Tamil News | Online Tamil News |
- கருப்பு பண வழக்குகளை கண்காணிக்க எஸ்.ஐ.டி.,: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு வார அவகாசம்
- 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் அபாரம்: 500க்கு 499 மதிப்பெண் பெற்று 19 பேர் முதலிடம்
- மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள பா.ஜ.,வுக்கு புதிய தலைவர்? ராஜ்நாத் சிங் அமைச்சராவதால் மாற்றம்
- ஆப்கனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: நீண்ட நேர சண்டையில் பயங்கரவாதிகள் நால்வரும் சுட்டு கொலை
- ஐ.மு.கூ., அரசின் செயல்பாடு சரியில்லாததே தோல்விக்கு காரணம்: ராகுலுக்கு வக்காலத்து வாங்குகிறார் மூத்த தலைவர்
- ராஜபக் ஷே அழைப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா: கருணாநிதி
- கெஜ்ரிவால் தொடர் பிடிவாதம்: சிறைவாசத்தை நீட்டித்து உத்தரவு
- 'மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா?'
- ராஜபக்ஷே அழைப்பு: விக்னேஸ்வரன் நிராகரிப்பு
- அமைச்சரவையில் யார்?மோடி தீவிர ஆலோசனை
| கருப்பு பண வழக்குகளை கண்காணிக்க எஸ்.ஐ.டி.,: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஒரு வார அவகாசம் Posted: புதுடில்லி: கருப்புப் பணம் தொடர்பான, அனைத்து வழக்குகளையும் கண்காணிக்க, முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா தலைமையில், சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க, மத்திய அரசுக்கு, மேலும் ஒரு வார அவகாசம் வழங்கி, உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.வெளிநாடுகளில் பதுக்கல்: சுவிட்சர்லாந்து உட்பட, பல வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் டிபாசிட் செய்துள்ள, கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வரும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே, 1ம் ... |
| 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் அபாரம்: 500க்கு 499 மதிப்பெண் பெற்று 19 பேர் முதலிடம் Posted: பத்தாம் வகுப்பு தேர்வில், 90.7 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்று, அபார சாதனை படைத்தனர். 500க்கு, 499 மதிப்பெண் பெற்று, 19 பேர், முதலிடம் பிடித்தனர்.சமச்சீர் கல்வி அமலுக்கு வந்த பின், மூன்றாவது பொதுத் தேர்வு, கடந்த மார்ச், 26ம் தேதி முதல், ஏப்ரல், 9ம் தேதி வரை நடந்தது. 10.2 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். கடந்த, 9ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், முதல் முறையாக, தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது. இதனால், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதமும் எகிறும் என, எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், நேற்று வெளியான தேர்வு முடிவில், 90.7 சதவீத மாணவர்கள், தேர்ச்சி பெற்று, அபார சாதனை ... |
| மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள பா.ஜ.,வுக்கு புதிய தலைவர்? ராஜ்நாத் சிங் அமைச்சராவதால் மாற்றம் Posted: புதுடில்லி: பா.ஜ., தேசிய தலைவராக இருக்கும் ராஜ்நாத் சிங், மோடி அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதால், அவர் வகிக்கும் பதவி, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த, பா.ஜ., மூத்த தலைவர், ஜே.பி.நட்டாவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.லோக்சபா தேர்தலில், தனித்து, 282 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பா.ஜ., இம்மாதம் 26ல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக, தலைநகர் டில்லியில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.'சார்க்' தலைவர்கள்: மோடியின் பதவியேற்பு விழாவில், 'சார்க்' நாடுகளின் தலைவர்களான, இலங்கையின் ராஜபக்ஷே, ... |
| ஆப்கனில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்: நீண்ட நேர சண்டையில் பயங்கரவாதிகள் நால்வரும் சுட்டு கொலை Posted: ஹெராத்: ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள இந்திய துணை தூதரகம் மீது, அந்நாட்டு பயங்கரவாதிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தினர். அவர்களை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள, இந்தியாவின், ஐ.டி.பி.பி., வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதில், தூதரக அதிகாரிகள் யாருக்கும் பாதிப்பில்லை; கட்டடங்கள் சேதமடைந்தன.அதிபர் கர்சாய் தலைமையிலான ஆப்கனின், ஹெராத் மாகாணத்தின் ஹெராத் நகரில், இந்திய துணை தூதரகம் உள்ளது. அதன் அருகே உள்ள ஒரு கட்டடத்தில் நேற்று காலை புகுந்த, நான்கு பயங்கரவாதிகள், தூதரகம் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.நான்கு பயங்கரவாதிகள்: ... |
| Posted: புதுடில்லி: 'லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற, கட்சியின் துணைத் தலைவர் ராகுல், தீவிர முயற்சி மேற்கொண்டார்' என, ராகுலுக்கு நெருக்கமான கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.'நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு, துணைத் தலைவர் ராகுலே காரணம்' என, கட்சியில் சில தரப்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ராகுல் தலைமையிலான அணியினர் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் செயல்படாமல், கட்சியின் வெற்றி வாய்ப்பை சீர்குலைத்து விட்டனர் என்றும் குறை சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றை எல்லாம் ராகுலுக்கு நெருக்கமான, மூத்த ... |
| ராஜபக் ஷே அழைப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யுமா: கருணாநிதி Posted: சென்னை: ''நரேந்திர மோடி பிரதமராக பதவிஏற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, இலங்கை அதிபர் ராஜபக் ஷேவுக்கு விடுத்துள்ள அழைப்பை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தமிழர்களுக்கு எதிராக, அந்நாட்டு அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, காங்., தலைமையிலான மத்திய அரசுக்கு, பலமுறை எடுத்துச் சொல்லியும், எச்சரிக்கை விடுத்தும், காதில் போட்டுக் கொள்ளவில்லை. இலங்கை நட்பு நாடு என, மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது. இதனால், ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளை அனைவரும் ... |
| கெஜ்ரிவால் தொடர் பிடிவாதம்: சிறைவாசத்தை நீட்டித்து உத்தரவு Posted: புதுடில்லி: ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பிணைத்தொகை செலுத்தி, ஜாமின் பெற தொடர்ந்து மறுத்து வருவதால், அவரை, ஜூன், 6ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஜாமின் பெற வேண்டும் எனில், 10 ஆயிரம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என, கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பிணைத்தொகை செலுத்த, கெஜ்ரிவால் மறுத்ததால், அவரை இரண்டு நாட்கள் சிறையில் ... |
| 'மதிப்பெண் குவிப்பால் கல்வித்தரம் மேம்படுகிறதா?' Posted: எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத புள்ளியும், 90ஐ தாண்டி, சாதனை படைத்துள்ளது. மாணவர்கள், மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர், மாநில அளவில், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அறிவியலில், 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். சமூக அறிவியல், 'சென்டமும்' 26 ஆயிரத்திற்கும் அதிகமாக வந்துள்ளது.தேர்ச்சி சதவீத புள்ளி அதிகரிப்பும், மாணவர்கள், அதிகளவில், மதிப்பெண் குவித்திருப்பதும், பலரின் புருவங்களையும் உயர்த்த ... |
| ராஜபக்ஷே அழைப்பு: விக்னேஸ்வரன் நிராகரிப்பு Posted: கொழும்பு: நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு தன்னுடன் வருமாறு, இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர், தமிழரான, விக்னேஸ்வரனை, அதிபர் ராஜபக்ஷே அழைத்ததற்கு, விக்னேஸ்வரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.இலங்கை அதிபர் ராஜபக்ஷே உட்பட, 'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவில் உள்ள உலக நாடுகளின் தூதர்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ராஜபக்ஷே, தன்னுடன் டில்லி வருமாறு, நேற்று காலை, முதல்வர் விக்னேஸ்வரனை போனில் அழைத்தார். அமைச்சர்களிடம் கேட்டு பதிலளிப்பதாக விக்னேஸ்வரன் கூறினார். நேற்று மாலை, ராஜபக்ஷேவை ... |
| அமைச்சரவையில் யார்?மோடி தீவிர ஆலோசனை Posted: புது டில்லி:மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைப்பது குறித்துபா.ஜ.க., மூத்த தலைவர்களுடன் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.நால்வர் குழு:மோடி, வரும் திங்கள்கிழமையன்று பிரதமராக பதவியேற்கிறார். இந்நிலையில், பா.ஜ.க.,வில் முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக நால்வர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, அருண் ஜெட்லி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இந்த நால்வர் குழுவுடன் மோடி, டில்லியில் உள்ள குஜராத் பவனில் நேற்று ஆலோசனை செய்தார். அப்போது, மத்திய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மே 24,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |