Daily Thanthi |
- நட்சத்திர வீரர்களின் ஆட்டம் வெற்றிகரமாக அமையாதது இதயத்தை நொறுக்குவதாக இருந்தது: விஜய் மல்லையா
- கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 6–ந் தேதிவரை நீட்டிப்பு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்
- திருப்பூர் முன்னாள் எம்.பி. சிவசாமி அதிரடி நீக்கம் ஜெயலலிதா நடவடிக்கை
- தேர்தல் தோல்வியால் பதவிக்கு நெருக்கடி எதிரொலி முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு ஷிண்டே ஆதரவு
- மோடி, அத்வானிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம கடிதம் அனுப்பியவரை போலீஸ் தேடுகிறது
- மோடி மனைவி, தாயாருக்கு கமாண்டோ பாதுகாப்பு: சகோதர, சகோதரிகளுக்கு இசட்பாதுகாப்பு
- சம்பிரதாய முறையில் தெரிவித்தது மோடிக்கு சீனா வாழ்த்து
- தமிழர்களின் உணர்வுக்கு ஆதரவு: ராஜபக்சேயை அழைத்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு
- டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
- பாரதீய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் அத்வானியுடன் சந்திப்பு
| நட்சத்திர வீரர்களின் ஆட்டம் வெற்றிகரமாக அமையாதது இதயத்தை நொறுக்குவதாக இருந்தது: விஜய் மல்லையா Posted: 23 May 2014 09:21 AM PDT 7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடந்த வாழ்வா?–சாவா? லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வி கண்டு அடுத்த சுற்று (பிளே–ஆப்) வாய்ப்பை இழந்து வெளியேறியது. நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய வலுவான அணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தோல்வி அந்த அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவை மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து விஜய் மல்லையா டுவிட்டரில், 'இந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மோசமான செயல்பாடுக்காக ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். நட்சத்திர வீரர்களின் ஆட்டம் வெற்றிகரமாக அமையாதது இதயத்தை நொறுக்குவதாக இருந்தது' என்று கருத்து தெரிவித்துள்ளார். image: category:News Group Category: |
| கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 6–ந் தேதிவரை நீட்டிப்பு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் Posted: 23 May 2014 09:18 AM PDT புதுடெல்லி, அவதூறு வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 6–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நிதின் கட்காரி வழக்கு டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ''ஊழல்வாதிகள்'' என்று குறிப்பிட்டு 13 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டார். இதில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரியின் பெயரும் இருந்தது. 'எந்த ஊழலிலும் தொடர்பில்லாத தன்னை ஊழல்வாதி என கெஜ்ரிவால் கூறி தன் பெயருக்கும் புகழுக்கும், களங்கம் ஏற்படுத்தி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரி, கெஜ்ரிவால் மீது டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கட்காரி அவதூறு வழக்கு தொடுத்தார். பத்திரம் எழுதித்தர மறுப்பு இந்த வழக்கில் கடந்த 21–ந்தேதி டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோமதி மனோச்சா முன்னிலையில் ஆஜரான கெஜ்ரிவால் ரூ.10 ஆயிரத்துக்கு தானும் ஒரு ஜாமீன்தாரரும் ஜாமீன் பத்திரம் எழுதித்தரவேண்டும் என்ற சட்டரீதியான நிபந்தனையை ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுத்தார்.எனவே, நீதிபதி அவரை 23–ந் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்படி கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.நேற்று நீதிமன்றக் காவல் முடிந்து மீண்டும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட கெஜ்ரிவால், மீண்டும் ஜாமீன் பத்திரம் எழுதித்தர மறுத்தார். புரிந்து கொள்ளுங்கள் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் இந்த வழக்கில் ஜாமீன் பத்திரம் தரத் தேவையில்லை என்று வாதாடினார்.அப்போது ''நான் செய்த குற்றம் என்ன என்று புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்'' என்று கெஜ்ரிவால் நீதிபதியிடம் கூறினார்.அதற்கு மாஜிஸ்திரேட்டு, ''இந்த நாட்டில் சட்டம் குறித்த புரிந்து கொள்ளுதல் எந்த அளவில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மக்களுக்கு சொந்தப்பத்திரம் மற்றும் ஜாமீன் பத்திரத்துக்கான வேறுபாடு தெரியவில்லை. அதுபோன்ற நிலையில்தான் நீங்களும்(கெஜ்ரிவால்) இருக்கிறீர்கள். எனவே இதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறே'' என்றார். சுமார் ஒருமணி நேரம் நடந்த விசாரணையின்போது ஜாமீன் பத்திரம் தருவது குறித்த சட்டம் குறித்து நீதிபதி விளக்கினார். வழக்கு தொடரலாமே... நிதின் கட்காரியின் சார்பில் ஆஜரான வக்கீல் பிங்கி ஆனந்த், ''ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் கோர்ட்டு ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்று கூறியுள்ளனர். இது செய்தித்தாள்களிலும் வெளியாகி இருக்கிறது'' என்று குற்றம் சாட்டினார். இதற்கு கெஜ்ரிவால், நிதின் கட்காரி ஊழல் புரிந்திருப்பதாக கூறத் தொடங்கினார்.