமுறை ஈரானிய இயக்குனர் மக்மல்பஃபைச் சந்தித்தபோது நான் அவரிடம் "இந்தியப் படங்கள் ஏதாவது பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். "இந்தியப் படங்கள் என்றால் வண்ண வண்ணமாக உடையணிந்து, கூட்டமாக ஆடுகிற படங்களைக் கேட்கி றீர்களா?" என்று கேட்டார். எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. "நல்ல இந்தியப் படங்கள்" என்று திரும்பக் கேட்டேன். "அப்படிப்பட்ட படங்களை இந்தியாவில் எடுக்கிறீர்களா?" என்று புன்னகைத்தார். "நான் பார்த்த ஒரே இந்தியப் படம் 'பதேர் பாஞ்சாலி'. அதைவிடவும் சிறந்த படங்கள் இருக்கின்றனவா? அதுமட்டுமல்ல, ... |
| Posted: 02 May 2014 04:45 PM PDT நார்ப் பெட்டியில் கொஞ்சம் சுள்ளி விறகுகளைத் தவிர வேறே ஒன்றுமில்லை. ஆனாலும் கூட பெட்டி கனமாக இருந்தது. பெட்டியை இறக்கிக் கீழே வைத்துவிட்டு, ஓரமாக நின்றிருந்த குத்துக்கல்லின் மேல் உட்கார்ந்தார் சிவனு நாடார். அவர் உடம்பிலிருந்து அடித்த நாற்றம் அவருக்கே குமட்டியது. பீடி குடித்தே ஏழெட்டு நாளாகி விட்டது. இன்னமும் பீடி வாடை முகத்துக்குள் வீசியது. வரிசையாக எல்லா வீட்டுப் புறவாசல்களும் சத்தமே இல்லாமல் கிடந்தன. நாலைந்து வீடுகள் தள்ளி ஒரே ஒரு காக்கை மட்டும் ஒரு மண்சுவர் மீது உட்கார்ந்து பார்த்துக் ... |
| Posted: 02 May 2014 04:43 PM PDT முடிவாகப் பாட்டியையும் ஈசாக்கையும் விட்டுச் செல்வதென்று ஏற்பாடாயிற்று. மேலும், பிழைக்கப் போகிற இடத்துக்குப் பாட்டி எதற்கு? அவள் வந்து என்ன காரியம் செய்யப் போகிறாள்? நடமாட முடியாது, காது கேளாது, பக்கத்தில் வந்து நின்றால், அதுவும் வெளிச்சமாக இருந்தால்தான் தெரிகிறது. ஒரு காலத்தில் பாட்டிதான் இந்த வீட்டில் எல்லாரையும் சீராட்டினவள். பேரப்பிள்ளைகளுக்கெல்லாம் கடைசியாகப் பிறந்த ரூத் உள்பட எல்லாருக்கும் பாட்டியின் சீராட்டல் ஞாபகம் இருக்கிறது. அதற்காக இப்போது உபயோகமில்லாத பாட்டியை அழைத்துக் கொண்டு பிழைக்கப் ... |
| Posted: 02 May 2014 04:40 PM PDT அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா பாட்டுக்கள் போல சில. ஆரம்பம், நடு, முடிவு என்றில்லாமல் பலவாறு விரியும் கதைகள். சில சமயம், இரவுகளில் பல தோற்றங்களை மனதில் உண்டாக்கி விடுவாள். அசுரர்கள், கடவுளர்கள் கூட அவள் கதைகளில் மாறி விடுவார்கள். மந்தரையைப்பற்றி உருக்கமாக சொல்வாள். சூர்ப்பனகை, தாடகை எல்லோரும் அரக்கிகளாக இல்லாமல் உணர்ச்சிகளும், உத்வேகங்களும் கொண்டவர்களாக ... |
| Posted: 02 May 2014 04:31 PM PDT மூத்த உள்ளூர்க்காரர்களையும் எப்போது அறிமுகமானார்கள் என நினைவு கொள்ள முடிவதில்லை. ஒருவன் தன் தாயையும் முதல் அறிமுகம் எப்போதென்ற பிரக்ஞையின்றிப் போகிறான் ஆனால், அவள் எனக்குச் சாலைக்குளத்திலிருந்துதான் அறிமுகமாயிருக்க வேண்டுமென நிச்சயமாக இருந்தாள். எல்லாவற்றிலும் ஆச்சரியம் கொள்ளும் குழந்தைக்கு குளிக்கிறவள் என்று விநோதமற்றுப் போகாமல் அவள் நடுக்குளத்தில் தனித்துத் தென்பட்டிருப்பாள். நரைத்த பனங்காயைப் போல அவள் தலைமிதந்து அலைந்து அவளென்று தெரிய இருந்திருக்கும். அவள் தன் பத்தாவது வயதில் வீணானவள். ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |