Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி பதவி ஏற்பில் ஜெயலலிதா பங்கேற்பது சந்தேகம்: ராஜபக்ஷே வருகையை கண்டித்து காரசார அறிக்கை

Posted:

சென்னை: பிரதமர் மோடி பதவி யேற்பு விழாவில், இலங்கை அதிபர், ராஜபக்?ஷே பங்கேற்க உள்ளதால், இவ்விழா வில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப, ராஜபக்ஷே வருகையை கண்டித்து, ஜெயலலிதா காரசாரமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'ராஜபக்ஷேவிற்கு அழைப்பு விடுத்திருக்கும், துர்பாக்கியமான செயல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்து உள்ளது' என, தெரிவித்து உள்ளார்.லோக்சபா தேர்தலில், தனி பெரும்பான்மையுடன், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி சார்பில், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, வரும் 26ம் தேதி, ...

திகார் சிறையில் சப்பாத்தி, பிரட் சாப்பிட்ட கெஜ்ரிவால்

Posted:

புதுடில்லி: நீதிமன்ற உத்தரவுப்படி, பிணைத்தொகை செலுத்த மறுத்ததால், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், வழக்கமான சிறை உணவை சாப்பிட்டார். அவரின் குடும்ப உறுப்பினர்கள் கொண்டு வந்த படுக்கையை, பயன்படுத்த சிறை அதிகாரிகள் அனுமதித்தனர்.பிணைத் தொகை: ஆம் ஆத்மி தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., முன்னாள் தலைவர், நிதின் கட்காரி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஜாமின் பெற வேண்டும் எனில், 10 ஆயிரம் ரூபாயை, பிணைத் தொகையாக செலுத்த வேண்டும் என, கெஜ்ரிவாலுக்கு டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ...

ராஜபக்ஷேவுக்கு அழைப்பு: விஜயகாந்த், ராமதாஸ் மவுனம்

Posted:

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பங்கேற்க வரும்படி, ராஜபக் ஷேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல், விஜயகாந்த், ராமதாஸ் மவுனம் காத்து வருகின்றனர்.நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா, வரும் 26ம் தேதி, டில்லியில் நடக்க உள்ளது. இவ்விழாவில், பங்கேற்க வரும்படி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தூதரக அதிகரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட, 3,000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்திய பிரதமர் பதவி ஏற்பு விழாவில், வெளிநாட்டு தலைவர்களை அழைப்பது, இதுவே முதல் முறையாகும். அதே நேரத்தில், நரேந்திர ...

மோடி அரசை விமர்சிக்காதீர்!' பா.ஜ., வேண்டுகோள்

Posted:

சென்னை: ''மோடி தலைமையான மத்திய அரசை, ஆறு மாதங்களுக்கு விமர்சிக்காமல், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என, அனைவரும் ஆதரவு தர வேண்டும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னையில், நேற்று, நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 5.5 சதவீத ஓட்டுகள் பெற்று, மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை, பா.ஜ., பெற்றுள்ளது. இதற்காக, தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தைச் சேர்ந்த, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,களுக்கு, மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா என்பதை, நான் சொல்ல முடியாது. யாரை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்ற ...

கட்டடத்திற்கு இடையே சிக்கிய சிறுவன் மீட்பு: கடைசி வரை 'ஆம்புலன்ஸ் 108' வரவில்லை!

Posted:

ஆர்.கே.பேட்டை: அடுத்தடுத்த வீடுகளுக்கு இடையே உள்ள குறுகிய சந்தில் சிக்கிய சிறுவன், ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டான். தகவல் கொடுத்தும், கடைசி வரை அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் 108, சம்பவ இடத்திற்கு வரவேயில்லை.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அம்மையார்குப்பம் ஊராட்சியை சேர்ந்த கிராமம் கே.பி.என். கண்டிகை. அந்த கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், 32, மோனிஷா ஆகியோரின் மகன் பாலா, 7. மணிகண்டன், காய்கறி வியாபாரம் செய்கிறார். சிறுவன் பாலா, தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படிக்கிறான். நேற்று மதியம் தன் வீட்டருகே விளையாடி கொண்டிருந்த பாலாவை, திடீரென காணவில்லை. மோனிஷா, தேடி ...