அதற்கு நிதின் கட்கரியின் வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் அரசியல் ரீதியான வாக்குமூலங்களை கெஜ்ரிவால் கோர்ட்டில் அளிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.அப்போது நீதிபதி, இந்த விசாரணையை யாரும் அரசியலாக்க முயற்சிக்க வேண்டாம். நிதின் கட்காரி அப்படி ஏதேனும் தவறுகள் செய்திருப்பதாக நீங்கள் கருதினால் கோர்ட்டில் அவர் மீது ஏன் வழக்கு தொடுக்கக் கூடாது? என்றும் கெஜ்ரிவாலிடம் கேட்டார். மீண்டும் சிறையில் அடைப்பு வழக்கு விசாரணையின் முடிவில் ஜாமீன் பத்திரம் அளிக்க மாட்டேன் என்று கெஜ்ரிவால் மீண்டும் மறுத்தார்.எனவே, அவருடைய நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு, அதாவது மே 6–ந் தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவு பிறப்பித்தார்.அதன்படி கெஜ்ரிவால் மீண்டும் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டார். image: category:Tagging:News Group Category: |
| திருப்பூர் முன்னாள் எம்.பி. சிவசாமி அதிரடி நீக்கம் ஜெயலலிதா நடவடிக்கை Posted: 23 May 2014 09:04 AM PDT சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– கட்சியின் கொள்கை–குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருப்பூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த திருப்பூர் சி.சிவசாமி (முன்னாள் எம்.பி.) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியின் உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். image: category:News Group Category: |
| தேர்தல் தோல்வியால் பதவிக்கு நெருக்கடி எதிரொலி முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு ஷிண்டே ஆதரவு Posted: 23 May 2014 08:54 AM PDT மும்பை, பாராளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு முன்னாள் மத்திய மந்திரி ஷிண்டே ஆதரவு தெரிவித்து உள்ளார். ஆதரவு நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவான் பதவி விலக வேண்டும் என்று மூத்த மந்திரிகள் பலர் போர்க்கொடி உயர்த்தி இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது.இந்த நிலையில் முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு, முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுபற்றி காங்கிரஸ் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''பிரிதிவிராஜ் சவான் திறமையான முதல்–மந்திரி. அவருக்கு எனது முழு ஆதரவு உண்டு. தேர்தல்களை தொடர்ந்து அரசு நிர்வாகம் மற்றும் கட்சியில் மாற்றம் கொண்டு வருவது பற்றி அவருக்கு ஆலோசனை கூற வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்ற தேர்தல் தோல்வி எதிர்பாராதது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை அறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும்'' என்றார். புதிய வியூகம் இதற்கிடையே வருகிற அக்டோபரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற முதல்–மந்திரி பிரிதிவிராஜ் சாவன் புதிய வியூகத்தை வகுத்து உள்ளார்.அதன்படி ஒவ்வொரு மந்திரிகளுக்கும் 4 முதல் 5 தொகுதிகளின் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பது மற்றும் கொள்கை முடிவுகளை எடுக்கும் பொறுப்பை மந்திரிகளுக்கு வழங்கி பிரிதிவிராஜ் சவான் உத்தரவிட்டு உள்ளார். category:News Group Category: |
| மோடி, அத்வானிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம கடிதம் அனுப்பியவரை போலீஸ் தேடுகிறது Posted: 23 May 2014 08:28 AM PDT புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகர ரெயில் நிலைய சூப்பிரண்டுக்கு பெயர், முகவரி இன்றி ஒரு கடிதம் வந்தது. அதில் நரேந்திர மோடி, எல்.கே.அத்வானி, உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை வருகிற ஜூன் மாதம் 20&ந் தேதிக்குள் வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் டெல்லி, காஜியாபாத், புலந்த்சார், கான்பூர், மதுரா, போபால் ஆகிய நகரங்களின் ரெயில் நிலையங்களையும், டெல்லி காளிமாதா, துதேஷ்வர் கோவில், காஜியாபாத் ஜானகி கோவில் ஆகியவற்றையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து காஜியாபாத் ரெயில் நிலைய சூப்பிரண்டு சிவ்ஹரி மீனா கூறுகையில், இந்த கடிதம் குறித்த தகவல் உள்ளூர் போலீசாருக்கும், புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதத்தை எழுதிய மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். image: category:Tagging:News Group Category: |
| மோடி மனைவி, தாயாருக்கு கமாண்டோ பாதுகாப்பு: சகோதர, சகோதரிகளுக்கு இசட்பாதுகாப்பு Posted: 23 May 2014 08:17 AM PDT புதுடெல்லி, பிரதமராக பதவி ஏற்க உள்ள நரேந்திர மோடியின் தாயார், மனைவி, சகோதரர்கள், சகோதரிகள் குஜராத்தில் வசிக்கிறார்கள். இதே போன்று மோடியின் 3 சகோதரர்கள், 2 சகோதரிகளுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும். இதை மாநில போலீசார் வழங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. (இசட் பிரிவு பாதுகாப்பில் 22 போலீசார் இடம் பெறுவார்கள்). மோடியின் மனைவி, தாயாருக்கு கமாண்டோ பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக ஆராய்வதற்கு சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் ஏற்கனவே குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. image: category:Tagging:News Group Category: |
