Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ரஷிய ஆதரவாளர்கள் தாக்குதல்: உக்ரைன் ராணுவ வீரர்கள் 14 பேர் சாவு

Posted: 22 May 2014 01:51 PM PDT

ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

உபெர் கோப்பை: அரையிறுதியில் இந்தியா

Posted: 22 May 2014 01:48 PM PDT

உபெர் கோப்பை பாட்மிண்டன் போட்டி காலிறுதியில் இந்தோனேஷியாவை 3-0 என வீழ்த்திய இந்திய அணி முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

டேவிட் வார்னர் விளாசல்: சென்னை ஹாட்ரிக் தோல்வி

Posted: 22 May 2014 01:44 PM PDT

சென்னை அணிக்கு எதிராக டேவிட் வார்னர் 45 பந்துகளில் 90 ரன்கள் விளாச ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது.

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 14 இலங்கை மீனவர்கள் மதுரை சிறையிலடைப்பு

Posted: 22 May 2014 01:29 PM PDT

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை மீனவர்கள் 14 பேரையும் ஜூன் 4-ஆம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க பரமக்குடி நீதித் துறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பிரஷ்னேவ் புதன்கிழமை இரவு உத்தரவிட்டார்.

பாலிடெக்னிக் தேர்வு முடிவு: மே 26-இல் வெளியீடு

Posted: 22 May 2014 01:28 PM PDT

தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் 2014 ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் மே 26-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.

ரூ.260 கோடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, காலணிகள்

Posted: 22 May 2014 01:27 PM PDT

தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் ரூ.260 கோடியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, காலணிகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1 லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள்

Posted: 22 May 2014 01:27 PM PDT

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக ஒரு லட்சம் உயர் கல்வி வழிகாட்டி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையா?

Posted: 22 May 2014 01:26 PM PDT

கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையெனில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை (சி.இ.ஓ.) ஜூன் 7-ஆம் தேதிக்குள் அணுக வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

பகுதி நேர பி.இ. படிப்பு கலந்தாய்வு: மே 24-ல் தொடக்கம்

Posted: 22 May 2014 01:26 PM PDT

பகுதி நேர பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் மே 24-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.

பிளஸ் 2 மாணவர்கள் 2.39 லட்சம் பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு

Posted: 22 May 2014 01:25 PM PDT

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட இரண்டு நாள்களில் 2.39 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ்.: இதுவரை 26,926 விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 22 May 2014 01:24 PM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் சேர கடந்த 8 நாள்களில் மொத்தம் 26,926 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

பி.இ. கலந்தாய்வு: 2.08 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 22 May 2014 01:24 PM PDT

பொறியியல் ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு வியாழக்கிழமை (மே 22) வரை 2 லட்சத்து 8 ஆயிரத்து 856 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

சேலம் கருவியில் பதிவான வங்கக் கடல் நில அதிர்வு

Posted: 22 May 2014 01:23 PM PDT

வங்கக் கடலில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட நில அதிர்வு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சீஸ்மோகிராப் கருவியில் (நில அதிர்வை பதிவு செய்யும் கருவி) பதிவானது.

ஏ.இ.ஓ. பணியிடம்: பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வலியுறுத்தல்

Posted: 22 May 2014 01:22 PM PDT

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடத்திலிருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்தை பதவி உயர்வு பணியிடமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கால்டுவெல் நினைவாக பல்கலைக்கழகங்களில் மொழி ஆராய்ச்சி மையங்களை நிறுவ வேண்டும்: பழ.நெடுமாறன்

Posted: 22 May 2014 01:22 PM PDT

கால்டுவெல் நினைவாக பல்கலைக்கழகங்களில் மொழி ஆராய்ச்சி மையங்களை நிறுவ தமிழக அரசு முன்வர வேண்டும் என்று, உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.

இன்று உலக ஆமைகள் தினம்: மீன்பிடி வலைகளில் சிக்கி 2000 ஆமைகள் இறப்பு

Posted: 22 May 2014 01:17 PM PDT

உலக ஆமைகள் தினம் வெள்ளிக்கிழமை (மே 23) அனுசரிக்கப்படுகிறது. அரிய வகை விலங்கினங்களில் ஒன்றான ஆமைகள், மீன்பிடி வலைகளில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆமைகள் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பர்கூரில் காட்டாற்று வெள்ளம்: 15 கிராமங்கள் துண்டிப்பு

Posted: 22 May 2014 01:16 PM PDT

பவானியை அடுத்த அந்தியூர் பர்கூர் மலைப் பகுதியில் புதன்கிழமை பிற்பகலில் பரவலாகப் பெய்த கன மழையால் மணியாச்சி பள்ளத்தில் திடீர் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

சிதம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

Posted: 22 May 2014 01:15 PM PDT

சிதம்பரத்தில் உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்த தாய், தனது மகன், மகள் ஆகியோருக்கு விஷம் கொடுத்து, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலூர் பகுதியில் சூறாவளிக் காற்று: வாழைத் தோட்டங்கள், வீடுகள் சேதம்

Posted: 22 May 2014 01:15 PM PDT

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கோட்டநத்தம்பட்டி பகுதியில் புதன்கிழமை மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் சாரல்மழை பெய்தது. இதில் பல வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தது. வாழை மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.

அவனியாபுரத்தில் கடையடைப்பு: ஜல்லிக்கட்டுக்கு தடை

Posted: 22 May 2014 01:14 PM PDT

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும், மறுபரிசீலனை செய்யக் கோரியும் கடையடைப்பு போராட்டமும், ஜல்லிக்கட்டுக் காளைகள் கொம்புகளில் கருப்புக் கொடி கட்டி ஊர்வலமும் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

வேண்டாம் செயற்கை உரங்கள்

Posted: 22 May 2014 01:09 PM PDT

நாம் நமது வருங்கால சந்ததியினருக்கு பணம், சொத்து சேர்த்து வைத்திருந்து என்ன பயன்? அவர்களுக்கு தூய்மையான காற்று, நிலம், நீர் ஆகியவற்றை வைத்திருப்பதே மிகப் பெரிய சொத்து ஆகும்.

சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவர்

Posted: 22 May 2014 01:08 PM PDT

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல், மாற்றத்தைக் கொண்டு வந்த தேர்தல் மட்டுமல்ல. பல கட்சிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிட்ட தேர்தலும்கூட.

முற்றுகிறது புற்று!

Posted: 22 May 2014 01:07 PM PDT

உலக அரங்கில் மக்கள்தொகையிலும், பொருளாதார வளர்ச்சியிலும் சீனாவுக்கு அடுத்தபடியான இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது என்பது மட்டும்தான் பலருக்கும் தெரியும்.

ஏழைகளுக்கும் உலகத் தரத்திலான மருத்துவ சிகிச்சை!

Posted: 22 May 2014 01:05 PM PDT

பணம் இருப்பவர்கள் அதிநவீன வசதிகளைக் கொண்ட தனியார் மருத்துவமனைகளை நாடலாம். ஆனால், வறுமைக் கோட்டுக்குக் கீழ் பரம ஏழைகளாக இருப்பவர்கள் அதிக பணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை எப்படி நாடுவது? ஆனால், அவர்களும் இப்போது அந்தத் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர்.

நரேந்திர மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து

Posted: 22 May 2014 01:03 PM PDT

பிரதமராகப் பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் நட்புறவோடு இருப்பதுதான் ராஜதந்திரம்: ஞானதேசிகன்

Posted: 22 May 2014 01:03 PM PDT

இலங்கையுடன் நட்புறவோடு இருப்பதுதான் ராஜதந்திரம் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.

பிரதமர் பதவியேற்பு விழா: ராஜபட்சவுக்கு அழைப்பு: தலைவர்கள் கண்டனம்

Posted: 22 May 2014 01:02 PM PDT

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசை 6 மாதங்களுக்கு விமர்சிக்க வேண்டாம்: பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 22 May 2014 01:00 PM PDT

வரும் 6 மாதங்களுக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சிக்காமல் ஒத்துழைப்பு அளிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

மோடி வேண்டுகோளை நிராகரித்தார் அத்வானி

Posted: 22 May 2014 12:59 PM PDT

பதினாறாவது மக்களவையின் தலைவராக பதவியேற்கும்படி, பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நிராகரித்தார்.

ஹெலிகாப்டர் பேர முறைகேடு: "ஆளுநர்களிடம் கேள்வி கேட்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'

Posted: 22 May 2014 12:45 PM PDT

ராணுவத்துக்கு சொகுசு ஹெலிகாப்டர் வாங்கப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கில் அரசு சாட்சிகளாக இரு மாநில ஆளுநர்களிடம் கேள்விகள் கேட்பதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று சிபிஐக்கு சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் எச்சரித்துள்ளார்.

தேர்தல் தோல்வி: சோனியா, மன்மோகனின் தவறான அணுகுமுறையே காரணம்

Posted: 22 May 2014 12:44 PM PDT

மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் தவறான அணுகுமுறைதான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 22 May 2014 12:30 PM PDT

ஓடும் பேருந்தில் 4 பவுன் தங்கச் சங்கிலியை மர்மநபர் பறித்துச் சென்றதாக வியாழக்கிழமை தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் செய்தார்.

முடிவுக்கு வந்த திருவட்டாறு பள்ளியின் சான்றிதழ் பிரச்னை

Posted: 22 May 2014 12:29 PM PDT

திருவட்டாறு அருகே அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நடத்தைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பிரச்னையில் 2 ஆவது நாளாக பெற்றோர் மற்றும் மாணவர்கள் வியாழக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டனர். 

"10 ஆம் வகுப்பு: அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்க நிதியுதவி'

Posted: 22 May 2014 12:29 PM PDT

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப் பள்ளிகளில் பயின்று அதிக மதிப்பெண் பெறும் மாணவர், மாணவிகள் தமிழகத்தின் தலைசிறந்த தனியார் பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக் கல்வி பயில அரசு உதவி செய்து வருகிறது.

வாகனக் காப்பகத்தில் கிடந்த பித்தளை அங்கி மீட்பு

Posted: 22 May 2014 12:29 PM PDT

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைய வாகனக் காப்பகத்தில் கிடந்த பித்தளை அங்கியை போலீஸார்  வியாழக்கிழமை மீட்டனர்.

பூதப்பாண்டி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞர் சாவு

Posted: 22 May 2014 12:28 PM PDT

பூதப்பாண்டி அருகே விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் புதன்கிழமை இறந்தார்.

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: மாணவிக்கு ரொக்கப் பரிசு

Posted: 22 May 2014 12:28 PM PDT

குமரி மாவட்டம், சுண்டபற்றிவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவிக்கு வியாழக்கிழமை ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கினார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன்.

மானான்விளை கல்லூரியில் ஆண்டு விழா

Posted: 22 May 2014 12:28 PM PDT

கருங்கல் அருகே உள்ள மானான்விளை ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு ஜேம்ஸ் கல்லூரிகளின் தலைவர் மருத்துவர் ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமை வகித்தார்.

"மனுக்களுடன் இமெயில் முகவரி அளித்தால் விரைவாக நடவடிக்கை

Posted: 22 May 2014 12:28 PM PDT

நகராட்சிக்கு விண்ணப்பிக்கும் மனுக்களில் முழு முகவரியுடன் செல்போன் எண் மற்றும் இமெயில் முகவரியை குறிப்பிட்டால் மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என

குமரி மாவட்ட அதிமுக பொறுப்பாளர் இன்று நாகர்கோவில் வருகை

Posted: 22 May 2014 12:27 PM PDT

குமரி மாவட்ட அதிமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அ. தமிழ்மகன் உசேன் வெள்ளிக்கிழமை நாகர்கோவில் வருகிறார். இதுகுறித்து நாகர்கோவில் நகர அதிமுக செயலர் சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்கு

மிடாலம் கோயிலில் நாகர் சிலைகள் உடைப்பு

Posted: 22 May 2014 12:27 PM PDT

கருங்கல் அருகே மிடாலம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் புதன்கிழமை 3 நாகர் சிலைகளை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தரமற்ற சாலை: பொதுமக்கள் எதிர்ப்பால் பணிகள் நிறுத்தம்

Posted: 22 May 2014 12:27 PM PDT

குலசேகரம் பேரூராட்சியில் தரமற்ற முறையில் சாலை சீரமைக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலைப் பணியை தடுத்து நிறுத்தினர்.

மதகுகள் வழியே கசியும் நீர் பேச்சிப்பாறை அணை முன் தேக்கம்

Posted: 22 May 2014 12:27 PM PDT

பேச்சிப்பாறை அணையின் பிரதான மதகுகள் வழியாக கசிந்து வெளியேறும் தண்ணீர் அணையின் முன்பக்கம் தேங்கியுள்ளதால் நீர்க்கசிவு கண்டறியும் அளவைகள் மூழ்கியுள்ளன.

நாகர்கோவிலுக்கு இன்று பொன்.ராதாகிருஷ்ணன் வருகை

Posted: 22 May 2014 12:27 PM PDT

பாஜக மாநிலத் தலைவரும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வென்ற பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நாகர்கோவில் வருகிறார்.

உமாநாத் மறைவு நாகர்கோவிலில் இரங்கல் ஊர்வலம்

Posted: 22 May 2014 12:26 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஆர். உமாநாத் மறைவையடுத்து நாகர்கோவிலில் வியாழக்கிழமை இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை முன் தொடங்கிய ஊர்வலம் செம்மாங்குடி சாலை வரை

கிள்ளியூரில் கொசு ஒழிப்பு பணி

Posted: 22 May 2014 12:26 PM PDT

கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கொசுஒழிப்பு பணி ஆய்வு புதன்கிழமை தொடங்கியது. பொதுசுகாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு

சாமிதோப்பு தலைமைப் பதியில் இன்று வைகாசி திருவிழா தொடக்கம்

Posted: 22 May 2014 12:26 PM PDT

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் வைகாசி திருவிழா வெள்ளிக்கிழமை (மே 23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

வானவில் இலக்கிய வட்டக் கூட்டம்

Posted: 22 May 2014 12:25 PM PDT

வானவில் இலக்கிய வட்டக் கூட்டம் களியக்காவிளையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு எழுத்தாளரும், மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரிப்

நவாஸ் ஷெரீஃபுக்கு அழைப்பு: காங்கிரஸ் விமர்சனம்

Posted: 22 May 2014 12:25 PM PDT

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு பாஜக அழைப்பிதழ் அனுப்பியுள்ளதை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

நாளை பாலியம் குலசேகரம் அமைப்பு ஆண்டு விழா

Posted: 22 May 2014 12:25 PM PDT

குலசேகரத்தில் பாலியம் குலசேகரம் அமைப்பின் முதலாமாண்டு விழா சனிக்கிழமை (மே 24) நடைபெறுகிறது.

ஆஸாத் கோப்பை கால்பந்து:அரையிறுதியில் திருவாங்கூர் ஸ்டேட் வங்கி அணி

Posted: 22 May 2014 12:25 PM PDT

காயல்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அகில இந்திய கால்பந்தாட்டப் போட்டியில் திருவனந்தபுரம் திருவாங்கூர் ஸ்டேட் வங்கி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

தேர்தல் தோல்வி: உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி கட்சிப் பிரிவு கூண்டோடு கலைப்பு

Posted: 22 May 2014 12:24 PM PDT

மக்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி பெரும் தோல்வியை சந்தித்ததை அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் அக்கட்சி கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கட்சியின் 15 அமைப்புகளும் கலைக்கப்பட்டுள்ளன.

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி இன்று தொடக்கம்

Posted: 22 May 2014 12:24 PM PDT

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டி வெள்ளிக்கிழமை (மே 23)  தொடங்குகிறது. கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் லட்சுமி அம்மா

இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு

Posted: 22 May 2014 12:24 PM PDT

உடன்குடி வட்டார பகுதியில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

குஜராத் முதல்வராக ஆனந்தி பென் படேல் பதவியேற்பு

Posted: 22 May 2014 12:24 PM PDT

குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 20 பேர், அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இதில் 4 பேர் புதுமுகங்களாவர்.

கோவில்பட்டியில் 25 இல் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 22 May 2014 12:24 PM PDT

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மே 25)  இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கோவில்பட்டி மதுதேவி மெமொரியல் சேரிடபிள் டிரஸ்ட் மற்றும் கமலா மருத்துவமனை இணைந்து

ஆட்டோ ஓட்டுநர் கொலையைக் கண்டித்து பொதுக்கூட்டம்

Posted: 22 May 2014 12:24 PM PDT

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் படுகொலையைக் கண்டித்து இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சிஐடியூ தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை வகித்தார். கூட்

ஆறுமுகனேரி கோயிலில்திருவாசகம் முற்றோதுதல்

Posted: 22 May 2014 12:23 PM PDT

ஆறுமுகனேரி கீழசண்முகபுரம் கமலா நேரு காலனி ஸ்ரீவலம்புரி விநாயகர் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.

கோவில்பட்டியில் கருத்துக் கேட்பு கூட்டம்

Posted: 22 May 2014 12:23 PM PDT

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. சங்கரன்கோவில் வட்டத்தை இரண்டாகப் பிரித்து திருவேங்கடத்தை தலைமையிடமாகக் கொ

எட்டயபுரத்தில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

Posted: 22 May 2014 12:23 PM PDT

எட்டயபுரம்-கோவில்பட்டி பிரதான சாலையில் அமைந்துள்ள பேருந்து நிலையம், மகாகவி பாரதி மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் இரண்டு வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை பார்வையிட்ட இளம் விஞ்ஞானிகள்

Posted: 22 May 2014 12:22 PM PDT

தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தை இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் பயிற்சி பெறும் 40 மாணவர், மாணவிகள் வியாழக்கிழமை பார்வையிட்டனர்.

தூத்துக்குடியில் கனிணி மையத்தில் தீ விபத்து

Posted: 22 May 2014 12:22 PM PDT

: தூத்துக்குடியில் கனிணி மையம் உள்ளிட்ட 3 கடைகளில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு ரூ.20 கோடி மதிப்பில் நல உதவிகள்: ஆட்சியர்

Posted: 22 May 2014 12:22 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார்.

ஊராட்சியில் முறைகேடு: 2 பெண் அலுவலர்கள் இடை நீக்கம்

Posted: 22 May 2014 12:22 PM PDT

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 பெண் அலுவலர்கள் வியாழக்கிழமை தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கடந்த நிதியாண்டில் ரூ. 27 லட்சம் வரை முறைகேடு

பேரூராட்சி செயல் அலுவலருக்கு மிரட்டல்: கவுன்சிலர் மீது வழக்கு

Posted: 22 May 2014 12:21 PM PDT

கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்களை மிரட்டியதாக கவுன்சிலர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

இருவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 22 May 2014 12:21 PM PDT

விளாத்திகுளம் அருகே காட்டுநாயக்கன்பட்டியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர் 

நிலத் தரகரை கடத்தி பணம்   கேட்டு மிரட்டல்: 3 பேர் மீது வழக்கு

Posted: 22 May 2014 12:21 PM PDT

கோவில்பட்டியில் நிலத்தரகரை கடத்தி ரூ.30லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.

அரசு வழங்கிய பட்டா நிலத்தை அடையாளம் காட்டக் கோரிக்கை

Posted: 22 May 2014 12:21 PM PDT

கோவில்பட்டியையடுத்த லிங்கம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சுமார் 65 பயனாளிகளுக்கு அரசு வழங்கிய பட்டாவிற்குரிய நிலத்தை அடையாளம் காட்டக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.

இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் நிறைவு

Posted: 22 May 2014 12:20 PM PDT

உடன்குடி ஒன்றிய சேவாபாரதி அமைப்பின் சார்பில் இருபது நாள்களாக நடைபெற்று வந்த இந்து சமய பண்பாட்டு வகுப்பின் நிறைவு விழா மாவட்ட சேவாபாரதி தலைவர் கிருஷ்ணமந்திரம் தலைமையில்  நடைபெற்றது.

ரூ. 5.22 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 22 May 2014 12:20 PM PDT

: தூத்துக்குடி தருவைக்குளம் மற்றும் கீழ வைப்பார் பகுதிகளில் ரூ. 5.22 கோடியில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

சாகுபுரத்தில் உப்பு உற்பத்தியாளர் கருத்தரங்கு

Posted: 22 May 2014 12:20 PM PDT

சாகுபுரத்தில் உப்பு உற்பத்தியளர்கள் கருத்தரங்கு  நடைபெற்றது. சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கில் உப்பு உற்பத்தியாளர்களு

ரிமோட் விமானம் மூலம் பீட்ஸா: மும்பை போலீஸார் விசாரணை

Posted: 22 May 2014 12:20 PM PDT

மும்பையில் ரிமோட் மூலம் இயக்கப்படும் சிறு விமானம் மூலம் சோதனை முறையில் பீட்ஸா விநியோகம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வீணாகும் தேக்கு மரங்களை பாதுகாக்க கோரிக்கை

Posted: 22 May 2014 12:20 PM PDT

ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றின் வடகால் வாய்கால் கரையோரங்களில் பல லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங்கள் பராமரிப்பு இல்லாததால் வீணாகி வருகிறது எனவும், அதை பாதுகாக்க

கோடைக்கால இந்து பயிற்சி வகுப்பு நிறைவு

Posted: 22 May 2014 12:19 PM PDT

தூத்துக்குடியில் கோடைக்கால இந்து பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் உள்ள இந்து கோயில்களில் 15 நாள்களாக நடைபெற்ற

மாநில முதல் மாணவி காயல்பட்டினம் வருகிறார்

Posted: 22 May 2014 12:19 PM PDT

பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சிபெற்ற சுஷாந்தி, வரும் ஜூன் மாதம் காயல்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

மறவன்விளையில் திருவிளக்கு பூஜை

Posted: 22 May 2014 12:19 PM PDT

உடன்குடி ஒன்றிய இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா சார்பில் திருவிளக்கு பூஜை மறவன்விளையில் நடைபெற்றது .

ஊராட்சியில் முறைகேடு:2 பெண் அலுவலர்கள் இடைநீக்கம்

Posted: 22 May 2014 12:19 PM PDT

: தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 பெண் அலுவலர்கள் வியாழக்கிழமை தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கடந்த நிதியாண்டில் ரூ. 27 லட்சம் வரை முறைகேடு

நாகர்கோவில்

Posted: 22 May 2014 12:18 PM PDT

வங்க தேசத்தவர் 18 பேர் கைது

Posted: 22 May 2014 12:14 PM PDT

மகாராஷ்டிரத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்ததாக வங்க தேசத்தைச் சேர்ந்த 18 பேரை அந்த மாநில போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடக பாஜக தலைவராக விரும்புகிறேன்: எடியூரப்பா

Posted: 22 May 2014 12:14 PM PDT

கர்நாடக மாநில பாஜக தலைவராகப் பணியாற்ற விருப்பம் தெரிவித்து, நரேந்திர மோடிக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.

தூக்கில் தொங்குவது போல் புகைப்படம் எடுக்க முயன்றவர் சாவு

Posted: 22 May 2014 12:12 PM PDT

சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதற்காக வித்தியாசமாக புகைப்படம் எடுக்க முயற்சித்த கேரளத்தைச் சேர்ந்த இருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தனர்.

பிசிசிஐ விவகாரம்: ஸ்ரீநிவாசனின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Posted: 22 May 2014 12:11 PM PDT

பிசிசிஐ தலைவராக மீண்டும் செயல்படுவதற்கு அனுமதிக்கக் கோரி அதன் முன்னாள் தலைவர் என். ஸ்ரீநிவாசன் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

அங்கீகாரமற்ற 30 கட்டடங்கள் இடிப்பு

Posted: 22 May 2014 12:11 PM PDT

தெற்கு தில்லி மாநகராட்சியில் அங்கீகாரமற்ற கட்டப்பட்ட 30 கட்டடங்கள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

காஜியாபாதில் வழிப்பறி: மூவர் கைது

Posted: 22 May 2014 12:10 PM PDT

 காஜியாபாத் பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

தமிழர்களுக்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்படாது

Posted: 22 May 2014 12:10 PM PDT

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில், அண்டை நாட்டு அதிபர் என்ற முறையில்தான் இலங்கை அதிபர் ராஜபட்ச அழைக்கப்பட்டுள்ளதாகவும், எச்சூழ்நிலையிலும் தமிழர்களுக்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்படாது என்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை செüந்தரராஜன் தெரிவித்தார்.

பாராசூட்டில் 11 மாத குழந்தை பறக்க வைக்கப்பட்டு விபரீத சாகசம்

Posted: 22 May 2014 12:10 PM PDT

கேரளத்தின் கண்ணூர் மாவட்ட கடற்கரையில் 40 அடி உயரத்தில் 11 மாத பெண் குழந்தையை தனியாக பாராசூட்டில் பறக்க வைத்து சாகசம் காட்டிய பெற்றோர் மற்றும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேஜரிவாலுக்கு நீதிமன்ற காவல்: வீதிதோறும் விளக்கக் கூட்டம்

Posted: 22 May 2014 12:09 PM PDT

அவதூறு வழக்கில் ஜாமீன் பத்திரம் அளிக்க மறுத்ததால் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் விவகாரத்தை  வீதிதோறும் கூட்டம் நடத்தி விளக்கப்படும் என்று ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி வாழ்த்து

Posted: 22 May 2014 12:09 PM PDT

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, பிரதமராகப் பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனக்புரி "தில்லி ஹாட்' 25-இல் திறப்பு

Posted: 22 May 2014 12:09 PM PDT

மேற்கு தில்லி ஜனக்புரியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள "தில்லி ஹாட்' வரும் 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படவுள்ளது.

பிரதேச காங்கிரஸ் மாவட்ட, வட்டார அமைப்புகள் கலைப்பு

Posted: 22 May 2014 12:09 PM PDT

தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சியின் மாவட்ட, வட்டார அமைப்புகள் கலைக்கப்பட்டன என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

உயிரியல் பூங்காவில் பல்லுயிர் தினம்

Posted: 22 May 2014 12:09 PM PDT

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் சர்வதேச பல்லுயிர் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பல்லுயிர் தினம் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தில்லி

தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழு நிர்வாகிகள் தேர்வு

Posted: 22 May 2014 12:08 PM PDT

தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக் குழுத் தேர்தல், கல்விக் குழுத் தேர்தல் ஆகியன மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.

போராட்டங்களால் மக்களின் நம்பிக்கையை ஆம்ஆத்மி கட்சியால் பெற முடியாது

Posted: 22 May 2014 12:08 PM PDT

போராட்டங்கள் நடத்துவதன் மூலம் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்ற ஆம்ஆத்மி கட்சியின் நோக்கம் எடுபடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மீம் அஃப்சல் தெரிவித்துள்ளார்.

ரயில் நிலைய ஓய்வறையில் தங்குவதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு வசதி

Posted: 22 May 2014 12:08 PM PDT

ரயில் நிலையங்களில் உள்ள ஓய்வறைகளில் பயணிகள் தங்குவதற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை இந்திய ரயில்வே துறை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி விமான நிலையத்தில் ரூ. 2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

Posted: 22 May 2014 12:08 PM PDT

வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகளை இரு வேறு சம்பவங்களில் தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் புகார் அளித்த பெண் பிறழ்சாட்சியம்: இளைஞர் விடுதலை

Posted: 22 May 2014 12:07 PM PDT

மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், புகார் அளித்த பெண் பிறழ்சாட்சியம் அளித்ததால் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லி திலக் நகரில் தாய், மகள் குத்திக் கொலை

Posted: 22 May 2014 12:07 PM PDT

மேற்கு தில்லியில் வீட்டிலிருந்த தாய், மகள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டனர். கத்திக்குத்தில் காயமடைந்த மகன் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவருடன் ஆலோசிக்க ஆளுநர் முடிவு!

Posted: 22 May 2014 12:07 PM PDT

தில்லியில் மீண்டும் அரசு அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து குடியரசுத் தலைவருடன் ஆலோசிக்க பிரதேச துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

2ஜி: ஷாஹித் பால்வா மனு மீதான விசாரணை 28-இக்கு ஒத்திவைப்பு

Posted: 22 May 2014 12:06 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பால்வா வாக்குமூலம் பதிவு செய்வது தொடர்பாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மே 28-ஆம் தேதிக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்தது.

முக்கிய பூங்காக்கள் செயல்படும் நேரத்தை அதிகரிக்க என்.டி.எம்.சி. திட்டம்

Posted: 22 May 2014 12:06 PM PDT

புது தில்லியில் உள்ள முக்கிய பூங்காக்கள் சிலவற்றின் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிக்க புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.) திட்டமிட்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™