மீண்டும் தேர்வான 165 எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு 137 சதவீதம் அதிகரிப்பு

Posted:

புதுடில்லி: பதினாறாவது லோக்சபாவுக்கு, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 165 எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு, கடந்த ஐந்தாண்டு காலத்தில், 137 சதவீதம் அதிகரித்துள்ளது. சொத்துகள் அதிகரிப்பில், முதலிடம் பிடித்துள்ளவர், பா.ஜ.,வின் சத்ருகன் சின்கா.'ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்' என்ற அமைப்பு, இதுதொடர்பாக கூறியுள்ளதாவது: கடந்த, 15வது லோக்சபாவில் இடம் பெற்றிருந்த எம்.பி.,க்களில், 165 பேர், 16வது லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் சொத்து மதிப்பு, 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில், சராசரியாக, 137 சதவீதம் அதிகரித்து உள்ளது. நடிகராக இருந்து ...

கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் சிதம்பரம்? சோனியா ஒப்புதல்; வாசன் முடிவு என்ன?

Posted:

சிவகங்கையில் மீண்டும் போட்டியிட மறுத்து விட்ட, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவர் ராஜ்யசபா எம்.பி., ஆவதற்கு, காங்கிரஸ் மேலிடம் பச்சைக் கொடி காட்டி உள்ளது. காங்கிரஸ் மேலிடத்தின் போக்கால், ஏற்கனவே கடும் அதிருப்தி அடைந்துள்ள, கப்பல் போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் ஜி.கே.வாசன், இந்த விவகாரத்தில், என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற, பரபரப்பு தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.காங்கிரஸ் கலாசாரம்: தமிழக காங்கிரஸ் கட்சியில், வாசனுக்கும், ...

குஜராத்திற்கு 'குட் பை': டில்லி சென்றார் நரேந்திர மோடி

Posted:

ஆமதாபாத்: குஜராத் மாநிலத்திற்கு, 'குட் பை' தெரிவித்து, டில்லி சென்றார், நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி.டில்லியில், பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, குஜராத் வந்த மோடி, தன் முதல்வர் பதவி மற்றும் எம்எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக, ஆனந்தி பென் படேலையும் தேர்ந்து எடுத்தார். மாநிலத்தில் உள்ள தனக்கான பணிகள் முடிவடைந்ததும், குஜராத்திலிருந்து நேற்று டில்லி சென்றார். முன்னதாக, ஆமதாபாத் விமான நிலையத்தில், மோடி கூறியதாவது: நான் டில்லிக்கு செல்லும் போது, நமது பாரம்பரியப்படி, குஜராத்தின், 6.25 கோடி மக்களுக்கு குட்பை ...

காங்கிரசில் வெடித்தது உட்கட்சி குழப்பம்: கூட்டணி கட்சிகளும் காரசாரமாக விமர்சனம்

Posted:

புதுடில்லி: லோக்சபா தேர்தல் தோல்வியால் கலங்கிப் போயுள்ள காங்கிரசில், நேற்று திடீர் கலகம் ஏற்பட்டது. 'தோல்விக்கு யார் பொறுப்பு' என்பதில், காங்கிரஸ் தலைவர்கள் பலர், காரசாரமாக வெளிப்படையாக கருத்துகளை தெரிவித்தனர். தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர், சோனியா மற்றும் அவர் மகன் ராகுல் பதவி விலகாததால், அவர்களுக்கு எதிராக, கூட்டணியிலும் எதிர்ப்புக் குரல் காணப்பட்டது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 500 இடங்களுக்கும் மேல் போட்டியிட்ட காங்கிரஸ், 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தையும் சேர்த்தாலும், இரட்டை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™