| சம்பிரதாய முறையில் தெரிவித்தது மோடிக்கு சீனா வாழ்த்து Posted: 23 May 2014 07:38 AM PDT பீஜிங், பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. மோடிக்கு கிடைத்த வெற்றியை உலகின் பல்வேறு நாட்டுத்தலைவர்களும் பாராட்டி வருகிறார்கள். ஆனால், அண்டை நாடான சீனா, மோடியின் வெற்றி குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், பீஜிங்கில் நடந்த இந்திய&சீன அதிகாரிகள் கூட்டம் ஒன்றில் சீனாவுக்கான இந்தியத்தூதர் அசோக் கே.கந்தாவை, சீன வெளியுறவு மந்திரி வாங்க் யி சந்தித்து பேசினார். அப்போது சீனாவின் சார்பில் சம்பிரதாய முறையில் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி ஒன்று கந்தாவிடம் வழங்கப்பட்டது. அதில் இரு நாடுகளுக்கும் இடையே கொள்கை மற்றும் நட்புறவு ரீதியான உறவுகளை பலப்படுத்துவது குறித்து இந்தியாவின் புதிய அரசுடன் சீனா இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், மோடி பிரதமராக 26-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்ட பிறகு அவருக்கு அதிகாரப்பூர்வமான முறையில் சீன அதிபர் வாழ்த்து தெரிவிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. image: category:Tagging:News Group Category: |
| தமிழர்களின் உணர்வுக்கு ஆதரவு: ராஜபக்சேயை அழைத்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு Posted: 23 May 2014 07:34 AM PDT புதுடெல்லி, நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததற்கு தமிழக முதல்&அமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.ராஜபக்சேவுக்கு விடுத்த அழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நரேந்திர மோடியையும், பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கையும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தனித்தனியே சந்தித்து கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் டெல்லியில் பேட்டி அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகீல் அகமதுவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பதவி ஏற்பு விழாவுக்கு யாருக்கெல்லாம் அழைப்பு விடுக்க வேண்டும் என்பதை மோடிதான் முடிவு செய்துள்ளார். ஆனால், (ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுப்பதில்) தமிழர்களின் உணர்வையும் அவர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்களது கருத்து என பதில் அளித்தார். image: category:News Group Category: |
| டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி Posted: 23 May 2014 07:08 AM PDT மும்பை, 7 வது ஐபில் தொடரின் 51 வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சிம்மன்சும்,ஹஸ்ஸியும் இறங்கினர்.சிறப்பான தொடக்க கொடுத்த இந்த ஜோடி 87 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது, சிம்மன்ஸ் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாகீர் பந்தி ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஹஸ்ஸியும் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் 33 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உட்பட 56 ரன்கள் எடுத்து இருந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டம் இழந்தார். சிறப்பான தொடக்கம் பெற்றிருந்தாலும் அதை மும்பை அணி பயன்படுத்த தவறி விட்டது. பின்னர் வந்த வீரர்கள், பொல்லார்டு (11), ராயுடு (2), தாரே (14) ஹர்பஜன் சிங் (2), கோபால் (11), லாஞ்கே( 1), ஒஜா (2), என பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த அணி நிர்ணையிக்கப்பட்ட 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 8 ரன்களில் நடையை கட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் வெளியேறினார். ஓரளவு தாக்கு பிடித்த பீட்டர்சன் 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் பந்தில் வீழ்ந்தர். மனோஜ் திவாரி 41 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். டுமீனி ஆட்டம் இழக்காமல் 29 பந்துகளில் 4 சிக்ஸர் உட்பட 45 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் போராடினர். இருப்பினும் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 158 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது.
image: category:News Group Category: |
| பாரதீய ஜனதாவில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் அத்வானியுடன் சந்திப்பு Posted: 23 May 2014 06:56 AM PDT புதுடெல்லி, மக்களவை தேர்தலின் போது கருத்து வேறுபாடால் பர்மர் தொகுதியில் பாரதீய ஜனதா வில் இருந்து வெளியேறி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் இன்று பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த் சிங்கிற்கு வாய்ப்பு தர மறுத்த பா.ஜ.க அவருக்கு பதிலாக கர்னல் சோனரம் சவுத்ரியை நிறுத்தியது. இதை எதிர்த்து போட்டியிட்ட ஜஸ்வந்த் சிங் தோல்வி அடைந்தார் இந்நிலையில் இன்று காலை அத்வானிக்கு இல்லத்திற்கு சென்ற ஜஸ்வந்த் சிங் அவரை சந்தித்து பேசியுள்ளார். இது பல்வேறு ஊகங்களை கிளப்பியுள்ளது. image: category:Tagging:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |